Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவை சுடும் வெளிச்சம் - 12

ஸ்வாதி ஒன்றும் சொல்லாமல் அவன் பின்னே போய்விட்டாள். ஹாஸ்பிடலில் இருந்து வந்த பிறகு போன் செய்தாள். அவன் அப்படித்தான் சாரி ரஞ்சித்.. பரவாயில்ல நீ எப்படி இருக்கே.. நான் ஓகே தான். அப்பப்போ முரட்டுத்தனமா நடந்துக்குவான் விக்கி .உன் கூட பழகுறது அவனுக்கு பிடிக்கல. சரி ஸ்வாதி ரெஸ்ட் எடுத்துக்கோ நாளைக்கு ஆபீஸ் ல பாப்போம். anyway தேங்க்ஸ் என்றாள். தீப்தி போன் செய்திருந்தாள். என்னாச்சு ரஞ்சித் ஏன் போனை எடுக்க மாட்டேங்குறீங்க ஏதாவது பிரச்னையா ? நான் வேணா வரட்டுமா என்றாள். அதெல்லாம் ஒண்ணுமில்ல இங்க ஸ்வாதிக்கு உடம்பு சரியில்ல ஓ என்னாச்சு அவங்களுக்கு. சின்ன accident அவ்ளோதான். சரி சரி சாப்டீங்களா இல்ல இனிமேதான். நெஸ்ட் வீக் வரலாம்னு பாக்குறேன் . அதெல்லாம் வேண்டாம் தீப்தி நானே business விஷயமா வெளில போக போறேன் . நீ வந்தா தனியாத்தான் இருக்கணும் . ம்ம் புரியுது.. கோவப்படாதே தீப்தி ஜஸ்ட் 3 months .சரி ஐ லவ் யு ரஞ்சித்.. லவ் யு தீப்தி

செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன . மறுநாள் ஸ்வாதி ஆபிசுக்கு வரவில்லை லீவ் சொல்லி இருந்தாள். இவன் போன் செய்யலாமா வேண்டாமா என நினைத்தான். அவளே மெயில் செக் பண்ணும்படி மெசேஜ் அனுப்பியிருந்தாள் . அதை படித்து செய்ய வேண்டியவற்றை செய்தான். ரஞ்சித் சில சமயம் குழம்பினான் இப்படிப்பட்ட ஒருத்தனோட எதுக்காக ஸ்வாதி ஒண்ணா இருக்கணும் . இந்த சின்ன வயசுல ஏன் தனியா கிடந்தது கஷ்டப்படணும் என பலவாறாக யோசித்தான் . ஹமீது அவனை கூப்பிட்டார். உக்காருங்க ரஞ்சித் . கொஞ்சம் தனிப்பட்ட விஷயம்தான் இருந்தாலும் சொல்றேன் ஸ்வாதி விஷயத்துல ஜாக்கிரதையா இருங்க . சரி சார். உங்க நல்லதுக்குதான் சொல்றேன். அவ கொஞ்சம் பிடிவாதக்காரி .அந்த பையன் விக்கியும் சரி இல்லை. நீங்க அனாவசியமா ஹெல்ப் பண்ண போய் உங்களுக்கு ஏதும் ஆயிடக்கூடாது . புரியுது சார். அப்போ நீங்க போலாம் . நமக்கு buisness தான் first . அதை மறந்துடக்கூடாது .

ஹமீது எதற்காக இதை சொல்கிறார் என்று புரியவில்லை. ஆனால் அதில் ஒரு அர்த்தம் இருக்குமென நினைத்தான் . ஸ்வாதி ஈவினிங் போன் செய்தாள். கொஞ்சம் பக்கத்துல இருக்குற ரெஸ்டாரன்ட் வரைக்கும் வர முடியுமா ? என்றாள் . இல்ல விக்கி உங்களை பாக்கணும் சாரி கேக்கணும்னு சொன்னான் அதான். இல்ல அது வந்து சரி வரேன் எத்தனை மணிக்கு . 7 மணிக்கு. ரெஸ்டாரெண்ட்டில் வெயிட் பண்ணி கொண்டிருந்தான் . அவர்கள் வருகிற மாதிரி தெரியவில்லை. கிளம்பலாம் என நினைக்கும் போது விக்கி வருவது தெரிந்தது. ஸ்வாதி வரல்லே லாஸ்ட் மினிட் ல ஏதோ கால் வந்தது அப்படியே போயிட்டா . அவளுக்கு இதான் வேலை . சாரி சார் அன்னிக்கி ஏதோ கோவத்துல உங்களை பேசிட்டேன் . அதுனால பரவாயில்லை .ஸ்வாதி தான் எனக்கு எல்லாம் சரி நீங்க ஆர்டர் பண்ணுங்க .. இல்ல நீயே ஆர்டர் பண்ணுப்பா என சொன்னான் ரஞ்சித் . இருவரும் சாப்பிட்ட பின் இவனே bill செட்டில் செய்தான். அன்னிக்கி நீங்க உடனே வந்தீங்கன்னு ஸ்வாதி சொன்னா ரொம்ப தேங்க்ஸ் சார். பரவாயில்லபா டேக் கேர் . சரி சார் நான் வரேன் என்றவாறு பைக்கில் பறந்தான்.

