பூஜா கான்செர்ட்டை பார்க்க ஆவலாய் இருந்தாள். ராகவும் நிறைய உழைத்திருந்தான்
நிகழ்ச்சிக்காக.கிருஷ்ணனும்,பிரதீபாவும் சற்று முன்பே காலேஜ் அரங்கிற்கு வந்துவிட்டார்கள். கூட்டம் நிறைய இருக்கும என்பதால் சுகன்யா நெர்வஸ் ஆக இருந்தாள். ஒன்றும் பயப்படாதே சுகன்யா இது ஒரு வகையான சேலஞ் அவ்வளவுதான் என்றாள் சௌமியா.கிருஷ்ணனையும், பிரதீபாவையும் கூல் டிரிங்க்ஸ் குடுத்து வரவேற்றாள் தென்றல். தென்றல் தன்னை அறிமுகபடுத்திக்கொண்டாள். ராகவ் அண்ணா சொல்லி இருக்காரு உங்களைப்பத்தி என்றாள் பிரதீபா. அருணும் சற்று பதட்டமாகவே இருந்தான். என்ன கலாட்டா நடந்தாலும் பொறுமையா இருங்கள் ஜோ, ராகவ் என்றான். ஆடியன்ஸ் கலாட்டா செய்வார்களா என்றாள் ரஷ்மி. நிச்சயமாக நாம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்றான் அருண்.நிகழ்ச்சி துவங்கும் முன் சௌமியா இரண்டு நிமிடம் பேசினாள். கான்செர்ட் பார்க்க குமாரும் காலேஜ் வந்திருப்பதாக சௌமியாவுக்கு யாரோ சொன்னார்கள். நிகழ்ச்சி ஒரு புறம் நன்றாக துவங்கியது. மறுபுறம் ஒரு குறிப்பிட்ட குழுவினர் கமெண்ட் அடித்த வண்ணம் இருந்தனர். அருண் ஜோ பாடிய பாட்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, நிகழ்ச்சி பாதி முடிய இருந்த நிலையில் சுகன்யா பாடினாள். அப்போது எங்கிருந்தோ ஒரு செருப்பு பறந்து வந்து சுகன்யா காலடியில் விழுந்தது. சுகன்யா பயந்து போய் பாட்டை நிறுத்தினாள். வீட்டுக்கு போடி நல்லா வந்துட்டா பாட என்ற குரல் கேட்டு அதிர்ந்தனர் எல்லோரும்.
சுகன்யா அழ துவங்கி விட்டாள். இதைக் கண்ட சௌமியா போதும் நிகழ்ச்சியை நிறைவு செய்கிறோம் என அறிவித்தாள். பாதி பேர் பாடுங்கள் தொடர்ந்து பாடுங்கள் என குரல் கொடுத்தனர். தாங்க்ஸ் போர் தி சப்போர்ட் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப தயார் ஆயினர். ராகவையும், அருணையும் திடீரென காணவில்லை. கீழே கமெண்ட் அடித்த ஒருவன் சட்டையை பிடித்து உனக்கு தைரியம் இருந்தா நான் பாடும் போதில்ல வீசி இருக்கணும் என்று அவனை உதைத்தான் அருண் . 4, 5 பேர் கூடி விட்டார்கள். அருணும் ராகவும் எல்லவற்றுக்கும் தயாராய் இருந்தார்கள். அப்போது குமார் வந்துவிட்டார். சரி சரி எல்லாம் போங்கப்பா. இன்னைக்கு ஃபிரண்ட்ஷிப் டே எதையும் பெரிசு பண்ண வேண்டாம் என்றார்.மியூசிக் மாஸ்டர் சற்று தாமதமாக வந்து நிகழ்ச்சி பாதியிலேயே கேன்ஸல் ஆனதை எண்ணி வருத்தப்பட்டார், கிருஷ்ணன் சுகன்யாவுக்கு ஆறுதல் சொன்னார், இதெல்லாம் போது நிகழ்ச்சியிலே சாதாரணம் என்றார். பிரதீபாவும் கிருஷ்ணனும் விடை பெற்றுக்கொண்டனர்.அருணும், ராகவும் குமாருக்கு நன்றி சொன்னார்கள். அவர் ஏதும் சொல்லாமலே போய் விட்டார்.
