ரஞ்சித் குருஜியிடம் இதை விவகாரத்தை கேட்டுவிடலாமென்று முடிவெடுத்தான். மறுநாள் காலை அங்கு சென்ற போது போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது, கூட்டத்தை விலக்கி பார்த்தபோது குருஜி தியான வகுப்பு மேடை நடுவில் மல்லாந்த நிலையில் இறந்து கிடந்தார். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது நேற்று இரவு யாரோ குருஜியை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டதாக சொன்னர்கள். மறுநாள் செய்தித்தாளில் பார்த்த போது சரண்யாவின் மரணத்திற்கு நான்தான் காரணம் என குருஜியின் கையில் இருந்த பேப்பரில் எழுதி இருந்ததாக போட்டிருந்தது, போலீஸ் ரஞ்சித்தையும், தீப்தியையும் விசாரித்தனர்.அப்போது ரஞ்சித் மறுபடியும் ஹோட்டலில் சரண்யாவோடு தங்கியிருந்த ஆளின் போட்டோவை காட்டினான்.போலீஸ் அந்த நபரை தேட தொடங்கினர். கிஷோர் ஜாமீனில் வெளியே வந்ததும் ரஞ்சித்துக்கு போன் செய்தான். நான் சரண்யாவை உண்மையா காதலிச்சேன் ஆனா என்னோட சூழ்நிலையால் வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணும்படி ஆயிடுச்சி ஆனா என்னால நிம்மதியா வாழ முடியல. அதனாலதான் நான் சரண்யாவை தேடி போனேன் என்றான்.சரண்யா சாவுக்கு காரணமா இருந்தவர்களை போலீசில் பிடிச்சி குடுக்க நீங்கதான் உதவனும் என்றான். ரஞ்சித் தனக்கு தெரிந்த தகவல்களை சொன்னான்.
கிஷோர் சரண்யா தங்கி இருந்த ஹோட்டலுக்கு அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்களிலும் கடைகளிலும் சரண்யாவின் போட்டோவை காட்டி விசாரித்தான். ஆமா தம்பி ஒரு ஆளோட வந்துச்சி அந்த ஆளை அங்கிள் னு கூப்பிட்ட மாதிரி ஞாபகம் என்று கடைக்காரர் சொன்னார். குருஜி இறந்த விவகாரத்தில் கிஷோர் மீது சந்தேகம் இருந்தாலும் அப்போது அவன் போலீஸ் custody யில் இருந்ததால் அவன் மேல் போலீசுக்கு சந்தேகம் வரவில்லை. சரண்யாவோடு தங்கியிருந்த ஆளின் பெயர் கதிரேசன் என்றும் அவருக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. அவருடைய மனைவியை விசாரித்த போது அவர் வீட்டுக்கு வந்து ரெண்டு வாரங்கள் ஆகி விட்டதென்று கூறினால். போலீஸ் சரண்யாவின் போட்டோவை காட்டி விசாரித்த போது இந்த பொண்ணு கதிரேசனோட யோகா டீச்சர்தான் என சொன்னாள்.கதிரேசன் சிறியதொரு மளிகை கடை நடத்தி வந்தார்.
கதிரேசன் எதற்காக தலைமறைவாக இருக்கவேண்டும் என ரஞ்சித் யோசித்தான் . அவர் நேரிடையாக சரண்யாவை கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. சரண்யாவின் போஸ்டமோர்டெம் ரிப்போர்ட்டை அவரின் அப்பாவிடம் இருந்து வாங்கி பார்த்தான்.அதில் சரண்யாவும் குருஜி இறந்ததை போல கழுத்தை நெரிக்கப்பட்டு இறந்திருந்தாள்.மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்திருந்திருந்தாள்.
