Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நெருங்கி வா தேவதையே - Part 28

எல்லோருமே ஸ்ருதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்து அவளுடைய ஃபர்ஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் பார்க்க ஆவலாய் இருந்தனர். அவளும் தன்னை தயார் செய்து கொண்டிருந்தாள்.அருணுடைய வகுப்பில் எல்லோரும் இன்டஸ்ட்ரியல் விசிட் போக தயாராய் இருந்தார்கள். அருணை எவ்வளவோ வற்புறுத்தியும் தான் வரவில்லை என சொல்லிவிட்டான். தென்றலும் சுகன்யாவும் கூட வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். ராகவ், ரஷ்மி அப்புறம் ஜோவும் போவதாக பிளான் செய்திருந்தார்கள். சௌமியாவும் வரவில்லை என்று சொல்லிவிட்டாள். மேட்டூர், சேலம், ஒகேனக்கல் ,கொல்லிமலை , ஏற்காடு, போன்ற இடங்களை பார்ப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரஷ்மிக்கு மகிழ்ச்சியாய் இருந்தாலும் சௌமியா வராதது ஏமாற்றமாய் இருந்தது, ஜோ தென்றலையும், சுகன்யாவையும் மறுபடி ஒருமுறை கூப்பிட்டு பார்த்தான். அவர்கள் இப்போதைய சூழ்நிலையில் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

ராகவ் ,ஜோ பிரச்சனை இல்லாமல் போய்விட்டு வர வேண்டும் என சௌமியா கேட்டுக்கொண்டிருந்தாள். என்ன ரஷ்மி எல்லாம் எடுத்துக்கொண்டாயா என்றான் ராகவ் அங்கே வந்து குளிருது கொஞ்சம் கட்டிப்பிடி என்றெல்லாம் சொல்லக்கூடாது என்றான். உனக்கு எந்த சிரமமும் வேண்டாம் எல்லாம் எடுத்துக்கொண்டேன் என்றாள். ஸ்ருதி, தென்றல்,சௌமியா சுகன்யா ஆகியோர் தினமும் காலேஜ் வந்து போயினர். பஸ் என்பதால் கொண்டாட்டத்துக்கு குறைவில்லை 25 பேர் தான் இருந்தார்கள். ரஷ்மி ராகவ் தன்னுடன் மனம் திறந்து பேசுவான் என எதிர்பார்த்திருந்தாள். நீண்ட நாட்கள் ஆயிற்று அவனிடம் மனம் விட்டு பேசி என நினைத்திருந்தாள் . ஜோவுக்கு ஜோடி எதுவும் இல்லையெனினும் டான்ஸ் ஆடி எல்லோரையும் மகிழ்வித்தான். என்ன ரஷ்மி நம்ம ஹனிமூன் ட்ரிப் எப்படி போகிறது என்றான் ராகவ். என்ன ஹனிமூன் ட்ரிப் ஆ உனக்கு கொழுப்புடா என்றாள். ம் இல்லையா பின்னே என்றான். அது நீயும் நானும் மட்டும் போகும் ட்ரிப் தலை நிறைய மல்லிபூ வைத்து பட்டு சேலை கட்டி உன் பின்னால் அடக்க ஒடுக்கமாக வருவேன் . அதை கேட்ட ராகவ் விழுந்து விழுந்து சிரித்தான்.

எதுக்கு இவன் இப்படி சிரிக்கிறான் என்று ஆச்சர்யப்பட்டாள் ரஷ்மி. ரஷ்மி கூட இன்னும் சில மாணவிகள் வந்திருந்தாலும் அவள் அதிகம் அவர்கள் கூட பேசியதில்லை. சுகன்யாவும் தென்றலும் வரும்போது என்னென்ன வாங்கி வரவேண்டும் என்று ஒரு லிஸ்ட் கொடுத்து விட்டிருந்தனர் . ரஷ்மியும் ராகவும் அவற்றை வாங்குவதில் மும்முரமாய் இருந்தனர்.பெயருக்குத்தான் அது இன்டஸ்ட்ரியல் விசிட் ஆக இருந்தது. மேட்டூர் டேம் மற்றும் அதையொட்டிய இண்டஸ்ட்ரிகளை பார்த்த பிறகு பார்க்க கூடிய இடங்கள் எல்லாமே சுற்றுலா தலங்களாக இருந்தன. கூட ஒரு சார் இருந்தார். அவரையும் கைக்குள் போட்டுக்கொண்டு எல்லோரும் கொண்டாடினர். ரஷ்மியும் இவனும் ஏற்காடு பூங்காவில் போட்டோ எடுத்துக்கொண்டனர். ஒகேனக்கல் அருவியில் படகு சவாரி மேற்கொண்டனர். கொல்லிமலை அருவி கண்டு அதிசயித்தனர். அவர்கள் சௌமியா மேடத்தை ரொம்பவும் மிஸ் பண்ணினார்கள். இதுவரை இல்லாத நெருக்கத்தில் ரஷ்மி ராகவ் இருந்தார்கள். குழந்தைகள் போல ஓடி ஆடினார்கள். என்ன ரஷ்மி ரெடி ஆ என்றான் ராகவ். சீ எப்பவும் உனக்கு அதே நினைப்புத்தானா என்றாள். நான் அடுத்த லொகேஷன் பற்றித்தான் கேட்டேன் என்றான். நான் கூட நீ ரொம்ப ரொமான்டிக் என்று நினைத்தேன் என்றாள் . அவளை நெருங்கி அணைத்துக்கொண்டான். அங்கே பிடிக்காதே கண்ட்ரோல் போய்விடும் என்றாள். ஓ அப்படியா என்றான் . நீ எப்போதும் இப்படியே இருப்பாயா ராகவ் என்றாள். ம் சந்தேகமா இப்போவே நாம கல்யாணம் பண்ணிப்போமா என்றான்.

