Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நந்தவனம் - 5

துர்காவை முதல் நாள் ஒத்திகைக்கு வரச்சொல்லி இருந்தார்கள், வந்த துர்கா பண்ணிய ஆர்பாட்டத்தில் அனைவருக்கும் தலைவலியே வந்துவிட்டது. ஒத்திகைக்கு வந்த துர்கா கதையை மாற்ற சொன்னாள், தனக்கு ஆடைகள் இப்படி இருக்கவேண்டும், கேமராவை இந்த ஏங்கிலில் வைக்க வேண்டும் என்று அனைவருக்கும் பாடம் எடுத்தாள். மொத்த டீமும் துர்காவோடு வேலை செய்ய முடியாது என்று நந்தனாவிடம் தெரிவித்தனர். இதுக்குத்தான் பாஸ் வேண்டான்னு சொல்லியிருப்பாரு போல நான் தான் தேவையில்லாம பெமினிசம் பேசி சொதப்பிட்டேன். என்று புலம்ப ஆரம்பித்தாள் நந்தனா, அவளைப் பார்த்து சிரித்த கதிரிடம் இப்ப எதுக்குடா சிரிக்குற ஒழுங்கா ஒரு வழி  சொல்லு என்றாள். அது சரி, பண்றது எல்லா நீ பண்ணிட்டு நா என்ன வழி சொல்றது, வேணுனா உனக்கு சீட்டு குலுக்கி போட ஐடியா குடுத்த ஜீனியஸ் கிட்ட வழி கேளு என்றவனின் முதுகுலையே ஒன்று போட்டாள்  ஜெனிஃபர். ஹே பண்றதெல்லா நீங்க ரெண்டுபேரும் பண்ணிட்டு என்ன  எதுக்கு இப்ப அடிக்குறீங்க  வேணுனா அந்த துர்காவ இப்படி ரெண்டு சாத்து சாத்துங்க அவளே போய்டுவ என்றான் கதிர். அது முடிஞ்ச உன்கிட்டயெல்லா எதுக்குடா ஐடியா கேக்கபோறோம் என்றாள் ஜெனிஃபர். இங்க மட்டும் நல்ல பேசுங்க என்றவன் என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு கேக்குறீங்களா என்றான். வேற வழி, சொல்லு என்றாள் நந்தனா. நாமதான் இன்னும் அக்ரிமெண்ட் சைன் பன்னலையே துர்காவ வேண்டான்னு சொல்லிட்டு நந்தனா செலக்ட் பண்ண மீதி ரெண்டு பேர்ல ஒருத்தர செலக்ட் பண்ணிடலாம். நல்ல ஐடியா தான் ஆனா இதுதான் உங்க ஹீரோயின் அப்படினு கிளைன்டுக்கு  அனுப்பியாச்சு அத மாத்தணுன பாஸ் தான் அவங்ககிட்ட பேசணும் என்றாள். வேற வழியே இல்ல நீ அவர்கிட்ட பேசித்தான் ஆகனும் என்றான் கதிர். தனக்கு வேறு வழி இல்லை என்று உணர்ந்த நந்தனா அர்ஜுனிடம் பேசச் சென்றாள்.

தன் எதிர்வந்து நின்று கையை பிசையும் நந்தனாவை ஆச்சரியமாக பார்த்தான் அர்ஜுன், உள்ள நுழையும்போதே பேசிக்கிட்டே வருவா இன்னைக்கு என்ன ஆச்சு இவளுக்கு?   நந்தனா எப்படி சொல்வது என்று பலமாதிரி யோசித்து, பாஸ் அதுவந்து நீங்க சொன்னது கரெக்ட் தான் குடும்பம் தான் முக்கியம், குடும்பத்துக்கு பிடிக்கலைன்னா நம்ப செய்யக்கூடாது. அதனால துர்காவுக்கு பதிலா நம்ப வேற ஹீரோயின்  செலக்ட் பண்ணிக்கலாம். நீங்க யார சொல்ரீங்களோ அவங்களே ஹீரோயின்னா இருக்கட்டும். நான் எப்ப இவகிட்ட குடும்பம் முக்கியம்னு சொன்னேன் என்று யோசித்து கொண்டிருந்தவன் அவள் சொன்னதைக்கேட்டு ஓ இதுதான் விஷயமா? அதெல்லாம் முடியாது. கிளைன்ட்க்கு யாரு பதில் சொல்றது? என்று கேட்டவனிடம், நீங்கதான் என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள் நந்தனா. உனக்கு உன் வாய் தான் வில்லன் என்று நினைத்துக்கொண்டவள் அது இல்ல பாஸ் நீங்கதான் அவங்ககிட்ட கரெக்ட்டா பேசுவீங்க எப்படியாவது பேசி சரி பண்ணிடுங்க, நான் அந்த துர்காவ அனுப்பிட்டு வந்து உங்கள பாக்குறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிட்டத்தட்ட ஓடிவந்தாள்.

