Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நெருங்கி வா தேவதையே - Part 19

ஊட்டி ட்ரிப்புக்கு தென்றலையும் அழைத்து போகலாம் என ஜோ சொன்னான். சௌமியா யோசித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டாள். பூஜா வருவது உறுதியாகிவிட்டது, அவளுடைய காலேஜில் பர்மிஷன் கொடுத்து விட்டார்கள்.சௌமியா பூஜாவிடம் பேசினாள். ரொம்ப சந்தோஷம் பூஜா பெர்ஃபார்மன்ஸ் நல்லா இருக்கணும் அதுதான் முக்கியம் என்றாள் . சரி மேம் . ரஷ்மி, ராகவ் அவர்களுடைய மியூசிக் குருவை சந்தித்தனர் என்ன ஆச்சு ரொம்ப நாளா ஆளையே காணோமே என்றார் ரஷ்மியை பார்த்து. கொஞ்சம் படிப்பையும் பார்க்கணும் இல்ல மாஸ்டர் அதுதான் வர முடியல என்றாள். பரவாயில்ல பரவாயில்ல நான் சும்மாதான் கேட்டேன். ராகவ் எப்படி கற்றுகொள்கிறான் மாஸ்டர் என்றாள் ரஷ்மி. ம் நன்றாகத்தான் போகிறது ஆனால் வெரைட்டி வேண்டும் அப்போதுதான் கிரியேடிவிட்டி வெளிப்படும் என்று சொன்னார். புரிகிறது மாஸ்டர் நாங்கள் முயற்சி செய்கிறோம் என்று ராகவ் சொன்னான். நாங்கள் அடுத்த ட்ரிப் ஊட்டி போகிறோம் உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் என்றான் ராகவ் .நீ நிச்சயம் வெல்வாய் என்றார். ரஷ்மியிடம் வெரைட்டி வேணுமாம் மாஸ்டரே சொல்லிவிட்டார் வா ட்ரை பண்ணுவோம் என்று அணைத்தான். டேய் அவர் சொன்னது மியூசிக் ல . எப்ப பாரு உனக்கு அதே நினைப்பு என்றாள். உன் மனசுல ஆசை இல்லையா ரஷ்மி . ம் இருக்கு நேரம் வரும்போது நானே சொல்லுறேன் என்றாள்.

ஊட்டியில் உள்ள அநாதை ஆசிரமம் ஒன்றிற்காகத்தான் நிகழ்ச்சி நடத்த கேட்டிருந்தார்கள். sponser கிருஷ்ணன் சௌமியாவுக்கு ஃபோன் பண்ணியிருந்தார். நாளை பிரதீபாவையும் காலேஜ் அழைத்து வருகிறேன் ரிகர்சல் பார்க்க என்று சொல்லியிருந்தார். ஓ நிச்சயமாக. ரஷ்மியும், ராகவும் பிரதீபா வை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பாண்ட் மெம்பர்ஸ் எல்லோரையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான் ராகவ். ரிகர்சல் அருமையாக நடைபெற்றது. பிரதீபா ஆல் தி பெஸ்ட் தி ஈகிள்ஸ் குழு என்று சொன்னாள். வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சே என்று ரஷ்மியிடம் கேட்டாள் பிரதீபா. ஊருக்கு போவதற்கு முன் அவசியம் வருகிறேன் என்றாள். ராகவ் அண்ணா நீங்களும் வர வேண்டும் என்றாள். நிச்சயமாக வருகிறேன் என்றான். பிரதீபா விடை பெற்றுக்கொண்டாள் . தென்றலையும் அழைத்து போக சௌமியா சம்மதித்துவிட்டாள் . அவளுக்கும் ஒரு மாறுதலாக இருக்குமென்று ஜோவும் அருணும் சொன்னார்கள். ரஷ்மி ஷாப்பிங் போக வேண்டும் ராகவ் கொஞ்சம் டிரஸ் எடுக்க வேண்டும் நீயும் வா என்றாள். இருவரும் சேர்ந்து சில டிரஸ்களை செலக்ட் செய்தனர். அப்போது தென்றலை அங்கு எதிர்பாராமல் சந்திக்க நேரிட்டது. அவள் ராகவிடம் ரஷ்மியிடமாவது உண்மையாய் இரு என்று சொல்லிவிட்டு போனாள். என்ன திமிரு பார்த்தியா என்றான் ராகவ். அதை விடு ராகவ் அவ சொல்லுறதுலேயும் நியாயம் இருக்குல்ல என்றாள்.


