“ஏய் அச்சு, இவ என்னத்தடி இப்படி யோசிச்சுக்கிட்டு இருக்கா?”
“அது ஒண்ணும் இல்லடி. இந்த ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்து, அதுக்குக் காசு வாங்கினா, ‘இந்தக் காசு இவளுக்கு எப்படி வந்துச்சு?’ன்னு வீட்ல இருக்குறவங்க கேட்பாங்களாம். அதுக்குத்தான் அவங்க வீட்டுல இருக்குறவங்களை என்ன சொல்லி சமாளிக்கலாம்னு மேடம் யோசிக்கிறாங்க.”
“நான் அந்தப் ப்ராஜெக்ட்டைச் செஞ்சு கொடிடுன்னு சொன்னா, இல்லை வேண்டான்னு சொல்றா. நீயே சொல்லுடி. அவ இந்தப் ப்ராஜெக்ட்டைச் செஞ்சு கொடுத்தா, அதுல வர காசை வச்சு அவளுக்குத் தேவையானத அவ வாங்கிக்கலாம் இல்ல? அதைச் சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்குறா.”
“மலரு, அச்சு சொல்றதுதான் சரி. நீ அந்தப் ப்ராஜெக்ட்டைச் செஞ்சு கொடுத்தேன்னா, அவங்க கொடுக்குற காசை வாங்கி உனக்குத் தகுந்ததை நீ வாங்கிக்கலாம். இந்தப் ப்ராஜெக்ட்டை நீ பயப்படாமல் செய். உனக்குத் துணையா நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்.”
“சரி, நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்க. அதனால நான் அந்தப் ப்ராஜெக்ட் செய்றேன். நீங்களும் எனக்கு ஹெல்ப் பண்ணனும்.”
“சரி, நாங்களும் ஹெல்ப் பண்றோம், சரியா?” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்களின் புரொபசர் கிளாஸ்க்கு வந்து விட அதில் அனைவரும் அமைதியாகி கிளாசை கவனிக்க இவர்களும் பேச்சை நிறுத்திவிட்டு கிளாஸைக் கவனிக்க ஆரம்பித்தனர்.
*********
துருவன் அவனுடைய கேபினில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது அவனுடைய போன் அடிக்க, யார் என்று பார்க்க அக்னிதான் அழைத்து இருந்தான்.
போனை எடுத்தவன்: “சொல்லு அக்னி, ஏதாவது முக்கியமான விஷயமா? நான் கொஞ்சம் வேலையா இருக்கேன்.”
“அப்படி என்ன முக்கியமான வேலை?”
“அந்த கவர்ன்மென்ட் டெண்டர் விஷயமா கொட்டேஷன் ரெடி பண்ணிட்டு இருக்கேன்.”
“சரி, அதை முடிச்சிட்டு என்னோட கேபினுக்கு வா,” என்று போனை வைத்துவிட்டான் அக்னி.
துருவனும் அவனுடைய வேலையை முடித்துவிட்டு அக்னியின் கேபினைக் தட்டிவிட்டு உள்ளே சென்றவன்.
“சொல்லு அக்னி, எதுக்கு என்னைக் கூப்பிட்ட?” என்று கேட்டான்.
“டேய், அந்த ஹோட்டல் கட்டுறதுக்கு ஒரு நல்ல ஆர்க்கிடெக்ட் டிசைனர் கேட்டேன் இல்ல? கண்டுபிடிச்சியா இல்லையா?”
“இன்னும் இல்லை அக்னி. அதுக்கு இன்னும் ஒரு மாதம் டைம் இருக்கு இல்ல? அப்புறம் என்ன?”
“டைம் இருக்குது தான் நான் இல்லைன்னு சொல்லல. அதுக்காக அப்படியே இருக்க முடியுமா? இப்ப இருந்தே தேட ஆரம்பிச்சாதான் நல்ல டிசைனர் கிடைப்பாங்க.”
“சரி அக்னி, நான் தேடுறேன்.”
“சரி, நம்ம ஒரு வாரத்துக்குள்ள முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட் பத்தி நேத்து மீட்டிங்ல பேசினோம் இல்ல? இப்ப அந்தப் ப்ராஜெக்ட் எந்த நிலைமையில் இருக்கு?”
