Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நெருங்கி வா தேவதையே - Part 21

என்ன பூஜா அதற்குள்ளாக கிளம்பி விட்டாய்... அதெல்லாம் ஒன்னும் இல்லை வந்த வேலை முடிந்து விட்டது அதான் கிளம்பிவிட்டேன் இன்னும் ஒரு நாள் இருந்து விட்டு போகலாமே..யாருக்காக? யாருக்காக நான் இருக்க வேண்டும் நீ தான் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறாயே.. பூஜா ப்ளீஸ் என்னை புரிந்து கொள் நான் இப்போது இருக்கும் நிலைமையை உனக்கு எத்தனை தடவை சொல்வது எனக்கு கொஞ்சம் டைம் கொடு என்றான் அருண்.உனக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு தருகிறேன் இன்னும் ஒரு வாரத்தில் நீ பதில் சொல்லாவிட்டால் என்னை மறந்து விடு அவ்வளவுதான் நான் போகிறேன் என்றாள் பூஜா.அருண் ரயில்வே ஸ்டேஷன் வரை போயிருந்தான் பூஜா முகம் அவ்வளவு எளிதில் மறக்க கூடியது அல்ல அவன் மனதிலும் மறக்க முடியாத நிகழ்வாக அன்றைய தினம் அமைந்தது.ஜோ அருணை விசாரித்தான் என்ன மச்சான் ஆச்சு பூஜா கோவமா போறாளே என்றான். நான் என்னடா செய்யறது ஒரு பக்கம் ரஷ்மி மறுபக்கம் பூஜா நான் யார் பக்கம் அப்படின்னு எனக்கே தெரியல என்றான் .விடு மச்சான் நாம ரஷ்மி கிட்ட மறுபடியும் பேசி பார்ப்போம். அதெல்லாம் வேணாம்டா அவள் ஏற்கனவே தெளிவா சொல்லிட்டா.. என்னால தான் அவளை மறக்க முடியல என்றான் அருண்.இன்னும் ஒரு வாரம் டைம் கொடுத்து இருக்கிறாள் அதற்குள்ளாக நான் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் பூஜாவையும் இழந்து விட்டேன் என்றால் நஷ்டம் எனக்குத்தான் என்றான் அருண்.
என்ன ரஷ்மி அருணுக்கும் பூஜாவுக்கும் ஏதோ சண்டையாமே என்றான் ராகவ் அதைப் பற்றி உனக்கு ஏன் கவலை நீயே இன்னும் முடிவு சொல்லாமல் இருக்கிறாய் நானும் அப்படி கோவித்துக் கொண்டு போனால் நீ தாங்க மாட்டாய் என்பதால் அப்படியே இருக்கிறேன் என்றாள் ரஷ்மி. நீ சொல்வதும் எனக்கு புரிகிறது என்னை என்ன செய்ய சொல்கிறாய் நான் பூஜாவை பற்றி விசாரித்தால் உனக்கு கோபம் வருகிறது ஆமாம் அப்படித்தான் நீ என்னை பற்றி மட்டும் பேசு என்னிடம் நீ என்னை பற்றி மட்டும் பேசு நான் அழகாய் இருக்கிறேன்.. நன்றாக பாடுகிறேன் என்று எப்பவாவது சொல்லி இருக்கிறாயா? எப்போது பார்த்தாலும் அவன் அதை செய்தான் இவன் இதை செய்தான் என்று புரளி பேசுகிறாய் என்றாள் ரஷ்மி.இந்தக் கோபத்திலும் நீ அழகாய் தான் இருக்கிறாய் அப்படியே அள்ளிக் கொள்ளலாம் போல இருக்கிறது ..இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்றாள் ரஷ்மி . ஊட்டி விட்டு கிளம்பவே மனம் இல்லை என்றாள் . சௌமியா அடுத்த முறை பிக்னிக்காக வருவோம் என்றான் ராகவ். சுகன்யாவுக்கும் ஊட்டி ஒரு ஆறுதலை கொடுத்து இருந்தது. தென்றல் எப்பவும் போல எதிலும் பட்டுக் கொள்ளாமல் அவளுக்கு பிடித்த வேலைகளை செய்து கொண்டிருந்தாள். ஊட்டியில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்திருந்தாள். அதில் இயற்கை காட்சிகளும் நிறைந்திருந்தன . ராகவ் அதற்காக தென்றலை பாராட்டினான்.

