அதே மாதிரி ஃபோன் கால் மிருணாளினியிடம் இருந்தும் வந்தது. அந்த வரதன் தன்னை எதிர்க்குறவங்க எல்லோரையும் ஒழிச்சு கட்ட முடிவு பண்ணியிருக்கான். இப்போ என்ன பண்ணுறது சிவா. போலீஸ் ல கம்ப்ளைண்ட் பண்ணுறதை விட வேற வழி இல்லை என்றான் . மிருணாளினி போலீசில் புகார் கொடுத்தும் விட்டாள். போலீஸ் வரதனை எச்சரித்தது . இது நடந்த இரண்டு நாட்களில் திலகவதி வரதானால் கொல்லப்பட்டாள் . வரதன் போலீஸால் அரெஸ்ட் செய்யப்படுகிறான். ஆனந்துக்கும் ஸ்வேதாவுக்கும் விவாகரத்து ஆகிறது . ஸ்வேதா மகிழ்ச்சியின் எல்லையை அடைகிறாள். ஆனால் சிவா பிரச்சினைகளில் மூழ்கி இருப்பதால் அவள் கவலை அடைகிறாள். என்ன சிவா அடுத்து நம்ம கல்யாணம் தானே இப்போ கூட நீ சந்தோஷமா இல்லைனா என்ன அர்த்தம் என்றாள். சிவாவுக்கும் ஸ்வேதாவுக்கும் கல்யாணம் நடக்கிறது. ரம்யாவால் வர முடியாமல் போனாலும் வாழ்த்துக்களை வீடியோ காலில் வந்து தெரிவித்தாள் . சிவாவும்,நிர்மலாவும் சுமதி தூக்கு போட்டு இறந்த வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் பரமசிவம் என்பவரை விசாரித்தனர். வரதன்தான் சுமதியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக தெரிவித்தார். அப்போது வரதன் மீதிருந்த பயத்தில் இதை வெளியில் சொல்ல முடியாமல் தவிர்த்ததாக சொன்னார்.
வரதன் ஜாமீனில் வெளியே வந்து நிர்மலாவை மிரட்ட தொடங்கினான். சிவா வீட்டில் தங்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். அதன்படி நிர்மலாவும்,அவளுடைய தம்பியும் சிவா, ஸ்வேதா கூடவே தங்கி கொண்டார்கள். ஆனந்த் அப்பா கேட்டு கொண்டதால் அவ்வபோது ஆனந்தை போய் பார்த்து வந்தாள் ஸ்வேதா. இதற்கிடையில் சுமதி கொலையின் ஆதாரங்களை நீதிபதிக்கு ஈமெயில் செய்கிறாள். நீதிபதி வரதன் ஜாமீனை ரத்து செய்கிறார். அவனுக்கு நிர்மலா மேல் இன்னும் ஆத்திரம் அதிகமாகிறது. அவர்கள் தொடர்ந்து தேடும் போது மெயின் சர்வர் ஐ பி அட்ரஸ் கிடைக்கிறது . சிஸ்டம் அரவிந்த் வீட்டில் இருந்து செயல்படுவதை சிவா கண்டுபிடிக்கிறான். சிவா, சேகரை அனுப்பி அந்த சிஸ்டம் செயல் இழக்க செய்ய முடியுமா என கேட்கிறான்.
அது அவ்வளவு சுலபமில்லை என தெரிகிறது.இதற்கிடையில் ஆனந்த் கோமாவில் இருந்து முழுமையாக விடுபடுகிறான். தனக்கு விவாகரத்து வாங்கி கொடுத்ததற்க்காக அவன் அப்பா மீது கோபப்படுகிறான்.
அரவிந்த் மனைவியிடம் பேசி பார்க்கிறான் சேகர் . அவள் உதவுவதாக கூறுகிறாள். அந்த வீட்டுக்கு சேகரை அழைத்து போகிறாள். ஆனந்த் அங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆகி திரும்புகிறார்கள். ஆனந்த் தற்போது அட்மின் ஆக செயல்படுகிறான். ஆனந்த் சிவாவை கொன்று விடுவதாக ஸ்வேதா மூலமாக எச்சரிக்கிறான் .ஸ்வேதா சிவாவை உடனடியாக எல்லாவற்றையும் நிறுத்தும்படி சொல்கிறாள். சிவாவும் சேகரிடம் சொல்லி வருத்தபடுகிறான். நிர்மலா தொடந்து வாதாடி வரதனுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை வாங்கி கொடுக்கிறாள். சிறையில் இருக்கும் வரதனை ஆனந்த் சந்தித்து பேசுகிறான். ஆனந்த் நிர்மலாவின் தம்பியை கொன்று விடுவதாக மிரட்டியதும் வக்கீல் தொழில் இருந்து தற்காலிகமாக விலகுகிறாள். ஸ்வேதா ரம்யாவிடம் சொல்லி சிவாவுக்கு அமெரிக்காவிலேயே வேலை வாங்கி தரும்படி கேட்கிறாள்.
