Scout books and stories free download online pdf in Tamil

ஒற்றன்

ஒற்றன் : -

விடியற்காலை 6 மணி. மார்கழி மாதப் பனி, துடியலூர் கிராமம் முழுவதையும் போர்வை போல போர்த்தியிருந்தது . ஆங்காங்கே தெரு விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக் கொண்டிருந்தன . பொதுமக்கள் ஒருவர் பின் ஒருவராக டீக்கடையை நோக்கி படையெடுத்தவண்ணம் இருந்தனர். அங்கே பெருசுகள் ஆளுக்கொரு பக்கமாக செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருந்தார்கள் . தலையங்க செய்தியை உரக்கமாக வாசிக்கத் தொடங்கினார் ராமசாமி பெருசு .

“ஆளுங்கட்சியைச் சேர்ந்த துடியலூர் சட்டமன்ற உறுப்பினர் மார்த்தாண்டம் மாயம் . போலீஸ் தேடுதல் வேட்டையில் தீவிரம் ” .

டீக்கடையில் இருந்த அத்தனை பெருசுகளும் ஒரு சேர, ராமசாமியையே பார்க்க, அவர் மேலும் படிக்க தொடங்கினார்.

மார்த்தாண்டம் வயது (52) .கோவை துடியலூர் தொகுதியில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் . கட்சியில் மிகுந்த செல்வாக்கு கொண்ட இவர், நேற்று இரவு 8 மணியளவில் தன் பண்ணை வீட்டுக்குச் சென்று விட்டு, வீடு திரும்பும்போது அவர் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . அவருடன் கார் டிரைவர் கதிரேசனும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . நேற்று இரவு முதல் அவரது வீடு மற்றும் பண்ணை வீடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர் . அவர் கடத்தப்பட்டாரா ? இல்லை தலைமறைவானாரா? என்கின்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் துடியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது” . என்று படித்து முடித்தார் ராமசாமி. கூட்டத்தில் இருந்த பெருசு ஒன்று தன் பங்கிற்கு , என்னய்யா இது அநியாயம் ! ஆளுங்கட்சி MLAவ காணமாம் ! போன எலெக்சன்ல(election) ஓட்டு கேக்க வரும்போது, தோள்ல துண்டோடு பாத்தது . இப்ப தலைப்புச் செய்தில வர்ற அளவுக்கு பிரபலமாயிட்டாரே ! என்று சிரித்தார் . அப்படியே இதைப்பற்றி பேசிக்கொண்டு ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர் . டீக்கடை பெஞ்ச் காலியானது .

-------------------------------

2

நேரம் காலை 10 மணியைத் தாண்டியிருந்தது . MLA மார்த்தாண்டம் வீட்டுக்கு முன்பே மிகப்பெரிய ஜனக் கூட்டமிருந்தது . போலீஸ் வாகனங்கள் ஒலி விளக்குகளோடு நிறுத்தபட்டிருந்தன . கட்சிக் கரை வேஷ்டிகளுடன் ஆளுங்கட்சி தொண்டர்கள் ஒருபுறம், கவலை தோய்ந்த முகங்களுடன் காணப்பட்டனர் . மீடியாக்கள் தங்கள் பசிக்காக வருகிற போகிறவர்களையெல்லாம் வலுக்கட்டாயமாக, பேட்டி எடுத்துக்கொண்டிருந்தனர் . துக்கமும் கண்ணீருமாக மார்த்தாண்டத்தின் மனைவி நிர்மலா , நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.

நிருபர் 1 : மேடம் கடைசியா அவர் உங்ககிட்ட எப்ப பேசினார் ? என்ன சொன்னார் ?

நிர்மலா : பதில் சொல்வதற்கு முன்பே கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்று போல் கொட்டிக்கொண்டிருந்தது . அவர் பண்ணை வீட்ல இருந்து கிளம்பிட்டதாகவும் , சீக்கிரம் வந்திடறேனும் சொன்னார் .

நிருபர் 2 : மேடம் ! உங்களுக்கு தெரிஞ்சு அவருக்கு யாரவது அரசியல் எதிரிகள் இருக்கிறாங்களா ? நீங்க யார் மேலயாவது சந்தேகப்பட்றீங்களா ?

