The afternoon ... books and stories free download online pdf in Tamil

பிற்பகல் விளையும் ......

-: பிற்பகல் விளையும் :-

1

கோயம்புத்தூர் ரயில் நிலையம் , அந்த மதிய வேளையிலும் , படு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது . சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய ரயில்வே கடிகாரத்தில், மணி 3.20 -ஐ தொட்டிருக்கும் . மதியம் 3.30 மணிக்கு வர வேண்டிய மங்களூர் எக்ஸ்பிரஸ் வண்டியை எதிர்பார்த்து , மிகப்பெரிய கூட்டம் நடைமேடையில் அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்தது .

திடீரென்று அங்கிருந்த ஒலிபெருக்கியிலிருந்து , பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் , அழுத்தமான தமிழில் ஒலித்தது .

டின் ! டின் ! டின் ! ........ பயணிகளின் கனிவான கவனத்திற்கு, மங்களூரிலிருந்து , சென்னை வரை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் , தடம் 2-ல் , இன்னும் சற்று நேரத்தில் , வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

பயணிகள் தங்கள் உடமைகளை சரிபார்த்துக் கொண்டு தயாராயிருந்தார்கள் . அடுத்த சில நிமிடங்களில் , மங்களூர் எக்ஸ்பிரஸ் தண்டவாளம் -2 இல், மெல்ல, தலை காட்டியிருந்தது . பயணத்திற்காக முன்பதிவு செய்தவர்களின் பட்டியலை , ரயில் பெட்டிகளில் , வேக வேகமாக ஒட்டிக்கொண்டிருந்தார்கள் ரயில்வே ஊழியர்கள் . S-7 பெட்டியில் , பயணம் செய்பவர்களின் பட்டியலில் ,

சீட் நம்பர் 27 , பெயர் : ரவி , வயது : 35 என்று அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் , தன் தோளில் மாட்டியிருந்த பையுடன், ரயில் பெட்டியின் உள்ளே பிரவேசித்தார் இன்ஸ்பெக்டர் ரவி . நல்ல உயரம் . காவல்துறைக்கே உரிய கட்டுக்கோப்பான உடம்பு . அசட்டு தைரியம் , இவை அனைத்துமே அவரை போலீஸ் என்று அப்பட்டமாக காட்டிக்கொடுத்திருந்தது.

ஜன்னல் ஓரத்தில் , படுக்கை வசதியுடன் கூடிய சீட் அவருக்கு தயாராயிருந்தது . சமீபத்தில் , அவர் விசாரணை நடத்திய வழக்கில், ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்களால் , அரியலூர் மாவட்டம் தூத்தூர் காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் . அதன் தாக்கத்தை அவர் முகத்தில் தெளிவாக உணர முடிந்திருந்தது . ரயில் மெல்ல புறப்பட தொடங்கியிருந்தது . சற்றே படுக்க முற்பட்ட அவரின் செல்போன் அலறியது . உடனே எடுத்து பார்த்தார் .

அவருடைய நண்பர் கணேஷ் . (தினச்செய்தி பத்திரிகையின் ஆசிரியர் ) லைனில் இருந்தார் .

கணேஷ் : ஹலோ ! ரவி ! என்ன ரயில் கெளம்பிடுச்சா ?

இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் ! இப்பதாண்டா கெளம்பிருக்கு . ஆமாம் நான் கேட்ட DETAILS என்னாச்சு ?

கணேஷ் : ஹ்ம்ம் ! எல்லா DETAILSயும் COLLECT பண்ணிட்டேன் !

நாளைக்கு நீ டூட்டில JOIN பண்ற தூத்தூர் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து , சரியா 1௦ கிலோமீட்டர் தூரத்துல தான் , அந்த மாத்தூர் கிராமம் இருக்கு . போன மாசம் 6 ஆம் தேதி தான் , வேளாண் ஆசிரியர் குமாரசாமிங்கற பெருசு அங்க செத்துப் போயிருக்காரு . அவர் சாதாரணமா சாகல . பேயடிச்சு செத்துப்போயிட்டதா அந்த கிராம மக்கள் சொல்றாங்க . அந்த ஊர்ல பேய் நடமாட்டம் இருக்குன்னும் நம்புறாங்க . இந்த கேஸ விசாரிச்ச போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரம் , ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வேற ஊருக்குப் போயிருக்காரு . காரணம் கேட்டதற்கு மன அழுத்தம்னு சொல்லிருக்காரு . BUT அந்த ஊர்ல எதோ ஒரு மர்மம் ஒளிஞ்சிருக்கு .

இன்ஸ்பெக்டர் ரவி : (.......... சிறிது நேரம் மௌனம் .......... ) .

கணேஷ் : என்ன ரவி ! ரொம்ப பயமுறுத்திட்டனா ? பேச்சையே காணோம்? என்றார் சிரித்துக்கொண்டே .

மறுமுனையில் மீண்டும் மௌனம் தொடரவே ,

ரவி ! ரவி ! என்றவர் பதற்றத்துடன் , இணைப்பைத் துண்டித்து விட்டு , மீண்டும் அவருக்கு போன் பண்ணினார்.

மறுமுனையில் , ரவி மீண்டும் பேசினார் .

இன்ஸ்பெக்டர் ரவி : ஹலோ ! என்றார் (தூக்க கலக்கத்தோடே)

கணேஷ் : என்னடா ! பேச்சையே காணோம் . தூங்கிட்டயா ?

இன்ஸ்பெக்டர் ரவி : ஆமாண்டா ! போன்ல CALL RECORDING OPTION CHOOSE பண்ணிருந்தேன் . அதான் தூங்கிட்டேன். நான் அப்புறம் கேட்டுக்கறேன் என்றார் சிரித்துக்கொண்டே .

கணேஷ் : இன்னும் உன்னோட போலிஸ் புத்தி , உன்ன விட்டுப் போகல இல்ல . ஓகே ! ANYWAY கொஞ்சம் ஜாக்கரதையா இரு . மீடியா LEVELல என்ன உதவி வேணாலும் எங்கிட்ட கேளு . நான் இருக்கேன் .

ஓகே GOOD NIGHT . என்று இணைப்பைத் துண்டித்தார் ரவி .

அடுத்த சில நிமிடங்களில் கணேஷின் RECORD செய்யப்பட்ட குரல், இன்ஸ்பெக்டர் ரவியின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது . வெளியே ஜெட் வேகத்தில் ரயில் பறந்து கொண்டிருந்தது .

2

சாயுங்கால நேரம் 5 மணி .... மரங்கள் அடர்ந்த மாத்தூர் கிராமத்தை , தென்றல் காற்று வருடிக்கொண்டிருந்தது .... அந்த மாலை வேளையில், கொட்டாப் பாக்கும் , சுண்ணாம்புடன் , வாயில் வெற்றிலையை மென்றவாறே , தென்னந்தோப்பில் , உட்கார்ந்திருந்தார் மாத்தூர் கிராமத்தின் ஊர்த்தலைவர் தவபுண்ணியம் . உடன் அவர் வேலைக்காரன் பொன்னையா , வெற்றிலையை மடித்து வைத்துக் கொண்டு நின்றிருந்தான் . தவபுண்ணியம் - வயது 53ன் விளிம்புகளில் இருக்கும் . நல்ல வாட்ட சாட்டமான உடல் . தொடர்ந்து 5 ஆவது முறையாக மாத்தூர் கிராமத்தின் ஊர்த்தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டவர் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : டேய் ! பொன்னையா ! என்னடா அவனுங்கள இன்னும் காணோம் ? வந்து இவ்ளோ நேரமாச்சு ?

பொன்னையா : ஐயா ! வந்துருவாங்கய்யா என்று சொல்லி முடிப்பதற்குள், சிவநேசனும் , ரமாலிங்கமும் தென்னந்தோப்புக்குள் நுழைந்திருந்தார்கள். இருவரும் வயதில் ஐம்பதைக் கடந்திருந்தார்கள் . ஊர்த் தலைவர் தவ புண்ணியத்தைக் கண்டவுடன் , வணக்கம் வைத்தவாறே எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தார்கள் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : (....... சற்றே கோபமான தொனியுடன் ....... ) , குமாரசாமி கேஸ விசாரணை பண்றதுக்கு , தூத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புது இன்ஸ்பெக்டர் வர்றானாம் . அநேகமா இன்னிக்கு ராத்திரியே இங்க வந்துருவான்னு நெனைக்கிறேன் .

சிவநேசன் : தலைவரே ! இதுக்குத்தான் இவ்ளோ அவசரமா வரசொன்னீங்களா ? நான் வேற , என்னமோ ஏதோன்னு நெனச்சு பயந்துட்டேன் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : யோவ் ! அதெல்லாம் ஒன்னும் இல்ல . ஆனா அவன் கொஞ்சம் கெடுபிடியான ஆள்னு எல்லாரும் சொல்றாங்க . யாரையும் அவ்ளோ சீக்கிரமா நம்ப மாட்டானாம் . அதனால , குமாரசாமி விவகாரத்துல , அவங்கிட்ட நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் .

ராமலிங்கம் : அவன் வந்து என்ன பண்ணீரப் போறான் ? ........ தலைவரே ! குமாரசாமியக் கொன்னது , செத்துப்போன அந்த வெண்ணிலா பொண்ணோட , ஆவிதான்னு ஊரே சொல்லுது . அத மீறி அவனால என்னத்த பண்ணீர முடியும் ? நீங்க தைரியமா இருங்க . பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரத்த ஊரை விட்டு ஓட வெச்ச மாதிரி , இவனையும் ஓட வெச்சுடலாம் . ஹ்ம்ம் .... அத விடுங்க . நம்ம கலையரசன் கல்யாண விஷயம் என்னாச்சு ? பொண்ணு பாத்துட்டு இருக்கறதா சொன்னீங்க ? .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : நாங்களும் பொண்ணு பாத்துட்டுதான்யா இருக்கோம் . ஆனா அவன் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்றான் . செத்துப் போன அந்த வெண்ணிலா பொண்ண , அவன் இன்னும் மறக்கவே இல்ல . அவளையே நெனச்சு நெனச்சு , தினம் தினம் செத்துகிட்டு இருக்கிறான் . இதுல , அவளோட தற்கொலைக்கு நான் தான் காரணம்னு சொல்லி , என்கிட்டயே சரியா பேச மாட்டீங்கறான் என்றார் விரக்தியுடன் .

சிவநேசன் : தலைவரே ! இந்தக் காலத்து பசங்க மனசு , குரங்கு மாதிரி , அப்பப்ப மாறிகிட்டே இருக்கும் . அதெல்லாம் போகப் போக சரியாயிரும் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : அப்புறம் இன்னும் ரெண்டு நாள்ல , அந்த உரம் தயாரிக்கிற கம்பெனிக்காரங்க கூட ( NEXTGEN FRETILIZERS LTD (உரம் தயாரிப்பு நிறுவனம்) ) ஒரு மீட்டிங் இருக்கு . அத முடிச்சுட்டு , அவங்க அக்ரிமெண்ட்ல SIGN பண்ணியாச்சுன்னா , நாம காச வாங்கிட்டு வந்தர்லாம் . அவ்ளோதான் .

சிவநேசன் : தலைவரே ! இதுல ஏதாவது பிரச்சனை வருமோன்னு நான் நெனைக்கிறேன் ...

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : சிவநேசா ! ... நம்ம ஊர்ல , நம்ம வைக்கிறதுதான் சட்டம் . யாரும் நம்மள எதிர்த்து பேச மாட்டாங்க . பழைய உரத்த தூக்கி எறிஞ்சுட்டு , இத பயன்படுத்துங்கன்னு சொன்னாப் போதும் . நம்ம பேச்சுக்கு , மறுபேச்சு பேசாம கேட்டுக்குவானுங்க நம்ம ஊர்க்காரங்க . இதுல யார் பிரச்சனை பண்ணாலும் , குமாரசாமிக்கு நடந்த கதிதான் அவங்களுக்கும் !!!! (என்றார் கறாராக) .

சற்று நேரத்தில் , வேலைக்காரன் பொன்னையா , இளநீரை வெட்டி , அதில் நாட்டுச்சாராயத்தைக் கலந்து தயாராக வைத்திருந்தான் .

ராமலிங்கம் : தலைவரே ! இன்னொரு விஷயம் . நம்ம ஊர்ல உண்மையாலுமே பேய் நடமாட்டம் இருக்குன்னு , ஊர் மக்கள் எல்லாம் பயப்படறாங்க . குறிப்பா அந்த சாமியார் கூட அத உண்மைன்னு சொல்லிருக்காரு . அதான் கொஞ்சம் பயமா இருக்கு .

இதைக் கேட்டவுடன் சத்தம் போட்டு சிரித்தார் தவபுண்ணியம் .

ஊர்த்தலைவர் - தவபுண்ணியம் : யோவ் ! யாரு அந்த அன்பாலயம் வேதாந்த சாமியாரா ? .. அவனே ஒரு ஏமாத்துக்காரன் . அவன் சொல்றதப்போய் நம்பிட்டு ....... குமாரசாமியக் கொன்னதே நாமதான் . அவன பேய் தான் கொன்னுச்சுன்னு , ஒரு வதந்திய கெளப்பிவிடலையா ? அந்த மாறிதான் இதுவும் .......... இவ்ளோ பெரிய மனுசனாயிட்ட , இதுக்குப் போய் ஏன்யா பயந்துட்டிருக்கற . அடேய் ரமாலிங்கம்...... , அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்லுவாங்க .. அதெல்லாம் ஒரு எழவும் கிடையாது . நீ தைரியமா இரு என்று சொல்லி , அந்த இளநீர் பானத்தை எடுத்து கையில் கொடுத்தார் . இத ஒரு ரவுண்டு உள்ள உடு .. எல்லா பயமும் வெளில வந்துரும் என்றார் சிரித்துக்கொண்டே ..

மூவரும் , கிட்டத்தட்ட நான்காவது ரவுண்டைத் தாண்டியிருந்தார்கள் .

3

நேரம் சரியாக இரவு 1௦:5௦ மணி . மங்களூர் எக்ஸ்பிரஸ் , மிகுந்த சப்தத்துடன் , அரியலூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கியது . அரியலூர் ரயில் நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது ..... என்கின்ற வாசகங்கள் ஆங்காங்கே இடம்பெற்றிருந்தன. கடைசி ஆளாக படிக்கட்டில் இருந்து இறங்கினார் இன்ஸ்பெக்டர் ரவி . கைகளை மேலே தூக்கி சோம்பலை முறித்து விட்டு , சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த அவர் , தன் கையில் இருந்த மொபைல் போனை எடுத்து , கந்தசாமி என்கிற நம்பரைத் தேடிக் கொண்டிருக்கிருந்தார் . சார் !!! என்ற குரல் கேட்டு , பின்னால் திரும்பிப் பார்த்த அவருக்கு , சல்யூட்டுடன் எதிர்ப்பட்டார் ஏட்டு கந்தசாமி . வயதில் 40–ஐ நெருங்கியிருந்தார் . கட்டையான உயரம் . காவல்துறைக்கே சற்றும் சம்பந்தப்படாத ஒரு உடல் வாகு .

சார் ! நான்தான் சார் ! ஏட்டு கந்தசாமி ............. என்று அவர் ஆரம்பிப்பதற்குள் அவரைக் கையமர்த்தினார் இன்ஸ்பெக்டர் ரவி . என்னவென்று தெரியாமல் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தார் கந்தசாமி .

இன்ஸ்பெக்டர் ரவி : உன்னப் பத்தி நானே சொல்றேன் என்று பேச ஆரம்பித்தார் ....... உன் பேரு கந்தசாமி . வயசு 40 . ரெண்டு புள்ள . ஒரு பொண்டாட்டி . 1௦ வருஷமா இதே ஸ்டேஷன்ல, கான்ஸ்டபிளா இருந்து , இப்பதான் ஏட்டா ப்ரொமோஷன் வாங்கிருக்கே . எதப்பத்தியும் கவலைப்பட்றதே இல்ல ..... சொந்த ஊர் மாத்தூர்லயே , போஸ்டிங் வாங்கினது , ரொம்ப சவ்ரியமாப் போச்சு ......... பெரிய பெரிய ஆபீசர்ஸ்களுக்கு , ஜால்ரா போட்டே காலத்தைக் கடத்தியாச்சு .... உன் பர்சனல் ரெகார்ட்ஸ எடுத்துப் பார்த்தேன் . ரொம்பக் கேவலமா இருந்துச்சு . இது போதுமா ! இன்னும் ஏதாவது சொல்லனுமா ? என்றார் ரவி .

ஏட்டு கந்தசாமி : முகத்தில் இருந்த அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல், இல்ல சார் ! நேரமாயிடுச்சு ! இன்னைக்கு இது போதும் ! போலாம் . என்று இருவரும் போலீஸ் ஜீப்பை நோக்கி நடந்தார்கள் . இருவரும் ஏறியவுடன் , ஜீப்பை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார் ஏட்டு கந்தசாமி .

நேரம் இரவு 11-ஐக் கடந்திருந்தது . ஆள் நடமாட்டமே இல்லாமல் , எங்கு பார்த்தாலும் , காரிருள் சூழ்ந்திருந்தது . எண்ணிப் பார்த்து விடக் கூடிய அளவிலே , தெரு விளக்குகளின் எண்ணிக்கை இருந்தது . இவரிடம் ஏதாவது கேட்கலாமா வேண்டாமா என்கின்ற குழப்பத்துடனே ஜீப்பை ஒட்டிக் கொண்டிருந்தார் ஏட்டு கந்தசாமி . ஜீப்பின் வேகம் சீராக அதிகரித்திருந்தது . அங்கிருந்த மௌனத்தைக் கலைத்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

இன்ஸ்பெக்டர் ரவி : என்ன கந்தசாமி ? எதோ கேக்கணும்னு நெனைக்கிற. ஆனா சொல்ல மாட்டீங்கிற . எதாருந்தாலும் தைரியமா கேளு .

ஏட்டு கந்தசாமி : அது ஒன்னும் இல்ல சார் ! என்னப்பத்தி எப்படி இவ்ளோ DETAILS கரெக்ட்டா தெரிஞ்சு வச்சிருக்கீங்க .

இன்ஸ்பெக்டர் ரவி : நான் யார்கிட்ட பேசுனாலும் , மொதல்ல அவங்களோட முழு விபரமும் தெரிஞ்சு வெச்சு கிட்டு தான் பேசுவேன் . அதான் என்னோட வழக்கம் ......... ஹ்ம்ம் !!! சரி அதெல்லாம் இருக்கட்டும் . பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆள் எப்படி ?

ஏட்டு கந்தசாமி : கிட்டத்தட்ட ஒரு அஞ்சேமுக்கால் அடி இருப்பார் சார் . WEIGHT ஒரு 65 இருப்பார்னு நெனைக்கிறேன் . நல்ல மாநிறம் ! தாடி மீசையெல்லாம் வெச்சு பயங்கரமா இருப்பார் சார் . அப்புறம் அவர் வலது கைல மொத்தம் ஆறு விரல் இருக்கும் .

இன்ஸ்பெக்டர் ரவி : யோவ் ! நான் என்ன MILITARYக்கா ஆள் எடுக்கிறேன் . HEIGHT WEIGHTல்லாம் சொல்லிட்டிருக்கிற .... அவர் மத்த விசயத்திலல்லாம் எப்படி ?

ஏட்டு கந்தசாமி : அவரா சார் ! அவர் ரொம்ப நல்ல மனுஷன் சார் . கை சுத்தம் . மாமுல் வாங்கினா திட்டுவார் சார் ! ஸ்டேஷன்ல மட்டும் இல்ல பொதுமக்கள்கிட்ட கூட அவருக்கு நல்ல மரியாதை இருந்துச்சு . ஆனா கொஞ்ச நாளா எதையோ பறிகொடுத்தமாறியே இருந்தார் . நானும் கேட்டு பாத்துட்டேன் . ஆனா அவர் எதையுமே சொல்லல . கடைசில ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு ஊர விட்டே போய்ட்டார் சார் ! எனக்கு தெரிஞ்சு அவரும் பேயப் பாத்து பயந்துருப்பார்னு நெனைக்கிறேன் சார் .

இன்ஸ்பெக்டர் ரவி : ( ...... சிரித்துக்கொண்டே ......) யோவ் ! இந்தக் காலத்துலயும் இன்னும் இந்த மாதிரி கன்றாவிகள , நாம நம்பிட்டுதான் இருக்கிறோம் இல்லையா . இந்தக்காலத்துல அவனவன் FACEBOOK , TWITTER னு போய்கிட்டு இருக்கானுங்க , இன்னும் நீங்க பேய் , பிசாசுன்னு பயந்துட்டு இருக்கீங்க .

ஏட்டு கந்தசாமி : சார் ! நீங்க வேற , நானே ரெண்டு மூணு தடவ பேயப் பாத்து பயந்துருக்கென் .

இன்ஸ்பெக்டர் ரவி : IS IT ? அப்படியா ? பேய் எப்படிய்யா ? இருக்கும் என்றார் சிரித்துக்கொண்டே .

ஏட்டு கந்தசாமி : தனியா இருக்கும்போது , திடீர்னு நம்ம கண்ணு முன்னாடி , எதோ ஒரு உருவம் வந்துட்டு போன மாதிரி இருக்கும் சார் ! . அவ்ளோதான் ரெண்டு நாளைக்கு தூக்கம் வராது . எந்த வேலையும் பண்ண முடியாது . அதனால தான் சார் நாம் எப்பவுமே தனியா இருக்கிறதில்ல .

இன்ஸ்பெக்டர் ரவி : மெல்ல சிரித்தவாறே , அப்ப கும்பல்லயே கோவிந்தா போட்டுட்டு இருக்கன்னு சொல்லு ..... சரி அத விடு . குமாரசாமி பேயடிச்சு.... செத்துப்போய்ட்டதா சொல்றாங்களே , பேய்க்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் ? எந்த பேய் அவர சாகடிச்சது ?

ஏட்டு கந்தசாமி : சார் ! கொஞ்ச நாளைக்கு முன்னால , தூக்குப்போட்டு செத்துப் போன வெண்ணிலாப் பொண்ணு தான் பேயா வந்து இதையெல்லாம் பண்ணீட்டு இருக்கிறதா சொல்றாங்க .

இன்ஸ்பெக்டர் ரவி : சரி ! அந்த வெண்ணிலாங்கற பொண்ணுக்கும் , குமாரசாமிக்கும் ஏதாவது முன்விரோதம் , பிரச்சனைன்னு இருந்துச்சா ?

ஏட்டு கந்தசாமி : இல்ல சார் ! அதெல்லாம் ஒன்னும் இல்ல .

இன்ஸ்பெக்டர் ரவி : அப்புறம் எப்படிய்யா ! ஒரு LOGICக்கே இல்லாம இதையெல்லாம் நம்புறீங்க .

ஏட்டு கந்தசாமி : சார் ! இதுல கூடவா LOGIC பாக்குறீங்க .

இன்ஸ்பெக்டர் ரவி : நிரூபணம் ஆகாத எந்த விசயத்தையும் நான் நம்பறதே இல்ல . குறிப்பா இந்த சாமி , பேய் , ஆவி , இந்த மாதிரி விசயங்கள நான் என்னிக்குமே நம்ப மாட்டேன் என்றார் .

நேரம் இரவு 11.3௦-ஐத் தாண்டியிருந்தது . நெடுஞ்சாலையில் கொஞ்ச தூரப்பயணம் . சற்று தொலைவில் கொள்ளிடம் டீ - ஸ்டால் என்ற பெயர் பலகையைப் பார்த்தவுடன் , வண்டியை ஓரங்கட்டினார் ஏட்டு கந்தசாமி . இருவரும் இறங்கி டீக்கடையை நோக்கி நடந்தனர் . கந்தசாமியைப் பார்த்தவுடன் , வாங்க சார் ! என்று சிரித்தவாறே வணக்கம் வைத்தார் டீக்கடைக்காரர் .

டீக்கடைக்காரர் : சார் ! இவரு யாரு ?

ஏட்டு கந்தசாமி : இவர்தான்யா நம்ம ஊருக்கு , புதுசா வந்துருக்கிற இன்ஸ்பெக்டர் .

டீக்கடைக்காரர் : சார் ! வணக்கம் ! என்று சொல்லி கையில் டீ கிளாஸ்களோடு வந்து நின்றிருந்தார் .

