Sivavin Malare Mounama.. - 15 books and stories free download online pdf in Tamil

சிவாவின் மலரே மௌனமா.. Part 15

Part 15.

Hi,
நான் உங்கள் சிவா,
Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..


அடுத்த நாள் காலை 10.30 மணி. நானும் நந்தாவும் University போனோம். கவிதா எங்களுக்காக தவிப்புடன் Section வெளியே Wait பண்ணிக் கொண்டிருந்தாள். வந்தவுடன் எங்களிடம், என்னாச்சு நந்தா ?
ராம் முகமே சரியில்லை. Normal ஆ அவன் எப்பவும் இந்த மாதிரி இருக்க மாட்டான். வந்ததிலிருந்து எங்கள் முகத்தை ஏறெடுத்து பார்க்கலை. யார்கிட்டேயும் பேசலை. ஏதோ நடந்திருக்கு னு என் மனசில பட்டது.

நாங்கள் இருவரும் சிரித்து கொண்டோம்.

அதுவும் நீங்க இரண்டு பேரும் வர்றீங்க னு ஃபோன் பண்ணி சொன்னிங்களா அதான் Tension ட இருக்கேன். என்ன நடந்தது? மலருக்கும் எதுவும் தெரியாது. வாங்க எங்க Section போவோம்.

நாங்கள் அவர்களின் Section போக, எங்களை பார்த்தவுடன் மலருக்கு ஆச்சரியம்.. அழகாக கண்கள் விரிய சிரித்து வரவேற்க.. அவளையும் கூட்டிக்கொண்டு எல்லோரும் ராம் Cabin போனோம். மலர் ஒண்றும் புரியாமலே எங்களை பின் தொடர்ந்தாள்.

ராம் Cabin போய் யாரும் வராமல் இருக்க, Door Close பண்ணி, CCTV ஏதும் இல்லை என்று Confirm ஆனதும், நான் ராமை பார்த்து கண்காண்பிக்க, ராம் நேராக வந்து மலர் கவிதா இருவரது காலில் விழுந்து, மன்னிப்பு கேட்க.. மலர் கவிதா இருவரும் அதிர்ந்து ஆச்சரியப்பட்டு போயினர். இருவருக்கும் ஏதோ புரிந்தது இதெல்லாம் எங்கள் வேலை தான் என்று.

நான் ராமிடம்..
என்ன System ல இருக்குற எல்லா Photos Videos Erase பண்ணிட்டியா? என்று கேட்க

ஆமாம் என்று தலையாட்டினான்.

இந்த Pendrive Copy External Hard drive இந்த மாதிரி ஏதாவது..

அதெல்லாம் ஒண்ணும் இல்லை என்றான்.

நந்தா வை விட்டு Check பண்ண சொல்ல.. எல்லாம் பக்காவாக Erase பண்ணியிருந்தது தெரிய வந்தது. மலரும் கவிதா இருவரும் நம்ப முடியாத ஒரு திகைப்பில் இருந்தனர்.
நான் ராமிடம் கொஞ்சம் கதவை சாத்திட்டு வெளியே Wait பண்ணு, நான் கூப்பிடுகிற வரைக்கும் உள்ள வரக்கூடாது. இங்கே AC நல்லாயிருக்கு. எங்களுக்கும் Privacy வேண்டும் என்று சொல்ல அப்படியே சார் என்று மலை ஆடு மாதிரி தலையாட்டியபடியே கதவை சாத்திவிட்டு சென்றான். மலருக்கும் கவிதாவிற்கும் ஆச்சரியம் மேல் ஆச்சரியம். நேற்று வரை தங்களுக்கு Torture கொடுத்தவன்.. இன்னைக்கு இப்படி பொம்மை மாதிரி..