நிர்மலா : (சற்று கோபமான தொனியுடன்) எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவருக்கு எதிரிகள் என்று யாரும் கிடையாது . இன்னும் அவருக்கு என்ன ஆச்சுன்னே யாருக்கும் தெரியல. அவர் கண்டிப்பா திரும்பி வந்திடுவார்னு நம்பிக்கை எனக்கு இருக்கு. மேலும் மேலும் கேள்வி கேட்டு என் வேதனையை அதிகரிக்காதீங்க . தயவு செஞ்சு என்னை கொஞ்சம் தனியா விடுங்க என்று சொல்லிவிட்டு அழுது புலம்பியபடியே வீட்டை நோக்கி நடந்தார். அந்த நேரம் பார்த்து ஆளுங்கட்சியின் சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சர் புண்ணியகோடி, தன் சகாக்களுடன் ஸ்கார்பியோ காரில் வந்து இறங்கினார் . அங்கே நின்றிருந்த போலீஸ் அதிகாரிகள், அவரைப் பார்த்தவுடன் சல்யூட் அடித்து விட்டு, அங்கிருந்த ஜனக் கூட்டத்தை அப்புறப் படுத்திக் கொண்டிருந்தனர் . அவர் உள்ளே நுழைந்ததும் , எதிரே வந்த துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, அவரைப் பார்த்து சல்யூட் அடித்துவிட்டு குட் மார்னிங் சார் என்றார் . உடனே அமைச்சர் புண்ணியகோடி வெறுப்புடன் , குட் மார்னிங் எல்லாம் இருக்கட்டும் ! ஏதாவது நம்பத்தகுந்த தகவல் இருக்கா? இதுவரைக்கும் என்ன க்ளு கெடைச்சிருக்கு ? என்றார்?

சார் அவரோட மொபைல் நம்பர trace பண்ணிட்டு இருக்கோம், இப்ப அது கடைசியா பாரதியார் பல்கலைக் கழகத்துக்கும் , மருதமலைக்கும் இடையே இருக்கிற ஒரு டவர்ல இருந்து ஒரு சிக்னல் கிடைச்சிருக்கு . அந்த இடத்த செக் பண்றதுக்காக எங்க டீம் அங்க போயிருக்காங்க. சோ! கூடிய சீக்கிரமே ஒரு நல்ல தகவல நாம எதிர்பாக்கலாம் சார் என்றார் இன்ஸ்பெக்டர் ரவி.

என்ன கருமத்த வேணாலும் பண்ணுங்க ! எனக்கு சீக்கிரம் ஒரு நல்ல நியூஸ் வர்றனும் என்று கறாராக சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் அமைச்சர் புண்ணியகோடி .

மார்த்தாண்டம் வீட்டு உறவினர்கள், நிர்மலாவுக்கு சற்றே ஆறுதலான வார்த்தைகளை சொல்லி தேற்றிக்கொண்டிருந்தனர் . அமைச்சர் புண்ணியகோடியைப் பார்த்ததும் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் வைத்தனர் .

நீ ! ஒன்னும் கவலைப்படாதமா ! மார்த்தாண்டத்துக்கு ஒன்னும் ஆகாது. அவன் எங்கிருந்தாலும் அவனை கொண்டுவந்து பத்திரமா சேர்ப்பது என்னோட பொறுப்பு . உன்னோட வருத்தத்தில் எனக்கும் பங்குண்டு. இத்தனைக்கும் மேல அவன் என் நண்பன் . என்று ஆறுதல் கூறினார்.

போலீஸ் காரில், ACயை ஆன் பண்ணிட்டு, சீட்டில் சாய்ந்து கொண்டு, சிறிதே கண்ணயர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி. அந்த நேரம் பார்த்து அவர் பாக்கெட்டில் இருந்த செல்போன் கதறியது. எடுத்து பார்த்த அவர் ஹலோ என்றார். மறுமுனையில் இருந்த குரல் , சார் ! நான் சப்-இன்ஸ்பெக்டர் குமார் பேசுறேன் .

சொல்லுங்க குமார் ! என்ன அவர trace பண்ணிடீங்களா ? .

நோ சார் ! இன்னும் இல்ல . இப்ப வரைக்கும் நாங்க மருதமலை TO பாரதியார் யுனிவர்சிட்டி ஏரியா fullah செக் பண்ணிட்டோம் . அந்த சிக்னல் இப்ப என்னாச்சு? எதுவுமே புடிபடல .

ஓ ! shit… ஓகே குமார் .. நான் அதுக்குள்ள துடியலூர் எதிர்கட்சி தலைவர் சிங்காரத்த பார்த்துட்டு வந்துடறேன் என்று சொல்லி லைனை துண்டித்தார் ரவி.

