இட்ஸ் அ நியூ பிகினிங் என்று ஒரு புதிய வீட்டின் புகைப்படத்தை போட்டு ஸ்டேட்டஸ் அப்டேட் செய்திருந்தாள் சௌமியா. இதை பார்த்த ராகவ் அதிர்ச்சி அடைந்தான். சௌமியாவுக்கு ஃபோன் செய்தான் என்னாச்சு மேம் ஸ்டேட்டஸ் அப்டேட் பார்த்தேன் என்ன புது வீட்டுக்கு போகிறீர்களா என்றான். ஆமாம் ஆனால் நான் மட்டும்தான் என்றாள். சரி நான் வந்து பேசுகிறேன் லொகேஷன் அனுப்புங்கள் என்றான். ஒண்ணும் பிரச்சனையில்லை நீ நிதானமாகவே வா என்றாள். சௌமியா வீட்டில் பழைய வீட்டு சாமான்கள் இறக்கப்பட்டு கொண்டிருந்தன. எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்த ராகவ் உதவி செய்தான். இது ஒரு நாளில் முடிகிற வேலை இல்லை ராகவ் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ என்ன சாப்பிடுகிறாய் என்றாள் . டீ போதும் மேம். சரி கொஞ்ச நேரம் ஆகும் பரவாயில்லையா ? சரி மேம். அவள் கிச்சன் உள்ளே சென்றாள். குமாரும் சௌமியாவும் சேர்ந்து எடுத்த திருமண போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தான் ராகவ். கொஞ்ச நேரத்தில் டீ வந்தது. ரொம்ப தாங்க்ஸ் மேம் என்றான்.என்ன ஆச்சு மேம் ஏன் தனி வீடு என்றான். இனி தனியாகத்தான் இருக்க வேண்டும். இன்னும் 6 மாதத்தில் விவாகரத்து கிடைத்து விடும் என்றாள். எனக்கு ரொம்ப வருத்தமாய் இருக்கிறது மேம் என்றான். நான் இப்போது 10 நாள் லீவில் இருக்கிறேன் என்றாள் சௌமியா. எங்காவது போக வேண்டும் என்றால் சொல்லுங்கள் மேம் நான் வந்து அழைத்து போகிறேன் என்றான். தாங்க்ஸ் ராகவ். நீ அடிக்கடி வந்து என்னை பார் அது ஒன்றுதான் இப்போது ஆறுதல் ரஷ்மியையும் அழைத்து வா அடுத்த முறை என்றாள். சரி மேம்.
அருண் ராகவை காலேஜ் வகுப்பில் பார்த்தான் என்னடா அப்படி பிரச்சனை சௌமியா மேம் 10 நாள் லீவு போட்டிருக்கிறார்கள் என்றான் அருண். அருணிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசித்தான். சௌமியா மேம் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்றான். என்ன இதை ஏண்டா முன்னாடியே சொல்லவில்லை.நான் குமார் சாரை பார்த்து பேசுகிறேன் என்றான். அதெல்லாம் தேவையில்லை எல்லாமே முடிந்து விட்டது இன்னும் ஆறுமாதம் தான் என்றான் ராகவ். இதை யாரிடமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம் என்றான். எவ்வளவு பெரிய பிரச்சனை இது மேம் ஏன் இதை பற்றி என்னிடம் சொல்லவில்லை நான் சாயங்காலம் போய் மேமை பார்க்கிறேன் என்றான். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் நீ போய் பிரச்சனையை பேசி அவர்களை வேதனை படுத்த வேண்டாம் என்றான் ராகவ்.நீ மட்டும்தான் பேசுவாயா நான் பேசக்கூடாதா அப்படி சொல்லவில்லை அருண் கொஞ்ச நாள் அவர்கள் நிம்மதியாய் இருக்கட்டும் என்பதற்காக சொன்னேன். அதுவும் சரிதான் என்றான். அவன் பூஜாவிற்கு ஃபோன் செய்து சௌமியா மேம் விஷயத்தை சொன்னான். அவளும் அதிர்ச்சி அடைந்தாள். அதுதான் மேம் அப்படி சோகமாக இருந்தார்களா என்றாள் பூஜா.
