தீப்தி என்ன நடக்கிறதென யோசிப்பதற்குள் காரில் பலவந்தமாக ஏற்றப்பட்டாள். என்ன ராம் தீப்தியை காணோம்னு யோசிக்கிறியா ? எனக்கு வேற வழி தெரியல நீ அந்த போனை குடுத்துட்டு தாராளமா கூட்டிட்டு போலாம் என்றான் மாதவன் . சரி எங்க வரணும் சொல்லு . குறிப்பிட்ட இடத்துக்கு ரஞ்சித்துடன் போய் சேர்ந்தான் ராம். தீப்திக்கு ஒன்னும் ஆகியிருக்காதுல்லே ராம் சார் என்றான். ஒன்னும் பயப்படாதீங்க ரஞ்சித் தைரியமா இருங்க நான் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டுதான் அவனை மீட் பண்ணவே போறோம் .
வா ராம் சொன்ன மாதிரி வந்துட்டியே இவனும் வந்திருக்கானா ? உன் பேரென்னப்பா ? ரஞ்சித் . ஜாபர் friend தானே நீ . ம்ம் இப்போ என்ன வேணும் ..நீ அதை கொண்டு வந்து இருக்கியா? தரேன் மொதல்லே தீப்தியை விடு . நீ ஏன்பா அவசர படுற .. ரஞ்சிதே சும்மா இருக்காரு . நீ எதுவும் ட்ரிக்ஸ் பண்ணலையே . இல்லை அப்ப நீ குடுத்துட்டு போய்ட்டு வா . சரக்கு என் கைக்கு வந்ததும் நான் தீப்தியை அனுப்பறேன். நீ சொன்னபடி நான் எடுத்துட்டு வந்தேன் . எதிக்ஸ் எல்லாம் வில்லனுக்கு கெடையாதுப்பா . இப்போ முடிவா என்ன சொல்றே ? போய் அவன்கிட்ட இருக்க போனை தூக்கிட்டு வாங்கடா . ஒரு நிமிஷம் . பிரதீப் எங்கேன்னு யோசிச்சியா ?இந்நேரம் அவன் நேஹா அப்பாவை ரிலீஸ் பண்ணி போலீஸ் ஸ்டேஷன் போயிருப்பானு நெனைக்கிறேன் .டேய் பிரதீப் ... நீ தீப்தியை விடு உனக்கெதிரா பிரதீப் எந்த சாட்சியும் சொல்ல மாட்டான். இல்லே நீ ஜெயிலுக்கு போறது உறுதி.
தீப்தி நீ போய் கார்ல ஏறு . ரஞ்சித் நீயும் போ என்றான் . இப்போதான் ரிலீஸ் பண்ணிட்டேனே அத குடுத்துடேன். சரி இந்தா வாங்கிக்கோ என்றான். நீ இந்த இடத்தைவிட்டு போகமுடியும்னு உனக்கு தோணுதா . ஏன் பிரதீப் போலீஸோட இங்க வரணும்னு உனக்கு தோணுதா ? சரி நீ போ . ராம் நீ இப்போ தப்பிக்கலாம் ஆனா எப்பவுமே முடியாது . ம்ம் நீ செஞ்ச கொலைகளுக்கு தண்டனை அனுபவிப்ப . சும்மா ஒண்ணுமில்ல 10 லட்சம் வாங்கிட்டு ஏமாத்த பாத்தாங்க ஜாபரும்,செல்வமும் . சரி அதுக்காக அவங்க உயிரை எடுக்கற ரைட்ஸ் உனக்கு யார் குடுத்தா. நீ ரொம்ப பேசுற ராம். சரி வரேன் என்றான்.
தீப்தியும் , ரஞ்சித்தும் ராமுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். பிரதீபுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என சொன்னான் ராம் . பிரதீப் மாதவன் அடைத்து வைத்திருந்த குருமூர்த்தியை விடுதலை செய்தான். பதிலுக்கு குருமூர்த்தியிடம் சொல்லி பணம் வாங்கி கொடுத்தான் ராம். எனக்கேதும் ஆச்சுதுன்னா என் குடும்பத்தை நீங்கதான் காப்பாத்தணும் ராம் . சே சே அப்படியெல்லாம் நடக்காது .
