Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நெருங்கி வா தேவதையே - Part 15

பூஜா தன்னை அந்த கல்லூரியின் இரண்டாமாண்டு மாணவி என அறிமுகபடுத்திக்கொண்டாள் . பழகிய கொஞ்ச நேரத்திலேயே அவளுடைய இசை ஆர்வம் பற்றி அருண் வியந்தான் . நான் போய் தயாராகி வருகிறேன் என்று பூஜா கிளம்பிவிட்டாள். இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சுகன்யா சிறப்பாக பாடினாள். சௌமியாவும் ரஷ்மியும் மகிழ்ந்து போனார்கள். ஜோ அவளை பாராட்டினான். ராகவும்,அருணும் பூஜா பாடுவதையே மெய்மறந்து கேட்டனர். நிகழ்ச்சி முடிந்த மறுநாள் திருச்சியை சுற்றி பார்க்க எல்லோரும் கிளம்பினர். என்ன காரணத்தாலோ தென்றல் ராகவுக்கு ஃபோன் பண்ணவில்லை. ராகவும் அவளுக்கு ஃபோன் பண்ணவில்லை. பூஜாவையும் சுற்றி பார்க்க அழைத்தாள் சௌமியா. முதலில் தயங்கினாலும் அப்புறம் வருகிறேன் என்று சொன்னாள் . திருச்சியில் அவளுக்கு பரிச்சயமான இடங்களுக்கெல்லாம் அழைத்து சென்றாள். மலைக்கோட்டை, திருவானைக்கோவில், சமயபுரம், ஸ்ரீரங்கம், முக்கொம்பு போன்ற இடங்களுக்கு போனார்கள். எல்லோரும் சேர்ந்து ஷாப்பிங் போனார்கள். பூஜாவை எல்லோருக்கும் ரொம்ப பிடித்து விட்டது. பூஜாவை தன்னுடைய வீட்டுக்கு வரும்படி அழைத்தாள் சௌமியா. அவசியம் வருகிறேன் என்றாள். ரஷ்மி அவளுக்கொரு சிறிய கிப்ட் ஒன்றை கொடுத்தாள் .

என்ன தென்றல் ஃபோன் பண்ணவில்லையா என்றான் ஜோ ஆமாம் எனக்கும் அதுதான் ஆச்சரியமாய் இருக்கிறது என்றான் ராகவ். நான் ஃபோன் பண்ணினேன் அவள் பிஸி ஆக இருப்பதாக தெரிய வருகிறது என்றான் ராகவ். அப்போ ரஷ்மிக்கு கொண்டாட்டம்தான் என்றான் அருண். ரஷ்மி எதுவும் சொல்லவில்லை. அன்று காலை களைப்பாக உணர்ந்ததால் வெகு நேரம் கழித்தே எழுந்தான் ராகவ். அவனுடைய ஃபோன் எடுத்து தென்றலுக்கு ஃபோன் செய்ய முயற்சித்தான் கால் போகவில்லை. whatsapp செக் செய்தான் அதுவும் பிளாக் ஆகி இருந்தது. எதற்கு திடீரென்று தென்றல் இவ்வாறு செய்தாள் என்று தெரியவில்லை. ரஷ்மிக்கு ஃபோன் செய்த போது என்னுடைய நம்பரையும் பிளாக் செய்திருக்கிறாள் என்று ரஷ்மி சொன்னாள் . நான் போய் நேரில் பார்க்கிறேன் என்று ராகவ் சொன்னான். பார்த்து ராகவ் அவள் கோவத்தில் இருந்தால் நீ நிதானமாக பேசு என்றாள் ரஷ்மி. அவள் வீட்டுக்கு போன போது அவள் அப்பா அங்கு இருந்தார். அங்கிள் தென்றல் இல்லையா ? இனிமேல் அவள் உன்னிடம் பேசமாட்டாள் . நீ போகலாம் என்றார். நீ அவளை ஏமாற்றியது போதும் இங்கிருந்து போய்விடு ராகவ் என்றார். சரி அங்கிள் நான் போய் விடுகிறேன் நான் அவளை ஏமாற்ற நினைக்கவில்லை என நீங்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும் என்றான்.

