Sivavin Malare Mounama.. Part 1 books and stories free download online pdf in Tamil

சிவாவின் மலரே மௌனமா.. Part 1

நான் உங்கள் சிவா..
மறுபடியும் இந்த மலரே மௌனமா.. புதிய தொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, இருவர் மத்தியில் ஏற்படும் அழகான Feelings, Intimacy Love யை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன. pl. mail to
siva69.com@gmail.com



நான் ரவி குமார்...

கோவையில் ஒரு நல்ல IT company யில் project manager வேலை. நல்ல salary, package.. சொந்த ஊர் கோவை னால double jackpot. எனக்கு அம்மா தேவி, sister கல்யாணி MBA final yr. கோவையில் PSG Tech ல். அப்பா தவறிட்டார். சொந்த வீடு, கிராமத்தில் அம்மா வழியில் Relatives பெரிய வீடு, வயல் தோட்டம்.. எல்லாம் நல்ல வசதி.
என்னை பற்றி.. 6 feet height, swimming Yoga லாம் போய் body யை நல்லா maintain பண்ணி.. அதற்காக பாகுபலி மாதிரி too much muscles இல்லாமல்.. But, பார்ப்பதற்கு வசீகரமாக வெள்ளை நிறத்தில் (அம்மா நல்ல சிவப்பு கலர் so, அவங்க ஜீன்ஸ் அதனால).. handsome ஆக இருப்பேன். மற்றவர்களுக்காக வாவது body யை maintain பண்ணுவதே பெரிய task நமக்கு.. ஓகே.. இப்ப matter என்னன்னா?

வழக்கம் போல் தான்.. லவ் ல விழுந்தாச்சு. இத்தனை நாள் எந்த பொண்ணு மேலயும்.. Even என்னோட team, staffs, colleagues ல இருக்கிற அழகான பொண்ணுங்க மேல் வராத crush.. ஈர்ப்பு.. அன்னைக்கு அவளை பார்த்தவுடன் விழுந்துட்டேன்.
ஏதோ ஒரு படத்தில சொல்லுவாங்களே ஒரு அழகான தேவதை போன்ற பெண்ணை யை பார்த்தவுடனே நம்ம மனசில ஒரு Bell அடிக்கும்னு, அன்னைக்கு அவளை அந்த தேவதையை அந்த Marriage Function ல பார்த்தப்ப பெரிய கோவில் மணியே என் மனசுக்குள்ளே அடித்தது. அதுவும் அவள் உரிமையுடன் என்னை என் கை பிடித்து அந்த Function ல் எல்லா இடத்திற்கும் அழைத்து போனபோது.. அப்படியே மயங்கி போய் அவள் பின்னாடியே போனபோது.. அந்த கணத்தில் இருந்து அவள் மேல் பைத்தியமாகி அவளை கன்னாபின்னாவென்று லவ் பண்ண ஆரம்பித்தேன். எப்ப? எங்க?..

போவோம் வாங்க.. Flashback தான்..

ஒரு 1 yr back போனால்.. அப்பதான் Degree final yr. final semester ல இருக்கேன். ஒரு தடவை Relative marriageக்கு அம்மா ரொம்ப compel பண்ணதால அரை மனசோட மெரூன் குர்தா, ஜீன்ஸ் பேண்ட்ல போனேன். சொந்தக்காரங்க எல்லோரையும் ஒரே இடத்தில் பார்த்து நலம் விசாரிச்சிகிட்டு, பேசி கொண்டு marriage attend பண்ணிக்கொண்டிருந்தேன். கொஞ்சம் தூரத்தில் மேடையில் ஓரத்தில் என் அம்மா கூட யாரோ ஒரு பொண்ணு பேசிக்கிட்டு இருந்தது .. அவளின் பின் பக்கம் தெரிந்தது. நல்ல height, நல்ல கலர், காக்ரா சோளி போட்டு பளபளப்பாக தெரிய.. முகத்தை பார்க்க முடியவில்லை. பின்னழகே சூப்பரா இருக்க.. எப்படியாவது அவள் முகத்தை பார்க்க வேண்டும் என்று மனசு பரபரத்தது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அம்மாவிடம் போக.. அம்மா வே.. என்னை பார்த்து.. ஹேய் மலர்.. அதோ ரவி என்று என்னை காண்பிக்க.. அவள் திரும்பி என்னை பார்த்து புன்னகைக்க.. வாவ் என்ன ஒரு அழகு.. சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி, மையிட்ட பெரிய கண்கள், கூரான நாசி, சிவந்த உதடுகள் கொஞ்சமாய் lipstick. ஓவராக அடிக்காத மேக்கப்.. பேரழகு.. சாயலில் அப்படியே நடிகை வாணி போஜன் போல.. ஆனால் எடுப்பான நாசி, நல்ல Height.

