Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இரவை சுடும் வெளிச்சம் - 11

ரஞ்சித்துக்கும், தீப்திக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது . ராம் தீபுவுடன் வந்து வாழ்த்தினான். தீப்தி மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தாள். பல போராட்டங்களுக்கு பிறகு ரஞ்சித் ஆவலுடன் கை கோர்த்து நடந்தான். ஹனிமூன் ட்ரிப்புக்கு பிளான் பண்ணினார்கள். குழந்தை இப்போது வேண்டாம் என்று ரஞ்சித் சொன்னான்.. தீப்திக்கு மனசே கேட்கவில்லை. இருந்த போதும் கொஞ்ச நாள் எதிர்கால திட்டங்களுக்கு பிளான் பண்ணி விட்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றான் ரஞ்சித். எப்போதும் போல அவளை குழந்தை உள்ளத்துடன் நேசித்தான் . அப்போதுதான் அந்த நியூஸ் வந்தது . அவனுக்கு ப்ரோமோஷன் வந்திருந்தது 3 மாசம் ஹைதெராபாத்தில் வேலை. தீப்தி பிடிவாதமாக வேண்டாமென்றாள். இல்ல தீப்தி நான் இப்போதான் டெவெலப் ஆகிட்டு வரேன். இப்போ போய் இந்த opportunity வேணாம்னு சொன்னா career ஸ்பாயில் ஆகிடும். மூணு மாசம்தான் போய்ட்டு வரேன் . நானும் வரேன்.. நான் என்ன இங்க இருக்கிற ஹைதெராபாத் தானே போறேன் . சீக்கிரம் வந்துடுவேன் . நீ ஜாக்கிரதையா இரு . வந்த உடனே நம்ம ஹனிமூன்தான் ஓகே வா என்றான். அரைமனத்தோடு சம்மதித்தாள் .
என்னவோ அவளிடம் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டான் தவிர அவனுக்கும் போக விருப்பமில்லைதான் . எவ்வளவோ இந்த வேலைக்காக சிரமப்பட்டிருப்பான் அதையும் நினைத்து பார்த்துதான் இந்த முடிவெடுத்தான். தவிர தீப்தி அவள் அப்பாவை விட்டு பிரிந்ததே இல்லை அதையும் யோசித்துதான் வரவேண்டாம் என்று சொல்லி விட்டான்.

ஒருவழியாக ஹைதராபாத் வந்து சேர்ந்து விட்டான். அங்கிருந்த தமிழ் பாஸ் ஹமீதுக்கு போன் செய்தான். வந்துடீங்களா வெல்கம் டு ஹைதராபாத் என வரவேற்றார். உங்களுக்கு தங்கறதுக்கு ஏற்பாடு பண்ணிருக்கேன் லொகேஷன் அனுப்புறேன் . ஆல் தி பெஸ்ட் என்றார். சரி சார் thankyou என்றான். அபார்ட்மெண்ட் ஏற்பாடு சிறப்பாக இருந்தது . போய் சேர்ந்தவுடன் தீப்திக்கு போன் செய்தான். அவளிடம் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தான் . சரி தீப்தி tired ஆஹ் இருக்கேன் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடட்டுமா ? சரி ஓகே ஏதாவது சாப்பிடுங்க அப்புறம் ரெஸ்ட் எடுங்க என்றாள்.

மறுநாள் எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தார் ஹமீது. கொஞ்சம் பேர் தெலுங்கு பேசுபவராக இருந்தாலும் இவன் பேசும் தமிழை புரிந்து கொண்டனர். ரஞ்சித்துடைய ரெஸ்பான்சிபிலிட்டிஸ் எல்லாம் விளக்கப்பட்டது . நமக்கு ஒரு டார்கெட் இருக்கு அதை நாம எல்லாம் சேர்ந்து achieve பண்ணனும் என்றார் ஹமீது. மார்க்கெட்டிங் மேனேஜர் ஸ்வாதி நாளைக்கு வருவாங்க அவங்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன் . ரஞ்சித்துக்கு இந்த பெயரில் கூட படித்த பெண் ஞாபகம் வந்தது . ரொம்பவும் குறும்புக்கார பெண் . ஒரு வேளை அவளாக மட்டும் இருக்க கூடாது என நினைத்தான். ஆசைப்பட்டதை அடைய எந்த எல்லைக்கும் போக கூடியவள் .