தென்றல் வகுப்புக்கு வந்தபோதும் யாருடனும் பேசவில்லை. அவள் பாட்டுக்கு வந்தாள் போனாள். ஜோவிடம் கூட பேசாதது ராகவுக்கு வருத்தம் அளித்தது. சௌமியா மேம் கிட்ட சொல்லி பேசி பார்க்கலாமா என்றாள் ரஷ்மி. மதியம் சௌமியா கூப்பிட்டு பேசியவள் நான் ஏமாந்துவிட்டேன் என்று அழுதிருக்கிறாள். நான் இனிமேல் யாருக்கும் இடைஞ்சலாய் இருக்க மாட்டேன் என்றாள். தென்றலை சமாதானப்படுத்த முயற்சி செய்தாள் சௌமியா. பிரதீபா ஃபோன் செய்தாள் ராகவுக்கு. என்ன அண்ணா என்னை மறந்து விட்டீர்களா ? என்றாள். இந்த வார இறுதியில் வந்து பார்க்கிறேன் என்றான். என்னை வெளியில் கூட்டிபோகிறேன் என்றீர்களே என்றாள். அவசியம் ரஷ்மி அக்காவையும், சௌமியா ஆண்ட்டியையும் அழைத்து வாருங்கள் என்றாள். நிச்சயமாக என்றான் ராகவ். தென்றல் உடனான காதல் முறிவு உள்ளுக்குள் வருத்தத்தை தந்தாலும் ரஷ்மியிடம் எதுவும் சொல்லவில்லை.சௌமியா நீ இனிமேல் அவளை தொந்தரவு செய்யாதே ராகவ் தென்றல் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அவளாகவே சரி ஆகிவிடுவாள் என்றும் கூறினாள் . திருச்சி இசை நிகழ்ச்சி சிறப்பாக நடத்தி கொடுத்ததற்காக சௌமியாவை காலேஜ் நிர்வாகம் சார்பாக பாராட்டினார்கள்.


ரஷ்மி, சௌமியா , ராகவ் பிரதீபா வீட்டுக்கு போன போது பிரதீபா இன்னும் தூங்கி கொண்டிருந்தாள். அவள் நைட் தூங்கவே இல்லை என்னவோ அவள் மனதில் உள்ள கஷ்டங்கள் அவளுக்குத்தான் தெரியும் என்றார் கிருஷ்ணன். நான் போய் அவளை தயார் செய்கிறேன் நீங்கள் உட்காருங்கள் என்றார். ரஷ்மி மௌனம் சாதித்தாள். தென்றல் ராகவ் பிரிந்ததற்கு ரஷ்மிதான் காரணம் என சிலர் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சொன்னது ரஷ்மியை யோசிக்க செய்தது. இருந்தாலும் பிரதீபாவுக்காக இப்போது வந்திருந்தாள். பிரதீபா சாரி ஆண்ட்டி நைட் ஏதோ யோசனை பண்ணிட்டே இருந்தனா அதுதான் தூங்கலை . காலையிலே தூக்கம் வந்துட்டு என்றாள். பரவாயில்லை நீ ஏதாவது சாப்பிட்டாயா என்றாள் ரஷ்மி. இரு சாண்ட்விச் போட்டு எடுத்து வருகிறேன் என்று கிச்சன் உள்ளே போனாள் ரஷ்மி. சௌமியாவும் உள்ளே போனாள். ஏன் ரஷ்மி அக்கா ஒரு மாதிரி இருக்காங்க ராகவ் அண்ணா என்றாள் பிரதீபா. அதெல்லாம் ஒண்ணுமில்லை நீ நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்றான் ராகவ். நாம் பீச் போக வேண்டும் என்றாள் பிரதீபா நிச்சயமாக போவோம் என்றான். எனக்கு கடல் என்றால் கொள்ளை ஆசை என்றாள். சாண்ட்விச் கொண்டு வந்தாள் ரஷ்மி. நீங்களும் சாப்பிடுங்கள் என்றாள் பிரதீபா. அவள் கொஞ்சம் எடுத்து வாயில் வைத்தாள்.

கடற்கரையில் பிரத்யேக பாதை போடப்பட்டு இருந்தது. என்னால் இந்த மணல் வெளியில் ஓடி ஆட முடியவில்லையே அண்ணா என்றாள் பிரதீபா. எல்லாம் சரி ஆகிவிடும் என்றாள் ரஷ்மி. ரஷ்மி அக்கா ஏன் உம்மென்று இருக்கிறீர்கள் ராகவ் அண்ணா ஏதாவது சொன்னாரா அதெல்லாம் ஒண்ணுமில்லை சும்மா சொல்லாதீர்கள் அண்ணாவுடன் தோளில் கை போடுங்கள் ம் அப்படித்தான் எப்பவுமே சேர்ந்து இருக்க வேண்டும் என்பதே என் ஆசை என்றாள். சௌமியா அவளுக்காக சுட்ட சோளம் வாங்கி வந்தாள். தாங்க்ஸ் ஆண்ட்டி என்றாள். அடுத்த முறை நாமெல்லாம் சேர்ந்து சினிமா பார்க்க வேண்டும் என்றாள். கண்டிப்பாக என்றான் ராகவ். கடலுக்கு அருகில் வீல் சேர் நகர்த்தி சென்றான். அவள் மேல் கடல் காற்று வீசியது. சூப்பர் ஆ இருக்கு ராகவ் அண்ணா. எல்லோரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ரஷ்மி ராகவ் எனக்கு ஐஸ் கிரீம் என்றாள் போய் வாங்கி வந்தான். இப்போதுதான் நீங்கள் குட் கேர்ள் என்றாள் பிரதீபா. நேரம் ஆகிவிட்டது வீட்டுக்கு போகலாம் என்றாள் சௌமியா. ம் இன்னும் கொஞ்ச நேரம் என்றாள். அப்பா தேடுவார் அப்புறம் அடுத்த முறை எங்களோடு அனுப்ப மாட்டார் என்றாள் ரஷ்மி. அப்படி சொல்லாதீர்கள் நாம் கிளம்பலாம் என்றாள் பிரதீபா.

