Venthazhal Thoorigai books and stories free download online pdf in Tamil

வெண்தழல் தூரிகை

மனதுக்குள் காதல் ரீங்காரமாக வட்டமிட்டு தேனை அள்ளி தெளித்து கொண்டே இருந்தது. முதல் காதல் எப்போதும் மனதிற்கு நெருக்கமாகி ஓர் சுகானுபவத்தை விட்டு செல்லும் அந்த அனுபவம் நம்மை காலம் கடந்து இட்டு செல்லும். காதலின் அழகே கொடுப்பதும் பெறுவதும். அள்ள அள்ள குறையாத வண்ணம் இருவரும் பரஸ்பரம் கொடுத்து பெற்று கொண்டார்கள். இவர்களின் அன்பை கண்டு காதலுக்கே மூச்சையுற்றது.
காதலால் காதல் கொண்டு காதலாகி
காதலாட காதலில் திளைத்திருந்தார்கள். காதலர்கள் தவறு செய்வதுண்டு காதல்கள் தவறு புரிவதில்லை. அவனும் தன் காதலில் உன்மையை விதைத்திட முயற்ச்சித்தான் ஆனால் பொய்மை தலை தூக்கியது. அது தன்னையே அறியாமல் நிகழ்ந்தது. சில சமயங்களில் பொய்மை காதலில் துளிர் விடும் அது சரச நாடகங்களுக்காக இருக்கலாம். காமனின் பானம் போல அடிக்கரும்பாய் காதல் இனித்தது. அந்த கரும்பில் இருந்து எய்யப்படுவது ஓர் துரோகம் என அவள் அறியாமல் இருந்தாள்.

துரோகம் யாரை தான் விட்டு வைத்தது. தூரோகங்கள் பல வகை உண்டு ஆனால் அதில் கொடியது நம்பிக்கை துரோகம் தான். நம்பி கெடுவதென்பது வாழும் போதே நரகத்தை காணும் தருணம். அப்படி ஓர் தருணத்தை அவன் பரிசாக வழங்கினான். காதலின் கடவு நிலை திருமணம் அதை நோக்கி நகர்த்த பரஸ்பரம் இருவரும் திட்டமிட்டனர். தன் காதலை தன் பெற்றோர் ஏற்க மாட்டார்கள் என்று அவள் தீர்க்கமாக நம்பினாள் ம்ஹும் நம்ப வைக்கப்பட்டாள்.

நாஜி படைகளில் சிக்கிய சிப்பாய் போல தன்னிலை மறந்தாள். ஒருவர் அளவு கடந்த நம்பிக்கையை வழங்கும் போது அது நமக்காக விதிக்கப்பட்ட ஆசிர்வாதமாக எண்ணுகிறோம் இறைவன் தமக்காக வழங்கியது என அதன் மீது ஆதிக்கம் செலுத்த எண்ணுகிறோம். மனிதன் எவ்வளவு பெரிய கொடிய மிருகமாக காட்சியளிக்கிறான் அல்லவா!.

அவன் அதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் அவ்வளவு சிரத்தையுடன் இருந்தாள். அவன் மீது உயிரையே வைத்திருந்தாள் அதனால் தான் தீர்க்கமாக நம்பினாள். அது அவளை படி தாண்டவும் செய்தது. தன் பெற்றோர் ஏற்க மாட்டார்கள் என அவள் இந்த காரியத்தை செய்ய துணிந்தாள் அவன் மீதுள்ள காதலும் ஒரு மனதாக செய்ய தூண்டியது. அதனால் தான் அவள் அன்றிரவு அப்படி பேசினாள்.

அவன் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. வேறு வழியில்லாமல் அவளை
நிராகரிக்க ஒரு புது யுக்தியை கையாண்டான். எப்படி அவனுக்கு அந்த யோசனை வந்தது என்று தெரியவில்லை. அவன் படித்த புத்தகங்களின் நீட்சியாக இருக்கலாம் அவன் திரைப்படங்களின் பாதிப்புகளாக இருக்கலாம். எதுவானாலும் அவன் மிகப்பெரிய தவறு இழைக்க துணிந்தான். தன் நண்பன் மணியின் துணையுடன் அன்று இரவு தன் நாடகத்தை நடித்து முடித்தான். நாடகத்தை முடித்த கையோடு இரவோடு இரவாக ஊர் விட்டு ஊர் வந்தான். நாடோடியை போல மகிழ்ச்சியாக சுற்றி திரிந்தான். மணியுடன் மட்டும் அவ்வப்போது உலாவும் உரையுமாய் இருந்தான். ஆனால் நாம் செய்த கர்மா நம்மை விடாது அல்லவா! அது, அவனை மகிழ்நன் மூலம் துரத்தியது அது அவனுக்கு நல்லதொரு பாடத்தை கற்றுத்தர ஆவலாய் இருந்தது.