எல்லாம் புரிந்து போய், மலர் என்னை நெருங்கி வந்து என் கையை பிடித்து என் முகத்தை ஆசையுடன் பார்க்க, நான் மலரை கண்ணால் கவிதா நந்து வை பார்க்க சொல்லி காண்பிக்க, கவிதா வும் நந்தாவும் இருவரும் ஒருவருக்கொருவர் கைகளை பிடித்து கொண்டு கண்களால் காதலுடன் பேசிக்கொண்டிருக்க.. மலருக்கு இன்னும் ஆச்சரியம். திகைப்பில் தன் கைகளால் வாயை பொத்தி கொண்டு, என்னிடம் இது எப்பதிலிருந்து? என்று மெதுவாக கேட்க..

நான் சிரித்து, எல்லாரும் உன்ன மாதிரி யா இருப்பாங்களா? அவங்கள்ளாம் பயங்கர Fast.
மலர் என் விலாவில் தன் முழக்கையால் இடித்து சிரித்துக்கொண்டே என் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

கொஞ்ச நேரத்தில் கவிதா வும் நந்தாவும் சகஜ நிலைக்கு திரும்ப மலர் ஓடிப்போய் கவிதாவை கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்து என்னடி இது எப்போதிலிருந்து.. என்று கேட்டு அளவளாவ இருவரும் ஆனந்தத்தில் திளைத்தனர்.

Office Section யை ராமை பார்த்துக்க சொல்லி விட்டு, நாங்கள் நால்வரும் Lunch க்கு நல்ல Hotel போய் அரட்டை அடித்து கொண்டே சாப்பிட்டோம். நானும் நந்தாவும் இந்த ராம் Operation, முரளி Help, சுரேஷ் Part, Jupiter Bar ல் நடந்த Incidents ஒவ்வொன்றையும் முதலில் இருந்து சொல்ல சொல்ல இருவராலும் நம்ப முடியாமல் வாய் பிளந்து கேட்டபடி இருந்தனர். அதுவும் சுரேஷை பற்றி சொல்லி அவன் Photo காண்பித்த போது இருவராலும் நம்ப முடியவில்லை. நடு நடுவே சிரிப்புடன்... எல்லாம் கேட்டு தெரிந்தபின், தங்கள் இருவருக்கும் எதுவும் சொல்லாமல், இருவருக்காக இவ்வளவு தூரம் கஷ்ட்டப்பட்டதை நினைத்து நெகிழ்ந்து போயினர். அன்றைய பொழுது அனைவருக்கும் சந்தோஷமா கழிந்தது.

அந்த வாரத்தில் Saturday Closed Holiday, Sunday நல்ல முகூர்த்த நாளாக வர.. வீட்டில் அம்மாவும் கல்யாணி யும் Relative Marriage க்கு Chennai போக, நந்தாவும் அவர்கள் வீட்டு Relative Marriage க்கு Madurai வரை போக, எனக்கு பயங்கரமாக போரடித்தது. Office Work ம் அவ்வளாக இல்லை. வெளியே நல்ல மழை விடிகாலையில் இருந்து வானம் தூறிக்கொண்டே இருந்தது. மலருக்கு ஃபோன் பண்ணினேன்.

அவளும் நானும் சும்மா தான் இருக்கிறேன் ரவி, கவிதா யாரோ அவ College Friend யை பார்க்க போயிட்டா.. நாளைக்கு தான் தான் வருவா. இப்ப தான் Dress லாம் Wash பண்ணிட்டு, Freshup ஆகிட்டு என்ன பண்றது னு தெரியாம யோசனையில் இருந்தேன். பயங்கரமா போரடிக்கிறது, நீ இன்னைக்கு Office போயிருப்ப னு நினைச்சேன். அதான் உனக்கு ஃபோன் பண்ணலை.

சரி மலர், ஒண்ணு பண்ணலாம். Half an hour ல உன் Flats வர்றேன். Climate வேற Super ஆ இருக்கு. Ready யா இரு. எங்காவது வெளியே போகலாம். இன்னொரு முக்கியமான விஷயம் எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தெரியவில்லை.

