சுவாதியுடைய டாக்டரை நேரில் சந்தித்தான் ராம். அவங்க pregnant ஆ இருந்தது உண்மைதான். checkup வந்தப்போ யாரையும் கூட அழைச்சிட்டு வரல்லே. நானும் விசாரிச்சேன் அவங்க சொல்ல மறுத்துட்டாங்க. தேங்க்ஸ் டாக்டர். இட்ஸ் ஓகே. விக்கி இருக்குமிடம் தெரிந்ததா என விசாரித்தான் ரஞ்சித். இன்னும் தெரியல ஆனா கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம் .
ராம் சுவாதியின் டைரியை புரட்டினான். வேறு எதுவும் தகவல் கிடைக்கவில்லை.ஸ்வாதியின் உடல் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் மறுபடி ரஞ்சித்தை விசாரணைக்கு அழைத்தனர். ரஞ்சித்துடைய பிளட் சாம்பிள்களை டி என் ஏ டெஸ்டுக்கு எடுத்துக்கொள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஸ்வாதியின் கர்ப்பத்துக்கு காரணமானவனே அவளை கொலை செய்திருப்பான் என ராம் நம்பினான். ஸ்வாதியின் லேப்டாப் மற்றும் போனை போலீசார் தேடி வந்தனர். ஒரு வேளை அது விக்கியிடம் இருக்கலாம் . இந்த நிலையில் தான் ரஞ்சித்துக்கு மெசேஜ் வந்தது. ஸ்வாதி லேப்டாப்,போன் என்கிட்டே இருக்கு போன் நம்பரும் அதில் இருந்தது .உடனடியாக போன் போட்டான். அவள் எடுக்கவில்லை . கொஞ்ச நேரம் கழித்து கூப்பிட்டாள். அட்ரஸ் அனுப்பியிருக்கேன் விக்கி ஆபத்துல இருக்கறதுனால என்கிட்டே கொடுத்து இருக்கான் என்று சொன்னாள்.விக்கி மெசேஜ் அனுப்பிய நம்பரை தொடர்பு கொண்டபோது நாட் reachable என்று வந்தது. வீட்டுக்கு ராம் மட்டும் போயிருந்தான். வீட்டில் யாரும் இல்லை . போன் பண்ணி பார்த்தான் சுவிட்ச் ஆப் என்று வந்தது, யாரோ பின்மண்டையில் பலபமாக தாக்கினார்கள் . மயங்கி விழுந்தான்.
மயக்கம் தெளிந்து பார்த்த பொது கை, கால்களை, கட்டி போட்டிருந்தார்கள் . அருகிலேயே விக்கியும், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தான். உனக்கு லேப்டாப், போன் வேணுமா ராம் அது எங்கேன்னு தான் விக்கியை தூக்கிட்டு வந்தோம் . அவன் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டான். அதான் உன்னை தூக்கிட்டோம். உனக்கு ஏதாவது மெசேஜ் வந்ததா.. எனக்கு எதுவும் வரல .. உன் போனை குடு..மெஸேஜை எப்போதோ அழித்து விட்டிருந்தான். யார்டா நீங்க உங்களுக்கும் ஸ்வாதிக்கும் என்ன சம்பந்தம் ? எதுக்காக ஸ்வாதி லேப்டாப் தேடுறீங்க . அவ கேமரா வெச்சு எங்க பாஸ் கூட நெருக்கமா இருந்த விடியோவை எடுத்து மிரட்டி இருக்கா.. அவளை சும்மா விடுவோமா .. யாருடா உங்க பாஸ் கொஞ்ச நேரத்துல நீயே தெரிஞ்சுப்ப என்றார்கள் . அதற்குள் ரஞ்சித் விக்கி friend கௌரியை சந்தித்து லேப்டாப் , போன் இரண்டையும் வாங்கியிருந்தான் . ராம் சொன்னபடி வராததால் ரஞ்சித் போலீசுடன் வந்து விக்கியையும் , ராமையும் மீட்டனர். போலீசை தாக்கிவிட்டு அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். விக்கியை ஹாஸ்பிடலில் போலீசார் சேர்த்தனர். விக்கி மயக்க நிலையில் இருந்தான். கௌரி அருகில் இருந்து பார்த்துக்கொண்டாள். விக்கிக்குத்தான் ஸ்வாதியுடைய லேப்டாப் மற்றும் போன் password தெரியும் .அதனால் ராம் பொறுமை காத்தான்.
