கார்த்திக்கை அவசரமாக ஆம்புலன்ஸ் இல் ஏற்றி அழைத்து கொண்டு போனார்கள் . சுட்டது யார் என்று தெரியவில்லை . தீப்திக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. கார்த்திகை சுட்டது ரஞ்சித்தாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அவனுக்கு அவ்வளவு துணிச்சல் எல்லாம் கிடையாது .போலீஸ் வந்து விசாரித்தார்கள் . கார்த்திக் பேசும் நிலையில் இல்லை. ஹாஸ்பிடலில் இருந்து வெளியே கேன்டீனுக்கு வந்து ரஞ்சித்துக்கு போன் பண்ணினாள் . எங்கடா இருக்கே உன் வேலையா இது ? சே சே.. அதானே பார்த்தேன் நீயாவது எனக்காகவாவது ? என்றாள். அவசரப்படாதே தீப்தி .நான் இப்போ சென்னைல இல்லை . காஞ்சிபுரத்துல இருக்குற என் friend வீட்டுக்கு வந்திருக்கேன் . போலீஸ் என்னை தேடலை இருந்தாலும் .. கார்த்திக் எப்படி இருக்கான் ?அவன் இன்னும் ICU ல தான் இருக்கான் . பாத்து ஜாக்கிரதை தீப்தி . நீ மொதல்ல பத்திரமா இருடா .
என்னதான் கல்யாணம் தற்போதைக்கு நின்றிருந்தாலும் suppose தீப்தியை சுட்டிருந்தால் நினைக்கவே பயமாய் இருந்தது . எப்படியும் அவன் யாரென கண்டுபிடிக்க வேண்டும் . தீப்தியின் அப்பா ஹரி மிகுந்த பதட்டமாய் இருந்தார். உங்களை மீறி நான் யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் பா என்றாள் தீப்தி. நீங்க வீட்டுக்கு போங்க . நான் பாத்துக்குறேன் என்றாள் . கார்த்திக்கின் அப்பாவும், அம்மாவும் அங்கேயே இருந்தனர் . தீப்தி அவர்களை ஆறுதல் படுத்தினாள்.
என்னடா தூங்கிட்டியா? இல்ல என்னவோ போல பேசுற .. உன்னை நெனைச்சு கஷ்டமாயிடுச்சு . என்னாலதான் உனக்கு கஷ்டம் என்றான் . ஒரு கஷ்டமும் இல்லை நீ எங்க அப்பாவை கன்வின்ஸ் பண்ணு . அடுத்த நிமிஷம் நான் கட்டிக்க தயார் . சரி தீப்தி உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? அப்டி யார் மேலயும் இல்ல . துப்பாக்கியை அங்கேயே போட்டுட்டு ஓடிருக்கான். வீடியோல ரெகார்ட் ஆயிருக்கான்னு பாக்கணும் . மொதல்ல அவன் யாருன்னு கண்டுபிடிக்கணும் . அதுவும் சரிதான்
இரண்டு நாட்களில் போலீஸ் ஒரு வெளிமாநிலத்தவரை பிடித்துக்கொண்டு வந்தது . கார்த்திக் வேலை பாக்குற கம்பெனில யூனியன் problem . அதுல கொஞ்ச பேரை கார்த்திக் வேலைய விட்டு நீக்கி இருக்கார். அதுக்காக அவரை சுட்டிருக்காங்க . துப்பாக்கிதான் எங்க இருந்து கிடைச்சதுன்னு தெரியல . ரொம்ப நன்றி இன்ஸ்பெக்டர் நாங்க என்னவோ ஏதோன்னு பதறிட்டோம் .
