Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு நாளும் உனை மறவேன் - Part 12

என்னாச்சு மணி ஸ்டேஷன் போனியாமே ? ஒன்னுமில்லென்னே ஏதோ பொண்ணு கடத்தல் கேஸ் அப்படின்னு ஷிவானி மிரட்டுறா .. நீ ஏதும் உளறிடலயே அதெல்லாம் ஒன்னுமில்லன்னே... சரி எங்க இருக்க? உடனே ஆபீஸ் வா ஒரு முக்கியமான வேலை இருக்கு என்றான் கமலன். ஆனந்தை பெயிலில் எடுக்க முயன்றும் நடக்காது போனதில் கமலனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஷெரின் என்ற பெண்ணை பற்றி ஏதாவது தெரியுமா என்று நிர்மலாவிடம் அந்த பெண்ணின் போட்டோவை காட்டி கேட்டாள் . இவள் திலகவதி ஃப்ரெண்ட் பேஸ்புக்கில் பார்த்திருக்கிறேன் என்றாள். பேஸ்புக் ஓபன் பண்ணி பார்த்த போது அவள் மீரா என்ற பெண்ணின் கல்யாணத்தில் கடைசியாய் அவள் காணாமல் போன அன்று போட்டோ அப்லோட் செய்திருந்தாள். மீராவுக்கு ஃபோன் செய்து நேரில் போய் பார்த்தாள் . ஷெரின் அவளுடைய பேஸ்புக் ஃப்ரெண்ட் ஒருவரை பார்க்க போவதாய் சொல்லித்தான் போனாள். வேற ஏதாவது தகவல் தெரிந்தால் இந்த நம்பரில் கூப்பிடுங்க என்று சொன்னாள் ஷிவானி.

ஷிவானி அவ்வப்போது தகவல்களை எழிலுக்கு அனுப்பிய வண்ணம் இருந்தாள். அவன் பெங்களூர் முழுக்க ஷெரின் பற்றிய ஏதாவது விவரம் கிடைக்காதா என தேடினான். அடுத்த வாரம் சென்னையில் உயர் அதிகாரி ஒருவரின் ரிடையர்ட் பார்ட்டி இருந்தது அதற்காக சென்னை வருவேன் என ஷிவானியிடம் சொன்னான். அவள் மகிழ்ந்து போனாள். ஷிவானி நினைத்தது போல ஷெரின் இறந்திருக்க வாய்ப்பில்லை என்று பட்டது. மணியை ரெண்டு தட்டு தட்டினால் விவரங்கள் வெளியே வரும் என நினைத்தாள். அதற்கான அனுமதியை கேட்டிருந்தாள். திடீரென அந்த சம்பவம் நடந்தது. மணியின் மனைவி போலீஸ் ஸ்டேஷன் வந்து மணியை காணவில்லை என அழுதாள். ஒரு வாரமாக மணி வீட்டுக்கும் வரவில்லை ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருக்கிறது என்று சொன்னாள் . கமலனை கேட்டதற்கு அவன் அங்கு வரவில்லையே என்றான். சென்னை வந்த எழிலுக்கு இது அதிர்ச்சியாய் இருந்தது.

என்ன ஷிவானி என்ன நடக்குது இங்கே என்றான். எனக்கும் ஒண்ணும் புரியலே என்றான். அவனுடைய கடைசி கால் ஷெரின் நம்பரிடம் இருந்து வந்தது. அப்போ ஷெரின் நிச்சயம் உயிருடன் இருக்கிறாள் என்றான் எழில்.ஷெரின் ஃபோன் லொகேஷன் டிரேஸ் செய்து அங்கு போய் பார்த்தார்கள். மணியை தேடி வந்தீர்களா டூ லேட் என சுவற்றில் எழுத பட்டு இருந்தது . கமலனுக்கும் இது பற்றி தெளிவில்லாமல் இருந்தது. கமலன் சில நாட்கள் மணியை தலைமறைவாய் இருக்க சொன்னான். ஆனால் திடீரென காணாமல் போவான் என்று எதிரபார்த்திருக்கவில்லை. மீறவிடம் இருந்து ஃபோன் வந்தது ஷெரின் நேற்று ஃபோன் செய்தாள். தான் நலமுடன் இருப்பதாகவும் திலகவதி விட்ட இடத்தில் இருந்து தான் தொடர இருப்பதாகவும் தெரிவித்ததாக சொன்னாள். ஷெரின் பழி வாங்கும் படலத்தில் இருக்கிறாள் என்றாள் ஷிவானி. அவளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் ஷிவானி தவித்தாள். அப்போது whatsapp பில் அந்த வீடியோ வந்தது. உன்னை கடத்த சொன்னதே எம் எல் ஏ கமலன் தான் எனக்கு வேற எதுவும் தெரியாது. அப்போ இதோட செத்துபோ என்று ஷெரின் குரல் கேட்டது. துப்பாக்கி குண்டுகள் அவனை துளைத்தன.