“அக்னி, நேத்து நாம மீட்டிங்கில் இருக்கிறப்பவே அந்தப் ப்ராஜெக்ட் பாதி முடிச்சிருந்தாங்க நம்ம ஒர்க்கர்ஸ். இப்ப நம்ம ஒரு வாரத்துக்குள்ள முடிக்கணும்னு சொன்னதை இரண்டே நாள்ல நம்ம ஒர்க்கர்ஸ் முடிச்சிடுவாங்க. நாளைக்கு எல்லாம் முடிஞ்சிடும் அந்தப் ப்ராஜெக்ட்.”
“ஓகே, அந்தப் ப்ராஜெக்ட் நாளைக்கு முடிஞ்சதுனா நம்ம நாளைக்கு நைட்டே கோயம்புத்தூர் கிளம்பிடலாம், சரியா? இப்ப போய் உன்னோட வேலையைப் பாரு,” என்று அக்னி சொன்னதும் துருவனும் தன்னுடைய கேபினுக்குச் சென்றுவிட்டான்.
அக்னி தன்னுடைய கேபினில் சேரில் தலையைச் சாய்த்து கண்ணை மூடி அமர்ந்திருந்தான்.
‘என்னாச்சு எனக்கு? நாளைக்கு நைட்டு கோயம்புத்தூர் போறேன்னு சொன்னதும் ஏன் என் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு? நான் நிறைய டைம் கோயம்புத்தூர் போயிருக்கேன். அப்பவெல்லாம் இப்படி இல்லையே. இன்னைக்கு எனக்கு என்ன ஆச்சு?’ என்று கண்ணை மூடி தன்னுடைய மனது தடுமாறுவது ஏன் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
(அவனுக்கு எப்படித் தெரியும் திரும்பி வரும்போது தன்னோட பொக்கிஷத்தைத் தூக்கிட்டு வருவான் என்று. அக்னியே நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டான் ஒரு பெண்ணின் மீது அந்த அளவுக்குக் காதல் வயப்படுவான் என்று. அவனிடம் யார் சொல்வது?)
********
இங்கு தங்களுடைய கல்லூரி முடிந்தது மூவரும் வெளியே வந்தவர்கள் எப்போதும்போல் பேசிக்கொண்டே பஸ் ஸ்டாப் வந்து சேர்ந்தனர்.
அப்போது வளர்மதி ஒரு பையனுடன் வந்து அவர்களின் அருகே பைக்கில் நின்றாள்.
இவர்கள் மூவரும் அவளைத்தான் பார்த்தனர்.
கீழே இறங்கி வந்து வளர்மதி “அக்கா, இவர் தான் எங்க அண்ணன் அஜய் கிருஷ்ணா.”
“அண்ணா, இவங்கதான் உங்களுக்குப் ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்த மலர் அக்கா,” என்று இருவருக்கும் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
பைக்கில் இருந்து கீழே இறங்கிய அஜய்:
“ஹாய், ஐ அம் அஜய்,” என்று கையை நீட்டினான். ஆனால் அவள் அவனுக்குக் கைகொடுக்காமல், “ஹாய்,” என்று மட்டும் சொன்னாள்.
“சொல்லுங்க அண்ணா, எங்களை பார்க்க இப்ப வந்திருக்கீங்க. ஏதாவது முக்கியமான விஷயமா? நாளைக்குத்தானே ப்ராஜெக்ட் பத்தி பேச வரதா சொன்னா, நீங்க இன்னைக்கே வந்திருக்கீங்க.” என்று மலர் கேட்க.
“அது ஒண்ணும் இல்லைமா. இதுதான் நாங்க வீட்டுக்குப் போற வழி. நாங்க வீட்டுக்குப் போயிட்டு இருக்கும்போதுதான் வளர் உங்களைப் பார்த்தா. பார்த்ததும் என்கிட்ட நீங்கதான் ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்தீங்கன்னு சொன்னா. அதனாலதான் உன்னைப் பார்க்க பைக்கை நிறுத்திட்டேன்.”
“ஓ, அப்படிங்களா? சரிங்க அண்ணா, நாளைக்கு நான் அந்தப் ப்ராஜெக்ட் உங்களுக்குச் செஞ்சு தர்றேன்.”