ரஞ்சித் வீட்டுக்கு வந்து அரைமணி நேரத்தில் போன் அடித்தது . விக்கி தான் கால் பண்ணியிருந்தான் .சார் எங்க இருக்கீங்க இப்போதான் வீட்டுக்கு வந்தேன் .கொஞ்சம் emergency ஸ்வாதி பிளாட்டுக்கு உடனே வர முடியுமா ? என்ன பிரச்னை ஏதாவது மருமடியும் உங்களுக்குள்ள ? அதெல்லாம் ஒண்ணுமில்லை உடனே வாங்க .. அவசரமாக காரை எடுத்துக்கொண்டு விரைந்தான் . என்னாச்சுன்னு தெரியலியே .. ஸ்வாதி நம்பரை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் என தெரிய வந்தது . ஸ்வாதி பிளாட் திறந்து கிடந்தது ஒருவரையும் காணோம் . ஸ்வாதி என குரல் கொடுத்தான் . விக்கி விக்கி என கூப்பிட்டு பார்த்தான். யாரோ திடீரென கதவை வெளிப்புறம் பூட்டினார்கள். யாருங்க அது யாருங்க அது என கத்தினான் கதவை திறங்க .. உள்ளே இருட்டாக இருந்ததால் லைட்டை தடவி போட்டான் . சுவரெல்லாம் ரத்தம் ஒழுகி இருக்க ஸ்வாதி உயிரை விட்டிருந்தாள் . அவளுடைய பின்னந்தலையிலிருந்து ரத்தம் வழிந்திருந்தது .ஸ்வாதி ஸ்வாதி என அரற்றினான் . அம்புலன்ஸ்க்கும் போன் செய்தான்.