3

துடியலூரின் எல்லையில் இருந்தது சஞ்சீவி பிரைவேட் ஹோஸ்பிடல் . மிகப் பிரமாண்டமாக, கிட்டத்தட்ட 25 ஏக்கர்களை வளைத்துப் போட்டபடி, இருந்தது அதனுடைய உட்கட்டமைப்பு . மருத்துவமனையின் உட்புற சுவர்களில், விருதுகளை கையில் பிடித்தபடி டாக்டர் குணசேகரனின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அவரின் அறையில் இருந்து பெல் சப்தம் கேட்டது . அமர்ந்திருந்த நோயாளிகள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே சென்ற வண்ணம் இருந்தனர் . குணசேகரன் . வயது 55இன் விளிம்பில் இருக்கும் . வட்டமான சிரித்த முகம் . ஒரு நோயாளியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை கம்ப்யூட்டர் திரையில் பார்த்துக் கொண்டிருந்த அவர் , சற்றே முகம் மாறினார் . உடனே பக்கத்தில் இருந்த டெலிபோனில் இருந்து எண்களைத் தட்டினார் . மறுமுனையில் NURSE சகுந்தலா பேசினாள் .

சார் GOOD Evening ! . WHAT SHALL I DO FOR YOU NOW ?

டாக்டர் குணசேகரன் : போன மாசம் MARTURYக்கு போன நோயாளிகள் லிஸ்டும் , அவங்களோட மெடிக்கல் ரெகார்ட்ஸ்ம் எனக்கு வேணும் . ப்ளீஸ் GET இட் IMMEDIATELY .

NURSE சகுந்தலா : எஸ் சார் ! I ‘ll BE THERE IN 1௦ MINUTES WITH RECORDS . என்றவுடன் மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப் பட்டது .

குணசேகரன் கம்ப்யூட்டர் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் . 1௦ நிமிடத்தில் NURSE சகுந்தலா மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் உடன் டாக்டர் குணசேகரனின் அறையில் பிரவேசித்தாள் . ரிப்போர்ட்டை

கையில் வாங்கியவுடன் , பட படப்புடன் அதைப் புரட்டினார் . ஒவ்வொரு இறந்த நோயாளியின் ரிப்போர்டையும் , கவனமாகப் பார்த்த அவர் , சகுந்தலாவின் பக்கம் திரும்பி , சகுந்தலா ! நேத்து முத்துச்சாமிங்கற ஒரு PATIENT இறந்திருக்காரு . அதப் பத்தி என்ன நெனக்கிறீங்க ? அவுங்க WIFE கூட உங்ககிட்ட பேசிட்டு இருந்தாங்களே . என்ன பிரச்சனை ?

சகுந்தலா : ஓ ! அதுவா சார் ! . பாவம் சார் அந்த அம்மா ! . அந்த மனுஷன் சரியான தண்ணி பார்ட்டி . நேத்து எதோ வீட்டு பிரச்சனைல , கொஞ்சம் ஓவரா குடிச்சிருப்பான் போல இருக்கு . போதை தலைக்கேறி , மூச்சு பேச்சில்லாம போய் நேத்து நைட் ஹோஸ்பிடல்லயே இறந்துட்டான் சார் .

டாக்டர் குணசேகரன் : இஸ் இட் . ஹ்ம்ம் . ஓகே . இந்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் யார் HANDLE பண்றாங்க ? .

சகுந்தலா : சார் ! நான் தான் HANDLE பண்றேன் . என்கூட பிரியா , ஸ்ரீநிதி, மலர்விழின்னு மூணு புது NURSEங்க இருக்காங்க . அவங்க JOIN பண்ணி ஒரு மாசம் தான் ஆச்சு . இப்பத்தான் அவங்க TRANING அட்டென்ட் பண்ணிட்டு இருக்காங்க .

டாக்டர் குணசேகரன் : சற்று யோசித்த அவர் , “ஓகே . YOU CARRY ON .” என்றார் .

சகுந்தலா : எஸ் சார் ! என்று கதவை திறந்து விட்டு வெளியேறினாள் .

சகுந்தலா வெளியேறியதும் , குணசேகரனின் முகம் சற்றே சிவந்தது .

4

நேரம் மதியம் 2 மணியை கடந்திருந்தது . டிவியை பார்த்துக்கொண்டே கம்மங்கூழை மிளகாயுடன் சேர்த்து, குடித்துக்கொண்டிருந்தார் சமூக ஆர்வலர் சற்குணம் .

