எழில் ஒரு சவாலான சூழ்நிலையில் இருந்தான். சௌமியாவே இவனை போனில் தொடர்பு கொண்டாள். தனக்கும் யாழினியின் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாள். யாழினியை யாரோ மிரட்டி நிர்மலா கொலையில் பங்கு பெற செய்திருக்கிறார்கள் என்றான் எழில். சௌமியா அமைதியாய் இருந்தாள். இந்த அமைதிக்கு என்ன அர்த்தம் மேடம். நான் எனக்கு தெரிந்தவற்றை எல்லாம் சொல்லிவிட்டேன் இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள் என்றாள். எழில் கிரணை சந்தித்தான். என்ன ஆனந்த் அமெரிக்கா போகிறானாமே என்றான் . ம் உனக்கும் தெரிந்துவிட்டதா ஆனந்த் உன்னை சந்திக்க விரும்புகிறான் அவசியம் போய் பார் என்றான். நிச்சயம் பார்க்கிறேன் . ஷிவானி நீ அவசியம் அவனை பார்க்க வேண்டுமா என்றாள். வேறு வழியில்லை. என்னதான் சொல்கிறான் என்று பார்ப்போமே. ஆனந்த் சற்றே இளைத்தவனாக இருந்தான். இவனை பார்த்ததும் மகிழ்வுடன் சிரித்தான். என் மேல் உள்ள எல்லா கேசும் நீயும் உன் மனைவியும் போட்டவைதான் என்றான். ஆனா உங்களை ஏன் விட்டு வைத்து இருக்கிறேன் தெரியுமா?எனக்கே தெரியலை . சும்மா மிரட்டாதே . எதற்கு என்னை பாக்கணும்னு சொன்னே . ம் நான் அமெரிக்கா போறேன். அதுக்கு முன்னாடி உங்களையெல்லாம் தீர்த்துட்டு போலாம்னு ட்ரை பண்ணினேன் முடியல அதான் பார்த்துட்டு போறேன் என்றான். என்ன யாழினி செத்துட்டாளாமே பாவம் ரெண்டு பசங்க வேற என்றான். எப்படியும் நீ திரும்ப இங்க வந்து தானே ஆகணும் என்றான் எழில். ம் அது கிரண் கையிலதான் இருக்கு என்றான்.
யாழினி கொலைக்கு காரணமானவர்களை எழில் தேடினான். ஸ்வேதாவும், சிவாவும் கோவிலுக்கு போய் வந்தார்கள். இனிமேலும் யாருக்கும் எந்த ஆபத்தும் ஆனந்தால் வரக்கூடாது என கடவுளிடம் வேண்டிகொண்டனர். ஷிவானிக்கு மறுபடி போஸ்டிங் கிடைக்கவும் வேண்டிக்கொண்டாள் . உதித்,நரேஷ் இருவரும் ஆனந்துக்கும்,கிரணுக்கும் எப்படியாவது தண்டனை கிடைக்க வேண்டும் என நினைத்தனர். யாழினியை நாங்கள் கொல்லவில்லை நிர்மலாவை தான் கொன்றோம் என்றான் போலீசில் மாட்டிக்கொண்ட இருவரில் ஒருவன். போலீஸ் அவனையும் என்கவுண்டர் செய்ய தீர்மானித்தது. இதை அறிந்த அவன் எழிலிடம் மட்டும் உண்மையை சொல்லி உயிரை காப்பாற்றி கொள்ள தீர்மானித்தான் . எழில் அவனை சிறையில் சந்தித்தான். சிறையில் இருந்தபடி பிரேமா என்ற பெண்மணி அவளுடைய கணவர் நவீன் மூலமாக யாழினியை கொன்றது தெரிய வந்தது, நிர்மலாவை கொல்ல சொன்னது யார் என்ற கேள்விக்கு சௌமியாவும் இல்லை ஆனந்தும் இல்லை ஷெரினால் கொல்லப்பட்ட நீதிபதியின் மகன் குமார் என்றான்.
இது யார் பிரேமா சம்பந்தம் இல்லாத பெண்மணி. அவளை மகளிர் போலீஸ் உதவியுடன் போய் பார்த்தான் எழில். அவள் எனக்கு சில பேருக்கு நன்றி கடன் செலுத்த வேண்டியிருந்தது அதனால யாழினியை முடிச்சேன் என்றாள். இது தப்பு இல்லையா? நீங்க செய்ய வேண்டிய வேலையைத்தான் நான் செஞ்சேன் என்றாள்.
