ப்ரீத்தியை யார் கொன்றிருப்பார்கள் ? ஒரு வேலை சுந்தரே இதை செய்திருப்பானோ என்ற சந்தேகம் எழுந்தது . சுந்தர் கிடைத்தால்தான் உண்மை தெரியும். போலீசார் சுந்தரை தேடி வந்தனர். சுரேஷுக்கு போன் பண்ணிய குமரேசன் மொபைல் நம்பர் லொகேஷன் பெங்களூருவை காட்டுவதாகவும் அங்கு போலீஸ் விரைந்திருப்பதாகவும் தகவல் சொன்னார்கள் . இதற்கிடையே அப்போது பாஸ் துரை அலுவலகத்தில் வேலை செய்து வந்த சில நபர்களிடம் ப்ரீத்தி பற்றி விசாரித்தான். ப்ரீத்தி ரொம்ப நல்ல பொண்ணு சார் அதனால ஆபீஸ்ல ஒரு பிரச்னையும் இல்ல . எதனால வேலைய வீட்டுக்கு நின்னாங்க தெரியுமா ? காரணம் எதுவும் தெரியல .பாஸ் தான் அவங்க கல்யாணத்தை பண்ணி வெச்சாரு .மறுபடி வேலைக்கும் வர சொன்னாரு. சுந்தர்தான் அந்த பொண்ண வேலைக்கு போக வேண்டாம்னு தடுத்துட்டான்.
தீப்தி இடையிடையில் என்ன நடக்கிறது என ராமிடம் கேட்டு வந்தாள். சுரேஷ் குமரேசன் உங்களை மெரட்டும்போது பணம் கேக்கலையே என்றான் ராம். இல்லே சார் என்னை மிரட்டும் போது பணம் கேக்கலே . ப்ரீத்தி சுந்தர் கல்யாணத்துக்கு நீங்க ஏதாவது ஹெல்ப் பண்ணீங்களா ? இல்ல சார் ஆனா அந்த பொண்ணு மேல பாஸ் ஆசைப்பட்டதும் உண்மை. இப்போ ஞாபகம் வந்துட்டு சுந்தருக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்ணனும் அதுக்கு பணம் வேணும்னு ப்ரீத்தி கேட்டதா சொன்னாரு . அவர் குடுத்தாரு ஆனா அந்த பொண்ணு பாஸ் விருப்பத்துக்கு உடன்படல. ம்ம் இந்த உண்மை சுந்தருக்கு தெரியுமா ? ஆபரேஷனுக்கு பாஸ் தான் பணம் குடுத்தார்னு சுந்தருக்கு தெரியாது .
மறுபடி பாஸ் துரை வீட்டுக்கு போனான் ராம். சம்பவம் நடந்தப்ப நீங்க எங்க இருந்தீங்க என துரையின் மனைவியிடம் கேட்டான். கிச்சேன்ல . அன்னிக்கி நீங்க தூங்கிட்டு இருந்ததா சொன்னீங்க . இல்லே சரியா சொல்லுங்க நீங்க எங்க இருந்தீங்க ? கிச்சேன்லதான் உங்க மகன் தீரஜ் எங்க இருந்தாரு அவன் தூங்கிட்டு இருந்தான் . ம்ம் இப்போ தீரஜ் எங்கே ?ஆபீஸ் போயிருக்கான். அவன் அப்பாவுக்கப்புறம் அவன்தானே எல்லாம் பாக்கணும் . அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா இல்ல . சரி தீரஜ் வந்தா எனக்கு போன் பண்ண சொல்லுங்க.
குமரேசன் பிடிபட்டுவிட்டார். நான் அவரை கொல்லலை. நீங்க ஏன் பெங்களூர் போய் ஒளிஞ்சிகிட்டீங்க என்றான் ராம் . நான் ஏன் ஒளியனும்
நான் ஒரு தப்பும் பண்ணல. நான் சுந்தர தேடி போயிருந்தேன். சுந்தர் பெங்களூருக்கு போயிருக்கலாம்னு ஒரு சந்தேகம் அங்க இருக்க ஏதோ ஒரு பாக்டரில தா வேலை செஞ்சான்னு சொன்னாங்க. சரி உங்க போன்ல இருந்துதான் கால் வந்ததா சொல்றாங்க.ஆமா நான்தான் கால் பண்ணினேன் . எனக்கு தெரியாம என் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிருக்கான் அந்த துரை. என் பொண்ணை அடைய துடிச்சிருக்கான் .எதுக்காக 2 கோடி கேட்டீங்க. அது வந்து சும்மா அவனை என்கிட்டே வரவழைக்க சொன்னது. சுந்தரை பார்த்தீங்களா ? இல்ல சுந்தர் அங்கே இல்ல ..இல்ல சுந்தரை கொன்னுட்டிங்களா ? சே சே அவன் எனக்கு தெரியாம கல்யாணம் பண்ணியிருந்தாலும் என் பொண்ணை நல்லா பார்த்துக்கிட்டான்.