“நீ ஆர்க்கிடெக்சரா படிக்கிற?”
“இல்லை அண்ணா, எனக்கு டிசைன் எல்லாம் ரொம்ப பிடிக்கும். அன்னைக்கு உங்க தங்கச்சி பேசிட்டு இருக்குறதை எதற்ச்சியா கேட்டுட்டுதான் அதை நான் செஞ்சு கொடுத்தேன்.”
“அப்படியா? நம்பவே முடியல. சூப்பரா இருந்துச்சுமா. நாங்களாம் என்னதான் அந்தக் கோர்ஸ் எடுத்துப் படிச்சாலும் எங்க மண்டையில உன்னோட அளவுக்கு நல்லா வரமாட்டேங்குது.”
“ஆனா நீ செம்மையா அந்தப் ப்ராஜெக்ட் முடிச்சு கொடுத்திருந்த. கட்டிட டிசைன் மட்டும் தான் தெரியுமா இல்லை எல்லா டிசைனும் தெரியுமா?”
“இல்லை அண்ணா, நான் எல்லா டிசைனும் வரைவேன். அதுவும் ஒருத்தர் சொல்றதை வச்சு அப்படியே வரைந்து கொடுத்துடுவேன்.”
“அன்னைக்குக்கூட வளர்மதி அவங்க ஃப்ரண்ட்ஸ்கிட்ட பேசி இருந்து கேட்டுட்டுதான் நான் அந்தப் ப்ராஜெக்ட் ரெடி பண்ணினேன்.”
“சூப்பர்மா. இந்த டேலண்ட்க்கு நீ டிசைனிங் கோர்ஸ் எடுத்து இருக்கலாமேம்மா?”
“இல்லை அண்ணா, ஆர்க்கிடெக்சர் கோர்ஸ் எடுத்துப் படிக்கணும்னா ரொம்ப செலவாகும். நானே ஸ்காலர்ஷிப்லதான் படிக்கிறேன் அண்ணா.”
“அப்படியா? உனக்கு ரொம்ப டேலன்ட் இருக்குமா. உனக்கு ஏதாவது உதவி வேணும்னா கேளு. கண்டிப்பா நான் செய்கிறேன். சரி, நாங்க போயிட்டு வர்றோம்மா,” என்று அங்கிருந்து வளர்மதியும் அஜய் கிருஷ்ணனும் கிளம்பினார்கள்.
அவர்கள் போனதும் தீபாதான்: “ரொம்ப நல்ல அண்ணனாகத்தான் இருக்காங்க. நல்லாத்தான் பேசுறாங்க. ஆனா கொஞ்சம் நெருங்கிப் பேசத்தான் பயமா இருக்கு. இந்தக் காலத்துல யாரை நம்பறது, யாரை நம்பக்கூடாதுன்னு தெரிய மாட்டேங்குது.”
“நம்ம வேற யார்கிட்ட நெருங்கிப் பேசப் போறோம்? எப்பவும் நம்ம மூணு பேரும் ஒண்ணாத்தான் இருக்கிறோம். அதுவே போதும்,” இதில் அச்சு இருவரும் கோவபடுவது பதில் கூறினாள்.
“எனக்கு நீங்க ரெண்டு பேரும் மட்டும் போதாதுப்பா. எனக்குன்னு வர ஆள்கிட்ட பேசி, லவ் பண்ணி, கல்யாணம் பண்ணனும்.”
“ஏ அச்சு, உன்னை யாரு கல்யாணம் பண்ண வேண்டாம்னு சொன்னா? நீ லவ் பண்ணு, கல்யாணம் பண்ணு, எல்லாம் பண்ணு. உன்னை யாரு கேட்கப்போறாங்க? உங்க வீட்டிலேயே நீ சொல்றதுதான் உங்க அப்பா, உங்க அம்மாவும் கேக்குறாங்க. அப்புறம் என்ன உனக்கு?”
“ஆனா உனக்கு வர புருஷனும் எங்க நீ சொல்றதை மட்டும் கேட்குற மாதிரி வந்துருவாரோன்னு பயமா இருக்கு. அப்படி மட்டும் வந்துட்டான்னு வச்சுக்க, உன்னை எல்லாம் கையிலேயே பிடிக்க முடியாது.”
