Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

சினேகாவும் புத்தகமும்

ஸ்னேகாவுக்கு புத்தகங்கள் என்றாள் உயிர் . அவளுக்கு படிக்காவிட்டால் எதையோ இழந்ததாய் உணர்வாள். விதவிதமான புத்தகங்கள் அவளுடைய அலமாரியை அலங்கரித்தன. அதில் மனதுக்கு நெருக்கமான புத்தகங்கள் சிலவற்றை அவள் மறைத்து வைப்பதும் உண்டு. அவள் காதல் வயபட்டதும் கல்யாணம் முடித்ததும் அவளுடைய உலகமே மாறிவிட்டது. முன்னை போல அவளுக்கு படிக்க நேரமில்லை. திருமணமாகி ஹனிமூன் போய் வந்ததும் தன்னையே தான் இழந்து விட்டு ராகவனுக்காக வாழ்வதாய் நினைத்தாள். இருவரும் வேலைக்கு போய் வந்தனர். ராகவனுக்கு சினிமா என்றாள் உயிர். அவன் ஒரு உலக சினிமா பைத்தியம். ஏதேதோ மாற்று மொழி படங்களும் அவற்றின் subtitleகளுமே கதியென்று கிடப்பான். ராகவன் இவளை சந்தித்ததே ஒரு டிவிடி கடையில்தான். ராகவன் வெளியில் மாடர்ன் ஆக இருப்பது போல இருந்தாலும் உள்ளுக்குள் பழமைவாதி. அவனுக்கு வீட்டில் எல்லாமே சவுகரியம் செய்து கொடுக்க வேண்டும் . ஸ்னேகாவின் நேரத்தை எல்லாம் காலாட்டிக்கொண்டே கபளீகரம் செய்வான்.

ராகவனும் ஸ்னேகாவும் அவர்கள் பிறந்த வீட்டு சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால் பொருளாதார சிக்கல்களையும் சந்தித்தார்கள். ஸ்னேகா ராகவனிடம் எத்தனையோ முறை அவனுடைய வேலைகளை செய்து கொள்ளுமாறு சொல்லி சொல்லி அலுத்து விட்டாள். ராகவனும் அந்த நேரத்துக்கு தலையை ஆட்டிவிட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் தன் வேலையை காட்டுவான். ஸ்னேகா ஒன்றும் புரட்சி செய்ய நினைப்பவள் இல்லை. தன்னுடைய சொந்த உணர்வுகள்,சுதந்திரம் போன்றவற்றை ராகவன் மதிக்க வேண்டும் என்பதை ஆசையாக கொண்டிருந்தாள். புத்தக கண்காட்சி எங்கு சென்னையில் நடைபெற்றாலும் போய்விடுவாள். எப்படியாவது ராகவனுடைய மனதை ஒரு நிலைபாடுத்துவதே அவளுக்கு பெரும் பாடாக இருக்கும். மிக அரிதாக அவர்கள் சேர்ந்து தமிழ் படங்கள் பார்ப்பார்கள். ராகவன் படத்தின் பாதியிலேயே தூங்கியும் போயிருப்பான்.

ராகவன் ஒய்எம்சிஏ ல புக் ஃபேர் போட்டிருக்கான இந்த வீக்கெண்ட் போகலாமா என ஸ்னேகா ஆரம்பித்தாள். நீ வேணா போயிட்டு வா என பேச்சை முடித்து கொண்டான் ராகவன். அதெப்படி தனியா போனா போரடிக்குமே நீயும் வாயேன் என்றாள். நீ படிக்கிறது எல்லாமே போலியான புத்தகங்கள் அதுக்கு போய் என்னையும் கூப்பிடுறியே என்றான். ஆமா நீ பாக்கிறது எல்லாமே உலக சினிமாவா பாதி நிர்வாண காட்சிதான் ஓடுது அதுக்கு எவ்ளோ நேரம் ஸ்பெண்ட் பண்ணுற என்றாள். ராகவன் அவளை சமாதானபடுத்தும் விதமாக ஒண்ணு செய்யுறேன் அடுத்த வாரம் ஆபீஸ் ல பர்மிஷன் கேக்குறேன் ஓகே வா. இதுக்கு எதுக்கு ஆபீஸ் ல பர்மிஷன். எல்லாம் அப்படித்தான் . சரி ஓகே என்று அப்போதைக்கு விவாதத்தை முடித்து வைத்தாள் ஸ்னேகா. அவள் மனம் எதையோ குறித்து பட படத்து கொண்டிருந்தது . போன முறை அவள் புத்தக கண்காட்சிக்கு போயிருந்தபோது சில பெண்ணிய கவிஞர்களை பார்த்திருந்தாள். அவர்களின் உடை நேர்த்தியும் சொல்லாடலும் அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது. தன்னால் தன்னுடைய உலகை ஏன் அவ்வாறு கட்டமைக்க இயலவில்லை என யோசித்தாள். ராகவனுடன் வெறும் லிவிங் டுகெதர் மாதிரி வாழ தனக்கேன் தைரியம் வரவில்லை எனவும் யோசித்தாள்.


