Sivavin Malare Mounama.. - 8 books and stories free download online pdf in Tamil

சிவாவின் மலரே மௌனமா.. Part 8

Hi, நான் உங்கள் சிவா..
முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.. please..

மலர் மறுபடியும் ரவி, என் கண்ணைப் பார்த்து சொல்லு? Saturday நீயும் உன் Friend ம் எங்க போனிங்க?

எனக்கு வேர்த்து விறுவிறுத்தது, பின்னந்தலை பிடரி வேர்வையில் ஈரமானது. மலருக்கு நானும் நந்தாவும் அவள் கிராமத்திற்கு போனது தெரிந்து விட்டது. இனி எதையும் மறைச்சி லாபம் இல்லை. எல்லாத்தையும் சொல்லிடறது Better.

மலர் அது வந்து..

என்னோட கிராமத்துக்கு என் வீட்டுக்கு போயிருந்திங்க அதானே.

ஆமாம் மலர் வந்து அது.. உனக்காக

சரி அங்கே யாரை Meet பண்ணிங்க? என்ன பேசுனிங்க.?

நாயுடு Uncle மல்லிகா..

ஓ அவங்களை Meet பண்ணிங்களா? என்ன சொன்னாங்க?

என்ன மலர் நீ என்னய ஏதோ நான் பெரிய Crime பண்ண மாதிரி விசாரிக்கிற? இப்ப என்ன உனக்கு ஏன் எதுக்கு அங்க போனேன்? யாரை Meet பண்ணேன்? என்ன பேசுனோம் அதானே தெரிஞ்சிக்கனும்.

ஆமாம். ஏன்னா அதுல சம்பந்தப்பட்டது நான்.

எல்லாவற்றையும் ஒன்று விடாமல் நான் சொல்லி முடிக்க..

மலர் கண்களில் கண்ணீர். அதுவும் மாதவி யை பற்றி சொல்லும் போது ரொம்ப Emotional ஆனாள்.

நான் மலரிடம், மலர் இது எல்லாமே உனக்காகத்தான் உனக்கு மனசில என்ன problem? அந்த Root Cause கண்டு பிடிக்க தான் இத்தனை பிரயத்னம்.

ஓ கண்டு பிடிச்சிட்டிங்களா? என்று நக்கலாக சிரித்தபடியே கேட்க

எனக்கு மலரின் சிரிப்பு இன்றைக்கு வேறு விதமாக தெரிந்தது. இந்த மாதிரி Serious ஆக மலரை நான் எப்போதும் பார்த்ததில்லை.

இல்ல மலர் ஆனா உன்னோட அக்கா மாதவி சாவுல அந்த கதிருக்கு ஏதோ சம்பந்தம்..

டேபிளில் கையை வைத்து தலையை குனிந்து இருந்தவள், கதிர் பேரை கேட்டவுடன் டக் கென்று நிமிர்ந்து என்னை பார்த்து அந்த படுபாவி கதிர் அவன், என் அக்கா இல்லை.. இல்லை.. என்னோட அம்மா மாதிரி என்னய பாசமா பார்த்துகிட்ட மாதவி வாழ்க்கையை நாசம் பண்ணவன் அவன் பேச்சையே எடுக்காதே. அவனைப் பத்தி என் கிட்ட சொல்லாத. அவனை நினைச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு. குமட்டிட்டு வருது.

நான் மெதுவாக அவள் கையை பிடித்து ஆறுதலாக, சித்தி ப்ளீஸ் Tension ஆகாத என்று சொல்லும் போது மலரின் உடம்பு சூடாகவும் ஒரு விதமாக உடம்பு அதிர்வில் இருப்பதும் எனக்கு தெரிந்தது.