மைகாட்.. ஏதோ வானத்திலிருந்து எனக்காகவே இறங்கி வந்த தேவதை போல.. என்னருகே வந்து என்னை பார்த்து ஹாய் ரவி என்று கையாட்டி சொல்ல.. என் மனதில் Bell அடித்தது.. ஒரு செகண்ட் கண்ணை மூடி கேட்க.. நிஜமாகவே.. சத்தம் கேட்டது.
பக்கத்தில் கல்யாண சடங்கில் ஒரு பாகமாக மணியடிக்க.. என் நிலைமை எனக்கு புரிந்தது.

அவள் என் கையை பிடித்து ஹேய் ரவி என்னாச்சு? நான் தான்டா மலர்.. மலர்விழி.. வா என்கூட என்று என் கையை பிடித்து கூட்டத்தினிடையே வழி நடத்தி செல்ல..‌ ஒரு விதமான மயக்கத்தில் அவள் பின்னாடியே சென்றேன். அவள் friends.. எங்கள் Relatives சில பேரிடம் என்னை introduce பண்ணி வைத்து.. நம்ம தேவி அக்கா பையன் ரவி., BTech final yr. என்று உரிமையுடன் என் தோளில் கை போட்டு சொல்ல.. நான் கிறங்கி போய் மலரையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.
எனக்கு ஒண்ணும் புரியவில்லை.. ஆனால் எங்கோ சொர்க்கத்தில் மிதப்பது போல இருந்தது.

கடைசியில் அம்மா விடம் வந்த போது... மலரை யாரோ கூப்பிட்டு பேச, நான் அம்மா விடம் யாரும்மா இந்த பொண்ணு என்று கேட்க..
டேய் நம்ம மலர்விழி டா.. தூரத்து சொந்தம், பொள்ளாச்சி பக்கம் நம்ம சுந்தரம் ஐயா பொண்ணு.. எனக்கு தங்கச்சி முறை, உனக்கு சித்தி முறை.. என்று சொல்ல... எனக்கு சித்தி என்று கேட்டவுடனே இருந்த உற்சாகமெல்லாம் ஒரேயடியாக புஸ் என்று போனது போல் இருந்தது.
அம்மா என்னென்னவோ சொல்லிக் கொண்டே போனாள். எதுவும் என் மண்டையில் ஏறலை.

அப்போது கல்யாணியும் சேர்ந்து கொள்ள.. ஆமாமாம் நம்ம மலர் சித்தியா? யாரோனு நினைச்சேன். இப்ப ரொம்ப அழகா cute ஆ இருக்காங்க ல்ல.. so sweet. ஆமாம் அண்ணா, உனக்கு ஞாபகம் இல்லை.. நாமலாம் சின்ன வயசில பொள்ளாச்சியில் அவங்க தோட்டத்தில ஒண்ணா விளையாண்டிருக்கோம். அடிக்கடி அங்கே அவங்க வீட்டுக்கு போவோம். ஞாபகம் இல்ல?

