Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நந்தவனம் - 1

காலை நேரப் பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தது அந்த புகழ்பெற்ற விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனம். அங்கு நண்பர்கள் குழு அன்று நடக்கவிருக்கும் கிளைன்ட் மீட்டிங் பற்றி பேசிகொண்டு இருந்தார்கள். அப்பொழுது உள்ளே வந்த ஜெனிஃபர் என்னப்பா இன்னைக்கும் நம்ப பட்டாசு வரலையா? அதுக்கு அங்க இருந்த மற்றவர்கள் எங்கள கேட்டு என்ன பண்றது அவளோட தோஸ்த கேளு, ஜெனிஃபர் கதிரிடம்(தோஸ்த் ) திரும்ப அங்க அவர்களால் பட்டாசுன்னு அன்புடன் அழைக்கப்படுற நந்தனா உள்ளவரவும் சரியாய் இருந்தது. ஒருவாரம் விடுமுறை முடிஞ்சு அலுவலகம் வந்த நந்தனாவை நண்பர் பட்டாளம் சூழ்ந்துகொண்டது . ஹே பட்டாசு டான்ஸ் போட்டி எப்படி போச்சு, யார் எல்லா வந்து இருந்தாங்க,அடுத்த ரவுண்டு எப்போ? இப்படி பலகேள்விகள் எல்லாத்திற்கும் பதில் சொன்ன நந்தனா அங்கிருந்த டேபிள் மீது அமர்ந்துகொண்டு தான் இல்லாத போது அலுவகத்தில் நடந்தவை பற்றி கேட்க தொடங்கினாள்.

அதை கேட்டதும் அனைவரும் அமைதியாக இருக்க நந்தனா கதிரை பாத்து தோஸ்த் இவங்களுக்கு என்ன ஆச்சு எதோ நான் கேக்ககூடாதத கேட்ட மாதிரி மூஞ்ச மூஞ்சப் பாக்குறாங்க. அதுக்கு ஜெனிஃபர் அதை ஏன் கேக்குற சென்னைல ஆளே இல்லாத மாதிரி நம்ப MD டெல்லில இருந்து புதுசா ஒரு கிரியேட்டிவ் ஹெட் அப்பாய்ண்ட் பண்ணி இருக்காரு. ஓ ஆள் எப்படி?. சிரிக்க நம்ப சொத்து எல்லா எழுதி கேப்பாரு போல அப்படினு ஜெனிஃபர் சொல்ல, அப்பொழுது அந்த அறை கதவை திறந்தான் அர்ஜுன் (அவர்களின் புது கிரியேட்டிவ் ஹெட்,).

கதவுக்கு முத்துக்காட்டி அமர்ந்து இருந்த நந்தனா அவன் வந்தது அறியாமல் பேச தொடங்கினாள். என்னது நம்ப குரூப்க்கு சிரிக்க தெரியாத ஒரு ஹெட்டா, வாய்பே இல்ல இன்னைக்கு கிளைன்ட் மீட்டிங் முடிச்ச கையோட அந்த டெல்லிக்காரன நம்ப டெல்லிக்கே பார்சல் பன்றோம். இப்படிப் பேசி கொண்டு இருந்தவள் யாரோ கனைக்கும் குரல் கேட்டு திரும்பினாள். வாயிலில் அர்ஜுனை கண்டவள் மேஜை மீதிருந்து இறங்கி அருகில் நிற்கும் கதிரிடம் யாரென்று கேட்க, அதற்கு அர்ஜுன் டெல்லிக்காரன் என்று பதில் அளித்தான்.

