Shiva's Yoga is all Maya - 8 books and stories free download online pdf in Tamil

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 8


நான் உங்கள் சிவா.

மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.
இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com

நான் மாயா..

அடுத்த நாள் காலை நான் வழக்கம் போல் boutique shop வந்து விட.. ஸ்ருதி யும் கூட இல்லை. Night அவள் எனக்கு phone பண்ணி தைரியம் சொல்லி, எல்லா problem ம் இதோடு முடிஞ்சிடுச்சு.. கவலைப்படாதே.. கார்த்தி பண்ண Heroism குறித்து சிலாகித்து.. சீக்கிரமே வந்துடறேன். கார்த்தி யை நல்லபடியா பார்த்துக்கோ என்றாள் சிரித்தபடி.

என்னதான் work ல் concentration பண்ணாலும்., Staffs டன் பேசிக்கொண்டு இருந்தாலும், கார்த்தி பற்றிய எண்ணமே சுற்றி சுற்றி வந்தது.. மனது இன்னும் நேற்று முதன் முதலாக என் வாழ்வில் நடந்ததை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தது. ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் நானே நினைத்து நினைத்து சிரித்து கொண்டே இருந்தேன். என் வாழ்க்கையில் உண்மை யாகவே என்னை எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி லவ் பண்ணியது கார்த்தி தான். மனதெல்லாம் பூரித்து போய் இருந்தது. இந்த மாதிரி ரொம்ப சந்தோஷமாக நான் எப்பவும் இருந்ததில்லை. உடம்பும் மனசும் லேசானது போல் இருந்தது.

நேற்று கார்த்தி எப்படி நடந்து கொண்டான். அவனும் ஆசை ஆசையாய் அனுபவித்து என்னையும் அனுபவிக்க வைத்து சொர்க்கத்தை அல்லவா காட்டினான். நினைத்தாலே உடம்பு சிலிர்த்தது. கடைசியில் கையை பிடித்து கொண்டு மாயா என்னை marriage பண்ணிக்கோ என்று கெஞ்சின போது.. அவன் கண்களில் ஃப்யூர் லவ், வார்த்தைகளில் அவனுடைய உண்மையான மனது அதில் லவ். பாசம் எல்லாம் அப்படியே அப்பட்டமாக தெரிந்தது. முதலில் அவனுடன் ஏற்பட்ட மோதல், சண்டை, கோபம்... எல்லாம் நினைவு க்கு வந்தது. அதிலும் Yoga class ல் சண்டை வந்தபோது சொன்ன சின்ன சின்ன பொய்கள்.. அதுவும் நானே எதிர்பார்க்காத நேரத்தில் என்னை முத்தமிட்டது... ரொம்பவும் தைரியம் தான்.

கார்த்தி க்கு எதையும் மறைக்க தெரியாது போல.. மனதில் உள்ளதை அப்படியே பேசி விடுகிறான். என்ன கொஞ்சம் விளையாட்டுதனம் ஜாஸ்தி.. அதுவும் ரசிக்கும் படி தான் இருக்கிறது. யாருக்கும் எந்த வித harm ம் இல்லாமல்..
அவனைப் பற்றி நினைக்கையில் மனது விம்மியது.. நான் தான் இப்படி நினைத்து கொண்டு இருக்கிறேன். அவன் இந்நேரம் என்ன பண்ணிக்கொண்டு இருப்பான்? என்னைப்பற்றி நினைத்து கொண்டு இருப்பானா? இல்லை எல்லாம் மறந்து விட்டு அவன் வேலையில் மூழ்கிப் போய் விட்டானா?
யோசித்து கொண்டிருக்கும்போதே கார்த்தி இடமிருந்து ஃபோன். சந்தோஷம் மேலிட.. போன் attend பண்ணேன்.

மா..யா.. என்று கார்த்தி குரல் குழைவாக..

ஹலோ ஏன் என்னாச்சு கார்த்தி? குரல் ஒரு மாதிரி இருக்கு?.

மாயா என்னால இங்கே வேலை யே பார்க்க முடியலை. உன் நினைப்பாகவே இருக்கு.

நான் சிரித்து கொண்டே.. அப்படியா? ஏன் சார் அப்படி? எனக்கு ஒண்ணும் அப்படி இல்லை. தெரியவும் இல்லை., என்றேன் பொய்யாக.

பொய் சொல்லாத... சும்மா இருந்தவனை ஏதோ பண்ணி கெடுத்துவிட்ட மாதிரி.. நேத்து நீ பண்ணதுல..

என்னது நான் பண்ணேனா? படவா?

சரி.. சரி.. நாம இரண்டு பேரும் தான்.. அது நினைப்பாகவே இருக்கு. ப்ளீஸ் மாயா.. இப்பவே கிளம்பி flats க்கு வாயேன். நானும் leave போட்டுட்டு வந்தர்றேன். என்னால முடியல. உன்னோட Intimacy வேணும்.

டேய், என்ன இது? யாருக்காவது கேட்டுடப்போகுது. பேசாம இருடா.

என்னத்த இருக்கிறது? எனக்கு எப்பவும் உன் ஞாபகமாகவே இருக்கு.