அதற்குள் போலீஸ் வந்துவிட்டது. என்ன ஏது என்றும் எதுவும் கேக்காமல் அரெஸ்ட் செய்து வண்டியில் ஏற்றினார்கள் . ரஞ்சித்துடைய போனையும் பிடுங்கி கொண்டார்கள் நான் எதுவும் செய்யல சார் என்றான் ரஞ்சித் . அந்த பிளாட்ல நீங்கதான் இருந்துருக்கீங்க வேற யாரும் இல்ல . விக்கி ? விக்கியை நாங்க தேடிகிட்டுனு இருக்கோம். சார் ஒரு போன் பண்ணிக்கலாம் என் வக்கீலை காண்டாக்ட் பண்ணிக்கலாமா.. இப்போ முடியாது சார் உங்க மேல complaint பதிவாயிருக்கு . யார் சார் குடுத்தது ,ஹமீது உங்க மேலதிகாரி ஹமீது தான் complaint குடுத்துருக்கார். அவர் ஸ்டாப் swathi கொலைக்கு நீங்கதான் காரணம்னு சந்தேகம் தெரிவிச்சிருக்கார் .ஹமீது லைன் இல் இருப்பதாக போலீஸ்காரர் போனை ரஞ்சித்திடம் குடுத்தார். என்னப்பா நாந்தான் பல முறை சொன்னேனே அவகிட்ட ஜாக்கிரதையா இருன்னு . இப்போ நீயே murder குற்றவாளியா நிக்குறே .உன்னை சஸ்பெண்ட் பண்ணிருக்கேன்பா . சார் சார் என்பதற்குள் போனை வைத்து விட்டார் .
ரெண்டு நாள் கழித்து ராமும், தீப்தியும் வந்து சேர்ந்தனர். வக்கீல் வைத்து ரஞ்சித்தை ஜாமீனில் எடுத்தனர். நடந்ததை எல்லாம் ரஞ்சித் ராமிடம் சொன்னான். தீப்தி எதுக்கும் கவலைப்படாதீங்க அந்த விக்கி கிடைச்ச உடனே எல்லா பிரச்னையும் solve ஆயிடும் . ராமையும் , தீப்தியையும் பிளாட்டுக்கு அழைத்து போனான். நீங்க ரெஸ்ட் எடுங்க நாங்க பார்த்துக்குறோம் என்றாள் தீப்தி. அவன் போனதும் அழ தொடங்கினாள் . என்ன தீப்தி சின்ன பிள்ளை மாதிரி என்று ராம் சமாதானப்படுத்தினான் .ராம் விக்கி நம்பருக்கு ட்ரை செய்தான் . சுவிட்ச் ஆப் என்றவ் வந்தது . ஸ்வாதி போஸ்டமோர்டெம் ரிப்போர்ட்டில் கர்ப்பமாய் இருந்தது உறுதி செய்யப்பட்டது . இதை கேட்டதும் ரஞ்சித் அதிர்ந்துபோனான். ஸ்வாதியை நினைத்து மிகுந்த வேதனை அடைந்தான் . எதற்காக விக்கி தனக்கு போன் செய்தான் ? விக்கிதான் இந்த கொலையை செய்திருப்பானோ என யோசித்தான். இந்த ஹமீது நம் மேல் வீண் பழி போடுகிறார் எனவும் நினைத்தான் . ராம் ஹமீதை சந்தித்து விட்டு வந்தான் . என்னாச்சு ராம் சார் அவர் எதுவும் சொன்னாரா ? அவர் சரியான சுயநலவாதியா இருக்கார் . கம்பெனி பேர் கெட்டுபோயிடும்ங்கிறதுனாலே ஸ்வாதி கர்பமா இருந்த விஷயத்தை கிளோஸ் பண்ண சொல்லி போலீசுக்கு சொல்லிருக்கார். விக்கியை பத்தி ஒரு வார்த்தை பேசலை. ராம் நான் ஸ்வாதி பிளாட்டுக்கு ஒரு தடவை போய்ட்டு வரேன் என்றான். சரி சார்.

ஸ்வாதியை பற்றி அக்கம் பக்கம் விசாரித்ததில் எப்போதும் விக்கியோட சண்டைதான் சார் . வேற யாரவது ஸ்வாதி பிளாட்டுக்கு வருவார்களா என்று விசாரித்தான். வேற யாரும் அதிகமா வர மாட்டாங்க சார் . கீழே செக்யூரிட்டி இருந்தார்கள் அவர்களிடமும் விசாரித்தான் . அன்னிக்கி இங்கே பிளாட் உள்ளே போனவங்க பேர் லிஸ்ட் இருக்கா? இருந்துச்சு சார் அதை போலீஸ் கொண்டு போயிருக்காங்க என்றார் . விக்கிக்கு போன் செய்தான் இம்முறை விக்கி எடுத்து ஹலோ ராம் சார் என்னை காப்பாத்துங்க ப்ளீஸ் என்றான்.என்னாச்சு விக்கி எங்க இருக்க ? போன் இணைப்பு cut ஆகிவிட்டது . விக்கியுடைய செல்போன் டவர் லொகேஷன் கண்டுபிடிக்க நண்பர் ஒருவரை கேட்டிருந்தான் ராம். ராம் தீப்திக்கு போன் செய்தான். விக்கி போன் செய்து தான் ஆபத்தில் இருப்பதாக சொன்னான் என்று விஷயத்தை விளக்கினான். ஸ்வாதி பிளாட் உள்ளே சென்று பார்த்தான். எல்லாவற்றையும் கண் மூடி சிந்தித்து பார்த்தான். அப்போது அந்த நபர் இங்கேதான் எங்கோ ஒளிந்து இருந்திருக்க வேண்டும் என நினைத்தான். லைட்ஸ் எல்லாம் போட்டு பார்த்தான் . ஸ்வாதியும் விக்கியும் வீட்டை ஏனோ தானோவென்று வைத்திருந்தார்கள் . ஸ்வாதி டாக்டர் போன் நம்பரை டைரியில் எழுதி இருந்தாள். டாக்டருக்கு போன் செய்தான் ராம்.