உங்க பொண்ணு செத்துட்டா தெரியுமா ? யாரோ கொன்னுட்டாங்க .யாருக்கோ பயந்துதான் பெங்களூர்ல 1 வருஷமா இருந்தாங்க சுந்தரும், ப்ரீத்தியும் .அவ பயந்தபடியே ஆயிடுச்சி. நீங்க துரை ஆபீசுக்கு போய் பிரச்சனை பண்ணினப்பவே உங்களுக்கு இது தெரியுமா ? ஆமா யாரோ போன்ல மெரட்டிட்டு இருக்கறதா அவங்க அம்மாகிட்ட ப்ரீத்தி சொல்லி இருக்கா.. கடைசில துரையும் போய் சேர்ந்துட்டான். என் பொண்ணையும் கொன்னுட்டான். ம்ம் எதுக்காக உங்க பொண்ணு திரும்ப சென்னை வந்தா? சுந்தரோட ஹார்ட் ஆபரேஷனுக்கு ..என் பொண்ணு பயந்து பயந்துதான் வாழ்ந்தா எல்லாம் அந்த சண்டாளன் துரை பண்ண வேலைதான் .
எதுக்காக சுரேஷை மெரட்டுனீங்க .. எனக்கு தெரிஞ்சு எல்லா உண்மையும் சுரேசுக்கு தெரியும் அவனை விசாரிங்க. என் பொண்ணை கொன்னவன் யாருன்னு அவனுக்கு தெரியும் அவனுக்கு தெரியாம இது நடந்திருக்க வாய்ப்பில்லை . அதனாலதான் அவனையும் மெரட்டுனேன். என் பொண்ண கொன்னவனை சும்மா விடாதீங்க சார் என்றான் குமரேசன்
போலீஸ் மறுபடி சுரேஷை விசாரித்தது . கொலை நடந்த அன்னிக்கி என்ன நடந்தது . நான் சம்பவம் நடந்தப்போ அங்க இல்லை. அப்புறம் எதனை மணிக்கு போனீங்க . போலீஸ் வர்றதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் போனேன். என்ன பார்த்தீங்க . அந்தம்மா கிட்சேன்லேயிருந்து ஓடி வந்தாங்க அப்ப தீரஜ் என்ன பண்ணிக்கிட்டு இருந்தான் . தீரஜ் அங்க இல்ல . நீங்க போனப்ப ஏதாவது சத்தம் கேட்டதா.. ஆமா துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேட்டது . அப்ப ஓடுன ஆளை யாரும் பாக்கலியா? பின்பக்கமா ஓடுனதாதான் அந்த அம்மா சொன்னாங்க . அவரு செத்த டைமுக்கும் நீங்க சொல்ற டைமுக்கும் நெறைய வித்யாசம் இருக்கே . இல்லே நான் உண்மையைத்தான் சொல்றேன்.
எனக்கென்னவோ தீரஜ் மேல சந்தேகமா இருக்கு என்றான் ராம். தீரஜ் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டான். தீரஜ் சுந்தர் எங்கே ? எந்த சுந்தர் ? ப்ரீதியோட husband ..அவன் எங்கேன்னு எனக்கெப்படி தெரியும் . ப்ரீத்தியை கொன்னது நீதானே ? சே சே நான் ஏன் ப்ரீத்தியை கொல்லனும் . ப்ரீத்தியை எனக்கும் தெரியும் ரொம்ப நல்லா பொண்ணு . எனக்கு தெரிஞ்சு என் அப்பா போர்ஸ் பண்ணப்ப கூட அவ அத ஏத்துக்கலை. அதனாலே எனக்கு மரியாதை உண்டு. அன்னிக்கி நீங்க எங்க இருந்தீங்க ? என்னிக்கி உங்க அப்பா செத்த அன்னிக்கி. ரூம்ல தூங்கிட்டு இருந்தேன். யாரோ ஓடுற சத்தமும் வெடி சத்தம் மாதிரி கேட்டுத்தான் எழுந்தேன். அப்போ நீங்க ப்ரீத்தியை கொல்லலை ? நிச்சயமா இல்லை.