நீங்க போனை தூக்கி குடுத்திட்டீங்களே . அது அவ்ளோ ஈஸி இல்லை பிரதர் இந்நேரம் அது வெடிச்சு தூள் தூளா போயிருக்கும் . மாதவன் கிட்டே கொடுக்கும் போதே அதுல சின்னதா ஒரு செட்டப் பண்ணித்தான் கொடுத்தேன். அப்ப அந்த சரக்கு இந்நேரம் நேஹா மூலமா போலீசுக்கு தகவல் போயிருக்கும் . இனிமே அந்த மாதவன் தொல்லை இருக்காது . அப்படி இல்லை இனிமேதான் அவனுக்கும் நமக்கும் மோதல் ஆரம்பம் . இப்போவே பிரதீப் சாட்சி சொல்லலாம்தான் ஆனா பிரதீப் பயபடுற மாதிரி அவன் குடும்பத்தை ஏதாவது மாதவன் செஞ்சுடுவான் . அதனாலதான் வெறும் மிரட்டலோட விட்டேன் .நீங்க இங்க இருக்க வேண்டாம் வெளிநாடு போய் சந்தோசமா இருங்க . அப்பாவை விட்டுட்டு என்னால இருக்க முடியாது என்றால் தீப்தி. அதுவும் சரிதான் . அவருக்கு என்னை விட்டா யாரு இருக்கா என்றாள். கல்யாணம் சீக்கிரம் நடக்கட்டும் என்றான் ராம்.
மறுநாள் குருமூர்த்தியை சந்தித்தான் ராம் ரொம்ப நன்றிப்பா . அவன் பண்ண கொடுமை கொஞ்ச நஞ்சமில்ல . நேஹா உன்னை பத்தி சொன்னா. உனக்கு எப்ப என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்னை கேளு . நிச்சயமா சார். பிரதீப்ப ஜாக்கிரதையா பார்த்துக்க வேண்டியது நம்ம கடமை . அவனோட அடுத்த டார்கெட் பிரதீப்பா கூட இருக்கலாம் . நீங்க சொல்றது சரிதான். அந்த சரக்கை பத்தி போலீஸ் கிட்ட சொல்லிட்டேன் அவங்களும் நடவடிக்கை எடுக்கறேன்னு சொல்லி இருகாங்க .நேஹா நீங்களும் எச்சரிக்கையாவே இருங்க என்றான் ராம். ராம் ஏற்கனவே ப்ரதீபிடம் ஜாபர்,செல்வம் கொலை நடந்த போது எடுத்த விடியோவை வாங்கியிருந்தான் . அதை வாக்குமூலமாகவே பிரதீப் சொல்லியிருந்தான் . மாதவனை குறைத்து எடை போடக்கூடாது என்பதில் ராம் கவனமாயிருந்தான்.
தீப்தி நெஜமாவே நீ பெரிய ஆபத்துலேருந்து மீண்டு வந்துருக்கே .. உண்மைதான் அவனுக கடத்துனப்போ திரும்ப உன்னை பார்ப்பேன்னு நினைக்க கூட இல்ல. இப்போ எதுக்கு அதை பத்தி பேச்சு . நீ சொன்னா ஓகே தான். கல்யாண வேலையெல்லாம் இருக்கு அதையெல்லாம் பாக்கணும் . நிச்சயமா உனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கா இல்லை business ஏதாவது பண்ணலாமா. மொதல்ல கிஸ் பண்ணலாம் அப்புறம் நீ என்ன சொல்றியோ அதை பண்ணலாம் என்றான்.
