Sivavin Malare Mounama.. - 17 books and stories free download online pdf in Tamil

சிவாவின் மலரே மௌனமா.. Part 17


Hi,

நான் உங்கள் சிவா,
Please இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..

அடுத்த நாள் காலை எங்களுக்கு ஒரு நல்ல விடியலாக விடிந்தது. நான் கண்முழித்த படியே Bed ல் என் கைகளால் மலரை தேட Bed ல் அவள் இல்லை.

நான் எழுந்து Wash room போய் Freshup ஆகி குளித்து விட்டு வர, மலர் மாடியேறி கையில் காஃபி Tray டன் வர.. அவளைப் பார்த்து அசந்து போனேன். அப்பப்பா.. மலர் தலை குளித்து கூந்தலை ஈரத் துண்டால் கட்டி, Simple காட்டன் சேலை யில், அப்போதுதான் குளித்ததால் நெற்றியில் கழுத்தில் தண்ணீர் வடிய.. அழகாக கன்னக்குழி விழ சிரித்து கொண்டே வர.. நான் பார்த்து தலை கிறு கிறுத்து போய் அப்படியே அவளையே பார்த்து கொண்டே இருந்தேன்.

என்னடா என்னை அப்படி பார்க்கிற?

ஐயோ மலர் எப்படி இருக்க தெரியுமா? அதுவும் குளிச்சி முடிச்சி அதுவும் இந்த Saree யில அப்படியே அழகா மங்களகரமா இருக்க. பார்க்க பார்க்க பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.

போதும் வர்ணிச்சது இந்தா முதல்ல காஃபி யை குடி.

அப்பறம் தான் காஃபி. முதல்ல Fresh ஆ உன் கிட்டேயிருந்து Lips kiss தான். என்று அவளை அள்ளி அணைத்து முத்தமிட மலரும் என் உதட்டை கவ்வினாள்.
இருவரும் பரஸ்பரம் ஆனந்தத்தில் திளைத்து ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொண்டோம்.

காஃபி குடித்து முடித்த பின் மலர், என்னிடம் ரவி, காலைல ஏதோ எனக்கு தெரிஞ்ச உப்புமா தேங்காய் சட்னி பண்ணியிருக்கேன். கொஞ்சம் கீழே வந்து கஷ்ட்டப்பட்டு சாப்பிட்டுடு. நல்லா இல்லைனா என்னய குறை சொல்லாதே.

குறையா? மலர் இது எத்தனை நாள் ஏக்கம் தெரியுமா? நமக்கு கல்யாணம் ஆகி… நீ இந்த வீட்டுக்கு வந்து. உன் கையால சமைச்சி சாப்பிடனும்னு இப்படி எத்தனை நாள் நான் கனவு கண்டிருக்கேன் தெரியுமா? அதெல்லாம் நிஜமாகி, அதை அனுபவிக்கும் போது வாவ் Great Feeling.
சரி வா நாம இரண்டு பேரும் Tiffin பண்ணிட்டு, வெளியே போய் இன்னைக்கு Full ஆ என் மலர் கூடத்தான் சுத்தப்போறேன். இன்னைக்கு உன்னோட Day. உனக்கு நிறைய Gifts.. Shopping எல்லாம் உனக்காகத்தான்..

மலர், சிரித்து கொண்டே என்னை இறுக்க கட்டி அணைத்து முத்தமிட, கீழே Dinning table க்கு இருவரும் சென்றோம்.

வெளியே Climate நன்றாக இருந்தது. இரண்டு நாள் பெய்த மழைக்கு சில் லென்று இருந்தது. அவ்வப்போது சிறு சிறு தூரல் விழுந்தாலும் வானம் கொஞ்சம் வெளுத்து, ஆங்காங்கே மழை மேகங்கள் தென்பட்டன.
முதலில் Mall க்கு போய் மலருக்கு Shopping பண்ணோம். Costly Handbag, Smart Watch Dresses எல்லாம் மலர் வேண்டாம் என்று சொன்னாலும் அவளை Convince பண்ணி ஒத்துக்க வைத்தேன். அவள் ஆசைக்கு எனக்கும் T Shirt வாங்கி கொடுக்க சந்தோஷமாக Accept பண்ணினேன்.