வீக்கெண்ட் ஆகிவிட்டால் திருச்சி போய் பூஜாவை பார்த்து வந்தான் அருண், அவர்கள் வீட்டுக்கு தெரியாமல் லவ் பண்ணி வந்தாள் பூஜா, எனக்காக இவ்வளவு தூரம் வரவேண்டுமா அருண் என்றாள். இன்னும் தூரமாய் இருந்தால் கூட வருவேன் என்றான் அருண். பூஜா நான் வேண்டுமென்றால் சௌமியா மேம் கிட்ட பேசவா என்றாள். அதெல்லாம் வேண்டாம் இப்போது அவர்கள் லீவில் இருக்கிறார்கள் சற்று நிம்மதியாக இருக்கட்டும் என்று ராகவ் சொன்னான். அதுவும் சரிதான் என்றாள் பூஜா. ஜோ அருணையும் , ராகவையும் சந்திக்க வேண்டும் என தன் வீட்டுக்கு வர சொல்லி இருந்தான். என்ன மச்சான் கொஞ்ச நாளா ஆளே மாறி விட்டாய் என்றான் ராகவ். அதை பத்தி பேசத்தான் கூப்பிட்டேன் என்றான் ஜோ. எனக்கு ஆரம்பத்துல இது லவ்வா அப்படின்னு தெரியல. என்னவோ டைம் பாஸ் அப்படின்னு தான் சுகன்யா கூட சுத்தினேன் . இப்போ நிஜமாவே அவ படுற கஷ்டத்தை பார்த்து அவ மேல லவ் வந்துடுச்சு என்றான். டேய் பெரிய ஆளுடா நீ ஆனா அவகிட்ட சொல்லி விட்டாயா என்றான் அருண். இல்லைடா அவதான் அருண் மேல பைத்தியமா இருக்காளே அதனால் தான் தயக்கமா இருக்கு என்றான் . நானே அவ கிட்ட பேசுறேன் என்றான் அருண், நிச்சயமா இந்த ஹெல்ப்பை நான் மறக்க மாட்டேன் அருண் என்றான் ஜோ.
பிரதீபாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு போகலாம் என கிளம்பினான் ராகவ். ரஷ்மி தயாராக வீட்டில் இருந்தாள். போகும்போது அவளையும் அழைத்து போக வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டான். சௌமியா மேம் வருகிறார்களா என கேட்போம் என யோசித்தான். சௌமியாவுக்கு ஃபோன் செய்தான். கோவிலுக்கா யார் யார் வருகிறார்கள் என்றாள். ரஷ்மி,பிரதீபா, கிருஷ்ணன் சார் எல்லோரும் வருகிறார்கள் என்றான் . சரி ஒரு அரைமணி நேரம் நானும் நேராக கோவிலுக்கு வந்து விடுகிறேன் என்றாள். ரஷ்மி வீட்டில் போய் அவளை அழைத்து கொண்டான். பிரதீபாவும், கிருஷ்ணனும் தயாராய் இருந்தார்கள். அவர்கள் வீடு அருகில் இருந்த கோவிலுக்கு செல்லத்தான் திட்டம் போட்டிருந்தார்கள். ரஷ்மியை வண்டியில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு போனான். பிரதீபாவை அழைத்து போக சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். இவனை பார்த்ததும் ஹாய் அண்ணா,ஹாய் ரஷ்மி அக்கா என்றாள். நல்ல அழகாய் இருக்கிறாய் பிரதீபா என்றாள் ரஷ்மி. சௌமியாவும் வந்து விட்டாள். அவள் கிருஷ்ணனுடன் பேசிக்கொண்டிருந்தாள். பிரதீபா சாமி தரிசனம் செய்தாள் . அப்போது அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. ரஷ்மி அழக்கூடாது பிரதீபா என்றாள்.
சௌமியாவிடம் மியூசிக் பாண்ட் பற்றி விசாரித்தார் கிருஷ்ணன். அடுத்த நிகழ்ச்சி எப்போது எனவும் கேட்டார். ஏதாவது உதவி தேவைப்பட்டால் உடனே அவரை கூப்பிடுமாறு சொன்னார். லஞ்ச் எல்லோருக்கும் நம்ம கூடதானே அப்பா என்றாள் பிரதீபா . சந்தேகமே வேண்டாம் நாம பிரதீபாவுக்கு பிடிச்ச ரெஸ்டாரண்ட் போகலாம் என்றான் ராகவ். நிச்சயமா என்றார் கிருஷ்ணன். சௌமியா நான் கிளம்புகிறேன் நீங்கள் போய் வாருங்கள் என்றாள். அதெல்லாம் முடியாது ஆண்ட்டி நீங்களும் வரவேண்டும் என்றாள் பிரதீபா. சரி வருகிறேன் என்றாள் சௌமியா.இன்றைக்கு எல்லாமே பிரதீபா விருப்பம்தான் என்றான் ராகவ். சௌமியா மனதெல்லாம் வேதனையை சுமந்தபடி இருந்தாலும் பிரதீபாவிடம் சிரித்து பேசினாள். ராகவ் ,ரஷ்மி இருவரும் அதை பார்த்து ஆறுதல் அடைந்தனர். லஞ்ச் முடிந்ததும் கிருஷ்ணனும் ,பிரதீபாவும் வீட்டுக்கு கிளம்பினர். பிரதீபா ரொம்ப தாங்க்ஸ் அக்கா, அண்ணா , ஆண்ட்டி என்றாள். நீ சந்தோஷமாய் இருக்க வேண்டும் எப்போதும் என்றான் ராகவ்.