தென்றல் எதுவும் சொல்லவில்லை.ரஷ்மிக்கும் போட்டோக்கள் பிடித்திருந்தது. தென்றல் தனிமையை விரும்புவது போல தோன்றினாலும் ராகவ் தன்னுடன் எப்பவும் போல பேச மாட்டானா என ஏங்கினாள்.ரஷ்மி அதை புரிந்து கொண்டவள் போல நீ தென்றலிடம் எப்போதும் போல பேசு ராகவ் என்றாள். நான் போய் மறுபடியும் பேசி என்ன ஆகப்போகிறது? நான் சொல்வதை கேட்கவே மாட்டேன் என்கிறாய் என்றாள் ரஷ்மி.கேட்கிறேன் கேட்கிறேன் நீ சொல்வதைத்தான் முதலில் இருந்தே கேட்கிறேன். உனக்குத்தான் என் மேல் இரக்கமே இல்லை.என்னை ஒரு அடிமை போல நடத்துகிறாய். ஆமாம் உன்னை அடிமையாக நடத்துகிறேன் இதை யார் கேட்டாலும் சிரிப்பார்கள் என்றாள் ரஷ்மி. ரஷ்மி ஒன்றை மறந்தே போய் விட்டோமே பிரதீபாவுக்கு எதுவுமே வாங்கவில்லையே என்றான் ராகவ்.நீ மறந்து விட்டாய் என்று சொல். நேத்து நைட்டு அருண் கூட போய் அவளுக்கு பிடித்த இசைத்தட்டு ஒன்றை வாங்கி விட்டேன் என்றாள். நிஜமாகவா? ஆமாம். உன்னிடம் என்ன பொய் சொல்ல இருக்கிறது. அதைக் கேட்கலாமா சரி இந்த மியூசிக் பிளேயரில் இருக்கிறது. நாம் இருவரும் கேட்போம் என்றாள் ரஷ்மி.சௌமியா இருவரும் பேசியதை எல்லாம் கவனித்துக் கொண்டுதான் வந்தாள். அவளும் குமாரும் இதுபோல எத்தனையோ சண்டைகள் போட்டிருக்கிறார்கள் ஆனால் அந்த சண்டைகள் இறுதியில் ஒரு முத்தத்தில் முடிவடைந்து இருக்கிறது .அந்த காலங்கள் திரும்பவும் வராதா என்று ஏங்கினாள்.

ஊட்டி ட்ரிப் முடிந்து ஊருக்கு திரும்பினார்கள். எல்லோரும் புத்துணர்வு பெற்றவர்களாக இருந்தார்கள் அருண் மட்டும் கவலையாக இருந்தான் சௌமியா அருண் இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை எல்லாமே பேசி தீர்க்கக்கூடியது தான் என்றாள். சரி மேம். நீ மியூசிக்கில் கவனத்தை செலுத்து என்றாள்.எனக்கு மட்டும் ஏன் மேம் இப்படி நடக்கிறது? நீ அதிர்ஷ்டக்காரன் அருண் அதனால்தான் உனக்கு அப்படி நடக்கிறது பூஜா உன்னை விரும்புவது உனக்கு அதிர்ஷ்டம் தான் என்றாள் சௌமியா.அப்போது ரஷ்மியை நான் விரும்புவது தவறா மேம்? அவள் ஏற்றுக் கொள்ளாத போது நாம் என்ன செய்ய முடியும் விரும்பாத ஒருத்தியை கட்டாயப்படுத்தி காதலிக்க செய்யவா முடியும் என்றாள் சௌமியா. மியூசிக் நிகழ்ச்சியில் எடுத்த வீடியோவை நம்முடைய வெப் பேஜில் அப்லோட் செய்து விடு அருண் என்றாள். கிருஷ்ணன் சார் நம்ம ப்ரோக்ராம் பார்த்து ரொம்ப ஹேப்பியா இருக்கார். அவருக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும் என்றாள்.சரி மேம் நான் கிளம்புகிறேன் என்னவோ என் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் இருக்கத்தான் நான் விரும்புகிறேன் என்றான் அருண்.

பிரதீபாவை பார்த்து அந்த இசைத்தட்டை கொடுக்க விரும்பினார்கள் ராகவும், ரஷ்மியும் . கிருஷ்ணன் சாருக்கு போன் பண்ணினார்கள். அவளுக்கு இப்போது எக்ஸாம் நடக்கிறது எக்ஸாம் முடிந்ததும் நானே சொல்கிறேன் அப்போது வந்து கொடுங்கள் என்றார் கிருஷ்ணன். சரி சார் என்றான் ராகவ்.எல்லோரும் மறுபடியும் காலேஜுக்கு போனார்கள். பாடங்கள், வகுப்புகள் எக்ஸாம்கள் என எல்லாம் இயல்பாக நடக்க தொடங்கின. அருண் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான். பூஜாவுக்கு போன் செய்யலாமா வேண்டாமா? என யோசித்தான் . ஜோ போன் பண்ணு மச்சான் நீ போன் பண்ணலே என்றால்தான் அவ தப்பா நினைப்பா என்றான். தைரியத்தை வரவழைத்து கொண்டு பூஜாவுக்கு போன் போட்டான். பூஜாவுடைய அப்பா தான் எடுத்தார்.. பூஜாவுக்கு இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லை என்றார். சரி சார் நான் பூஜாவை விசாரித்ததாக சொன்னேன் என்று சொல்லுங்கள் சார் என்றான்.என்ன மச்சான் ஆச்சு என்றான் ஜோ . அவங்க அப்பா தான் எடுத்தார் அவளுக்கு உடம்பு சரியில்லையாம். ஊட்டி குளிர் ஒத்துக் கொள்ளவில்லை போல என்றான் அருண். நான் போய் பார்த்து வரலாமா என்று யோசிக்கிறேன்.
சரி மச்சான் போயிட்டு வா என்றான் ஜோ. அன்று இரவு 11 மணி இருக்கும் பூஜாவே போன் செய்தாள் . என்ன அருண் நான் செத்தேனா இருக்கேனா என்று கூட பார்க்க மனம் இல்லையா என்றாள். தயவு செய்து அப்படி சொல்லாதே நான் கிளம்பி கொண்டிருக்கிறேன் உன்னை பார்க்க என்றான். அதிசயம் தான் என்றாள். என்ன ஆச்சு பூஜா உனக்கு நன்றாக தானே இருந்தாய் என்றான் அருண். நன்றாகத்தான் இருந்தேன் உன்னை பார்க்கறதுக்கு முன்னாடி. இதைக் கேட்ட அருண் சிரித்தான்.

