சரி பூஜா நான் கிளம்பட்டுமா என்றான் அருண் . என்ன அவசரம் இப்போது தானே வந்தாய் இரு சாப்பிட்டுவிட்டு சாயங்காலமாக போகலாம் என்றாள் பூஜா. பூஜா எப்பவுமே நீ என் கூட இருப்பாயா? நான் எப்பவும் உன் கூடத்தான் இருக்கிறேன் உனக்கு தான் என்னை தெரியவில்லை.மதியம் இருவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். பூஜா சௌமியா பற்றி விசாரித்தாள். அவர்களுக்கு என்ன பிரச்சனை ஏன் ஒரு மாதிரி இருக்கிறார் என்று கேட்டாள். எனக்கும் தெரியவில்லை நானும் கேட்டுப்பார்த்தேன் சௌமியா மேம் பதில் சொல்லவில்லை என்றான். ஜோ போன் பண்ணி இருந்தான் என்ன மச்சான் போயிட்டு போனே பண்ணல என்றான். அதெல்லாம் ஒன்னும் இல்ல பூஜாவுக்கு இப்ப பரவாயில்ல அவ கூட பேசிட்டு இருந்தா நேரம் போறதே தெரியல. ம் நீ நடத்து மச்சி கிளம்பும்போது எனக்கு போன் பண்ணு என்றான்.ஈவினிங் நாலு மணிக்கு கிளம்பி விட்டான் அருண். என்னை மறந்து விடாதே என்றாள் பூஜா. அவள் கையைப் பிடித்து நிச்சயம் மறக்க மாட்டேன் என்றான். நானும் ஸ்டேஷன் வருகிறேன் என்றாள். வேண்டாம் பூஜா இன்னொரு முத்தத்தை தாங்குகிற சக்தி என் மனதுக்கு இல்லை இப்போதைக்கு உன்னை பார்த்ததே போதும் என்றான்.
அருண் ஊரிலிருந்து வந்ததும் ஜோவுக்கு போன் செய்தான் . என்ன மச்சி சக்சஸ் தானே என்றான் ஜோ. பூஜா மனசுல நான் தான்டா இருக்கிறேன். என்னால் தான் முழு மனசா அவ கிட்ட பேச முடியல. இன்னும் நீ ஏண்டா தடுமாறுற அதான் முடிவு எடுத்துட்டியே.. இனிமே உனக்கு பூஜா மட்டும் தான் மறுபடியும் ரஷ்மி என்று உளறிகிட்டுத் திரியாதே என்றான். சரிடா .சௌமியாவை பார்க்கலாம். பார்த்து பேசி விட்டு வரலாம் என நினைத்தான். அருண் போன் செய்தான் என்ன மேடம் எப்படி இருக்கீங்க என்றான். நான் நல்லா இருக்கேன்.பூஜாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க இப்ப எப்படி இருக்கா ?நல்லா இருக்கா. அப்புறம் உன் லவ் மேட்டர் என்ன ஆச்சு ? அதை பத்தி பேசலாம் என்றுதான் உங்களுக்கு போன் பண்ணினேன். என்ன மேம் நான் எடுத்த முடிவு கரெக்டா எல்லாம் முடிவு பண்ணின பிறகு கேட்கிறாயே நீ உன் மனசுல உறுதியா இருக்கணும் அருண் . மறுபடி உன் மனசு மாறாதபடிக்கு தைரியமா இருக்கணும் என்றாள்.புரியுது மேம் இனி பூஜாவுக்காக பழசு எல்லாத்தையும் மறந்துட்டு அவளுக்காக மட்டும் இருக்கலாம்னு நினைக்கிறேன் என்றான் அருண்.சரி அருண் ஆல் த பெஸ்ட் என்றாள் சௌமியா. ரஷ்மிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லலாம் என நினைத்தான் அருண். அப்புறம் வேண்டாம் .நேராகவே சொல்லிவிடலாம் அவள் முகம் போகிற போக்கை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
ரஷ்மி வீட்டுக்கு போனான் அருண். அவள் ஏதோ மியூசிக் கேட்டுக் கொண்டிருந்தாள் .இவனை பார்த்ததும் என்ன அருண் சர்ப்ரைஸா இருக்கு என்றாள் . நீ பூஜாவை பார்க்க போனதாக ஜோ சொன்னானே, பூஜா எப்படி இருக்கிறாள் ?அவளுக்கு உடம்பு சரியில்லை என்றும் சொன்னாளே இப்போது எப்படி இருக்கிறாள்? போதும் போதும் அவள் நன்றாகத் தான் இருக்கிறாள். லேசான ஜுரம் வந்ததுக்கு ஆளாளுக்கு இப்படி விசாரிக்கிறீர்கள் என்றான் அருண்.