மூவி போகலாமா மேம் மூன்று பேரும் என்றான். மூவியா என்ன மூவி என்று கேட்டாள் ரஷ்மி. காதலுக்கு கண்ணில்லை என்றான். டேய் சும்மா சொல்லாதே என்றாள் ரஷ்மி. ஏதோ ஒரு படம் வாங்க மேம் என்று கை பிடித்து இழுத்தாள் ரஷ்மி. இவன் கூட தனியா போக பயமாயிருக்கு நீங்களும் வாங்க என்றாள் ரஷ்மி. படம் சுமாராய் இருந்தாலும் ரஷ்மி, ராகவோடு படம் பார்க்க சௌமியாவுக்கு பிடித்திருந்தது. படம் முடிந்ததும் சௌமியாவோடு அவள் வீட்டுக்கு போனார்கள் ராகவும் ரஷ்மியும். அப்போது தான் ஜோ சுகன்யாவை விரும்புவதாக சொன்னான் ராகவ். நல்ல விஷயம்தானே என்றாள் சௌமியா. அதற்கு சுகன்யா ஒப்புக்கொள்ள வேண்டுமே என்றாள் ரஷ்மி. அடுக்காமல் கிடந்த பொருட்களை அடுக்கினார்கள் ரஷ்மியும், ராகவும். சௌமியா நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்றாள். சரி மேம். இவர்கள் டிவி பார்த்தபடி இருந்தார்கள். ரஷ்மி ஒன்றும் இல்லையா என்றான். மேம் இருக்கிறார்கள் . அவர்கள்தான் தூங்குகிறார்களே என்றான் . உனக்கு ரொம்பத்தான் ஆசை என்றாள். டீ போட்டு எடுத்து வர வா என்றாள் ரஷ்மி. நானும் வருவேன் என்றான். வந்து தொலை என்றாள். அவள் இடுப்பில் கை போட்டான். ராகவ் செத்த சும்மா இரேன் என்றாள். அவள் கழுத்தில் முத்தமிட்டான். போதும் டீ சூடா இருக்கு என்றாள்.
சௌமியாவை எழுப்பி அவளுக்கும் டீ கொடுத்தாள் ரஷ்மி. தாங்க்ஸ் ரஷ்மி. யாருமே இல்லாதப்ப நீங்க ரெண்டு பேரும்தான் ஒரே ஆறுதல் என்றாள். சரி மேம் லேட் ஆச்சு கிளம்புறோம் என்றனர்.ரஷ்மி ஏதாவதுன்னா ஃபோன் பண்ணுங்க மேம் என்றாள். ரஷ்மியை வீட்டில் விட்டான். டேய் எல்லாத்தையும் சூடு பண்ணிட்டு எங்க போறே என்றாள். ம் அது இப்போதான் தெரிஞ்சுதா என்றான் ராகவ். ஏதாவது கொடுத்துட்டு போடா என்றாள். அவள் கன்னதில் முத்தமிட்டான். சரி வரேன் என்றான். சுகன்யா தென்றலுக்கு ஃபோன் பண்ணினாள் . மேம் விவாகரத்து மேட்டர் கேள்விப்பட்டாயா என்றாள். அது எப்படி லவ் பண்ணி கல்யாணம் பண்ணுறவங்க அதை விட பாஸ்ட் ஆ விவாகரத்து வாங்குராங்க என்றாள் தென்றல். நமக்கு லவ் பண்ணவே ஆள் இல்லை என்றாள் சுகன்யா.
அருண் ஜோ சார்பாக சுகன்யாவிடம் பேசினான். நான் உன்னைத்தான் லவ் பண்ணினேன். ஜோ கூட ஃப்ரெண்ட்லி ஆகத்தான் பழகினேன் என்றாள். நீ என்னை மறந்துடு என்றான் அருண். ம் ட்ரை பண்ணுறேன் என்றாள் சுகன்யா. ஜோ இதற்காக வருத்தப்படவில்லை. எப்போதும் போல சுகன்யாவிடம் பழகினான். அருணும் , ராகவும் குமாரை பார்த்து பேச விரும்பினார்கள். குமாருக்கு ஃபோன் செய்தான் அருண். சார் உங்களை பார்க்கணுமே என்றான். வாங்களேன் என் வீடுதான் உங்களுக்கு தெரியுமே என்றார் . குமார் நிதானத்தில் இல்லை என்பது தெரிந்தும் அருண், ராகவோடு போய் அவரை பார்த்தான். வா ராகவ் சௌமியா எப்படி இருக்கிறாள் உன் கூடத்தான் சுத்திக்கொண்டு இருக்கிறாளா என்றார். தப்பா பேசாதீங்க சார். அவங்க தங்கம். அவளா அவ அந்த கிருஷ்ணன் கூட லவ்வுல இருக்கிறா அதான் என்னை மறந்துட்டா .. நீங்க தெளிவாயில்லை நாங்க அப்புறம் வறோம் என்றான் அருண். அவ உங்களையும் ஏமாத்திடுவா ஜாக்கிரதை என்றார் குமார். ராகவும் அருணும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினர்.