இருவரும் டீயை வாங்கிக்கொண்டு , வெளியே போலீஸ் ஜீப்புக்கு பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்தார்கள் .

இன்ஸ்பெக்டர் ரவி : இன்னும் ஸ்டேஷன் போறதுக்கு எவ்ளோ நேரம் ஆகும் ?

ஏட்டு கந்தசாமி : சார் ! இன்னும் ஒரு கால்மணி நேரமமாவது ஆகும் சார்.

இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் !!! . ஆமா !! அந்த வெண்ணிலாங்கற பொண்ணு யாரு ?

ஏட்டு கந்தசாமி : சார் ! அது வந்து ........ நம்ம ஊர்த்தலைவர் (மாத்தூர்) தவபுண்ணியம் ஐயாவோட , பையன் கலையரசனும் , அந்த வெண்ணிலாங்கற பொண்ணும் ரெண்டு வருசமா உயிருக்குயிரா காதலிச்சுருக்காங்க . இது பையன் வீட்டுக்கு எப்படியோ தெரிஞ்சிருச்சு .... பொண்ணு வேற ஜாதிங்கிரதால , பையன் வீட்டுல கடுமையான எதிர்ப்பு ...... இருந்தாலும் ..... கல்யாணம் பண்ணா , அந்தப் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு , கலையரசன் தம்பி தீர்க்கமா சொல்லியிருக்காரு .... வேற வழியே இல்லாம , தவபுண்ணியம் ஐயா , அவரோட நண்பர்கள் சிவநேசன் , ராமலிங்கம் , அப்புறம் ஊர்க்காரங்களையும் கூட்டிட்டுப் போய் , அந்தப் பொண்ணோட , அப்பா அம்மாவ அடிச்சு மெரட்டிருக்காங்க . ஒரு ஊரே அவங்களுக்கு எதிரா வந்து , நின்னதப் பாத்து , இடிஞ்சு போய்ட்டாங்க அவங்க ரெண்டு பேரும் . அதத் தாங்கிக்க முடியாம , அந்த பொண்ணு , லெட்டர் எழுதி வெச்சுட்டு , தற்கொலை பண்ணிருச்சு . லெட்டர்ல , கடைசில மீண்டும் சந்திக்க வாய்ப்பிருந்தால் , மீண்டு வருவேன்னு அந்தப் பொண்ணு எழுதீர்ந்தது . இத வெறும் சாதாரணமாத் தான் நாங்க எடுத்திருந்தோம் ......... ஆனா கொஞ்ச நாளைக்கு அப்புறம் தான் ,..... லெட்டர்ல அந்த பொண்ணு எழுதீர்ந்த , சில வார்த்தைகளோட அர்த்தமே , எங்களுக்கு புரிய ஆரம்பிச்சுச்சு ... ஊர்ல பல பேர் , பல விதமான அமானுஷ்யமான விசயங்களைப் பார்த்திருகிறாங்க . தீடீர்னு ஒரு உருவம் , நம்மளத் தாண்டிப் போன மாதிரி இருக்கும் . இரவு நேரங்கள்ல , வீட்டுக் கதவ யாரோ தட்டுற மாதிரி , சத்தம் கேக்கும் . கதவத் திறந்து பார்த்தா , யாரும் இருக்க மாட்டாங்க . குமாரசாமி ஐயா இறந்து போனதும்கூட , ராத்திரி 8 மணிக்கு மேலதான் . இதுனாலதான் எங்க ஊர்ல , ராத்திரி 7 மணில இருந்து , காலைல 6 மணி வரைக்கும் , யாரும் வீட்ட விட்டு வெளியே வர்றதில்ல .

இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் !!! சரி வண்டிய எடு , ஸ்டேஷன் போலாம் . இருவரும் ஏறி அமர்ந்தவுடன் , போலீஸ் ஜீப் காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்தது . கொஞ்ச தூரம் சென்றவுடன் , அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கட்டிடம் , சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வண்ணமயமாகக் காட்சியளித்தது . அகல்விளக்குகளின் வெளிச்சம் , அந்த கட்டிடத்தின் அழகை மெருகூட்டியிருந்தது . அதைப் பார்த்தவுடன் , இன்ஸ்பெக்டர் ரவி ,

“ யோவ் ! கந்தசாமி . என்ன பங்களாய்யா இது ! . பார்க்கவே ரொம்ப அருமையா இருக்குது ......“

வண்டியின் வேகத்தை சற்று குறைத்த ஏட்டு கந்தசாமி ,

“ சார் ! அது ஒரு ஆசிரமம் , அதுக்கு பேரு அன்பாலயம் . வேதாந்த சாமிகள்ங்கறவர் தான் , அந்த ஆஸ்ரமத்த நடத்துறாரு . ரொம்ப சக்திவாய்ந்த சாமியார் சார் அவரு . எங்க ஊர்ல சில அமானுஷ்ய நடமாட்டங்கள் இருக்குன்னு , அவர் தான் மொதல்ல கண்டுபிடிச்சாரு . கொஞ்ச நாளைக்கு யாரும் , இரவு நேரங்கள்ல , வெளியே வரவேண்டாம்னு அவர் தான் சொல்லியிருந்தார் சார் ! ..”

இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் !!! ஓகே !......... அப்ப அவர கண்டிப்பா நாம MEET பண்ணியே ஆகணும் ......

கிட்டத்தட்ட பத்து நிமிடப் பயணம் . தூத்தூர் காவல் நிலையம் ... என்ற பெயர் பலகை போலீஸ் ஜீப்பின் வெளிச்சத்தால் , மின்னிட்டுத் தெரிந்தது . இருவரும் இறங்கி , போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்கள் . தூங்கிக் கொண்டிருந்த , இரவு நேர பாதுகாப்பு போலீஸ்காரர்கள் , திடீரென்று எழுந்து சல்யூட்டுடன் எதிர்பட்டார்கள் . தூக்கக் கலக்கம் அவர்கள் கண்களில் , தெரிந்திருந்தது . அவர்களைக் கையமர்த்திய இன்ஸ்பெக்டர் ரவி , கந்தசாமியைப் பார்த்து ,

“ மாத்தூர் கிராமத்துல நான் STAY பண்றதுக்கு ஒரு வீடு கேட்ருந்தேனே ... என்னாச்சு ? .... ” என்றார் .

ஏட்டு கந்தசாமி : சார் ! வீடெல்லாம் ரெடி பண்ணியாச்சு . இன்னிக்கு மட்டும் இங்க ரெஸ்ட் எடுங்க .. காலைல அங்க போய்ப் பாத்துக்கலாம் ..

சார் ! அப்படியே நான் கெளம்புறேன் சார் ... என்றார் தலையை சொரிந்து கொண்டே .

இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் ! சரி ! ... நாளைக்கு காலைல ஆறு மணிக்கு வந்து என்ன PICK UP பண்ணிக்கோங்க ..... GOOD NIGHT என்றவர் , அங்கிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறே , அப்படியே மேசையில் கால் வைத்து மல்லார்ந்தார் ..

காலைல ஆறு மணிக்கே வரணுமா ! என அதிர்ச்சியடைந்தவராய் , தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தார் ஏட்டு கந்தசாமி . மணி 12.00 –ஐக் காட்டியிருந்தது . வேக வேகமாகப் புறப்பட்டிருந்தார் ....

4

அடுத்த நாள் காலை 6.3௦ மணி . பொழுது புலர்ந்திருந்தது . ஏட்டு கந்தசாமி அவசர அவசரமாக வந்து , வண்டியை நிறுத்தி விட்டு , காவல் நிலையத்துக்குள் நுழைந்திருந்த அவருக்கு , ஒரே ஆச்சர்யம் . நேற்றைய ஒரே இரவில் , காவல் நிலையம் தூசி தட்டப்பட்டு , மிடுக்காக காட்சியளித்திருந்தது . காலையில் வீட்டுக்குச் செல்ல தயாராயிருந்த , இரவு நேரக் காவல்துறையினர் ,

“ DUTYல JOIN பண்ண மொதல் நாளே , எங்கள இப்படி நல்லா வேலை வாங்கிட்டாருய்யா ! என்று கந்தசாமியின் காதுகளில் , முனுமுனுத்துக் கொண்டு சென்றனர் . காக்கிச் சட்டையில் கம்பீரமாகத் தெரிந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . குமாரசாமி கேஸ் விவரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார் . உள்ளே சென்ற கந்தசாமி , GOOD MORNING-உடன் SALUTE அடித்தார் .

இன்ஸ்பெக்டர் ரவி : வாங்க கந்தசாமி ! GOOD MORNING .... உக்காருங்க .

குமாரசாமி கேஸப் பத்தி , பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரம் தயார் பண்ண ரிப்போர்ட்டத்தான் இப்பப் பாத்துட்டு இருக்கேன் ...... எனக்கு அந்த வேளாண் ஆசிரியர் குமாரசாமியின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்ல , சில சந்தேகங்கள் இருக்கு . இது பற்றி , இந்த கேஸ்ல சில முக்கியமான விவரங்கள் சுந்தரத்திற்கு தெரிய வாய்ப்பிருக்கு ..... அதனால , இன்னிக்கு சாயந்தரம் சுந்தரத்தோட , நாம போன்ல இது பத்தி பேசியாகணும். ..... சரி ஓகே ... அதெல்லாம் இருக்கட்டும் ... எனக்கு அந்த செத்துப்போன , வெண்ணிலாவோட போட்டோ வேணும் ..

ஏட்டு கந்தசாமி : இதோ எடுத்துத் தர்றேன் சார் ! என்று , பழைய ரெகார்ட்ஸ்களைப் புரட்டிப் பார்த்த அவர் , வெண்ணிலாவின் புகைப்படத்தைக் கண்டதும் , சார் இதான் சார் அந்தப் பொண்ணோட போட்டோ , அப்புறம் இது அந்தப் பொண்ணு எழுதின கடிதம் ! என்று எடுத்து நீட்டினார் . வயல் வரப்புகளில் அமர்ந்து , தண்ணீரைத் தடவிக் கொண்டிருப்பதைப் போன்று வெண்ணிலாவின் புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது . வயது கிட்டத்தட்ட 25 இருக்கும் . கிராமத்து தேவதை போல் அழகாகக் காட்சியளித்திருந்தாள் . அதைப் பார்த்துவிட்டு , அடுத்ததாக கடிதத்திற்குள் நுழைந்தார் . வெள்ளைத் தாளில் சிவப்பு மையால் எழுதப் பட்டிருந்த எழுத்துக்கள் , அவள் வாழ்க்கையின் கடைசி நிமிடங்களை பிரதிபலித்திருந்தது .

“ அன்புள்ள அப்பா ! அம்மாவுக்கு !

இது உங்கள் அன்பு மகளின் கடைசிக் கடிதம் . சிறு வயதில் இருந்தே , நான் கேட்டதை எல்லாம் , எனக்கு மறுக்காமல் தந்த உங்களிடம் , நான் என் காதலை மட்டும் , முற்றிலுமாக மறைத்து விட்டேன் . நேரம் வரும்போது , எடுத்து சொல்லலாம் என்று நினைத்திருந்த எனக்கு , இந்தக் கடிதம் எழுதும் நேரமே , என் வாழ்க்கையின் கடைசி நேரம் என்பதை , என்னால் கணிக்க முடியவில்லை . ஊரார் மெச்சும் பிள்ளையாக , நான் வாழ வேண்டும் என்று நினைத்த உங்களை , இன்று என் காதலால் , அவர்களே காரி உமிழும்படி செய்து விட்டேன் . என்னால் இன்று நீங்கள் தலை குனிந்து நின்றீர்கள் . இப்படி நிகழும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை . உங்களைப் பார்க்கக் கூடிய அருகதை கூட எனக்கு இல்லை . என்னை மன்னித்து விடுங்கள் .

என் காதலன் கலையரசனுக்கு ,

ஜாதியும் , வசதியும் தான் , நம் காதலைத் தீர்மானிக்கின்றது என்றால் , அப்படிப்பட்ட காதல் நமக்குத் தேவையேயில்லை . நம்முடைய காதலுக்கு எதிராக , ஊரே அணி திரண்டு நிற்கிறது . நம் காதல் கரை சேரும் என்கின்ற நம்பிக்கை , உனக்கே இல்லாத போது , அது எப்படி சாத்தியமாகும் . உன்னுடைய நினைவுகளை , … மறப்பதை விட , இறப்பதே சிறந்தது என்று நான் முடிவெடுத்து விட்டேன் .

.......... மீண்டும் சந்திக்க வாய்ப்பிருந்தால் மீண்டு வருவேன் ........

இப்படிக்கு

உன் வெண்ணிலா ...

என்று படித்து முடித்தார் இன்ஸ்பெக்டர் ரவி . அடுத்த நிமிடம் இருவரும் போலீஸ் ஜீப்பில் ஏறியிருந்தார்கள் .

ஏட்டு கந்தசாமி : சார் ! இப்ப நாம எங்க போகப் போறோம் சார் ????...

இன்ஸ்பெக்டர் ரவி : மாத்தூர் கிராமத்தலைவர் தவபுண்ணியம் வீட்டுக்கு ...

போலீஸ் ஜீப் ..... வேகம் எடுத்திருந்தது . சாலையோரத்தில் இருந்த மரங்களெல்லாம் , இவர்களுக்கு பின்னே வேகமாக சென்று கொண்டிருந்தன ................ 2௦ நிமிடப் பயணம் . காலை 7.3௦ மணி . மாத்தூர் கிராமத்தின் எல்லையை அடைந்திருந்தார்கள் . அறிவியல் தொழில்நுட்பங்களை , அதிக அளவில் கண்டிராத ஒரு கிராமம் . எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென வயல்வெளிகள் ............... எந்த விதக் கவலையும் இல்லாமல் , ஒலி எழுப்பிக்கொண்டு , சுதந்திரமாகப் பறந்து சென்றுகொண்டிருக்கின்ற பறவைகள் கூட்டம் ...... ஏசுநாதரைப் போன்று , இடுப்பில் வெறும் வேட்டியுடன் , தோளில் கலப்பைகளை சுமந்தபடி , உழவர்கள் ஒரு பக்கம் வயலில் இறங்கியிருந்தார்கள் . கிராமத்துப் பாட்டின் ஒரு வரியை ஒருவர் பாட , அதே வரியைப் , பின்னணியில் இருப்பவர்கள் ஒரு சேரப் பாடிக்கொண்டே , ஒருபுறம் நாற்று நடவும் பணி தொடர்ந்திருந்தது .

“ என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் , ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் , ஒழுங்காய் பாடுபடு வயற்காட்டில் .. உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில் “ என்ற அந்தக் காலத்துப் பாடல் வரிகளுக்கு , இந்த மாத்தூர் கிராமமே சாட்சியளித்திருந்தது .

சற்று நேரத்தில் , ஊர்த்தலைவர் தவபுண்ணியத்தின் தென்னந்தோப்பை நோக்கி போலீஸ் ஜீப் சென்று கொண்டிருந்தது .

ஏட்டு கந்தசாமி : என்ன சார் ! ஒரே மௌனமா இருக்கீங்க ....

இன்ஸ்பெக்டர் ரவி : உங்க ஊரோட அழகு என்ன மெய்சிலிர்க்க வைக்கின்றது . உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் , உன்னால் சோற்றில் கை வைக்க முடியும்ன்னு சும்மாவா சொன்னாங்க ! உங்க கிராமம் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குய்யா .... என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தவபுண்ணியத்தின் வீடு வந்திருந்தது . தென்னந்தோப்பை ஒட்டி , ஒரு பெரிய மாடி வீடு தெரிந்தது . போலீஸ் ஜீப் சத்தம் கேட்டதும் , உள்ளே இருந்து , தவபுண்ணியத்தின் மகன் , கலையரசன் , இருண்ட முகத்தோடு எதிர்பட்டான் . அவனுடைய காதலின் வலியை , அவன் முகத்தில் நன்றாக உணர முடிந்திருந்தது .

ஏட்டு கந்தசாமி : தம்பி ! ஐயா வீட்ல இருக்காருங்களா என்றார் பவ்யமாக.

கலையரசன் : அப்பா ! வாக்கிங் போயிருக்காரு .. உள்ள வாங்க என்று அவர்களை வீட்டுக்குள் அழைத்து சென்று , உட்கார வைத்து விட்டு , அவனுடைய அறைக்குச் சென்று விட்டான் .

தவபுண்ணியத்தின் மனைவி மரகதம் , இவர்களைப் பார்த்தவுடன் , வாங்க !........... என்றார் முகமலர்ச்சியுடன் . அவரு இப்பதான் வாக்கிங் போயிருக்காரு . இப்ப வந்துருவார் . என்ன சாப்ட்றீங்க ? காபியா ? டீயா ?

அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்கம்மா ! என்று இன்ஸ்பெக்டர் ரவி சொல்ல ஆரம்பிப்பதற்குள் , காபியே குடுத்துருங்கம்மா ! என்றார் ஏட்டு கந்தசாமி. சற்று நேரத்தில் , காபி டம்ளர்களில் இருந்து ஆவி பறந்திருந்தது .

ஏட்டு கந்தசாமி : அம்மா ! தம்பி இப்ப எப்படி இருக்கிறாரு .. கொஞ்சம் பரவாயில்லையா ?

மரகதம் : எங்கப்பா ! நானும் என்னென்னவோ சொல்லிப் பாத்துட்டேன் . கேக்கவே மாட்டீங்கறான் . ராத்திரியெல்லாம் தனியா , அவனாவே பேசிட்டு இருக்கிறான் . கேட்டா வெண்ணிலாகூடதாம்மா பேசிட்டு இருக்கேன்கிறான் . நானும் எத்தனையோ டாக்டர்ஸ் கிட்ட காட்டிப் பாத்துட்டேன் . இது அந்தப் பொண்ணு இறந்த அதிர்ச்சிதான் , போற போக்குல சரியாயிருன்னுதான் எல்லாரும் சொல்றாங்க . ஆனா எனக்கு என்னமோ பயமாயிருக்குது . நீங்களே வந்து பாருங்க என்று கலையரசனின் அறையைக் காண்பித்தாள் . மெத்தை மீது அமர்ந்துகொண்டு , வெண்ணிலாவின் புகைப்படத்தையே , பார்த்துக் கொண்டிருந்தான் கலையரசன் . சின்னச்சின்னதாக சிகரெட் துண்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்திருந்தன . அறையின் சுவர் முழுவதும் , வெண்ணிலாவின் பெயரால் நிரம்பியிருந்தது . ஏட்டு கந்தசாமி , மெல்ல கலையரசன் பக்கம் சென்று , அவன் தோள்களைத் தொட்டு , “தம்பி !!!! “ என்றார் .

கலையரசன் : (திடீரென்று திரும்பி ) அவரையே உற்றுப் பார்த்தான் .

ஏட்டு கந்தசாமி : வெண்ணிலா ............என்று ஆரம்பித்தவுடன் , கலையரசனின் முகத்தில் மெல்ல மகிழ்ச்சி தெரிந்தது .

“ சொல்லுங்க சார் !! வெண்ணிலாவுக்கு ... என்னாச்சு என்றான் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ தம்பி ! வெண்ணிலா ................. இப்ப உயிரோட இல்லைங்கற விஷயம் உங்களுக்குத் தெரியும்னு நெனைக்கிறேன் . “ என்றார் தயக்கத்துடன் .

(அதைக் கேட்டவுடன் உரத்த குரலில் சிரித்தவாறே கலையரசன் ...)

“ சார் ! யார் சொன்னது வெண்ணிலா செத்துப்போய்ட்டான்னு .. நீங்க உட்கார்ந்துட்டு இருக்கிற இதே இடத்துல தான் , நேத்து ராத்திரி , அவளும் உக்காந்து பேசிட்டுப் போனா .. யார ஏமாத்தப் பாக்குறீங்க ..?????? என் அப்பா அம்மாதான் என்ன ஏமாத்த நெனைக்கிறாங்க ..... இப்ப புதுசா வந்துருக்கிற நீங்களுமா .............. என்றான் .

அதற்கும்மேல் எதுவும் பேச மனதில்லாமல், இருவரும் நடந்து , வெளியே வராந்தாவில் வந்து உட்கார்ந்திருந்தார்கள் .

அந்த நேரம் பார்த்து , உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு , வியர்த்து வழிந்த முகங்களுடன் , தவபுண்ணியமும் , அவர் சகாக்களான சிவநேசனும் , ராமலிங்கமும் வந்து கொண்டிருந்தார்கள் . அவர்களை நெருங்கியதும் ,

ஐயா ! வணக்கம் என்றார் ஏட்டு கந்தசாமி . இவர்தான்யா நம்ம ஊருக்கு புதுசா வந்துருக்கிற இன்ஸ்பெக்டர் ! என்றார் பௌவ்யமாக . இன்ஸ்பெக்டர் ரவி , தவபுண்ணியத்திடம் , கை குலுக்கி விட்டு , சார் ! நான் ரவி என்றார் .

தவபுண்ணியம் : ஹ்ம்ம் .. வணக்கம் .... உங்களப்பத்தி நெறையா கேள்வி பட்ருக்கேன் ...... அப்புறம் எங்க ஊர் எல்லாம் எப்படி இருக்குது ....

இன்ஸ்பெக்டர் ரவி : உங்க ஊர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு . இங்க வந்ததுக்கப்புறம் , இயற்கையோடவே வாழ்ற மாதிரி ஒரு FEELING இருக்குது சார் . ஆனா ............ என்று இழுத்தார் .

சிவநேசன் : அப்புறம் என்ன சார் ! அந்த ஆனா .............????

இன்ஸ்பெக்டர் ரவி : .................... அது ஒன்னும் இல்ல . இந்த ஊர்ல சொல்றமாதிரி இந்த ஆவி , பேய்ங்கற கட்டுக் கதைகளைத்தான் என்னால நம்ப முடியல .

சிவநேசன் : ( ..... சிரித்துக்கொண்டே .....) சார் ! நீங்க என்ன நாத்திகரா ????....

இன்ஸ்பெக்டர் ரவி : நான் நாத்திகன்ல்லாம் கெடையாது சார் ....... நிருபீக்க முடியாத எதையுமே நான் நம்பறதேயில்ல . அவ்ளோதான் ..... வேளாண் ஆசிரியர் குமாரசாமியின் மரணம் , ஒரு திட்டமிட்ட கொலைன்னு தான் நான் நெனைக்கிறேன் ..................... என்னால முடிஞ்சவரைக்கும் அதை நிருபீக்க முயற்சி பண்ணுவேன் . இதுல எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் நான் சந்திக்கத் தயாரா இருக்கேன் சார் .

( ..... தவபுண்ணியம் முகத்தில் பிரளயம் தெரிந்திருந்தது ....)

சற்று சுதாரித்துக் கொண்ட ராமலிங்கம் பேசத் தொடங்கினார் .

ராமலிங்கம் : இன்ஸ்பெக்டர் சார் ! நான் உங்க மன தைரியத்தப் பாராட்றேன் ... போலீஸ்காரன்னா ! இப்படித்தான் இருக்கணும் . ஆனா அதுக்காக எல்லா விசயத்துலயும் , இந்த மாதிரி குருட்டு நம்பிகையை வைக்கக் கூடாது . மொதல்ல நாங்களும் இந்த விசயத்தை நம்பல . நேர்ல பாத்ததுக்கப்புறம் தான் , எங்களுக்கே நம்பிக்கை வந்துச்சு .

இன்ஸ்பெக்டர் ரவி : அப்படி என்ன பாத்தீங்க .. எங்கிட்ட சொல்லுங்க . இந்த கேஸ்ல எனக்கு உபயோகமாயிருந்தாலும் இருக்கலாம் .

இதுவரை பேசாமல் இருந்த தவபுண்ணியம் பேச ஆரம்பித்தார் .

தவபுண்ணியம் : தம்பி ! நீங்க இப்பதான இங்க வந்துருக்கீங்க . போகப் போகப் பாருங்க . உங்களுக்கே தெரியும் . பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரம் இதே மாதிரி தான் பேசிட்டுத் திரிஞ்சார் .. இப்பப் பாருங்க ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போய்ட்டாரு ... ஏன் போனார்ங்கிற காரணம் யாருக்குமே தெரியல . எதுக்கும் நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்றார்..