அவன் நினைத்தது போல அது அந்த பெண் ஸ்வாதியேதான். இவனை கண்டதும் மகிழ்ந்து எல்லோரிடமும் பெருமையாக நாங்க ஒண்ணா படிச்சவங்க என்றாள் . ரொம்ப சந்தோசம்.. எங்க தங்கியிருக்க இங்கதான் ஹமீது சார் வீடு பக்கத்துல . ம்ம் நான் வருவேன் என்ன கல்யாணமெல்லாம் ஆயிடுச்சாமே சொல்லவே இல்ல .. அப்படியெல்லாம் நினைக்கல திடீர்னு லவ் marriage . ஓ லவ் marriage . என்னை பார்த்தா உனக்கு லவ் வரல ? ம்ம் இன்னும் பழசை நான் மறக்கலை என்றாள் . சரி போய் வேலைய பாரு ஈவினிங் போன் பண்றேன் என்றாள் .ஸ்வாதியை முறைத்து கொள்ளவும் முடியாது . நெருங்கி பழகவும் முடியாது . அந்த மாதிரி ஒரு டைப் . எனவே நிதானம் முக்கியம் . தீப்தியிடம் சொன்னபோது நீங்க ஏன் அவகிட்ட எல்லாம் பேசறீங்க என்றாள். அவ எனக்கு சீனியர் அதுவும் மார்க்கெட்டிங் ல இருக்கா. வேற வழியில்லை எப்படியாவது ஓட்டியாகணும் 3 மாசம். ம்ம் அப்பா எப்படி இருக்கார். பரவாயில்லை நல்லாத்தான் இருக்கார். உங்களுக்கு ப்ரோமோஷன் கிடைச்சதிலே ரொம்ப சந்தோசம் அவருக்கு. ம்ம் வேற என்ன ஸ்பெஷல் எதுவும் இல்லையா அதான் தனியா புலம்ப விட்டுடீங்களே என்றாள் . ஓகே ஓகே நான் அப்புறம் கூப்பிடுறேன் தீப்தி .
சண்டே ஸ்வாதி அவள் வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டுருந்தாள் . இவன் போகலாமா வேணாமா என யோசிக்கும் போதே ஹமீது போன் செய்து நானும் வரேன் சேர்ந்து போகலாமா என்றார். விருந்து சிறப்பாக இருந்தது . ரொம்ப சிரமம் இல்ல தனியாக இருப்பது என்றார் ஹமீது. ஆமா சார் எப்படியோ இன்னைக்கி உங்க ரெண்டு பேரையும் கவனிக்கனும்னு நெனச்சேன் . அப்போது ஒரு பையன் வந்தான் ஹாய் ஸ்வாதி இவன் என் boy bestie பேரு விக்கி . நல்லா பேசுவான் . அதே மாறி நல்லா பைக் ஓட்டுவான் . இவன் ஏன் classmate ரஞ்சித் நான் சொன்னன்ல ஓ அவரா இவரு ? ம்ம் இது என் பாஸ் ஹமீது சார். நீயும் சாப்பிடேன் என அவனுக்கும் பரிமாறினாள் . ரெண்டு பேரும் ஒன்னாவா இருக்கீங்க. எஸ் என்றான் விக்கி . சரி நான் வரேன் என்றான் ரஞ்சித். உன் வீட்டுக்குஎப்போ கூப்பிடப்போறே என்றாள். ஆல்வேஸ் வெல்கம் . நிச்சயமா ? நிச்சயமா நான் விக்கியை கூட்டிட்டுதான் வருவேன் என சிரித்தாள் . விக்கி பார்வையை மறைத்து கொண்டான்.