ஜோ கெட்ட ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தான். எந்த வகை மியூசிக் பஸ்சில் பிளே செய்தாலும் ஆட்டம் போட்டான். அவனுடைய தனிமை தீ தணியும் வரை ஆட்டம் போட்டான். ராகவ் கையை பிடித்து இழுத்தான் வாடா ரஷ்மி புருஷா என்று செல்லமாக கூப்பிட்டான். எல்லோருமே ராகவை ரஷ்மி புருஷா என்று அழைக்க தொடங்கி விட்டார்கள் ஒரு புறம் பெருமையாகவும் ஒரு புறம் கூச்சமாகவும் இருந்தது. ராகவ் தயங்கியவாறு பாட்டு ஒன்றை பாடினான். எல்லோரும் ரசித்து கேட்டார்கள். போதும் ரஷ்மி புருஷா போய் உட்கார்ந்து கொள் என்றான் ஜோ. சில மாணவர்கள் குடிக்கவும் செய்தனர். அவர்களை கேட்பார் இல்லை. ராகவ் கெஞ்சி கேட்டும் ரஷ்மி முடியாதென்று சொல்லிவிட்டாள். என்ன ரஷ்மி எப்போதாவது தானே என்றான் ஜோ. அதெல்லாம் வேண்டாம் ஜோ என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டாள். சௌமியா ஃபோன் செய்திருந்தாள் . எப்படி இருக்கிறாய் ரஷ்மி நான் நல்லா இருக்கிறேன் மேம். ராகவ் ஜோ எப்படி இருக்கிறார்கள் எல்லோரும் நல்லா என்ஜாய் பண்ணுகிறோம் என்றாள். சாரி ரஷ்மி என்னால்தான் வர முடியாமல் போய்விட்டது என்றாள். சுகன்யா தென்றல் அருண் எப்படி இருக்கிறார்கள் .அப்புறம் ஸ்ருதி எப்படி இருக்கிறாள் .அவர்களும் ஜாலி ஆகத்தான் இருக்கிறார்கள். எப்போது ரிட்டர்ன் என்றாள் சௌமியா நாளை மறுநாள். சரி ரஷ்மி ஜாக்கிரதை என்றாள் .

ராகவை தேடி ரூமுக்கு போனாள். டிவி பார்த்துக்கொண்டிருந்தான். என்னடா கோவமா என் மேல அதெல்லாம் ஒண்ணுமில்லை சரி வா சாப்பிட போவோம் என்றாள். ரஷ்மி நீ எவ்வளவு தெளிவாயும் அழகாயும் இருக்கிறாய் என்றான். என்ன திடீர்னு சும்மா தோணுச்சு என்றான். அவன் கூட சூடாக fried ரைஸ் சாப்பிட்டாள். பிரதீபாவுக்கு ஃபோன் பண்ண வேண்டும் அவளும் சந்தோஷப்படுவாள் என்றாள். என்ன ராகவ் திடீரென சைலன்ட் ஆகிவிட்டாய் என்றாள். என்னவோ உன்னை பார்க்கும் போது பேச்சு வர மாட்டேன் என்கிறது என்றான். எல்லா போட்டோவையும் அப்லோட் பண்ணிவிட்டாயா என்றாள். முதலில் சாப்பிடு அப்புறம் எல்லாவற்றையும் பார்க்கலாம் என்றான் ராகவ். ஸ்ருதி, சௌமியா, தென்றல் ,சுகன்யா நால்வரும் ரெஸ்டாரண்ட் ஒன்றில் சந்தித்தனர். ஒரே ஜாலி தான் ராகவுக்கு என்றாள் தென்றல். நீயும் போயிருக்க வேண்டியதுதானே என்றாள் சுகன்யா.தனியா போய் வேடிக்கை பார்க்கிறதா ? அதை விடு சுகன்யா இப்பவும் நீ பாடுகிறாயா என்றாள். என்னால் அந்த சம்பவத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. நான் ட்ரை பண்ணுகிறேன் ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுக்கிறது என்றாள். அதெல்லாம் ஒன்றுமில்லை நீ மறுபடி பாடு பார்த்துக்கொள்ளலாம் என்றாள் சௌமியா. ஸ்ருதி என்ன பேசாமல் இருக்கிறாய் என்றாள் தென்றல். அவள் ராகவிடமும் ரஷ்மியிடமும் மட்டும்தான் பேசுவாள் என்றாள் சுகன்யா . அப்படி எல்லாம் இல்லை சுகன்யா அக்கா நீங்கள் எல்லாம் சீனியர்கள் அதுதான். அதெல்லாம் கிளாஸ் வரை மட்டும்தான் . இங்கே எல்லோரும் ஒன்றுதான் என்றாள் தென்றல்.