இன்ஸ்பெக்டர் ரவி : (சற்று புன்னகைத்தவாறே) .......... நான் பாத்துக்கறேன் .. கூடிய சீக்கிரம் , இந்த புதிருக்கான விடையை நான் கண்டுபுடிச்சுக் காட்றேன் சார் ! என்றார் பெருமிதத்தோடு .

தவபுண்ணியம் : ஹ்ம்ம் .... வாழ்த்துக்கள் என்றார் வெற்றுப்புன்முறுவலுடன் ...

இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் போலீஸ் ஜீப்பில் ஏறிப் புறப்பட்டிருந்தார்கள் . அவர்கள் கிளம்பியவுடன் ,

ராமலிங்கம் : தலைவரே ! இவன இப்படியே விட்ரக்கூடாது . இன்னிக்கு ராத்திரி , நாம பண்ற வேலையில , அவன் நாளைக்கு காலைலயே , தானா ஊர விட்டே ஓடிருவான் .

தவபுண்ணியம் : இவன் சாதாரணமான ஆள் மாதிரி தெரியல . இவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கங்க . எதா இருந்தாலும் , யோசிச்சுப் பண்ணுங்க . அப்புறம் , இன்னும் ரெண்டு நாள்ல , அந்த உரம் தயாரிக்கிற கம்பெனிக்காரங்க .. (NEXTGEN FERTILIZERS LTD) கூட ஒரு மீட்டிங் இருக்குது . மறந்திராதீங்க .

5

நேரம் காலை 11 மணி . வேதாந்த சுவாமிகளின் அன்பாலயத்துக்குள் , போலீஸ் ஜீப் நுழைந்திருந்தது . நாலாப்புறமும் மரங்களடர்ந்து , பறவைகள் சூழ , ஒரு எழில்மிகு பூங்காவாகக் காட்சியளித்தது அன்பாலயம் . அன்பாலய பாதுகாவலர்கள் , போலீஸ் வாகனத்தைக் கண்டதும் , வணக்கத்துடன் , வலது புறமாக கையசைத்து , போர்டிகோவுக்கு வழி காட்டினர் . போர்டிகோவில் வண்டியை நிறுத்தி விட்டு , இருவரும் வெளியே நடந்தார்கள் .

ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு , அன்பாலயத்தின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் பட்டிருந்தது . ஓய்வறைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமிருந்தது . நன்றாக வழித்து எடுக்கப்பட்ட தலையுடன் கூடிய அன்பாலய நிர்வாகிகள் , அங்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருந்தனர் . இன்ஸ்பெக்டர் ரவி அன்பாலாயத்தின் ஒவ்வொரு அசைவையும் , கண்காணித்துக் கொண்டே வந்தார் . அன்பாலய நிர்வாகி ஒருவர் , இவர்கள் இருவரையும் பார்த்து , சார் ! நீங்க யாரப் பார்க்கணும் என்றார் ..

ஏட்டு கந்தசாமி : நாங்க வேதாந்த சுவாமிகளப் பாக்கணும் ...

அன்பாலய நிர்வாகி : அதோ அந்த கலையரங்கத்தில் தான் , சுவாமிகள் பிரசங்கத்தில் இருக்கிறார் .. இன்னும் 1௦ நிமிஷத்துல பிரசங்கத்த முடிச்சுடுவார் . நீங்க உள்ள போய் உட்காருங்க .. நான் சுவாமிகள் கிட்ட விசயத்த சொல்றேன் .. என்றார்

இருவரும் நடந்து உள்ளே சென்றார்கள் . துளசிதாசர் கலையரங்கம் என்று பெயரிடப்பட்டிருந்த , அந்த மண்டபத்துக்குள் நுழைந்திருந்தார்கள் .

மனித வாழ்க்கையின் , உன்னதமான கருத்துக்கள் , அந்த மண்டபத்தின் சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்தன . அதன் உட்பக்க சுவரில் எழுதப்பட்டிருந்த ஒரு வாசகம் , அவர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது .

“ அழகாய் இருக்கிற பொருளை நீங்கள் விரும்புவதில்லை . நீங்கள் விரும்புகின்ற பொருள் உங்களுக்கு , அழகாய் இருக்கிறது ... “ .

அதைப் படித்துப் பார்த்துவிட்டு , இருவரும் நடந்தார்கள் .

கொஞ்ச தூரம் உள்ளே நடந்ததும் , ஆழ்ந்த நிசப்தத்துக்கு நடுவே , வேதாந்த சுவாமிகள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் . நம்பிக்கை தரக்கூடிய ஒரு குரலால் , அந்த கலையரங்கத்தில் இருந்தவர்களைத் தன் வசப்படுத்தியிருந்தார் சுவாமிகள் .

மிகுந்த உற்சாகத்துடன் , பேசிக் கொண்டிருந்த அவர் ,

“ ஜனனம் , மரணம் இந்த இரண்டுமே மனித வாழ்க்கையில் , மறுக்க முடியாத இரு தருணங்களாகும் . இந்த பூமியில் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் , மரணம் ஒரு நாள் சம்பவிக்கத்தான் போகின்றது . அந்த மரணத்திற்கான யாத்திரைதான் , மனிதனின் இறுதியாத்திரை . மரணத்தினால் , சில பாவங்கள் தீரும் . மரணத்தினால் , சில சாபங்கள் தீரும் . ஒரு உயிர் , இந்த பூமியில் ஜெனித்த உடனேயே , அதனுடைய இறுதியாத்திரைக்காண கடிகார முள் ஓட ஆரம்பித்துவிடுகின்றது . எந்த நேரத்திலும் , அந்த கடிகார முள்ளின் ஓட்டம் நின்று விடலாம் . எனவே நாம் , நம்முடைய இறுதியாத்திரைக்காகத் எப்பொழுதும் தயாராயிருக்க வேண்டும் . “ எதற்கும் தயாராயிருங்கள் . உங்களிடம் மலை போன்ற உறுதியிருந்தால் , பாம்பின் விஷம் கூட , உங்கள் முன் சக்தியற்றுப் போய்விடும் . இந்த அளவிலே , இன்றைய பிரசங்கத்தை முடிக்கிறேன் நன்றி வணக்கம் “. என்று பேசி முடித்திருந்தார் . பிரசங்கத்தைக் கேட்ட பக்தர்கள் , புத்துணர்ச்சி பெற்றவர்களாய் , கலைந்து சென்று கொண்டிருந்தனர் . இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , வேதாந்த சுவாமிகளின் பக்கம் சென்று , வணக்கம் வைத்தனர் . புன்னகையான முகத்துடன் அவர்களை வரவேற்ற சுவாமிகள் , அவர்கள் இருவருக்கும் , எதிரே இருந்த நாற்காலியை , அடையாளம் காட்டினார் . இருவரும் அமர்ந்தவுடன் , ஏட்டு கந்தசாமி பேச ஆரம்பித்தார் .

ஏட்டு கந்தசாமி : சுவாமிஜி ! இவர்தான் நம்ம ஊருக்குப் புதுசா வந்துருக்கிற இன்ஸ்பெக்டர் . அவர் கேஸ் விசயமா , சில சந்தேகங்கள உங்ககிட்ட கேக்கணும்னு நெனைக்கிறார் .

புன்முறுவலுடன் , இன்ஸ்பெக்டர் ரவியைப் பார்த்த , வேதாந்த சுவாமிகள் “ தயக்கமில்லாம , உங்க கேள்விகளக் கேளுங்க ...” என்றார் .

உடனே இன்ஸ்பெக்டர் ரவி , ஏட்டு கந்தசாமியை திரும்பி ஒரு பார்வை பார்த்தார் . உடனே கந்தசாமி , முகத்தைத் திருப்பிக்கொண்டு , அந்த மண்டபத்தின் கதவுகளுக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டார் .

இன்ஸ்பெக்டர் ரவி : மாத்தூரில் நடக்கின்ற சில விசயங்கள் ரொம்ப விசித்திரமா இருக்கு . ஏதோ அமானுஷ்ய நடமாட்டம் இருக்குன்னு , நீங்களே கூட சொல்லிருக்கீங்க .

“ ஆமாம் ! நான் தான் சொன்னேன் ........”

இன்ஸ்பெக்டர் ரவி : அப்படி அந்த ஊர்ல , என்னதான் நடக்குது ?

சுவாமிகள் : “ ஹ்ம்ம் !!! ............... அந்த ஊர்ல , நிச்சயமா , ஏதோ ஒரு அமானுஷ்யம் இருக்கு . போன மாசம் ..... அந்த ஊருக்கு பிரசங்கத்துக்கு போன அன்னிக்கே , என்னால அத உணர முடிஞ்சது . நானும் , எனக்குத் தெரிந்த பரிகாரங்கள பண்ணிப் பாத்துட்டேன் . இதுவரைக்கும் எந்த பலனும் இல்ல . கடைசியா நம்ம முன்னோர்கள் , எழுதி வச்சிருந்த , சில புத்தகங்கள புரட்டிப் பார்த்தபோது தான் , எனக்கு ஒரு தீர்வு கெடச்சுச்சு ..... அதான் வர்ற பௌர்ணமியன்று , ஒரு அர்த்த சாம யாகம் பண்ணலாம்னு இருக்கிறேன் . அதற்கான முயற்சிகளத்தான் இப்ப பண்ணிட்டு இருக்கிறேன் . அதப் பண்ணிட்டன்னா ! என்னால அந்த அமானுஷ்யத்தக் கட்டுப்படுத்த முடியும் . பௌர்ணமி வர்றதுக்கு இன்னும் 3 நாட்கள்தான் இருக்கு . அதுவரைக்கும் எல்லாரையும் , கொஞ்ச நாளைக்கு , எச்சரிகையா இருக்க சொல்லிருக்கிறேன் “ .

இன்ஸ்பெக்டர் ரவி : அது அப்படி ! உங்களுக்கு மட்டும் அந்த அமானுஷ்யம் தெரியுது ? ....

வேதாந்த சுவாமிகள் : (.........கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு...........) அது ஒரு உள்ளுணர்வுதான் ...... எங்கள மாதிரி ஆளுங்களுக்கு ஏற்படுகின்ற ஒரு , சாதாரண உணர்வு தான் அது .

(..........மெல்ல சிரித்தார் இன்ஸ்பெக்டர் ரவி..........)

இன்ஸ்பெக்டர் ரவி : “ அப்ப குமார சாமியக் கொன்னது அந்த அமானுஷ்ய ஆவி தான்னு சொல்றீங்க . ”

வேதாந்த சுவாமிகள் : இருக்கலாம் ........ இல்லாமலும் இருக்கலாம் . இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கலாம் ..... இன்னும் என்னோட வார்த்தைகள்ல , உங்களுக்கு நம்பிக்கை வரலைன்னு நெனைக்கிறேன் .

இன்ஸ்பெக்டர் ரவி : இல்ல சுவாமிஜி ! எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல ... இந்த உலகத்துல இருக்கிற எல்லாவற்றுக்கும் , ஒரு அறிவியல் பூர்வமான சிந்தனை இருக்கும்னு நெனைக்கிறவன் நான் . கடவுள் இல்லைன்னு சொன்ன , ஈ.வெ.ரா.பெரியார நாம நாத்திகன்னு சொன்னோம் . ஆனா .......... இந்த உலகத்துல , கடவுளே இல்லைன்னு ஒரு அறிவியல் விஞ்ஞானி ஆதாரத்தோடு சொல்லிருக்காரு ................. அவர் பேரு , ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் !!! . அது மட்டுமில்லாம , நம்முடைய மரணத்துக்கப்பால் , எதுவுமே இல்லை .... சொர்க்கம் , நரகம்ன்னு சொல்றதெல்லாம் சும்மா ஒரு கட்டுக்கதைன்னு , அவருடைய ஆய்வுல சொல்றாரு ................ கடவுள் இந்த உலகத்த படைக்கல . BIG BANG THEORY ((பெரு வெடிப்புக் கொள்கை)) மூலமாத் தான் , இந்த உலகம் உருவானதுன்னு இப்ப , அறிவியல் கண்டுபிடிச்சிருக்கு . இதயெல்லாம் பாக்கும்போது , எனக்கு மாத்தூர்ல நடக்கின்ற சம்பவங்கள் வெறும் வேடிக்கையாய்த்தான் தெரியுது .. இப்படி உலகம் எங்கயோ போய்க்கொண்டிருக்கிறது . ஆனா இன்னும் நாம , ஆவி , அமானுஷ்யம்ன்னு சொல்லிட்டு இருக்கோம் .

(....சிறிது நேர மௌனத்திற்கு பிறகு பேச ஆரம்பித்தார் வேதாந்த சுவாமிகள்....)

வேதாந்த சுவாமிகள் : நீங்க சொன்னதெல்லாம் சரி தாங்க சார் ..... இன்றைக்கு அறிவியல் கண்டுபிடிக்கின்ற , ஒவ்வொன்றுமே நமக்கு ஆச்சரியமாத்தான் தெரியும் ..... BIG BANG THEORYப் படி தான் இந்த உலகம் உருவானதுங்கற கூற்று , பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று .... அதை நான் மறுக்கவில்லை . ஆனா , நம்ம பண்டைய கால , வேதங்களில் , இந்த உலகம் எப்படி உருவானதுங்கறதப் பத்தின குறிப்புகள் இருக்கின்றது . BIG BANG THEORYயின் பல கோட்பாடுகள் , வேதங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற கருத்துக்களோடு ஒத்துப் போகின்றது . நீங்க சொல்றது வெறும் , ஒரு உலகத்தைப் பற்றி தான் , ஆனா வேதங்கள்ல , இதே போல பல பிரபஞ்சங்கள் இருந்திருக்கின்னு சொல்லப்பட்டிருகின்றது .....

இவை எல்லாவற்றையும் விட , இன்று , அதி நவீன கருவிகளுடன் , விண்வெளிக்குச் சென்று , அங்கு இருக்கின்ற கிரகங்களைப் பற்றி , அறிவியலாளர்கள் ஆராயச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் ....... ஆனால் அன்று ,,,,,,,,,,, எந்த வகையான அறிவியல் சாதனங்களுமே இல்லாத அந்தக் காலத்திலயே , கோள்களைப் பற்றித் துல்லியமாகக் கணித்த , ஆர்யப்பட்டாவின் வானவியல் சாஸ்திரம் ஒரு மிகப்பெரும் ஆச்சர்யம் . இதுமாதிரி இன்னும் எத்தனையோ இருக்கின்றது . என்றைக்குமே ஆன்மீகமும் , அமானுஷ்யமும் அறிவியலுக்கு அப்பாற்பட்டதுங்கறத விசயத்த மொதல்ல நீங்க புரிஞ்சுக்கணும் .

பதில் பேச மனமில்லாமல் நின்ற இன்ஸ்பெக்டர் ரவி ,

சுவாமிஜி ! உங்ககிட்ட பேசினதுல ரொம்ப மகிழ்ச்சி . நான் கெளம்புறேன் . வேறு ஏதாவதுன்னா நான் உங்கள CONTACT பண்றேன் . THANK YOU சுவாமிஜி .

மெல்ல சிரித்த சுவாமிகள் ,

“ தம்பி ! எதுக்கும் நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ! ஏன்னா ! இது வெறும் சாதாரண விஷயமல்ல “ .

இன்ஸ்பெக்டர் ரவி : அது என்னவோ சுவாமிஜி ! நீங்க சொன்ன இதே பதிலத்தான் மாத்தூர் கிராமத் தலைவர் தவபுண்ணியமும் சொன்னார் . ஒரு கிராமத்தலைவரே இப்படி பயந்திட்டு இருந்தா , அப்புறம் ஊர் மக்கள் எப்படி பயப்படாம இருப்பாங்க .

சற்றே முகம் மாறிய வேதாந்த சுவாமிகள் , சற்று இறுக்கமான தொனியுடன் ,

“ யாரு ! அந்த தவபுண்ணியம் பயப்பட்றான்னா…….. சொல்றீங்க . கண்டிப்பா இருக்காது ..... ஏன்னா ! காசு மேல அதிகமா ஆசை வச்சுருக்கிற எவனுக்கும் , பயம்ங்கற ஒன்னு அறவே இருக்காது .

வேதாந்த சுவாமிகளின் முகமாற்றத்தை , அடையாளம் கண்ட இன்ஸ்பெக்டர் ரவி , மேற்கொண்டு விசாரிக்கலானார் .

இன்ஸ்பெக்டர் ரவி : ஏன் சுவாமிஜி ? அவருக்கும் உங்களுக்கும் ஏதாவது தனிப்பட்ட பிரச்சனையா ?

சுவாமிகள் : அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ..... அன்னதானம் , மருத்துவ உதவிகள்ன்னு , இன்னும் எத்தனையோ உதவிகள , நம்ம அன்பாலயத்தின் மூலமா , அந்த மாத்தூர் கிராம மக்களுக்கு , பண்ணலாம்னு நெனச்சோம் . ஆனா அந்த தவபுண்ணியம்தான் அதுக்குத் தடையாய் இருக்கிறார் . இன்னும் ரெண்டு மாசத்துல , உள்ளாட்சித் தேர்தல் வேற வர்றதால , புது ஆளுங்கள யாரையும் , எதையும் பண்ண விடறதில்லை . பாவம் , ஒரு வேடிக்கையான மனுஷன் !!! .

இன்ஸ்பெக்டர் ரவி : சரிங்க ! சுவாமிஜி ! நான் ஏதாவதுன்னா ! உங்கள தொடர்பு கொள்றேன் . நான் வர்றேன் என்று நடையைக் கட்டியிருந்தார் .

போலீஸ் ஜீப் அன்பாலயத்திலிருந்து வெளியே கிளம்பியிருந்தது .

6

சாயுங்கால நேரம் 6.3௦ மணி . இருட்டு மெல்ல மெல்ல , பரவ ஆரம்பித்திருந்தது . காற்றின் வேகம் சற்று அதிகரித்திருந்தது . வயலில் இறங்கியிருந்தவர்கள் , அவசர அவசரமாக வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் . பஞ்சாயத்து அரச மரத்தின் கீழே , மிகப் பெரிய கூட்டம் நின்றிருந்தது . கிராமத் தலைவர் தவபுண்ணியம் எதோ ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார் . சிவநேசனும் , ராமலிங்கமும் உடன் அமர்ந்திருந்தார்கள் . வேலைக்காரன் பொன்னையா வெத்தலைப் பொட்டியுடன் , ஒரு ஓரமாக நின்றிருந்தான் . முகம் முழுவதும் பயத்தால் உறைந்திருந்த ஒரு பெண் , பஞ்சாயத்தில் உரக்கப் பேசிக் கொண்டிருந்தாள் . அந்த வழியாக வந்துகொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , கூட்டத்தைப் பார்த்ததும் , வண்டியை நிறுத்தி விட்டு , உள்ளே சென்று , நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் . இவர்கள் இருவரையும் பார்த்த தவபுண்ணியம் , கையால் சைகை காட்டினார் . அந்த பெண் பேச ஆரம்பித்தாள் .

“ ஐயா ! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் , என்னோட ரெண்டு மாடுகளையும் தொழுவத்துல கட்டிட்டு , வெளிய வரும்போது , எனக்கு முன்னாடி , திடீர்ன்னு எதோ ஒரு உருவம் வந்துட்டு போன மாதிரி இருந்துச்சு . அது ரொம்ப பயங்கரமா இருந்துச்சு . அத நெனச்சா இன்னும் பயமாயிருக்குதுங்கய்யா . ஊருக்கு ஏதாவது பாதுகாப்பு ஏற்பாடுகளப் பண்ணுங்கய்யா “ என்று பயந்த படியே சொல்லிக்கொண்டிருந்தாள் அந்தப்பெண் . இன்ஸ்பெக்டர் ரவி அந்த பெண்ணையே சற்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் . தவபுண்ணியம் பக்கத்தில் அமர்ந்திருந்த , சிவநேசன் எழுந்து பேச ஆரம்பித்தார் .

சிவநேசன் : “ அதுக்குத்தாம்மா ! இப்ப நம்ம ஊருக்கு புது போலீஸ் அதிகாரிங்க வந்துருக்காங்க . அவங்ககிட்ட நம்ம பிரச்சனையை சொல்லுவோம் . அவுங்க பாத்துக்குவாங்க ! “ என்று இன்ஸ்பெக்டர் ரவியை அடையாளம் காட்டினார் சிவநேசன் . இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் கூட்டத்தின் நடுவே வந்து நின்று வணக்கம் வைத்தனர் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ தூத்தூர் காவல் துறை சார்பில் , உங்கள் எல்லாருக்கும் வணக்கம் ! . “ எந்த நேரத்திலும் , உங்கள் கிராமத்துக்கு முழு பாதுகாப்பு கொடுக்க நாங்க தயாரா இருக்கிறோம் . எங்கள் இரவு நேர பாதுகாப்புப் படை வீரர்கள் , எப்போதும் ரோந்து பணியில் இருப்பார்கள் . எதுவாக இருந்தாலும் எங்களுக்கு INFORM பண்ணுங்க . அவசர உதவிக்கு உடனே தொடர்புகொள்ள , காவல் துறை உதவி எண் 04329 - 2669082 . நம்பிக்கையோட இருங்க . நாங்க இருக்கோம் “ என்றார் .

கூட்டம் மெல்ல மெல்ல கலைய ஆரம்பித்திருந்தது . இன்ஸ்பெக்டர் ரவியின் பக்கம் வந்த தவபுண்ணியம் ,

“ தம்பி ! இது தான் இங்க நடக்கிற பிரச்சனை . நாங்க உங்கள முழுமையா நம்புறோம் . நீங்க தான் ஏதாவது பண்ணனும் .” என்றார் .

இன்ஸ்பெக்டர் ரவி : சார் ! இன்னும் எனக்கு இதுல நம்பிக்கை வர்ல . இருந்தாலும் , இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காது . இது சம்பந்தமா எங்க மேலதிகாரிகிட்ட பேசிட்டோம் . எங்களோட நடவடிக்கைகள மேலும் துரிதப்படுத்தப் போறோம் . ஊர் முழுவதையும் எங்க கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வரப்போறோம் . இரவு முழுவதும் எங்க படை வீரர்கள் ரோந்து பணியில் சுத்திட்டு இருப்பாங்க . என்ன அசம்பாவிதம் நடந்தாலும் , உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் போயிரும் . நான் இந்த ஊருக்கு வந்த மொதல் நாளே , வேளாண் ஆசிரியர் குமாரசாமி பத்தின சில தகவல்கள சேகரிச்சுட்டேன் . அவரோட பிரேத பரிசோதனை ரிப்போர்ல எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு சார் ...... ஏன்னா ! குமாரசாமி பேயடிச்சு செத்துப் போயிட்டதா நாம நெனச்சுகிட்டு இருக்கோம் . ஆனா ! அவரோட பிரேத பரிசோதனை ரிப்போர்ட்ல , அவரோட இதயத்துல ஏற்பட்ட ஏதோ ஒரு அழுத்தத்தினால , இதய வால்வுகள் சிதைந்துபோயிருக்குன்னு குறிப்பிடப்பட்டுள்ளது . எனக்கு சந்தேகமே அதுல தான் .

திடுக்கிட்டுப் போயிருந்தனர் தவபுண்ணியமும் , அவரோட சகாக்களும் .

ராமலிங்கம் : அதுல என்ன சந்தேகம் ? . குமாரசாமி வயசான ஆள் . அவருக்கு வயசு 65 இருக்கும் . வயசானாவே ! நம்ம உடம்புல ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்படும் . சாதாரண விஷயம் தானே இது .

இன்ஸ்பெக்டர் ரவி : சார் ! நானும் அப்படிதான் நெனச்சேன் . ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னாடி , மத்திய அரசாங்கம் ஒரு கணக்கெடுப்பு எடுத்திருக்கிறாங்க . அதாவது கிராமத்துல வாழ்றவங்களோட உடல் நிலையையும் , நகரத்துல வாழ்றவங்களோட உடல் நிலை பற்றியும் ஒரு சர்வே எடுத்திருக்கிறாங்க . அதுல நம்ம குமாரசாமியும் ஒருத்தர் . நம்ம குமாரசாமியோட உடல் நிலைய சோதிச்சு பார்த்த , அவங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் . காரணம் அந்த 6௦ வயசிலும் , அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இருந்திருந்தது . கிட்டத்தட்ட ஒரு 25 வயது இளைஞனின் ரத்த ஓட்டம் அவருக்கு இருந்திருக்கிறது . இதயம் சீராக இயங்கியிருந்தது . இதய வால்வுகள் சீராக இருந்திருக்கின்றது . இதுக்கான ரிப்போர்ட் என்கிட்ட இருக்கு . குமாரசாமியிடம் அவர்கள் இது பற்றி கேட்ட பொழுது , அவர் சொல்லியிருக்கிறார் .

