Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நெருங்கி வா தேவதையே - Part 32

ஜோ அருணை சந்தித்தான் . என்ன மச்சான் அதுக்குள்ள சோர்ந்து போய்விட்டாய். டேய் பூஜாவை பார்க்காம என்னால இருக்க முடியலடா. எப்போதும் அவ நினைப்பாவே இருக்குடா என்றான் அருண். அதுதான் சௌமியா மேம் பூஜா அப்பாகிட்ட பேசுறேன் அப்படின்னு சொல்லி இருக்காங்களேடா என்றான். சரிடா அப்புறம் பார்க்கலாம் நான் கொஞ்சம் தனியா இருந்தா பெட்டர் ஆ பீல் பண்ணுறேன் என்றான் அருண். டேய் எப்படா காலேஜ் வருவே . எனக்கே தெரியலடா சீக்கிரமே வருவேன் என்றான் அருண். சௌமியா பூஜா அப்பாவிடம் பேசினார். மேடம் உங்கள பத்தி பூஜா ரொம்ப பெருமையா சொல்லி இருக்கிறாள் ஆனா மியூசிக் ஆல்பம் நடிக்கிறது அவ்வளவு ஈசி இல்லை. அவ படிப்பு வேற இருக்கு. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நானே உங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லுறேன் என்றார்.ஜோ ரஷ்மிக்கு ஃபோன் செய்தான் என்னாச்சு ஜோ என்றாள். அருண் சொல்வதையே கேட்க மாட்டேன் என்கிறான். காலேஜ் பக்கமே வருவதில்லை என்றான். நீ கொஞ்சம் அவனிடம் பேசினால் அவன் ஒரு வேளை காலேஜ் வரலாம் என்றான். நானா ?பூஜா சொன்னால்தான் சரியாக இருக்கும். சரி நானே பேசுகிறேன் என்றாள் ரஷ்மி.

அருணுக்கு ஃபோன் செய்தாள் ரஷ்மி. எங்கே இருக்கிறாய் வீட்டில்தான் இருக்கிறேன். இப்போ வந்தால் உன்னை பார்க்க முடியுமா ஏதாவது வேலையா இருக்கிறாயா ? இல்லைஇல்லை நான் உன்னை பார்க்க வருகிறேன் என்றாள். வேண்டாம் ரஷ்மி ஜோ ஏதாவது சொன்னானா அதை விடு நான் வருகிறேன் நீ அங்கேயே இரு என்று சொன்னாள்.வா ரஷ்மி என்னுடைய நிலமையை பார்த்தாயா எல்லாம் நல்லா போய்க் கொண்டிருந்தது. என்னைக்கு இருந்தாலும் பூஜா அப்பா அம்மாவுக்கு தெரிந்து தானே ஆகவேண்டும் என்றாள் ரஷ்மி. நீ வேறு என்னை டென்ஷன் பண்ணாதே ரஷ்மி விஷயத்துக்கு வா. நீ வராமல் எல்லா மியூசிக் வேலைகளும் அப்படியே நிற்கிறது. நீ காலேஜ் திரும்ப வர வேண்டும் என்றாள். ம் நீ சொல்வது சரிதான். எனக்கு நினைவெல்லாம் பூஜாவாக இருக்கிறது என்னால் எதையும் செய்ய முடியவில்லை என்றான் அருண். நீ இப்படி இருப்பது பூஜாவுக்கே பிடிக்காது என்றாள். சரி ரஷ்மி நான் வருகிறேன் இன்றில்லை ஒரு இரண்டு நாட்கள் போகட்டும் என்றான். நாளைக்கு நீ வருகிறாய் காலை 7 மணிக்கெல்லாம் உனக்காக மியூசிக் சென்டரில் எல்லோரும் காத்திருப்போம் என்றாள்.

ராகவ் இரவு ஃபோன் செய்தான் எங்கு போயிருந்தாய் ஃபோன் எடுக்கவில்லை என்றான். அது வந்து அருணை பார்க்க போயிருந்தேன் அவனை காலேஜ் வர சொல்லி சொல்லிவிட்டு வந்தேன். என்ன சொன்னான் அவன். அவன் என்ன சொல்லுவான் பூஜா பூஜா என்கிறான். காதல் என்றால் அப்படித்தான் என்றான். நாளைக்கு காலை 7 மணிக்கு வந்து விடு மியூசிக் சென்டர்க்கு . சரி வந்துவிடுகிறேன். குட்நைட் ராகவ். குட்நைட் ரஷ்மி. கிருஷ்ணன் சௌமியாவிடம் பேசினார். என்ன ஆச்சு சௌமியா எல்லாரும் என்ன சொல்கிறார்கள். இங்கே கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது அதனால் எல்லாம் சரியான பின்பு நானே உங்களை கூப்பிட்டு சொல்கிறேன் என்றாள் . ஒரு வழியாக அருண் காலேஜ் வந்து விட்டான். எல்லோரும் அவனை வரவேற்றார்கள். அவன் மியூசிக் ரிகர்சல் கலந்து கொண்டு இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. உற்சாகமாக ரிகர்சலில் கலந்து கொண்டான். ரொம்ப தாங்க்ஸ் ரஷ்மி நீ வந்து சொல்லாவிடில் இவர்களை ஏமாற்றம் அடைய செய்திருப்பேன் என்றான். ஸ்ருதி அண்ணா எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன என்றாள் . அவற்றையும் பேசி தீர்த்து வைத்தான். தென்றலும் , சுகன்யாவும் கூட அவனிடம் ஏதோ பேசினார்கள்.