குருஜி போஸ்ட்போர்ட்ம் ரிப்போர்ட்டும் , சரண்யாவின் போஸ்டமோர்டெம் ரிப்போர்ட்டும் ஒரே மாதிரியிருந்தன. இரண்டு போரையும் கொலை செய்தது ஒரே ஆளா?இதை கிஷோரிடம் ரஞ்சித் சொன்னான். ரெண்டு பேருக்கும் பொதுவான விஷயம் யோகா. அப்போ யோகா கிளாஸ்ல நடந்த ஏதோ ஒரு விவகாரத்துலதான் இவங்க சம்பந்தபட்டிருக்கணும் என்றான் கிஷோர். நான் போய் ஆசிரமத்திலேயே விசாரிக்கிறேன் என்றான். விசாரித்த போது கொஞ்ச நாளைக்கு முன்னாடி கீதா என்ற பெண் யோகா டீச்சர் ஆசிரமத்தில் இருந்து காணாமல் போய் விட்டதாகவும் ஆனால் போலீஸ் அந்த கேஸை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் சொன்னார்கள்.
கீதாவுடைய முகவரி வாங்கி கொண்டு அங்கு போய் பார்த்த போது வீடு பூட்டியிருந்தது.கீதாவும் அவளுடைய தம்பியும்தான் இருந்தாங்க. ரெண்டு வருஷம் முன்னாடி கீதா காணாம போயிட்டா அந்த தம்பி மட்டும் அப்பப்போ இந்த வீட்டுக்கு வந்து போவான். அவன் வேற ஒரு ஊர்ல வேலை பார்க்கிறான் என்றார்கள் அக்கம்பக்கத்தினர்.
கதிரேசனை போலீஸ் பிடித்துவிட்டது. சரண்யாவை தான் கொலை செய்யவில்லை என தெரிவித்தார். திடீர்னு ஒரு நாள் சரண்யா போன் பண்ணி அந்த கிஷோர் ரொம்ப தொந்தரவு பண்றான் ஒரு ரெண்டு நாளைக்கு எங்கேயாவது போய் நிம்மதியா இருக்கலாம்னு இருக்கேன்னு சொன்னா... நான்தான் அந்த ஹோட்டலுக்கு கூட்டி போனேன்.அவ இப்படி சாவான்னு எதிர் பாக்கலே சார். சந்தேகத்தில் அவரை தொடர்ந்து போலீசார் விசாரித்து வந்தனர்.குருஜியின் மரணம் பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சொன்னார்.
கீதாவின் தம்பிக்கு கிஷோர் போன் செய்தான். ஆமா சார் எங்க அக்காவை குருஜி அநியாயமா கொன்னுட்டார் அதுக்கு அந்த ஆண்டவன் பார்த்து தண்டனை கொடுத்துட்டார் என்றான். உங்களை மீட் பண்ண முடியுமா நான் இப்போ டூட்டில இருக்கேன் அப்புறம் பேசுறேன் என லைனை துண்டித்தான். ரஞ்சித்தும் கிஷோரும் மேற்கொண்டு விசாரித்ததில் கீதா உயிரோடு இருப்பதாகவும் எங்கு இருக்கிறாள் என்பது தெரியாமல் மர்மமாக இருப்பதாகவும் போலீசில் சொன்னார்கள். கீதாவே இந்த கொலைகளை செய்திருப்பாளோ என்ற சந்தேகம் எழுந்தது. கீதா நிச்சயம் வேற என்ற ஏதாவதொரு யோகா நிலையத்தில்தான் பணி புரிய வேண்டும் என்பதால் எல்லா யோகா நிலையங்களிலும் விசாரித்தனர். கடைசியா அவர்கள் விசாரித்த இடத்தில இப்போது தான் ஒரு பெண் நீங்கள் சொன்ன அடையாளத்தில் சேர்ந்திருப்பதாகவும் அவள் பெயர் வெண்ணிலா எனவும் கூறினர். நாங்க வந்தா பார்க்க முடியுமா? நிச்சயமா வாங்க என்றார்கள். வெண்ணிலவை பார்த்த போது அவங்க சொன்னது உண்மைதான் குருஜி எனக்கு பண்ண கொடுமை கொஞ்ச நஞ்சமில்ல அவருக்கு பயந்துதான் நான் தலைமறைவா இருந்தேன் அதோட என் பெயரையும் மாத்திக்கிட்டேன் என்றாள். என் தம்பிதான் என்னை மனநல சிகிச்சைக்காக ஹாஸ்பிடல்ல சேர்த்து விட்டான். அது வெளியே தெரியாம இருக்க நான் இறந்துட்டதா சொல்லிட்டான். இப்போ உங்க தம்பி எங்க ? என்ன பண்றார். அவன் ஒரு ஹோட்டல் ல ரூம் பாயா இருக்கான். எந்த ஹோட்டல்ல ஹோட்டல் அப்சரால அவர் பெயரென்ன குமரன் நீங்க நினைக்கிற மாதிரி எங்களுக்கு குருஜி மேல பழி வாங்குற எண்ணமெல்லாம் கிடையாது என்றாள். எதுக்கும் உங்க தம்பியை நாங்க போய் பாக்குறோம் என்றான் ரஞ்சித்.