“ நான் வெறும் விவசாயப் பொருட்களையே உணவாக உட்கொள்கிறேன் . தினமும் வயல் வேளைகளில் ஈடுபடுகிறேன் . ஓய்வு என்பது எனக்கு அறவேயில்லைன்னு அவர் சொல்லிருக்கிறார் . “ SO , கண்டிப்பா , இவ்வளவு சீக்கிரம் , அவருடைய இதய வால்வுகள் பழுதடைய வாய்ப்பே இல்ல . இது தான் என்னை இந்த கேஸ்ல மேலும் , மேலும் , விசாரணை பண்ண , எனக்கு உத்வேகம் கொடுக்கிறது “ என்று முடித்தார் .

தவபுண்ணியத்தின் முகத்தில் , அதிர்ச்சி தாண்டவமாடியிருந்தது . தூக்கி வாரிப் போட்டிருந்தது சிவனேசனுக்கும் , ராமலிங்கத்துக்கும் .

சிவநேசன் : ஓகே ! ரவி உங்க இன்வெஸ்டிகேஷன ஆரம்பீங்க . எப்படியோ இந்த பிரச்சனை தீர்ந்தா போதும் என்று மழுப்பினார் .

இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் அவர்களிடமிருந்து விடைபெற்று போலீஸ் ஜீப்பில் ஏறிப் புறப்பட்டிருந்தனர் .

தவபுண்ணியத்தின் முகம் இருண்டிருந்தது . அவரது முகத்தைப் பார்த்த சிவநேசன் சற்று ஆறுதலான வார்த்தைகளை பேசினார் .

சிவநேசன் : நீங்க கவலைப் படாதீங்க தலைவரே ! இன்னிக்கு ராத்திரி அவன எப்படி அலற விடப்போறோம்னு பாருங்க தலைவரே !.

தவபுண்ணியம் : அவன் கண்டிப்பா பயபட்ற ஆளே இல்ல . எனக்கு என்னவோ பயமாயிருக்குது . நம்ம மேல அவனுக்கு ஒரு துளி கூட சந்தேகம் வரக்கூடாது . ஆனா அவன ஏதாவது பண்ணியாகனும் . கொஞ்சம் பொறுமையா இருங்க . நாளைக்கு, அந்த உரம் தயாரிக்கிற கம்பெனிக்காரங்க கூட ( NEXTGEN FRETILIZERS LTD (உரம் தயாரிப்பு நிறுவனம்) ) மீட்டிங்க முடிச்சிட்டு காச வாங்குறவரைக்கும் கொஞ்சம் அவசரப் படாதீங்க .

ராமலிங்கம் : தலைவரே ! நீங்க தைரியமா போங்க . நாங்க பாத்துக்கறோம் .

இருண்ட மனதோடு நடையைக் கட்டியிருந்தார் தவபுண்ணியம் . சிவநேசனும் , ராமலிங்கமும் அவரைப் பின் தொடர்ந்திருந்தார்கள் .

7

நேரம் இரவு 7:3௦ மணி . போலீஸ் ஜீப் சரியாக , தூத்தூர் காவல் நிலையத்தை அடைந்திருந்தது . இருவரும் இறங்கி உள்ளே நடந்திருந்தனர் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ கந்தசாமி ! பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரத்திற்கு CALL பண்ணுங்க . அவர்கிட்ட இந்த கேஸ் விசயமா சில சந்தேகங்கள கேக்க வேண்டியிருக்கு “ ... என்றார் .

எஸ் சார் ! என்றவர் மேசையில் இருந்த தொலைபேசியில் எண்களைத் தட்டினார் . “ இந்த நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது “ என்று மறுமுனையில் பதிவு செய்யப் பட்ட பெண்ணின் குரல் பேசியது .

ஏட்டு கந்தசாமி : சார் ! போன் சுவிட்ச் ஆப் சார் !

இன்ஸ்பெக்டர் ரவி : (.....சிறிது நேரம் யோசித்துவிட்டு......) ........... ஹ்ம்ம் ! ஓகே ! விடுங்க நாளைக்கு பாத்துக்கலாம் .... அப்புறம் நம்ம குமாரசாமியோட போன் நம்பர் குறித்த தகவல்கள் கேட்ருந்தேனே ? என்னாச்சு ???

ஏட்டு கந்தசாமி : சார் ! அவர் இதுவரைக்கும் பேசின , எல்லா நம்பர்சையும் TRACE பண்ணியாச்சு . இந்தாங்க சார் அதோட DETAILS .

அதைப் புரட்டிப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவி , சில நம்பர்களை மட்டும் வட்டமிட்டுக் கொண்டிருந்தார் .

சரியாக எட்டு மணியளவில் , இரவு நேர சிறப்பு ரோந்து படையினர் 5௦ பேர் , தூத்தூர் காவல் நிலையத்துக்கு வெளியே சல்யூட்டுடன் நின்றிருந்தனர் . அவர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ரவி , அவர்கள் முன்னிலையில் சத்தமான தொனியில் பேசலானார் .

“ HELLO GUYS ! GOOD EVENING ஒரு கேஸ் விசயமா , மாத்தூர் கிராமத்துக்கு , இரவு நேரங்கள்ல நம்முடைய பாதுகாப்பு தேவைப்படுது . அதனாலதான் மேலிடத்துல , உத்தரவு வாங்கி , உங்க 5௦ பேர SELECT பண்ணிருக்கேன் . SO , மாத்தூர்ல , எந்த அசம்பாவிதமும் நடக்காம பாத்துக்க வேண்டிய பொறுப்பு நம்மளோடது . அங்க பேய் நடமாட்டம் இருக்கிறதா எல்லாரும் பயபட்றாங்க. அப்படி எதுவும் அங்க இல்லன்னு நிரூபிக்கத் தான் நான் உங்கள அங்க அனுப்புறேன் . வரப்போகிற ரெண்டு வாரம் , நாம அங்க பாதுகாப்பு குடுக்கப் போறோம் . நாம குடுக்கப் போற பாதுகாப்புல தான் , அவங்களோட பயத்தை போக்க முடியும் . ஒருவேளை , சந்தேகத்திற்கிடமான எதாயவது நீங்க பாத்தீங்கன்னா ! உடனே கன்ட்ரோல் ரூம்க்கு தகவல் குடுத்துருங்க . “ YOU CAN CALL ME ANYTIME . I AM REACHABLE AT ANYTIME . BE ALERT AND GO AHEAD ! “ என்று பேசி முடித்திருந்தார் .

ரோந்து படையினரின் வாகனம் , மாத்தூர் கிராமத்தை நோக்கி முன்னேறியிருந்தது . இன்ஸ்பெக்டர் ரவியும் , கந்தசாமியும் இரு சக்கர வாகனத்தில் , பின் தொடர்ந்திருந்தனர் . வழி நெடுகிலும் ஒரே இருட்டு . சாலையோர மின் கம்பங்களில் வெளிச்சம் , வந்து வந்து போய்க் கொண்டிருந்தது . சற்று நிதானமாகவே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார் ஏட்டு கந்தசாமி . கொஞ்ச நேரத்தில் , மாத்தூர் கிராமத்தில் , இன்ஸ்பெக்டர் ரவிக்காகப் பார்த்து வைக்கப்பட்டிருந்த வீடு வந்திருந்தது . இன்ஸ்பெக்டர் ரவியின் கையில் , வீட்டின் சாவியைக் கொடுத்து விட்டு , கிளம்ப தயாராயிருந்தார் ஏட்டு கந்தசாமி . வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்துவிட்டு ,

வீடு அருமையாக இருக்குதுய்யா ! . “ ஹ்ம்ம் !!! ஓகே ! கந்தசாமி .... நீங்க கெளம்பலாம் . BUT நாளைக்கு சீக்கிரம் வந்துருங்க .. நாம இன்வெஸ்டிகேஷனுக்கு போகனும் . “ .. என்றார் ரவி . மெல்ல தலையை ஆட்டிக்கொண்டே புறப்பட்டிருந்தார் கந்தசாமி ............

ரவி சாப்பிட்டு முடிப்பதற்குள் , கிட்டத்தட்ட மணி இரவு பத்தைக் கடந்திருந்தது . மெத்தையில் படுத்துக்கொண்டே , பிரபல கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் “ நிதர்சனத்தின் பக்கம் நில் ! ” என்ற நாவலைப் புரட்டிக்கொண்டிருந்தார் . பாதிப் பக்கங்களைப் படித்திருப்பார் . திடீரென்று , அந்த அறையில் இருந்த விளக்கின் வெளிச்சம் , மங்கி மங்கி எரிந்து கொண்டிருந்தது ........... அதைப் பார்த்த அவர் , உடனே , தன் தலைக்குப் பக்கத்தில் வைத்திருந்த , ANDROID மொபைல் போனை எடுத்து அதை ON செய்ய முற்பட்டார் . அது CHARGE செய்யப்படாமல் , SWITCH - OFF ஆகியிருந்தது அப்போதுதான் அவருக்குத் தெரிந்திருந்தது ....... ஒரு கட்டத்தில் விளக்கின் வெளிச்சம் முற்றிலுமாக நின்றிருந்தது .... ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர் ரவி . ஊர் முழுவதும் , இருள் சூழ்ந்து ஒரே மயான அமைதி அங்கு நிலவியிருந்தது . எங்கும் ஒரு துளி கூட வெளிச்சம் இல்லை ........ திடீரென்று கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது ....... திடுக்கிட்டுப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவியின் மனதில் லேசான பதற்றம் தொற்றியிருந்தது .... மாத்தூர் கிராமவாசிகள் சொன்ன சம்பவங்கள் , அவர் மனதில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது . நிலைமையை உணர்ந்த இன்ஸ்பெக்டர் ரவி , சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , தீப்பெட்டியையும் , மெழுகுவர்த்தியையும் தேடிக் கொண்டிருந்தார் .... மீண்டும் மீண்டும் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது .... ஒரு வழியாக தீப்பெட்டியையும் , மெழுகுவர்த்தியையும் கண்டுபிடித்த அவர் , தீக்குச்சியைப் பற்ற வைக்கும் போது , பதற்றத்தில் மெழுகுவர்த்தியைத் தவற விட்டார் ..... எரிகின்ற தீக்குச்சியின் வெளிச்சத்தில் , மெழுகுவர்த்தியைத் தேடிய அவர் , கட்டிலுக்கு கீழே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார் ..... தூரத்தில் மெழுகுவர்த்தி இருப்பதைப் பார்த்த அவர் , அதை எடுக்கும்போது , திடீரென்று தீக்குச்சி அணைந்திருந்தது . மீண்டும் தீப்பெட்டியை உரசிய அடுத்த வினாடி , தன் பின்னே யாரோ நிற்பதைப் போன்று உணர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி ..... திரும்பலாமா ? வேண்டாமா ? என்ற சிந்தனையில் , மெழுகுவர்த்தியில் , ஒளியை ஏற்றியிருந்த அவர் , சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , பின்னே திரும்பினார் .... அங்கு யாரும் இல்லை . கதவு தட்டப்படும் சப்தம் மேலும் நீடித்துக்கொண்டிருந்தது . இந்த முறை இன்ஸ்பெக்டர் ரவி பதற்றமில்லாமல் , அலமாரியில் இருந்த , போலீஸ் ரிவால்வரை கையில் எடுத்துக்கொண்டு , மெழுகுவர்த்தியை , அணையாமல் பிடித்துக்கொண்டே , கதவுப் பக்கத்தில் வந்த அவர் , மெல்ல கதவைத் திறந்து பார்த்தார் . வெளிச்சம் தெரியும் இடமெங்கும் , வெளியே ஆள் அரவமற்று வெறிச்சோடி இருந்தது . ஒரே நிசப்தம் . பயத்தில் உறைந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . ஒரு கையில் மெழுகுவர்த்தியோடும் , மற்றொரு கையில் ரிவால்வருடனும் வீட்டைச் சுற்றி வந்துகொண்டிருந்தார் . இரவு நேரப் பறவைகளின் சப்தம் , மேலும் பீதியை கிளப்பியிருந்தது . ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்திருந்தார் . திடீரென்று ஏதோ ஒரு உருவம் , தூரத்திலிருந்து நகர்ந்து வருவதைப் போல் இருந்தது . பயத்தில் நெஞ்சைப் பிடித்த படியே , அப்படியே வீட்டுச் சுவற்றில் சாய்ந்தபடி உட்கார்ந்தார் . மெழுகுவர்த்தி கீழே உருண்டு எரிந்து கொண்டிருந்தது . இருண்டு போயிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . அவரின் இதயத்துடிப்பு பன்மடங்கு அதிகரித்திருப்பதை அவரால் உணர முடிந்திருந்தது . அந்த நேரத்தில் என்ன செய்வதென்றே அவருக்குப் புரியவில்லை . அவரின் சிந்தனையில் பல எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தன . இதுதான் என் வாழ்வின் கடைசி நாளா ?? என்றெல்லாம் எண்ணத் தோன்றியிருந்தது . கடைசியாக அவர் படித்த ‘ நிதர்சனத்தின் பக்கம் நில் ! ‘ என்ற நாவலில் இருந்த ஒரு வாசகம் , அப்போது அவருக்கு நியாபகம் வந்தது .

“ இளமை உன் தோள்களில் இருக்கும்போதே , எது நிஜம் என்பதைத் தொட்டு விடு ! “ என்கின்ற வாசகம் , திடீரென்று அவருக்கு நியாபகம் வந்தது . அது ஒரு நேர்மறையான உத்வேகத்தை அவருக்கு அளித்தது . எதுவாக இருந்தாலும் சரி , என்ன நடந்தாலும் சரி . அது என்ன என்பதை ஒரு கை பார்த்து விடவேண்டும் என்கிற எண்ணத்தோடு , சுவற்றைப் பிடித்துக் கொண்டே , கடினப்பட்டு எழுந்தார் .... ரிவால்வரை முன்னே நீட்டிக் கொண்டே அந்த உருவத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார் . மீண்டும் மீண்டும் அந்த வாசகம் அவர் மனதை அரித்துக் கொண்டிருந்தது . சற்று நேரத்தில் அந்த உருவம் அவர் கண்ணில் இருந்து மறைந்திருந்தது . நல்ல நேரமாக மின்சாரம் மீண்டும் வந்து வெளிச்சம் பரவியிருந்தது . காற்று வேகமாக வீச ஆரம்பித்திருந்தது .... வலதுபுறமாக ஏதோ சலசலப்பு சப்தம் கேட்டது .... அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் ரவி , அங்கு ஒரு ஒருவம் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டார் . அதை வேகமாகப் பின் தொடர்ந்திருந்தார் ரவி . அதிவேகமாக ஓடிக் கொண்டிருந்த அந்த உருவம் , கண் இமைக்கும் நேரத்தில் , சோளக்காட்டுக்குள் ஓடி மறைந்திருந்தது . கடைசிவரை பின்தொடர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் ரவி , களைப்பு மிகுதியால் , மூச்சு வாங்கினார் . சற்று நிதானித்த அவர் , தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு , வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார் .

8

அடுத்த நாள் காலை 11 மணி . இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் படு வேகத்துடன் போலீஸ் ஜீப்பில் ஏறியிருந்தார்கள் . மாத்தூர் பிரதான சாலையை அடைந்திருந்தார்கள் .

ஏட்டு கந்தசாமி : ” சார் ! இப்ப நாம எங்க போறோம் சார் “ ???

இன்ஸ்பெக்டர் ரவி : “ பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் . அங்க போறதுக்கு எவ்ளோ நேரம் ஆகும் கந்தசாமி ? “

ஏட்டு கந்தசாமி : “ சார் ! கிட்டத்தட்ட ஒன்றை மணி நேரம் ஆகும் சார் “ என்று வண்டியை வேகமாக செலுத்தியிருந்தார் ............

“ ஆனா இப்ப அங்க எதுக்கு சார் நாம போறோம் ? “

இன்ஸ்பெக்டர் ரவி : வேளாண் ஆசிரியர் குமாரசாமியோட CONTACTSல , யார் யார்கிட்டல்லாம் , அவர் அதிகமா பேசிருக்கார்ன்னு பாத்ததுல , பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துல , அவரோடுகூட வேலை பார்த்த , சதாசிவமும் ஒருத்தர் . குமாரசாமி , கடைசியாப் பேசின நம்பரும் , சதாசிவத்தோடதுதான் . SO JUST ஒரு FORMAL ENQUIRY . அவ்ளோதான் .

ஏட்டு கந்தசாமி : என்ன சார் ! ஏதோ ஒரு மாதிரியா இருக்கீங்க .. நேத்து இராத்திரி ஏதாவது நடந்துச்சா ?

இன்ஸ்பெக்டர் ரவி : ஆமாய்யா ! ராத்திரி கதவு தட்ற சத்தம் கேட்டுச்சு . அதுக்கப்புறம் வெளிய போய் பார்த்தேன் .............................

ஏட்டு கந்தசாமி : (.....அதிர்ந்தவராய்......) என்ன சார் ? என்ன பாத்தீங்க ? எதாவது அமானுஷ்யத்தப் பாத்தீங்களா ?

இன்ஸ்பெக்டர் ரவி : (......சிரித்துக்கொண்டே......) நான் பாத்த உருவம் அமானுஷ்யமா ? இல்ல , அது ஒரு ஆசாமியா ??ன்னு , இன்னும் எனக்குத் தெளிவா தெரியல . ஆனா அதோட அசைவுகள் ஒவ்வொன்னும் இன்னும் , என் கண்ணுக்குள்ளேயே இருக்குது .

ஏட்டு கந்தசாமி : சார் ..........................???????????????? உங்களுக்கு பயமாவேயில்லையா !!!

இன்ஸ்பெக்டர் ரவி : “ பயம் இல்லைன்னு யாருய்யா சொன்னா ?? பயமாத்தான் இருந்துச்சு . போலீஸ் வேலைக்கு வந்ததுக்கப்புறம் , இதயெல்லாம் ஒரு பொருட்டா எடுத்துக்க கூடாதுன்னு , நெனச்சு , அந்த உருவத்தை பின் தொடர்ந்தேன் . ஆனா அது கண் இமைக்கிற நேரத்தில் , ஓடி மறஞ்சிடுச்சு . ஆனா இன்னொரு தடவ , அது என் கண்ணுல பட்டுச்சு..... அவ்ளோதான் “ .

ஏட்டு கந்தசாமி : “ சார் ! உண்மையாலுமே நீங்க பெரிய ஆள் தான் சார் . நான் மட்டும் அங்க இருந்திருந்தேனா , பயத்துலயே செத்துருப்பேன் . இந்நேரம் நீங்க எனக்கு மலர்வளையம் வச்சிருக்க வேண்டியிருக்கும் “ என்றார் சிரித்துக்கொண்டே ..

இன்ஸ்பெக்டர் ரவி : (.....சிரித்தவாறே......) சரி ! கொஞ்சம் வேகமாப் போங்க . நமக்கு நேரம் ரொம்ப குறைவா இருக்கு .

ஒரு மணிநேரம் , இருபது நிமிடத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தை அடைந்திருந்தார்கள் . தஞ்சாவூரில் , வல்லம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் அமைந்த , பெரியார் நகரில் , கிட்டத்தட்ட 216 ஏக்கர்களில் , பிரம்மாண்டமாக காட்சியளித்தது அந்த பல்கலைக்கழகம் . எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு ,

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் . வல்லம் , தஞ்சாவூர் – 613403 என்று செதுக்கப்பட்ட எழுதுக்கள் , அந்த பிரம்மாண்ட பல்கலைக்கழகத்தின் , தலைப் பகுதியை அலங்கரித்திருந்தது . சற்று விலாசமாக இருந்த போர்டிகோவில் , வண்டியை நிறுத்தி விட்டு , வெளியே நடந்து வந்தார்கள் . உள்ளே , ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே , வரவேற்பறையை அடைந்திருந்தார்கள் . DEPARTMENT OF AGRICULTURE என்று வலதுபுறமாக அம்புக்குறிடப்பட்டிருந்த பதாகையைப் பார்த்தவுடன் , வலதுபுறம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் .

“ இந்தியாவின் தேசியத் தொழில் விவசாயம் . உழவனின் வியர்வையில் தான் , இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது “ .

“ இயற்கை உரங்களை நிராகரித்து விடாதீர்கள் “

“ மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளைத் தவிருங்கள் . ”

“ விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு , எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நம்முடையது “

என்கின்ற வாசங்ககள் வழியெங்கும் நிரம்பியிருந்தது . ஆங்காங்கே அரியவகை மரங்கள் , தங்கள் பெயர்களுடன் கூடிய விளக்கத்தைத் தாங்கிக் கொண்டு , நின்று கொண்டிருந்தன . ஒருவழியாக AGRICULTURE DEPARTMENTக்குள் நுழைந்திருந்தார்கள் . பழங்காலத்தில் இருந்து , இன்று வரை , மனிதன் பயன்படுத்திய விவசாயக் கருவிகள் அங்கே பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது ........... சதாசிவம் , வேளாண் பேராசிரியர் . என்ற பெயர்பலகை தொங்கப்பட்டிருந்த அறையில் நுழைந்திருந்தார்கள் . உள்ளே பழைய புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சதாசிவம் , காக்கிச்சட்டைகளைப் பார்த்ததும் , எழுந்து நின்று வரவேற்றார் . அவர் முகத்தில் தொங்கிக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடியும் , நரைமுடிகளால் மூடப்பட்டிருந்த கபாலமும் , அவரின் 6௦ வயதைத் தெளிவாகக் காட்டியிருந்தது .

பேராசிரியர் சதாசிவம் : “ வணக்கம் சார் ! உக்காருங்க . சொல்லிருந்தீங்கன்னா ! நானே நேர்ல வந்திருப்பேனே “ என்றார் .

ஏட்டு கந்தசாமி : பரவாயில்லைங்க சார் ! . நாங்க குமாரசாமி ஐயாவோட மரணம் பற்றிய விசாரணைக்காக வந்துருக்கறோம் .

இன்ஸ்பெக்டர் ரவி : அது ஒரு திட்டமிட்ட கொலையாகக்கூட இருக்கலாம்ன்னு நாங்க சந்தேகப்பட்றோம் ................. குமாரசாமி ஐயா ,,, அடிக்கடி உங்களோட தான் தொலைபேசியில் பேசியிருக்கிறார் . இறப்பதற்கு முன் , அவர்கூட கடைசியாப் பேசின ஆளும் நீங்கதான் . SO , நீங்க சொல்லப் போற பதில்களில் இருந்துகூட , எங்களுக்கு ஏதாவது துப்பு கெடைக்க வாய்ப்பிருக்கிறது . அவரபத்தி , உங்களுக்குத் தெரிஞ்ச தகவல்கள , நீங்க தைரியமா சொல்லுங்க . அது கூட இந்த கேஸ்ல உபயோகமா இருக்கலாம் .

பேராசிரியர் சதாசிவம் : இன்ஸ்பெக்டர் சார் ! உங்களோட கேள்விகளக் கேளுங்க . எனக்குத் தெரிந்த உண்மைகள , மறைக்காமல் சொல்றேன் .

ஏட்டு கந்தசாமி : அவர் பேயடிச்சு இறந்திட்டதா எல்லாரும் சொல்றாங்களே . அது உண்மையாக இருக்கும்னு நம்புறீங்களா ?

(.....சற்று நேரம் யோசித்த சதாசிவம் , மெல்ல பேச ஆரம்பித்தார் .....)

பேராசிரியர் சதாசிவம் : எனக்கும் அந்த மாதிரி விஷயங்களில் , நம்பிக்கை இல்லை . ஆனா !............ அது , எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு . அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக , ஊர்மக்களே சொல்லும்போது , அதுக்கு நாம எப்படி மறுப்பு சொல்ல முடியும் ? . குமாரசாமி ஐயா ..................................................., விவசாயத்துறைல எங்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி .......... இந்த பல்கலைக்கழகத்துல , எனக்கு முன்னாடி , வேளாண் பேராசிரியரா இருந்தவர் . விவசாயம் குறித்து பல ஆராய்ச்சிகள் பண்ணியிருக்கிறாரு . பல நூல்கள் எழுதியிருக்கிறார் . கடைசியா அவர் எழுதின “ நம் பாரத மண்ணின் மகத்துவம் பாரீரோ ! “ என்ற கட்டுரைக்காக , மத்திய அரசு விருது வழங்கி சிறப்பித்திருக்கின்றது . அவருடைய இழப்பு என்பது , விவசாயத்துறைக்கே ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழப்பு .

