Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

அக்னியை ஆளும் மலரவள் - 6


 “நான் கோபமா இருக்கேன்,” என்று துருவன் அக்னி அறையில் இருந்து செல்ல, போகும் அவனைத்தான் அக்னியும் பார்த்துக்கொண்டிருந்தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு அன்பு என்றால் அது நட்பு மட்டும் தான்.

அக்னியிடம் பேசிவிட்டு வந்த துருவன் ஆதிக்கு போன் செய்ய, அந்த பக்கம் இருந்து போனை எடுத்த ஆதி “என்னடா, அண்ணன் கிட்ட பேசிட்டியா? உன்கிட்ட என்ன சொன்னார்?”

“நீ வேற ஏண்டா, நான் அதைக் கேட்டதுமே அவன் ஒரு மொற பொரைச்சான் பாரு நானே கொஞ்ச நேரம் ஷார்க் ஆயிட்டேன். ஆனாலும் நீ சொன்னதை என்னால நம்பவே முடியலடா ஆதி. அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணுமுன்னு ரொம்பக் கவலைப்பட்டேன். நல்ல வேளை, இப்பவாவது அவனுக்குப் புத்தி வந்துச்சே.”

“டேய், நானே அப்படித்தான்டா நினைச்சுட்டு இருந்தேன். அண்ணன் அவங்க பாட்டி சொன்னதைக் கேட்டு எங்க கல்யாணமே வேண்டான்னு சொல்லிடுவாரோன்னு பயந்தேன். ஆனால் அதுக்கு ஆப்போசிட்டா முடிவெடுத்து அவங்க பாட்டிக்கு சவால் விட்டுட்டு வந்துட்டாரு”

“ஆனா ஒன்னுடா, அந்தப் பவுடர் போட்ட மூஞ்சை சாக்கடைன்னு சொன்னாரு பாரு, எனக்கு அங்கேயே சிரிப்பு வந்துருச்சுடா. அந்த இடத்துல சிரிப்பை அடக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். நீ மட்டும் அங்க இருந்தா உனக்கு அப்படித்தான் இருந்துருக்கும். ஆனால் அந்தப் பாட்டி ரொம்பப் பேசுதுடா. தகுதியானவங்ககிட்ட மட்டும் தான் பழகணுமாம். அதைச் சொல்லும்போது என்னைப் பார்த்துட்டு சொல்லுதுடா. இப்பதான் தெரியுது எதுக்கு அண்ணன் அவங்ககூட இருக்கிறது இல்லைன்னு. நம்ம அண்ணன்னுக்கு ரொம்பக் கோவம் வரும்தான். அதுக்காக இந்த மாதிரி நடந்துக்க மாட்டாரு. அண்ணனுக்கு அவரு நினைச்ச மாதிரியே பொண்ணு கிடைக்கணும்டா. அப்பதான் அவரு சந்தோஷமா இருப்பாரு. அவரை சந்தோஷப்படுத்தப் போற அண்ணி எங்கே எப்படி இருக்கிறாங்களோ, நாமதான் சீக்கிரம் கண்டுபிடிக்கணும்.”

“ஆமாண்டா, சீக்கிரம் கண்டுபிடிக்கணும். நாங்க கோயம்புத்தூர் போறோம்ல? போயிட்டு வந்த உடனே அவனுக்குப் பொண்ணு தேடுறோம், சரியா?”

“சரி ஓகே டா, பாய்.”

“சரிடா, எனக்கும் வேலை இருக்கு. நானும் என் வேலையைப் பார்க்கிறேன்” என்று கூறி போனை வைத்தான்.

அக்னி ஆபீஸ் கேன்டீனில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

“ஏண்டி, மூஞ்சை இப்படி தூக்கி வெச்சுட்டு உட்கார்ந்து இருக்க?”

“உனக்குத்தான் தெரியும் இல்ல மாலு? அப்புறம் எதுக்குக் கேட்கிற? நான் எதுக்குச் சோகமா இருக்கேன்னு உனக்குத் தெரியாதா?”

“எனக்கு எல்லாம் தெரியும். தெரிஞ்சு என்ன பண்ண முடியும்? நீயும் அவர்கிட்ட சொல்ல மாட்டேங்குற. அப்புறம் நான் என்ன பண்ண முடியும்?”

