Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 4

சிவாவின் - Yoga எல்லாம் மாயா.. Part - 4


நான் உங்கள் சிவா.
மறுபடியும் இந்த தொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.
இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com


சொன்ன மாதிரியே அடுத்த நாளே நாங்கள் மூவரும் நல்ல ஒரு restaurant போனோம். எல்லாம் veg. Items தான். Crispy vegetables super ஆ இருந்தது.
செம ஜாலியாக enjoy பண்ணிக் கொண்டு dinner பண்ணோம்.
மாயா எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாவது போல் தோன்றியது.

Dinner முடிந்து., மாயா என்னிடம் உனக்கு வேணும்னா ஏதாவது drinks order பண்ணிக்கோ... இந்த restaurant ல available. ஏன் அந்த குறையை விட்டு வைப்பானேன். போகும் போது நான் வேணா car drive பண்றேன்.

அதெல்லாம் எனக்கு ஒண்ணும் தேவையில்லை..
வேணும்னா கட்டபுஸ்க்கை கேளு, ஏதாவது vodka மாதிரி வேணுமா? னு.

ஸ்ருதி, டேய் உன்னய பத்தி கேட்டா.. உன்ன பத்தி மட்டும் சொல்லு...
அடுத்தவங்களை பத்தி சொல்லாதே.

சரிங்க அக்கா...
மவனே அடிபடப்போற..

மாயா, கார்த்திக் ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் நான் சந்தோஷமா இருக்கேன். Thank you for your company.. you both..

It's My sorry Our pleasure..

ஸ்ருதி என்னவோ மனதில் நினைத்து கொண்டு தலையாட்டியபடி சிரித்து கொண்டாள்.
சந்தோஷமாக flats க்கு எல்லோரும் return கிளம்பினோம்.


அடுத்த நாளே ஈவினிங் Yoga class ஆஜர் ஆனேன். மாயா வும் கட்டபுஸ்க்கு வர.. ஸ்மைலுடன் வரவேற்று கொண்டோம்.

பின் அதே பர்வதாசனம் with variations வர நான் ரொம்ப control பண்ணிக் கொண்டு, பின்னால் மாயா வை பார்க்க கூடாது.. பார்க்க கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு குனியும் போது மாயா வை பார்க்கால் இரண்டு மூன்று தடவை இருந்து விட்டேன்.

அடுத்த cycle ல் அதே பர்வதாசனம் வர..
பின்னால் கட்டபுஸ்க்கு வேண்டுமென்றே இரும, குனிந்து இருந்த நான் நான் டக் கென்று சைடில் பார்க்க மாயா இடுப்பை மூடியிருந்த inner தென்பட.. நான் பார்த்ததை மாயா பார்க்க, ஏன் பார்த்தேன் என்று ஸ்ருதியையும் பார்க்க.. மூவரும் அடுத்தடுத்து மற்றவர்கள் யாருக்கும் தெரியாமல் சிரித்துக்கொண்டோம்.

Break ல் மாயா என்னை பார்த்து ஸ்மைலுடன் ஆள்காட்டி விரலை ஆட்டி ஜாக்கிரதை என்று சைகை பண்ணினாள். நான் silent ஆக ஸ்ருதியை நோக்கி விரல் காண்பிக்க, கட்டபுஸ்க்கு இதையெல்லாம் கவனித்து கொண்டே ஒண்ணுமே தெரியாத மாதிரி சிரிப்பை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
அடுத்து Yoga Master, வருகிற June 21 Wednesday world Yoga day celebrate பண்றோம். அன்னைக்கு morning 6.15 am க்கு Class இருக்கும். எல்லோரும் attend பண்ணனும். Please attend without fail. என்று சொல்லி ட்டு class close பண்ணார்.

நாங்களும் பேசிக்கொண்டே வெளியே வந்தோம். வெளியே எங்களை இரு ஜோடிக் கண்கள் watch பண்ணிக்கொண்டேயிருந்தது. நான் casual ஆக பார்க்க அதில் ஒருவன் டக் கென்று திரும்பி கொண்டு வேறு எங்கோ பார்க்க.. ஏதோ சின்ன நெருடல் என் மனதில்.. அவன் யார் என்று யோசித்ததில்.. yes, அவன்தான் என் opp. Flats Dr. பையன். அன்னைக்கு beer bottle.. tease.. fight.. என் கையில் injury எல்லாம் ஞாபகம் வந்தது. திரும்பி பார்க்கும் போது இருவரும் இல்லை. ஆனால் அவன் பார்வையில் ஏதோ தப்பு தெரிந்தது. நான் திரும்பி பார்ப்பதை பார்த்து..