ராகவன் புக் ஃபேர் போவதற்கு சில நிபந்தனைகளை விதித்தான். இரண்டு மணி நேரம்தான் தான் பர்மிஷன் போட்டிருப்பதாகவும் அதன் பிறகு அவன் கிளம்பி விடுவதாகவும் சொன்னான். ஸ்னேகா என்ன வெறும் இரண்டு மணி நேரமா?ஸ்னேகா இதுக்கே என் மேனேஜர் அந்த கேள்வி கேட்டான். ம்ம் மூஞ்சை தூக்கி வச்சிக்காதே ஜாலியா போகலாம் ஓகேவா என்றான். ஸ்னேகா சாரீ கட்ட வேண்டாம் என்று முடிவு செய்து ஜீன்ஸ் பாண்ட் டீ ஷர்ட் தேர்வு செய்தாள்.
அவளுடைய பேச்சு மொழியும் , உடல் மொழியும் திருமணத்துக்கு பிறகு சற்றே மாறி இருந்தது. அவளுக்கு நன்றாக கார் ஓட்ட தெரியும். இருந்த போதும் ராகவன் குறை சொல்வான் என்பதற்காக அவள் அவனையே கார் ஓட்டும் படி சொல்வாள். சனிக்கிழமை அன்று புக் ஃபேர் போவதாக திட்டம் போட்டு இருந்தார்கள். ஒவ்வொரு வருடமும் வழக்கமாக ராகவனுடைய சில ஃபிரண்ட்ஸ் அவனை ஏதோ சர்வதேச திரைப்பட விழா நடப்பதாக சொல்லி அழைத்து போய் விடுவார்கள். அப்போதெல்லாம் இவள் தனிமையில் இருக்க நேரிடும் அப்போது புத்தகங்கள்தான் இவளின் துணையாக இருக்கும்.

புத்தக கண்காட்சிக்கு நிறைய பேர் வந்திருந்தார்கள். கூட்டம் கொஞ்சம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. இவள் ராகவனுடைய கையை பிடித்து கொண்டாள். பிரத்யேகமான கைப்பை ஒன்றை சமீபத்தில்தான் வாங்கியிருந்தாள். அவள் முன்பே சில புத்தகங்களை வாங்க உத்தேசித்திருந்தாள்.அவற்றின் குறிப்புகளை கையில் வைத்திருந்தாள். ராகவன் சினிமா சம்பந்தபட்ட நூல்களை வாங்க ஆர்வமாய் இருந்தான். இருவரும் ஆர்வத்துடன் ஒவ்வொரு ஸ்டாலாக பார்த்து கொண்டு வந்தனர். எழுத்தாளர் கிருஷ்ணன் தன்னுடைய புத்தகங்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்து கொண்டிருந்தார். இவள் அவரை நெருங்கி தான் வாங்கிய அவருடைய புத்தகத்தை நீட்டினாள் . அவள் தன்னுடைய பெயரை சொல்லி அறிமுக படுத்திகொண்டாள். அவர் அவளை லேசாக அணைத்தார். ராகவன் முகம் லேசாக மாறியது . புகைப்படம் எடுத்து கொள்ளும்போது அவர் ஸ்னேகாவின் தோளில் கை போட்டார் . அங்கிருந்து விடைபெரும்போது இவர்கள் எல்லாமே போலி பெண்ணியவாதிகள் என்றான் ராகவன்.ம்ம் அவர் சாதரணமாதானே தோளில் கை போட்டார் அதுக்கு இவ்ளோ கோவமா?உனக்கு தெரியாது ஸ்னேகா அதெல்லாம் சொன்னால் புரியாது என்றான் .