இப்போது நான் பஸ் ஸ்டாண்டில் இருக்கிறேன் நாளைக்கு காலை உன்னை பார்க்க வந்து விடுவேன் என்றான் அருண். அதெல்லாம் வேண்டாம் நீ வந்து என்னை பார்த்தால் நோய் குணமாகாது இன்னும் அதிகமாகத்தான் ஆகும் என்றாள் பூஜா. பூஜா என்னை புரிந்து கொள் நான் உன்னை விரும்புகிறேன் மனப்பூர்வமாக விரும்புகிறேன் என்றான். தேங்க்யூ சோ மச் என்றாள் பூஜா. நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியும் அல்லவா ?தெரியும். சௌமியா மேடம் உன் வீட்டு லொகேஷன் கொடுத்தார்கள். மறுநாள் காலை பூஜா வீட்டுக்கு பத்து மணி போல போனான் . பூஜா வீட்டில் அவளுடைய அம்மா மட்டும் இருந்தார்கள். வா தம்பி நீ வருவாய் என பூஜா சொல்லி இருந்தாள் . அவளும் அவள் அப்பாவும் கோயிலுக்கு போயிருக்கிறார்கள் இப்போது வந்துவிடுவார்கள் என்று சொன்னாள். என்ன தம்பி சாப்பிடுகிறீர்கள் காபி அல்லது ஜூஸ் போடவா என்றார்கள்.காப்பியே கொடுங்கள் என்றான் அருண். உன்னை மியூசிக் வீடியோவிலும் பார்த்திருக்கிறேன் ரொம்ப நன்றாக பாடுகிறாய் தம்பி என்றாள் பூஜாவின் அம்மா. நான் பூஜாவுக்கு போன் செய்கிறேன் என்றாள். ஒன்றும் அவசரம் இல்லை ஆன்ட்டி அவள் பொறுமையாக வரட்டும் என்றான் அருண்.வா அருண் எப்போது வந்தாய் ஏன் எனக்கு போன் பண்ணவில்லை என கேள்விகள் அடுக்கிக்கொண்டே போனாள் பூஜா. இப்பொழுது தான் வந்தேன். எப்படி இருக்கிறாய் பூஜா என்னவோ சாதாரண ஜுரம் தான் அப்பா தான் ஓவர் பில்டப் கொடுத்து விட்டார். அவளுடைய அப்பா அப்படியே அலுவலகத்திற்கு சென்று விட்டதாகவும் சொன்னாள்.
அருணை பார்த்ததும் கட்டிக்கொண்டு அழத் தோன்றியது பூஜாவுக்கு. அருணை அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். எப்படி இருக்கிறது எங்கள் வீடு என்றாள். அழகாக இருக்கிறது உன்னை போல என்றான் நீ எப்பவுமே இப்படித்தான் பேசுவாயா இல்லை இப்போதுதான் அது தெரிந்ததா என்று கேட்டாள் பூஜா. இன்னும் என் மேல் கோபமா என்றான் அருண். போனில் நீ சொன்னது நிஜம்தானா என்றாள். நான் எப்பவுமே பொய் சொல்வது கிடையாது என்றான் அருண். ஆஹா இதை நான் நம்பி விட்டேன் என்றாள் பூஜா . என்னை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் நீயே சொல்.. இந்நேரம் பத்து முத்தமாவது நீ கொடுத்திருக்க வேண்டும் என்றாள். அருண் நான் உன்னை மிகவும் விரும்புகிறேன் என்னை விடவும் உன்னை மிகவும் விரும்புகிறேன் அதனால்தான் நீ வருகிறாய் என்ற உடன் உடம்பு சரியாக போய்விட்டது என்றாள் பூஜா.