தீப்தி, ரஞ்சித் மற்றும் ராம், தீபு உற்சாகமாக அந்த ட்ரிப்புக்கு தயாராயினர். எந்த தொந்தரவும் இல்லாமல் இந்த ட்ரிப்பை enjoy செய்ய வேண்டும் என ராம் நினைத்தான் . தீபு எதுவும் முக்கியமான கேஸ் வராம இருக்கணும் கடவுளே என வேண்டிக்கொண்டாள். இது என்ன ஹனிமூன் ட்ரிப்பா ?இவ்ளோ சந்தோசமா இருக்கே என தீப்தியை ரஞ்சித் கிண்டல் செய்தான். உன் கூட ட்ராவல் பண்ணணும்ங்கிறது என்னோட ரொம்ப நாள் ஆசை. என் favourite எழுத்தாளர் என்ன சொல்லி இருக்கார் தெரியுமா ? துணையோடு போங்கள்.. தனிமையை ரசியுங்கள்ன்னு .யார் அந்த எழுத்தாளர் எனக்கு தெரியாம .. எழுத்தாளர் யுவன் தான். ஓ யுவனா உனக்கவரை தெரியுமா என்றான் ரஞ்சித் ? ஒரு தடவை பார்த்திருக்கேன்.
அவர் இப்போ ரொம்ப எழுதறதில்லேன்னு சொன்னாங்களே . ஆமாம் அவர் மனைவி தற்கொலை பண்ணினதுலேர்ந்து அவரால எழுத முடியலே . சாரி . நீ எதுக்கு சாரி சொல்றே . எனக்கு ஏதாவது யுவன் புக்ஸ் குடுத்தா படிப்பேன்ல . கண்டிப்பா உனக்கு தரேன் என்றாள் தீப்தி. தீபு , நாம அவங்க கூட போனாலும் அவங்களை டிஸ்டர்ப் பண்ற மாதிரி எதுவும் பண்ணக்கூடாது . இப்போவே கண்டிஷன் போட ஆர்மபீச்சிடீங்களா ? இல்ல இல்ல ஜஸ்ட் சொன்னேன். எத்தனை மணிக்கு பிக்கப் பன்றோம்னு சொன்னாங்க ? ஷார்ப் நைட் 7 மணிக்கு.அவர்கள் கேரளாவுக்குதான் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்கள்.
எதிர்பார்த்தபடி மழை தூறலோடு கேரளா அவர்களை வரவேற்றது . ரஞ்சித்தும் , ராமும் ஒரு ரூமிலும் , தீபுவும், தீப்தியும் மற்றொரு அறையிலும் இருந்தனர் . நேரமாச்சு சுற்றி பாக்க போக வேண்டாமா என பரபரத்தான் ராம். அவங்க இன்னமும் தூங்கறாங்க. சரி தூங்கட்டும் நாம போய் டீ சாப்பிட்டு வருவோமா ?கண்டிப்பா என்றான் ரஞ்சித். டீ சாப்பிடும்போது எழுத்தாளர் யுவன் கேரளா வந்திருக்கார்னு சொன்னாங்க .அப்படியா நாம் தீப்திக்கு ஒரு surprise குடுப்போமா ? Shure தீப்திக்கு யுவன் அப்படினா உயிர் . அவர் தங்கியிருக்க இடம் இங்கிருந்து 3 ஹௌர்ஸ் ட்ராவல் பண்ணா போதும். தீப்தியும் , தீபுவும் ரெடி ஆகி இருந்தார்கள் . ஒரு அரைமணி நேரத்துல ரெடி ஆகிடுவோம் என்றார்கள் ரஞ்சித்தும் , ராமும். எங்களை விட்டுட்டு டீ சாப்பிட போனீங்களா ? என்றாள் தீப்தி. தீபு மையமாக சிரித்தாள்.