“அவரு ஆபீசுக்கு மூணு மாசம் வரமாட்டார்னு தெரிஞ்சதுல இருந்து என்னாலத் தாங்கிக்கவே முடியல மாலு. நான் இந்த ஆபீசுக்கு வர்றதுக்குக் காரணமே அவர்தான். எங்க வீட்டுல என்னை வேலைக்கு அனுப்ப மாட்டேன்னு சொன்னாங்க. நான் இவருக்காகத்தான் இந்த வேலையிலேயே சேர்ந்தேன்.”

“ஏண்டி தீபி, நீ பெரிய பணக்காரியாவும் இருக்க, அழகாகவும் இருக்க. உனக்கு என்ன, பையன் கிடைக்க மாட்டானா? எதுக்கு இவர் தான் வேணும்னு ஒத்தக்கால்ல நிக்கிற?”
“பார்த்த இல்ல, காலையில ஒரு மேக்கப் போட்டு மேனாமினுக்கினு வந்தாளே, அவதான் சாரோட அத்தை பொண்ணாம். அவளைத்தான் சார் கல்யாணம் பண்ணிக்கப் போறாராம்.”

“உனக்கு யார் சொன்னா? அவரு சொன்னாரா? நீதான் பார்த்த இல்ல, அவ ரூமுக்குள்ள போனதும் அவரு எப்படி கத்தினாரு? கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு இப்படித்தான் அவரோட கேபினுக்குப் போனா கத்து வாங்களா? இதிலிருந்தே தெரிய வேண்டாமா அவருக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்கலைன்னு? அதுவும் அவ டிரஸ்ஸும், மூஞ்சியும், அவளைப் போய் அவரு கல்யாணம் பண்ணிக்குவாருன்னு சொல்றியே, கொஞ்சமாவது மூளை இருக்காடிஉனக்கு?” என்று திட்டினாள்.

“சரி, என்னமோ போ. சீக்கிரம் அவர்கிட்ட உன்னோட லவ்வ சொல்ற வேலையைப் பாரு. இல்லைன்னா வேற எவளாவது அவர் வாழ்க்கையில வந்துடப் போறா.”

“அது மட்டும் நடக்காது. நடக்கிறதுக்கு நானும் அனுமதிக்க மாட்டேன். அவரு எனக்கு மட்டும்தான்.”

“என்னடி, திடீர்னு இப்படி பேசுற?”

“ஆமா, எனக்கு அவர் கிடைக்கிறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவேன். நான் நல்ல பொண்ணுதான். ஆனா அவரு விஷயத்துல கிடையாது,” என்று கோவமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் தீபி.

 மாலு தான் என்ன சொல்வது என்று முழித்துக்கொண்டிருந்தாள்.
“ஐயோ, என்ன இப்படி சொல்லிட்டுப் போறா? என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே! இவ பேசுறதை பார்த்தா எனக்குக் கொஞ்சம் பயமாதான் இருக்கு,” என்று அங்கிருந்து அவளோட தளத்திற்குச் சென்றாள்.

(முதல்ல பேசும்போது நல்லதா பேசுச்சு. கடைசில இதுவும் வில்லி மாதிரி பேசிட்டுப் போகுது. என்ன நடக்குமோ இவளால நம்ம ஹீரோயினுக்கு ஏதாவது பிராப்ளம் வந்துருமோ🤔?)

இவர்கள் இருவரும் பேசியதை துருவன் கேட்டுக்கொண்டுதான் இருந்தான். ‘கொஞ்சம் தலைவலிக்கிற மாதிரி இருக்கு’ என்று டீ சொல்லலாம் என்று போனை எடுத்து கால் செய்தான். என்ன நினைத்தானோ, போனை கட் செய்துவிட்டு அவனே கேன்டீன் சென்றான். அப்போதுதான் அவர்கள் பேசியதைக் கேட்டான்.

