Read Am I getting old? by Ramakrishnan Anantha in Tamil Women Focused | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

எனக்கு வயசாகிடுதா?


நான் Boomer ஆயிட்டேனா? இல்லை எனக்கு வயசாகிடுதா? I ask this question often to myself !But  i am still not able to find the answer. ...

எனக்கு மனிதர்களை observe பண்ணுவது ரொம்பப் பிடிக்கும்.

வெளியே தனியாகப் போகும்போது, shopping-ஐக் காட்டிலும் என்னைச் சுற்றியிருக்கிற மனிதர்களைப் பார்ப்பதில் எனக்கு ஒரு தனி interest உண்டு.

அவர்களை judge பண்ணுவதற்காக இல்லை. சும்மா கவனிப்பது.

பல வருடங்களாக mall, restaurant, food court என்று நான் பார்த்த சில சின்னச் சின்ன human stories மனதில் தங்கியிருக்கின்றன.

சமீபத்தில் அவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தபோது ஒரு கேள்வி வந்தது.

நான் Boomer ஆயிட்டேனா?
இல்லை எனக்கு வயசாகிடுதா?

நாங்கள் படித்த காலத்தில் ஒரு பையனிடம் பேசினாலே வீட்டில் விசாரணை ஆரம்பமாகிவிடும்.

School 4.30-க்கு முடிந்து 5.10-க்கு வீட்டுக்கு வந்தாலும் explanation தயாராக இருக்க வேண்டும்.

“ரெண்டு bus போயிடுச்சும்மா…”

“அது full-ஆ இருந்துச்சும்மா…”

“கொஞ்சம் extra class இருந்துச்சும்மா…”

காதல் இருந்தது. ஆனால் அதற்கும் ஒரு certain distance இருந்தது.

எங்கள் street-ல் பார்த்திருக்கிறேன். ஒரு school பையன் uniform-ல் cycle-ஐ தள்ளிக்கொண்டு வருவான். பக்கத்தில் ஒரு பெண் நடந்து பேசிக்கொண்டு வருவாள். கொஞ்சம் தள்ளி ஒரு friend நடந்து வருவான்.

அந்தக் காலத்து காதலுக்கு privacy கூட public-ஆ இருந்தது. 😂

அதிலும் ஒரு அழகு இருந்தது.

பழைய தமிழ் சினிமாவும் அதைப் புரிந்துகொண்டிருந்தது.

Hero heroine-ஐ பார்ப்பார்.

Heroine வெட்கப்பட்டு பார்வையைத் திருப்புவாள்.

பின்னாடியில் இரண்டு பூக்கள் அசையும்.

அவ்வளவுதான்.

அந்தச் சின்ன suggestion-லேயே மனசுக்குள் ஒரு கிளுகிளுப்பு வந்துவிடும்.

இன்றைக்கு சில romantic scenes பார்க்கும்போது எனக்கு,

“Oh… okay. இதுதான் நடக்குது. அடுத்து என்ன?”

என்று தோன்றுகிறது.

Maybe I really do belong to that old school.

ஆனால் நான் சொல்லும் old school என்பது “புருஷன் இப்படித்தான் இருக்கணும், பொண்டாட்டி இப்படித்தான் இருக்கணும்” என்ற பழைய கட்டுப்பாடுகள் அல்ல.

அது எனக்குப் பிடிக்காது.

நான் miss பண்ணுவது வேறு ஒன்று.

Tenderness.

நிறைய பேர் நடுவில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது.

“Tea வேண்டுமா?”

“Coffee?”

“சாப்பிடலாமா?”

என்று வார்த்தைகளுக்கு நடுவிலேயே ஒரு பார்வையில் பேசிக்கொள்வது.

ஒரு சின்ன smile. ஒரு familiar gesture. பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இரண்டு பேருக்குள் இருக்கும் அந்தப் பழக்கமான அன்பு.

அதுதான் எனக்கு romance.

இன்றைக்கு college பையன்களும் பெண்களும் கை கோர்த்துக்கொண்டு நடக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சாப்பிடுகிறார்கள்.

அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

அவர்கள் பெரியவர்கள். அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடையது.

ஆனால் சில சமயம் school படிக்கும் வயதிலேயே இருக்கும் ரொம்பச் சின்ன குழந்தைகளை mall-ல் பார்க்கிறேன். குறிப்பாக weekday afternoons அல்லது evenings-ல்.