தீப்தி விஷயத்தை ரஞ்சித்திடம் சொன்னாள். அவன் இதுக்கெல்லாம் சுடுவாங்களா என்றான் . நாளைக்கு அப்பாகிட்ட வந்து பேசு . உன்னை breakfastக்கு வர சொன்னார் . எதுக்கு இப்போ திடீர்னு . என்னவோ அவரேதான் சொன்னார். கார்த்திக் இன்னும் ஹாஸ்பிடல்ல தான் இருக்கான் .சரி நாளைக்கு வந்து உங்க டாடிய மீட் பண்றேன் . சொதப்பிடாத நல்லா டிரஸ் பண்ணிட்டு வா . காலை உணவுக்கு சரியாய் ஆஜராகி விட்டான் . தீப்தி ஜாகிங் போயிருக்கா. நீங்க உக்காருங்க . என் பொண்ணை காதலிச்சிருக்கீங்க ஆனா வாழ்க்கை வேற . உங்களால என் பொண்ணை சந்தோஷமா வெச்சிக்க முடியுமா ? நான் உங்களுக்கு வெளிநாட்டுல நல்ல சம்பளத்துல வேலை வாங்கி தரேன் போறீங்களா ? வேணாம் சார். நான் ஒண்ணுமில்லாதப்பவும் விரும்புன தீப்திதான் எப்பவுமே எனக்கு பெஸ்ட் .அப்ப நீங்க என் பொண்ணை விட்டு போக மாட்டீங்க ..நிச்சயமா சார். நான் கார்த்திக்கு வாக்கு குடுத்திட்டேன் என்னால அத மீற முடியாது . நீங்க இன்னும் டைம் எடுத்துக்குங்க சார். நான் தீப்திக்காக வெயிட் பண்றேன் . அப்பா என்ன சொன்னாரு ஏன் நீயே கேக்க வேண்டியதுதானே .. ப்ளீஸ் சொல்லேன் அவருக்கு இன்னும் முழு மனசு வரலே . கார்த்திக்கு promise பண்ணி இருக்காராம்.சரி விடு அவர் இவ்ளோ தூரம் இறங்கி வந்து பேசுனதே பெரிய விஷயம் .கார்த்திக்கை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள் . தீப்தி போய் பார்த்து வந்தாள். கார்த்திக் மனதளவில் சோர்ந்து போயிருந்தான் . என்னால பேச முடியல இருந்தாலும் சொல்றேன் . நான் நிச்சயம் உன் கழுத்துல தாலி கட்டுவேன் என்றான் . தீப்திக்கு அவன் மேல் அனுதாபம் எழுந்தது .
ஜாபரை ரெண்டு நாளாய் காணவில்லை . எங்கெங்கோ விசாரித்து பார்த்தான் பலனில்லை . சேர்ந்தாற்போல் வார விடுமுறை வந்ததும் ஊருக்கு கிளம்பினான் . தீப்தியிடம் இந்த விஷயத்தை சொன்னான். ஜாபர் எங்கேயும் போயிருக்க மாட்டான் ஊர்க்குத்தான் போயிருப்பான் . நீ வேணா போய் பார்த்துட்டு வா என்றாள். ஊர் பயணம் என்றதும் அவனுக்கு எத்தனை நினைவுகள் . ஜாபரும் அவனும் அடித்த கூத்துக்கள் நினைவுக்கு வந்தன . அடுத்த முறை தீப்தியையும் அழைத்து போக வேண்டுமென எண்ணினான். திடீரென இனம் புரியா பயம் அவனை தொற்றிக்கொண்டது . கார்த்திக் ஏதாவது பிளான் பண்ணி கல்யாணம் செய்துவிடுவானோ ?. ஜாபர் காணவில்லை என்ற செய்தி ஊர் முழுக்க பரவி இருந்தது . கடந்த வாரம் அவசரமாக ஊருக்கு வந்த ஜாபர் திரும்ப சென்னைக்கும் போகவில்லை.போனும் சுவிட்ச் ஆப் செய்து கிடக்கிறது . தனக்கு ஏன் யாரும் போன் செய்யவில்லை என கோவப்பட்டான் . போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது .
போலீஸ் விசாரித்தார்கள் .காணாமல் போய் நான்கு நாட்களாகிறது சார் எப்படியாவது கண்டுபிடியுங்கள் என்று கெஞ்சினான். உன் கூட தான் தங்கியிருந்தான் உனக்கு தெரியாம எங்கடா போயிருப்பான் .ஜாபர் காணவில்லை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது . அவன் மேல் கிரிமினல் வழக்கு எதுவும் இல்லை . அந்த கோணத்திலும் விசாரிக்கப்பட்டது . 5 தனிப்படை அமைத்து தேடிய போதும் பலனில்லை.தீப்தியிடம் பேசி இரண்டு நாட்களாகிறது . இன்னும் ஜாபர் கிடைக்கவில்லை . ஜாபரின் போன் கிணற்றருகில் கிடந்ததாக சொன்னார்கள் . கிணற்றில் இறங்கி தேடவும் செய்தார்கள் . அவனுடைய போனை வாங்கி பார்த்தான் . அதில் எந்த தகவலும் இல்லை. நாம் இங்கேயே சுற்றி பார்க்கிறோமே சென்னை ஆபீஸ் அவனை எங்காவது அனுப்பி விட்டார்களா என விசாரித்தான் . சென்னை ஆபிஸ் அவர் வேலைய விட்டுவிட்டதாக சொன்னார்கள் . இது ரஞ்சித்துக்கு அதிர்ச்சியாக இருந்தது . தீப்திக்கு போன் செய்தான். இன்னும் கிடைக்கல தீப்தி . friends குரூப்ல ஷேர் பண்ணவா என்றாள் . சரி பண்ணு . நான் அப்புறமா கால் பண்றேன் இப்போ போலீஸ் ஸ்டேஷன்லதான் இருக்கேன் என்றான்.
கார்த்திக் ஓரளவுக்கு நடமாட ஆரம்பித்து விட்டான் . தீப்தி அவனிடமும் விஷயத்தை சொன்னாள். மறுநாள் ஜாபர் உடல் அதே கிணற்றில் மிதந்தது . போலீஸ் யாரோ ஜாபரை கடத்தி வச்சிருந்திருக்காங்க . நேத்துதான் கொன்னு கிணத்துல போட்டிருக்காங்க . ரஞ்சித்துக்கு வேதனையாக இருந்தது . பணம் கேட்டு மிரட்டவும் இல்லை . பிறகு என்ன காரணத்துக்காக கொன்றார்கள் என்று புரியவுமில்லை . முன்பகையாக இருக்குமோ என பலவாறு யோசித்தான். அப்போதுதான் unknown நம்பரில் இருந்து கால் வந்தது. பொருளை கொடுக்கலேன்னா அடுத்த உயிர் போயிடும் . எந்த பொருளு ? ஜாபருக்கு தெரியும் . அவன்தான் செத்துட்டானே . போன் துண்டிக்கப்பட்டது. என்னவாக இருக்கும் ? அந்த நம்பரை போலீசில் குடுத்தான். மிரட்டல் வந்ததாகவும் சொன்னான் . போலீஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை . தீப்தி போன் செய்தாள். தனக்கும் அதே போல் ஒரு கால் வந்ததாக சொன்னாள் . நீ எதுக்கும் ஜாக்கிரைதையா இரு தீப்தி . நான் போலீஸ்கிட்டே inform பண்ணியிருக்கேன் . ஜாபர் அக்கௌன்ட் செக் செய்தான் இறப்பதற்கு ரெண்டு நாள் முன்பு 10 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது . ரஞ்சித் உறைந்து போனான். மறுபடி unknown நம்பர் கால் வந்தது . பொருள் கிடைக்கணும் அதுக்கு நீதான் பொறுப்பு என்றது குரல் .எந்த பொருள் என்பதற்குள் கால் cut ஆகிவிட்டது . இவனுக்கு ஏதோ ஒரு பிரச்னையில் தான் வசமாக சிக்கிவிட்டதாக தோன்றியது .