Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு நாளும் உனை மறவேன் - Part 7


நான் இப்போ வக்கீலா பிராக்டிஸ் பன்றேன். சுமதியை எனக்கு சின்ன வயசிலேர்ந்தே தெரியும். ரொம்ப தைரியமான பொண்ணு . அவ ஆனந்தை காதலிக்க ஆரம்பிச்சா ஆனா அவன் இவளை கை விட்டுவிட்டான். ஆனந்தும், சுமதியும் நெருக்கமா இருந்த வீடியோவை அரவிந்த் கூட ஷேர் பண்ணினான். அரவிந்த் சுமதியை மிரட்டினான் . அந்த வீடியோவை வெச்சு முரளி கூட மிரட்டினான் . சுமதி எதுக்கும் பயப்படலை. அப்போதான் ரம்யா நிச்சயதார்த்ததுல அரவிந்த், ஆனந்த் ரெண்டு பேரையும் சந்திச்சா.சுமதியை மூணாவது மாடிக்கு அழைத்து போய் பேசுனப்போ என்ன நடந்ததுன்னு தெரியல அப்போதான் ஆனந்த் கீழே விழுந்துட்டான்.இப்போ கோமா ல இருக்கான். சுமதி எனக்கு ஃபோன் பண்ணி நடந்ததை சொன்னா. அடுத்த நாளே சுமதி சூசைட் பண்ணிக்கிட்டா. ஆனந்தை தள்ளி விட்டது யாருன்னு கண்டு பிடிக்க போலீசால முடியல. அது யாருன்னு தெரிஞ்சா நாம அடுத்த கட்டத்துக்கு போக முடியும் என்றாள் . நானும் நிறைய பேரை விசாரிச்சேன் . என்னால சுமதி ஏன் அப்படி ஒரு முடிவுக்கு வந்தா அப்படிங்கறதை கண்டுபிடிக்க முடியல. சிவா வீட்டுக்கு வந்தான் . என்னாச்சு சிவா ஏதாவது பாசிட்டிவ் ரிப்போர்ட் கிடைச்சுதா ? ஒரே குழப்பமா இருக்கு . ம் ம் கொஞ்சம் ரெஸ்ட் எடு . நான் போய் உனக்காக ஏதாவது சமைக்கிறேன் என்றாள் ஸ்வேதா. மறுநாள் ஃபோன் செய்தாள் நிர்மலா. நாம அந்த நீலாங்கரை வீட்டுக்கு போக முடியுமா என்றாள். ஸ்வேதா கிட்ட அதோட சாவி இருக்கு . நானே உங்களை வந்து பிக்அப் பண்ணிக்கிறேன் என்றான் சிவா. சரி. நீலாங்கரை வீடு எதுக்காக ? இங்கே சுமதியை தவிர வேறு சில பெண்களையும் கட்டாய படுத்தி இருக்கலாம் . ம் வீட்டு வேலைக்காரன் ஒருவன் இருந்தான். அவனிடம் விசாரித்தாள். அப்படி யாரையும் ஆனந்த் கூட்டிட்டு வர மாட்டாரு ஆனா அரவிந்த் கூட்டிட்டு வருவாரு என்றான். சிசி டிவி ஃபுடேஜ் எல்லாவற்றையும் மறுபடி ஒரு முறை பார்த்தாள் நிர்மலா. ஒரு க்ளூவும் கிடைக்கவில்லையே என்றாள். ஒருவேளை அந்த சிசி டிவி ஃபுடேஜ் அரவிந்த் வசம் இருந்தால் என்ன செய்வது என்றான் சிவா. ரம்யா அமெரிக்காவுக்கு கிளம்பும் நாளில் அவளை சந்தித்து விடை கொடுத்தான். என்னை மறந்துடாதேடா என்றாள் ஆதங்கத்துடன் . ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடு என்றாள்.

நாம அந்த நிச்சயதார்த்தம் நடந்த கல்யாணமண்டபம் போய் விசாரிக்கலாமா ?. லிப்ட் ஆபரேட்டர் யாராவது சுமதியை பார்த்தாங்களான்னு விசாரிக்கலாம் என்றான் சிவா. சரி நாளைக்கு போய் பார்க்கலாம் என்றாள் நிர்மலா. கல்யாணமண்டபத்தில் 3 வது மாடிக்கு போவதற்கு லிப்ட் இருந்தது. ஆனந்த் கீழே விழுந்த தேதியை சொல்லி அன்னைக்கு லிப்ட் ஆபரேட்டர் டியூட்டி ல இருந்தவர் பேரு கதிர் அப்படின்னு தெரிஞ்சது . அவர் அந்த சம்பவத்துக்கு அப்புறம் வேலைய விட்டு நின்னுட்டாரு . சிவா அவர் மொபைல் நம்பர் வாங்கி ஃபோன் பண்ணினான். அவர் மனைவிதான் ஃபோன் எடுத்தார் . அவர் குளிக்கிறாரு என்ன விஷயம் சொல்லுங்க என்றாள். கொஞ்சம் அவசரம் வீட்டு அட்ரஸ் சொல்ல முடியுமா நேர்ல வந்து பார்க்கிறோம் . சரி நோட் பண்ணிக்குங்க என்றாள். மணி மதியம் 2 ஆகி இருந்தது . அன்னைக்கு ஆனந்த் நல்லா குடிச்சிருந்தாரு. 3 வது மாடிக்கு நீங்க சொன்ன அந்த லேடி வந்தாங்க. அது இவங்களா அப்படின்னு பார்த்து சொல்லுங்க என்று சுமதி புகைப்படத்தை காட்டினான் . இவங்க இல்லை இவங்கள நான் பார்க்கவேயில்லை என்றான் . நீங்க பார்த்த லேடி அடையாளம் சொல்ல முடியுமா ? அவங்க கழுத்துல ஈகிள் அப்படின்னு tattoo போட்டிருந்தது, ஓகே கதிர் . வேற எதுவும் உங்களுக்கு விவரம் ஞாபகம் வந்தா உடனே என்னை இந்த நம்பர் ல கூப்பிடுங்க . சரி சார் .