அப்போது எனக்குள் சில கேள்விகள் வரும்.

எங்கே இருந்து இந்த freedom?
கையில் பணம் எங்கே இருந்து வருகிறது?
பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள்?
எப்போது childhood இவ்வளவு adult ஆகிவிட்டது?

எனக்கு பதில் தெரியாது.

Movies, social media, working parents, சின்ன families, instant information என்று பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.

ஆனால் இதை வைத்து ஒரு generation-ஐ குறை சொல்ல நான் எழுதவில்லை.

ஏனென்றால் அதே mall-ல் நான் இன்னொரு அழகான காட்சியையும் பார்க்கிறேன்.

அறுபது, எழுபது வயதுக்கு அருகில் இருக்கும் husband and wife. அமைதியாக ஒன்றாக உட்கார்ந்திருப்பார்கள். Family விஷயங்களைப் பேசிக்கொள்வார்கள். ஏதாவது சாப்பிடுவார்கள். Shopping செய்வார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வார்கள்.

அவர்களுடைய generation-க்கு husband-ஐ அழைத்துக்கொண்டு restaurant போவது கூட luxury-ஆ இருந்திருக்கலாம்.

Mall இல்லை. Food court இல்லை. “Weekend-ல் வெளியே போகலாம்” என்ற culture இல்லை.

ஆனால் இப்போது இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவர்கள் இருவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு உண்மையாக சந்தோஷமாக இருக்கும்.

Still together.
Still talking.
Still looking after each other.

அந்த companionship எனக்கு ரொம்ப அழகாகத் தெரிகிறது.

அதே நேரத்தில், திருமணத்துக்கு வெளியே companionship, excitement அல்லது affection தேடும் மனிதர்களையும் பார்க்கிறேன்.

அவர்களுடைய காரணங்கள் அவர்களுக்குத் தெரியும். நான் அவர்களை judge பண்ணவில்லை.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் எனக்கு இன்னும் மாறவில்லை.

Honesty.

திருமணம் வேலை செய்யவில்லை என்றால் பிரிந்து விடலாம். தனியாக வாழலாம். மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.

ஆனால் இன்னொருவரை ஒரு பொய்க்குள் வைத்துக்கொண்டு வாழ்வதைவிட, உண்மையைச் சொல்லிவிடுவது நல்லது என்று நான் இன்னும் நம்புகிறேன்.

இன்றைக்கு ஒருவரை விரும்பும்போது,

“நல்ல heart இருக்கிறதா?”

என்பதைவிட,

“நல்லா இருக்கிறாரா?”

“நல்ல bike அல்லது car இருக்கிறதா?”

“செலவு செய்யத் தயாரா?”

“Weekend-ல் வெளியே கூட்டிக்கொண்டு போவாரா?”

என்று பார்க்கிற உலகமும் இருக்கிறது.

Good heart-க்கு இன்னும் market இருக்கிறதா?

எனக்குத் தெரியவில்லை.

ஆனால் என்னைப் பொறுத்தவரை இருக்கிறது.

Freedom பிரச்சினை இல்லை.

அந்த freedom-ஐ நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் கேள்வி.

அதனால்...

நான் Boomer ஆயிட்டேனா?
இல்லை எனக்கு வயசாகிடுதா?

Maybe I belong to that old school.

அப்படியென்றால் சரி.

எனக்குப் பிடித்த coffee-யை கையில் வைத்துக்கொண்டு,

I accept it happily. ☕

உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைக் கவனிக்கும்போது, நீங்களும் இதே மாதிரி ஏதாவது ஒரு மாற்றத்தை உணர்ந்திருக்கிறீர்களா?

ஒரு coffee கையில் வைத்துக்கொண்டு உங்கள் thoughts-ஐ share பண்ணலாம். ☕❤️

---

Disclaimer: இந்தக் கட்டுரை முழுவதும் என்னுடைய தனிப்பட்ட observations மற்றும் experiences-ஐ அடிப்படையாகக் கொண்டது. இது எந்த ஒரு குறிப்பிட்ட நபரையும் சுட்டிக்காட்டவோ, அடையாளப்படுத்தவோ, விமர்சிக்கவோ எழுதப்பட்டது அல்ல.