நிர்மலா கொலைக்கு பின்பு காணாமல் போன இன்னொரு நபர் சரணடைந்து விட்டான்.அவனை விசாரித்த போது நிர்மலாவை கொலை செய்ய சொன்னது குமார் தான் எனவும் சொன்னான். குமாரை அரெஸ்ட் செய்ய வெறும் வாக்குமூலம் போதாது வேறு ஆதாரங்கள் வேண்டும். துப்பாக்கி கள்ள துப்பாக்கி என்று தெரிந்தது,முறையான உரிமம் பெறாத துப்பாக்கி என்று தெரிந்தது.குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவன் அடுத்த வாரம் ஆஜராவதாக வாக்கு கொடுத்தான். ஷிவானிக்கு போலீஸ் பதவி திரும்ப கொடுக்க கமிட்டி பரிந்துரைத்தது. மகிழ்ச்சியில் மிதந்தான் எழில். ஷிவானி ஸ்வேதா, சிவா எல்லோரையும் சந்தித்தாள். வாழ்த்துக்களை தெரிவித்தாள் ஸ்வேதா. இன்னும் 15 நாளில் டூட்டியில் ஜாயின் செய்ய உத்தரவு வந்திருந்தது. எங்காவது போலாமே என்றாள் ஷிவானி எழிலிடம். இப்போ இருக்குற நிலைமையில் என்னால எங்கேயும் நகர கூட முடியாது என்றான். குமாரை பற்றி விவரங்கள் சேகரிக்க தொடங்கினான் எழில். ஷெரினால் கொல்லப்பட்ட நீதிபதிக்கு ஒரே பையன் என தெரிந்தது.
குமார் வீட்டுக்கு போனான் எழில். அவர் கொஞ்சம் ஆபீஸ் வேலைல
பிஸியா இருக்கார் இருங்க நான் போய் நீங்க வந்திருக்கீங்க அப்படின்னு சொல்லுறேன் என்றார் வேலைக்காரர். சரி வெயிட் பண்ணுறேன். குமார் சின்ன வயதுகாரனாக இருந்தான். சொல்லுங்க எழில் சொல்லி அனுப்பி இருந்தா நானே வந்திருப்பேனே என்றான். ஏற்கனவே உங்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தோம் . நிர்மலா கொலைல உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா அப்படின்னு தெரிஞ்சிகிட்டு போக வந்தேன். நிர்மலா ஓ அந்த வக்கீல் நிர்மலாவா ? ம் அவங்க ஷெரினுக்கு ஆதரவா வாதாடினாங்க அவ்வளவுதான் தெரியும். குமார் நீங்க தேவைப்பட்டா ஒரு லீகல் என்குயரி ஆஜர் ஆகுற மாதிரி இருக்கும். நிச்சயமா வரேன் என்றான் குமார். எழில் விடை பெற்றுக்கொண்டான். ஷிவானி ஒரு டின்னர் அரேஞ்ச் செய்திருந்தாள். சிவா, ஸ்வேதா மற்றும் நரேஷ், உதித் ஆகியோரும் வந்திருந்தனர். ஸ்வேதா ஷெரினின் தண்டனை காலத்தை குறைக்க முடியுமா என கேட்டாள். உங்க மனுவை நான் உயரதிகாரிகளுக்கு ஃபார்வார்டு பண்ணி இருக்கிறேன் என்றான் எழில்.நரேஷ் உதித் இருவரையும் பார்க்கவே பரிதாபமாக இருந்தது ஷிவானிக்கு. எப்படியாவது உதித் டாக்டர் ஆகிவிட்டால் போதும் அவனுடைய எதிர்காலம் நன்கு அமைய தொடங்கிவிடும் என்றான் சிவா. நரேஷ் அக்காவுக்கு நினைவஞ்சலி கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் . நாம் எல்லோரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றான். எழில் நிச்சயமாக நான் வருகிறேன் என்றான். தாங்க்ஸ் எழில் சார் என்றான் நரேஷ்.
நினைவஞ்சலி கூட்டத்தில் பேச முடியாமல் தழுதழுத்தான் நரேஷ். எழில் பேசும்போது குற்றவாளிகள் சீக்கிரம் பிடிபடுவார்கள் என்றான். சிவாவும், ஸ்வேதாவும் நிர்மலா படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். குமாரும் வந்திருந்தான். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.குமார் எழிலிடம் பேசிக்கொண்டிருந்தான். என்னதான் என் அப்பாவை கொன்ற ஷெரினுக்கு ஆதரவாக வாதாடினாலும் அவர் ஒரு திறமையான வக்கீல் என்றான் குமார். நரேஷ் பொறுமையாக இரு என்று சிவா சொல்லிக்கொண்டிருந்தான்.நினைவஞ்சலி கூட்டம் நிறைவு பெற்றது. ஷிவானி மறுபடி இன்ஸ்பெக்டர் ஆக பதவியேற்றுக்கொண்டாள் . எழில் இனிமேல்தான் நீ அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் ஷிவானி என்றான். நிச்சயமா எழில் என்றாள். போலீஸ் நிர்மலா கொலையில் சம்பந்தபட்ட ஒருவனை என்கவுண்டர் செய்தது. மற்றொருவன் குமாருக்கு எதிராக சாட்சி சொல்ல தயாரானான்.