சதாசிவத்தின் ஒவ்வொரு அசைவையும் , இன்ஸ்பெக்டர் ரவி கூர்ந்து கவனித்தார் . குமாரசாமி ஐயாவின் பிரிவை அவர் முகத்தில் காண முடிந்தது.

இன்ஸ்பெக்டர் ரவி : குமாரசாமி ஐயாவுக்கு , எதிரிகள் யாராச்சும் .............

பேராசிரியர் சதாசிவம் : ஹ்ம்ம் !!! எனக்குத் தெரிந்தவரை அவருக்கு எதிரிகளே கிடையாது . அவர் எதுக்காகவும் , யார்கிட்டயும் கோபப்பட்டு நான் பார்த்ததில்ல ....... ஏன்னா ! அவர் அதிகமா பழக்கம் வச்சிக்கிட்டதெல்லாம் , ஏழைபாழைங்க கூடத்தான் . அந்தக் காலத்து விவசாய உத்திகள , மீண்டும் , இந்த நவீன காலத்துல பயன்படுத்துவதைத் தான் , அவர் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் .

ஏட்டு கந்தசாமி : சார் !.................... அப்படி என்னதான் நீங்களும் , அவரும் போன்ல பேசிக்குவீங்க ????.

பேராசிரியர் சதாசிவம் : (....சிரித்துக்கொண்டே.....) “ வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையைப் பத்தி ......... வாழப் போறதே , இன்னும் கொஞ்ச நாள் தானே ! அதுக்குள்ள விவசாயத்தப் பத்தின ஒரு விழிப்புணர்வ , வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் . அதப்பத்தி தான் அவர் சதாகாலமும் சிந்தித்தார் . குறிப்பா ! எங்க வேளாண் பிரிவு இளைஞர்கள் மத்தியில் , எப்படி அதைக் கொண்டுபோய் சேர்க்கணுங்கரதப் பத்தி தான் என்கிட்ட அவர் பேசுவார் . இதுவரைக்கும் அவர் சொன்ன கருத்துக்களையெல்லாம் , தொகுத்து , ஒரு புத்தகமா எழுதியிருந்தேன் . அதை அவர் கையாலயே வெளியிடலாம்ன்னு நெனச்சிருந்தேன் . ஆனா அதுக்குத்தான் வாய்ப்பில்லாமல் போச்சு “. என்றார் வருத்தத்துடன் .......

இன்ஸ்பெக்டர் ரவி : அவர் என்னைக்காவது மன வருத்தப்பட்டு எதாச்சும் பேசிருக்காரா ??? நல்லா யோசிச்சுப் பாருங்க ..

பேராசிரியர் சதாசிவம் : (.....நன்றாக யோசித்துவிட்டு.....) என்கிட்ட இதுவரைக்கும் அப்படி பேசினதில்ல சார் !

கொஞ்ச நேர மௌனம் ........... இன்ஸ்பெக்டர் ரவி ஏமாற்றத்துடன் , ஏட்டு கந்தசாமியைப் பார்க்க , அவரும் போகலாம் என்பதைப் போல தலையை ஆட்டியிருந்தார் . சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்த சதாசிவம் , திடீரென்று அவர்களைப் பார்த்து ,

“ சார் ஒரு நிமிஷம் . கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவர் பேசும்போது , ஒரு விஷயத்த என்கிட்ட சொன்னார் ... அது எந்த அளவுக்கு உங்களுக்கு , உபயோகமா இருக்கும்ன்னு தெரியல . இருந்தாலும் சொல்றேன் . “ என்றார் . இன்ஸ்பெக்டர் ரவியும் , கந்தசாமியும் ஆர்வமாய் அவரைப் பார்க்க , சதாசிவம் தொடர்ந்தார் ,

“ NEXTGEN FRETILIZERS LTD என்கிற உரம் தயாரிப்பு நிறுவனம் , கொஞ்ச நாளைக்கு முன்னாடி , அவங்களோட புதியவகை உரங்கள அறிமுகப்படுத்தியிருந்தாங்க . அந்த உரங்களத்தான் இந்த முறை , விவசாயத்துக்கு பயன்படுத்தப் போறதா , நம்ம மாத்தூர் கிராமத்தலைவர்களான தவபுண்ணியம் ஐயாவும் , அவரது சகாக்களும் முடிவு பண்ணியிருந்தாங்க . அப்ப அந்த உரங்கள சோதனை பண்றதுக்காக , நம்ம குமாரசாமி ஐயாவும் உடன் போயிருந்தார் . அதைச் சோதித்துப் பார்த்த குமாரசாமி ஐயா , இந்த ரசாயன உரங்கள் விவசாயத்திற்கு ஏற்றதல்ல . இதைப் பயன்படுத்தினால் நம்முடைய மண் மலடாகிப் போய்விடும் . இந்த செயற்கை உரங்களால் நமக்கு மிகப்பெரிய அபாயம் இருக்கிறது . இதைத் தவிர்த்து விடுங்கள்ன்னு , நம்ம மாத்தூர் கிராமத்தலைவர்கள் கிட்ட சொல்லியிருந்தார் . அவங்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்ன்னு அவர் என்கிட்ட சொல்லியிருந்தார் “ என்று முடித்தார் சதாசிவம் . இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவி , சற்றே தெளிவு பிறந்ததை அடுத்து “ சார் ! நீங்க குடுத்த தகவல்களுக்கு , ரொம்ப நன்றி . குமாரசாமி ஐயாவப் பத்தி நாங்க நெறைய தெரிஞ்சுக்கிட்டோம் . நாங்க வர்றோம் என்று கிளம்பியிருந்தார்கள் .

9

“ NEXTGEN FERTILIZERS LTD “ - உரம் தயாரிப்பு நிறுவனம் , மாத்தூரின் பிரதான சாலையில் , வடக்கு நோக்கி அமைந்திருந்தது ......... நன்றாக திணிக்கப்பட்ட உரமூட்டைகள் , அங்கு மலை போல் குவிக்கப்பட்டிருந்தது . கட்டுக்கோப்பான உடம்புகளுடன் கூடிய வேலையாட்கள் , அந்த மூட்டைகளை , கனரக வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர் . நன்றாக செதுக்கப்பட்ட உடற்கட்டுகளில் , அவர்களின் கடின உழைப்பின் பயன் தெரிந்தது . வரவேற்பறையின் உள்ளே அந்த நிறுவனத்தின் பங்குதார்களான பிரனேஷும் , திலீபனும் வெள்ளை நிற ஆடைகளில் ஜொலித்திருந்தார்கள் . சற்று நேரத்தில் , மிகுந்த இரைச்சலுடன் வந்த , போலீஸ் ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , வந்து இறங்கியிருந்தார்கள் . இதை சற்றும் எதிர்பாராத ப்ரனேஷும் , திலீபனும் திகைத்து நின்றிருந்தார்கள் . இனம்புரியாத ஒரு பதற்றம் அவர்களைத் தொற்றியிருந்தது . சற்று நிதானத்தை வரவழைத்துக் கொண்டு , அவர்களை வரவேற்று உட்கார வைத்திருந்தார்கள் .

திலீபன் : “ WELCOME சார் ! I’M திலீபன் . and HE IS பிரனேஷ் .“ என்று இருவரையும் அறிமுகப்படுத்தியிருந்தார்கள் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ WELL MR. திலீபன் ......... WE ARE FROM தூத்தூர் போலீஸ் ஸ்டேஷன் . I’M இன்ஸ்பெக்டர் ரவி . and HE IS கந்தசாமி . ஒரு சின்ன ENQUIRYக்காக வந்துருக்கோம் “ .

பிரனேஷ் : “ எஸ் சார் ..............! நாங்க முழு ஒத்துழைப்பு கொடுக்க கடமைப் பட்டுருக்கோம் . “ என்றான் புரியாத புதிராக .

ஏட்டு கந்தசாமி : குமாரசாமி ஐயா , மரணம் தொடர்பான விசாரணை தான் இது . அவர் கடைசியா கலந்து கிட்ட ஒவ்வொரு நிகழ்ச்சிகள் , மற்றும் அவர் போன இடங்களிலெல்லாம் விசாரணை நடந்துகிட்டு இருக்குது . அது சம்பந்தமான ஒரு FORMAL என்குயரி தான் இது . SO , ஒன்னும் பயப்பட தேவையில்ல “ .

( அதிர்ந்து போயிருந்தார்கள் ப்ரனேஷும் திலீபனும் .... அவர்கள் முகத்தில் கலவரம் வெடித்திருந்தது . ) .

இன்ஸ்பெக்டர் ரவி : “ என்ன MR . பிரனேஷ் ? பேச்சையே காணோம் “.. என்றார் மெல்ல சிரித்தவாறே .

பிரனேஷ் : “ NO ! NO ! , அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க சார் . அவரோட மரணத்த எங்களாலையே நம்ப முடியல . வயசானாவே அப்படிதான் சார் .... குமாரசாமி ஐயாவ , நாங்க கடைசியா எப்ப பாத்தோம்ன்னா....... என்று இழுத்தார் . உடனே பக்கத்தில் இருந்த திலீபன் , நிலைமையைப் புரிந்துகொண்டு , “ சார்ர்ர்ர்ர்ர்ர்…………… ! போன மாசம் , எங்களோட கம்பெனி உரங்கள , கிராமத்து விவசாயத்துக்கு , பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தியிருந்தோம் . அதை சோதனை பண்றதுக்காக , மாத்தூர் கிராமத்துல இருந்து , தவபுண்ணியம் , ராமலிங்கம் , அப்புறம் ...... சிவநேசன் இவங்கெல்லாம் வந்துருந்தாங்க . கூடவே நம்ம குமாரசாமி ஐயாவும் வந்துருந்தாரு . அப்பதான் நாங்க , அவரக் கடைசியாப்பார்த்தோம் . ஆனா .......... நல்லாருந்த மனுஷன் , இவ்வளவு சீக்கிரம் போய்ட்டாரேன்னுதான் வருத்தமா இருக்குது சார் ... , போகிற காலம் வந்துச்சுன்னா போக வேண்டியது தானே “ என்றார் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ ஹ்ம்ம் ! .... ஓகே ..... அப்புறம் என்னாச்சு ? உர சோதனையெல்லாம் முடிஞ்சுடுச்சா ? “

பிரனேஷ் : “ ஆமா சார் ! சோதனையெல்லாம் முடிஞ்சுடுச்சு . அவங்க எல்லாத்தையும் , தரவா சோதனை பண்ணிட்டு , எங்களோட உரங்கள பயன்படுத்த ஒப்புதல் குடுத்துட்டாங்க . இன்னும் ஒரு வாரத்துல , எங்க கம்பெனியோட உரங்கள் , பயன்பாட்டுக்கு வந்துரும் “ .

( பிரனேஷின் இந்த பதிலைக் கேட்டதும் , அதிர்ந்து போயிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் . பேராசிரியர் சதாசிவத்தின் கருத்துக்களுக்கு , முற்றிலும் முரண்பட்டதாக இருந்தது பிரனேஷின் அந்த பதில் . சற்று சுதாரித்துக்கொண்ட கந்தசாமி , அடுத்த கேள்வியைத் தொடங்கினார் ............. )

ஏட்டு கந்தசாமி : “ நம்ம குமாரசாமி ஐயா..., அதப் பத்தி என்ன சொன்னாரு ?

திலீபன் : (.....பதற்றத்துடன்......) “ எங்க கம்பெனி உரங்கள பயன்படுத்த , அவர்தான் சார் , மொதல்ல ஒப்புதல் குடுத்தாரு ...... ” என்றார் .

குமாரசாமியின் மரணத்தில் இருக்கின்ற மர்மத்தை , இந்த தகவல் மேலும் உறுதிப்படுத்தியிருந்தது . இவர்களிடத்தில் , ஏதோ ஒரு உண்மை மறைந்திருப்பதை , ஏட்டு கந்தசாமியின் கண்கள் , இன்ஸ்பெக்டர் ரவிக்கு அடையாளம் காட்டியிருந்தது . அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் , வழக்கமான விசாரணை போல , அவர்களிடம் விசாரித்துவிட்டு வெளியே வந்தனர் .....

இன்ஸ்பெக்டர் ரவி : “ ஓகே ! THANK YOU FOR YOUR KIND CO-OPERATION . நாங்க கெளம்புறோம் . “ என்று வண்டியில் ஏறியிருந்தார்கள் . அவர்கள் போகும் வரை பார்த்திருந்து , நிம்மதிப் பெருமூச்சு விட்ட பிரனேஷ் “ ஒரு வழியா அவங்கள சமாளிச்சு அனுப்பிட்டோம் . கொஞ்ச நேரத்துல , கதி கலங்கிடுச்சே !..

திலீபன் : “ எனக்கும் அப்படிதான் இருந்துச்சு . எதுக்கும் , இந்த விசயத்துல நாம கொஞ்ச ஜாக்கிரதையா இருக்கணும் ..... “ என்று சொல்லி முடித்த அடுத்த வினாடி , திலீபனின் செல்போன் திடீரென்று அலறியது . எடுத்துப் பார்த்த அவர் , ஹலோ ! என்றார் .. மறுமுனையில் , சிவநேசன் பேசினார் .

சிவநேசன் : “ தம்பி ! நான் சிவநேசன் பேசுறேன் ... நாங்க இப்ப அங்கதான் வந்துட்டு இருக்கோம் ..... ரெடியா இருங்க .. இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவோம் . “ என்றவுடன் இணைப்பைத் துண்டித்திருந்தார்....

எரிச்சலுடன் செல்போனை பாக்கெட்டில் வைத்தான் தீலீபன் .

பிரனேஷ் : “ போன்ல யாரு ? “

தீலீபன் : “ மாத்தூர் கிராமத்துக்காரனுங்க .... காசு வாங்கறதுக்குன்னே ! வரிஞ்சுகட்டிட்டு வந்திட்டுருக்கானுங்க “ என்றான் உச்சகட்ட எரிச்சலோடு .

பிரனேஷ் : வரட்டும் ! வரட்டும் ! ................ சரி ! அதெல்லாம் இருக்கட்டும் . எனக்கு ஒரு யோசனை தோணுது .....

திலீபன் : என்ன யோசனை ????

பிரனேஷ் : “ நாம எதுக்குடா காசு குடுக்கணும் ?? . இப்ப போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து , இன்ஸ்பெக்டர் வந்துட்டு போனதைச் சொல்லி , அவங்கள மெரட்டுவோம் . வேறு ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா , அவனுங்கள போட்டு குடுத்துருவோம்ன்னு சொல்லி பயமுறுத்துவோம் . நாமளா பாத்து , என்ன குடுக்கறோமோ , அதை வாங்கிட்டு போகட்டும் “ ... நீ என்ன சொல்ற ???

திலீபன் : “ எனக்கென்னமோ ? இது சரியாப்படல .... இருந்தாலும் , நீ சொல்றியேன்னுதான் பாக்குறேன் ” ..

பிரனேஷ் : “ விடுடா ! நான் பாத்துக்கறேன் .....” என்றவன் ,,,,, வேலையாட்கள் பதிவேட்டைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தான் .

“ என்னடா யாரோ ஒருத்தன் , இன்னிக்கு வேலைக்கு வர்ல போல இருக்கு . “

திலீபன் : “ ஆமாண்டா ! அவன் எதோ பேயப் பார்த்து பயந்துருக்கானாம் ... அதுனாலதான் அவன் இன்னிக்கு லீவாம் .....” என்றான் சிரித்துக்கொண்டே .

பிரனேஷ் : “ இந்த மாத்தூர் கிராமத்துக்காரனுங்களுக்கு , வேற வேலையே இல்ல போல . லீவ் எடுத்துக்கறதுக்காக , என்னல்லாம் , சாக்குபோக்கு சொல்றானுங்க பாத்தியா ...“ என்றான் .

சரியாக அரைமணி நேரம் ... மாத்தூர் கிராமத்தலைவர் தவபுண்ணியத்தின் , ஸ்கார்பியோ கார் , உள்ளே வந்திருந்தது . காரிலிருந்து வேலைக்காரன் பொன்னையா , முதல் ஆளாக வெளியே இறங்கினான் . சிவநேசனும் ராமலிங்கமும் பின்னே இறங்க , கடைசியாக இறங்கினார் தவபுண்ணியம் . வேலைக்காரன் பொன்னையாவைப் பார்த்த அவர் ,

“ நீ இங்கயே இரு . நாங்க போயிட்டு வந்தர்றோம் “ என்று அவனை காருக்குப் பக்கத்தில் , நிக்க வைத்துவிட்டு , முன்னேறினார் . பிரனேஷும் , திலீபனும் , வேண்டா வெறுப்பாக , அவர்களை வரவேற்றிருந்தனர் . அனைவரும் உள்ளே சென்றவுடன் , அலுவலகக் கதவுகளையும் , ஜன்னலையும் சாத்தியிருந்தார்கள் .

ராமலிங்கம் : “ என்ன பிரனேஷ் ? வெளியே , வேலையெல்லாம் படு பயங்கரமா நடந்துகிட்டு இருக்குது போல “ , என்றார் சிரித்தவாறே .

பிரனேஷ் : “ ஆமாங்கய்யா ! இந்த வாரத்துக்குள்ள , எல்லா வாடிக்கையாளர்களுக்கும் , உரங்கள கொண்டுபோய் சேர்க்கணும் . அதுக்கான ஆயத்த பணிகள் தான் , இப்போ வேகமா போயிட்டு இருக்கு . “

சிவநேசன் : “ அப்ப ! அடுத்த வாரத்துக்குள்ள நம்ம மாத்தூர் கிராமம் முழுவதற்கும் , உங்க உரங்கள தான் உபயோகப்படுத்த போறாங்க . அப்படித்தானே ! இல்லையா ! “

திலீபன் : “ ஆமாம்யா ! “ என்றவன் , உள்ளே சென்று , ஒரு பையை எடுத்து வந்து கொடுத்தான் .

அதை வாங்கிப் பார்த்த ராமலிங்கமும் , சிவநேசனும் , உள்ளே இருந்த பணக்கட்டுகளைப் பார்த்தவுடன் , எண்ண ஆரம்பித்தனர் . தவபுண்ணியம் எதுவும் பேசாமல் , அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் . பணத்தை எண்ணிக் கொண்டிருந்த அவர்களின் முகம் , ஒரு கட்டத்தில் , மாறியிருந்தது . திடீரென்று முகம் சிவந்த ராமலிங்கம் அவர்களைப் பார்த்து ,

“ தம்பி ! நாங்க காட்டு மிராண்டிங்க தான் . ஆனா ! கணக்கு வழக்கு தெரியாதவங்க இல்ல . பேசுனபடி , 2 லட்சம் இதுல இல்லியே . வெறும் அம்பதாயிரம் தான் இருக்குது “ .. என்றார் கோபத்தோடு .

(.....மெல்ல புன்னகைத்திருந்தார் தவபுண்ணியம்.....)

பிரனேஷ் : எதுவுமே குடுக்க வேண்டாம்னு நெனச்சோம் . ஏதோ பழகுன தோஷத்துக்காக , வேற வழியில்லாம இதை குடுக்கறோம் . மரியாதையா எடுத்துட்டு போயிருங்க .

சிவநேசன் : “ என்ன தம்பி ! பேசறது யார்கிட்டன்னு தெரிஞ்சுதான் பேசுறியா ? . “ எங்ககிட்டயே உங்க வேலையக் காட்டுறீங்களா ! “ .

ராமலிங்கம் : “ அந்த குமாரசாமி போன இடத்துக்கே , நீங்களும் போறீங்களா ................... “

திலீபன் : “ ஐயா !!!!! ஒரு நிமிஷம் WAIT பண்ணுங்க .......... இப்பதான் , தூத்தூர் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து , வந்து , குமாரசாமி கேஸ் சம்பந்தமா , விசாரணை பண்ணிட்டு போயிருக்காங்க .... நாங்க ஒரு வார்த்த உங்களப் பத்தி சொல்லிருந்தோம்னா , இன்னிக்கு நீங்க மூணு பேரும் , ஜெயில்ல களி தின்னுட்டு , கம்பி எண்ண வேண்டியது தான் “ .

பிரனேஷ் : “ அதனால மரியாதையா , குடுக்கறத வாங்கிட்டு போயிருங்க .. இல்ல , இன்னும் முரண்டு புடிச்சீங்கன்னா , இப்பவே இன்ஸ்பெக்டர் ரவிக்கு கால் பண்ணி , எல்லா விவரத்தையும் , விலாவாரியா சொல்லிருவோம் . அதுக்கப்புறம் உங்க இஷ்டம் “ என்றான் கேலியாக .

இதயெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தவபுண்ணியம் , திடீரென்று எழுந்து , சிவநேசனையும் , ராமலிங்கத்தையும் பார்க்க , அவர்களும் எழுந்து நின்றனர் . தவபுண்ணியம் தன் தலையை , லேசாக வருடிக்கொண்டே , பிரனேஷையும் , திலீபனையும் பார்த்து ,,,,,, லேசாக சிரித்து விட்டு ,

“ தம்பி ! உரம் தயாரிக்கற வேலைய மட்டும் பாருங்க ! ..... இல்ல ,,,,,,, நீங்களே இந்த மண்ணுக்கு உரமாயிரப் போறீங்க !!! . “ என்று எச்சரித்துவிட்டு வெகு வேகமாக வெளியேறினார் . “ .

வெளியே கைகளைக் கட்டிக் கொண்டு , காருக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான் பொன்னையா . வேகமாக சென்ற தவபுண்ணியம் , பொன்னையாவின் காதுகளில் ஏதோ முணுமுணுத்துவிட்டு , அனைவரும் காரில் ஏறிப் புறப்பட்டிருந்தார்கள் . இதயெல்லாம் ஜன்னலுக்கு வெளியே , நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெரியவர் , அடுத்த பத்தாவது நிமிடத்தில் , இன்ஸ்பெக்டர் ரவியின் காதுகளுக்கு செல்போன் மூலமாக நடந்த விசயங்களையெல்லாம் , தெரியப்படுத்தியிருந்தார் .

1௦

பொழுது சாய்ந்து கொண்டிருக்கின்ற நேரம் . கடிகார முள் சரியாக , ஏழு மணியைத் தொட்டிருந்தது . இருட்டு மெல்ல மெல்ல பரவிக் கொண்டிருந்தது . தூத்தூர் காவல் நிலையத்தை நோக்கி , போலீஸ் ஜீப் பயணித்திருந்தது . அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து , யோசித்துக் கொண்டே வந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

ஏட்டு கந்தசாமி : சார் ! குமாரசாமி ஐயா , பேயடிச்சு செத்துப் போயிட்டார்ன்னு , ஒரு ஊரையே நம்ப வச்சிருக்கானுங்க . இது எவ்வளோ பெரிய குற்றம் !!!!

இன்ஸ்பெக்டர் ரவி : “ ஹ்ம்ம் !!! அது மட்டும் இல்ல ,,,, “ பாவம் அந்த வெண்ணிலாப் பொண்ணு மேல , பழியப் போட்டுட்டு , இவனுங்க சுதந்திரமா நடமாடிக்கிட்டு இருக்கானுங்க “ .

ஏட்டு கந்தசாமி : “ பெரிய மனுஷன்ங்கற போர்வைல , இன்னும் என்னென்ன அட்டூழியங்கள பண்ணிட்டு இருக்கானுங்களோ ??? “

இன்ஸ்பெக்டர் ரவி : “ இவனுங்க மட்டும் இல்ல கந்தசாமி ..................... நம்ம நாட்ல ,,,, இப்படிப்பட்டவங்க நெறைய பேர் இருக்கானுங்க . “ இவர்களோட போலி பிம்பங்கள் உடைத்தெறியப்பட வேண்டும் . பொதுமக்கள் முன்னிலையில் , இவர்களோட கபட நாடங்கள வெளிக்கொண்டு வரணும் .

ஏட்டு கந்தசாமி : “ சார் !!! ..... இருந்தாலும் ,,,,,, நாங்க பார்த்த அந்த அமானுஷ்யமான விசயங்கள் , கேட்ட சப்தங்கள் எல்லாம் பொய்ன்னு நீங்க நெனைக்கிறீங்களா ???.