என்னவோ இதுவரை ஓகே .இனிமேல்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மனசு சொல்லியது . ஒரு வாரம் ஓடி விட்டது.ராமுக்கு போன் செய்தான் . பிஸி ஆக இருந்தது லைன் . பிறகு ராமே கூப்பிட்டு பேசினான். என்ன சார் ஹைதெராபாத் செட் ஆயிடுச்சா ? ம்ம் பரவாயில்லை . ஏதும் பிரச்னைனா உடனே கூப்பிடுங்க . அதெல்லாம் ஒண்ணுமில்லை சார். சும்மாதான் கால் பண்ணேன் .ஓகே சார் வைக்கிறேன் . ராம் இல்லாவிட்டால் வாழ்க்கை எப்படி எப்படியோ போயிருக்கும். மணி 11 ஆகிவிட்டிருந்தது . தீப்தி தூங்கியிருப்பாள் . மீட்டிங்கில் மார்க்கெட் நிலவரம் மோசமாக இருப்பதாகவும் பல இடங்களுக்கு travel செய்ய வேண்டியிருக்கும் என்று சூசகமாக தெரிவித்தாள் ஸ்வாதி. ஹமீது அதை ஆமோதித்தார். ஸ்வாதி மற்றும் ரஞ்சித்துடைய ட்ராவல் பிளானை மெயில் அனுப்பி வைக்கும்படி சொன்னார். அந்த பயண திட்டம் வெளிநாடுகளையும் உள்ளடக்கியிருந்தது . ஸ்வாதி திட்டம் போட்டுத்தான் காய் நகர்த்துகிறாள் என நினைத்தான் ரஞ்சித் . மேனேஜர் ஹமீது ஸ்வாதியை பற்றி நன்கு தெரிந்தவர் அவள் விருப்பப்படி நடக்காவிட்டால் அந்த சீட்டிலேயே அவர் இருக்க முடியாது . ம்ம் ரஞ்சித் எனக்கு one வீக் டைம் குடுங்க நான் ஹெட் ஆபீஸ் ல பேசி approve பண்றேன் . சரி சார் .
இந்த பயணத்திட்டம் approve ஆகக்கூடாதென வேண்டிக்கொண்டான் . அப்புறம் ஸ்வாதி பின்னாடியே சுற்ற வேண்டியிருக்கும் . தீப்தியிடம் சொன்னால் கோபப்படுவாள் . இந்த வேலையே வேண்டாமென்று சொல்லிவிடுவாள் . ம்ம் சமாளிப்போம் . ஸ்வாதியிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. ஸ்வாதியிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது உடனடியா வீட்டுக்கு வா என்று . போன் பண்ணினான் போனை எடுக்கவில்லை . கிளம்பி போனான். வீடு அலங்கோலமாயிருந்தது . ஸ்வாதி ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள் . என்ன ஆச்சு ஸ்வாதி ? விக்கி என்னை அடிச்சுட்டான். ஓ சரி வா ஹாஸ்பிடல் போவோம் வேண்டாம் யாரும் எனக்கு வேண்டாம் .. அப்பா இல்லை அம்மா இல்லை எனக்குன்னு யார் இருக்கா கேக்க ? நீ போயிடு ரஞ்சித் அவன் வந்தா உன்னையும் அட்டாக் பண்ணுவான் பொறுக்கி. சே சே சரி வா போவோம் ஏதாவது சாப்டியா என்றான். இல்லை சரி மொதல்ல ஹாஸ்பிடல் போவோம் அப்புறம் சாப்பிடுவோம் . அவள் கிளம்பினாள் . எதிரே விக்கி முறைத்தவாறே நின்றான். ரஞ்சித் ஒரு நிமிடம் திகைத்தான்.நீ யாருடா அவளை தொட என்றான் விக்கி .. வா ஸ்வாதி போகலாம் என்றான்