இதென்ன புது குழப்பமா இருக்கு . நாம அன்னிக்கி போட்டோஷூட் பண்ண பையனை விசாரிச்சா ஓரளவுக்கு அந்த லேடி ஐ நெருங்கலாம் என்றான் சிவா. நான் ரம்யா கிட்ட பேசிட்டு அந்த பையனை பார்க்கிறேன் . பார்த்துட்டு உங்களுக்கு ஃபோன் பண்ணுறேன் . சரி சிவா. ரம்யா அந்த பையன் ஸ்டுடியோ அட்ரஸ் whatsapp செய்திருந்தாள். மறு நாள் போய் பார்த்தான் . அவ்ளோ நுணுக்கமா நான் யாரையும் பார்க்கலை . அந்த ஃபங்சன் வீடியோ copy இருக்கு தரேன் வேணா பாருங்க என்றான். சரி அதை ஒரு பென் ட்ரைவில் போட்டு கொடுத்தான். வீட்டுக்கு போய் அதை ஸ்வேதாவுடன் சேர்ந்து பார்த்தான் சிவா. யாரும் அதில் ஈகிள் என்ற tattoo போட்டிருக்க வில்லை. மணப்பெண் அலங்காரம் செய்த பெண்ணையும் காண்டாக்ட் பண்ணலாம் என்று முடிவெடுத்தான். ஸ்வேதா நீ போய் பார்த்துவிட்டு வா நான் வந்தால் சந்தேகப்படுவார்கள் என்றான். ஸ்வேதா அந்த பெண்ணை தொடர்பு கொண்ட போது அவள்தான் அந்த tattoo வை மிருணாளினி என்ற பெண்ணுக்கு போட்டு விட்டதாக சொன்னாள். அவளுடைய அட்ரஸ், ஃபோன் நம்பர் இரண்டையும் குடுத்தாள்.


மிருணாளினி வீட்டுக்கு போன போது அவள் அப்பாவுடன் இருப்பது தெரிந்தது. நாம வெளியே போய் பேசலாம் என்று சொன்னாள். ஆனந்த் அப்படிப்பட்டவன்னு எனக்கு தெரியாது . சாதாரணமா ஃப்ரெண்ட்லியாதான்
பழகுனேன். அன்னைக்கு அவன் குடிபோதைல என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான் . கோவமா அங்கிருந்து வந்துட்டேன். அவனை கொல்லனும் அப்படினு நோக்கம் எல்லாம் இல்லை. வேற யாராவது அந்த நேரத்துல உங்க கூட இருந்தாங்களா ? யாரும் இல்லை . சரி அப்போ அவனாத்தான் தவறி விழுந்துட்டானா எனக்கு கொஞ்ச நாள் முன்னாடி ஒரு வீடியோ வந்துச்சு அதுல இருக்குறது ஆனந்த் தானா அப்படின்னு சந்தேகம் தான்.தன்னுடைய மொபைலில் இருந்த வீடியோவை காட்டினாள் . இனிமே நீ எந்த பொண்ணு வாழ்க்கையிலும் விளையாடக்கூடாது இதோட நிறுத்திக்க என்று ஒரு பெண் குரல் சொன்னது. அதே உருவம் அவனை அந்த மாடியில் இருந்து கீழே தள்ளவும் செய்தது. ஜும் பண்ணி பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. இருட்டாக இருந்தது. என்னை இதுல involve பண்ண வேண்டாம் எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்காங்க. சரி மேடம் .