எனக்கு அப்போது தான் strike ஆனது. எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. பொள்ளாச்சி.. வயல்.. தோட்டம்.. அங்கேயிருந்த ஆடு, மாடுகள், குளம்..‌ மலர் கூட விளையாண்டது.. எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபகத்திற்கு வர.. அந்த மலர் ஆ? இது.. எப்பவோ சின்ன வயசுல பார்த்தது. அப்பவே ரொம்ப cute ஆ அழகா வெள்ளை வெளேர்னு இருப்பா.. நாங்க கூட இட்லி மாவு னு கிண்டலடிப்போம். அந்த மலரா இது.. இப்ப எப்படி? வாவ் இவ்ளோ அழகா.. என் மனதை மிகவும் வசீகரித்தாள்.

மலர் பக்கத்தில் பேசிவிட்டு எங்களிடம் வந்தவுடன் கல்யாணி ஹாய் சித்தி என்று மலரை Hug பண்ண எனக்கு பொறாமையாக இருந்தது. பின் என்னை பார்த்து என்ன ரவி என்னய ஞாபகம் இருக்கா ?. அப்ப சின்ன வயசுல பார்த்தது இப்ப எல்லோரும் நல்லா வளர்ந்துட்டிங்க. அடிக்கடி பார்க்க முடியறதில்லை.. என்ன ரவி அப்ப விளையாடும் போது என்னய நீ அடிச்சிகிட்டே இருப்ப.. இப்ப silent ஆ இருக்க.. மறந்துட்டியா?

நான் உடனே ச்சே சே.. நல்லா ஞாபகம் இருக்கு. அங்க வீடு, தோட்டத்தில நாமெல்லாம் விளையாண்டது.. இட்லி மாவு னு வம்பிழுத்தது.. இங்கே திடீர்னு பார்த்த வுடனே strike ஆகலை. அதுவும் இவ்ளோ அழகான பொண்ணு என் கையை பிடிச்சு இழுத்துட்டு போகும் போது எனக்கு ஒண்ணும் புரியலை.
நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே .. கல்யாணி என் shoulder யை யாருக்கும் தெரியாமல் இடித்து.. என் காதில் ஜொள்ளு வழியுது துடைச்சிக்கோ என்றாள்.

என் பேச்சைக் கேட்டு மலர் சிரித்து.. அப்ப சின்ன வயசுல பேசுற மாதிரியே இப்பவும் பேசுற.. ஆனா அடிக்காமல்..

அவள் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி என்னை இன்னும் மயக்கியது. அப்ப decide ஆனேன். மலரைத்தான் லவ் பண்ணனும்.
மணந்தால் மலர்.. இல்லைனா மரணதேவி தான்.. என்று.

கல்யாணியும் மலரும் நல்லா close ஆ பேசிகிட்டே ஒருவருக்கொருவர் information, phone number etc.. etc.. exchange பண்ணிக்கொண்டார்கள். நான் அன்றைக்கே என் மனதை மலருக்கு கொடுத்து விட்டேன்.

அன்றைக்கு நைட் Full ஆ மலர் பத்தின கனவுதான். நாட்கள் உருண்டோட எனக்கு On campus ல் நல்ல placement கிடைச்சி Chennai 6 months training முடித்து coimbatore க்கு கொஞ்சம் influence வச்சி posting வாங்கிட்டு ஹேப்பியா இருந்தேன். மலரின் ஞாபகம் எப்பவும் எந்நேரமும் என்னை போட்டு வதைத்து கொண்டே இருந்தது. . மலரும் கோவையில் work பண்ணுவதால் அவ்வப்போது அம்மாவை பார்க்க வீட்டுக்கு வந்து போய் கொண்டு இருந்தாள். அம்மாவிற்கும், கல்யாணி க்கும் மலரை ரொம்ப பிடித்து போக அவர்களுக்குள்ளே ஒரு நல்ல Understanding ஏற்பட்டது. இதெல்லாம் எனக்கு ஒரு positive Boost தர.. எப்படியாவது மலரிடம் propose பண்ண வேண்டும் என்று மனசு துடித்தது.

தொடரும்..

பகிரப்பட்ட

NEW REALESED