கொஞ்ச நேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மலர் முதலில் Normal ஆகட்டும் என்று Wait பண்ணேன்.
ஆனால் மலர் நார்மல் ஆன மாதிரி தெரியவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து நானே மறுபடியும் சித்தி இதெல்லாம் உனக்காகத்தான், நீ எதுனால மனசு கஷ்ட்டப்படுற னு தெரிஞ்சிக்கலாம்னுதான் நான், மல்லிகா, நாயுடு Uncle எல்லாரும் போராடுறோம். அது தெரிஞ்சா நாம Easy யா Solve பண்ணிடலாம்.
கொஞ்சம் சொல்லேன் அப்ப உன் அக்கா மாதவி நெருப்புல எரிஞ்சப்ப, அதுக்கு முன்னாடி நீ ஏன் அங்க போன? எதுக்காக போன? என்ன நடந்தது? சொல்லேன். ப்ளீஸ்.

அத தெரிஞ்சிகிட்டு நீ என்ன பண்ணப்போற? அவனுக்கு தண்டனை வாங்கி தரப்போறியா?

இல்ல மலர் நடந்தது நடந்து போச்சு அந்த Incident லேருந்து தான் நீ நம்ப Marriage க்கு ஒத்துக்க மாட்டேங்கிறியோ னு எனக்கு தோனுது.

டக் கென்று நிமிர்ந்து என்னை பார்த்தவள் ரவி நான் தான் எப்போதிலிருந்தோ தெளிவா சொல்றேன்ல. நாம Marriage பண்ணிக்க முடியாது. நீ வேற நல்ல பொண்ணா பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ. தயவுசெய்து என்னய இந்த மாதிரி Torture பண்ணாத.

எனக்கு Torture என்ற வார்த்தையை கேட்டவுடன் ஒண்ணும் புரியவில்லை.
மலர் நான் உன்னய Torture பண்றேன்னா? உன்னோட இல்ல இல்லை நம்மளோட நல்லதுக்கு தான் இவ்வளவு தூரம் பாடு படறேன்.

ரவி திரும்பவும் சொல்றேன் என்ன விட்டுடு. நாம Marriage பண்ணிகிட்டாலும் இரண்டு பேரும் மனசளவில் சந்தோஷமா இருக்க முடியாது. முக்கியமா என்னால உன் Life Spoil ஆகக்கூடாது. புரிஞ்சுக்கோ. என்னய தயவு செய்து Harash பண்ணாத என்று கண்ணீருடன் என்னை பார்த்து சொல்ல நான் துவண்டு போனேன்.

நான் உடைந்த குரலில், என்ன சித்தி இப்படி சொல்ற நான் போயி உன்ன Torture, Harashment பண்றேன்னு.. என்னால் மேற் கொண்டு பேச முடியாமல் தொண்டை அடைக்க..

இல்ல ரவி, எனக்கு அப்படித்தான் தோணுது. As a Friend ஆ Life Long உன் கூட இருக்கலாம் னா ஓகே, But Marriage னு வரும்போது தான் நமக்குள்ள Problem யே வருது. நீ திரும்ப திரும்ப Marriage னு என்னை Insist பண்ணும் போது தான் எனக்கு ஏதோ Torture மாதிரி இருக்கு. மறுபடியும் சொல்றேன் நீ என்னய Marriage பண்ணிகிட்டா உன் வாழ்க்கை நரகமாயிடும். ப்ளீஸ் இத்தோட விட்டுடு. நான் கிளம்பறேன் Time ஆயிடுச்சு. என்று என் பதிலை எதிர்பார்க்காமல் மலர் அந்த இடத்தை விட்டு செல்ல,

என்னால எதுவுமே பேச முடியாமல் அப்படியே வாயடைத்து போயிருந்தேன். என் மனதெல்லாம் Torture ங்கிறத பத்தியே யோசிக்க Mind க்குள் அதே ஓடிக்கொண்டிருந்தது. ஒரு கணம் என்ன நடக்குது னே புரியலை.