என்ன ரவி, எதாவது issue வா?

ஆமாம் மலர்.. பெரிய issue ஒண்ணும் கிடையாது. ஆனா நீ நினைச்சா Easy யா Solve பண்ணிடலாம்.

என்னனு சொல்லு. உனக்காக கண்டிப்பா நான் எது வேணாலும் பண்றேன்.

அன்னைக்கு Juice Shop ல நீ எனக்கு ஒரு Long Lips kiss கொடுத்தில்ல.. அந்த மாதிரி இப்ப ஒரு kiss எனக்கு வேணும். ப்ளீஸ் மலர்..
மறுமுனையில் எந்த சப்தமும் இல்லாததால்..

நான் ஹலோ.. மலர் Line ல இருக்கியா? கேட்க,

எல்லாம் கேட்டுதான் இருக்கேன். படுவா நீ ஏதோ issue னு வுடனே பயந்தே போயிட்டேன். ஏண்டா இப்படி படுத்துற..
சிரித்துக்கொண்டே... இங்கே வா நீ வேணாம் வேணாம் னு திகட்டுற அளவுக்கு முத்தமா தர்றேன்.

வாவ் சூப்பர் மலர்.. அப்பறம் பேச்ச மாத்தக் கூடாது. ஓகேயா? இதோ உடனே கிளம்பி வர்றேன்.

Car Drive பண்ணிக் கொண்டு இருந்தேன். பக்கத்தில் மலர். வெளியே மழை தூறிக்கொண்டே இருந்தது. ரோட்டில் அவ்வளவாக Traffic இல்லை. இந்த மாதிரி குளிர்ச்சியான மழை தூறிக்கொண்டே இருக்கும் Climate ல் Car Drive பண்ணிக்கொண்டு, அதுவும் என் பக்கத்தில் அழகான மலருடன் Travel பண்ணுவது மனதிற்கு மகிழ்ச்சி யாக இருந்தது. மலர் Yellow Colour Design Saree ல் அழகாக இருந்தாள். Simple Makeup ல் Light Red lipstick ல் மலரின் சிவப்பு கலருக்கு அந்த Saree எடுப்பாக இருந்தது. நான் அவ்வப்போது மலரை திரும்பி பார்த்து கொண்டே வண்டி ஒட்டிக் கொண்டிருக்க, மலர் புன் சிரிப்புடன்,
என்னையே திரும்பி, திரும்பி பார்த்தது போதும். Road யை பார்த்து Car யை ஓட்டு.

மலர் இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க.

நான் சொன்னவுடன் மலரின் முகம் மேலும் அழகாக.. புன்சிரிப்புடன் என் பக்கம் சாய்ந்து இடது தோளில் முத்தமிட்டு.. ரவி இந்த மாதிரி உன் கூட இருக்கிறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா.. அதுவும் என்னோட Problems எல்லாம் எனக்கே தெரியாமல் ஒண்ணு ஒண்ணாய் Solve பண்ணி.. ரொம்ப Safe ஆ Feel பண்றேன்.

அதையேதான் நானும் சொல்றேன். இந்த Safe Feel யை உன் Life Full ஆ நான் தரனும் னு ஆசைப்படறேன்.

மலர் புரிந்து கொண்டு என் இடது கையை எடுத்து முத்தமிட்டு, பின் ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள்.

நான் அவள் Mood யை மாற்ற,
என்ன மலர் வந்தவுடன் இன்னைக்கு திகட்ட திகட்ட ஏதோ தரேன் னு சொன்ன?

மலர் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே..
இங்க எப்படி?

அப்போது எங்கள் Car ஒரு Flyover மேல் போய்க் கொண்டிருக்க, நான் சுற்றும் முற்றும் பார்த்தேன்.‌
அதை புரிந்து கொண்ட மலர் என்னடா இங்கேயேவா? என்று வெட்கப்பட..