பூஜா அருணை தேடிக்கொண்டு வந்து விட்டாள். என்னாச்சு அருண் ஏதும் பிரச்சனை பண்ணியா இல்லை இல்லை அதற்குள் குமார் சார் வந்து தடுத்து விட்டார் என்றான். ராகவ் ரஷ்மியிடம் கூட எதுவும் பேசவில்லை அவன் மனம் கொதித்து கொண்டிருந்தது. எல்லோரும் கிளம்பி அறைக்கு போனார்கள். கல்லூரி நிர்வாகம் சௌமியாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னது. இனி கவனமாக நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என சௌமியாவை அவளுடைய காலேஜ் நிர்வாகம் எச்சரித்தது. ரஷ்மி இரவு ராகவுக்கு ஃபோன் செய்தாள். ஏன் ராகவ் என்னிடம் பேசவில்லை என்றாள். எல்லோரையுமே ஏமாற்றிவிட்டோம் பிரதீபா ,மியூசிக் மாஸ்டர் எல்லோருமே அப்செட் என்றான். விடு அடுத்த நிகழ்ச்சியில் பார்த்துக்கொள்ளலாம் என்றாள். சுகன்யா இதை எப்படி எடுத்துக்கொள்வாள் அதை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது என்றான் ராகவ். மறுநாள் சௌமியா எல்லோரையும் கூட்டி வைத்து பேசினாள். சுகன்யா நாம் இப்போது தான் தைரியமாக இருக்க வேண்டும். நான் இனிமேல் பாட போவதில்லை என்றாள் சுகன்யா. எல்லோரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்கு தெரிந்து விட்டது இனிமேல் நீ பாட வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். நான் உன்னிடம் அப்புறம் பேசுகிறேன் என்றால் சௌமியா.
சௌமியா ராகவ் அருண் நீங்கள் செய்ததும் தவறு பதிலுக்கு அவர்கள் தென்றலையோ ரஷ்மியையோ தாக்கி இருந்தால் என்னவாகி இருக்கும் என்றாள். சாரி மேம் என்றனர் இருவரும்.அப்போது சௌமியாவுக்கு ஃபோன் வந்தது பிரச்சனையை பெரிசு படுத்தாமல் இருக்க ராகவையும்,அருணையும் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து காலேஜ் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது . சௌமியா நான் போய் பேசி விட்டு வருகிறேன் என்று போனாள். ஆனால் நீங்கள் ரொம்ப பேசினால் மியூசிக் பாண்ட் கலைக்க வேண்டி வரும் என்று சொன்னதால் ஒன்றும் சொல்லாமல் வந்தாள் சௌமியா. பூஜாவை பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தான் அருண். வெரி சாரி என்றாள் பூஜா. நீ பட்ட கஷ்டம் எல்லாம் வீணாக போய்விட்டதே என்றாள் பூஜா. இப்போது சஸ்பெண்ட் வேறு ஆகி இருக்கிறாய் . விடு பூஜா பார்த்துக்கொள்ளலாம் என்றான் அருண். நான் ஊர் போய் சேர்ந்ததும் உனக்கு ஃபோன் பண்ணுகிறேன் என்றாள். ரஷ்மி ராகவ் நீ ஒன்றும் கவலைபபடாதே என்றாள். தென்றலும்,ஜோவும் சுகன்யாவிடம் பேசியும் பயனில்லை.
மியூசிக் கிளாஸ் போய் வருவதே கதியாய் கிடந்தான் ராகவ். மாஸ்டர் அவனை புரிந்து கொண்டார். ராகவ் நான் ஒன்று சொல்லட்டுமா சொல்லுங்கள் மாஸ்டர் இசைக்கு passion தான் முக்கியம் அது அந்த சுகன்யாவிடம் இல்லை. நீ அதற்காக வருத்தப்பட வேண்டாம். வேறு ஒரு நிச்சயம் அந்த இசை நெருப்பு உள்ள ஆள் கிடைப்பார்கள் என்றார். சரி மாஸ்டர் எனக்கு புரிகிறது. எப்போது நீ திரும்ப காலேஜ் போகிறாய் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து திங்கள்கிழமை என்றான்.சுகன்யா ஃபோன் பண்ணியிருந்தாள் அருணுக்கும் ராகவுக்கும் என்னால்தான் நீங்கள் சஸ்பெண்ட் ஆனீர்கள் ரொம்பவும் வருத்தமாய் இருக்கிரது என்றாள். தி ஈகிள்ஸ் குழுவை விட்டு விலகுவது என் வாழ்வில் நான் எடுத்த கடினமான முடிவு என்றாள். ரஷ்மி ராகவை பீச் வர சொல்லியிருந்தாள் . என்னடா இதுக்கு போய் இவ்வளவு பீல் பண்ணுறே என்றாள். அது போகட்டும் கிளாஸ் எப்படி போகுது மேம் எப்படி இருக்காங்க மேம் நல்லா இருக்குற மாதிரி காட்டிககொள்கிறார்கள் ஆனால் நல்லா இல்லை என்றாள். நாளைக்கு போய் பார்ப்போமா என்றான். சரி என்றாள் ரஷ்மி.
பூஜா அருணுக்கு ஃபோன் செய்தாள் எப்படி இருக்கிறாள் சுகன்யா என்றாள். அவளுக்கென்ன பாண்ட் விட்டு விலகுகிறேன் என்று சொல்லிவிட்டாள். இனி முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமே என்றான். நானும் அதைத்தான் நினைத்தேன் அவள் போனதே நல்லது என்று வைத்துக்கொள். பயம் இருந்தால் அவளால் பெர்ஃபார்மன்ஸ் பண்ண முடியாது என்றாள்.