Launch முடித்து விட்டு ஒரு நல்ல Theatre ல் ‌Movie போனோம். Executive Chair ல் இருவரும் படுத்து கொண்டு கைகளை பிணைத்து கொண்டு அவ்வப்போது என் மார்பில் மலர் தலையை வைத்து படுத்துக் கொண்டு செமயாக Enjoy பண்ணிக் கொண்டு Movie பார்த்து விட்டு, வழக்கம் போல எங்கள் Favourite Coffee Shop போக.‌‌. நாங்கள் முதன் முதலாக சந்தித்தது, சண்டை போட்டது, முதல் முத்தம் எல்லாம் இருவருக்கும் ஞாபகம் வர.. நான் மலரை Tease பண்ண.. இருவரும் அதை நினைத்து நினைத்து சிரித்து கொண்டோம். பின் நான் மலரிடம் மெதுவாக Ahmadabad Branch Matter எல்லாம் சொல்ல ஆரம்பித்து நீனா பற்றி சொல்லி,

மலர், நம்ம Matter எல்லாம் அவளுக்கு தெரியும். ஏன்னா நான் உன் நினைவாவே சோகமா அங்க இருந்தப்ப நீனா Guess பண்ணி கண்டு பிடிச்சிட்டாள். So, நான் நம்ம விஷயம் எல்லாமே நீனா என்கிட்ட சொல்லிட்டேன். அன்னைக்கு நீனா தான் என்னை Console பண்ணாள்.

மலர் நான் சொல்ல சொல்ல கண்கள் விரிய என் கைகளை தன்னுடன் பிணைத்துக் கொண்டு ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

நம்ம லவ் Success ஆகி நீ Marriage க்கு ஒத்துகிட்டினா, நீனா உடனே அவளுக்கு என்னை inform பண்ண சொன்னாள். அவ ரொம்ப Happy யா Feel பண்ணுவா. So, நான் இப்ப ஃபோன் போட்டு பேசிட்டு தர்றேன். நீயும் அவ கிட்ட பேசு.
மலரும் Accept பண்ண, நான் நீனாவிற்கு ஃபோன் பண்ணி Office Matter, மத்த எல்லா Matter ம் Casual ஆக பேசிவிட்டு மலர் Matter எதுவும் பேசாமல்.. நீனா இப்ப எனக்கு ரொம்ப வேண்டியவங்க பேசறாங்க Line ல இரு என்று சொல்லி மலரிடம் ஃபோனை கொடுத்தேன்.

மலர் ஃபோனை வாங்கி Hi, Neena I am Malar Speaking என்று Introduce பண்ணி கொண்டு Conversationயை English ல் ஆரம்பிக்க.. நீனாவும் மலரும் More than Half an Hour பேசிக்கொண்டே இருந்தார்கள். பேசும் போது நடு நடுவில் மலர் Face Reaction பார்க்க அழகாக இருந்தது. போனில் சிரித்து கொண்டே என்னை அவ்வப்போது ஆச்சரியமாக பார்ப்பது, Smile பண்ணுவது போல செய்து கொண்டே இருந்தாள். எனக்கு Wait பண்ணி போதும் போதும் என்றாகி விட்டது. கடைசியில் முடிந்ததும்
நான் மலரிடம், என்ன மலர் இவ்வளவு நேரம் பேசுன?

எல்லாம் உன்ன பத்தி தான். அங்க போய் என்னென்ன வேலை பண்ணிவச்சிருக்க, என்று Gap விட,

எனக்கு பக் கென்றிருந்தது.

எல்லாம் உன்னோட புராணம் தான். உன்ன மாதிரி ஒரு Gem கிடையாதாம். அங்க போய் என்னையே நினைச்சுகிட்டு சோகமா இருந்தியாம். நான் ரொம்ப Lucky, ரவி மாதிரி ஒரு Fiance கிடைக்க அப்படி இப்படி னு..

எனக்கு அப்போது தான் Relief ஆக இருந்தது. நல்ல வேளை..