என்ன இருந்தாலும் நீ என்னை இன்சல்ட் பண்ணி இருக்க கூடாது என்றான் ராகவ். ம் நீ இப்படியே என்னோட காதலை மறைச்சு வைக்க சொல்லுறியா சீக்கிரம் உன் மனசை மாத்திக்கோ என்றாள் ரஷ்மி. அவளை ஒன்றும் சொல்ல மனம் வரவில்லை ராகவுக்கு. ஊருக்கு போவதற்கு இரண்டு நாட்கள் முன்பு பிரதீபாவை பார்க்க வேண்டும் என்று ரஷ்மி ராகவை கூப்பிட்டாள் . நீ போயிட்டு வா நான் வந்தா உனக்கு கஷ்டமாயிருக்கும் இல்ல என்றான். சும்மா வா ராகவ் நான் எப்போதோ அதை எல்லாம் மறந்துவிட்டேன் என்றாள். நானே வந்து உன்னை அழைத்து போகிறேன் என்றாள். ராகவும் ரஷ்மியும் பிரதீபாவுக்கு கொஞ்சம் சாக்லேட் மற்றும் பூ வாங்கி கொண்டனர். பிரதீபா இவர்களை அன்புடன் வரவேற்றாள். என்ன அக்கா அண்ணன் ஒரு மாதிரி இருக்கிறாங்க என்ன விஷயம் என்றாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை உன்னுடைய ஸ்டடீஸ் எப்படி போகுது என்றாள் ரஷ்மி. ம் நல்லா போகுது எனக்கும் ராகவ் அண்ணா போல எப்பவும் கூடவே இருக்குற
ஃப்ரெண்ட் கிடைச்சா நல்லா இருக்கும் என்றாள். நீ ஒரு பாட்டு பாடி அனுப்பி இருந்தாயே அது நீயே எழுதுனதா ஆமா ரஷ்மி அக்கா. ரொம்ப நல்லா இருந்தது லிரிக்ஸ் என்றாள். எனக்கு ஊட்டி யில் இருந்து ஏதாவது வாங்கிட்டு வாங்க என்றாள் . நிச்சயமாக . அது மியூசிக் சம்பந்தமா இருக்கட்டும் என்றாள் பிரதீபா. உனக்கு எந்த மாதிரி மியூசிக் பிடிக்கும்னு எங்களுக்கு மெசேஜ் பண்ணு நிச்சயம் அது சம்பந்தமா வாங்கி தருகிறோம் என்றான் ராகவ். இருவரும் விடை பெற்றுக்கொண்டனர்.

மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் எடுத்து போவதுதான் சிரமமாக இருந்தது அதற்கான ஏற்பாடுகளை சௌமியா அருணின் துணையோடு செய்து முடித்தாள். என்ன அருண் பூஜா பிறகு உன்னிடம் பேசினாளா என்றாள் சௌமியா . இல்லையே மேம் என்ன காரணம் என்று தெரியவில்லை. நேற்று ஜோவிடம் கூட பேசி இருக்கிறாள் என்னிடம் பேசவில்லை. அது எனக்கும் புரியவில்லை, அவள் கூட மியூசிக் coordination செய்ய வேண்டியது உன்னுடைய பொறுப்பு என்றாள் சௌமியா. சரி மேம் எல்லாவற்றையும் சரி செய்து விடுகிறேன் என்றான். அவனே பூஜாவுக்கு ஃபோன் செய்தான். என்ன சாருக்கு இப்போதுதான் நேரம் கிடைத்ததா என்றாள் பூஜா. அப்படியெல்லாம் இல்லை பிறகு ஏன் ஃபோன் செய்யவில்லை என்றாள். ம் நீயாய் பேசுவாய் என்று எதிர்பார்த்தேன் என்றான். நான் என்னுடைய விருப்பத்தை முன்னாடியே சொல்லிவிட்டேன் . நீதான் இன்னும் பதில் சொல்லவில்லை என்றாள். அது எப்படி திடீரென்று என்னால் முடிவெடுக்க முடியும். இந்த கான்செர்ட் முடியட்டும் நானே என்னுடைய விருப்பத்தை சொல்கிறேன் என்றான். ம் உனக்காக காத்திருக்கிறேன் என்றாள். தாங்க்ஸ் பூஜா . நான் மறுபடியும் சொல்கிறேன் ஐ லவ் யு அருண் என்றாள்.இவனுக்கு தவிப்பாய் இருந்தது. ரஷ்மி வாயை திறக்க மாட்டேன் என்கிறாள். பூஜாவோ இவனுக்காக காத்திருக்கிறேன் என்கிறாள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான்.

ஜோவுக்கு ஃபோன் செய்தான் பேசாமல் பூஜாவை பிக்அப் செய்து கொள். ரஷ்மியை விட 10 மடங்கு அன்பு செலுத்துகிறாள். அவள் ஒரு மாடர்ன் தேவதை, உனக்கு அவள்தான் பொருத்தம் என்றான். ஒரு வேளை அப்படி விரும்பினால் ரஷ்மி என்னை விட்டு சுத்தமாக விலகி விட்டால் என்னால் தாங்க முடியாது என்றான் அருண். அருண் அதிர்ஷ்டம் ஒருமுறை தான் வரும் பிறகு கதறி அழுதாலும் வராது என்றான் ஜோ. ஒரு வேலை செய் ரஷ்மியிடம் கடைசியாக ஒரு முறை பேசிப்பார் என்றான். இல்லை வேண்டாம் சௌமியா மேடம் மூலமாக பேசிப்பார் என்றான் ஜோ. சரி அதை செய்து பார்க்கிறேன் என்றான் அருண். சௌமியாவுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னான். எப்படியாவது நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும் என்றான். நான் என்ன செய்ய வேண்டும் அருண். அவளுடைய இறுதியான முடிவை கேட்டு சொல்ல வேண்டும் என்றான். ரஷ்மிக்கு ஃபோன் செய்து வீட்டுக்கு வா ரஷ்மி என்றாள் சௌமியா. ராகவும் வர வேண்டுமா என்றாள். அவன் வேண்டாம் நீ மட்டும் வா என்றாள். என்னாச்சு மேம் ஏதாவது பிரச்சனையா ?அதெல்லாம் ஒன்றுமில்லை நீ வா என்றாள். ரஷ்மி வந்ததும் அவளுக்கு காப்பி கொடுத்தாள் சௌமியா.