வீட்டுக்கு வந்து அந்த வீடியோவை ஸ்வேதாவிடம் காண்பித்தான். நிர்மலாவிற்கும் அனுப்பினான் இது என் ஃப்ரெண்ட் திலகவதியின் குரல்தான் என்றாள் நிர்மலா. அவ இப்போ இந்தியா ல இல்லை சிங்கப்பூர்ல வேலை கிடைச்சு போயிட்டா என்றாள். திலகவதி வீடியோ காலில் வந்தாள். ஆமாம் நான்தான் ஆனந்தை கீழே தள்ளினேன் என்றாள். சுமதி விஷயமா ஏதாவது தெரியுமா உங்களுக்கு? என்றான். சுமதி பத்தி எனக்கு தெரியாது என்றாள். கே கே வை நிர்மலாவுடன் போய் சந்தித்தான் . நடந்த விஷயங்களை சொன்னான். ரொம்ப தாங்க்ஸ் சிவா நீங்க எனக்கு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க என்றான் கே கே. நிர்மலா உனக்கும் என் நன்றிகள் என்றான். எதுக்கும் நிர்மலாவோட மொபைல் ஒரு தடவை கடைசியா செக் பண்ணிடுங்க . அவ ஃபோன் பாங்க் லாக்கர் ல இருக்கு. சாவி என் கோடம்பாக்கம் வீட்டுல அவ போட்டோவுக்கு கீழே இருக்கு என்றான். நிர்மலாவும் சிவாவும் கோடம்பாக்கம் வீட்டுக்கு சென்று சாவியை எடுத்து பாங்க் சென்று போனை எடுத்தனர். அந்த ஃபோன் சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. வீட்டுக்கு வந்து ஃபோனை சார்ஜில் போட்டான்.நிர்மலா இந்த ஃபோன் மூலம் புதிய தகவல் கிடைக்கலாம் என்றாள். அப்போது யாரோ காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.கதவை திறந்தவுடன் ஒரு ஆள் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தான். சுமதி மொபைல் எங்கே என்றான். சிவாவுக்கு வேறு வழி தெரியவில்லை சார்ஜில் போட்டிருந்த மொபைலை எடுத்து குடுத்தான்.

நிர்மலாவும், ஸ்வேதாவும் திகைத்து போய் நின்று இருந்தார்கள். மாலை 4 மணி அளவில் சிவாவுக்கு ஃபோன் வந்தது. பாஸ்வேர்ட் என்ன என கேட்டான் சொன்னால்தான் நிர்மலா தம்பியை உயிரோடு விடுவோம் என்றான் . காலையில் துப்பாக்கியுடன் வந்திருந்த ஆளின் குரல். எனக்கொரு 2 ஹவர்ஸ் டைம் கொடு என்றான் சிவா. சிவா கே கே வை போய் பார்த்தான். பாஸ்வேர்ட் கிடைத்து விட்டது. மறுபடி அந்த ஆள் ஃபோன் பண்ணினான்.நான் நீ இருக்கும இடத்துக்கே வந்து தருகிறேன் எனக்கு நிர்மலா தம்பி தான் முக்கியம் என்றான் சிவா . அட்ரஸ் அனுப்பியிருந்தான். பாஸ்வேர்ட் கொடுத்தான் சிவா. நிர்மலா தம்பியை விடுவித்தார்கள். மொபைல் லாகின் ஆனது ஆனால் அதில் ஒரு தகவலும் இல்லையென வீசி போனார்கள். கீழே விழுந்து நிறுங்கி போன போனை எடுத்தான் சிவா. அதன் பேக் கவர் ஓபன் செய்து பார்த்த போது சுமதியின் ஈமெயில் ஐடி, பாஸ்வேர்ட் இரண்டும் இருந்தது . மறுநாள் நியூஸ்
பேப்பரில் கே கே வும் அவனுடைய நண்பர்களும் என்கவுண்டர் செய்யபட்டதாக செய்தி வந்தது.

நிர்மலாவுடன் சுமதியுடனான ஈமெயில் அட்ரஸ் ஓபன் பண்ணிய போது அதில் ஆனந்த் பற்றிய தகவல்கள் கிடைத்தன. சுமதியிடம் ஆனந்தின் லேப்டாப் ஒன்றும் ரயில்வே cloak ரூமில் இருப்பதற்கான ரசீதும் இருந்தது. சிவா விரைந்து சென்று லேப்டாப்பை வாங்கி வந்தான். அதில் இருக்கும் தகவல் படி வரதன் என்பவன் தலைமையில் இயங்கும் நெட்வொர்க் பற்றி தெரிய வருகிறது. வரதனோடு இன்னும் 15 பேர் பெண்களின் ஆபாச வீடியோவை இணையத்தில் விற்று வருவது புரிந்தது சிவாவுக்கு. வரதனுக்கு எல்லா இடங்களிலும் செல்வாக்கு உள்ளதென்றும் அதனால் தான் கே கே என்கவுண்டர் செய்யப்பட்டான் என்று நிர்மலா சொன்னாள்.இந்த ஆவணங்களை போலீசில் கொடுத்து விடலாம் என யோசிக்கும் போது திலகவதியிடம் இருந்து நிர்மலாவிற்கு ஃபோன் வந்தது .நீதான் என்னை காப்பாத்தணும் நிர்மலா அந்த வரதனுக்கு நான்தான் ஆனந்தை கொல்ல பார்த்தேன் அப்படின்னு தெரிஞ்சு போச்சு . நான் இன்னைக்கே இந்தியா வரேன் என்றாள். நீ பயப்படாதே நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுறேன் என்றாள் நிர்மலா.