ராமுக்கு புது கேஸ் ஒன்று வந்திருந்தது டிவோர்ஸ் கேஸ். என் மனைவிக்கும் என் பிரண்டுக்கும் தொடர்பு இருக்கு சார் . எப்படியாவது அதை prove பண்ணனும் சார். இது ஒரு கேஸ் ஆஹ் சார்? நிச்சயமா இது ஒரு கேஸ்தான். இப்போ எனக்கு நீங்க இதை solve பண்ணி குடுக்கலேன்னா அவ என்னை கொன்னுடுவா சார். நீங்க அவங்களை சந்தேகப்படுற மாதிரி நடந்துக்கிட்டிங்களா ? இல்லை சார் . எப்படி தெரிஞ்சது . நானே பார்த்தேன் சார். சார் நீங்க சொல்றது நம்புற மாதிரி இல்லையே ? பேசாம சொல்வதெல்லாம் உண்மை ஷோ போங்க சார். இங்க ஏன் வந்தீங்க , நான் செத்துப்போயிட்டா ஏன் பையனுக்கு யாருமில்ல சார்.சரி உங்க நிலைமை புரியுது . நாளைக்கு உங்க மனைவி போட்டோ அந்தாளு போட்டோ எல்லாம் எடுத்து வாங்க. இப்பவே தரேன் சார். டிவோர்ஸ் வாங்க வேற ஏதாவது காரணம் சொல்ல கூடாதா ? நீங்களே சொல்லுங்க சார். சரி எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க . நான் யோசிச்சு சொல்றேன் . அவங்க ஏன் உங்களை கொல்வாங்கன்னு சொல்லறீங்க. எனக்கென்னவோ அப்டித்தான் தோணுது.உங்க பேரென்ன சொன்னீங்க ரகுராம் . ரகுராம் உங்களுக்கு ஒன்னும் ஆகாது தைரியமா போங்க .
ராமுடைய அசிஸ்டன்ட் தீபுவை அழைத்தான். நீ என்ன சொல்றே . அவங்க ஒண்ணா இருக்கறத நேர்ல பாத்தா அப்டியே ரெண்டு அறை விட்டு அங்கேயே முடிச்சு விட்டுட வேண்டியதுதானே அத விட்டுட்டு.. அவர் ரொம்ப பயந்த சுபாவம்.அதான் எனக்கும் பாவமாயிருக்கு . உங்களுக்கு கல்யாணம் ஆகியிருந்தா தெரியும் . அவரோட பையன நினைச்சாலும் கவலையா இருக்கு . இந்த கேஸ் எடுக்கலாம் சார் . அவங்க மனைவி பேரென்ன ராஜி . எதுக்கும் அவங்ககிட்டயும் விசாரிக்கலாமா ? வேண்டாம் தீபு அது பெரிய பிரச்னை ஆயிடும் .ரகுராமிடமிருந்து போன் வந்தது. என்ன சார் முடிவெடுத்தீங்க . உங்க கேஸ் எடுத்துக்குறேன் சார். இன்னைக்கி சாயங்காலம் மீட் பண்ணுவோம் என்றான் ராம். ரொம்ப நன்றி சார். உங்களுக்காக இல்லே உங்க பையனுக்காக இந்த கேஸ் எடுக்கறேன். பிரதீபுக்கு போன் செய்தான் ராம். என்ன பிரதீப் எப்படி இருக்கீங்க.. இன்னும் எனக்கு பயமாத்தான் இருக்கு சார் . அதெல்லாம் ஒன்னும் ஆகாது குருமூர்த்தி சாரும் நேஹா மேடமும் பேசுனாங்க . என்ன சொன்னாங்க நீங்க செஞ்சது மறக்க முடியாத உதவின்னு சொன்னாங்க . சரி இன்னொரு கால் வருது அப்புறம் கூப்பிடுறேன் .. ரகுராம்தான் சார் என்னை யாரோ ரெண்டு பேர் follow பன்றாங்க சார். பைக் லதான் வராங்க சார். சார் நீங்க எங்க இருக்கீங்க ? சொல்லுங்க என்பதற்குள் போன் துண்டிக்கப்பட்டது .