3 மாதங்களுக்கு பிறகு சிவாவுக்கு அமெரிக்காவில் வேலை வாங்கி தருகிறாள் ரம்யா. அவள் கணவர் ஜான் எல்லாவிதமான உதவிகளை செய்து தருகிறார். அமெரிக்காவில் ஸ்வேதாவும், சிவாவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்குகின்றனர். என்ன ஸ்வேதா இனிமே உனக்கு எந்த தொந்தரவும் இல்லையே ?ரொம்ப தாங்க்ஸ் சிவா எனக்காக உங்க அப்பா அம்மாவை விட்டுட்டு வந்ததுக்கு.அதை நினைத்து தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு . சேகரும், அரவிந்த் மனைவியும் அரவிந்தின் மெயின் மெயில் அக்செஸ் உடன் தொடர்பு கொள்ள முடியுமா என முயற்சித்தனர். நடக்கவில்லை. தனக்கு தெரிந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர்களிடம் உதவி கேட்கிறான் சேகர். சேகர் மனைவி பெயரில் அரவிந்த் சிஸ்டம் பாஸ்வேர்ட் செட் செய்து இருப்பதால் மெயில் அக்செஸ் சாத்தியம் என ஒரு நண்பர் சொல்ல மெயில் அக்செஸ் செய்து பார்த்தபோது ரம்யாவின் கணவர் ஜான் அந்த குழுவில் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பது தெரிந்து சேகரும், அரவிந்த் மனைவியும் அதிர்ச்சி அடைகின்றனர். சேகர் உடனடியாக இந்த தகவலை சிவாவிடம் சொல்கிறான்.
ஸ்வேதாவிடம் இதை சொன்னால் தாங்கமாட்டாள் என உணரும் சிவா ரம்யாவிடம் இதை எப்படி சொல்வது என தயங்குகிறான். இதற்கிடையில் ஆனந்த் ஜானிடம் சொல்லி சிவாவை அங்கேயே வைத்து முடித்து விட திட்டம் போட்டான். ரம்யா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ரெஸ்டாரன்ட் வரியா என்றான் சிவா. என்ன விஷயம் சிவா எதுவும் முக்கியமான விஷயமா? அதெல்லாம் ஒண்ணும் இல்ல நீ வா என்றான். நான் இந்தியாவுக்கே திரும்பி போலாம்னு இருக்கேன் என்ன விளையாடுறியா உனக்காக கஷ்டப்பட்டு இங்கேயே போஸ்டிங் வாங்கி கொடுத்தா ? இப்படி சொல்லுறியே என்றாள். ஜானுக்கு தெரிந்தா எவ்வளவு வருத்தப்படுவார்னு உனக்கு தெரியாது . ரம்யா நீ எனக்கு ரொம்ப முக்கியம் . இதை எப்படி உன்கிட்ட சொல்லுறதுன்னு எனக்கு தெரியல. என்னால சொல்லாம இருக்கவும் முடியல. இந்த மெயில் படிச்சு பாரு உனக்கே புரியும். அவள் முகம் கறுத்தது. என்னால நம்ப முடியல ஜான் இப்படிப்பட்டவரா ? சில சமயம் கசப்பான நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும் என்றான். சரி இப்போ நீ இந்தியா போக வேண்டாம். அவனுக்கு சந்தேகம் வந்து விடும். நான் ஜான் சிஸ்டெம் ல இன்னும் ஏதாவது இன்ஃபர்மேஷன் கிடைக்குதா அப்படின்னு பாரக்குறேன் . ஸ்வேதாகிட்ட கூட நான் இதை பத்தி சொல்லல. சரி சிவா.
என்ன சிவா ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் சிவா என்றாள் ஸ்வேதா. எதாகவது புது பிரச்சனையா ?சொல்லு என்றாள். ஒண்ணுமில்லை நாமதான் ரொம்ப தூரம் வந்து விட்டோமே இனி ஒரு பிரச்சனையும் இல்லை. நமக்கு குழந்தை வேணும் சிவா அப்புறம் எல்லாம் சரி ஆகிவிடும். குட்டி சிவா குட்டி ஸ்வேதா எல்லாம் வேணும் . பாவம் ஸ்வேதா எவ்வளவு கனவுகளோடு இருக்கிறாள் என நினைத்தான். ஸ்வேதா உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நினைக்கிறேன் சொல்லு சிவா. சப்போஸ் எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் ? போதும் சிவா நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். அவனை இறுக்க அணைத்து கொண்டாள்.ஜான் ஆனந்த் உடன் பேசினான் . எவ்வளவு சீக்கிரம் சிவாவை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிச்சிடு என்றான் ஆனந்த். சரி ஆனந்த் என்னோட பேமண்ட்? அது உனக்கு எப்பவும் போல வந்துடும்.சிவாவுக்கு ஆனந்த் தன்னை ஜானிடம் சொல்லி முடிக்க சொல்லி இருப்பது தெரிந்தாலும் அமைதி காத்தான்.