மார்கழியில் திங்கள் இரவு பாவை நோன்பு நோற்கும் பெண்கள் விழித்தெழும் நல்வேளை அது. இரவு பணியை முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தான் மதன். நிலவொளியின் வெளிச்சத்தில் ஆந்தையின் அலறலும் பேடை குயில் கூவலும் இரவை நிசப்தமற்றாக்கியது. அந்த இனிய கீதத்தில் கண் உறங்க எத்தனித்தான். மணி ஐந்தை நெருங்கியது. மதனின் அலைப்பேசி அலறியது நான்கு முறை இசைத்தது. தூக்கம் கலையவில்லை மதனுக்கு, மீண்டும் ஒலித்தது இந்த முறை லேசாக கண் விழித்தான். மெதுவாக எழுந்து கைப்பேசியை எடுக்க முற்பட்டான் ஆனால் ஒலி அடங்கியது. திடிரென எங்கிருந்தோ அலாரம் சத்தம் மதன் காதை கவ்வியது, எழுந்து மின் விளக்கை போட முயற்சி செய்தான் ஆனால் பலனில்லை. சட்டென மின் விசிறியின் வேகம் கூடியது விளக்குகள் பளிரென வெட்டியது. சுற்றும் முற்றும் பார்த்தவனுக்கு தலை கிடுகிடுவென சுற்றியது. அவன் விழிகள் பிதுங்கின தலையில் கைவைத்து அப்படியே விழுந்தான். இது எந்த இடமென்றும் தான் எங்கே இருக்கிறோம் என்றும் அவன் மனதுக்குள்ளே ஆயிரம் குழப்பங்கள். கேள்விகள் என்னவோ இரண்டு தான் ஆனால் அதற்கான பதில்கள் ஆயிரமாயிரம். கொஞ்சம் கதறினான் இதமாக கத்தினான் அழுதான் புரண்டான் நான்கு சுவற்றை இணைத்த கதவை தட்டினான். ம்ஹூம் யாரும் அங்கு இல்லை உதவிக்கு, ஜன்னல்கள் இல்லா நான்கு சுவற்றுக்குள் கடிகார முட்களும் தொட்டியில் நீந்திடும் மீன்களுமே துணையாகி கிடந்தன.

தரையில் கிடைத்தப்பட்டிருந்த கைப்பேசியை எடுத்து உதவிக்கு யாரேனும் அழைக்கலாம் என முடிவு செய்தான். ஆனால் அங்கும் அதிர்ச்சி அவன் கைப்பேசியில் சேமிக்கப்பட்ட எந்த கைப்பேசி எண்ணும் இல்லை. கடைசியாக வந்த மிஸ்டு கால் மட்டுமே இருந்தது.

செல்போனினால் செல்லரித்துப்போன மூளையில் ஞாபகம் வேறு மறந்து போயிற்று.

அந்த எண்ணுக்கு போன் செய்தான் நீண்ட அழைப்புக்கு பிறகு ஏற்கப்பட்டது இவன் குரலில் நிசப்தம் நிலவி எதிர் குரலில் ஓர் பெண் குரல்.

"ஹலோ!

ஹலோ !

யாரு போன் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க"

"ஹலோ ஹலோ நீங்க யாரு?" என் பதறி அடித்து கேட்டான்.

"நீங்க தான் போன் பண்ணீங்க...

இப்ப என்ன யாருனு கேக்குறீங்க...

நீங்க யாரு சார்?

உங்களுக்கு என்ன வேனும்"


"நான் இங்க...

என்ன யாரோ கடத்திட்டாங்க..

என்ன காப்பாத்துங்க"

"கடத்தீட்டாங்களா!!

ஹே யாரோ கலாய்கிறீங்க

யாரது??"

"இல்லங்க நான் உன்மைய தான் சொல்றேன்"

"ஹே சும்மா மொக்க போடாம தூங்கு

கடத்திட்டாங்களாம்.. கடத்திட்டாங்க

காமெடி பண்ணிட்டு

போன் வை" அழைப்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் இதயம் கலவரமானது.

மனதில் தோன்றிய சில எண்களை முயற்ச்சித்தான். முயற்சி தோல்வியுற்றது. சிறிய தாமதத்திற்கு பிறகு அதே எண்ணுக்கு தொடர்பு கொண்டான்.

"ஏங்க என்ன நம்புங்க...

என்ன யாரோ கடத்திட்டாங்க

ஹெல்ப் பண்ணுங்க"

"உனக்கு எத்தன தடவ சொல்றது

லூசா நீ!!

சும்மா டிஸ்டர்ப் பண்ணாம போன வை "

"இருங்க ப்ளிஸ்!!

என்னங்க நம்ப மாட்றீங்க

உங்கள கெஞ்சி கேக்குறேன் ஹெல்ப் பண்ணுங்க"

"சரி இரு...

நான் போலிஸ்ட சொல்லி உன்ன காப்பாத்த சொல்றேன்..."

"இல்ல வேணாம் வேணாம்...

ஏய் எனக்கு இப்ப தான் புரியுது..

நீ தான என்ன கடத்துனது...

சொல்லு நீ தான??"

ஒரு நீண்ட நிசப்தம். அவள் பதில் எதுவும் சொல்லாமல் இருந்தாள். சட்டென வெடித்து சிரித்தாள்.

"ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா..."

என சிரிப்பு சத்தம் விண்ணை முட்டியது.

"ஏய் நீ கலை தான??

சொல்லு சொல்லு..."

சிரிபலை தொடர்ந்து கொண்டே இருந்தது..

"போடா ஆஆஆ" என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே ஒலித்தது...

கையில் இருந்த சாவியை மகிழ்நன்னிடம் கொடுத்தபடி அவ்விடம் நவில்ந்தாள். கண்களில் நீர் கசிய மென் சிரிப்புடன். ஆனால் மதனின் காதுகளில் மட்டும் ஒலித்து கொண்டிருந்தது அந்த ஒற்றை வார்த்தை "போடா ஆஆஆ"

-பிரசன்ன ரணதீரன் புகழேந்தி


பகிரப்பட்ட

NEW REALESED