நேராக துர்காவிடம் சென்றவள், கிளைன்ட் வேற ஹீரோயின் செலக்ட் பண்ணிவிட்டதாகச் சொல்லி தன்னால் எவுதும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டாள். தன்னை தவிர யார் நடித்தாலும் இந்த விளம்பரம் ஹிட் ஆகாது என்று சாபம் கொடுத்துவிட்டு கிளம்பிய துர்காவை வழியனுப்ப உடன் சென்றாள்  ஜெனிஃபர். பின்ன திரும்ப வந்துடுவாளோனு பயம்தான். அப்போது அர்ஜுனை அங்கு கண்ட துர்கா ஜெனிஃபர் சொல்ல சொல்ல கேட்காமல் அவன் ரூமிற்குள் சென்றாள். அவளை அங்கு சற்றும் எதிர் பார்த்திடாத அர்ஜுன், ஒரு நிமிடம் திகைத்து நின்றான்.  என்ன செய்வது என்று தெரியாமல் நந்தனாவை கூப்பிட சென்றாள் ஜெனிஃபர். திகைத்து நின்ற அர்ஜுனை கண்ட துர்கா இன்னும் என்ன இப்படி பாக்குறத நீங்க விடலையா மாமா? அவளை வெறுப்புடன் பார்த்தவன் மரியாதையா வெளில போய்டு இல்லைனா கழுதைப்பிடிச்சு தள்ள வேண்டியது இருக்கும், என்ன மாமா இவளோ நாள் கழிச்சு பாத்திருக்கோம் இப்படி கோவமா பேசுறீங்க எப்ப டெல்லில இருந்து வந்தீங்க ஏன் என்ன வந்து பாக்கல என்று பேசிக்கொண்டே அவன் அருகில் சென்றாள்.

ஜெனிஃபர் வந்து விஷயத்தை சொல்ல எங்க துர்கா, அர்ஜுன் மூலம் திரும்ப நடிக்க வந்துவிடுவாளோ என்று பயந்து அர்ஜுன் ரூமிற்கு சென்றாள் நந்தனா. அங்கு துர்கா அர்ஜுன் உணராத நேரத்தில் அவன் கையை பிடித்து அவனோடு ஒட்டி நின்று நீங்க என்னவிட்டு எங்கபோனாலும் திரும்ப என்கிட்ட வந்துதான் ஆகனும் மாமா என்று சொல்லி கொண்டிருந்தாள். நந்தனாவாள் தான் பார்த்ததை நம்ப முடியவில்லை.

நந்தனாவை கவனிக்காத அர்ஜுன் துர்காவை வேகமாக உதறி தள்ளினான்.  செக்யூரிட்டிக்கு போன் செய்து அவனது அறைக்கு வர சொன்னான். அதை கண்ட துர்கா நானே கிளம்புறேன். இனி அடிக்கடி பாக்கலாம் மாமா. என்று சொல்லி அவனைப் பார்த்து கண்ணடித்துவிட்டுச் சென்றாள். அங்கு நிற்க முடியாமல் வேகமாக வெளியில் வந்த நந்தனா, யாரையும் பார்க்காமல் ஸிக் ரூமிற்கு சென்று அடைந்தாள்.

ரூமிற்குள் சென்ற உடன் அவளை மீறி அழுகை வந்தது. சிறிதுகாலமாக இருந்த சந்தேகம்தான் இன்று அர்ஜுனின் கையை வேறு பெண் பிடித்துநின்றதைப் பார்த்ததும் நந்தனாவிற்கு தெளிவாக புரிந்தது. அவளால் அர்ஜுனை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என்று. வெகுநேரம் கழித்து வந்த நந்தனாவிடம் என்ன நடந்தது என்று ஜெனிஃபர் கேட்க தான் போவதற்குள் துர்கா சென்று விட்டதாக சொல்லிவிட்டு வேலை செய்வதுபோல் திரும்பிக் கொண்டாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்த கதிருக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.

அன்று மாலை கதிரிடம் பீச்க்கு போகலாம் என்று கூறினாள் நந்தனா. என்ன வரப்போகுது என்று ஊகித்திருந்த கதிர் அவளிடம் எதுவும் காட்டிக்காமல்  பீச்க்கு சென்றான்.

சிறிது நேரம் அலையை ரசித்து கொண்டிருந்த நந்தனா, கதிரிடம் திரும்பி நா அர்ஜூன நேசிக்குறேன், இனி இருக்கப்போற என்னோட வாழ்க்கைய அர்ஜூன்கூட வாழனுன்னு ஆசைப்படுறேன், நீ என்கிட்ட என்னோட மாற்றம் என்னனு கண்டுபிடிச்சு சொல்ல சொன்னல, அது அர்ஜுன் தான் என்றாள். அவளைப் பார்த்து பெரிதாக புன்னகைத்த கதிர் இது  எனக்கு முன்னாடியே தெரியும், உனக்கு இப்பதான் தெரிஞ்சு இருக்கு என்றான். உனக்கு தெரியாம இருந்தாதான் ஆச்சரியம் என்று சொல்லி அன்று அலுவலகத்தில் நடந்ததை கதிரிடம் சொன்னாள். சொல்லும்போதே சுருங்கிவிட்ட நந்தனாவின் முகத்தை பார்த்தவன், நீ என்ன லூசா அவரே அவளை செக்யூரிட்டி கூப்பிட்டு வெளில அனுப்ப பாத்திருக்காரு அப்பவே தெரிலைய அவருக்கு அவளை ஆகாதுன்னு அப்புறம் எதுக்கு நீ பயப்படுற என்றான். ஹ்ம்ம்  சரிதான் என்று சொன்னவள் மூன்று மாதம் கழித்து வரப்போகும் தன்னோட பிறந்தநாள் அன்று அர்ஜுனிடம் தன் காதலை சொல்லப்போவதாகச் சொன்னாள்.