சுகன்யாவும், தென்றலும் அருண் மற்றும் பூஜாவின்
தோழிகளாக மியூசிக் ஆல்பத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தனர். அதை பற்றி அருணிடம் கேட்டனர். ஹீரோயின் அங்கே வீட்டுக்குள் அடைஞ்சு கிடக்கா இவங்களுக்கு இவங்க ரோல் தான் முக்கியம் என்று சிரித்தான். என்னாச்சு ஏதாவது பிரச்சனையா அருண் என்று கேட்டாள் தென்றல். போய் ஜோவிடம் கேளு நான் இப்போது தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன் என்றான் அருண்.
தென்றலும், சுகன்யாவும் குழம்பியவாறே ஜோவை நோக்கி நகர்ந்தனர். கிருஷ்ணனிடம் சௌமியா பூஜா அப்பா பர்மிஷன் தராதது பற்றி சொன்னாள். சரி சௌமியா நாம மூணு பேரும் போய் பூஜா அப்பாவை பார்ப்போம் என்றார். நான் நீங்கள் பிரதீபா மூவரும் திருச்சி போவோம் என்றார். இது சரியா வருமா ? அதெல்லாம் சரியா வரும் ப்ரொடியூசர் நாந்தானே இது கூட செய்யவில்லை என்றால் எப்படி என்றும் சொன்னார். யோசிக்க வேண்டாம் எப்போது போக வேண்டும் என முடிவு செய்துவிட்டு சொல்லுங்கள் காரிலியே போய்விட்டு வந்துவிடலாம்.சௌமியா தயங்கியவாறே பூஜாவுக்கு ஃபோன் செய்தாள், பூஜா கலங்கிய குரலில் பேசினாள். அடுத்த வாரம் வாங்க மேடம் இந்த வாரம் அப்பா கொஞ்சம் ஆபீஸ் வேலையா வெளியூர் போறார் என்றாள் . சரி பூஜா கவலைபபடாதே நான் இருக்கிறேன் என்றாள் சௌமியா.

பிரதீபா ராகவுக்கு ஃபோன் பண்ணினாள் . கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா முடிந்தால் ரஷ்மி அக்காவையும் அழைத்து வர முடியுமா என்றாள் . என்னாச்சு கான்செப்ட் எழுதுவதிலே எனக்கு நிறைய சந்தேகங்கள் நீங்களும் வந்தால் நன்றாக இருக்கும் என்றாள். வருகிற சண்டே வைத்துக்கொள்வோம் டிஸ்கஷன் என்றான். அப்போ சரி அண்ணா சண்டே பார்ப்போம் . அருண் பழையபடி சுறுசுறுப்பாகி விட்டான். ஜோவுக்குதான் இதில் மிகுந்த மகிழ்ச்சி. இதை கேள்விப்பட்ட பூஜாவும் மகிழ்ந்தாள். பூஜா கூட அதிகம் பேசுவதில்லை என்றாலும் நிறைய மெசேஜ் அனுப்புவாள் அதை பார்த்து ஆறுதல் அடைவான் அருண். சண்டே ரஷ்மியை கூட்டிக்கொண்டு பிரதீபா வீட்டுக்கு போய்விட்டான் ராகவ். அவள் தயாராய் இருந்தாள். என்ன நீ தூங்குவதே இல்லையா பிரதீபா என்றான் ராகவ். இந்த காதல் கதை என்னை தூங்க விடவில்லை என்றாள் . அவள் எழுதியிருந்ததை வாங்கி படித்தாள் ரஷ்மி. என்ன யாரையாவது லவ் பண்ணுகிறாயா இவ்வளவு காதல் வழிகிறதே எழுத்திலே என்றாள் ரஷ்மி. அதெல்லாம் இல்லை. நான் கற்பனையிலே கொஞ்சம் ஓவர் ஆக போய்விட்டேன் போல என்றாள். ம் எங்களுக்கு ஒன்றும் இல்லையா மறந்தே போய்விட்டேன் நான் ஜூஸ் போட்டு ஃபிரிஜில் வைத்திருக்கிறேன் அதோடு சாக்லேட்டும் இருக்கிறது என்றாள்.