மாயா.. என்ன? Any problem?
அதெல்லாம் ஒண்ணுமில்லை.

ஸ்ருதி, ஏதாவது aunty போயிருக்கும் அதான் நம்மாளு.. அவர் தான் Aunty Hero வாச்சே.. ஏன் சார்? அப்படித்தானே?

இல்லை.. ஒரு ஆயா போனுச்சு.. உன்ன மாதிரி யே இருந்ததுனால உன் சொந்தக்காரங்களா இருப்பாங்களோனு.. பார்த்தேன்.
டேய்.. வேணாம்
மாயா, சிரித்து கொண்டே..
wait.. wait.. , ஏன் எப்ப பாரு, சின்ன பிள்ளைங்க மாதிரி அடுத்தவங்களை வாரிகிட்டே இருக்கீங்க.. cool.

ஓகே கட்டபுஸ்க்கு we r friends..

டேய் என்னை அப்படி கூப்பிடாதனு சொன்னேன்ல.
ஓகே sorry.. friends?
ஸ்ருதி thums up காட்டி friends என்றாள்.

கொஞ்ச தூரத்தில் மறைந்திருந்து மறுபடியும் அதே இரண்டு ஜோடி கண்கள் எங்களையே watch பண்ணிக்கொண்டிருந்தன.


மறுநாள் Saturday morning எல்லாரும் காஃபி ஹவுஸ் ல் meet பண்ணோம். . Office function பத்தி discuss பண்ண..
Climate நல்லா இருந்தது. காபி order கொடுத்து விட்டு வெளியே open area வில் lawn ல் wait பண்ண, மாயா phone attend பண்ணிகொண்டே எழுந்து கொஞ்சம் தூரம் சென்றாள். நடந்து கொண்டே போன் பேசிக்கொண்டிருக்க.. என்னமோ என் கவனத்தை பெரிதும் ஈர்த்தாள்.

இன்றைக்கு அதிசயமாக Grape colour saree with sleeveless grey ஜாக்கெட் அணிந்திருந்தாள். அவள் வெள்ளை வெளேர் கலருக்கு dark sarees அற்புதமாக பாந்தமாக இருந்தது. காதில் போட்டிருந்த traditional ஆன தோடு அவள் பேச பேச அழகாக ஆடிக்கொண்டிருந்தது. காற்றுக்கு ஏற்ப நெற்றியில் மேல் விழும் கேசத்தை ஒதுக்கிக்கொண்டே அவள் பேசும் லாவண்யம் கொள்ளை அழகு.

சிம்பிளான make-up ல் கவர்ச்சி யாக தோன்றாமல் நளினமாக இருந்தாள்.
உதட்டுக்கு பூசின லைட் Red lipstick, கழுத்தில் மெல்லிய Gold chain அவள் அழகை இன்னும் மெருகேற்றியது.
அப்போது Colony கோவிலில் பூஜைக்கான மணி அடிக்க... அந்த மணி சப்தத்திற்கு புறாக்கள் பறந்து வட்டமிட..
க்ளைமேட் கூட இன்று cool ஆக இருந்தது. வீசும் மெல்லிய தென்றல் காற்று குளிர்ச்சி யாக இருந்தது. இயற்கையான கண்கவர் பூக்கள் walking பாதை சுற்றிலும் பூத்து குலுங்கின. பச்சை புல் வெளி.. குப்பை கூளம் எதுவும் இல்லாமல் clean ஆக நன்றாகவே colony யை maintain பண்ணியிருந்தார்கள். கொஞ்ச தூரத்தில் water fountain. மாயா போன் பேசிக்கொண்டே அந்த மலர்களுக்கு இடையே புல் தரையில் நடந்து வர, பின்னால் Water fountain.. இந்த situation ல் மாயா வை பார்த்தால் தேவ கன்யா போல இருந்தாள். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றியது.
என்னை மறந்து பார்த்து கொண்டே இருந்தேன்.