சில செகண்ட்ஸ் க்கு பிறகுதான் எனக்கு நிலவரம் புரிய ஆரம்பித்தது. உடனே Bill Payment பண்ணி விட்டு Parking area வந்து பார்த்தால் மலரை காணோம். வேகமாக வெளியே Road க்கு வந்து பார்த்தால் மலர் ஒரு Auto வில் ஏறுவது தெரிந்தது. மலர் நான் உன்னை Drop பண்றேன் என்று சத்தமாக சொன்னாலும் Auto கிளம்பி விட செய்வதறியாது அப்படியே Roadல் நின்று கொண்டிருந்தேன்.
கொஞ்ச தூரம் Auto போன பின் அதிலிருந்து மலர் என்னை திரும்பி பார்த்தபடியே தன் கண்களை துடைத்துக் கொண்டு மறுபடியும் உள்ளே திரும்பி கொண்டாள். ஏதோ என் உயிரே என்னை விட்டு போவது போல தோன்றியது. மனதெல்லாம் வலிக்க
நிர்கதியாக அப்படியே அவள் போகும் Auto போவதையே பார்த்து கொண்டு இருந்தேன்.

வீட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்று தெரியவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பது மட்டும் எனக்கு உறுதியாக தெரிந்தது.
முதலில் என்னுடைய Boss க்கு Phone பண்ணி நான் Ahmedabad போகிறேன் என்று சொல்ல, முதலில் மறுப்பு தெரிவித்தாலும் நான் Convince பண்ணி Work யை One Month க்குள் Complete பண்ணிடறேன். I have Confidence என்று சொல்லி அதனால் உங்களுக்கும் நல்ல Recognition கிடைக்கும் என்று சொல்ல ஒத்துக்கொண்டார். எல்லா ஏற்பாடுகளையும் செய்து Night 11 pm க்கு Coimbatore - Chennai Flight, then Connectivity Flight Morning 5 am க்கு Chennai to Ahmedabad என்றும் சொன்னார். இப்ப Night யே கிளம்பனும்.

Ramesh க்கு Phone பண்ணி உனக்கு பதிலா நான் Ahmedabad போறேன் னு சொன்னவுடன் அவனுக்கு ரொம்பவே சந்தோஷம். Thankyou Sir என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.

அடுத்து என்னுடைய Dress, Materials, Laptop, Doc, எல்லாம் எடுத்து வைத்து கொண்டே மல்லிகாவிற்கு போன் செய்து இன்று நடந்த எல்லா விஷயத்தையும் சொல்ல, ஒன்று Confirm ஆனது. மல்லிகா or நாயுடுவை மலருக்கு ஏதும் சொல்லவில்லை. வேறு யாரோ? அதுவும் மல்லிகா இங்கே நிறைய பேர் மலருக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க even தூரத்து சொந்தம் கூட, So நீங்க இங்க வந்ததை யாராவது மலருக்கு சொல்லியிருக்கலாம் என்று சொல்ல எனக்கும் அதான் நடந்திருக்கும் என்று பட்டது.
மல்லிகா, ரவி இன்னைக்கு மலர் அந்த மாதிரி Torture னு சொன்னத மனசில வச்சுக்காதே, அவ ஏதோ குழப்பத்தில சொல்லியிருக்கலாம்.

அய்யோ அதெல்லாம் ஒண்ணுமில்ல மல்லிகா. நான் ரொம்ப தெளிவா இருக்கேன். எப்ப இருந்தாலும் மலர் தான் எனக்கு Wife. அதுல எந்த மாற்றமும் இல்லை. ஆனால் என்ன அப்ப மனசு கொஞ்சம் கஷ்டமா இருந்தது. இப்ப Normal ஆயிட்டேன். இப்ப Office விஷயமா Ahmedabad கிளம்பிகிட்டிருக்கேன்.

ரவி ஒண்ணு கவனிச்சியா நீ கதிர் பேச்ச எடுக்கும் போது தான் அவ Serious plus Emotional ஆனாள் னு சொன்ன. So, எனக்கு என்னமோ கதிரை சுத்தி தான் ஏதோ ஒரு முடிச்சி இருக்கும்னு தோனுது.

எனக்கும் மல்லிகா சொன்னதிலிருந்து அது தான் Correct னு தோன்றியது. சரி Ahmedabad போயிட்டு வந்தபின் இந்த கதிர் Matter யை முதலில் Handle பண்ணனும் னு Decide பண்ணேன். கீழே போய் அம்மா கல்யாணி கிட்ட சொல்லி கிட்டு நான் Airport கிளம்பினேன்.

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.co
பகிரப்பட்ட

NEW REALESED