பகலில் பக்கம் பாத்து பேசனுன்னு சொல்லுவாங்க அத மறந்து பேசி மாட்டிக்கிட்டா நம்ப பட்டாசு, இப்படி ஜெனிஃபர் நினைக்க, எதுவுமே நடக்காத மாதிரி “வெல்கம் டு அவர் டீம்”  னு அர்ஜுனிடம் சொன்னாள் நந்தனா, அர்ஜுன் ஏதோ சொல்ல வருவதற்குள் கிளைன்ட் வந்துவிட அவன் எதுவும் சொல்லாமல் கிளைன்ட் உடன் உள்ளே நுழைந்தான். அவர்கள் ஒரு புது விளம்பரத் தயாரிப்புப் பற்றிப் பேச வந்து இருந்தனர். ஒரு மாதத்திற்குள் 5 புதுவித விளம்பர யோசனைகளை கேட்டனர். அது அவர்களுக்குப் பிடித்து இருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்று சொல்லிச் சென்றனர். இந்த ப்ராஜெக்ட் இந்த நிறுவனத்தில் அர்ஜுனனின் முதல் ப்ராஜெக்ட். அவன் அதை சிறப்பாக முடிக்க நினைத்தான்.  காலை அவனை பற்றி பேசிய நந்தனாவின் நினைவு அவனுக்கு வந்தது. அர்ஜுன் இந்த நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகிறது, இன்றுதான் நந்தனாவை முதல் முறை பார்க்கிறான், வந்த அன்றே தன்னைத் திருப்பி அனுப்ப நினைக்கும் நந்தனாவை எண்ணி அவனுக்கு சிறு எரிச்சல் வந்தது. நந்தனாவின் டீம் ஹெட் என்ற முறையில் அவளை வந்து சந்திக்கச் சொல்லி அனுப்பினான்.

அவனை பார்க்க வந்த நந்தனா, எதுவும் நடக்காதது போல அமைதியாக இருந்தாள், செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் பழக்கம் கிடையாதா? என்று எடுத்த எடுப்பில் கேட்டவனை விசித்திரமாகப் பார்த்தாள். நான் என்ன தப்பு செஞ்சேன் எதுக்கு மன்னிப்பு கேக்கணும் என்று நந்தனா கேட்க,என்ன பத்தி நான் இல்லாதப்ப பேசியது தப்பு என்றான் அர்ஜுன். உங்களை யாரு கதவை தட்டமா ஒட்டுக்கேக்க சொன்னது. நீங்க செஞ்சது தப்பு அதுக்கும்  இதுக்கும்  சரியாய் போச்சு  என்ற நந்தனாவை முடிந்தவரை முறைதான் அர்ஜுன். அதை பற்றி அக்கறை இல்லாமல் எதுக்கு என்னை  வர சொன்னீங்கனு சொன்னா, நான்  போய் வேலையைப் பார்ப்பேன் என்றாள்.    

இப்படி இருந்தால் வேலை எப்படி நடக்கும் என்றான் அர்ஜுன்,தொடர்ந்து அவனே பேசிகிட்டு இருந்தா போதாது வேலைய குடுத்த நேரத்துக்குள்ள முடிக்குற திறம இருக்கனும். நமக்கு ஒரு மாசம் தான் டைம் இருக்கு அதுக்குள்ள கிளைன்ட்க்கு பிடிக்குற மாதிரி ஒரு ஐடியாவாவது உங்க டீம் ரெடி பண்ணனும், உங்கள வெச்சு நான் எப்படி  இந்த ப்ராஜெக்ட் சக்ஸஸ் பண்ண போறேன்னு தெரியல, என்று கோவமாகச் சொல்லி முடித்தான். அவனை அமைதியாகப் பார்த்த நந்தனா, நீங்க சொன்ன அதே ஒரு மாசத்துல 5 ஐடியாவும் நல்லா  இருக்கு எதை எடுத்துக்குறதுனே தெரியலன்னு கிளைன்ட் சொல்லுவாங்க என்றாள். கற்பன நல்லதா இருக்கு நடக்கனுமே என்றான். இது கற்பன இல்ல சவால் என்றவளைப் புரியாமல் பார்த்தான் அர்ஜுன். நாங்க பேசமட்டும் இல்ல எங்களுக்கு திறம இருக்குனு நிரூபிக்குற, அப்படி நான் சொன்னமாதிரி நடந்துட்டா குரூப்பா பேசி சிரிச்சு விளையாட்டுத்தனமா இருக்கவங்க எல்லா வேல செய்ய மாட்டாங்க அப்படிங்குற உங்க எண்ணத்த மாத்திக்கனும், இந்த ப்ராஜெக்ட்டை  எங்க இஷ்டபடி செய்ய விடணும் ஓகேவா என்றாள் அதற்கு அர்ஜுன், உங்களால அது முடியலைன்னா நான்  சொல்ற மாதிரிதான் அதுக்கப்புறம் நீங்க வேல  செய்யனும் ஓகேவா என்றான். நந்தனா அவன் சவாலை ஏற்றுக்கொண்டாள்.