இன்னைக்கு மழை அறிக்கை என்ன சொல்லி இருக்காங்க . அவ்வளவா இருக்காதாம் . எல்லா பகுதியையும் நிதானமாக சுற்றி பார்த்தார்கள் . தீப்தி இன்னைக்கு என் வாழ்க்கையிலே மறக்க முடியாத நாள்ல இதுவும் ஒன்னு என்றாள் . நீ எதிர்பார்க்காத surprise ஒன்னும் இருக்கு . அதை நாளைக்கு சொல்றேன்.அடுத்து எங்க போறோம் ? என்றாள் தீபு. நாம தீப்திக்காக எழுத்தாளர் யுவனை மீட் பண்ண போறோம். அது அவளுக்கொரு surprise ஆஹ் இருக்கும்னு ரஞ்சித் சொன்னான் . நீயும் இந்த விஷயம் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே. மதியம் 3 மணிக்கு appointment குடுத்துருக்காரு . ஹோட்டல் பிளாசா ல ரூம் நம்பர் 207 ல தான் தங்கி இருக்காரு . தீப்தி ஏன் யாருமே எதுவும் பேச மாட்டேங்கறீங்க ?.கொஞ்சம் டயர்டா இருக்கோம் வேறொண்ணுமிலை. ஓ நாம எங்க போறோம் ? இங்க பக்கத்துல அருவி ஒன்னு இருக்கு அதை பாக்கத்தான் போறோம். சரி நானும் ஒரு குட்டி தூக்கத்தை போடுறேன் என்றவாறு ரஞ்சித்தின் தோளில் சாய்ந்தாள்.
ரஞ்சித் உற்சாகமாக இருந்தான் . பெரிய எழுத்தாளர் என்ற பந்தா இல்லாமல் வரவேற்றார். யுவன் என்னையெல்லாம் இன்னும் நீங்க ஞாபகம் வெச்சுருக்கீங்களா என்றார். அதெப்படி சார் உங்களை மறக்க முடியும் என்றாள் தீப்தி. காற்றின் கவிதைகள் புத்தகத்தில் கையெழுத்து போட்டு குடுத்தார். என் மனைவி ஞாபகம் எழுதினது. இன்னும் அவ ஞாபகம் மட்டும்தான் இருக்கு .மத்ததெல்லாம் மறந்து போயிடுது என்றார். சரி அப்போ நாங்க கிளம்பட்டுமா ? இருங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம் என்றாள் தீப்தி . எல்லோரும் குழுவாகவும் , தீப்தியும் , யுவனும் ஒரு சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். சென்னை வரப்ப அவசியம் எங்க வீட்டுக்கு வரணும் என தீப்தி சொன்னாள். அதுக்கென்ன வந்தா போச்சு சாப்பாடெல்லாம் நல்லா இருக்கும்ல என்று சிரித்தார். மனசே இல்லாமல் தீப்தி விடை கொடுத்தாள். தேங்க்ஸ் ரஞ்சித் ஐ லவ் யு சோ மச் என்று கட்டி கொண்டாள். இப்டினு தெரிஞ்சா நேத்தே வந்திருக்கலாம் என்றான் ரஞ்சித் . ராமுக்கும், தீபுவுக்கும் இந்த ட்ரிப் பெரிய relief ஆக இருந்தது . சென்னைக்கு வந்ததும் யுவனுக்கு நன்றி சொல்வதற்காக போன் பண்ணினான். போன் அவர் எடுக்கவில்லை .
மறுபடி அவரே கூப்பிட்டார் என்னப்பா பத்திரமா போய் சேர்ந்துடீங்களா ? ம்ம் வந்துட்டோம் சார். நீங்க எப்போ சென்னை வரீங்க? நாளைக்கு மறுநாள் என்றார். ராம் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் நான் சென்னை வந்துட்டு கால் பண்றேன் என்றார்.என்னவோ உறுத்தலாக இருந்தது .