நான் Car யை நிப்பாட்டி மலரை காதலுடன் பார்க்க, மலரும் வெட்கத்துடன் என்னை பார்த்து யாரும் இல்லை என்று உறுதி செய்த பின் என் அருகில் வர, இருவரது இதழ்களும் ஒன்றானது. என் உடம்பெல்லாம் மின்சாரம் பாய, கண்களில் மின்னல் போல் பூப் பூவாய் வெடித்து சிதற.. பூப்போன்ற மலரின் உடல் சிலிர்த்ததை என்னால் உணர முடிந்தது.

அடுத்து Lunch க்கு நல்ல Restaurant போய் விட்டு, பக்கத்தில் இருந்த Mall க்கு போய் 2 Hrs சுத்தி விட்டு, மலருக்கு இரண்டு Chudi நான் ஆசைப்பட்டு வாங்கி கொடுத்தேன். வெளியே வர இன்னும் மழை விட்டபாடில்லை. நல்ல காஃபி சாப்பிடலாம் என்று பார்த்தால்.. ஏன் ரவி, வீட்டுக்கு போயிடலாமே நானே ஃபில்டர் காஃபி போட்டு தர்றேன்னு மலர் சொல்ல, எனக்கும் மலர் கையால் போட்ட காஃபி சாப்பிடனும்னு ஆசையாய் இருந்தது. அதை அவளிடமே சொல்ல மலர் வெட்கப்பட்டது பார்க்க ஆசையாய் இருந்தது. எல்லாம் யோசித்து கடைசியில் என் வீட்டுக்கே போகலாம் என்று இருவரும் முடிவு பண்ணி போகும் வழியில் மலர் Flats போய் மலருக்கு தேவையான Things, அவள் Dresses எல்லாம் எடுத்து கொண்டு வீடு திரும்பினோம்.

வீடு வந்து சேர்ந்து இருவரும் Freshup ஆயிட்டு மாடியில் என் Room ல் நான் T Shirt, Night pant போட்டுக் கொண்டு என் Laptop ல் Mail Check பண்ணி கொண்டு இருக்க, மலர் மணக்க மணக்க Tray ல் ஃபில்டர் காஃபி கொண்டு வர, குளித்து Fresh ஆகி வாசனையுடன், பளிச்சென்று Black & Light Blue Combination Chudi ல் இருந்த மலரைப் பார்க்க ஏதோ எனக்கு புதிதாய் பார்ப்பது போல் இருந்தது. ஆசையோடு அவளைப்பார்க்க, என் கண்களில் தெரிந்த காதலைப் பார்த்த மலர் புன்னகையுடன் புருவம் உயர்த்தி கண்களால் என்னவென்று கேட்க.. சைகையால் ரொம்ப அழகாய் இருக்க என்று நான் சொல்ல.. கன்னம் சிவக்க மலர் வெட்கப்பட்டது கூடுதல் அழகு. மலரின் நெற்றியில் முத்தமிட்டு காஃபி வாங்கி நான் குடித்து பார்க்க.. வாவ் Taste Super..

மலர் காஃபி Super.. எனக்கு இந்த மாதிரி கொஞ்சம் Strong ஆ கூடுதல் Sugar ட இருந்தால் தான் பிடிக்கும்.

எனக்கு தெரியும் அதான் அப்படி காஃபி Prepare பண்ணேன். கல்யாணி சொல்லியிருக்கா..

என்னது கல்யாணி சொன்னாளா? இன்னும் என்னென்ன சொன்னா?

நிறைய சொல்லியிருக்கா.. உனக்கு Seafood ரொம்ப பிடிக்கும் குறிப்பா Prawn.
இந்த மாதிரி நிறையவே..

உன்னய எனக்கு ரொம்ப பிடிக்கும் னு சொன்னாளா?

