ஜான் திகைத்து போனவனாய் அங்கிருந்து ஓடினான். ஸ்வேதாவும் ,சிவாவும் செய்வதறியாது தவித்து போயினர். போலீஸ் விரைந்து வந்து விசாரித்தது. ஜான் அடுத்த 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டான். ஸ்வேதாவும், சிவாவும் ரம்யா குறித்து வேதனை அடைந்தனர். ரம்யாவின் பெற்றோருக்கு தகவல் குடுத்தனர். விமானத்தில் ரம்யாவின் உடல் சென்னைக்கு அனுப்பப் பட்டது. சிவா ஸ்வேதாவுடன் வேதனையுடன் அமெரிக்காவை விட்டு கிளம்பினான். ரம்யாவின் நினைவுகளை என்றும் அவனால் மறக்க முடியாது. ஜான் ஆனந்த் சொல்லித்தான் சிவாவை கொல்ல முயற்சித்ததாக
ஒப்புக்கொண்டான். ஆனந்தும் சென்னையில் அரெஸ்ட் செய்யப்பட்டான்.ரம்யா குடுத்த ஹார்ட் டிஸ்கை ஸ்வேதா சிவாவிடம் குடுத்தாள் . அரவிந்த் மனைவியும் ,சேகரும் அதில் உள்ள தகவல்களை பயன்படுத்தி அந்த நெட்வொர்க்கில் உள்ள மீதமுள்ள பிரபல புள்ளிகள் 13 பேரையும் கண்டறிந்தனர். அவர்கள் சம்பந்தமான விவரங்களை சேகரித்தனர். நிர்மலா அதனை நீதிபதிக்கே மெயில் செய்தாள். 13 பேருடைய இல்லங்களிலும், அலுவலகங்களிலும் ரைட் நடந்தது. அதில் அதிகபட்ச தகவல் கிடைக்காததால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.ஆனந்துக்கு சிவாவை கொல்ல ஜானை தூண்டிய வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஜான் மீதான விசாரணை அமெரிக்கா கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது.
ஸ்வேதாவிடம் இனிமேதான் நாம ஜாக்கிரதையா இருக்கணும் என்றான் சிவா. இன்ஸ்பெக்டர் ஷிவானி 13 பேரின் மீதான கேசை நடத்தி வந்தாள். அந்த கேஸ் சிபிஐ ஆபிசர் எழில் பொறுப்பில் விடப்பட்டதும் வருத்தம் அடைந்தாள் ஷிவானி. சேகரை சில நாட்கள் தலைமறைவாய் இருக்கும்படி சொல்லி இருந்தான் சிவா. ஆனால் அவனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் ஷிவானியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தான் சிவா. இது சிபிஐ வசம் உள்ள கேஸ் எனவே இதை எழிலிடம் குடுக்கும்படி சொன்னாள். எழில் இது சாதாரண மிஸ்ஸிங் கேஸ் இதை எதற்கு சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றான். அவர் முக்கியமான witness . அவர் காணாம போனா இந்த கேஸ் நிக்காது என்றாள் ஷிவானி . சரி சரி நாம சேர்ந்தே தேடுவோம் என்றான் எழில். சேகர் மொபைல், லேப்டாப் இரண்டுமே பார்சல் மூலமாக சிவாவை வந்து சேர்ந்திருந்தது. அதை எழில் வசம் ஒப்படைத்தான் சிவா. சேகர் தனக்கு ஏதோ ஏற்பட போவதாக நினைத்திருக்கலாம் என்றாள் ஷிவானி . சேகர் மொபைல் லாஸ்ட் கால் எக்ஸ் எம் எல் ஏ கமலன்கிட்டேயிருந்து தான் வந்திருக்குது . சரி நாம அங்கிருந்தே விசாரிப்போம் என்றான் எழில்.
நிர்மலாவுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது . எக்ஸ் எம் எல் ஏ கமலனும் அந்த 13 பேரில் ஒருவராக இருந்தார். கமலன் ஆபீஸ் போய் விசாரித்த போது அவரது உதவியாளர் மணி தான் அந்த காலை சேகருக்கு பண்ணியதாக சொன்னார். சும்மா ஐயா பேரை கெடுக்குறானே அப்படின்னு நான்தான் அவனை சும்மா மிரட்டினேன் என்றான். இப்போ சேகர் ஆள் மிஸ்ஸிங் என்றான் எழில். எங்களுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றான். எழில் அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்க எல்லோரும் கம்பி எண்ண வேண்டியதுதான் என்றான். சும்மா மிரட்டல் வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க என்றான் மணி. அரவிந்த் மனைவிக்கும் சேகர் பற்றி தெரியவில்லை. இரண்டு நாட்கள் தேடலுக்கு பிறகு ரயில்வே டிராக் ஓரமாக சேகர் இறந்த நிலையில் கண்டெடுக்கபட்டான். சிவா கதறி அழுதான். ஸ்வேதா அவனுக்கு சமாதானம் சொல்ல முடியாமல் தவித்தாள். சேகர் மரணத்தால் ஷிவானியை 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்கள். எழில் தன்னுடைய உண்மையான வருத்தத்தை சிவாவிடம் தெரிவித்தான்.