ஐயையோ.. என்னடா இப்படி பேசுற? சிரித்துக்கொண்டே.. ஏன் நேத்துலாம் நல்லாத்தானே இருந்த? அப்பறம் என்ன?

அது நேத்து..
மா..யா.., ஒண்ணும் தெரியாத வரைக்கும் நல்லாதான் போய்கிட்டிருந்தது.. இப்ப என்னோட அழகான மாயா வை லவ் பண்ணதிலிருந்து, ஒண்ணா சேர்ந்ததுக்கப்பறம்... எனக்கு தூக்கம் போச்சு, சுகம் கண்டுபோச்சு..
ஆசையா இருக்கு. இன்னும் வேணும் வேணும் னு மனசு கேட்குது.

டேய்.. டேய்.. என்ன இது போன்ல.. நீ சொல்ல சொல்ல. எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்குது. வெட்கமா இருக்கு.

கார்த்தி ஒண்ணு சொல்லட்டுமா? எனக்கும் இன்னைக்கு காலையில இருந்து உன்னோட நினைப்புதான்.
நேத்து நடந்ததை மனசில Replay பண்ணிகிட்டிருக்கேன்.

அப்..ப..ற..ம். என்ன மா..யா..? நீ கிளம்பி வா.. இல்ல நான் கிளம்பி Shop க்கு வந்தர்றேன். உன்னய பார்க்கனும் னு போல இருக்கு. கிளம்பி வரட்டா?

ஐயையோ.. அடி வாங்குவ.. நீ இங்க வந்தா உன் கைய காலை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்ட. Staffs லாம் இருக்காங்க.

மாயா இப்ப நீ வெட்கப்படுறதை நான் பார்க்கனுமே... இந்நேரம் உன்னோட கன்னம் இரண்டும் சிவந்திருக்குமே..
கொஞ்சம் video call பண்ணேன் நான் பார்க்கிறேன்.

உன்ன.. இரு..

ப்ளீஸ் மாயா..

படுவா.. படுத்தாதே.. இனிமேல் எல்லாம் marriage க்கு அப்பறம் தான்.

அப்படியா? .. ஓகே, இப்பவே நான் கிளம்பி நம்ம colony க்கு வர்றேன். நீயும் வந்துடு. நம்ப பிள்ளையார் கோவில்ல வச்சி இன்னைக்கே கல்யாணத்தை வச்சிக்கலாம். அப்பறம் உனக்கு ஓகே தானே.

டேய் என்ன இது.. எடுத்தோம் கவிழ்த்தோம் னு.. அதெல்லாம் perfect ஆ நடக்கனும்.

நீ எனக்கு வே.ணு..ம் மாயா. உன்னோட intimacy.. வாசனை, feelings இதெல்லாம் ரொம்ப miss பண்றேன் மாயா. எனக்கு பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு.
குரல் தழுதழுத்து.. நீ இல்லைனா நான் செத்துடுவேன் மாயா.. நீ எப்பவும் என் பக்கத்திலே இருக்கனும் னு ஆசையா இருக்கு. மனசு கிடந்து அடிச்சிக்குது. அதுவும் நேத்து நமக்குள்ள அந்த மாதிரி நடந்ததுலேருந்து... அதுக்கு தான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குவோம்ங்கிறேன். ப்ளீஸ்..

எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது..
கார்த்தி.. ஐ லவ் யூ சோ மச்.. நானும் உன்னய ரொம்ப miss பண்றேன். சரி கவலைப்படாதே.. Lunch க்கு இங்கே Shop க்கு வந்துடு. நம்ம favourite hotel போயிட்டு Lunch முடிச்சிட்டு அப்பறமா...

அப்பறமா.. என்ன.. என்ன..சொல்லு ..?

அலையாதே.. அப்பறமா என் flat க்கு போயிடலாம்.

வாவ்... என் செல்ல, தங்கமான மாயா..
முத்தம் கொடுத்து கொண்டே..
ஒரு சின்ன change.. ப்ளீஸ்.
முதலில் flats க்கு போயிட்டு அ..ப்..ப..ற..மா.. hotel Lunch க்கு போகலாமே..

நீ அடிவாங்க போற.. சிரித்து கொண்டே கொஞ்ச நேரம் எல்லாத்தையும் மூடி கிட்டு வா..

மாயா, நான் இப்பவே கிளம்பி வர்றேன். உன்னய முதலில் பார்க்கனும். உன்னய பார்க்காமல் என்னால இருக்க முடியல.
இனிமே எப்படி இருக்க போறேன் னு கூட எனக்கு தெரியலை. நீ என் பக்கத்திலேயே இருக்கனும். நீ இருந்தால் எனக்கு போதும். வேற எதுவும் வேண்டாம். முதல்ல நான் கிளம்பி வர்றேன். முத்தம் கொடுத்து கொண்டே போனை கட் பண்ணினான்.

கார்த்தி வரவுக்காக மனசெல்லாம் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து wait பண்ணிக்கொண்டிருந்தேன்.

எதிர் பார்த்த அனைத்தும் நடந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சியே.
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஆனால் காலம் வேறு கணக்கு வைத்திருக்குமே.

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com


தொடரும்...
பகிரப்பட்ட

NEW REALESED