விக்கி மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் ஸ்வாதி பற்றி விசாரித்தான். லேப்டாப் ஓபன் செய்தான். ராம் எதிர்பார்த்தது போல அதில் ஹமீதுடன் ஸ்வாதி நெருக்கமாக இருந்த போட்டோக்கள் இருந்தன. உடனடியாக போலீஸ் ஹமீதை விசாரிக்க ஏற்பாடு செய்தார்கள் . விசாரணையில் ஸ்வாதி என்னை இந்த போட்டோக்களை வெச்சு மெரட்டுனா. அதனாலதான் ரஞ்சித் transfer ஏற்பாடு பண்ணேன். கடைசியில் கர்பமா இருந்ததுக்கு நாந்தான் காரணம்னு சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னா . நான் மறுத்தேன் . அப்போ ஏற்பட்ட பிரச்னையில் நான் அவளை தள்ளினேன். அவ செவுத்துல மோதி இறந்துட்டா . அவங்க செவுத்துல மோதுனதால மட்டும் இறக்கல.. , விக்கி அமைதியாய் இருந்தான். எஸ் நான்தான் அவ கழுத்தை நெறிச்சு கொன்னேன். அவ எனக்கு துரோகம் பண்ணிட்டா என்னை வெறுமனே use பண்ணிட்டு தூக்கி போட்டுட்டா . அவ தலையில அடிபட்டு மயக்கமான நேரத்துல காப்பாத்தலாம்னு நெனச்சேன் ஆனா அந்த நேரத்துல அவ லேப்டாப் ல ஹமீது கூட நெருக்கமா இருக்க போட்டோஸ் தான் ஞாபகம் வந்துச்சு. அவ கர்ப்பத்துக்கு ஹமீதுதான் காரணம் . நான் இல்லை. டி என் ஏ டெஸ்டும் ஹமீது தான் கர்ப்பத்துக்கு காரணம் என உறுதிப்படுத்தியது. ஹமீதையும் , விக்கியையும் போலீஸ் அரெஸ்ட் செய்தனர். ராமுக்கு மறுபடியும் தீப்தி, ரஞ்சித் நன்றி தெரிவித்தனர்.
தீப்தியும், ரஞ்சித்தும் ஹனிமூன் ட்ரிப்புக்கு தயாரானார்கள்.தீப்தி அப்பாவை பார்த்துக்கொள்ள nurse ஒருவரை நியமித்திருந்தார்கள் .ஹனிமூனை நினைத்தவுடன் தீப்திக்கு பரவசமாக இருந்தது . ரொம்ப நாள் கழித்து ரஞ்சித்தோடு நெருக்கமாக இருக்க போகிறோம் என்றே நினைப்பே அவளை மயக்கத்தில் வைத்திருந்தது . ரஞ்சித் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று சொன்னான். தன்னை இவ்வளவு தூரம் நேசிக்கும் காதலி மனைவியாய் அமைந்து விட்டதாய் சொன்னான். போதும் காரை எடுங்க என்று சிணுங்கினாள் தீப்தி. அவர்கள் கேரளாவிலுள்ள மூணாறுக்கு ட்ரிப் பிளான் செய்திருந்தார்கள் . இந்த நெருக்கம் ரஞ்சித்துக்கு உள்ளூர உற்சாகத்தை ஏற்படுத்தியது . மூணாறு அற்புதமாக இருந்தது . டீ தோட்டங்களை சுற்றி பார்த்தார்கள் . தீப்தி அவனை நேசமாக அணைத்தவாறே நடந்தாள். மாலைக்கு இன்னும் நேரம் இருக்கிறதே என்றான் ரஞ்சித். என்ன அவசரம் எல்லாமே உனக்குத்தான் என்றாள் கண்களில் குறும்பு மின்ன..தீப்தியின் கண்களை நாள் பூரா