ரஞ்சித்தும் ,கிஷோரும் குமரனை பார்த்தனர். குமரன் வேலை பார்த்து வந்தது ஏற்கனவே சரண்யா இறந்து கிடந்த ஹோட்டல் என்பதால் சந்தேகம் வலுத்தது. நீங்கதானே சரண்யாவை கொன்னது என்றான் ரஞ்சித். சத்தியமா நான் இல்லை,ஆனா அவங்களை எனக்கு ஏற்கனவே தெரியும் என்றான், அக்கா வேலை பார்த்த அதே ஆசிரமத்திலேதான் இவங்களும் வேலை பார்த்தாங்க ஆனா எங்களுக்கு ஒரு பிரச்னை வந்த போது அவங்க கண்டுக்கலை .குருஜிக்கு உடந்தையாக இருந்தாங்க அந்த கோவம் அவங்க மேல இருந்தது ஆனா அவங்களும் குருஜியால பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சப்ப அந்த கோவம் போயி அவங்க மேல பரிதாபம் வந்துடுச்சு. எனக்கு தெரிஞ்ச உண்மையை சொல்லிடறேன் அவங்கள கொன்னது வேற யாருமில்லை அவங்க அப்பாதான் . அவர்தான் அவங்களை கடைசியா பார்க்க வந்தார்.
தெரிஞ்சோ தெரியாமலோ அன்னிக்கி அந்த ரூம் கீயை கதவுலேயே கதிரேசன் விட்டுட்டு போயிட்டாரு. சரண்யா அப்பா எங்கிட்ட பேசினார் . அவரை பார்த்தா பாவமா இருந்துச்சு. அவர் வந்து போன சிசிடிவி footage நான்தான் அழிச்சேன்.என் பொண்ணு உங்க அக்கா வாழ்க்கையை அழிச்சா இன்னும் சில பேர் வாழ்க்கை வீனா போனதையம் வேடிக்கை பார்த்துகிட்டு சுயநலமா இருந்தா இன்னிக்கி உங்க அக்கா வாழ்க்கை இப்படி ஆனதுக்கு என் பொண்ணுதானே காரணம் அதோட அந்த குருஜி அவரும் இனிமே இருக்க மாட்டாருனு சொன்னார்.
சரண்யா அப்பாவிடம் பேசிய போது நான் இருந்து என்ன ஆகப்போகுது தம்பி அதான் நான், கதிரேசன் எல்லாம் சேர்ந்து இதை பிளான் பண்ணினோம். அந்த குருஜி என் பொண்ணு மட்டுமில்ல பல பேர் வாழ்க்கையும் கெடுத்திருக்கார். அதனால அவர் கதையை நானே முடிச்சேன். நானே போலீஸ்ல சரணடைஞ்சிடலாம்னு இருக்கேன் என்றார். யாரும் யார் வாழ்க்கையையும் கெடுக்க கூடாது சரண்யா ஆசிரமத்திலேயே தங்குனதே எனக்கு பயந்துக்கிட்டுதான் தம்பி. வெளியே ஆனா கிஷோர் தொந்தரவு பண்ணுனதா சொல்லிக்கிட்டா.