இன்ஸ்பெக்டர் ரவி : “ நான் எதையுமே பொய்ன்னு சொல்லல . எல்லாமே ஒரு IMAGINATION தான் .... ஒரு சின்ன லாஜிக் தான் அது . நாம தனியா இருக்கும் போது , ஒரு சின்ன சப்தம் கேட்டாக்கூட , அதுவே நம்மளோட மனசுக்கு , கொஞ்சம் நெருடலாக இருக்கும் . ஆனா இவனுங்க வேண்டுமென்றே , மக்கள் மனசுல , ஒரு அமானுஷ்ய சாயத்த பூசியிருக்கானுங்க .... SO , அதைப் பற்றி நெனைக்க , நெனைக்க , நம்மளோட மனசும் , எந்த ஒரு புது விஷயம் நடந்தாலும் , அதை இதோட தொடர்புபடுத்தியே சிந்திக்கும் . அதுதான் இப்ப மாத்தூர் கிராமத்து மக்கள் மனசுல நடந்துட்டு இருக்கு . குமாரசாமியின் மரணத்துக்கு , கொஞ்சம் நாளைக்கு முன்னாடிதான் , அந்த வெண்ணிலாங்கற பொண்ணு செத்துப் போயிருக்கு ..... SO , இத அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திட்டு , பழியை , அந்தப் பொண்ணு மேல போட்ருக்கானுங்க .................... அப்படிப் பார்க்கும்போது , அன்னிக்கு என் வீட்டுக் கதவத் தட்டினது கூட ,,,,,,, இவனுங்க வேலையா இருக்கலாம்ன்னு எனக்கு நினைக்கத் தோணுது ... “

ஏட்டு கந்தசாமி : “ சார் !!! இதுல எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கு . மாத்தூர் கிராமத்துல , அமானுஷ்ய நடமாட்டங்கள் இருக்குதுன்னு , வேதாந்த சுவாமிகள் ஏன் சொல்லணும் ?? “

(....சற்று நேரம் யோசித்துவிட்டு....)

இன்ஸ்பெக்டர் ரவி : “ எனக்கும் அது சந்தேகத்திற்கிடமாத்தான் இருக்குது . ஏன் அவர் இத சொல்லணும் ? . தவபுண்ணியம் , சிவநேசன் , ராமலிங்கம் , வேதாந்த சுவாமிகள் , இவங்க எல்லாருமே , அமானுஷ்யம்ங்கற ஒரே விசயத்துல ஒத்துப்போறாங்க . SO , இந்த விசயத்தில , இவங்க எல்லாருக்குமே தொடர்பு இருக்குமோன்னு நான் சந்தேகப்பட்றேன் . மொதல்ல , விசாரணை பண்ண வேண்டிய விதத்தில , மாத்தூர் கிராமத்தலைவர்கள விசாரிச்சா , பல உண்மைகள் வெளில வந்துரும் . “ என்றார் . திடீரென்று மழை , தூறல்போட ஆரம்பித்திருந்தது . சற்று நேரத்தில் , அதுவே பெரிய மழையாக உருமாறியிருந்தது . அதற்குள் தூத்தூர் காவல் நிலையம் வந்திருந்தது . ஜீப்பிலிருந்து வெளியே இறங்கியதும் , வேகவேகமாக இருவரும் உள்ளே புறப்பட்டிருந்தார்கள் . காவலுக்கு நின்றுகொண்டிருந்த போலீசார் , சல்யூட்டுடன் அவர்களுக்கு எதிர்பட்டிருந்தார்கள் . உள்ளே விசாரணைக் கைதிகளை விசாரிக்கக் கூடிய அறையில் , இருவரும் தனியாக விவாதிக்க ஆரம்பித்திருந்தனர் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ கந்தசாமி ! இப்ப மணி 8 ஆகப்போகுது . இன்னிக்கு ராத்திரி சரியா பத்து மணிக்கு , தவபுண்ணியத்தையும் , அவரோட சகாக்களையும் , விசாரணைங்கற பேர்ல , தனித் தனியா ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வரப்போறோம் . நாம அவங்கள கைது பண்ணப் போறோம்ங்கற விஷயம் , எக்காரணத்தைக் கொண்டும் , யாருக்குமே தெரியக்கூடாது . குறிப்பா அவங்க மூணு பேருக்குமே , இந்த விஷயம் தெரியவே கூடாது .

ஏட்டு கந்தசாமி : “ எஸ் சார் ! ... ஆனா இதுல ஏதாவது பிரச்சனை வருமோன்னு நெனக்கிறேன் ... விசாரணைன்னு சொன்னா , அவங்க ஒத்துழைப்பாங்கன்னு நெனைக்கிறீங்களா ! “ .

இன்ஸ்பெக்டர் ரவி : “ வேற வழியில்ல . அவங்கள எப்படியாச்சும் ஒத்துழைக்க வெச்சு , இங்க கூட்டிட்டு வந்தே ஆகணும் ... ஏன்னா நாம கைது பண்ணப் போறோம்ன்னு , தெரிஞ்சா அவனுங்க ALERT ஆயிருவாங்க . தப்பிக்க நெனைப்பாங்க . அதுக்கு முன்னாடி , மேலிடத்துல உத்தரவு வாங்கிட்டுத்தான் , நாம நம்ம வேலைய ஆரம்பிக்கணும் . நான் இன்னும் கொஞ்ச நேரத்துல மேலிடத்துல பேசி APPROVAL வாங்கிடுவேன் . அதுக்குள்ள நீங்க மத்த வேலைகளைப் பாருங்க . “

ஓகே சார் ! என்ற கந்தசாமி , அடுத்த கட்ட வேளைகளில் துரிதம் காட்டியிருந்தார் ........... மேலதிகாரிகளோடு , அரை மணி நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . “ சார் ! கவலைப்படாதீங்க ! எந்தப் பிரச்சனையும் வராது . அப்படி வந்தாலும் நான் பாத்துக்குறேன் . நீங்க PERMISSION மட்டும் குடுங்க . “ என அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக , கடைசிவரை பேசிக்கொண்டிருந்தார் . நேரம் மணி 9 –ஐத் தொட்டிருந்தது . ஒரு வழியாக அவர்களிடம் , சமாதானம் வாங்கிய அவர் , பெருமூச்சு விட்டிருந்தார் . அதைப் பார்த்த ஏட்டு கந்தசாமி , “ சார் ! ஒரு வழியா அவங்கள ஓகே பண்ணீட்டீங்க போல “ என்றார் சிரித்துக்கொண்டே “ .

இன்ஸ்பெக்டர் ரவி : “ ஆமாய்யா !................ எப்படியோ சம்மதிக்க வச்சுருக்கேன் . இன்னிக்கு ராத்திரியோட ராத்திரியா , மாத்தூர் கிராமத்து மர்மத்துக்கு , ஒரு முற்றுப்புள்ளி வச்சிர வேண்டியதுதான் .... சரி கெளம்ப ரெடியா இருங்க .. “

ஏட்டு கந்தசாமி : “ ஓகே சார் ! கண்டிப்பா .....“ என இருவரும் கிளம்ப தயாராயிருந்தார்கள் . மழையும் விட்டிருந்தது . நீடித்திருந்த மர்மம் , நீங்கிய சந்தோஷத்தில் , இன்ஸ்பெக்டர் ரவி , தன்னுடைய முகத்தில் தண்ணீரைத் தெளித்து , நிம்மதிப் பெருமூச்சு விட்டிருந்தார் . அந்த நேரம் பார்த்து , ஏட்டு கந்தசாமியின் செல்போன் அலறியது . எடுத்துப் பார்த்த , அவர் ஹலோ என்று பேச ஆரம்பித்தார் ......... கொஞ்ச நேரத்தில் , ஏட்டு கந்தசாமியின் முகம் மாறியிருந்தது . அவரது முகமாற்றத்தை , ஆச்சர்யமாகப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவி , கந்தசாமியைப் பார்த்து , “ யோவ் ! என்னாச்சுய்யா ????? ” . என்றார்

ஏட்டு கந்தசாமி : “ சார் !!!!!!!!! மாத்தூர் கிராமத்தலைவர்களில் ,, ஒருவரான சிவநேசன் ................................................. இறந்துட்டாராம் “ .

இன்ஸ்பெக்டர் ரவி : (..... பேரதிர்ச்சியுடன் .....) “ WHAT ????????????????? “ .

ஏட்டு கந்தசாமி : “ ஆமா சார் ! , இப்பதான் , நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து , நமக்குத் தகவல் வந்துருக்கு . “ .

மீளாத அதிர்ச்சியில் உறைந்திருந்த , இன்ஸ்பெக்டர் ரவி ,,, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு , “ எப்படிடிடிடிடி இறந்தாராம் ???? “ . என்றார் .

ஏட்டு கந்தசாமி : “ தெரியல சார் ! நாம போய்தான் பாக்கணும் . “ .

இன்ஸ்பெக்டர் ரவி : “ COME ON , LET’S GO ...........“ என்றவுடன் இருவரும் போலீஸ் ஜீப்பில் ஏறியிருந்தார்கள் .

மிகப்பெரிய குழப்பத்தினிடையில் , போலீஸ் ஜீப் , புயலாகக் கிளம்பியிருந்தது . போலிஸ் ஜீப்பின் வெளிச்சத்தால் , வழிநெடுகிலும் இருந்த இருட்டு , தன்னை விலக்கிக் கொண்டு அவர்களுக்கு வழிகாட்டியிருந்தது . இன்ஸ்பெக்டர் ரவியின் மனதில் , சந்தேக மேகங்கள் சூழ்ந்திருந்தது . எப்பொழுதும் , எதையாவது பேசிக்கொண்டு வரும் , ஏட்டு கந்தசாமியும் மௌனம் காக்க , ஒரு மயான அமைதி அங்கு நிலவியிருந்தது . இருபது நிமிடப் பயணத்தில் , மாத்தூரின் எல்லையை அடைந்திருந்தார்கள் . ஆங்காங்கே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர் . கொஞ்ச நேரத்தில் , சிவநேசனின் தோப்புவீடு வந்திருந்தது . அந்த இரவு நேர அமைதியிலும் , அழுகுரல் சத்தம் அந்த ஏரியாவையே , துக்கத்தில் ஆழ்த்தியிருந்தது . தோளில் துண்டுகளோடு , பெருசுகள் தோப்பின் வெளியே நின்றுகொண்டு , பேசிக் கொண்டிருந்தார்கள் . அவர்களையெல்லாம் தாண்டி , வீட்டை நோக்கி முன்னேறியிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் ............ வீட்டின் உள்ளே , போர்வையின் விரிப்பில் , நேராகப் படுத்தவாறு கிடத்தப்பட்டிருந்தார் சிவநேசன் ........ சிவநேசனின் மனைவி , அவரின் இறப்பை ஜீரணிக்க முடியாமல் , பிரம்மை பிடித்தவர் போல் ,,, அவர் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார் . அவரைச் சுற்றி , அழுதபடியே பெண்கள் கூட்டம் மொய்த்திருந்தது . உள்ளே சென்று பார்த்து விட்டு , வெளியே வரும்போது , திண்ணையில் தவபுண்ணியமும் , ராமலிங்கமும் சோகமே உருவாய் உட்காந்திருந்தார்கள் . சிவந்து கிடந்த தவபுண்ணியத்தின் கண்களில் , தண்ணீர் தடாகம் , ஊற்றெடுத்திருந்தது . எப்பொழுதும் கம்பீரமாய் தோற்றமளிக்கும் தவபுண்ணியத்தின் முகம் , சிவநேசனின் ஈடுகட்ட முடியாத இழப்பால் , கலவரமடைந்திருப்பதை அங்கு காண முடிந்திருந்தது . ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ராமலிங்கம் , தவபுண்ணியதைப் பார்த்து

ராமலிங்கம் : “ ஐயா ! நீங்க கவலைப்படாதீங்க ஐயா ! , எனக்குத் தெரிஞ்சு , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அந்த NEXTGEN உரம் தயாரிக்கிற கம்பெனிக்காரனுங்க தான் , இப்படி பண்ணியிருக்கணும் . அவனுங்கள............. நாளைக்கு காலைலக்குள்ள அவனுங்களோட கதைய முடிச்சிட்றேன் . அப்பதான் என்னோட ஆத்திரம் தீரும்யா . “ என்று எழுந்து நின்றார் கோபமாக .

தவபுண்ணியம் : ( ...... கோபத்துடன் நின்றிருந்த ராமலிங்கத்தைப் பார்த்து , கையமர்த்திய தவபுண்ணியம் ...... ) “ ராமலிங்கம் ! கொஞ்சம் அமைதியா இரு . அவனுங்க இதப் பண்ணீருக்க மாட்டாங்க . அவனுங்களுக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்ல . நல்லா யோசிச்சுப் பாரு ... நம்மளப் பத்தி , நல்லா தெரிஞ்ச எவனோ தான் இதைப் பண்ணீருக்கான் ....... “ .

பக்கத்தில் இருந்த நபர்களிடம் , விசாரித்துக் கொண்டிருந்த ஏட்டு கந்தசாமி , இன்ஸ்பெக்டர் ரவியின் பக்கத்தில் வந்து ,

“ சார் ! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி , இந்த வீட்டுக் கதவு தட்டப்படும் சப்தம் கேட்ருக்குது . சிவநேசன் ஐயா , எழுந்து போய் கதவத் திறந்து பாத்துருக்காரு . வெளில யாருமேயில்ல . அப்ப நல்ல மழை வேற . கையில டார்ச் எடுத்துட்டு வெளில போயிருக்காரு . போனவர் ரொம்ப நேரமா திரும்பி வரலையேன்னு , இவங்கெல்லாம் போய்ப் பார்த்துருக்காங்க . அப்பதான் அவர் அந்த இடத்துலேயே இறந்து கிடந்தது இவங்களுக்கு தெரிஞ்சுருக்கு . உடனே நமக்கு தகவல் குடுத்துருக்காங்க . இது ஒரு இயற்கையான மரணாமாக்கூட இருக்கலாம் சார் !!! ஆனா வெண்ணிலாவோட ஆவி தான் இவர பழி வாங்கிருக்குன்னு , ஊர்க்காரங்கல்லாம் பேசிக்கிறாங்க . இவங்க சொல்றபடி பாத்தா , கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் , அவர் இறந்துருக்கார் . ஆனா அவர் உடம்புல எந்தவிதமான காயங்களுமே இல்ல . .... “

இன்ஸ்பெக்டர் ரவி : (................ சற்று நேரம் யோசித்துவிட்டு ................) ஹ்ம்ம் !!! ஓகே !!! . அவர் இறந்து கிடந்த ஸ்பாட்ட நான் பார்க்கணும் . ” என்றார் .

பக்கத்தில் இருந்த நபர் வழியைக் காட்ட , ஏட்டு கந்தசாமியும் , இன்ஸ்பெக்டர் ரவியும் பின்தொடர்ந்திருந்தார்கள் . கொஞ்ச நேர நடையில் , வீட்டுக்குப் பின்னால் இருந்த , செம்பருத்தித் தோட்டத்தை நெருங்கியிருந்தார்கள் . சிவநேசன் இறந்து கிடந்த இடத்தை , அடையாளம் காட்டிவிட்டு சென்றிருந்தார் அந்த நபர் ... ( ஏட்டு கந்தசாமி , அடையாளம் காட்டப்பட்ட இடத்தைச் சுற்றி ஒரு பெரிய வட்டம் போட்டிருந்தார் .) அந்த இடம் முழுவதையும் , தன் கண்களால் அலசியிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டிருந்த அவரின் பார்வை , தூரத்தில் இருந்த செம்பருத்திச் செடியை நோக்கிச் சென்றது .. அந்தச் செடியின் கிளைகள் சற்றே உடைக்கப்பட்டிருந்தது அப்போது தெரியவந்தது . பக்கத்தில் சென்று அதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார் . அதன் வழியாக , யாரேனும் ஊடுருவி வந்திருக்கலாம் என்கின்ற யூகத்தில் , குறிப்பிட்ட அந்த இடத்தைச் சுற்றியே மேலும் , தனது பார்வையைக் கூர்மைப்படுத்தியிருந்தார் . கனமழை பெய்ததன் காரணமாக , அந்த இடமே சேறும் சகதியுமாகக் காட்சியளித்திருந்தது . கொஞ்ச நேரமாகவே , அந்த சகதியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஏட்டு கந்தசாமி , திடீரென இன்ஸ்பெக்டர் ரவியைக் கூப்பிட்டு , அந்த சகதியின் ஓரத்தை நோக்கி , தன் கையைக் காட்டினார் . அதில் மனிதக் காலடித்தடம் , பதிந்திருந்ததைக் கண்டதும் , திடுக்கிட்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . அதே காலடித்தடம் , தூரத்தில் இருந்த மதில் சுவர் வரை , பரவியிருந்ததை அங்கு பார்க்க முடிந்தது . அந்த கால்தடங்களையே , நன்கு உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவி , தன்னுடைய செல்போனில் , அவற்றைப் புகைப்படமெடுத்துக் கொண்டார் . அந்தக் கால்தடங்களின் இடதுகுதிங்காலில் , ஏதோ ஒரு வெட்டு விழுந்திருப்பதைப் போல , எல்லாப் புகைப்படங்களிலும் தெரிந்திருந்தது . அதை உணர்ந்து கொண்ட இருவரும் , அந்த மதில் சுவர் வரை சென்று பார்த்தார்கள் . வெளியே ஆள் அரவமற்று வெறிச்சோடியிருந்தது .

ஏட்டு கந்தசாமி : “ சார் ! , எனக்கு தெரிஞ்சு இது கொலை தான்னு நான் நெனைக்கிறேன் . நமக்கு இப்ப கெடச்சிருக்கிற ஒரே தடயம் , இந்த இடதுகுதிங்கால் வெட்டு தான் சார் ... . “ .

இன்ஸ்பெக்டர் ரவி : “ இந்த விஷயம் , நமக்குள்ள மட்டுமே இருக்கட்டும் . வெளில தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க . “ என்றார் .

இருவரும் வெளியே நடந்து வந்தார்கள் . அங்கிருந்த ஒவ்வொருவரையும் , தன் பார்வையால் சலித்துக்கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . ( வேளாண் ஆசிரியர் குமாரசாமியின் மரணத்துக்குக் காரணமானவர் , தவபுண்ணியம்தான் என்று தெரிந்தும் , தற்போதைய சூழ்நிலையைக் காரணம் காட்டி , மௌனம் சாதித்திருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் . ) நேரம் ஆக , ஆக , கூட்டம் சற்று குறைய ஆரம்பித்திருந்தது ... ஒரு கட்டத்தில் நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது . தவபுண்ணியம் மற்றும் ராமலிங்கத்தின் வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது . தவபுண்ணியமும் , ராமலிங்கமும் கிளம்பத் தயாராயிருந்தார்கள் . தவபுண்ணியத்தைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவி , “ சாரி சார் ! உங்க நண்பர் இறப்பிற்கு , எங்களோட ஆழ்ந்த அனுதாபங்கள் சார் . “குமாரசாமியின் மரணத்தில் ஆரம்பித்து , இப்பொழுது சிவநேசன் வரை மாத்தூர் சம்பவங்கள் நீண்டுகொண்டிருக்கின்றது . அவர் எப்படி இறந்தார்ன்னு விசாரணை போய்ட்டிருக்கு ....(என்று முடிப்பதற்குள் , தவபுண்ணியம் கறாரான குரலில் பேச ஆரம்பித்தார் ... )

தவபுண்ணியம் : ( .... சிவந்த முகத்துடன் ..... ) இது நிச்சயமா சாதாரணமான சாவு இல்ல . ஆள் யார்ன்னு தெரிஞ்சா , உடனே சொல்லுங்க . மத்தத நான் பாத்துக்கறேன் . நான் இத சாதரணமா விடப்போறதில்ல . நீங்க என்ன வேணாலும் பண்ணிக்குங்க . ஆனா , அவன் யார்ன்னு எனக்குத் தெரிஞ்சாகணும் .... “ என்றார் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ சரிங்க சார் ! எதுக்கும் , நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க . உங்க வீடுகளுக்கெல்லாம் , கூடுதல் பாதுகாப்பு குடுத்துருக்கோம் . “ என்று அவர்கள் இருவரையும் , அவரவர் கார்களில் வழியனுப்பியிருந்தார் .

உடைந்த மனதுடன் ராமலிங்கமும் , தவபுண்ணியமும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பியிருந்தார்கள் . கூடுதல் பாதுகாப்புக்காக , இரவு நேர ரோந்துப் படையினர் நான்கு பேர் , அவர்களுக்குத் துணையாக அனுப்பி வைக்கப் பட்டிருந்தனர் . அடுத்த பதினைந்து நிமிடங்களில் , போலீஸ் ஜீப் , தூத்தூர் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் பறந்திருந்தது . இரவுப் பொழுதை , போலிஸ் ஸ்டேஷனிலேயே கழிக்க முடிவெடுத்திருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் .... களைப்பு மிகுதியால் , ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த மேசையிலேயே கண்ணயர்ந்திருந்தார் ஏட்டு கந்தசாமி . இன்ஸ்பெக்டர் ரவியின் கண்கள் உறக்கத்துக்கு , முட்டுக்கட்டை போட்டிருந்தது . இந்த கேஸ் சம்பந்தமான யோசனையிலேயே உறக்கத்தைத் தொலைத்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

11

அடுத்த நாள் காலை 9 மணி . மாத்தூர் கிராமப் பஞ்சாயத்து அரசமரத்தடியே , மிகப்பெரிய மக்கள் கூட்டம் நின்றுகொண்டிருந்தது . வேதாந்த சுவாமிகள் , தன்னுடைய சீடர்களுடன் அங்கே முகாமிட்டிருந்தார் . மாத்தூர் சம்பவங்களுக்கான ஒரு தீர்வை எதிர்பார்த்து , கிராம மக்கள் அங்கே காத்துக் கொண்டிருந்தனர் . அந்த வழியாக வந்த , போலீஸ் ஜீப் , இந்த கூட்டத்தைப் பார்த்ததும் நின்றிருந்தது . புரியாத புதிராய் , அந்த ஜன சங்கமத்தில் கலந்திருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் . சரியாக 09:1௦ மணிக்கு சுவாமிகள் பேச ஆரம்பித்திருந்தார் .

வேதாந்த சுவாமிகள் : “ இங்கு கூடியிருக்கின்ற அனைவருக்கும் , என் முதற்கண் வணக்கங்கள் . நான் முன்பே சொன்னது போல , மாத்தூர் கிராமத்தில் அமானுஷ்ய நடமாட்டங்கள் , மிகவும் மோசமான அளவில் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றது . அதற்க்கு உங்களின் கவலை தோய்ந்த முகங்ககளே சாட்சி . இன்று இரவுக்குள் , யாருக்கும் , என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் . நாம் இன்று , அதன் முடிவுக்கான கடைசிக் கட்டத்தை நெருங்கியிருக்கிறோம் . இன்று இரவு நடைபெறவிருக்கும் அர்த்த சாம யாகத்தோடு , அந்த அமானுஷ்ய நடமாட்டத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் போகிறோம் . எனவே அதுவரை பொதுமக்கள் , மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டியது அவசியம் . அதற்கான வழிமுறைகளைத் தான் , நான் இப்பொழுது சொல்லப்போகிறேன் “ என்று பேசலானார் .

“ இதோ நான் கையில் வைத்திருப்பது , எங்கள் அன்பாலயத்தால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட , ஒரு சுத்தமான தீர்த்தம் .... இதை ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் , சரியாக ஆறு மணிக்கு மேல் , தெளிக்க வேண்டும் . அதன் பின்னர் , மூன்று நெய் விளக்குகளை , மேற்கு நோக்கி , வீட்டைப் பார்த்தவாறு ஏற்ற வேண்டும் . இரவு நேரம் ஆக , ஆக , அந்த அமானுஷ்யத்தின் ஆட்டம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கும் . எனவே இன்று ஒரு இரவு , அனைவரும் வெளியே செல்வதைத் தவிர்ப்பது சாலச்சிறந்தது ............................ இந்த யாகத்திற்கு , தங்களால் முடிந்த பொருளுதவியை , காணிக்கையாக அளிக்க முற்பட்டால் , அதை இந்த அன்பாலயம் , பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளும் . ” என்று பேசி முடித்திருந்தார் .