என்ன மேம் விஷயம் அதை எப்படி உனக்கு சொல்வதென்று தெரியவில்லை . உனக்கு அருணை பிடித்திருக்கிறதா ? ம் ஃப்ரெண்ட் ஆக பிடிக்கும் . இதில் என்ன தயக்கம் வேண்டியிருக்கிறது. அவன் உனக்காக உன்னுடைய காதலுக்காக காத்திருக்கிறான். அதுவும் உனக்கு தெரியும் அல்லவா. ஆமாம் மேம் ஆனால் நான்தான் சொல்லிவிட்டேனே அவனை காதலனாக என்னால் நினைக்க முடியாது என்று.அவனை இப்போது பூஜா விரும்புகிறாள். அவனுடைய முடிவுக்காக பூஜா காத்திருக்கிறாள். நீ சொல்லும் முடிவில்தான் அருண் அவளுக்கு பதில் சொல்ல முடியும் அதனால் இறுதியாக கேட்கிறேன் நீ அருணை காதலிக்க நினைக்கிறாயா இல்லையா ? இல்லை மேடம். சரி நான் அருணிடம் இதை பக்குவமாக சொல்லிவிடுகிறேன் என்றாள் சௌமியா. இதற்காக அவன் உங்களை தொந்தரவு செய்திருக்க வேண்டியதில்லை. என்னிடமே கேட்டிருக்கலாம் என்றாள் ரஷ்மி. சாரி ரஷ்மி நான் கூட நீ அவனை விரும்புவாய் என நினைத்தேன் என்றாள். நான் ராகவ் கூட வாழ விரும்புகிறேன் மேம் வெறுமே காதல் என்ற பெயரால் ஊர் சுற்ற நான் விரும்பவில்லை என்றாள் ரஷ்மி.

பிரதீபா மெசேஜ் அனுப்பியிருந்தாள். அவளுடைய விருப்பமான மியூசிக் தேர்வை ரஷ்மி, ராகவ் இருவருமே ரசித்தனர். சௌமியா பேசியதை பற்றி ராகவிடம் சொன்னாள் ரஷ்மி. நீ என்ன சொன்னாய் ரஷ்மி என்றான் . நான் உன்னுடன் வாழ விரும்புவதாக சொன்னேன் என்றாள். தாங்க்ஸ் ரஷ்மி என் மேல் நீ வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றான் ராகவ். சௌமியா சொன்னதை கேட்ட அருண் ரொம்ப தாங்க்ஸ் மேடம் எனக்காக இவ்வளவு தூரம் பேசி இருக்கிறீர்கள். நான் இதை பாசிட்டிவ் ஆக எடுத்துக் கொள்கிறேன் என்றான். அதுதான் சரி . நீ பூஜாவுக்கென்ன பதில் சொல்ல போகிறாய். நான் இன்னும் இந்த காயத்தில் இருந்தே விடுபடவில்லை. அதனால் கொஞ்சம் டைம் எடுத்து கொள்கிறேன் என்றான். சரி அருண். எல்லோரும் தங்களுடைய லக்கேஜ்களுடன் ரயில்வே ஸ்டேஷன் வந்தனர். ரஷ்மி வர லேட் ஆனது. ராகவ்,அருண், ஜோ மூவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். தென்றல், சௌமியா , சுகன்யா மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். ரஷ்மி டிரைன் கிளம்புவதற்கு பத்து நிமிடம் முன்னதாக வந்து சேர்ந்தாள். ஊட்டி குளிர் மச்சான் ஏடாகூடமா பூஜா கூட ஆயிடபோகுது என்றான் அருணை பார்த்து. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது என்றான் அருண். ரஷ்மி அருணை நோக்கி வந்தாள். எல்லா preparation ஓகே தானே என்றாள். எல்லாம் தயாராய் இருக்கிறது என்றான் அருண். ராகவ் ரஷ்மி பின்னாலே சென்றான். அருண் பார்த்தியா எப்படி போறான் பாரு என்றான். எனக்குத்தான் அதிர்ஷ்டம் இல்லை என்றான் அருண். ஊட்டி அவர்களின் வருகைக்காக காத்திருந்தது.