ரஷ்மி ராகவ் சௌமியா வீட்டுக்கு சென்றனர். அப்போது கிருஷ்ணன் அங்கிருந்து வெளியே வந்தார், வா ராகவ்,ரஷ்மி இப்போதுதான் பேசிவிட்டு ஆறுதல் கூறினேன் . நீயும் எதற்கும் கவலைப்படாதே இன்னொரு புதிய இசை அறிமுகத்தை ஒரு வரத்திலே செய்துவிடுவோம் என்றார். சரி நான் வருகிறேன் என்றார். சார் பிரதீபா எப்படி இருக்கிறாள். அவளும் கொஞ்சம் வருத்ததில் தான் இருக்கிறாள் போக போக சரியாகிவிடும் என்றார். சௌமியா டிவி பார்த்துகொண்டிருந்தாள். வா ராகவ் வா ரஷ்மி என்றாள். என்ன சாப்பிடுகிறாய் என்றாள் சௌமியா. ஒன்றும் வேண்டாம் என்றான் ராகவ். நீ எப்போது திரும்ப காலேஜ் வருகிறாய் ராகவ் நாளை மறுநாள் . சரி நாம் சுகன்யா விஷயத்தை விட்டுவிடுவோம் புதிதாக ஒரு ஆளை தேர்ந்தெடுப்போம் என்றாள். நீ என்ன சொல்கிறாய் ரஷ்மி, நிச்சயமாக ஒரு நல்ல மியூசிக் தெரிந்தவரை தேர்ந்தெடுப்போம் . நான் சில நோட்டீஸ்களை தயாரித்துள்ளேன் . அவற்றை பிரிண்ட் எடுத்து விநியோகம் செய் ராகவ் என்றாள். அவற்றை ராகவுக்கு whatsapp செய்தாள். சுகன்யா மனதில் இப்படி ஒரு மாற்றம் வரும் என்று நான் நினைக்கவில்லை என்றாள் ரஷ்மி. அருண் அப்போது சௌமியாவுக்கு ஃபோன் பண்ணியிருந்தான். வா ராகவ் இப்போதுதான் வந்தான். நீ வா என்றாள். அருண் வருகிறானாம். வரட்டும் என்றான் ராகவ் .
அருண் ரஷ்மி ,ராகவ் இருவரையும் நலம் விசாரித்தான். பூஜா எப்படி இருக்கிறாள் என ரஷ்மி கேட்டாள். நன்றாக இருக்கிறாள் .அவளும் சுகன்யா பாண்ட் விட்டு விலகுவதே நல்லது என சொல்கிறாள் என்றான். ம் இந்த நோட்டீஸ் பாரு ராகவ் ஏதாவது கரெக்ஷன் இருந்தா சொல்லு என்றாள் சௌமியா. புது மியூசிக் அறிமுகமா ஆமாம் என்றாள் சௌமியா. சரி நல்ல விஷயம் தான் ஆனால் டெஸ்ட் வைத்தே சேர்த்து கொள்வோம் என்றான் அருண், நிச்சயமாக என்றாள் சௌமியா . எப்போது திருச்சி போகிறாய் இன்று இரவு , சரி பூஜாவிடமும் இந்த நோட்டீஸ் கொஞ்சம் கொடுத்து விடு என்றாள் ரஷ்மி. சரி நான் அவளிடமும் சொல்லி வைக்கிறேன் . ரஷ்மி உள்ளே போய் டீ போட்டு எடுத்து வந்தாள். குமார் சாரை அன்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை என்றான் ராகவ். அவரே அந்த கலாட்டாவை ஏன் செய்திருக்க கூடாது என்றாள் சௌமியா. சே சே இருக்காது மேம். அவரை பற்றி உங்கள் எல்லாரையும் விட எனக்கு நன்றாக தெரியும் என்றாள் சௌமியா. இதைக்கேட்ட ரஷ்மி, அருண் , ராகவ் ஆச்சரியமடைந்தனர். அருண் கிளம்பிவிட்டான். மதியம் என்ன லஞ்ச் என்று விசாரித்தாள் ரஷ்மி. எனக்கு மட்டும்தானே அதனால் கடையில் வாங்கி கொள்வேன் என்றாள். சரி வாங்க மூன்று பெரும் போவோம் . வெளியில் போய் சாப்பிட்டு ரொம்ப நாளாகிறது என்றான்.
நீ குமாரிடம் போய் பேசினாயா ராகவ் ஆமாம் நானும் அருணும் போய் பேசினோம். அப்போது என்ன சொன்னார். அதை பற்றி பேச என்ன இருக்கிறது மேம். கிருஷ்ணன் சாரை பற்றி ஏதாவது சொன்னாரா? அது எதற்கு மேம் இப்போது?சொல்லு ராகவ் . அவர் சொன்னது உண்மைதான் . நானும் கிருஷ்ணன் சாரும் இப்போது நல்ல உறவில் இருக்கிறோம் என்று அடுத்த முறை பார்க்கும் போது சொல் என்றாள் சௌமியா. ராகவும், ரஷ்மியும் செய்வதறியாது விழித்தனர்.