அங்கிருந்த பொதுமக்கள் , தங்களால் முடிந்த காணிக்கையை செலுத்தி விட்டு , அந்த தீர்த்தத்தை வாங்கிக்கொண்டு செல்ல ஆரம்பித்திருந்தனர் . அதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவி , எதுவும் பேசமனதில்லாமல் , கந்தசாமியைப் பார்த்து ,

“ வாய்யா போலாம் !!! .... என்றார் எரிச்சலோடு ..

இருவரும் மீண்டும் , ஜீப்பை நோக்கி செல்ல ஆரம்பித்த கணம் , வேதாந்த சுவாமிகள் இன்ஸ்பெக்டர் ரவியைப் பார்த்து ,

“ ரவி ! ரவி “ என்று கூப்பிட ஆரம்பித்தார் .... திரும்பிப் பார்த்த இருவரும் ,,,, வேதாந்த சுவாமிகளின் பக்கம் வந்தனர் .

வேதாந்த சுவாமிகள் : “ என்ன ரவி ! நீங்க சொன்னமாதிரி , மாத்தூர் கிராமத்துல , நடக்குற சம்பவங்களுக்கான , அறிவியல் பூர்வமான உண்மையை எதையாவது , கண்டுபிடிச்சீங்களா ??? “ என்றார் கேலியாக . “

இன்ஸ்பெக்டர் ரவி : (... மிகுந்த எரிச்சலுடன் ...) “ ஆமாங்க சுவாமி ! இன்னும் கூடிய சீக்கிரத்துல , இந்த மாத்தூர் கிராமத்த ஏமாத்திகிட்டு , சுத்திட்டு இருக்கற , அத்தனை பேர்த்தையும் , புடிச்சு ஜெயில் கம்பிக்குள்ள , தள்ளி , களி திங்க வைக்கத்தான் போறேன் . அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை ...... “ என்றார் .

வேதாந்த சுவாமிகள் : (... ரவி மறைமுகமாக , தன்னையும் தாக்குகிறார் என்பதைத் தெரிந்தும் , முகமலர்ச்சியுடன் , சிரித்துக்கொண்டே .... )

“ ..... உங்களோட முயற்சிக்கு , என்னோட வாழ்த்துக்கள் .... ஆனா இதுக்கப்புறம்தான் , நீங்க இன்னும் ஜாக்கிரதையா இருக்கனும் ... உங்களுடைய பாதுகாப்புகள துரிதப்படுத்துங்க ... எந்த நேரத்திலும் , என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் . “ என்றார் எச்சரிக்கையோடு .

இன்ஸ்பெக்டர் ரவி : (... உச்ச கட்ட எரிச்சலோடு ...) “ சுவாமிஜி !!! என்ன பண்ணனும்னு , எங்களுக்கு நல்லாத் தெரியும் . உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி .... என்று இருவரும் , அங்கிருந்து கிளம்ப முற்பட்ட அடுத்த வினாடி , இன்ஸ்பெக்டர் ரவியின் செல்போன் கதறியது . எடுத்துப் பேச ஆரம்பித்திருந்த அவரின் முகம் , கொஞ்ச நேரத்தில் , சட்டென்று மாறியிருந்தது .

ஏட்டு கந்தசாமி : “ சார் ! என்னாச்சு ??? . “

(... சிரித்தபடியே நின்றுகொண்டிருந்தார் வேதாந்த சுவாமிகள் ....)

இன்ஸ்பெக்டர் ரவி : “ நேத்து ராத்திரி தூங்கச் சென்ற ராமலிங்கம் ஐயாவோட , அறைக்கதவு இதுவரை திறக்கப்படவில்லையாம் .... தட்டுனாலும் , உள்ள சப்தமே இல்லையாம் .. “

(.... வேதாந்த சுவாமிகளின் முகத்தில் இருந்த புன்னகை , இன்னும் மறையவில்லை ....)

வேதாந்த சுவாமிகள் : “ அதனோட ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு ... உங்களுக்கான வேலையும் வந்திடுச்சு ..... “ என்றார் .

அவரின் பேச்சுக்கு மதிப்புகொடுக்காமல் , அடுத்த இரு வினாடிகளில் , அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டிருந்தது போலீஸ் ஜீப் . 15 நிமிடப் பயணத்தில் , ராமலிங்கத்தின் வீட்டை அடைந்திருந்தார்கள் . அங்கு ஒரு மயான அமைதி நிலவியிருந்தது . அந்த வீட்டில் இருந்த மேல் தளத்தில் , ராமலிங்கத்தின் உறவினர்கள் , பதற்றத்தின் உச்சத்தில் , நின்று கொண்டிருந்தார்கள் . வெகுநேரமாக தட்டியும் , ராமலிங்கத்தின் அறைக் கதவு திறக்கப்படாததால் , அது உடைக்கப்பட்டு , கீழே வைக்கப்பட்டிருந்தது . உள்ளே ராமலிங்கம் மெத்தையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார் . மருத்துவர்கள் அவரை சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் . முகத்தில் சேலைத்தலைப்பை வைத்துக்கொண்டு , கண்கள் கலங்கியபடி நின்று கொண்டிருந்தாள் ராமலிங்கத்தின் மனைவி . மருத்துவர்களிடம் நம்பிக்கையான வார்த்தைகளை எதிர்பார்த்து , ராமலிங்கத்தின் உறவினர்கள் நின்று கொண்டிருந்தார்கள் . அந்த நேரம் பார்த்து , மாத்தூர் கிராமத்தலைவர் தவபுண்ணியம் , மனைவி மரகதம் , மற்றும் மகன் கலையரசனோடு அங்கு வேகமாக வந்திருந்தார் . தவபுண்ணியத்தின் மனைவி மரகதம் , ராமலிங்கத்தின் மனைவிக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லித் தேற்றிக் கொண்டிருந்தார் . கனத்த இதயத்தோடு காத்திருந்தார் தவபுண்ணியம் . திடீரென்று எழுந்த மருத்துவர்கள் , ராமலிங்கம் இறந்துவிட்டதாக அறிவித்தார்கள் . அங்கே மரண ஓலம் ஆரம்பமாயிருந்தது . ராமலிங்கத்தின் மனைவி , கதறிக்கொண்டிருந்தாள் . கண்ணீர் தாரை தரையாக வழிந்து கொண்டிருந்தது . ஏட்டு கந்தசாமியின் முகத்தில் , ஈ ஆடவில்லை . அதிர்ச்சியில் உறைந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . இந்த செய்தியைக் கேட்டுத் திகைத்துப் போயிருந்த தவபுண்ணியம் , சவமாய்க் கிடக்கின்ற தன் நண்பன் ராமலிங்கத்தின் பக்கத்தில் வந்து , தன் தலையில் அடித்துக்கொண்டு , கதறியிருந்தார் .

“ டேய் ! என்ன மட்டும் , தனியா இங்க விட்டுட்டு , நீங்க ரெண்டு பேரும் , போய்ட்டீங்க . என்னையும் , உங்ககூடவே , கூட்டிட்டுப் போயிருக்க வேண்டியதுதானே ! “ என்று மார்பில் அடித்துக் கொண்டு அழுதிருந்தார் . எத்தனையோ பேர் ஆறுதல் கூறியும் , தவபுண்ணியத்தை சமாதானம் செய்ய முடியவில்லை . பார்ப்பவர்களைப் பதற வைத்திருந்தது அந்தக் காட்சி . நேரம் ஆக , ஆக கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது . உறவினர்கள் சடங்குகளுக்கும் , சம்பிரதாயங்களுக்கும் தயாராயிருந்தார்கள் . மணி மதியம் 2 –ஐக் கடந்திருந்தது . பல பந்திகள் பரிமாறப் பட்டிருந்தது . இன்ஸ்பெக்டர் ரவி அந்த வீடு முழுவதையும் , தன் பார்வையால் அலசிக் கொண்டிருந்தார் . அங்கு இருக்கின்ற ஒவ்வொருவரின் , குதிங்காலையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் ஏட்டு கந்தசாமி . ராமலிங்கம் இறந்த செய்தி கேட்டு , அவரின் உறவினர்கள் , நாலாப்புறமும் இருந்து வந்து கொண்டிருந்தார்கள் . பெரியார் மணியம்மை பல்கலைக்கழக , வேளாண் பேராசிரியர் சதாசிவமும் , அங்கு வந்து துக்கத்தில் பங்கேற்றிருந்தார் . இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் அவரிடம் , பேசிக் கொண்டிருந்தனர் . கொஞ்ச நேரத்தில் , NEXTGEN FERTILIZERS LTD உரிமையாளர்களான பிரனேஷும் , திலீபனும் அங்கு இருண்ட முகத்தோடு வந்திருந்தார்கள் . அவர்களைப் பார்க்கப் பார்க்க , தவபுண்ணியம் முகம் உக்கிரமடைந்திருந்தது . இருந்தும் காரியம் நடந்து கொண்டிருக்கின்ற இடத்தில் , கலவரம் வேண்டாம் என்று பொறுமையோடு காத்திருந்தார் . திடீரென்று , தவபுண்ணியத்தின் மகன் கலையரசன் , தவபுண்ணியத்திடம் அழுதுகொண்டே வந்து ,

கலையரசன் : “ அப்பா !! வெண்ணிலாதான்ப்பா !!! இந்த கொலையப் பண்ணது . எனக்கு நல்லாத் தெரியும்ப்பா !!! “ என்றான் . இதை பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவி திடுக்கிட்டுப்போனார் . ஏற்கனவே கோபத்தின் உச்சத்தில் இருந்த தவபுண்ணியம் , இந்த பதிலைக் கேட்டதும் , கடுப்பான அவர் ,

“ பைத்தியகார நாயே ! இன்னும் , அந்த செத்துப் போன பொண்ணு நெனப்பாவே சுத்திகிட்டு திரியற ... எந்த நேரத்துல , எதப் பேசணும்னு உனக்குத் தெரியாது ............ “ என்று அவன் கன்னத்தில் பளார் பளார் என்று அடிக்க ஆரம்பித்தார் ... இது அவங்க குடும்ப விஷயம் என்பதுபோல் , யாரும் அவரைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை .

இன்ஸ்பெக்டர் ரவி இடையில் சென்று , அவரின் கையைப் பிடித்து ,

“ சார் ! விடுங்க சார் ! ஏன் , தோளுக்கு மேல வளந்த பையனப் போய் , இந்த அடி , அடிக்கறீங்க .. “ என்றார் .....

உடனே ரவியின் பக்கம் திரும்பிய , தவபுண்ணியம் ,

“ வாய்யா !!! வா !!! , இதுக்கெல்லாம் நல்லா வக்காலத்துக்கு வந்துடு .... என் பையன நான் அடிப்பேன் .. அதைக் கேக்கறதுக்கு நீ யாருய்யா ??? “ என்றார் கோபத்தோடு ..

ஏட்டு கந்தசாமி இடையில் வந்து , தவபுண்ணியத்தை சமாதானப்படுத்தி ,

“ ஐயா !!! எல்லாரும் பாக்கறாங்க .... கொஞ்சம் பாத்து பேசுங்க .....” என்றார் பௌவ்யமாக ....

இன்னும் கோபம் தணியாத , தவபுண்ணியம் ,

“ என்னத்தய்யா !!! பாத்துப் பேசணும் ...... நேத்து சிவநேசன் , இன்னிக்கு ராமலிங்கம் , நாளைக்கு நானா ??????????? .... நீங்கெல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க .... இதுவரைக்கும் ஏதாவது துப்பு கிடச்சுதா ..... பெருசா சமாதானம் பேச வந்திட்ட ...... போய்யா ...“ என்றார் . ( இன்ஸ்பெக்டர் ரவியின் கண்கள் சிவந்திருந்தது ...)

ஏட்டு கந்தசாமி : “ ஐயா ! விசாரணை போயிட்டு தான் இருக்கிறது . இது கொலையா இருக்குமேயானால் , இன்னும் கூடிய சீக்கிரத்தில கொலையாளியப் புடிச்சுக் காட்டுறோம் ...”

தவபுண்ணியம் : (.... கோபத்துடன் ....) எப்ப ??? நானும் செத்ததுக்கு அப்புறமா ???? .. எனக்கு என்னமோ , இந்த மரணங்கள்ல போலிஸ் தலையீடு , இருக்குமோன்னு சந்தேகமாயிருக்குதுய்யா ?? ” என்றார் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ சார் ! கொஞ்சம் வார்த்தையை , அளந்து பேசுங்க ........ குமாரசாமி , பேய் அடிச்சுத்தான் செத்துப் போயிட்டார்ன்னு , நீங்க சொன்னீங்க ... அப்ப அத நாங்க நம்பினோம் .... இந்த மரணமும் கூட அதே மாதிரி , இருக்கலாமே .. இதை மட்டும் ஏன் , உங்க மனசு ஏத்துக்க மாட்டிங்குது ??? . “ என்று ஆக்ரோஷமாக பேசிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவியைத் தடுத்து நிறுத்திய , ஏட்டு கந்தசாமி ,

“ சார் !!! சாவு வீட்டுக்கு வந்துருக்கோம் ..... இங்க வந்து , சண்டை போடறது அவ்ளோ , நல்லா இல்லை .... எதுவாக இருந்தாலும் , விசாரணையின் முடிவுல , பேசிக்கலாம் ... “ என்று அவரை சமாதானப் படுத்தினார் .... கோபம் தணியாத முகத்துடன் , கைகளைக் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தார் தவபுண்ணியம் ....... இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , ஓரத்தில் இருந்த நாற்காலிகளில் போய் உட்காந்திருந்து , வெறும் யோசனையிலேயே நேரத்தைக் கடத்தியிருந்தார்கள் ..... களைப்பு மிகுதியால் , இன்ஸ்பெக்டர் ரவி அவ்வப்போது , தூங்கித் தூங்கி விழித்துக் கொண்டிருந்தார் . ராமலிங்கத்தின் உறவினர்கள் , வருவதும் , போவதுமாக இருந்தனர் . அவர்களைப் பார்த்துக் கொண்டே , மீண்டும் தன் கண்களை மூடியிருந்த , இன்ஸ்பெக்டர் ரவி திடுக்கிட்டார் ..... நேற்றைய முன்தினம் இரவு , அவருடைய வீட்டில் , பார்த்த , அந்த மர்ம உருவம் திடீரென்று அவர் நியாபகத்துக்கு வந்தது . அதன் நடை , பாவனைகளைக் கொண்ட ஒருவரை , அந்த ஜனக்கூட்டத்தில் , அவருடைய கண்கள் , அவருக்கு அடையாளம் காட்டியிருந்தது ... திடீரென்று , கண்களைத் திறந்து பார்த்த அவர் , ஏட்டுக் கந்தசாமியைக் கூப்பிட்டு , அந்த ஆசாமியை அவருக்கு அடையாளம் காட்டினார் ..

இன்ஸ்பெக்டர் ரவி : “ யோவ் ! கந்தசாமி ! , அங்க நிற்கிற ஆள் யார் ??? “ என்றார் பரபரப்பாக .....

ஏட்டு கந்தசாமி : “ சார் ! அவன் பேர் பொன்னையா !!! தவபுண்ணியம் வீட்டு வேலைக்காரன் சார் ....“ என்றார் ..

இன்ஸ்பெக்டர் ரவி : (... யோசனையிலேயே ....) “ ஹ்ம்ம் !!! “ என்றார் .

(... அடுத்த 2 நிமிடங்களில் , பொன்னையாவையே , பார்த்துக்கொண்டிருந்த ஏட்டு கந்தசாமி சார் ! சார் ! என்று பதறினார்......)

இன்ஸ்பெக்டர் ரவி : “ என்னாச்சு கந்தசாமி ???? எனிதிங் சீரியஸ் ??? “

ஏட்டு கந்தசாமி : “ எஸ் சார் ! அவனோட இடது காலைப் பாருங்க ... “ என்றார் .

சேற்றில் பதிந்திருந்த , அந்த இடதுகால் வெட்டுத் தடயம் , அவன் காலில் இருந்தது அவர்களை மேலும் அதிர வைத்திருந்தது ...... இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் , பார்த்துக் கொண்டனர் .

12

தூத்தூர் போலீஸ் ஸ்டேஷன் , அந்த சாயுங்கால நேரத்திலும் , உச்சகட்ட பரபரப்பில் இருந்தது ....... இன்ஸ்பெக்டர் ரவி , நாற்காலியில் சாய்ந்தபடியே , வாயில் சிகரெட் புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தார் .... சிறை அறையில் இருந்து , “ அய்யோ !! அம்மா !! ” என்று கத்துகின்ற சத்தம் , தொடர்ந்து வந்து கொண்டிருந்தது ..... எரிந்து கொண்டிருந்த சிகரெட்டின் கடைசித் துண்டை , வீசி எறிந்து விட்டு கோபமாக எழுந்த அவர் , நேராக சிறை அறையை நோக்கி , வேகமாக வேகமாக நடந்தார் ....... உள்ளே , வீங்கிய முகத்துடனும் , உடல் முழுக்க இரத்த காயங்களோடும் , கீழே படுக்க வைக்கப் பட்டிருந்தான் பொன்னையா ..... உடம்பின் பல பகுதிகளில் இருந்து , இரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது . இன்ஸ்பெக்டர் ரவியைப் பார்த்ததும் , ஏட்டு கந்தசாமியும் , மற்ற காவலர்களும் பொன்னையாவை , மேலே எழுப்பி , ஒரு நாற்காலியில் உட்கார வைத்திருந்தனர் ... ஒரு குண்டூசி விழுந்தாலும் , சப்தம் கேட்கும் அளவுக்கு , அங்கு அமைதி நிலவியிருந்தது ..... பொன்னையாவின் இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது ... அங்கிருந்த நிசப்தத்தைக் கலைத்தார் இன்ஸ்பெக்டர் ரவி ...

இன்ஸ்பெக்டர் ரவி : “ பொன்னையா ! இப்ப நான் கேக்கிற கேள்விகளுக்கு , உண்மையான பதில , டக்கு டக்குன்னு சொல்லனும் ... இல்ல ,,, விசாரணை முன்பை விட , பயங்கரமா இருக்கும்..... என்ன ?? “ என்றார் .

( சரி என்பதைப் போல தலையை ஆட்டினான் பொன்னையா .....)

பொன்னையாவின் பதில்களை , பதிவு செய்ய , அவன் எதிரே கேமரா ஒன்று வைக்கப்பட்டிருந்தது ..... (... இன்ஸ்பெக்டர் ரவி பேச ஆரம்பித்தார் ...)

இன்ஸ்பெக்டர் ரவி : “ ஹ்ம்ம் !!! பொன்னையா ..... அன்னிக்கு ராத்திரி , என்னோட வீட்டுக் கதவத் தொடர்ந்து , தட்டிகிட்டே இருந்தது ... , அப்புறம் என்ன பாத்த உடனே ஓடினது .... எல்லாமே நீதானே ... சொல்லு என்றார் ....

முகத்தில் வடிந்திருந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு , பொன்னையா பேச ஆரம்பித்தான் ...

“ ஐயா !!! ஆமாங்கய்யா !!! “ நான் தான் ....

இன்ஸ்பெக்டர் ரவி : “ யார் அத பண்ண சொன்னது ????? “

பொன்னைய்யா : “ யாரும் என்ன பண்ண சொல்லல ... நான் தான்யா வேணும்னே பண்ணுனேன் “ என்றான் ...

கேமராவை சற்று நேரம் , ஆப் செய்து விட்டு , அவன் கன்னத்தில் பளார் , பளார் என்று பலமாக அறைந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .... அவர் அடித்த அடியில் , நிலை குலைந்து போயிருந்த பொன்னையா ,

“ ஐயா !! அடிக்காதீங்க !!! எல்லா உண்மையும் நானே என் வாயால சொல்லீறேன்ங்கய்யா !!! தயவு செய்து அடிக்காதீங்க !!! “ என்று கதறினான் .

மீண்டும் கேமராவில் , அவனுடைய பேச்சு , பதிவாகிக் கொண்டிருந்தது .

பொன்னையா : “ குமாரசாமி ஐயாவ , கொலை பண்ணது நான் தான் .. ஆனா அதை பண்ண சொன்னது , தவபுண்ணியம் ஐயாவும் , அவரோட நண்பர்களான சிவநேசனும் , ராமலிங்கமும் தான் .... ஆனா அந்தப் பழிய இறந்து போன , அந்த வெண்ணிலாப் பொண்ணு மேல , போட்டுட்டு , ஊர் மக்கள நம்ப வச்சிட்டோம் ....... நான் அன்னிக்கு , உங்க வீட்டுக் , கதவத் தட்டின மாதிரி , எல்லார் வீட்டுக் கதவையும் , இரவு நேரங்கள்ல தட்டுவேன் ... அதை , பேய் அமானுஷ்யம்னு எல்லாரும் நம்பிட்டாங்க ...

( அவன் பேசிக் கொண்டிருந்தது அனைத்தும் , தெளிவாக அந்த கேமராவில் , பதிவாகிக் கொண்டிருந்தது ... இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , அவனுடைய வாயிலிருந்து வரும் , ஒவ்வொரு வார்த்தையையும் உற்று கவனித்துக் கொண்டிருந்தனர் ... அவனை இடைமறித்த கந்தசாமி , )

ஏட்டு கந்தசாமி : “ வேதாந்த சுவாமிகளுக்கும் , உங்களுக்கும் என்ன தொடர்பு ???? ... “

பொன்னையா : “ சார் !!! மொதல்ல இருந்து , வேதாந்த சுவாமிகளுக்கும் , தவபுண்ணியம் ஐயாவுக்கும் , எந்த விஷயத்திலுமே ஒத்து வராது .... ஆனா இந்த விசயத்தில் மட்டும் , அவர் எப்படி ஒத்துப் போனார்ன்னுதான் இன்னும் எனக்கு தெரியலைங்கய்யா !!! ..... ஆனா , இந்த ஆவி , பேய் விசயத்துல , நாங்க சொன்னதைக்காட்டிலும் , வேதாந்த சுவாமிகள் சொன்னதத்தான் மக்கள் அதிகமாக நம்பினாங்க ..... அதை நாங்களும் , எங்களுக்கு , சாதகமாப் பயன்படுத்திகிட்டோம் ... இந்த கேஸ விசாரிக்க வந்த , பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரத்த , பல வகைல துன்புறுத்தி , இந்த கிராமத்த விட்டே ஓட வச்சிட்டோம் ... அதுக்கப்புறம் தான் நீங்க வந்தீங்க ..... உங்களையும் , இந்த கிராமத்த விட்டே ஓட வைக்கத்தான் , நான் அன்னிக்கு , உங்க வீட்டுக்கு வந்தேன்.. ஆனா நீங்க சுதாரிச்சுட்டீங்க ... ” என்று பேசி முடித்தான் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ சரி ! அதெல்லாம் இருக்கட்டும் ..... ஆனா நீ ...... எதுக்காக , சிவநேசனையும் , ராமலிங்கத்தையும் கொலை பண்ணின ?? அவங்க கூடவே இருந்த நீ , எதுக்கு அவங்கள கொலை செஞ்ச ????? அவங்களுக்கும் உனக்கும் அப்படியென்ன , தனிப்பட்ட பிரச்சனை ??

(.... மௌனமாக இருந்தான் பொன்னையா .....)

ஏட்டு கந்தசாமி : “ எதுக்காக அவங்கள நீ கொலை பண்ணின ? .... நீ கொலை பண்ணதுக்கான ஆதாரங்கள் எங்க கிட்ட இருக்குது .... மரியாதையா உண்மைய சொல்லிடு .... உனக்கு பின்னாடி , யார் யாரெல்லாம் இருக்கா ???? உன்னோட அடுத்த குறி யாரு ???? தவபுண்ணியம் தானே .... சொல்லு !!!...... “ .

பொன்னையா : “ அவங்க , ரெண்டு பேர்த்தையும் , கொலை பண்ண சொன்னதே , தவபுண்ணியம் ஐயா தான் ...... “ என்றான் கோபமாக .

(... அதிர்ந்து போயிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் ...)

இன்ஸ்பெக்டர் ரவி : “ என்ன ??? தவபுண்ணியமா ??????? அவர் எதுக்காக அவருடைய நண்பர்களையே ????? .......... “ என்றார் .