அப்பறம் அப்படியே நாயுடு Uncle, மல்லிகா விற்கும் ஃபோன் பண்ணி பேசினோம். அவங்க இரண்டு பேருக்கும் பயங்கர சந்தோசம். மல்லிகா எனக்கு wishes சொல்லி இரண்டு பேரையும் அங்க வீட்டுக்கு வரச் சொன்னாள்.
மலரும் மல்லிகா வும் ரொம்ப நேரம் ஃபோனில் பேசிக் கொண்டே இருந்தார்கள். எனக்கு எல்லாம் சுபமாக தெரிந்தது. இனி அம்மா கல்யாணி இரண்டு பேர்தான். Already அம்மா விற்கு ஒரு மாதிரியாக மலரைப் பற்றி நான் இஷ்டபடுவதை பற்றி சொல்லியிருந்தேன். இப்போது மலர் ஓகே சொன்னதினால் Confirm ஆக சொல்லி Convince பண்ண வேண்டும்.

Evening கோவில் போய் விட்டு கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். மலர் என்னிடம் ரொம்ப வருஷம் கழிச்சு தான் கோவிலுக்கு வருவதாக வும், அதுவும் தன் வாழ்க்கையில் நல்லது அடுத்தடுத்து நடப்பதால் இனி அடிக்கடி கோவிலுக்கு வரவேண்டும் என்றாள்.

Dinner நல்ல ஒரு Restaurant போய் சாப்பிட்டு விட்டு, மலரிடம்
மலர் இன்னைக்கு Night ம் என் கூடவே Stay பண்ணேன் ப்ளீஸ் என்றேன்.

ரவி எனக்கும் ஆசையா தான் இருக்கு உன் கூடவே இருக்கனும் னு. ஆனா நாளைக்கு Early Morning அம்மா வும் கல்யாணி யும் Chennai லிருந்து Return ஆகிறாங்கனு சொல்ற. அவங்க வரும் போது நான் அங்க வீட்ல இருந்தா நல்லா இருக்காது புரிஞ்சுக்கோ.

சரி மலர் இப்ப என் கூடவே கொஞ்ச நேரம் இருந்துட்டு, Night ஒரு Eleven O Clock போல உன்னய Drop பண்றேனே ப்ளீஸ்.

சிரித்துக்கொண்டே ஓகே என்றாள்.

வீட்டுக்கு வந்து ஹாலில் மலர் மடியில் நான் தலைவைத்து படுத்து கொள்ள, அவள் என் தலையை கோதியபடியே எனக்கு முத்தமாக கொடுத்து கொண்டிருந்தாள். இதைவிட வேறு சொர்க்கம் ஏதும் உண்டா என்று எனக்கு தோன்றியது. மலரை ஆரத்தழுவி முத்தமாக கொடுத்து கொண்டே, என் கைகளால் மலரின் உடம்பெல்லாம் சுற்றி, பிண்ணி, படர்ந்தவாறு இருந்தேன். மலரும் சளைக்காமல் எனக்கு முத்தமாக கொடுக்க, இருவரும் ஆனந்தமாக இருந்தோம்.

மலரை அவள் Flat Main Gate ல் Drop பண்ணி விட்டு அங்கேயே நின்று மலரையே நான் பார்க்க.. Bye சொல்லி விட்டு, இரண்டு அடி முன்னே போனவள் என்ன நினைத்தாளோ திரும்பி ஓடி வந்து என்னை கட்டி கொண்டு ரவி, என்னால உன்னை விட்டு போக மனசே வரலை. என்னால முடியலை. நாளைக்கே வேணாலும் என்னய கல்யாணம் பண்ணிக்கோ. உன்னய விட்டு பிரிஞ்சு என்னால இருக்க முடியாது என்று தழுதழுக்க..

அவளை அப்படியே அணைத்து, மலர் இதைத்தான் நான் எப்போதிலிருந்தோ உன்கிட்ட சொல்லிகிட்டிருந்தேன். இன்னும் கொஞ்சம் நாள் பொறுத்துக்கோ. அடுத்த முகூர்த்தத்திலிருந்து நீ என்னவளா ஆயிடுவ. கவலையே படாதே என்றேன்.