பார்த்துக்கொண்டே இருக்கலாம் . ஹோட்டல் இல் விதவிதமா ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள். அடுத்து எங்கு போகலாம் என்ற திட்டமெல்லாம் வேண்டாம் என தீப்தி ஏற்கனவே சொல்லிவிட்டதால் . கார் போன போக்கில் இயற்கையை ரசித்தார்கள் . ரஞ்சித் ரொம்ப குளிருது .. புரியுது இப்பவே ஹோட்டல் போலாமா என்றான் . சே இந்த climate எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்னை கட்டிக்கோ ரஞ்சித் என்றாள். அவனுக்கு சிறிது தயக்கமாய் இருந்தது. இருந்தும் ஒரு சிறிய வெட்கப்புன்னகையோடு அவளை அணைத்துக்கொண்டான். மறுநாள் அருகில் இருந்த நீர்வீழ்ச்சிக்கு போனார்கள். எல்லா இடங்களிலும் மறக்காமல் புகைப்படம் எடுத்து கொண்டார்கள். மறக்க முடியாத இரவொன்றை முதல்நாள் இரவு அவர்கள் கொண்டாடினார்கள் . ரஞ்சித் அவளை இன்னும் ஆழமாக நேசிக்க தொடங்கியிருந்தான், புது வாழ்வின் ரம்மியம் இருவரின் உடலிலும் மனதிலும் மிதக்க தொடங்கியது.மேலும் போட்டிங்கில் உற்சாகமாக பங்கெடுத்து கொண்டார்கள் . நெஸ்ட் தடவை வரும் போது ராம் சாரையும், தீபூவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என தீப்தி சொன்னாள். நம்ம பிள்ளையை அவங்ககிட்ட விட்டுட்டு வந்திடலாம் என ரஞ்சித் யோசனை சொன்னான்.இன்னும் ஆரம்பிக்கவேயில்ல ..அதுக்குள்ள என்று கிண்டல் செய்தாள். ரஞ்சித் நேரமாச்சு தீப்தி என்றான். என்ன அதுக்குள்ள? நாம வந்து நாலு நாள் ஆகப்போகுது இன்னும் எவ்ளோ இடம் பார்க்க வேண்டியிருக்குது ..ஓ எனக்கு இந்த இடத்தை விட்டு போக மனசே இல்லை என்றாள்.
இன்னைக்கு நைட் ஸ்டே பண்ணிட்டு காலைல கிளம்பலாம் . நைட் மிகவும் ரம்மியமாய் இருந்தது. பனிக்காற்று தேகம் முழுக்க நனைத்தது . ரஞ்சித்துக்கு புது அனுபவமாய் இருந்தது. தீப்தி காமெராவும் கையுமாய் அலைந்து கொண்டிருந்தாள். இந்த ஊர் மொத்தமும் கேமராவில் பிடித்தாலும் அவளுக்கு பத்தாது என நினைத்தான். திடீரென தீப்தியை காணவில்லை . தீப்தி தீப்தி என குரல் கொடுத்தவாறே ரெசார்ட்டை விட்டு வெளியே வந்தான். மேடம் கார் எடுத்துக்கிட்டு இப்போதான் போறாங்க என்றார் செக்யூரிட்டி. எதுக்கு சொல்லாம போறா இவ? என்றவாறு நடுங்கும் குளிரில் போனை அடித்தான். அவள் எடுக்கவில்லை . இவனுக்கு கை, கால் உதற தொடங்கியது .அவளே 10 நிமிடம் கழித்து வந்துவிட்டாள். ஏன் தீப்தி சொல்லாம போனே என்றான் . சும்மாதான் ,பயந்துட்டியா டீ சாப்பிட்டுட்டு உனக்கொரு gift வாங்க போனேன். எதுக்கு கிப்ட் எல்லாம் . நீ என் லைஃப்ல வந்ததுக்கப்புறம்தான் உலகமே அழகா தெரியுது . அதை கொண்டாட வெச்ச உனக்கொரு கிப்ட் என்றாள். சாரி தீப்தி நான் அது தெரியாம உன்னை திட்டிட்டேன் . இட்ஸ் ஓகே ரூமுக்கு போலாமா .அந்த இரவு இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கிறது என்பதை அறியாமல் இருவரும் அந்த ரெசார்ட்டுக்குள் நுழைந்தனர் .