ஒரு வழியாக ஸ்னேகா தான் தேடிய சில புத்தகங்களை வாங்கி விட்டாள். ராகவனும் சில புத்தகங்களை வாங்கினான். ராகவன் சில நாள் பயணமாக வெளியூர் சென்றான். ஸ்னேகாவும் ஃப்ரெண்ட் கீதா வீட்டில் தங்கி கொள்வதாக சொல்லி விட்டாள். ஸ்னேகாவும் கீதாவும் பள்ளி நாள் முதலே தோழிகள். அவளுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கீதாவுக்கு ரொம்ப சந்தோஷம் . கீதா வீட்டில் சீக்கிரமே கல்யாணம் பண்ணி கொடுத்துவிட்டார்கள் அவள் வேலைக்கும் செல்லவில்லை. அவளுடைய கணவன் நரேஷ் அவளை நல்ல முறையில் நடத்துவதாக சொன்னாள் கீதா. கீதாவும் ஒரு புத்தக விரும்பிதான். கீதா வீட்டில் புத்தகம் வாசிக்கும் அறையே தனியாக இருந்தது. இவளுக்கு லேசாக கீதாவின் மேல் பொறாமை ஏற்பட்டது . இருவரும் பழைய நாட்களை உற்சாகமாக நினைவு கூர்ந்தனர். அப்போது ஸ்னேகா எழுத்தாளர் கிருஷ்ணனை சந்தித்தததை பற்றி சொன்னாள். அவர் ஒரு மாதிரி ஆச்சே என்றாள் ஃபோன் நம்பர் கொடுத்திருப்பாரே .. ஆமா உனக்கெப்படி தெரியும் .. இது கூட புரியாத மக்காடி நீ ?என்றாள். என்னடி சொல்லுற?எனக்கும் கூட குடுத்தார் . நான் ஃபோன் பண்ணப்போ எனக்கு அட்வைஸ் பண்ணினார். பொண்ணுங்க வேலைக்கு போறது நல்லதுன்னு சொன்னார்.அப்புறம் ராத்திரி 12 மணிக்கு ஒரு நாள் மிஸ்டு கால் கொடுத்தார். நரேஷ் அவருக்கு ஃபோன் பன்னப்புறம் அவர் கால் பண்ணுறது இல்லை. உனக்கு கிருஷ்ணன் மேல நிஜமாவே ஆசை இல்லையா? இதை கேட்டதும் கீதாவின் முகம் வெட்க சிவப்பானது. சீ என்றவாறு ஸ்னேகாவின் காதருகே வந்து அதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது என்றாள்.


ஸ்னேகாவுக்கு கீதாவின் நிலை புரிந்தது. தானும் அதுபோல திருமணத்துக்கு கட்டுபட்டவள் தானே என்று நினைத்தாள். ராகவன் ஊரில் இருந்து வருவதற்குள் கிருஷ்ணனை ஒருமுறை பார்த்து கீதா சொன்னது உண்மையா என தெரிந்து கொள்ள துடித்தாள். கிருஷ்ணனுடைய மொபைல் நம்பருக்கு ஃபோன் செய்தாள். சார் நான் ஸ்னேகா என்றாள். ஓ நீயாம்மா சொல்லு என்றார். நான் உங்களை பார்க்கணுமே என்றாள்.என்ன விஷயம்மா என்றார். சும்மாதான் சார். சரிம்மா நாளைக்கு ஈவினிங் 5 மணிக்கு வீட்டுக்கு வா என்றார். இவளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை ஓகே சார் என்றாள். நல்ல முறையில் உடை உடுத்தி கொண்டு அவருடைய வீட்டுக்கு சென்றாள். அவர் மனைவிதான் வரவேற்றாள். நீங்க வருவீங்க அப்படின்னு சொன்னாரு. மாடிக்கு போங்க அவர் உங்களுக்காக வெயிட் பண்ணுகிறார் என்றாள். ஏதாவது சாப்பிடறீங்களா ?அதெல்லாம் ஒண்ணும் வேணாம் என்றாள் ஸ்னேகா. ஸ்னேகாவை பார்த்ததும் வாம்மா உட்காரு என்று சொன்னார்.

நீ ஏதோ குழப்பத்திலே இருக்கே அப்படின்னு தோணுது? ஆமா சார். கீதாவை பத்தி சொன்னாள். அவளுக்கு உங்க மேல காதல் ஆனா அதை மறைக்கிறா அது சரியா சார் ?கல்யாணம் ஆயிட்டாலே நாம நம்ம சுயத்தை இழக்கணுமா சார்? ம்ம் இதுக்கு விடை அவங்க அவங்க மனசாட்சியை பொறுத்தது. உன்னை பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தெரியுது. அதனாலே சொல்லுறேன்.. இதெல்லாம் வெறும் மயக்கம்தான். நிலையில்லாதது. வாழ்க்கையை அதோட போற போக்குல வாழரது ரிஸ்க் எடுக்கறதுதான். ம்ம் புரியுது சார். உங்க ஹஸ்பண்ட் உங்களை வாட்ச் பண்ணிட்டே தான் இருப்பார் . அதை தவிர்க்க முடியாது. அதோட சிரமப்பட்டு வாழனும் அப்படிங்கிரதுதான் விதி . நீ இதெல்லாம் பெருசு பண்ணாதே சுயம் அப்படிகிறதே ஒரு myth . நீ கற்பனையை குறைச்சுக்கோ . குறைகளோட இருக்குற உன் ஹஸ்பண்ட் மேல அன்பு செலுத்து எல்லாமே மாறி விடும். ரொம்ப நன்றி சார். நான் வரேன் என்றாள்.

கீழே கார் ஹாரன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. ராகவனுடைய கார்தான் அது. எங்கேடி பொய் சுத்திட்டு வர. ஒரு ரெண்டு நாள் ஊர்ல இல்லனே உடனே ஊர் மேய போயிட்டியா என்றான். இவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் வாசலில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணனை பார்த்தாள். அவரை கட்டிபிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். பிறகு ஓடி வந்து காரில் ஏறிகொண்டாள். கார் புழுதியை கிளப்பியபடி அங்கிருந்து கிளம்பியது .