“என்ன, இந்தப் பொண்ணு இப்படி சொல்லிட்டுப் போகுது? முதல்ல பேசும்போது இந்தப் பொண்ணுதான் நம்ம அக்னிக்குச் சரியான ஜோடின்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன். ஆனா கடைசியா பேசினதைக் கேட்டு கொஞ்சம் யோசிக்கணும்போல இருக்கே! எதுக்கும் நாம கோயம்புத்தூர் போயிட்டு வந்து யோசிப்போம்,” என்று அங்கிருந்து தனது கேபினுக்குச் சென்றான் துருவன் .

**********

இங்கு காலேஜில் அச்சு மலர் இருவரும் பேசிக்கொண்டிருக்க, அப்போது அவர்கள் கிளாசில் உள்ள ஒரு பெண் அச்சுவிடம், “அர்ச்சனா உன்னை யாரோ ஒரு பொண்ணு கூப்பிடுது வெளியில தான் நிக்குது என்னன்னு போய் கேளு,” என்று கூறி விட்டு செல்ல

 அச்சுவும் எழுந்து மலரிடம், “நான் யாருன்னு பார்த்துட்டு வர்றேன்,” என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

 மலரும், “இருடி, நானும் வரேன்,” என்று அவளின் பின்னேன் சென்றால்.

 இரண்டு பேரும் வெளியில் வந்து பார்க்க, அங்கு மலர் ஒரு நாள் ஃபர்ஸ்ட் இயர் மாணவியின் அண்ணனுக்கு ப்ராஜெக்ட் செய்து கொடுத்திருந்தாள், அந்தப் பெண் தான் வெளியில் நின்றுகொண்டிருந்தால்.

 அவளைப் பார்த்ததும் அச்சு,
“ஏய் மலரு, இந்தப் பொண்ணு உனக்கு ஞாபகம் இருக்கா? நீ கூட ஒரு நாள் அவளோட அண்ணனுக்குப் ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்தியே, அந்தப் பொண்ணுதான் இந்தப் பொண்ணு,” என்று கேட்டாள்.

“ஆமா அச்சு, அந்தப் பொண்ணுதான் இந்தப் பொண்ணு. இப்ப எதுக்கு இங்க வந்திருக்கு தெரியலையே. சரி வா, என்னன்னு போய் அந்தப் பொண்ணுகிட்ட கேட்போம்,” என்று அந்தப் பெண்ணிடம் இருவரும் சென்றனர்.

“ஏன் பாப்பா, நீ வளர்மதிதானே? என்ன இங்க வந்து இருக்க? நீ எதுக்கு அச்சுவைக் கூப்பிட்ட?” என்றும் மலர் கேட்டாள்.

“அக்கா, நீங்க ஒரு நாள் எனக்கு ஒரு ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்தீங்க இல்ல? அதே மாதிரி இன்னொன்னு செஞ்சு தர முடியுமா? காசு கூட தரேன்னு சொன்னாங்க அக்கா. அன்னைக்கு நீங்க செஞ்சு கொடுத்த ப்ராஜெக்ட் சூப்பரா இருந்துச்சுன்னு சொல்லி புரொபசரே பாராட்டினாராம். அதனாலதான் அண்ணனோட ஃப்ரண்ட்ஸும் உங்ககிட்டயே ப்ராஜெக்ட் செஞ்சு தர முடியுமான்னு கேட்க சொன்னாங்க.”

“அன்னைக்கு நீங்க செஞ்ச ப்ராஜெக்ட்ட இந்த அக்கா தான் கொண்டு வந்து கொடுத்தாங்க. அவங்கதான் அவங்க பேரு அர்ச்சனான்னு சொன்னாங்க. உங்க பேரு எனக்குத் தெரியாது. அதனாலதான் அவங்களைச் சொல்லி கேட்டேன். உங்க பேரு என்னக்கா?” என்று கேட்டாள்.

“என்னோட பேர் மலர்விழி. அப்புறம் நீ சொன்ன விஷயத்தைப் பத்தி நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்,” என்றாள் மலர்.

“சரிங்க அக்கா, நான் போயிட்டு வரேன். கண்டிப்பா நீங்க என்கிட்ட யோசிச்சு பதில் சொல்லணும். நாளைக்கு நான் மறுபடியும் இங்கே வர்றேன்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

“ஏய் மலரு, ஏன் நீ உடனே அந்தப் பொண்ணுகிட்ட பதில் சொல்லல? நீ செஞ்சு தரேன்னு சொல்லி இருக்கலாம் இல்ல? எதுக்கு ‘நான் யோசிச்சு சொல்றேன்’னு சொன்ன?”