எப்படியும் உண்மையான குற்றவாளிக்கு தண்டனை வாங்கி தருவதாக சொன்னான். சேகர் மறைவு தாங்க முடியாத துயர் தருவதாக இருந்தது சிவாவுக்கு.
போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் பெரிதாக எதையும் சொல்லவில்லை. ஆனால் சேகர் ரெயிலில் அடிபட்டு இறக்கவில்லை என திட்டவட்டமாக சொன்னது.
ஷிவானி சஸ்பெண்ட் ஆன போதும் சேகர் மறைவு குறித்தே சிந்தித்தாள் . அரவிந்த் மனைவியும் என்ன செய்கிறாள் என்றே தெரியவில்லை அவளுடைய போனும் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. எழில் ஷிவானிக்கு ஃபோன் பண்ணினான்.ஷிவானி ஏதாவது improvement இருக்குதா சேகர் மரணத்துல என்றாள்.சேகர் சட்டையில் இருந்து ஒரு கெமிக்கல் வாசம் வந்தது. அதை தயாரிக்கிற நிறுவனங்களை விசாரிக்க சொல்லி இருக்கேன்.நாம மீட் பண்ண முடியுமா இன்னும் சில சந்தேகம் இருக்கு என்றான் எழில். shure ஆனா நம்மளை யாரும் வாட்ச் பண்ணாத இடமா இருந்தா தேவலை என்றாள். ஸ்வேதா வீட்ல மீட் பண்ணலாமா ? ஓகே என்றாள். சிவா வேலைக்கு போயிருந்தான்.ஸ்வேதா மட்டும் வீட்டில் இருந்தாள். இருவரின் வருகையை அவள் எதிர்பார்க்கவில்லை. சாரி கொஞ்சம் அர்ஜண்ட்டா மீட் பண்ண வேண்டியதா போச்சு என்றான். நீங்க பேசிட்டு இருங்க டீ போட்டு தரேன் என்றாள் ஸ்வேதா.
ஷிவானி சேகர் டெத் ல ஏதோ மர்மம் இருக்கு. எக்ஸ் எம்எல்ஏ கமலன் மேலதான் சந்தேகமா இருக்கு. அந்த கெமிக்கல் செக் பண்ணினதுல கமலன் ஃபேக்டரில இருந்துதான் தயாரிக்கபட்டிருக்க வாய்ப்பிருக்கு. ஸ்வேதா எப்படியாவது இந்த கேஸ் முடிஞ்சா போதும் னு இருக்கு. ரம்யா மரணத்தில் இருந்தே எங்களால மீள முடியல இப்போ சேகர் வேற என்றாள். எழில் எல்லாம் சரி ஆயிடும் என்றான். நீங்க தெரியாத நபர்கள் வந்தா கதவை திறக்காதீங்க என்றான். ஷிவானி அதிகம் பேசாமல் இருந்தாள். நாளைக்கு நாம நிர்மலாவை பார்த்து பேசலாமா ? அவங்களுக்கு தான் டீடெயில்ஸ் அதிகம் தெரியும் என்றாள். நாளைக்கு காலைல 10 மணி போல போவோம் என்றான். சரி ஷிவானி வீட்ல டிராப் பன்னவா ? வேண்டாம் நான் இன்னும் கொஞ்ச நேரம் ஸ்வேதா கிட்ட பேசிட்டு வரேன் நீங்க போங்க எழில் என்றாள். சரி என்றான்.ஸ்வேதாவிடம் அமெரிக்காவில் நடந்ததை பற்றி பேசினாள் ஷிவானி . ஆனந்த் ஜெயிலிலே இருந்து சேகர் கொலையை செய்ய கூடிய ஆள் தான் என்றாள் ஸ்வேதா.
