Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நெருங்கி வா தேவதையே - Part 14

பிரதீபாவிடம் இருந்து விடை பெற்றுகொண்டனர் ராகவும், ரஷ்மியும். மியூசிக் மாஸ்டர் ராகவ் மேடையில் பாடுவதற்கு சில உத்திகளை ராகவுக்கு சொல்லித்தந்தார். திருச்சி என்றதும் மலைக்கோட்டை நினைவு வந்தது எல்லோருக்கும் . திருச்சியை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. சௌமியா அதற்கும் ஏற்பாடு செய்திருந்தாள். தென்றலை அவள் அப்பா போக வேண்டாம், நெருங்கிய உறவினரின் திருமண நிகழ்ச்சி இருக்கிறதென்று சொல்லிவிட்டார். அதனால் அவள் வரவில்லை. ரஷ்மிக்கு ஒரு புறம் தென்றல் இல்லாதது நிம்மதியாய் இருந்தது, மறுபுறம் தான் உரிமையுடன் ராகவ் கூட இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. எக்ஸாம் ரிசல்ட்ஸ் வந்திருந்தது. ராகவ் ஓரளவு நல்ல மார்க் வாங்கியிருந்தான். சௌமியாவுக்கு நன்றி சொன்னான்.நீங்கள் சொல்லிக்கொடுக்காவிட்டால் நான் பெயில் ஆகி இருப்பேன் என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை. எப்படியும் ரஷ்மி உன்னை பாசாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்த்திருப்பாள் என்றாள். ம் நீங்கள் அவளை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்று தெரியும் என்றான். ஜோ இரண்டு பாடங்களில் பெயில் ஆகி இருந்தான். அதை பற்றி அவன் அதிகம்
அலட்டிக்கொள்ளவில்லை.

ரஷ்மி ராகவுக்கு பாஸ் ஆனதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தாள்.வெறும் வாழ்த்து மட்டும்தானா என்றான் ராகவ். திருச்சி போகிறோம் அல்லவா எல்லாம் உண்டு என்றாள் வெட்கம் மின்ன. அப்போ சரி என்றான். சுகன்யா பாடுவதற்கு நன்கு தயாராகிவிட்டதாக சௌமியாவிடம் ரிப்போர்ட் கொடுத்திருந்தாள் ரஷ்மி. சுகன்யாவுக்கும் அதில் மகிழ்ச்சி தான் . இறுதி நேர ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. தென்றல் ராகவுக்கு ஃபோன் பண்ணினாள் என்னை விட்டுட்டு போறியா அவ கூட ஜாலியா என்றாள். நீ ஏன் அப்படி நினைக்கிறாய் வேண்டுமென்றால் நானும் போகவில்லை என்றான். சும்மா சொன்னேன் திரும்ப வரும்போது எனக்கு ஏதாவது வாங்கி கொண்டு வா என்றாள். நிச்சயமாக வாங்கி வருகிறேன் என்றான். தென்றலுக்கு அவள் உள்ளுணர்வு ஏதோ சொல்லியது. அது ரஷ்மி ராகவுடைய நெருக்கம் பற்றித்தான் . அது எல்லோருக்குமே தெரிந்திருந்தது. அருண் ஜோவிடம் என்னடா ரஷ்மி லவ் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா என்னடா பண்ணுறது என்றான். அதெல்லாம் ஊர்ல பொண்ணா இல்ல பார்த்துக்கலாம் மச்சி என்றான் ஜோ. நீயும் அப்படி சொல்லாதேடா என்றான் அருண்.அருணும்,ரஷ்மியும் 80%மதிப்பெண்கள் எடுத்திருந்தனர்.

டிரைன் மூலமாக திருச்சி செல்வதென முடிவு செய்யப்பட்டிருந்தது . ரஷ்மி ராகவிடம் ஏதேதோ பேசினாள் . அவள் மனம் உற்சாக கும்மாளமிட்டது.சௌமியா,சுகன்யா இருவரும் வேடிக்கை பார்த்தபடி வந்தனர். ஜோவும். அருணும் பாடல்களை முணுமுணுத்தபடி வந்தனர். இது ராகவும், ரஷ்மியும் காதலை வெளிப்படுத்திய பிறகு முதல் பயணம் என்பதால் ராகவ் இயன்றவரை எல்லாவற்றிலும் அவள் விருப்பத்துக்கே விட்டான். மியூசிக் முதல் காதல் வரை எல்லாமே அவனுக்கு ரஷ்மி தான். சௌமியா அருண் கூட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து பேசி வந்தாள். எப்படியும் நன்றாக பெர்ஃபார்மன்ஸ் பண்ணினால்தான் அடுத்த வாய்ப்புக்கு காலேஜ் சிறப்பாக ஏற்பாடு செய்து தருவார்கள் என்றாள் சௌமியா. நீங்க கவலைப்படாதீங்க மேம் இந்த தடவை சுகன்யா வேறு இருக்கிறாள் அதனால நிச்சயம் நல்லா பெர்ஃபார்மன்ஸ் பண்ணலாம் என்றான் ஜோ. நீ கொஞ்சம் குறும்பு பண்ணுறதை குறைச்சுக்கோ அது நம்ம காலேஜ் இல்லை என்றாள் சௌமியா. ம் ஓகே மேம். எல்லோரும் தூங்கும் நேரம் வந்தது. ராகவ் ஒரு கம்பார்ட்மெண்ட் ரஷ்மி வேறொரு கம்பார்ட்மெண்ட் . ரஷ்மி ஃபோன் பண்ணினாள் . என்ன ராகவ் என்ன யோசனை என்றாள். எல்லாம் உன்னை பத்திதான் என்றான். பொய் சொல்லாதே தென்றலை பற்றித்தானே நினைக்கிறாய் என்றாள். அதெல்லாம் இல்லை நல்லபடியாக நிகழ்ச்சி நடக்க வேண்டும் அதை என்றான். ஓகே குட்நைட் என்றாள்.

நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு நாள் முன்பே போய்விட்டார்கள். இவர்கள் பிராக்டிஸ் பண்ணவும், தங்கவும் இடம் குடுத்திருந்தார்கள். ரஷ்மி, சுகன்யா, சௌமியா ஒரு ரூமிலும். ராகவ், ஜோ, அருண் ஒரு ரூமிலும் தங்கி இருந்தனர். அவர்களை காலேஜ் கல்சுரல் கமிட்டி வரவேற்றார்கள். எல்லா ஏற்பாடுகளும் நிறைவாக இருந்தது சௌமியாவுக்கு. தென்றல் ஃபோன் பண்ணினாள் ரஷ்மிக்கு. ராகவை கவனமாக பார்த்துக்கொள்ளும்படி சொன்னாள். இது ரஷ்மிக்கே ஆச்சரியம் ஆக இருந்தது. அங்கே கல்யாண நிகழ்ச்சியில் தென்றல் கலந்து கொண்டிருந்தாள். அவர்கள் சில குறிப்பிட்ட பாடல்களை பாடும்படி கேட்டுக்கொண்டிருந்தனர். அவற்றுக்கான பிராக்டிஸ் செய்து வந்தார்கள். மதியம் லஞ்ச் பிரேக் போது தான் சௌமியாவால் ராகவை தனியாக சந்திக்க முடிந்தது. என்ன ராகவ் எப்படி இருக்கிறது இந்த ஊர் . நன்றாக இருக்கிறது . புது அனுபவமாக இருக்கிறது என்றான். கிருஷ்ணன் ஃபோன் பண்ணியிருந்தார். சௌமியாவிடம் பேசிவிட்டு ராகவிடமும் பேசினார். தம்பி நீ வந்து போனதில் இருந்து என் பொண்ணு ரொம்ப சந்தோஷமா இருக்கா . அவளுக்கு உன் நிகழ்ச்சி பார்க்கணும்னு ரொம்ப ஆசை. யுட்யூப் ல லைவ் போடுறோம் அவசியம் பாருங்க என்றான். ஓகே ராகவ். ரஷ்மியை கேட்டதாக சொல்லுங்க என்றார்.


மதியம் லஞ்ச் ரஷ்மி, ராகவ் அருகில் அமர்ந்து சாப்பிட்டாள்.ஈவினிங் அந்த கல்லூரியின் இசைகுழுவின் மெம்பர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர்களும் மகிழ்வுடன் இவர்களின் ரிகர்சல் பாட்டுக்களை ரசித்தனர். சுகன்யா நன்றாகவே பாடினாலும் இன்னும் குழுவுடன் பாட பயிற்சி தேவைப்பட்டது. எப்படியோ ரஷ்மி அவளை சமாளித்தாள் . இரவு எல்லோரும் டின்னர் சாப்பிட்ட பிறகு பேசிக்கொண்டிருந்தார்கள். ரஷ்மி என்ன ராகவ் நெர்வஸ் ஆக இருக்கிறாயா என்றாள். அப்படித்தான் நினைக்கிறேன். என்னவோ எனக்கு பறப்பது போல இருக்கிறது என்றான். ம் கொஞ்சம் கீழே இறங்கி வா அதுதான் உனக்கு நல்லது என்றான் அருண் சிரித்துக்கொண்டே. இரவு சுகன்யா நேரத்தோடு தூங்க போய்விட்டாள் . ஜோவும் போய்விட்டான். ராகவ் , ரஷ்மி, அருண் மூன்று பேரும் இன்னும் சில மாற்றங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். ராகவ் நீ வேண்டுமானால் கொஞ்ச நேரம் தூங்கி விட்டு வா நாங்கள் இருவரும் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கிறோம் என்றான் அருண். சரி என்று ராகவும் கிளம்பினான். என்ன ரஷ்மி இன்னும் முடிவு சொல்லாமல் இருக்கிறாய் என்றான் அருண். எனக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை. என்னை மன்னித்து விடு அருண். இப்போது இதைப்பற்றி நாம் பேச வேண்டாம் என்றாள். சரி சரி நான் ஒன்றும் உன்னை கட்டாயப்படுத்தவில்லை.