மலர் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே அவளுக்கு தெரியும் னு நினைக்கிறேன். உன்னய பத்தி அப்பப்ப நான் துருவி துருவி கேட்கும் போது சிரிச்சுகிட்டே எல்லாம் சொல்லுவா.. அவளுக்கு நம்ம மேல ஒரு Doubt இருக்கு.

வாவ் நல்லதாப் போச்சு.. அப்ப நம்ம வீட்டுல உனக்கு நிறையவே Support இருக்கு, என்று மலரின் வலது கையை எடுத்து நான் முத்தமிட.. மலரின் உடம்பெல்லாம் சிலிர்த்து அடங்கியது.
அப்படியே என் பக்கம் அவளை இழுத்து என் மார்போடு அணைத்துக் கொண்டேன். இருவரின் உடலும் சூடாகி அனலாய் கொதிக்க ஆரம்பித்தது. பெய்யும் மழைக்கு இதமாக இருந்தது. வெளியே மழையும் நிற்காமல் சத்தத்துடன் பெய்து கொண்டிருக்க ஜன்னல் கண்ணாடிகள் வழியாக மழை நீர் வடிவது பார்க்க ரம்மியமாக இருந்தது.

மலரின் காதில் நான் மலர் ஏதோ திகட்ட.. திகட்ட.. என்று சொன்னதும், புன் சிரிப்புடன் ஆசையோடு என்னை ஏறெடுத்து பார்க்க.. பளபளப்பான சிவந்த மலரின் உதடுகள் என்னை கவர்ந்திழுக்க.. கொஞ்சமும் தாமதிக்காமல் அப்படியே அவளின் உதட்டை முத்தமிட்டு என் உதடுகளால் அவள் உதட்டை உறிஞ்சினேன். அதை கண்கள் சொருக, அனுபவித்த படியே என் பின்னந்தலை முடியை தன் கைகளால் இறுக்கிப் பிடித்துக் கொண்டே அவளும் என் உதடுகளை விடாமல் உறிஞ்ச.. இருவரும் சொர்க்கம் கண்டோம். எனக்கு இந்த மலரின் முத்தம் ஒன்றே போதும் வேறு எதுவும் இந்த பிரபஞ்சத்தில் தேவையில்லை என்றே தோன்றியது. மலரும் அதே உணர்ச்சியில் இருந்தாள் என அவளின் Body language லிருந்து தெரிந்தது. அவளின் உணர்ச்சி, சூடான சுவாசம், மென்மையான முனகல்கள் எல்லாம் என்னை வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு சென்றது. காம உணர்ச்சி மேலோங்க மலரை இழுத்து அணைத்து அவள் கண்கள், நெற்றி, கன்னங்கள், உதடு, கழுத்தில் விடாமல் முத்தமிட்டு, மலரின் மேலாடையை களைய.. முதலில் எதற்கோ மலர் என் கைகளை களைய விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டவள், பின் நான் அவளை முத்தமிட்ட வேகத்தில், தளர்ந்து என் கைகளில் தஞ்சம் புகுந்தாள். நானும் என் T Shirt யை கழட்டி விட்டு அப்படியே மலரை ஆரத்தழுவி Chudi Top யை கழற்றி முத்தமழை பொழிய, Black Bra அணிந்திருந்த மலர் உடம்பெல்லாம் நடுங்க, ஏதோ எதற்கோ பயந்தது போல எனக்கு தோன்றியது. முதல் தடவை ஆனதால் இருக்கும் கூச்சம் என்று நான் நினைத்து..

மலரின் காதில் மலர் பயப்படாதே.. நீ எப்பவோ எனக்கு Wife ஆகிட்ட.. நாம ஒண்ணு சேர்வதுல தப்பு ஒன்னும் இல்லை என்று அவளின் Bra ஹூக் கை கழட்ட.. மலர் தடுக்க.. ஒரு கட்டத்தில் ரவி வேணாம் ரவி.. ப்ளீஸ் பார்க்காத என்று உடம்பெல்லாம் நடுங்கியபடி அழுகையுடன் சொல்லி என்னை பார்க்க முடியாமல் மறுபுறம் திரும்பிக் கொள்ள..