மதியம் போல சிவா வீட்டுக்கு வந்தான். ஷிவானியும் . எழிலும் வந்தாங்க சிவா.. அவங்களால ஒண்ணும் பண்ணமுடியாது ஸ்வேதா. நாமதான் நம்மளை பாத்துக்க வேண்டும் என்றான். எந்த கெமிக்கல் ஃபேக்டரி அப்படின்னு சொன்னாங்க ? அம்பத்தூர் பக்கத்துல கிரண் ஃபேக்டரி அப்படின்னு சொன்னாங்க. சரி ஸ்வேதா நீ யார்கிட்டயும் இதை பத்தி பேசாதே என்றான். ஸ்வேதா நாம எவ்வளவு தூரம் போனாலும் எதிரிகள் நம்மளை விட மாட்டேங்குராங்க என்றான். நீ அதை பத்தி கவலை படாதே சிவா அப்பா அம்மாவை பார்த்தியா சிவா ? பார்த்தேன் அவங்களுக்கும் சேகர் இறந்த விதத்துல ரொம்ப வருத்தம். அப்போது அரவிந்த் மனைவியிடம் இருந்து கால் வந்தது. சொல்லுங்க மேடம் எங்க இருக்கீங்க சேகர் இறுதி சடங்குக்கு கூட வரவில்லையே என்றான். நான் ஆபத்துல இருக்கேன் எனக்கு ஷிவானி நம்பர் மெசேஜ் பண்ணுங்க என்றாள். ஃபோன் துண்டிக்கப்பட்டது. ஷிவானி நம்பரை மெசேஜ் பண்ணினான். ஷிவானிக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். அரவிந்த் வீட்டின் லொகேஷன் அனுப்பினான்.
ஷிவானி அரவிந்தின் மனைவியை சந்திதாள். என்னாச்சு மேடம் யாராவது மிரட்டி ஃபோன் பண்ணாங்களா ? ஆமாம் மேடம் . எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு . கமலன் சம்பந்தப்பட்ட ஃபைல் எடுத்துக்கிட்டு நாளைக்கு ஈவினிங் 5 மணிக்கு அவர் முட்டுக்காடு வீட்டுக்கு வர சொல்லுறாங்க. அந்த ஃபைல் எங்கே . இதோ என்றாள். அதை வாங்கி பார்த்துவிட்டு கமலன் ஊர்ல தான் இருக்காரா ? ஆமாம் அவரே நேரடியா பேசினார். நான் எழில் கிட்டே பேசறேன். உடனே ஃபோன் எடுத்தான். என்னாச்சு ஷிவானி விஷயத்தை சொன்னாள். அந்த ஃபைல் காப்பி எனக்கு ஒண்ணு whatsapp அனுப்புங்க நான் நாளைக்கு அவங்களை வந்து கமலன் வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்னு சொல்லுங்க . அதெல்லாம் வேண்டாம் மேடம். சும்மா பயப்படாதீங்க எழில் பார்த்துக்குவாரு . நீங்க தைரியமா இருங்க என்றாள் ஷிவானி. இதற்கிடையில் மறுநாள் நிர்மலாவை சந்தித்தார்கள் ஷிவானியும், எழிலும். நிர்மலா எப்படியாவது ஆனந்த்துக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்றாள்.
நிர்மலா இன்னும் சில விஷயங்களை சொன்னாள். சிறையில் இருக்கும வரதனை பெயிலில் அனுப்ப திட்டம் தீட்ட படுகிறது என்றாள். வரதன் மூலமாக என்னை கொல்ல சதி திட்டம் தீட்டபடுகிறது என்றாள். இதை கேட்டு இருவரும் அதிர்ந்தனர். நான்தான் இந்த கேஸ்ல மிச்சம் இருக்கிற
நேர்மையான வக்கீல் அதனாலே என்னை கொல்ல முயற்சி நடக்கலாம். எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு வரதன்தான் பொறுப்பு. என் தம்பியை நினைத்தால் தான் கவலையாய் இருக்கிறது என்றாள். நீங்க ஒண்ணும் பயபடாதீங்க நாங்க சீக்கிரம் கமலனை அரெஸ்ட் பண்ணுவோம். பிறகு தானாகவே மத்த எல்லோரும் முடங்கிடுவாங்க என்றான் எழில். ஷிவானி ஏதோ சில கேள்விகளை கேட்டாள். மறுநாள் அரவிந்த் மனைவியுடன் கமலன் வீட்டுக்கு போனான் எழில். வாங்க எழில் வாங்க நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன் மணி சொல்லியிருந்தான். அந்த ஃபைல் கொண்டு வந்தீங்களா? இல்லை உன் வீட்டை சர்ச் பண்ண வாரண்ட் கொண்டு வந்தேன். கான்ஸ்டபிள்ஸ் சர்ச் என உத்தரவிட்டான். திடீர் நடவடிக்கையை எதிர் பார்க்காத கமலன் அதிர்ந்தான். போலீஸ் ஒரு கஞ்சா மூட்டையை அவன் ரூமில் இருந்து கொண்டு வந்து வைத்தது. கமலனை அரெஸ்ட் செய்து ஜீப்பில் ஏற்றினான் எழில். அரவிந்த் மனைவியிடம் நீங்க பத்திரமா வீட்டுக்கு போங்க.. இவனால இனி ஒரு ஆபத்தும் வராது என்றான் எழில். கோவத்தில் முகம் சிவக்க அமர்ந்திருந்தான் கமலன். போலீஸ் வண்டி வேகமாக ஸ்டேஷன் நோக்கி விரைந்தது.