கமலனை போலீஸ் அரெஸ்ட் செய்தது. தான் ஷெரீனை கடத்தியதாக ஒப்புக்கொண்டான் கமலன். ஆனால் அவள் தன்னிடம் இருந்து தப்பித்து விட்டதாக சொன்னான். மேலும் சில காணாமல் போன பெண்கள் பற்றி விசாரித்த பொது தனக்கு எதுவும் தெரியாது என சொன்னான். அந்த வீடியோ எடுக்கப்பட்ட இடத்தை கண்டறிந்தான் எழில். ஷிவானி யாரோ ஷெரினுக்கு ஹெல்ப் பண்ணுறாங்க அதை முதல்லே ஸ்டாப் பண்ணனும் என்றான். ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி சென்னையில் தங்கினான் எழில். மணியின் உடல் இன்னும் கிடைக்கவில்லை. வீடியோ பார்த்த எல்லோரும் உறைந்து போனார்கள். ஷெரின் அப்பா அது தன்னுடைய மகளின் குரல் தான் என உறுதிப்படுத்தினார். ஷிவானி இப்போ நாம என்ன பண்ணலாம் என்றான். மணி பாடி பீச் ஓரம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்தான். மணி பாக்கெட்டில் லெட்டர் இருந்தது , முடிந்தால் கமலனை காப்பாற்றிக்கொள் என்று இருந்தது .


கமலனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மணியின் ஃபோன், திலகவதியின் ஃபோன் ரெண்டும் கைப்பற்றபட்டது. இதில் சம்பந்தபட்ட முக்கிய புள்ளிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கபட்டது.ஷெரின் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கபட்டாள் . கமலனை சந்தித்தான் எழில். எதுக்காக ஷெரீனை கிட்நாப் பண்ணுனீங்க . ஆனந்த் சொல்லித்தான் அவளை கடத்துனோம் . ஆனந்த் ஷெரினுக்கு பழக்கமா ? பேஸ்புக் மூலமா பழக்கம். ம் உங்க கிட்டேயிருந்து எப்படி தப்பிச்சா? அவளோட ஃப்ரெண்ட் திலகவதி அவதான் அவளை காப்பாத்தியிருக்கணும் . கமலன் இதுல இருக்கிற பொண்ணுங்க லிஸ்ட் ல வேற யாரையாவது கடத்துனியா . நல்லா பார்த்து சொல்லு . இல்லை வேற யாரையும் நான் கடத்தலை.
நீ பொய் சொல்லலியே ? நிச்சயமா இல்ல . உன்னை கொல்லணும்னு அவ துடியா துடிக்கிறா நீ அவளை ஏதாச்சும் பண்ணினாயா? இல்லை .
எழில் ஆனந்தை சந்தித்தான். என்ன ஆனந்த் கமலன் என்னென்னவோ சொல்லுறான். நீ ஃபுல் டைம் இதே வேலையாதான் இருந்தியா? எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை. ஷெரின் எனக்கு வெறும் ஃப்ரெண்ட் அவ்ளோதான் . அன்னைக்கு எனக்கு சென்னை வந்திருக்கேன் அப்படின்னு ஃபோன் பண்ணா. நான் என்னோட நீலாங்கரை பங்களாவுக்கு வர சொன்னேன் .அவ வரலை அவ்ளோதான் நடந்தது. அதுக்கப்புறம் அவ கூட பேசலை.

உன்னை மேலேயிருந்து தள்ளினது யாருன்னாவது தெரியுமா? திலகவதி . அவளும் இவளை போல தான் புரட்சி பண்ணுறேன்னு இறங்குனா. அவளும் செத்துட்டா. நீ பேசாம எல்லாத்தையும் ஒத்துக்க . உயிராவது மிஞ்சும் என்றான் எழில். ஆனந்த் அமைதியாய் இருந்தான். கமலனுக்கு ஜாமீன் கிடைத்தது. ஷெரீனாவது ஒன்னாவது என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றான். ஷிவானி கவலையோடு இருந்தாள். எழில் நாளைக்கு எங்க வீட்ல சாப்பிடலாம் லஞ்ச் என்று சொன்னாள். அவளே அவனுக்காக சமைத்திருந்தாள் . ஆனந்த் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறான் . எனக்கென்னவோ இவர்கள் மட்டுமில்லாமல் வேறு யாராவது இருக்கலாமோ என்று தோன்றுகிறது என்றான். சாப்பிடுங்க மொதல்ல என்றாள் ஷிவானி. கமலனிடம் இருந்து போன் வந்தது என் பையனை கடத்திட்டா சார் அந்த ஷெரின் இப்போதான் ஃபோன் பண்ணா உடனே வாங்க சார். வேகமாக கமலனின் வீட்டை அடைந்தான். பையன் மெடிக்கல் காலேஜ் ல படிக்குறான் சார். அவ என்ன சொன்னா? நீ வந்து உன் பையனை கூட்டிட்டு போ அப்படின்னு சொன்னா சார்.