யுவன் மனைவி இறந்தது தற்கொலையா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது . ஒருவேளை அதைப்பற்றி பேசத்தான் கூப்பிடுவாரோ என சிந்தித்தான். தீப்தியும் , ரஞ்சித்தும் கேரளாவில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்திருந்தனர். பலர் யுவன் கூட இருந்ததை பொறாமையுடன் ரசித்தனர். தீபு அவர் என்னை மீட் பண்றேன்னு சொல்லி இருக்கார் என்னவாயிருக்கும் ? எனக்கெப்படி சார் தெரியும் . அவர் மனைவி இறந்த நியூஸ் பத்தி மீடியாவுல பலர் விமர்சனம் பண்ணாங்க. அதுனாலதான் அவர் அப்செட் ஆகி எழுதுறதையே நிறுத்திட்டார் என்றாள் தீபு. ம்ம் வேற ஏதாவது ? மந்திரம் மாந்திரீகத்துல நம்பிக்கை உள்ள ஆளு அவங்க மனைவி . அவங்க ஒரு சாமியாரை அடிக்கடி கேரளா போய் பார்த்து வந்தாங்க .அவ்ளோதான் சார் நியூஸ் ல வந்திருக்கு. சார் அவங்களுக்கு குழந்தை இல்லை அதனாலேதான் அந்த சாமியாரை பாக்க போயிருக்கலாம்னு ஒரு நியூஸ் . இப்பவும் இவர் அந்த சாமியாரை பாக்கத்தான் கேரளா போயிருப்பாரோ ?ம்ம் இருக்கலாம் . தீபு மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. ரஞ்சித்துக்கு போன் பண்ணி நாளை மறுநாள் மீட் பண்ண சொல்லி இருக்கிறார் என்றும் முடிந்தால் வீட்டுக்கு அழைத்து வருகிறேன் என்றும் சொன்னான். கண்டிப்பா சார் அழைச்சுட்டு வாங்க என்றான் ரஞ்சித். சென்னை வந்தவுடன் மறக்காமல் ராமுக்கு கால் செய்தார் யுவன். நாளைக்கு மதியம் 3 மணிக்கு வந்துடுங்க ராம் . அவசியம் வரேன் சார் என்றான் . அவர் மனைவி பற்றிய செய்திகளை ஒரு பைலில் போட்டுக்கொண்டான். ரஞ்சித் தீபுவிடம் விஷயத்தை சொன்னான் . அவர் நம்ம வீட்டுக்கு வருவாராடா நிச்சயம் ராம் ட்ரை பண்றேன்னு சொல்லி இருக்கார்.
ராம் யுவன் வீடு காலிங் பெல் அழுத்தினான். வேலைக்காரர்தான் வந்து திறந்தார் . ராம் னு சொல்லுங்க . ஐயா மேல வர சொன்னாங்க . மேலே ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் . வாங்க ராம் . அன்னிக்கி வந்தப்போ ஒரு பொண்ணை அழைச்சுட்டு வந்தீங்களே அவங்க பேரென்ன தீப்தி. தீப்தி எனக்கொரு பொண்ணு இருந்தா அவ வயசுதான் இருக்கும் .எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ராம். ஆனா என் மனைவிக்கு உண்டு . இந்த பில்லி, சூனியம் இதையெல்லாம் எவ்ளோ சொல்லியும் கேக்காம அளவு கடந்த நம்பிக்கை அவளுக்கு. நரசிம்மன்னு ஒரு சாமியார் . நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேனே என்ன சாப்பிடறீங்க . ஜூஸ் வந்தது . நரசிம்மன் என் மனைவியை ஏமாத்தி நகைகளை வாங்கிட்டான். கடைசில என்ன நடந்துச்சோ தெரியல என் மனைவி ..குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார் யுவன். சார் அழாதீங்க அழாதீங்க என்று சமாதானப்படுத்தினான் ராம் .அவளை கொன்னுட்டான் சார் அந்த நரசிம்மன் . கொன்னு தூக்குல போட்டுட்டான் சார்