பொன்னையா : “ இதுவரைக்கும் நாங்க பண்ண எல்லாமே சரியாத்தான் நடந்துட்டு வந்துச்சு ... ஆனா நாங்க எதிர்பாராத ஒன்னு , என்னன்னா ??? அது உங்களோட விசாரணை தான் .... நீங்க விசாரிக்கிறதப் பார்த்த , இன்னும் கொஞ்ச நாள்லயே , தவபுண்ணியத்த நெருங்கிருவீங்களோன்னு , பயந்து தான் ... அவர் ஒரு திட்டம் போட்டார் ... அதன்படி தான் , இந்த கேஸ திசை திருப்புவதற்காக , சிவநேசனையும் , ராமலிங்கத்தையுமே , அவர் கொலை பண்ண முடிவெடுத்தார் ... அவங்கள கொலை பண்ணிட்டா , இந்த கேஸ் மறுபடியும் , ஆவி , அமானுஷ்யங்கற கோணத்திலேயே , இன்னும் கொஞ்ச நாளைக்கு , இழுத்தடிக்கும் ... அதனால தான் , அவர் இதை பண்ண சொன்னார் ...”

(... இன்ஸ்பெக்டர் ரவி , தன் கன்னத்தில் கை வைத்து , பொன்னையாவையே பார்த்துக் கொண்டிருந்தார் .... அவனிடம் , ஆர்வமாக , அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டுகொண்டிருந்தார் கந்தசாமி ...)

ஏட்டு கந்தசாமி : “ SO , ஒரு கொலைய மறைக்கறதுக்காக , நீங்க ரெண்டுபேரும் , அடுத்தடுத்து ரெண்டு கொலை பண்ணீருக்கீங்க ..... நாளைக்கு , உங்க ரெண்டு பேரையும் , உங்க ஊர்க்காரங்க முன்னாடி , அடிக்கிற அடியில , தவபுண்ணியத்தோடு வாயிலயிருந்தே , எல்லா உண்மையையும் , வெளில கொண்டு வர்றோம் .... “

(... அதை நினைத்து , அதிர்ந்து போன பொன்னையா ... உடனே ...)

பொன்னையா : “ சார் ! சார் ........ ! நான் அவங்கள கொலை பண்ணத்தான் , அங்க போனேன் ... ஆனா அவங்க ரெண்டு பேருமே , என்னைப் பார்த்த உடனே , எதோ ஒரு அதிர்ச்சியிலயே செத்துட்டாங்க ... நான் அவங்கள கொலை பண்ணல சார் !!! நான் நிரபராதி ..... என்ன விட்டுடுங்க சார் !!! .. நான் புள்ளகுட்டிக்காரன் .... எனக்கு குடும்பம் இருக்குங்க சார் !!! ... “ என்று திரும்பத்திரும்ப இதையே சொல்லி , அவர்கள் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான் ....

இன்ஸ்பெக்டர் ரவி : (.... உக்கிரமான முகத்துடன்....) “ அப்ப ..... செத்துப் போனவங்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா ???? ... “ என்று மீண்டும் , ஆத்திரம் தீரும் அளவுக்கு அவனை அடித்துவிட்டு , வெளியே வந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் “ ....

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் , அவனை விசாரணை செய்திருப்பார்கள் .... மணி 9 –ஐத் தொட்டிருந்தது ... இருவரும் ஸ்டேஷனுக்கு வெளியே வந்து , சிகரெட்டைப் பற்ற வைத்து , புகையை ஊதித் தள்ளியிருந்தனர் ...

ஏட்டு கந்தசாமி : “ சார் ! எப்ப சார் ??? நாம , தவபுண்ணியத்த கைது பண்ணப் போறோம் ??? “

இன்ஸ்பெக்டர் ரவி : “ நாளைக்கு காலைல , சரியா 9 மணிக்கு , பொதுமக்கள் முன்னாடியே , தவபுண்ணியத்தோட கையில , விலங்க மாட்டி , ஸ்டேஷனுக்கு , இழுத்துட்டு வரப் போறோம் .... அதுக்கு அடுத்தபடியா , அன்பாலய வேதாந்த சுவாமிகளையும் கைது பண்ணி , ஸ்டேஷன்ல வெச்சு வெளுத்தா எல்லா உண்மையும் வெளில வந்துரும் .... இன்னிக்கு ஒரு நாள் ராத்திரி மட்டும் , நீங்க ஸ்டேஷன்லயே இருங்க ... ஏன்னா .... பொன்னையாவ கொஞ்சம் பத்திரமா பாத்துக்கணும் “ ... என்னால முடியல . ரொம்ப நாளைக்கு அப்புறம் , இன்னிக்குதான் நான் நல்லா தூங்கப் போறேன்னு நெனைக்கிறேன் ... “ என்றார் சிரித்துக்கொண்டே ...

ஏட்டு கந்தசாமி : “ சார் ......! அதெல்லாம் நான் பாத்துக்கறேன் சார் .... நீங்க வந்ததுக்கப்புறம் தான் இந்த ஊருக்கும் , இந்த கேஸ்க்கும் , ஒரு விடிவு காலமே பொறந்திருக்குது ... உங்களுக்காக இதைக் கூட , நான் பண்ண மாட்டெனா ??? “ என்றார் ...

இன்ஸ்பெக்டர் ரவி : “ இல்ல கந்தசாமி ..... நீங்க இல்லைன்னா .... இதப் பண்ணீருக்க முடியாது ..... நீங்க உங்க குடும்பத்தக் கூட , பாக்காம , இந்த மூணு நாளா , என்கூடவே இருந்தீங்க ... அதனால தான் , இதப் பண்ண முடிஞ்சது ... “ என்றார் பெருமிதத்தோடு ....

ஏட்டு கந்தசாமி : “ சார் ! இன்னைல இருந்து , நானும் உங்களமாதிரி ஒரு நாத்திகன் சார் ..... “ என்றார் கர்வத்தோடு .....

இன்ஸ்பெக்டர் ரவி : (... சிரித்துக்கொண்டே ...) “ அடப்போய்யா..... “ என்று சொல்லிக்கொண்டே , தன் வீட்டுக்கு கிளம்பியிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

13

இருபது நிமிடப் பயணத்தில் ,,,,, வீட்டை அடைந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி ... எதையோ சாதிருந்த மகிழ்ச்சி , அவர் முகத்தில் தெரிந்திருந்தது . அடுத்தநாள் காலையில் செய்ய , வேண்டிய பணிகளைப் பற்றியே , அவரது சிந்தனை இருந்தது .... அதே யோசனையிலேயே இரவு உணவை , முடித்திருந்தார் .... வழக்கம் போல , கிரைம் நாவல்களை , அவர் வீட்டுப் புத்தகக் கிடங்கில் , தேடிக்கொண்டிருந்தார் .... பிரபல எழுத்தாளர் நடேசனின் , “ மரணத்துக்கு அப்பால் ” என்ற நாவலை எடுத்துப் புரட்ட ஆரம்பித்திருந்தார் ... மனிதனின் மரணத்துக்குப் பிறகு , நடக்கக் கூடிய சம்பவங்களை ஒட்டி , மிக விறுவிறுப்பாகவும் , பரபரப்பாகவும் சென்று கொண்டிருந்தது அந்த நாவலின் கதைக்களம் ... நிறைவேறாத ஆசையுடன் கூடிய ஆன்மாக்கள் , மீண்டும் கடந்து வந்த பாதைகளைகளியே , சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் , என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருந்தார் அந்த நாவலாசிரியர் நடேசன் ... பாதிப் பக்கங்களைப் புரட்டியிருப்பார் .... திடீரென அவர் வீட்டுக் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது .... இந்த நேரத்தில் யாராக இருக்க முடியும் ??? என்று யோசித்துக் கொண்டே , கையில் டார்ச்சையும் , ரிவால்வரையும் எடுத்துக் கொண்டு , கதவுப் பக்கத்தில் சென்றார் ... கதவு வேகமாக தட்டப்பட்டுக் கொண்டிருந்தது .... மின்னல் வேகத்தில் , கதவைத் திறந்தார் ரவி ... வெளியே ஆள் அரவமற்று இருந்தது ... சற்றே திடுக்கிட்டுப் போனார் இன்ஸ்பெக்டர் ரவி ... வெளியே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு , கதவுப் பக்கம் திரும்பிய அவரின் அடுத்த வினாடி , திடீரென்று , ஏதோ ஒரு உருவம் , வேகமாக அவரைக் கடந்து செல்வதைப் போல் இருந்தது ... பயத்தில் உறைந்திருந்த அவர் , உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டார் .... அந்த நேரம் பார்த்து , மீண்டும் மின்சாரம் வந்து , வந்து போய்க்கொண்டிருந்தது .... டார்ச் விளக்கை , தயாராகவே வைத்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி ... உள்ளே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் ... ஒரு கட்டத்தில் , மின்சாரம் முற்றிலுமாக நின்றிருந்தது ... டார்ச் விளக்கை அடித்துக் கொண்டே , முன்னேறியிருந்தார் ... யாரோ , தன்னைப் பின் தொடர்வதைப் போல அவர் உணர்ந்தார் ..... பயத்தின் உச்சத்தில் இருந்த அவருக்கு , உடல் முழுக்க வியர்த்து வழிந்திருந்தது .... அவரின் வலதுபுறமாக கண்ணாடிக்குப் பக்கத்தில் , யாரோ நிற்பது போல் இருந்தது .... டார்ச்சை வலதுபுறமாகத் திருப்பிய அவர் , அரண்டு போயிருந்தார் ... தலைவிரிக் கோலத்தில் , ஒரு பெண் குனிந்து , அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்ததை , அந்தக் கண்ணாடி அவருக்கு அடையாளம் காட்டியிருந்தது ... யார் .... யார்ரர்ர்ரு ????? என்று உளற ஆரம்பித்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .... குனிந்திருந்த அந்த முகம் , திடீரென நிமிர்ந்து , அவரைப் பார்த்து சிரித்தது ... சப்த நாடிகளுமே அடங்கிப் போயிருந்தது அவருக்கு ... கோர முகத்துடன் , இறந்து போயிருந்த வெண்ணிலாதான் அங்கு நின்று கொண்டிருந்தாள் ... மீண்டும் மின்சாரம் வந்திருந்தது .... அந்த உருவம் மறைந்திருந்தது .... அவருடைய மனம் படபடத்திருந்தது ... அந்தக் கண்ணாடியில் , எதோ குறிப்பு , எழுதியிருப்பதைப் போல அவருக்குத் தெரிந்தது .... அதைப் பக்கத்தில் சென்று , படிக்க ஆரம்பித்த அவர் அதிர்ந்து போனார் ....

“ ... தவபுண்ணியத்தின் கடைசி அரைமணி நேரம் ...“ என்று அதில் எழுதப்பட்டிருந்தது .... அப்பொழுது தான் பொன்னையா சொன்ன , பதில்கள் அவருக்கு நியாபகம் வந்திருந்தது ... சிவநேசனையும் , ராமலிங்கத்தையும் , வெண்ணிலாவின் ஆவிதான் பழி வாங்கியிருகிறது என்பதை , அவர் உணர்ந்தார் ... பதற்றத்துடன் தவபுண்ணியத்தின் , தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டார் .... ரொம்ப நேரமாகவே , அழைப்பு மணி அடித்துக் கொண்டிருந்தது ... யாரும் எடுத்த பாடில்லை ... போலிஸ் ஜீப்பில் ஏறியிருந்த , அவர் மீண்டும் மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார் .... “ THE NUMBER YOU ARE TRYING TO REACH IS NOT ATTENDING THE CALL .. PLEASE TRY AGAIN LATER “ என்ற பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் பேசியிருந்தது .... போலீஸ் ஜீப்பை வேகமாக செலுத்தியிருந்தார் .... ஏட்டு கந்தசாமியின் எண்களைத் தொடர்பு கொண்டார் .... வெகுநேரமாகியும் அவரிடமிருந்தும் ஒரு பதிலுமில்லை ... அவருக்கு “ CALL ME – URGENT ” என்று MESSAGE அனுப்பிருந்தார் ... குழப்பத்தின் உச்சத்தில் , போலிஸ் ஜீப் புயலாகக் கிளம்பியிருந்தது .... அந்த நேரம் பார்த்து அவருக்கு , அன்பாலாய வேதாந்த சுவாமிகளின் நியாபகம் வந்திருந்தது ... தேடித்பிடித்து அவருடைய எண்களைத் தட்டினார் .. மறுமுனையில் , தொடர்ந்து ரிங் போய்க் கொண்டிருந்தது .. கடைசி நேரத்தில் , போனை எடுத்திருந்தார் வேதாந்த சுவாமிகள் ....

இன்ஸ்பெக்டர் ரவி : ( ... பதற்றத்தில் ...) சுவாமிஜி !!! சுவாமிஜி !!! என்று பதறினார் .... அவரின் பதற்றத்தைப் புரிந்து கொண்ட சுவாமிகள் ,

வேதாந்த சுவாமிகள் : “ என்னாச்சு ரவி ??? ஏதாவது அமானுஷ்யத்தைப் பார்த்தீங்களா???? என்றார் படபடப்பாக ...

( .. இன்ஸ்பெக்டர் ரவி , நடந்த அனைத்தையும் சொல்ல , வேதாந்த சுவாமிகள் அன்பாலயத்தில் இருந்து புறப்பட்டிருந்தார் ...) . இந்தமுறை , தவபுண்ணியத்தின் வீட்டுத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டார் ரவி ...

மீண்டும் ரிங் போய்க் கொண்டிருந்தது ... “ COME – ON , PICK-UP , PICK-UP .... என்று இன்ஸ்பெக்டர் ரவியின் உள்ளுணர்வு அடித்துக் கொண்டிருந்தது .. ஒரு வழியாக போன் எடுக்கப் பட்டிருந்தது ....

“ ஹலோ !!! என்றார் இன்ஸ்பெக்டர் ரவி .... மறுமுனையில் இருந்த குரலும் ஹலோ என்றது ..... தவபுண்ணியத்தின் மகன் கலையரசன் பேசினான் ..... ( ... இன்ஸ்பெக்டர் ரவி சற்றும் எதிர்பாராமல் கலையரசனிடம் .... )

இன்ஸ்பெக்டர் ரவி : “ .... கலையரசன் .... நான் இன்ஸ்பெக்டர் ரவி பேசுறேன் ... உங்க அப்பாவ ஜாக்கிரதையா பார்த்துக்கோ .... வெண்ணிலாப் பொண்ணோட ஆவி , இன்னிக்கு உங்க , அப்பாவ பழி வாங்க காத்துட்டு இருக்குது .... நான் இப்ப அங்க தான் வந்துட்டே இருக்கேன் ... என்றார் ...“

கலையரசன் : “ சார் !!! என்ன சார் சொல்றீங்க .... என் வெண்ணிலா , என் அப்பாவ கொலை பண்ணப் போறாளா ???? “ என்று சிரித்தான் ...

இன்ஸ்பெக்டர் ரவி : “ தம்பி இது ரொம்ப சீரியஸான விஷயம் ... விளையாடாத ... உங்க அப்பாவப் போய்ப் பாரு என்றார் வண்டியின் வேகத்தோடே .......“

கலையரசன் : “ சார் !!! நீங்க தான் சார் ...விளையாடறீங்க .... வெண்ணிலா என் கூட தான் , இப்ப உட்கார்ந்து பேசிகிட்டிருக்கிறாள் .. “ என்றான் ...

(.... அதிர்ந்து போயிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி , இணைப்பைத் துண்டித்து விட்டு , வண்டியின் வேகத்தைக் கூட்டீனார் ...) அடுத்த 5 நிமிடத்தில் , ஏட்டு கந்தசாமியிடம் இருந்து போன் வந்தது ... நடந்த விவரங்களை அவரிடமும் சொல்ல , கந்தசாமியும் கான்ஸ்டபிள்களோடு அங்கு புறப்பட்டிருந்தார் ... தவபுண்ணியத்தின் வீட்டை அடைந்த இன்ஸ்பெக்டர் ரவி , ஜீப்பை , வெளியே அவசர அவசரமாக பார்க் செய்து விட்டு , வீட்டு GATE- ஐத் திறக்க முயற்சித்தார் .... கடினமான பூட்டால் , பூட்டப் பட்டிருந்த அந்த GATE-ஐ எளிதில் , திறக்க முடியவில்லை ... மீண்டும் மீண்டும் முயற்சித்து , ஒரு வழியாக GATE –ஐ உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அவர் , அந்த வீட்டுக் கதவை வேக வேகமாகத் தட்டினார் ..... உள்ளேயிருந்து பதில் இல்லை ... வீட்டுத் தொலைபேசிக்கும் , விடாமல் தொடர்பு கொண்டிருந்தார் ... அந்த நேரம் பார்த்து , வேதாந்த சுவாமிகள் தன்னுடைய சீடர்களுடன் வந்திறங்கினார் ... சீடர்கள் வேகவேகமாக உள்ளே வந்து , கதவைத் திறக்க முயற்சித்தார்கள் ... நிலைமையை உணர்ந்த வேதாந்த சுவாமிகள் , தன் பிரார்த்தனையால் , கதவைத் திறக்க முற்பட்டிருந்தார் ,, பதறிப் போயிருந்த இன்ஸ்பெக்டர் ரவி , அந்த வீட்டு ஜன்னல்களை கற்களைக் கொண்டு உடைக்க முற்பட்டார் .... அவர் எவ்வளவோ , முயற்சிகள் செய்தும் , அவரால் அதை உடைக்க முடியவில்லை .. அந்த இடம் முழுவதுமே , வெண்ணிலாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது ... அந்த நேரம் பார்த்து , ஏட்டுக் கந்தசாமியும் , தன் போலிஸ் படையுடன் வந்து , இவர்களுக்கு உதவ முற்பட்டிருந்தார் ... அந்த இடம் முழுவதுமே , ஒரே பதற்றம் நிலவியிருந்தது .... கொஞ்ச நேரத்தில் , சப்தம் கேட்கக் கேட்க , ஊர்மக்களும் தவபுண்ணியத்தின் வீட்டில் கூடியிருந்தனர் ... ஒரு கட்டத்தில் , வேதாந்த சுவாமிகளின் இடைவிடாத பிரார்த்தனையால் , கதவு படாரென்று திறந்தது .... உள்ளே தவபுண்ணியத்தின் வீடே இருண்டிருந்தது ... தயாராக வைத்திருந்த அகல் விளக்குகளோடு , வேதாந்த சுவாமிகளின் சீடர்கள் , உள்ளே நுழைந்து , வீடு முழுவதும் தீபங்களை ஏற்றியிருந்தனர் ... இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் முதலில் உள்ளே செல்ல , வேதாந்த சுவாமிகளும் , ஊர் பெரியவர்களும் பின்னே சென்றிருந்தனர் .. வீட்டின் நடு ஹாலில் , வேதாந்த சுவாமிகள் , இரவு 12 மணிக்குப் பண்ண வேண்டிய , அர்த்த சாம யாகத்தை இப்பொழுதே தொடங்கியிருந்தார் ... தீப ஒளியின் வெளிச்சத்தால் , வீடு முழுவதையும் சல்லடை போல சலித்துக் கொண்டிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , அவரைச் சுற்றியிருந்தவர்களும் ... உள்ளே ஒரு ஓரத்தில் , தவபுண்ணியத்தின் மனைவி மரகதமும் , மகன் கலையரசனும் , எதுவும் பேச முடியாமல் , பிரம்மை பிடித்தவர்கள் போல அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்... ஏட்டு கந்தசாமி , அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தார் ... அவர்கள் மேலேயே அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர் ... சட்டென்று மேலே பார்த்த ரவி , பதறினார் .... எல்லாருடய கண்களும் , மேலே பார்க்க , அந்தரத்தில் தவபுண்ணியத்தின் உடல் ஊசலாடிக் கொண்டிருந்தது ... வேதாந்த சுவாமிகள் , மந்திர உச்சாடனங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தார் ... உள்ளே இருக்கின்ற பொருட்களெல்லாம் , நாலாப்புறமும் ஓடி , சிதறிக் கொண்டிருந்தன .... ஆனால் அன்பாலய அகல் விளக்குகள் மட்டும் , எந்த சலனமுமின்றி அதே ஒளியை விடாது தந்து கொண்டிருந்தது ... அடுத்த பத்தாவது நிமிடத்தில் , தவபுண்ணியத்தின் வீட்டை , தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார் வேதாந்த சுவாமிகள் ... மேலே சுற்றிக் கொண்டிருந்த தவபுண்ணியத்தின் உடல் , திடீரென பொத்தென்று கீழே விழுந்தது ... எல்லாரும் சென்று அவரைப் புரட்டிப் பார்க்க , அவர் சடலமாகத் திரும்பி வந்திருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது .. வீட்டுக்குள் வீசிக்கொண்டிருந்த புயல் , ஒரு வழியாக நின்றிருந்தது ... சுயநினைவுக்குத் திரும்பிய , மரகதமும் , கலையரசனும் , தன் தந்தையின் உடலைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தனர் ... கண் விழித்திருந்தார் வேதாந்த சுவாமிகள் .... தவபுண்ணியத்தின் உயிரைக் காப்பாற்ற முடியாத சோகத்தை , அவரிடம் பார்க்க முடிந்தது ... துக்கமான முகத்துடன் , வெளியே கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் ... வேதாந்த சுவாமிகள் , வீட்டிலிருந்து வெளியே வர , ஜனக்கூட்டம் , தவபுண்ணியத்தின் வீட்டை மொய்த்திருந்தது ... மரண ஓலம் அங்கு விண்ணைப் பிளந்திருந்தது .... இன்ஸ்பெக்டர் ரவியின் பக்கத்தில் வந்த , வேதாந்த சுவாமிகள் ,

“ ரவி !!! நானும் எவ்வளவோ ! முயற்சி பண்ணிப் பார்த்தேன் ... தவபுண்ணியத்தக் காப்பாத்த முடியல ... இந்தப் பிறவியில் , அவன் பண்ணின , பாவங்களிலிருந்து அவனை மீட்டேடுக்கவே முடியல .... இதைத் தான் பெரியவங்க , முற்பகல் செய்யின் , பிற்பகல் விளையும்ன்னு “ சொன்னாங்க என்றார் வருத்தத்துடன் ....

இன்ஸ்பெக்டர் ரவி : “ மன்னிச்சுக்கங்க சுவாமிஜி !!! உங்கள நான் தப்பான கோணத்திலயே வச்சுப் பாத்துட்டேன் ... உங்க பேச்சையெல்லாம் உதாசீனப்படுத்திட்டேன் ... இப்பதான் நான் உண்மையப் புரிஞ்சுகிட்டேன் ... என்ன மன்னிச்சிருங்க !!! “ என்றார் ...

வேதாந்த சுவாமிகள் : “ நான் தான் அப்பவே சொன்னேனே ரவி ,

“ ஆன்மீகமும் , அமானுஷ்யமும் .... அறிவியலுக்கு அப்பாற்பட்டதுன்னு . “.. என்றார் ...

ஏட்டு கந்தசாமி : “ சார் ! நாம அடுத்து எங்க சார் போறோம் ...” என்றார் ..

இன்ஸ்பெக்டர் ரவி : “ அன்பாலயத்துக்கு ....... “ என்றார் பூரண நம்பிகையையோடு ....

.............................................. 15 – நாட்களுக்குப் பிறகு .............................................

இன்ஸ்பெக்டர் ரவிக்கு , மீண்டும் ட்ரான்ஸ்பர் வந்திருந்தது .... ஏட்டுக் கந்தசாமி வருத்தத்துடன் விடை கொடுத்திருந்தார் ... NEXTGEN உரம் தயாரிப்பு நிறுவனம் , தன்னுடைய உரங்களை மறுசீரமைப்பு செய்து கொண்டு , இயற்கையான வழியிலேயே , உரங்களைத் தயாரித்திருந்தார்கள் ... வேளாண் பேராசிரியர் சதாசிவம் , குமாரசாமி ஐயாவின் , கருத்துக்களைத் தொகுத்து , “ விவசாயமும் , அதன் அவசியமும் “ என்கின்ற நூலை வெளியிட்டிருந்தார் ....

-- முற்றும் –

இந்த நாவல் உங்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்கை அளித்திருக்கும் என்று நான் நம்புகிறேன் . முடிந்தால், உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . உங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கிறேன் .

இப்படிக்கு

பூபதி கோவை,

boopathycovai@gmail.com,

+91-7299543057