ப்ரீத்தி செத்த அன்னிக்கி அதாவது 10 ம் தேதி எங்க இருந்தீங்க . வெளியூர்ல . அதான் எந்த ஊர்ல . என் சொந்த ஊர்ல சரி எதுக்காக போனீங்க ஊர்ல திருவிழா.சரி எப்போ வந்தீங்க அன்னிக்கி நயிட் திரும்ப வந்துட்டேன். உங்க கிச்சேனை பாக்கலாமா ?பாக்கலாமே நீங்க எப்பவுமே பிராண்டட் கத்திதான் வாங்குவீங்களா அம்மா .. ஆமா? அப்போ அந்த கத்தியால் கொலையும் பண்ணுவீங்க அப்படித்தானே ? என்ன சொல்லறீங்க ?ப்ரீத்தியை எதுக்காக கொன்னீங்கன்னு கேட்டேன். நான் கொல்லலை நான் கொல்லலை .. நான் எதுக்காக அவளை கொல்லனும். நீங்க கிச்சேன்ல use பண்ண அதே கத்திதான் அங்கேயும் கிடைச்சிருக்கு . நீங்க கத்தி வாங்குன கடைல இருந்த சிசிடிவி விடியோவும் இருக்கு அதுல ப்ரீத்தியும் இருக்கா .. இப்போ சொல்லுங்க எதுக்காக கொன்னீங்க . சொல்றேன் ஆரம்பத்துலேயிருந்தே எனக்கு அவளை பிடிக்காது என் புருஷன் என்னை விட்டு அவ பின்னாடியே சுத்துனாரு .நான் ஒருத்தி இருக்குறதையே மறந்துட்டு அவ நெனப்புலியே இருந்தாரு. நான் அவளை மிரட்டி பார்த்தேன் . எனக்கு பயந்துக்கிட்டுதான் அவ பெங்களூருக்கு ஓடினா. இவர் ஆள் அனுப்பிச்சி தேடுனாரு.எனக்கு ஆத்திரம் தாங்க முடியலே . ப்ரீத்தி தான் புருஷன் ஹார்ட் ஆபரேஷனுக்கு பணம் கேட்டு வந்தா . நான் தர முடியாதுன்னு சொன்னேன், இதை எப்படியோ தெரிஞ்சிகிட்ட அவரு என்னை திட்டி தீர்த்தார். அவ பேரை சொல்லி என்னை வெறுப்பேத்தினாரு. நான் அவ கதையை முடிக்க முடிவு பண்ணேன் . அவளை சென்னை வர வரவழைச்சேன் . சென்னைல டாக்டர் பார்த்துக்கலாம்னு சொன்னேன் .சுந்தர் எங்கே இப்போ ? சுந்தரை திரும்ப பெங்களூருக்கே அனுப்பிட்டேன். நானும் அவளும் அவ வீட்டுக்கு போனோம் . அப்போதான் அவ எனக்கு என் புருஷன்தான் முக்கியம்னு சொன்னா? நான் ஏற்கனவே பிளான் பண்ணி வச்சிருந்த மாதிரி அவளை கத்தியால் குத்தி தள்ளினேன். ஒரு பொலித்தீன் கவர் ல மூடி வெச்சுட்டு வந்துட்டேன் .
ஆனா உங்க புருஷன ஏன் கொன்னீங்க. அவர் செத்த டைமும் நீங்க ஓடி வந்ததா பார்த்த சுரேஷ் சொல்ற டைமுக்கும் நெறைய வித்தியாசம் இருந்தது .அன்னிக்கி காலைல அவர் எங்கேயோ கிளம்பிட்டு இருந்தாரு . அவரு ப்ரீத்தியை பாக்க போறேன் பணம் குடுக்க போறேன்னு சொன்னாரு அவரு லைசென்ஸ் துப்பாக்கி வெச்சிருந்தாரு . எங்க எல்லா உண்மையும் தெரிஞ்சுடுமோன்னு போக வேண்டாம்னு தடுத்தேன் . கேக்கலை . அவர் வெச்சிருந்த துப்பாக்கியால் அவரை சுட்டேன். கிச்சேன்ல போய் ஒளிஞ்சிகிட்டேன். மறுபடி ஒரு தடவை சும்மா சுட்டுட்டு வெளியே ஓடிவந்தேன். அப்போதான் சுரேஷ் வந்தாரு . நான் துப்பாக்கியை கிச்சேன்ல ஒளிச்சி வெச்சிட்டேன் . சுந்தர் வேணும்னே தான் அப்படி நடிச்சிருக்கான் . அவனே ப்ரீத்தியை பெங்களூருக்கு அனுப்பிட்டு பொய்யா ஒரு போலீஸ் கம்பளைண்ட் குடுத்துருக்கான்.