ஸ்வாமிநாதன் என்கிற ஸ்வாமிக்கு எழுதுவதுதான் பொழுதுபோக்கு . எதையாவது எழுதி கொண்டிருப்பான். துணுக்குகளோ ,சிறுகதைகளோ இல்லையெனில் ஒரு நாவல் எழுத போவதாக சொல்லி கொண்டிருப்பான். அவனுக்கு பிரவீன் என்றொரு நண்பன் இருந்தான். ஸ்வாமிக்கு திருமணமான வேகத்திலேயே விவாகரத்தும் ஆகிவிட்டது . பிரவீனுக்கு மணமாகி இரண்டு பெண் குழந்தைகள். அவன் அரசாங்க உத்தியோகஸ்தன். எப்போதும் போல 6 மணிக்கு பிரவீன் வீட்டு வாசலுக்கு வந்து விட்டான் ஸ்வாமி. பிரவீனுடைய அம்மாவுக்கு ஸ்வாமியின் எழுத்துக்கள் என்றால் இஷ்டம். வீட்டின் உள்ளேயிருந்து வெளியே வந்தவள் அவன் வர நேரம்தான் செத்த உள்ளே வந்து உட்காரு என்றாள். பிரவீன் மனைவிக்கோ எழுத்து என்றாலே அலர்ஜி . கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவள். காபி போடட்டுமா ஸ்வாமி என்றாள் பிரவீன் அம்மா. அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா நான் வேணா போயிட்டு அப்புறம் வரவா என்றான். சொல்லி முடிப்பதற்குள் பிரவீனும் அவன் மனைவி ஷெரினும் வந்து சேர்ந்தார்கள்.
எப்படா வந்தே இப்போதான்டா என்றான் ஸ்வாமி. இவனை பார்த்ததும் ஷெரின் முகத்தை திருப்பி கொண்டாள். இரு ரெடி ஆகி வரேன் என்று உள்ளே போனான் பிரவீன். பிள்ளைக இருக்குற வீடுன்னு தெரியும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டுக்கு கூட வழியில்லாதவரா உங்க ஃப்ரெண்ட் என்றாள் ஷெரின். மெதுவா பேசு சின்ன வயசுலர்ந்தே பழக்கம் என்றான் பிரவீன். ஸ்வாமி சங்கடமாக நெளிந்தான். நான் வெளிலே இருக்கேன்மா என்றவாறு வெளியே வந்தான் ஸ்வாமி . நீ ஒண்ணும் மனசுல வெச்சுக்காதே அவ ஏதோ வேலை டென்ஷன்ல சொல்லிட்டா என்றான் பிரவீன் . இரண்டு நாட்கள் கழித்து மணி இரவு 11 இருக்கும் ஷெரினிடம் இருந்து ஃபோன் வந்தது . அவருக்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குது நீங்க கொஞ்சம் வர முடியுமா டாக்டர் கிட்டே போலாம்னு நான் சொன்னா கேட்க மாட்டேங்குராறு என்றாள்.சரி நான் வரேன் என்றான் . இரண்டு பிஸ்கட் பாக்கெட்களை வாங்கி கொண்டு போனான் . என்னடா ஆச்சு ஒண்ணும் இல்லடா லேசா ஜுரம் இவ தேவையில்லாம பயப்படுறா என்றான் பிரவீன். இருங்க நான் போய் ஆட்டோ பிடித்து வரேன் என்றான் ஸ்வாமி. அடுத்த அரைமணியில் ஆஸ்பத்திரியில் அட்மிஷன் போட்டு விட்டார்கள். குழந்தைகளை பிரவீன் அம்மாவிடம் விட்டு வந்திருந்தாள் ஷெரின். ஷெரினுக்கு டீயும் பிரெட்டும் வாங்கி கொடுத்தான். பிரவீனுக்கு trips ஏற்றினார்கள். ஒரு மூன்று நாளைக்கு ஓய்வெடுக்க சொல்லி விட்டார்கள்.பிரவீனுக்கு காய்ச்சல் மறுநாள் சாயங்காலம்தான் சற்று குறைந்தது .வீட்டுக்கு போலாம் டா இங்கே இருக்க என்னவோ போல இருக்கு என்றான் பிரவீன். சரி டாக்டர்கிட்ட பேசிட்டு வரேன் என்று போனான் ஸ்வாமி. கூடவே ஷெரினும் வந்தாள். டாக்டர் ஒண்ணும் பயப்பட வேண்டாம் நான் டிஸ்சார்ஜ் ஷீட் எழுதி தரேன் என்றார். பிரவீணை வீட்டில் விட்ட பிறகே தன் வீட்டுக்கு புறப்பட்டான் ஸ்வாமி. மதியம் போல ஷெரினுக்கு ஃபோன் செய்து விசாரித்தான் ஏதாவது சாப்பிட்டானா ?பிரட்டும் கஞ்சியும் சாப்பிட்டாரு என்றாள். நான் ஈவினிங் வந்து பார்க்கிறேன் என்றான். பிரவீன் இப்போது சற்று ஜுரம் தெளிந்தவனாக இருந்தான். ஸ்வாமிக்கு டீ கொண்டு வந்து கொடுத்தாள் ஷெரின். மெடிசன்ஸ் வாங்கணும் என்றாள். அந்த பிரிஸ்கிரிப்ஷன் குடுங்க நான் வாங்கி வரேன் என்றான். இல்ல நானும் வரேன் என்றாள். அவசரத்துக்கு பணம் இல்ல அதான் இந்த வளையலை வெச்சி பணம் வாங்கி குடுக்கிறீங்களா ?இதுக்காக வளையலை வைக்கணுமா என்றான்.