“இல்லை அச்சு, ப்ராஜெக்ட் செஞ்சு தர்றது ஒரு பிரச்சினையும் இல்லை. அதுக்குக் காசு வாங்கறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.”

“இங்க பாரு மலர், இதுல கஷ்டப்படுற மாதிரி ஒரு விஷயமும் இல்லை. நீ ப்ராஜெக்ட் செய்து கொடுத்து காசு வாங்கி நீ ஆசைப்பட்டது நீ வாங்கிக்கலாம். யார் கிட்டயும் நீ கை நீட்டி காசு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நீ போட்டிருக்கிற சுடிதார் பாரு, ஒரு வயசுப் பொண்ணு போட்டு இருக்கிற மாதிரியா நீ போட்டு இருக்கிற?”
“நீ அந்தப் ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்தேன்னா அந்த காசுல நீ துணிகூட வாங்கிக்கலாம். உங்க வீட்ல கேட்டா, ‘ப்ராஜெக்ட் கொடுத்ததற்கு காசு வாங்கி எடுத்தேன்’னு சொல்லு. அப்பாவாவது உங்கள் வீட்டில் இருக்குறவங்களுக்கு மண்டையில உறைக்குதான்னு பார்ப்போம். பெத்த பொண்ணுக்கு அந்த வீட்டில் ஒரு நல்ல துணிகூட வாங்கிக் தர முடியலைன்னு என்றால் சிறிது கோபமாக.”

“இல்லை அச்சு, வீட்ல தெரிஞ்சா திட்டு வாங்களோனு பயமா இருக்கு.”

“ஏண்டி, என்னைக்குத்தான் உங்கள் வீட்டில் உன்னைத் திட்டாமல் இருக்காங்க? புதுசா திட்டறதுக்கு வா நாம போய் அந்தப் பொண்ணுகிட்ட ப்ராஜெக்ட் செய்து தரேன்னு சொல்லிட்டு வந்துடலாம்,” என்று அங்கிருந்து மலரை இழுத்துக்கொண்டு சென்றாள்.

அந்தப் பொண்ணு அப்போதுதான் அவள் கிலசின் அறைக்குப் பக்கத்தில் சென்றுகொண்டிருந்தாள். அதைப் பார்த்து அச்சு, “ஏய் பாப்பா, கொஞ்சம் நில்லு,” என்று சொல்லி அவளிடம் மலரை அழைத்துச் சென்றாள்.

“வளர்மதி, நீ சொன்ன ப்ராஜெக்ட் அவ செஞ்சு தருவா. நீ அவங்ககிட்ட சொல்லிட்டு நாளைக்கு வந்து எங்ககிட்ட அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லு. இப்ப எங்களுக்கு கிளாசுக்கு டைம் ஆச்சு. அதனால நாங்க கிளம்புறோம்,” என்று அந்த பெண்ணிடம் கூறி விட்டு அங்கிருந்து சென்றனர்.

“ஏய், ரெண்டு பேரும் எங்கடி போயிட்டு வர்றீங்க? உங்களை எங்கெல்லாம் தேடுறது? என்னை மட்டும் விட்டுட்டுப் போயிட்டீங்க,” என்று தீபா கேட்டாள்.

“அது ஒன்னும் இல்லைடி. அன்னைக்கு மலர் ஒரு பொண்ணுக்குப் ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்தா இல்ல? அந்தப் பொண்ணு மறுபடியும் வந்து அதே மாதிரி ஒரு ப்ராஜெக்ட் செஞ்சு கொடுக்க முடியுமான்னு கேட்டுச்சு. அதுக்குக் காசு கூட தரேன்னு சொல்லுச்சு. அதுதான் போய்ப் பார்த்து பேசிட்டு வந்தோம்,” என்றாள் அச்சு தீபாவிடம்.

தீபா மலரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆனால் மலர் யாரையும் பார்க்காமல் ஏதோ யோசித்துக்கொண்டிருந்தாள்.

        
           மலர் வருவாள்...