ஜொள்ளு வடியுது.. இந்தா tissue paper துடைச்சிக்கோ..
திடுக்கிட்டு பார்த்தால் ஸ்ருதி.. கையில் tissue paper டன்.

அசடு வழிய.. அதெல்லாம் இல்லை.. இன்னைக்கு உங்க மேடம் saree ல சூப்பரா கலக்கலா இருக்காள்ல..

டேய் உண்மைய சொல்லு, மாயா மேல உனக்கு ஒரு crush தானே.. படவா..

நான் வேண்டுமென்றே சத்தம் போட்டு மாயா மேடம்.. மாயா மேடம்.. உங்க மேல எனக்கு ஏதோ இது னு.. ஸ்ருதி சொல்றா..
இதை கேட்டு பயந்து ஸ்ருதி என் வாயை அவள் கைகளால் மூட try பண்ண..
மாயா தூரத்தில் போன் பேசிக்கொண்டே ..
ஏதோ நான் சொல்கிறேன்.. but, புரியாமல் .. அங்கேயிருந்து what.. என்ன..என்ன ஸ்ருதி. காதுல விழல.. என்று கேட்க..

கட்டபுஸ்க்கு ஒண்ணுமில்லை.. ஒண்ணுமில்லை.. என்று சொல்லி கையாட்ட..
நான் இல்லை அது.. ஸ்..ரு..தி.. என்று இழுத்து ..
கடைசியில் நீ saree ல super ஆ இருக்க னு கையால் சைகை செய்து காண்பிக்க..
மாயா சிரித்துக்கொண்டே.. உதட்டை மடித்து ..,
தன் ஆள் காட்டி விரலால் கொன்னுடுவேன் என்று என்னை பார்த்து சைகை பண்ணினாள்.

கட்டபுஸ்க்கு அப்பாடா என்று sofa chair ல் சரிந்து.. கொஞ்ச நேரத்தில படுத்திட்டியேடா.. பாவி.. எமகண்டத்தில பிறந்திருப்பியோ? உன்ன சொல்லி குத்தமில்லை.. எல்லாம் உங்க அப்...

ஏய்.. கட்டபுஸ்க்கு போதும் நிப்பாட்டு.. ஆனா நீ சொன்னதிலேயும் ஒரு point இருக்கு.. மாயா மேல எனக்கு ஒரு crush இருக்கு ன்னு நினைக்கிறேன். அது இவ்வளவு நாள் எனக்கு தெரியாம இருந்தது. Thanks..

டேய் என்னமா நடிக்கிறடா.. பேசாம cinema ல நடிக்க போயிடுடா..
மூச்சு வாங்கிக்கொண்டே.. என்னால முடியலடா.. படுத்துறியேடா.. போதும் டா சாமி.. எந்த நேரத்தில எது பண்ணுவனு தெரியமாட்டேங்குதுடா..

நான் சிரித்து கொண்டே. எதாவது அப்படி மாயா மேல லவ் இருந்தா உனக்கு msg. பண்றேன். நீதான் ஹெல்ப் பண்ணனும். என்ன?.

ச்சீ போடா..
காஃபி ஷாப் உள்ளேயிருந்து எங்களை யாருக்கு தெரியாமல் சிலர் watch பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

நான் திரும்பி உள்ளே போய் Bill settle பண்ணி விட்டு திரும்பும் போது என் கண்ணில் corner sofa வில் Dr. பையனுடன் சேர்த்து இன்னும் இரண்டு பேர் தலையில் cap டன் கண்ணில் பட்டார்கள். என்னை பார்த்தவுடனே தலையை குனிந்து கொண்டான்.
எனக்கு பொறி தட்டியது. வேண்டுமென்றே எங்களை follow செய்கிறானா? இல்லை.. நாம்தான்.. சரி விட்டு பிடிப்போம்.

நாட்கள் உருண்டோட .. எல்லோரும் busy யாக அவரவர் வேலையில் இருந்தோம்.
மாயா, ஸ்ருதி Event ற்காக எங்கள் office அடிக்கடி வரப்போக.. நாங்கள் அவ்வப்போது சந்தித்து கொண்டோம்.

விதியின் விளையாட்டு தொடங்கியது.
தொடரும்...

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com

உங்கள் சிவா.