லொகேஷன் டிரேஸ் பண்ண முடிஞ்சுதா ?இல்லை சார். மறுபடி அவ கால் பண்ணினா எங்க வரணும் அப்படின்னு கேளுங்க. மறுபடி ஃபோன் வந்தது, இங்கே பக்கத்துல பரங்கிமலை சர்ச் இருக்கு அங்கே வா என்றாள். போலீஸ் வந்தால் ஒண்ணும் மிஞ்சாது என்றாள். நீங்க தைரியமா போங்க இந்த துப்பாக்கி உங்களதுதானே அதை வைத்து கொள்ளுங்கள் என்றான் எழில் . இந்த காமிரா உங்க சட்டையிலே இருக்கட்டும் . எனக்கு அங்கே என்ன நடக்குதுன்னு தெரியணும் என்றான். ஷெரின் சீக்கிரம் வா உன் பையன் ரொம்ப நாழி தாங்க மாட்டான் என்றாள். கமலன் கார் முன்னே செல்ல போலீஸ் கார் சற்று தள்ளி பின் தொடர்ந்தது. அவளை போட்டுதள்ளிட்டுத்தான் மறுவேலை என்றான் கமலன். பரங்கிமலை சர்ச் நெருங்கும்போது பின்னால் வந்த போலீஸ் வேன் இல்லை, வீட்டில் இருந்து ஃபோன் வந்தது. பையன் வந்துட்டாங்க என்று. சரி வண்டி திருப்பு என்று குரல் கொடுத்தான் . வண்டி நிற்காமல் போனது. ஷெரின் ஒரு கையில் துப்பாக்கியை பிடித்தவாறே வண்டி ஓட்டிக்கொண்டிருந்தாள் . கைத்துப்பாக்கியை எடுத்து சுட முயன்றான். வெறும் துப்பாக்கிடா அது என்றாள் ஷெரின்.


கமலன் கண்விழித்து பார்த்த போது கை கால்கள் கட்டப்பட்டு கிடந்தான். என்ன கமலன் நீ இப்போ எங்க இருக்கேன்னு தெரியுதா? தெரியலை . இன்னும் நிறைய பேர் உன் கம்பனிக்கு வராங்க ஆனா நீ சொல்லுறதுலதான் எல்லாமே இருக்கு என்றாள் . நீ ஷெரின் இல்லையே என்றான். ம் இப்போதான் உனக்கு தெளிஞ்சிருக்கு. சேகரை ஏண்டா கொலை பண்ணுண ?அது வந்து நாங்க அவனை கொலை செய்யலை ரயில்வே டிராக் ல கொண்டு போய் போட்டப்போ தப்பிச்சு ஓட பார்த்தான். இரயில்ல அடி பட்டு செத்து போயிட்டான். ஷெரின் எங்கே என்றான் கமலன். அவ ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா. நீ தானே வரதனை தூண்டி விட்டு சுமதிய கொன்னது ? நீதான் எல்லாத்துக்கும் மூளையா செயல்பட்டு இருக்க என்றாள். நீ யாரு முதல்ல அதை சொல்லு மாஸ்க் போட்டுக்கிட்டு பயமுறுத்தி பார்க்கிறாயா என்றான். உன்னால சேகர்,ரம்யா, திலகவதி,சுமதி எல்லோரும் செத்து இருக்காங்க. பதிலுக்கு அந்த கே கே அரவிந்த், முரளி அப்புறம் மணி எல்லோரையும் கொன்னு போடலையா.
நீ எல்லாம் நியாயம் பேசுறியா என்றாள்.

ஷிவானி கமலனை எங்கே கடத்தி கொண்டு போனா ஷெரின்னு தெரியலையே . ஷெரின் மட்டும் இதை தனியா செய்ய வாய்ப்பில்லை. ஷெரின் அப்பாவை காண்டாக்ட் பண்ணு. ஷெரின் குளோஸ் ஃப்ரெண்ட் வேற யாராவது இருக்காங்களா கேளு . மீராவிடமும் விசாரித்தாள் ஷிவானி. ஒரு வேளை அரவிந்த் மனைவியாய் இருந்தால் அரவிந்த் மனைவி பற்றி விசாரிக்க நேரில் சிவா வீட்டுக்கு போனான். என்னாச்சு சார் நியூஸ் ல என்னென்னவோ வருது என்றான். அரவிந்த் மனைவி எங்கே என்றான். அவங்க வெளிநாடு போயிட்டாங்களே. நிச்சயமா தெரியுமா? நிச்சயமா தெரியும். அதற்குள் அந்த ஃபோன் வந்தது. ஷெரின் தான் வீடியோ காலில் வந்தாள். கமலன் இப்போ பேசு என்றாள். நான்தான் சேகரை கொலை பண்ணினேன் . சுமதியையும் வரதனை வைத்து கொல்ல வைத்தேன் என்றான். இங்கே ஷெரின் மட்டும் இல்ல வேறு சில பேரும் இருக்காங்க என்றான்.