ஸ்ருதியின் வருகை எல்லோருக்கும் உற்சாகம் நிரம்ப தந்திருந்தது. எல்லோரிமும் கலகலப்பாக பழகிய ஸ்ருதி தன்னுடைய பொறுப்பினை உணர்ந்து நடந்து கொண்டாள் . அருண் ஸ்ருதி வருகையையொட்டி பல்வேறு மாற்றங்களை செய்ய திட்டமிட்டிருந்தான். அவற்றை ஆரம்பித்தும் விட்டான். ஸ்ருதி போய் சௌமியாவை சந்தித்தாள் . எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி என்று சொன்னாள் . சௌமியா ஸ்ருதி நீ நல்ல திறமையுள்ள பெண் அதை சிறப்பாக பயன்படுத்த என் வாழ்த்துக்கள் எப்பவுமே உண்டு என்றாள். அருண் ஸ்ருதிக்கு அட்வைஸ் செய்தான். இங்கு நிறைய பேர் பழைய கதைகள் குறிப்பாக காதல் கதைகளை பேசி உன்னை குழப்ப பார்ப்பார்கள் அவைகளில் இருந்து நீ விலகி இருக்க வேண்டும் என்றான். நீ இசையிலே உன் முழு கவனத்தை செலுத்த வேண்டும் என்றான். சரி அருண் அண்ணா என்றாள். அவனுக்கு அவள் அவனை அண்ணா என்று கூப்பிட்டது பிடித்திருந்தது. பூஜாவும் இந்த மியூசிக் பாண்டின் ஒரு மெம்பர் தான். உனக்கு எப்போது எந்த சந்தேகம் தோன்றினாலும் அவளையும் கேட்கலாம் என்றான் அருண். தாங்க்ஸ் அண்ணா நீங்கள் என் மீது எடுத்துக்கொள்ளும் அக்கறைக்கு நன்றி என்றாள். அவன் மையமாக சிரித்தான்.
ஜோ ஸ்ருதியுடன் சகஜமாக பழக நினைத்தான். ஆனால் அவளோ இவனிடம் பேச கூட நேரமில்லாதது போல நடந்து கொண்டாள். அவளை ஒரு நாள் நிறுத்தி என்ன ஸ்ருதி அருண் ஏதும் என்னை பற்றி சொன்னானா என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை.பிறகு எதற்கு என்னை பார்த்தால் விலகி போகிறாய் என்றான். அப்படி நான் நினைக்கவில்லை எனக்கு உண்மையில் நிறைய வேலைகள் இருக்கின்றன என்றாள். சரி நீ போ இனி நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்றான். இதை பார்த்துக்கொண்டிருந்த தென்றலும், சுகன்யாவும் என்ன சொன்னாள் ஸ்ருதி உன் முகம்
பேயறைந்தால் போல இருக்கிறது என்று கேட்டார்கள். அதெல்லாம் பிளேபாய் வாழ்க்கையிலே சகஜம் என்று சிரிக்க முயன்றான். போதும் வழியுது என்று சிரித்துக்கொண்டே நகர்ந்தார்கள். ஸ்ருதி உண்மையில் தன்னை பிஸி ஆக வைத்துக்கொள்ள முயன்றாள் . அதன் மூலம் வேண்டாத கற்பனைகளை விரட்ட முயன்றாள். தென்றல் மதியம் ஸ்ருதியுடன் சேர்ந்து சாப்பிட்டாள் . என்ன ஸ்ருதி எல்லாம் ஓகே வா என்றாள் தென்றல். எல்லாம் ஓகே தான் ஆனால் ஒரே இறுக்கமாக பேசுகிறார்கள் தயக்கம் இன்றி பேச முடிவதில்லை என்றாள் ஸ்ருதி.போக போக சரி ஆகி விடும் என்றாள் தென்றல். உங்களுக்கும் ராகவ் அண்ணாவுக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதாமே ? என்ன ஸ்ருதி அதுக்குள்ள ஆரம்பித்து விட்டாயா என்று அவள் காதை பிடித்து செல்லமா திருகினாள் தென்றல்.சரி சரி தென்றல் அக்கா நான் அதை பற்றி பேசவில்லை ஓகே வா என்றாள் .ம் அது நான் ஏமாந்த கதை பிறகு சொல்கிறேன் என்றாள் .
ஸ்ருதி மியூசிக் மாஸ்டரை பார்க்க விரும்பினாள்.ரஷ்மிக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாள். சரி வா போவோம் நாளைக்கு ஈவினிங் அவர் ஃப்ரீ ஆக இருப்பார். அப்போது போய் பார்ப்போம் என்றாள் ரஷ்மி. எத்தனை மணிக்கு 7 மணிக்கு போவோம் என்றாள் . சரி அக்கா நான் உங்கள் வீட்டுக்கு வந்து விடுகிறேன் என்றாள் ஸ்ருதி. சரி வந்து விடு.