அடுத்த வாரம் நாங்கள் திருச்சி போகிறோம் பூஜா அக்கா வீட்டுக்கு . யார் யார் போகிறீர்கள். நான் அப்பா சௌமியா ஆண்ட்டி எல்லோரும் போகிறோம். என்ன விஷயம். பூஜா அக்கா அப்பாவிடம் பர்மிஷன் கேட்க. ஓ இது சந்தோஷமான விஷயம் அல்லவா அருண் கேட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவான் . இதை இப்போது அருண் அண்ணாவிடம் சொல்ல வேண்டாம் ஒருவேளை பூஜா அக்காவின் அப்பா மறுத்துவிட்டால் அருண் அண்ணா ரொம்ப வருத்தப்படுவார்கள். அதுவும் சரிதான் என்றான் ராகவ். கொஞ்ச நேரம் டிஸ்கஷன் செய்தார்கள். ஒரு ஷேப்புக்கு வந்திருந்தது கான்செப்ட். சரி பார்த்து போய்விட்டு வாருங்கள் திருச்சிக்கு என்றாள் ரஷ்மி. அருண் ராகவ் ,ரஷ்மி பாட சில ட்யூன்களை தயார் செய்திருந்தான். ஜோ ஒரு பாட்டுக்கு அவனே பாடி ஆட முடிவு செய்யப்பட்டது இருந்தது. மியூசிக் மாஸ்டர் கூப்பிட்டு அனுப்பி இருந்தார் . என்னம்மா மியூசிக் ஆல்பம் பண்ணுகிறீர்களாமே என்றார். இன்னும் துவங்கவே இல்லை மாஸ்டர் எல்லாமே டிஸ்கஷன் மட்டும் தான். அவர் சில ஐடியாக்கள் கொடுத்தார். ஆல் தி பெஸ்ட் என்றார் மாஸ்டர்.

சௌமியா, கிருஷ்ணன், பிரதீபா மூவரும் திருச்சி நோக்கி பயணம் கிளம்பினர். இன்னும் என்ன தயக்கம் சௌமியா மேம் துணிந்து பேசிபார்ப்போம் என்றார் கிருஷ்ணன். பூஜாவிடம் ஏற்கனவே பேசி இருந்தாள் சௌமியா. அவள் இவர்களுக்காக காத்திருந்தாள். அருணிடமும் சௌமியா பேசியிருந்தாள். காலையிலேயே கிளம்பி விட்டார்கள் கிருஷ்ணன்தான் வண்டி ஓட்டினார். பிரதீபா எதையோ எழுதிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது சௌமியாவுடன் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தாள். என்ன சௌமியா அமைதியாக வருகிறீர்களே என்றார் கிருஷ்ணன். நீங்கள் இவ்வளவு தூரம் மெனக்கெடுவது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது என்றாள். என் பொண்ணு மாதிரிதானே பூஜாவும் அவளுக்கும் நடிப்பதில் ஆர்வம் இருக்கிறது பிறகென்ன சந்தோஷமாய் இந்த காரியத்தில் இறங்க வேண்டியதுதான் என்றார்.மதியம் போல ஒரு கபேயில் நிறுத்தி சாப்பாடு சாப்பிட்டார்கள்.ராகவ் ஃபோன் பண்ணியிருந்தான் என்னாச்சு மேடம் என்றான் அவசரமாக. இன்னும் போயே சேரவில்லை.போய் சேர்ந்ததும் நானே உனக்கு ஃபோன் பண்ணுகிறேன் என்றாள்.

என்ன ரஷ்மி நீ என்ன நினைக்கிறாய்? நாமும் கூட திருச்சி போயிருக்கலாம் என்றாள் . சரி வருகிறாயா அருணை பார்த்துவிட்டு வருவோம் என்றான். அதெல்லாம் வேண்டாம் அவனே டென்ஷன் ஆக இருப்பான். ரஷ்மி வீட்டில் தானே இருக்கிறாய் ஆமாம் என்ன பண்ணுகிறாய். தெரியுமே இப்படித்தான் ஏதாவது ஆரம்பிப்பாய் என்று நினைத்தேன் என்றாள். சரி வா வீட்டுக்கு என்றாள். ஒண்ணும் குறும்பு பண்ணக்கூடாது இப்போவே சொல்லிவிட்டேன் . சரி சரி வருகிறேன். மதியம் 3 மணி போல பூஜா வீட்டை அடைந்தார்கள் பூஜா அவர்களை வரவேற்று அமர வைத்தாள். அவள் அம்மாவை அறிமுகம் செய்து வைத்தாள்.பூஜா அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை பிறகு விஷயத்தை சொன்னதும் அவர் 5 மணி போல வந்துவிடுவார் . இதுக்காக இவ்வளவு தூரம் வரணுமா என்று கேட்டாள். அதெல்லாம் பரவாயில்லை உங்க பொண்ணு பாடுனா இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை . பிரதீபாவை உள்ளே கூட்டிப்போனாள் பூஜா. சௌமியா பதட்டத்தோடு இருந்தாள்.பூஜா அப்பா 5 மணிக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ஃபோன் பண்ணி பூஜா அம்மா சொல்லியிருந்ததால் அவர் இவர்களை வரவேற்றார்,