அவளை வீட்டில் விட்டனர் சௌமியா காரில் தான் பிரதீபாவை அழைத்து போயிருந்தனர். நல்ல குழந்தை உள்ளம் பிரதீபாவுக்கு என்றாள் சௌமியா. உங்க ரெண்டு பேருக்கும் நைட் என் வீட்டுல தான் டிபன் என்றாள் சௌமியா. அதெல்லாம் வேண்டாம் மேம் என்றாள் ரஷ்மி. சும்மா வா ரொம்ப பண்ணாதே என்றான் ராகவ். ரஷ்மி சிரித்து விட்டாள். அப்பாடா இப்போதாவது சிரிப்பு வந்ததே என்றான் ராகவ். ரஷ்மி காய்கறி நறுக்கி கொடுத்தாள். என்ன மேம் உப்புமாவா என்றான் இல்லை சேமியா பாத் என்றாள் சௌமியா.மூவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டனர். சார் எப்படி இருக்காரு ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறீங்க என்றான் ராகவ். அவர் பாட்டுக்கு அவர் இருக்காரு. நீங்களாவது ஒத்துமையா இருங்க என்றாள் சௌமியா. அருண் ஃபோன் பண்ணியிருந்தான். ரஷ்மி அவனுக்கு அன்றைய தினம் ரிகர்சல் வராததற்கு சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தாள். சௌமியா வாங்கி பேசினாள் . பிறகே அருண் சற்று நிதானமடைந்தான். பிரதீபா பாவம் இல்ல என்றாள் ரஷ்மி . நான்தான் பாவம் என்றான் ராகவ், நீ என்னை தவிக்க விட்டுட்டு போ பிறகு நீயே உன்னை பாவமென்று சொல்லிக்கொள் என்றாள் ரஷ்மி. போதும் சண்டை போட்டது இனிமேலாவது நிம்மதியா இருங்க என்றாள் சௌமியா.

ரஷ்மியை வீட்டில் விட்டான் ராகவ். என்ன ரஷ்மி இன்னுமா என்னிடத்தில் கோவமா நான் என்ன செய்தேன் என்றான். ம் இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. சீக்கிரம் எல்லார் முன்னாடியும் என்னை ஏத்துக்கோ அது போதும் என்றாள். சீக்கிரமே இப்போ ஒண்ணும் இல்லையா. டேய் இது நடு ரோடு நாளைக்கு பார்க்கலாம் என்றாள். சே அவ்வளவு தானா என்றான். அவனுடைய கையை பிடித்து முத்தமிட்டாள் . இன்னைக்கு நைட் வரை தாங்கும் என்றான். ரொம்ப பண்ணாதே என்றாள். என்னவோ உன்னை பிரியவே மனசில்ல.. அதெல்லாம் சும்மா என்றாள். சரி வரேன் என்றவாறு பைக்கை கிளப்பினான். வீட்டுக்கு வந்து பார்த்தபோது தென்றல் whatsapp unblock பண்ணியிருந்தாள். சாரி என மெசேஜ் அனுப்பியிருந்தாள் . ரஷ்மி உட்பட எல்லோருக்கும் அனுப்பி இருந்தாள். ரஷ்மியும் அவளும் பேசினார்கள். 11 மணிக்கு ரஷ்மியிடம் இருந்து ஃபோன் வந்தது. ரொம்ப வருத்தப்பட்டாள். எப்போதும் போல ஃப்ரெண்ட்லி ஆக பழகுவேன் என்று தென்றல் சொல்லி இருந்தாள். காலையில் காலேஜ் போன போது வகுப்பில் யாருமில்லை. தென்றல் மட்டுமே இருந்தாள். என்னாச்சு தென்றல் நீ மட்டும் இருக்கே என்றான். இனி நான் மட்டும்தான் என்றாள். நீ கூட என்னை புரிஞ்சிக்கலையே என்றான். ரஷ்மி எங்கே என்றாள் அவள் என் கூட வரவில்லை என்றான். வாழ்த்துக்கள் அவளையாவது கடைசி வரை ஏமாற்றாமல் லவ் பண்ணு என்றாள். ம் எனக்கு புரிந்து விட்டது யார் உன்னிடம் இதெல்லாம் சொல்லி தருகிறார்கள் என்றான் .

ரஷ்மியே வந்துவிட்டாள் . என்ன நடக்குது இங்கே என்றாள். தென்றல் அவளிடம் மன்னிப்பு கேட்டாள். இவன் கிட்ட போனா எட்டிபோவான் எட்டிபோனா கிட்ட வருவான் என்றாள் ரஷ்மி. நீ சந்தோஷமா இருக்கணும் தென்றல் எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் தென்றல் என்றாள். சுகன்யாவும், ஜோவும் வந்தனர். அதெப்படி மச்சி எல்லா நாளும் சீக்கிரம் வருகிறாய் அதோட எல்லாரையும் பிக்அப் பண்ணுறே என்றான்.