என்ன ரம்யா ஏதாவது புது அப்டேட் கிடைச்சுதா இல்லை சிவா அவன் சிஸ்டம் அக்செஸ் பண்ணவே முடியல என்றாள். பரவாயில்லை ரம்யா நீ ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதே என்றான்.ஜான் அவளை தேடி ரெஸ்டாரன்ட் வந்து விட்டான். என்ன ரம்யா என்னையும் கூப்பிட்டிருக்கலாமே என்றான். ரொம்ப போர் அடிக்குதுன்னு சும்மா தான் வெளியே வந்தோம். சரி நீங்க பேசிட்டு இருங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்றான்.ரம்யா வாழ்க்கையும் எதிர்பாராமல் இப்படி ஆனதை எண்ணி வருத்தப்பட்டான் சிவா. இதுக்கெல்லாம் நீ பீல் பண்ணாதே சிவா எல்லாம் என் தலையெழுத்து என்றாள். ரம்யா தொடர்ந்து ஜானின் நடவடிக்கைகளை கண்காணித்தாள். சிவா இது பற்றி நிர்மலாவிடமும் தெரிவித்தான். அன்று எதிர்பார்த்தது போல சம்பவம் நடப்பதற்கான அறிகுறி தென்பட்டது. சிவா காலை வாக்கிங் செல்வதற்காக வெளியே புறப்பட்ட நேரம் ஜானிடம் இருந்து கால் வந்தது. சிவா நானும் ஜாயின் பண்ணிக்கலாமா ?ரம்யாவும் வரா என்றான். சரி வாங்க என்றான்
பனிமூட்டம் லேசாய் இருந்தது. சிவா வீடு ஜான் வீட்டுக்கு சற்று தள்ளி இருந்தது. சிவா ஜானை பார்த்ததும் கை அசைத்தான் . ரம்யாவும் வீட்டிலிருந்து வெளிப்பட்டாள். மூவரும் ஓரமாக ஜாகிங் போக தொடங்கினர் . சிவா டீ குடிச்சியா என்றாள் ரம்யா. ம் ஸ்வேதா போட்டு கொடுத்தா என்றான். ரம்யா சிவாவிடம் ஜாக்கிரதையா இரு என்று கைதுப்பாக்கியை காட்டுவது போல காட்டினாள் . ஜான் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை பார்த்ததும் பனியிலும் வியர்க்க துவங்கியது சிவாவிற்கு . மூவரும் ஒரு காப்பி ஷாப்பில் காப்பி சாப்பிட்டனர். சிவா நீங்க சீக்கிரம் ஒரு licence உள்ள கன் வாங்கிகோங்க என்றான். எதுக்கு ஜான் அப்படி சொல்லறீங்க ?. ஒரு சேஃப்டிக்குதான் என்றான். மூவரும் திரும்ப தயாரான நிலையில் ரம்யா நீ ரொம்ப களைப்பா இருக்கிற வீட்டுக்கு போறியா என்றான் ஜான். சரி . நானும் சிவாவும் இன்னும் ரெண்டு ரவுண்டு போயிட்டு வறோம் என்றான். ஓகே .
ரம்யா வீட்டுக்கு வந்ததும் அவசர அவசரமா ஜானுடைய உடமைகளை ஆராய்ந்தாள். ஒரே ஒரு ஹார்ட் டிஸ்க் தான் கிடைத்தது . அதை காப்பி செய்து கொண்டாள். சிவா ஜானுடன் தயக்கத்துடனே ஓடினான். ரம்யா மனதில் பலவிதமான எண்ணங்கள் ஓடின. என்னவோ நடக்கபோகிறது என பட்டது . அந்த காப்பி செய்த ஹார்ட் டிஸ்கை எடுத்து கொண்டு ஸ்வேதா வீட்டுக்கு விரைந்தாள். ஸ்வேதா தூங்கி கொண்டிருந்தாள். பெல் அடித்ததும் தூக்க கலக்கத்துடன் வந்து கதவை திறந்தாள். ஸ்வேதா
ரம்யாவை உள்ளே வரும்படி அழைத்தாள் .இந்த டிஸ்க் சிவாவோடது அவன் இப்போ வந்ததும் கொடுத்துடு என்றாள். என்ன அவசரம் ? இரு காப்பி போடுறேன் என்றாள் ஸ்வேதா. அதெல்லாம் ஒண்ணும் வேணாம் இப்பதான் குடிச்சேன் . சிவா சற்று முன்னதாக ஓடிகொண்டிருந்தான். ரம்யா விடைபெற்று கொண்டு வருவதற்கும் சேகர் உள்ளே நுழைவவதற்க்கும் இடையில் அந்த துப்பாக்கி குண்டு ஜானின் துப்பாக்கியில் இருந்து வெடித்தது, ரம்யா குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தாள். சிவா ஆம்புலன்ஸ், ஆம்புலன்ஸ் என்று உரக்க கத்தினான்.ரம்யா ரம்யா என்று கேவியவாறு இருந்தான். அவன் மடியிலேயே ரம்யாவின் உயிர் பிரிந்தது.