“கண்டிப்பா மலரு, எனக்கு வரப்போற புருஷனும் நான் சொல்றதைக் கேட்குற மாதிரிதான் இருப்பான். நீ வேணா பாரு! டேய் கணவா, எங்கடா இருக்க? எப்படா வருவ?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டிருந்தாள்.
“அடியே தீபா, அவளுக்குப் பைத்தியம் முத்திருச்சு போல. அதுதான் தானா புலம்புறா. இவ புலம்புரத பார்த்தா நான் நாளைக்கு அவளைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டு போகணும் போல.”
“நீ சொல்றதும் சரிதான். மலரு பார்த்தா அப்படித்தான் தெரியுது. நம்ம கீழ்ப்பாக்கத்துக்குத்தான் கூட்டிட்டு போகணும் போல.”
“என்னடி, இரண்டு பேர் சொல்லி என்னைக் கிண்டல் பண்றீங்களா? நீ வேணா பாரு, எனக்கு வரப்போற புருஷன் நான் நினைச்ச மாதிரிதான் இருப்பான்.”
“
அதையும் நாங்க பார்க்கத்தானே போறோம். இப்ப பஸ் வந்திருச்சு, பஸ்ல ஏறு. எனக்கு வேற லேட் ஆகிட்டே இருக்கு. நேத்து கொஞ்சம் லேட்டா போனதுக்கே பெரியம்மா என்னை திட்டினாங்க. இன்னைக்கும் நான் லேட்டா போனா அவ்வளவுதான் நான்,” என்றாள் பஸ்ஸில் ஏறி சீட்டில் உட்கார்ந்துகொண்டே பேசினாள்.
“ஏண்டி, உங்க பெரியம்மா உன்னை திட்டலைன்னு சொன்னால்தானேடி அதிசயம்! ரொம்ப பயப்படற மாதிரி நடிக்காத. டெய்லி நீ வாங்கறதுதானே? அப்புறம் என்ன விடு.”
“உங்ககிட்ட ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன். காலையில பெரியம்மாவோட அண்ணன் பையன் ஒருத்தன், அவனோட ஃப்ரெண்ட் அப்படின்னு ரெண்டு பேர் வந்தாங்க. இரண்டு பேரும் மூஞ்சியுமே சரியில்லை. அவங்க பார்வையும் சரியில்லை.”
“என்னடி சொல்ற? ஏற்கனவே அந்த வீட்ல உன்னைத் திட்டாதவங்கன்னு யாருமே இல்லை, ஒரு ரெண்டு பேரைத் தவிர? இதுல புதுசா ரெண்டு பேர வேற திட்டறதுக்குச் சேர்ந்திருக்கானுங்களா?”
“சரி சரி, நாளைக்குப் பேசிக்கலாம். அடுத்த ஸ்டாப் நம்ம ஸ்டாப் தான். ஏ தீபா, நாளைக்கு ஹாஸ்பிட்டலுக்குப் போய் டாக்டர் கிட்ட அவங்க அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் வாங்கிக்க. ஞாபகமா மறந்துடாத.”
“சரி மலரு, நான் நாளைக்கு வாங்கிறேன். நாளைக்கு காலேஜ் முடிஞ்சு பிறகு தான் வாங்கணும்.”
கீழே இறங்கியவுடன் மலர் வேகமாக வீட்டுக்கு நடந்தாள். ஏனென்றால் நேத்து வாங்குன திட்டு அப்படி! கேட்டைக் தாண்டி உள்ளே போனவுடன் முதலில் பார்த்தது தோட்டத்தில் இருந்த ஜெய், கைலாஷ் இரண்டு பேரைத்தான். அவர்களைப் பார்த்ததும் பார்க்காத மாதிரி கீழே பார்த்துக்கொண்டு நடந்து வீட்டின் உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் வேக வேகமாகச் சென்றது தெரியாத பேயிடம் மாட்டாமல், தெரிந்த பேயிடம் உள்ளே போய் மாட்டிக்கொண்டாள்.
யாராக இருக்கும் அந்தப் பேய்?
அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
மலர் வருவாள்...