அடுத்த நாள் Evening மலரை வீட்டுக்கு வரச் சொல்லி இருந்தேன். அதற்கு முன்னாடியே அம்மாவிடமும் கல்யாணி யிடமும் நான் மலரை லவ் பண்ணுவதை சொல்ல.. இருவரும் இந்த Matter யை நாங்கள் எப்பவோ எதிர் பார்த்தோம் என்று எனக்கு அதிர்ச்சி அளித்தார்கள்.
ஆனால் அம்மா முதலில் வயது வித்தியாசம்.. சித்தி முறை என்று தயங்கினாலும் கல்யாணி எனக்கு Support பண்ணி பேச.. அம்மா வும் ஒத்துக் கொண்டார்கள்.

இப்ப என்ன.. என் பையன் ஆசைப் படறான். மலர் மாதிரி ஒரு நல்ல பொண்ணு எனக்கு மருமகளாக வந்தால் எனக்கு சந்தோஷம் தான். ஆனால் பாவம் மலர் சின்ன வயசிலேயே நிறைய கஷ்ட்டம் அனுபவிச்சிட்டா.. மலர் ரொம்ப நல்ல பொண்ணு னு அம்மா Certificate கொடுக்க.. நான் செம Happy.

Evening மலர் Tension டன் எங்கள் வீட்டிற்கு வர, அம்மா அவளை வரவேற்று, அணைத்து குங்குமம் எல்லாம் வைத்து விட்டு எங்கள் பாரம்பரிய நகைகளை மலருக்கு போட்டு விட்டு, மலர் இனி உனக்கு நான் அக்கா இல்லை அத்தை புரியுதா என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட, மலர் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீரில் மிதந்தாள்.

கல்யாணி, மலரிடம் இனிமே நான் மலர் சித்தி னு கூப்பிடாமல் மலர் அண்ணி னு கூப்பிடனும். ஆனால் எங்க மலர் அண்ணி எவ்வளவு அழகு. ஏன் அண்ணி எப்படி இவனுக்கு ரவிக்கு உடனே ஓகே சொன்னிங்க? ஒரு 6 மாசம் அலைய விட்டிருக்கலாம்ல..

நான் உடனே, ஏய் வாலு, நீ வேற, மலர் என்னய 1 வருஷமா அலைய விட்டாள். தெரியுமா உனக்கு?
போதும் டா சாமி..

எல்லோரும் மகிழ்ச்சியாக சிரிக்க வீடே கலகலப்பாக மாறியது.

நிறைவு.


முடிவாக..

நானும் மலரும் நந்தாவும் ஈரோடு போய் கவிதா அம்மா வை பார்த்து பேசி நந்தா கவிதா Marriage Fix பண்ணோம்.
எனக்கும் மலருக்கும் அடுத்த மாதமே எல்லோர் முன்னிலையிலும் நாயுடு Uncle மலர் அப்பா ராகவன் ஆசிர்வாதத்துடன் திருமணம் இனிதே நடந்தது. நீனா வந்து Marriage ல் கலந்து கொள்ள எல்லோருக்கும் சந்தோஷம். இப்போது மலர்விழி..
மலர்விழி-ரவிகுமார்.

நான் Ahmedabad Project Success பண்ணதில் எனக்கு Office ல் Promotion with Increment கிடைக்க, அதுவும் மலர் என் மனைவியாக வந்த நேரம்.. Double சந்தோஷம்.

அடுத்த இரண்டு மாதத்தில் நந்தா - கவிதா Marriage ம் இனிதே நடந்தேறியது.

சொன்னபடி ராம் Transfer வாங்கி கொண்டு Kerala பக்கம் போய்விட, எங்களுக்கும் நிம்மதி. மலர் Office ல் எல்லோருக்கும் நிம்மதி.

இனிதே நிறைவடைந்தது.

மற்றுமொரு நல்ல தொடரில் சந்திக்கும் வரை..
நன்றி.. வணக்கம்.

உங்கள் சிவா.

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
Please mail to siva69.com@gmail.com

பகிரப்பட்ட

NEW REALESED