மியூசிக் மாஸ்டர் வரவேற்றார் shining ஸ்டார் ஸ்ருதி வெல்கம் என்றார். சும்மா கிண்டல் பண்ணாதீர்கள் மாஸ்டர் என்றாள் . ஸ்ருதியும் மாஸ்டரும் பேசிக்கொண்டிருந்தனர். ரஷ்மியும் உன்னை போலத்தான் ஆனால் என்ன அவள் காதலில் விழுந்தது முதல் அவள் கவனம் சற்றே இசையில் இருந்து விலகி விட்டது என்றார். மாஸ்டர் என் கதையை விடுங்கள் அவள் கதைக்கு வாருங்கள் என்றாள் ரஷ்மி. ரஷ்மி தி ஈகிள்ஸ் குழு நன்கு வளர வேண்டும்என்றால் முதலில் டீம் பாண்ட் வேண்டும் அப்போதுதான் நன்கு பெயர் வாங்க முடியும் என்றார். சரி மாஸ்டர். உனக்கு எப்போது சந்தேகம் வந்தாலும் என்னை கேள் என்றார். சரி மாஸ்டர் . உனக்கு இந்த டீம் பிடித்திருக்கிறது தானே என்றார். நிச்சயமாக முடிந்த வரை பெர்சனல் விஷயங்களை மியூசிக் பாண்டில் சேர்க்காதே ஆல் தி பெஸ்ட் என்றார்.ரஷ்மியும் , ஸ்ருதியும் விடை பெற்றுக்கொண்டனர்.
பிரதீபா தான் எழுதிய பாட்டுக்களை அவ்வபோது ராகவிடம் கொடுத்து ஒபினியன் கேட்டு வந்தாள் . சில சமயம் இயலாமையை வெளிப்படுத்துவதாகவும் சில சமயம் சோகமாகவும் இருந்தது அவள் பாட்டு. ராகவ் அவற்றை
ரஷ்மியிடம் கொடுத்து அவளுக்கு பாட்டு எப்படி எழுத வேண்டும் என சொல்லிக்கொடு என்றான். ரஷ்மி, ஸ்ருதி இருவருமே பிரதீபாவிடம் பேசினார்கள். நீ நல்ல ரைட்டர் ஆக வேண்டுமென்றால் ஒரு குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வா என்றாள் ஸ்ருதி. நீங்கள் சொல்வது சரி ஸ்ருதி அக்கா நான் என்னுடைய கஷ்டங்களை மட்டுமே பாட்டில் எழுதுகிறேன் அதை நான் திருத்திக்கொள்கிறேன் என்றாள் .நான் ஸ்ருதி அக்காவை பார்க்க வேண்டுமே என்றாள் பிரதீபா. சரி இந்த வீக்கெண்ட் பார்க்கலாம் என்றாள் ஸ்ருதி. குமார் சௌமியாவுக்கு ஃபோன் செய்திருந்தான். என்ன அந்த கிருஷ்ணனை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டாய் போல என்றார். அது என் விருப்பம் என்றாள் சௌமியா. விவாகரத்து இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது என்று சொன்னார். சும்மா மிரட்டாதீர்கள் என்றாள் சௌமியா. நான் ஏண்டி உன்னை மிரட்ட வேண்டும் உன் மனசாட்சிக்கு தெரியும் நீ ஒரு துரோகி என்றான். போனை துண்டித்தாள்.
ஸ்ருதி, ரஷ்மி இருவரும் பிரதீபாவை பார்க்க போகலாம் என்று எண்ணியிருந்தார்கள். ராகவ் நானும் வருவேன் என்றான். அவசியம் நீ வர வேண்டுமா ஸ்ருதி அதை விரும்புவாளா என்றாள் ரஷ்மி. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை நானும் வருவேன் என்றான் ராகவ். மூவரும் பிரதீபாவை பார்க்க போனார்கள். என்ன மேடம் பாட்டு எல்லாம் எழுதுகிறீர்கள் போல அதுதான் நல்லா இல்லை என்று சொல்லி விட்டீர்களே என்றாள் பிரதீபா. அப்படி சொல்லவில்லை நீங்கள் சும்மா இருங்கள் ஸ்ருதி அக்கா என்ன சாப்பிடுகிறீர்கள் ரஷ்மி அக்கா ஃபிரிஜில் கூல் டிரிங்க்ஸ் இருக்கிறது எடுத்து வாருங்கள் என்றாள். நான்கு பேரும் கூல் டிரிங்க்ஸ் குடித்தனர். கிருஷ்ணன் சார் இல்லையா என்றாள் ஸ்ருதி. அவர் ஆபீஸ் போய் இருக்கிறார். ஸ்ருதியும் பிரதீபாவும் பேசிக்கொண்டிருந்தனர். ராகவும் ரஷ்மியும் மாடிக்கு போனார்கள். என்ன ரஷ்மி ஸ்ருதி எப்படி என்றான். அவளுக்கென்ன ஜோ அவளிடம் பேச முயற்சி செய்திருக்கிறான் முடியாதென்று சொல்லி விட்டாளாம். ஓ நானும் ஜாக்கிரதையா இருக்க வேண்டும் என்றான். மதியம் 12 போல கிளம்பிவிட்டார்கள். தாங்க்ஸ் ஸ்ருதி அக்கா எனக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்களே என்றாள் . என்னை மறந்து விடாதே பிரதீபா என்றான் ராகவ். அதெப்படி உங்களை மறப்பேன் என்றாள் பிரதீபா. மூவரும் விடை பெற்றுக்கொண்டார்கள்.