குமாரை கைது செய்ய ஏற்பாடுகள் தொடங்கின. அது அவ்வளவு சுலபமாக இல்லை. ஷிவானி பதவியேற்றவுடன் ஆனந்த் வெளிநாடு செல்லும் திட்டங்களை பார்வையிட்டாள். ஏதோ தப்பாக இருப்பதாக பட்டது.
கிரண் எழிலிடம் பேசினான். ஃபுல் செக்யூரிட்டி ஏற்பாடு செய்திருந்தான் எழில். ஆனந்த் என்ன தீவிரவாதியா இவ்வளவு செக்யூரிட்டி போட்டிருக்கிறாயே என்றான் கிரண். எனக்கு அவன் தண்டனை அனுபவிப்பது போல இருக்க வேண்டும் அதை விடுத்து சுற்றுலா பயணி போல அனுப்ப மனமில்லை என்றான். நீயும் உன்னுடைய எண்ணமும். நான் உன்னை பிறகு பார்த்துக்கொள்கிறேன் என்றான். ஆனந்த் தப்பிக்க ஒரு கண்டெய்னர் ஏற்பாடு செய்திருந்தான் கிரண் . ஹைதராபாத் தப்பி சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பி செல்ல திட்டம் போட்டிருந்தான். கண்டெய்னர் ஏர்போர்ட் வாசலில் தயாராய் இருக்கும்படி ஏற்பாடு செய்திருந்தான் கிரண். குமார் முன்ஜாமீனுக்கு ஏற்பாடு செய்ய கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தான். துப்பாக்கி அவனுடையது அல்ல என்றும் நிர்மலாவுக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனவும் சொல்லி இருந்தான். சாட்சியை மிரட்டி தனக்கு எதிராக பேச சொல்லுவதாக கோர்ட்டில் சொன்னான்.எழில் குமார் குற்றவாளியிடம் பேசியதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தான். கோர்ட் குமாரின் முன்ஜாமீனை நிராகரித்தது.
எழில் குமாரை அரெஸ்ட் செய்ய கடைசி நேர பணிகளில் இறங்கினான். குமார் அந்த சாட்சியை ஏதாவது செய்து விடுவானோ என எழில் நினைத்தான். அதனால் கூடுதல் கவனத்துடன் இருந்தான். ஷிவானி ஆனந்த் எப்படியும் தப்ப நினைப்பான் அதற்காக எதையும் செய்வான் கிரண் என நினைத்தாள். கிரண் திட்டமிட்டபடி கண்டெய்னர் வண்டியை முதல் நாளே கொண்டு வந்து நிறுத்தி விட்டான். கிரணை ஆனந்த் சந்தித்தான். எல்லா ஏற்பாடும் ஓகே தானே என்றான். ஷிவானியும், எழிலும் இடைஞ்சலாக இருக்கிறார்கள் ஆனால் ஆண்டு வேறொரு பலன் வைத்திருக்கிறேன் என்றான் கிரண். நரேஷ் ரொம்ப துடிப்பை இருக்கிறான் அவனை கடத்துவோம் என்றான் கிரண். ஒருபக்கம் நரேஷை மீட்பதில் எழில் கவனம் இருக்கும். நாம் நம்முடைய வேலையை முடித்து கொள்ளலாம் என்றான். ஜாக்கிரதை கிரண் . இம்முறை தப்பிக்காவிட்டால் அப்புறம் சிரமம் ஆகிவிடும் என்றான். மறுபுறம் குமார் அவனுக்கு எதிரான சாட்சியை சந்தித்து மிரட்டினான் . ஆனால் எழில் அந்த சாட்சிக்கு பக்கபலமாக இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குமார் அரெஸ்ட் ஆகும் தேதியும் ஆனந்த் வெளிநாடு செல்லும் தேதியும் ஒன்றாக இருந்தது. குமார் எழிலிடம் நேரிடையாக பேசினான்.நீங்கள் என்னை அரெஸ்ட் செய்யும் முன் யோசித்து கொள்ளுங்கள் அப்புறம் யாரையாவது இழந்து விட்டீர்கள் என என்னிடம் கேட்க கூடாது என்றான். நான் பயப்படவில்லை. முடிந்ததை செய்து கொள் என்றான் எழில். அந்த நாள் எப்படி இருக்க போகிறது என்பதை பற்றி கவலைப்படவில்லை. இன்னும் நிறைய விஷயங்கள் அவனுக்காக காத்துக்கொண்டிருந்தன. நரேஷ் அதற்காக தன்னை தயார்படுத்தும் பணியில் இறங்கி இருந்தான்.