அவள் எங்களுக்கு முக்கியமோ இல்லையோ உனக்கு முக்கியம் அல்லவா என்ன ஆச்சு உன் லவ் மேட்டர் ஓபன் பண்ணி விட்டாயா என்று கேட்டாள் ரஷ்மி. ஆமாம் அதை சொல்லத்தான் வந்தேன். பூஜா என்னை விரும்புகிறாள் நானும் அவளை விரும்புகிறேன். கங்கிராட்ஸ் அருண் இது ஒரு நல்ல முடிவு என்றாள். இரு அருண் நான் போய் ஸ்வீட் எடுத்துக் கொண்டு வருகிறேன். கடைசியாக நீ ஒரு பெண்ணிடம் செட்டில் ஆகிவிட்டாய் வாழ்த்துக்கள். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் கடைசிவரை உன் மனதில் எனக்கு இடமில்லாமல் போய்விட்டது அதை நினைத்து தான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது ஆனால் பூஜா என்னை நேசிக்கும் அளவு நீ கூட நேசித்திருக்க மாட்டாய் அதனால் எனக்கு மகிழ்ச்சி தான்.புரிகிறது நீ ஆழமாக காதலில் விழுந்திருக்கிறாய் என்பது தெரிகிறது சும்மா கிண்டல் பண்ணாதே ரஷ்மி. ஆனால் அவள் இருப்பது திருச்சியில் அதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது சீக்கிரமே கல்யாணம் செய்து கொள் அப்புறம் என்ன பிரச்சனை என்றாள் ரஷ்மி.கல்யாணமா இப்போதுதான் காதலிக்கவே ஆரம்பித்திருக்கிறேன். அதெல்லாம் மியூசிக் ஆல்பம் ஒன்றை பண்ணிய பிறகுதான் .நானும் அவளும் சேர்ந்து ஒரு மியூசிக் ஆல்பம் பண்ணலாமா என்று யோசனை செய்திருக்கிறோம் நல்ல ஐடியா அருண் . மியூசிக் ஆல்பத்தில் நடிப்பதற்கு பொருத்தமான ஆள் தான் பூஜா.
அப்படி மியூசிக் ஆல்பம் தயாரிக்க தொடங்கினால் நீயும் அவசியம் அதில் பங்கு பெற வேண்டும் என்றான் அருண். ராகவ் சம்மதத்தை பொறுத்து தான் நான் கலந்து கொள்வதும் கொள்ளாததும் இருக்கிறது என்றாள். நீ இன்னுமா அவனை நம்புகிறாய் அவன் இன்னும் வெளிப்படையாக உன்னை காதலிப்பதை சொல்ல தயாராக இல்லாதபோதும் நீ அவனை இழக்க தயாராய் இல்லை அப்படித்தானே.ம் நீ சொல்ல வருவது எனக்கு நன்றாக புரிகிறது என்னை நம்பி அவனோ அவனை நம்பி நானோ இல்லை பரஸ்பர நம்பிக்கையில் எங்கள் காதல் ஓடிக் கொண்டிருக்கிறது அது ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறும் என்றாள் ரஷ்மி .சரி ரஷ்மி நான் கிளம்புகிறேன் நாளைக்கு பார்க்கலாம் அருண் என்றாள் அப்போது ராகவிடமிருந்து ஃபோன் வந்தது என்ன ரஷ்மி பிஸியா பேசலாமா என்றான். சொல்லு ராகவ் .பூஜா மேட்டர் தான். இப்போதுதான் அருண் சொன்னான். எல்லாரும் அவரவர் காதலை உறுதிப்படுத்திக் கொள்ளும் போது நானும் நீயும் மட்டும் கண்ணாமூச்சி ஆடுவது என்ன நியாயம் என்றாள். ஆரம்பித்து விட்டாயா நான் இன்னும் உன்னை ஏமாற்றிவிட்டு சிங்கப்பூர் போய் விட்டேனா இங்கே தானே இருக்கிறேன் என்றான் ராகவ்.சாயங்காலம் நாலு மணிக்கு எல்லோரும் பீச்சுக்கு வருகிறார்கள் நீயும் வந்து விடு அதை சொல்லத்தான் போன் பண்ணினேன் சரிடா வந்து விடுகிறேன்
சாயங்காலம் எல்லோரும் பீச்சில் சந்தித்தார்கள். சௌமியாவும் வந்திருந்தாள். அப்போது அருண் நாம் எல்லாரும் சேர்ந்து ஒரு மியூசிக் ஆல்பம் பண்ணலாம் என்ற ஐடியாவை கொடுத்தான். அதற்கு நிறைய செலவாகுமே என்று ஜோ சொன்னான். அதைப்பற்றி நீ கவலைப்படாதே முதலில் கான்செப்ட் ரெடி பண்ண வேண்டும் பிறகு பணத்தை பற்றி கவலைப்படலாம் என்றான் அருண். நாம் இப்போதுதான் மியூசிக் பேண்ட் துவங்கியிருக்கிறோம் ஒரு இரண்டு வருடம் போகட்டும் காலேஜ் முடியும் போது நாம் ஒரு பாப்புலரான மியூசிக் பேன்டாக மாறி இருப்போம் அப்போது மியூசிக் ஆல்பம் தயாரித்தால் நல்ல ரீச் கிடைக்கும் என்றாள் ரஷ்மி