ராகவ் ரொம்ப குளிர்கிறதுடா அதானே பார்த்தேன் ஏற்கனவே என்னை ரஷ்மி புருஷன் என்று சொல்கிறார்கள் அவளை மடியில் சாய்த்து கொண்டான். அவள் கைகளை இவன் கைகளை கொண்டு தேய்த்தான். பேசாமல் எங்காவது ஓடிபோய் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமா ராகவ் . அதற்கு ஏன் ஓட வேண்டும் என்றான் ராகவ். அப்படியே இந்த காட்டுக்குள் வேண்டாம் வேண்டாம் நீ கிண்டல் பண்ணுவாய் என்றாள்.. சரி ரஷ்மி லேட் ஆகிறது போகலாம் என்றான். லவ் யு ரஷ்மி லவ் யு ராகவ் என்றாள். அவளுடைய உதட்டில் முத்தமிட்டான். இருவரும் அவரவர் அறைக்கு சென்றனர். ஜோ விடிய விடிய தூங்காமல் குடித்து கொண்டிருந்தான் . இந்த ஸ்ருதியவாவது கரெக்ட் பண்ணலாம்னு பார்த்தா அவ என்னை பார்த்தாலே ஓடி போறா என்றான் புலம்பலாக. பூஜா அருணை பார்க்க திருச்சியில் இருந்து வந்து விட்டாள். ஸ்ருதியை பார்க்க ஆவலாய் இருந்தாள். ஸ்ருதியை பார்த்ததும் தான் அவளுக்கு நிம்மதி உண்டாயிற்று, தி ஈகிள்ஸ் குழு இன்னும் வளர நீ உதவி செய்ய வேண்டும் கடைசி வரை என்றாள் பூஜா.

பூஜா நீ இன்னும் எதுவும் சாப்பிடவில்லை என்றான் அருண். இவளுடைய குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது என்றாள். நீ இந்த முறை சௌமியா வீட்டில் தங்கிக்கொள் என்றான் அருண். நான் சௌமியா மேம் கிட்ட பேசிவிட்டேன் என்றான் அருண். சரி ஸ்ருதி 7 மணிக்கு நாம் மறுபடி சௌமியா மேம் வீட்டில் சந்திப்போம் என்றாள். சரி பூஜா அக்கா என்றாள்.அருணிடம் ரஷ்மி எப்போது திரும்ப வருகிறாள் என விசாரித்தாள் . நாளை அப்போது இருந்து அவளையும் பார்த்து விட்டு போகிறேன் என்றாள். சரி ஆக மொத்தம் என்னை பார்க்க வரவில்லை என்றான். நீ என் டார்லிங் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். சௌமியா வீட்டில் கொண்டு போய் பூஜாவை விட்டான், உங்களுக்கு ஒன்றும் சிரமம் இல்லையே மேம் என்றாள் பூஜா. உன்னை கண்டுபிடித்ததே எங்கள் கூட
இசைபயணம் மேற்கொள்ளத்தான். அப்பா அம்மா எப்படி இருக்கிறார்கள் ? நன்றாக இருக்கிறார்கள் அருண் பற்றி வீட்டில் சொல்லி விட்டாயா என்றாள் சௌமியா. ஓ அது ரொம்ப கஷ்டம் ஒரு மாதிரி சொல்லி வைத்திருக்கிறேன்.
உனக்காக அவன் இன்டஸ்ட்ரியல் விசிட் கூட போக வில்லை சொன்னான் சொன்னான். 7 மணிக்கு ஸ்ருதியை வர சொல்லி இருக்கிறேன் . சரி சரி நீ கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள் நான் கடைக்கு போய் வருகிறேன் என்றாள் சௌமியா.


என்ன ராகவ் டூர் முடியபோகிறது . அவ்வளவுதானா? நான் எப்பவும் ரெடி என்றான் ராகவ். சீ அதற்கில்லை ஒரு நாளும் மியூசிக் இல்லாமல் இருந்ததில்லை. இத்தனை நாள் உன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்து விட்டேன் என்றாள். சரி சரி புலம்பாதே இங்கே ஒரு ஃபால்ஸ் இருக்கிறது குளிக்க போவோமா என்றான். வேண்டாம் டா சும்மா வா நான்தான் இருக்கிறேனே என்றான்.அது ஒரு சிறிய அருவியாக இருந்தது. அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் ராகவ், நான் ரொம்ப கொடுத்து வைத்தவன் என்றான், உனக்குததாண்டா எல்லாமே நான், என் காதல், இந்த இசை,இந்த மூச்சு எல்லாமே என்றாள். குளித்து முடித்து உடை மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் உலகத்தில் தடைகள் எதுவும் இல்லாதது போல இருந்தார்கள் .