சிறிது நேரம் கழித்து ராகவ் வந்தான் அருண் ஒரு மூலையில் பெஞ்சில் தூங்கி கொண்டிருந்தான். நீ போ ரஷ்மி ரொம்ப நேரம் விழித்திருக்க வேண்டாம் என்றான் ராகவ். இன்னும் ஒரு அரைமணி நேரம் கழித்து போகிறேன் என்றாள். சரி உன் விருப்பம் என்றான் . இருவரும் சில பாட்டுக்களை பாடி பிராக்டிஸ் செய்தனர். அருண் எழுந்து விட்டான். ரஷ்மி நான் கிளம்புகிறேன் அருண் என்று சொல்லிவிட்டு போனாள் . நீ எப்படி தனியாக போவாய் நானும் வருகிறேன் என்றான் அருண்.சரி வா என்றாள். அருண் சிறிது நேரம் கழித்து வந்தான்.அவளுக்கு உன்னைத்தான் பிடித்திருக்கிறது ராகவ் என்றான். நீயோ தென்றல் பின்னால் சுற்றி கொண்டிருக்கிறாய் . அதெல்லாம் இப்போது எதற்கு நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்றான். ம் புரிகிறது. நீதான் முக்கால்வாசி வேலையை முடித்து விட்டாயே என்றான். ஐ மீன் இசை நிகழ்ச்சியை சொன்னேன். மறுநாள் காலையில் காலேஜ் கேம்பசில் இருந்த கோவிலில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லோரும் அதில் கலந்து கொண்டார்கள். ரஷ்மி ஏதோ கோவத்தில் இருப்பதாக நினைத்தான். நேத்து நீ ஏன் என்னை டிராப் பண்ணலை என்றாள். அருண் ஏதாவது தப்பா நடந்துகிட்டானா சே சே அவன் ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டய்ன் பண்ணுவான்.நீ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் என்றாள்.

பூஜை முடிந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சௌமியா எப்போதும் போல இல்லாமல் ராகவ் கூட நெருக்கமாக ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். அடுத்த வருஷம் இன்னும் பெருசா சாதிக்கணும்ணு வேண்டிக்கோ ராகவ் என்றாள் சௌமியா. ஜோ ,சுகன்யாவுடன் பேசிக்கொண்டிருந்தான். மாலை 7 மணிக்கு நிகழ்ச்சி என்று சொல்லி இருந்தார்கள். சுகன்யா நன்கு பாட அவளுக்கென ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டது. ராகவ் தென்றலிடம் பேசினான். என்ன பண்ணுற தென்றல் அங்கே என்றான். உன்னைய ரொம்ப மிஸ் பண்ணுறேன் என்றாள். அப்பா எப்படி இருக்கிறார் எனவும் விசாரித்தான். அப்புறம் பிரதீபா ஃபோன் பண்ணியிருந்தாள். அவளுடைய வாழ்த்துக்களை சொன்னாள் . தாங்க்ஸ் பிரதீபா என்றான் . ரஷ்மி மிக அழகாக சிம்பிள் ஆக உடை உடுத்தி இருந்தாள். அவளை கட்டிக்கொண்டு பாட வேண்டும் போல இருந்தது.சௌமியா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் மீட்டிங் என்று போய்விட்டாள். அருண் ,ஜோ, ரஷ்மி, ராகவ், சுகன்யா மும்முரமாக தங்களை தயார்படுத்தி கொண்டனர். அப்போது சௌமியா ஒரு பெண்ணை அழைத்து வந்தாள் அவள் பெயர் பூஜா என்றும் அவளும் அவர்களோடு சேர்ந்து பாடுவாள் என்றும் தெரிவித்தாள். என்ன மேம் திடீர்னு ?என்னவோ அவங்க இசைக்குழுவில் இருந்து ஒரு மெம்பர் உங்க கூட சேர்ந்து பாடுனா நல்லா ரீச் இருக்கும்னு சொல்லுறாங்க என்றாள். சரி மேம் உங்களுக்கு ஓகே னா எங்களுக்கும் ஓகே தான். பூஜா சிறப்பாக பாடினாள். அவளை சேர்த்தது நியாயம்தான் என்கிற வகையில் அவளுடைய மியூசிக் நாலேட்ஜ் இருந்தது . அருணும் அவளும் சேர்ந்து பாடிய போது அற்புதமாக இருந்தது. கேட்க கேட்க இன்பமாக இருந்தது.