என்ன சௌமியா ரெண்டு நாளாக ஃபோன் பண்ணவில்லை என்றார் கிருஷ்ணன். குமார் ஏதாவது சொன்னாரா? அதெல்லாம் ஒண்ணுமில்லை என்று அழுதாள் . எனக்கு வாழ்வதற்க்கு வழி தெரியவில்லை என்றாள் . நான் குமாரிடம் பேசுகிறேன் என்றார் கிருஷ்ணன். நீங்கள் அழாதீர்கள் நான் பேசிக்கொள்கிறேன் என்றார்.குமாருக்கு போனை போட்டார் கிருஷ்ணன். என்ன கிருஷ்ணனா புல்லாங்குழல் கிருஷ்ணனா மரியாதையாக பேசுங்கள் மிஸ்டர் குமார். நீ என் வொய்ஃப் கூட குடும்பம் நடத்துவாய் அதை நான் பார்த்து கொண்டிருக்க வேண்டும் அப்படித்தானே என்றார் குமார். சட்டப்படி இன்னும் 2 மாதங்கள் தான் அதற்கப்புறம் நீ அவள் வாழ்வில் ஒரு போதும் குறுக்கே வர முடியாது என்றார். ம் சட்டம் பார்த்தா அவளை நீ வளைத்தாய் என்றார் குமார். தேவையில்லாமல் சௌமியா மனதை நோகடிக்காதே என்றார் கிருஷ்ணன். அடடா இனிமேல் அவ்வாறு நடக்காது என்று கிண்டலாக சொல்லிவிட்டு போனை வைத்தார் குமார். மறுபடியும் கிருஷ்ணன் சௌமியாவுக்கு ஃபோன் செய்தார். அவள் போனை எடுக்கவில்லை . கார் எடுத்துக்கொண்டு வேகமாக அவள் வீட்டுக்கு சென்றார். காலிங் பெல் அழுத்தினார். என்ன ஆச்சு நீங்கள் ஃபோன் எடுக்கவில்லை என்றதும் பதட்டம் ஆகிவிட்டது என்றார். வாங்க உள்ளே வாங்க என்றாள். ஃபோன் சார்ஜ் போயிடிச்சி வேற ஒண்ணும் இல்ல.. நான் பயந்தே போயிட்டேன் என்றார்,
ஸ்ருதி என் கூட பேச மாட்டுறா என்று அருணிடம் சொல்லிககொண்டிருந்தான் ஜோ. இதெல்லாம் ஒரு பிரச்சனையா போய் ஏதாவது பிராக்டிஸ் பண்ணு போ என்றான் அருண். பூஜா ஃபோன் செய்திருந்தாள் அருணுக்கு எப்படி இருக்கிறாள் ஸ்ருதி எனக்கு அவளை பார்க்க வேண்டும் போல இருக்கிறது என்றாள். வாயேன் அடுத்த முறை உன்னை பார்க்க வரும்போது உன்னையும் அழைத்து வருகிறேன் என்றான். அப்படி ஒண்ணும் அவசரமில்லை. இப்போது கொஞ்சம் பிஸி ஆக இருக்கிறேன் நானே வரும்போது உனக்கு சொல்கிறேன் என்றாள். மத்தபடி கவனிப்பே இல்லை என்றாள் , நாளைக்கே நம்ம கல்யாணம் ஓகே வா என்றான். ஆசைய பாரு விட்டா இன்னைக்கே ஃபர்ஸ்ட் நைட் னு சொல்லுவ போல . ஏன் உனக்கு ஆசையில்லையா சரி சரி நீ compose பண்ணுற வேலையை மட்டும் கவனி என்றாள் . லவ் யு பூஜா என்று சொல்லி போனை வைத்தான். ஸ்ருதி அவர்களோடு இப்போது நன்கு செட் ஆகிவிட்டாள். அவளுக்கென தி ஈகிள்ஸ் லோகோ போட்ட டிஷர்ட் ரஷ்மி அரேஞ்ச் செய்திருந்தாள். நன்றாக இருக்கிறது என்றாள் ஸ்ருதி. சௌமியா நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் இன்னும் ரெண்டு மாதத்தில் நம்ம கல்யாணம் நடக்கும் என்றார் கிருஷ்ணன். அவசரப்பட வேண்டாம் என்றாள் சௌமியா. இந்த விவாகரத்து வழக்கு முடியட்டும் நானே சொல்கிறேன் என்று சொன்னாள்.
தென்றலும் சுகன்யாவும் ஸ்ருதிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை கவனித்து வந்தனர். அதே சமயம் லேசான பொறாமையும் ஸ்ருதி மேல் அவர்களுக்கு தோன்றாமலும் இல்லை.