மூன்று நாட்களில் பிரவீனுக்கு காய்ச்சல் முற்றிலும் குணமானது .ஒரு வேலை விஷயமாக வெளியூர் போய்விட்டு அப்போதுதான் ஊர் திரும்பியிருந்தான் ஸ்வாமி.பிரவீனுக்கு ஃபோன் செய்தான். ஷெரின் தான் எடுத்தாள். ஒண்ணும் சொல்லாம போயிட்டீங்களே என்றாள். இப்போ எப்படி இருக்கான் பிரவீன் அந்த டாக்டர் ரொம்ப ராசியானவரு என்றான். இப்போ அவருக்கு பரவாயில்லை இன்னைக்கு மதியம் சாப்பாடு நம்ம வீட்லதான் அவசியம் வாங்க என்றாள். இருக்கட்டும் ஷெரின் இன்னொரு நாள் வரேன் என்றான். இல்ல கண்டிப்பா வரணும் என்றாள். சரி வரேன் என்றான். பிரவீன் ஏதோ வேலையாக அவன் அம்மாவுடன் போயிருந்தான்.இவன் தயங்கியவாறே ஷெரின் என்று கூப்பிட்டான் . வாங்க வாங்க என்று சொன்னாள். நீங்க என்ன விரும்பி சாப்பிடுவீங்கண்ணு தெரியாது எனக்கு தெரிஞ்சத சமைச்சிருக்கேன் என்றாள். பிரவீன் வரட்டும் சேர்ந்து சாப்பிடுறேன் என்றான். அவர் சாயங்காலம்தான் வருவாரு நீங்க உட்காருங்க என்றாள். அவளிடத்தில் வளையலை நீட்டினான் . நீங்க ஏன் இதை மூட்டிங்க? இருக்கட்டும் வெறும் கையோடு இருந்தா நல்லாவா இருக்கு என்றான். வேலை விஷயமா போனீங்களே என்ன ஆச்சு ? என்றாள் அதுவா அடுத்த வாரம் ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க . ஆனா திருச்சியில வேலை அங்கேயே தங்கிட வேண்டியதுதான் என்றான்.
பிரவீனுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டு போவதற்காக ஊருக்கு போகும் நாளன்று வந்திருந்தான். என்னப்பா எங்களையெல்லாம் மறந்துட்டு போறே இங்கே பக்கத்துல திருச்சிதானே அம்மா என்றான் ஸ்வாமி. ஷெரின் அடிக்கடி ஃபோன் பண்ணுங்க என்றாள். பிரவீன் ஷெரின்தான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவா என்றான். பிரவீன் ஸ்வாமியை டிரைன் ஏத்தி விட வந்திருந்தான் .பார்த்து பத்திரமா இருந்துக்கோடா ஃபோன் பண்ணு அடிக்கடி என்றான் . இரண்டு மாதங்கள் ஓடி விட்டது . வேலை போகிற போக்கில் அடிக்கடி பிரவீனுக்கு ஃபோன் போட முடியவில்லை. ஏதோ யோசனையுடன் இருந்தவனை பார்க்க பிரவீனே நேரில் வந்துவிட்டான். இங்கே பக்கத்துல ஒரு கல்யாணம் அப்படியே உன்னையும் பார்த்த மாதிரி இருக்குமேன்னு வந்தோம். அவர்களை உட்கார வைத்து விட்டு கிச்சன் பக்கம் போனான் . ஒரு அரைமணி நேரம் பொறுங்க சமைத்து விடுகிறேன் என்றான் . ஒண்ணும் அவசரமில்லை நிதானமாவே செய் என்றான். ஷெரின் கிச்சன் உள்ளே வந்தாள். எதுக்காக இவ்ளோ தூரம் வந்தீங்க என்றாள். அதெல்லாம் ஒண்ணும் இல்லை . உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியும் . சே சே என் மனசுல ஒண்ணும் இல்லை அப்புறம் ஏன் நான் கால் பண்ணப்போ எடுக்கலை . அது வந்து .. என தயங்கினான்.
பிரவீன் விடை பெற்றுக்கொண்டான் . ஸ்வாமி ஷெரின் அனுப்பிய மெசேஜ்களை ஒவ்வொன்றாக டெலீட் செய்தான். ஐ லவ் யு ஸ்வாமி என்று ஷெரின் அனுப்பியதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துகொண்டு அவள் நம்பரை பிளாக் செய்தான்.