ரஷ்மி சொல்வது சரிதான் என்றாள் சௌமியா. அவசரப்பட வேண்டாம் நாம் இப்போதுதான் இரண்டு ட்ரிப் போய்விட்டு வந்திருக்கிறோம். இன்னும் நாம் செட் ஆகவில்லை செட் ஆனதும் நானே சொல்கிறேன் அதன்பிறகு கிருஷ்ணன் சாரிடம் பேசி நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்வோம் என்றாள் சௌமியா. என்ன ராகவ் எதுவுமே பேச மாட்டேன் என்கிறாய் என்றாள் சௌமியா.எல்லாமே நீங்கள் எடுக்கும் முடிவு தான் மேம் எங்களுக்கு அனுபவம் போதாது நீங்கள் பார்த்து எதை செய்கிறீர்களோ அதுவே சரியானது என்றான் ராகவ். என்ன அருண் ட்ரீட் எப்போ பூஜாவை இங்கே அழைத்து வரப்போகிறாய் என்றாள் சுகன்யா. சும்மா சொல்லாதே சுகன்யா அவளுக்கு நிறைய கனவுகள் இருக்கிறது என்னவோ அவளுக்கு என்னை பிடித்து விட்டது அதற்காக எல்லாவற்றையும் உடனடியாக மாற்ற முடியாது கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்றான் அருண்.சரி அடுத்த வாரம் வேறொரு லொகேஷனில் நாம் எல்லோரும் சந்திக்கலாம் என்றாள் சௌமியா. வேறு ஏதாவது ஷேர் பண்ண விரும்பனா சொல்லலாம் என்றான் அருண். தென்றல் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை. ஜோ, தென்றல் சுகன்யா கிளம்பி விட்டார்கள் .அருணும் கிளம்பி விட்டான் ரஷ்மி ராகவ் சௌமியா மூவரும் அங்கேயே சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தார்கள். சரி நானும் கிளம்புறேன் என்றாள் சௌமியா.
பிரதீபாவிடம் இருந்து ராகவுக்கு போன் வந்தது அண்ணா எப்படி இருக்கிறீர்கள்? நான் நன்றாக இருக்கிறேன் பிரதீபா ரஷ்மி அக்கா எப்படி இருக்கிறார்கள் அவர்களும் நன்றாக இருக்கிறார்கள். எக்ஸாம் எல்லாம் முடிந்ததா? எல்லாம் முடிந்தது எப்படி பண்ணி இருக்கிறாய்? சூப்பரா பண்ணி இருக்கிறேன். ஊட்டியில் இருந்து எனக்கு வாங்கித் தருவதாக சொன்ன கிப்ட் எங்கே என்றாள். நான் நாளை வந்து கொடுக்கிறேன் என்றான் ராகவ். அவசியம் வீட்டுக்கு வாருங்கள் என்றாள் பிரதீபா .ரஷ்மி நாளை நீயும் வருகிறாயா பிரதீபாவிடம் அந்த இசைத்தட்டை கொடுத்து விட்டு வருவோம் என்றான் ராகவ். சரி வருகிறேன் நானே வந்து உன்னை பிக்கப் பண்ணிக் கொள்கிறேன் என்றான் ராகவ். ரஷ்மியும் ராகவும் காலேஜ் முடிந்து நேராக பிரதீபா வீட்டுக்கு போனார்கள் . பிரதீபா ஏதோ ஒரு பெயிண்டிங் பண்ணிக் கொண்டிருந்தாள். இவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தாள். சௌமியா ஆண்ட்டி எப்படி இருக்கிறார்கள். அவர்களையும் அழைத்து வந்திருக்கலாமே என்றாள் பிரதீபா . அவர்கள் கொஞ்சம் பிஸியாக இருக்கிறார்கள் அவர்களுக்கு ரெஸ்ட்டே கிடையாது எப்போதும் வேலைதான் என்றாள் ரஷ்மி.அந்த இசைத்தட்டை மியூசிக் பிளேயரில் போட்டு விட்டான் ராகவ் அதை ரசித்து கேட்டாள் பிரதீபா. ரொம்ப நன்றி ராகவ் அண்ணா இந்த இசைத் தட்டு அருமையாக இருக்கிறது என்றாள்.ஊட்டியில் எடுத்த போட்டோக்களை பிரதீபாவிடம் காட்டிக் கொண்டிருந்தாள் ரஷ்மி. நீங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் எங்கே என்று கேட்டாள் பிரதீபா. அதுவா அது வந்து.. சரி வாங்க மூன்று பேரும் சேர்ந்து செல்பி எடுப்போம் என்றாள் பிரதீபா. மூவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். என்னவோ கோவிலுக்கு போக வேண்டும் போலிருக்கிறது என்றாள் பிரதீபா. சரி அடுத்த வாரம் போகலாம் என்றான் ராகவ்