எனக்கு ஒண்ணும் புரியாமல் என்ன மலர்? எது வேணாம்? எதைப் பார்க்காதே னு சொல்ற? என்று அவள் தோளைத் தொட்டு திருப்ப..
அழுகையுடன் இதைத் தான் என்று தன் Bra வை கழற்றி எரிய..

My God.. மலரின் இடது மார்பகத்தில் ஏதோ இரண்டு வடு, தீயினால் சுட்ட வடு பெரிதாக இருக்க..

நல்லா பார் ரவி.. என் நிலைமையை.. இதுக்காக த்தான் நான் உன்னய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் னு சொன்னேன்.
அழுகையுடன்..
அந்த பாவி கதிர் என் சின்ன வயசில இந்த மாதிரி என் மார்பில் சிகரெட்டில் சூடு வச்சு.. என் வாழ்க்கையையே நாசனம் பண்ணிட்டான். அன்னைக்கு என் அக்கா மாதவி வாழ்க்கை யையும் நாசம் பண்ணிட்டான்.

நான் மெதுவாக மலரின் தோளை பிடித்து கட்டிலில் உட்கார வைத்து அவள் தோளுடன் சேர்த்து ஒரு போர்வை யால் மூடிய பின் அவள் கண்களை துடைத்து விட்டு நெற்றியில், கண்களில் முத்தமிட்டு என் மார்பில் சாய்ந்து கொண்டு, மலர் நான் இருக்கேன் உனக்கு எதுக்கும் கவலைப் படாதே, பயப்படாதே. எது நடந்திருந்தாலும் சரி, இப்ப உனக்கு நான் வாக்கு தர்றேன். நீ தான் என் Wife. இதுல எந்த மாற்றமும் இல்லை. என்னய நம்பு. உன் மனசில பதிஞ்சிருக்கிற அந்த சங்கடமான Past யை நீ சொல்லனும்னு நினைத்தால் தாரளமாக என் கிட்ட சொல்லலாம். இல்ல ன்னாலும் பரவாயில்லை. திரும்பவும் சொல்றேன் நான் உன்னயத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று அவளை சமாதானப்படுத்த.. கொஞ்ச நேர விசும்பலுக்கு பிறகு மலர் என்னை ஏறெடுத்து பார்த்து,

ரவி உன் மனசு எனக்கு தெரியும். ஆனால் என்னாலதான் இதை Accept பண்ண முடியலை. ஏதோ நான் களங்கப்பட்டு போன மாதிரி ஒரு Feeling.

மலர் நீ உன் மனசறிஞ்சி களங்கப்படலை. அது எனக்கு நல்லாவே தெரியும். நீ எதுவும் சொல்லலைனா கூட என் மலரைப் பற்றி எனக்கு தெரியும்.
மலர் உடனே என் இரு கைகளையும் பற்றி கொண்டு தன் முகத்தில் வைத்து கொண்டு முத்தமாக கொடுத்தாள்.
பின், ரவி நீ உண்மையிலேயே Gem, என்னைப் பற்றி எப்படி நீ இவ்ளோ.. பேசமுடியாமல் தழுதழுக்க..

நான் ஆதரவுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டு, என் மலரைப் பற்றி எனக்கு தெரியாதா? மலர், அன்னைக்கி என்ன நடந்தது னு சொல்லு. உன் மனசில இருக்கிற பாரம் கொஞ்சமாவது குறையும்.
கொஞ்ச நேரம் கழித்து, தேறிய பின் மலர் அன்று என்ன நடந்தது என்பதை சொல்ல ஆரம்பித்தாள்.

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
Please mail to siva69.com@gmail.com

உங்கள் சிவா.

பகிரப்பட்ட

NEW REALESED