வயது 60ஐ தொட்டிருக்கும் . பணி ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். கதர் வேட்டி கதர் சட்டையுடன் ஒரு மூக்குக் கண்ணாடி. கபாலத்தின் பல பகுதிகளை இயற்கை அன்னை தன் வசம் எடுத்துக்கொண்டிருந்தாள் போலும் ! ஆங்காங்கே நரைத்த முடிகள் தென்பட்டன. சமுதாயத்தின் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர் . சற்குணம் தாத்தாவைப் பற்றி தெரியாதவர் யாரும் இல்லை என்கிற அளவுக்கு அந்த ஏரியாவில் பிரபலமாயிருந்தார் . நேரத்தை பார்த்துவிட்டு, சேனல்களை ஒன்றன் பின் ஒன்றாக மாற்றிக்கொண்டிருந்த அவர், தலைப்புச்செய்திகள் என்று தன் கண்ணில் பட்டவுடன் டிவியின் சத்தத்தை அதிகப்படுத்தினார் . டிவி திரையில் தென்பட்ட, அந்த செய்தி வாசிக்கும் பெண், தன் வால்யுமை அதிகரித்தாள் .

வணக்கம் ! இன்றைய முக்கியச்செய்திகள் .

பிரதமரின் கோரிக்கையை ஏற்று எதிர்கட்சிகள் பாகிஸ்தானுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை ஆதரித்தனர் .

உலக அளவில் facebook உபயோகபடுத்துபவர்களின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் . இந்தியா வந்துள்ள facebook நிறுவனர் மார்க் ஜூகர்பார்க் பெருமிதம்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த துடியலூர் சட்டமன்ற உறுப்பினர் மார்த்தாண்டம் மாயம் . அவர் கடத்தப்பட்டாரா ? இல்லை தலைமறைவானாரா? என்கின்ற பல கோணங்களில் நேற்று இரவுமுதல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திடுக்கிட்டு பார்த்துக்கொண்டிருந்தார் சற்குணம். உடனே அவர் வீட்டு கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது . மெல்ல எழுந்து தள்ளாடிக் கொண்டே சென்று, கதவைத் திறந்த மறு வினாடி, அவரின் நண்பர் நமச்சிவாயம் எதிர்ப்பட்டார்.

வா! நமச்சிவாயம்! என்ன இவ்ளோ சீக்கிரமா நம்ம வீட்டுக்கு வந்திருக்க ! என்ன விஷயம் ?

ஐயா ! நியூஸ்ல பாத்தீங்களா நம்ம துடியலூர் MLAவ காணமாம் . என்ன ஆனார்ன்னே யாருக்கும் தெரியலையாம்? என்றார் நமச்சிவாயம்.

ஆமாம் ! நானும் இப்பதான் பாத்தேன் ! ஒரே குழப்பமா இருக்கு .

ஐயா! இதுல என்ன குழப்பம் உங்களுக்கு! அவனுக்கு எதிராக எத்தனையோ போராட்டங்களை நீங்கள் அனுபவித்தீர்கள் . வயதானவர் என்று கூட பார்க்காமல் உங்களை அடித்தெல்லாம் துன்புறுத்தியிருக்கிறான்.

ஐயா பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு . உங்களோட போராட்டத்தை யாருக்கும் தெரியாத மாதிரி ஒடுக்கிட்டாங்களே ! இதுக்கும் மேலயும் நீங்க தனி ஆளா நின்னு கஷ்டப்பட்றத என்னால பார்க்க முடியல. வேண்டாம்யா விட்ரலாம் . இந்தக் காலத்து அரசியல்வாதிகள்கிட்ட எல்லாம் நாம நல்ல மனத்தை எதிர்பார்க்க முடியாது, கோடி கோடியா பணத்தை வேண்டுமானால் எதிர்பார்க்கலாம் . அவங்கல எதுத்து நம்மால ஒன்னும் பண்ண முடியாது . அவன் செய்த வினைகளுக்காக இன்று அவன் அனுபவிக்கிறான் . இது நமக்கு சாதகம் தானே.

இல்லை நமச்சிவாயம்! . அது தவறு . நமக்கு வேண்டியது அவனுடைய வேதனை அல்ல . நமது நோக்கம் அவன் தன் தவறை உணர்ந்து , நமது அரசு பள்ளிக்கு அருகே உள்ள அவனுடைய டாஸ்மாக் கடையை மூட வேண்டும் . பள்ளிக் குழந்தைகள் படிக்கும் இடத்திற்கு அருகே டாஸ்மாக் கடையா ? இன்றைய கால இளைஞர்கள் சமுதாயத்தை மறந்து, வெறும் சாராயத்தை மட்டுமே விரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும் . நான் காந்தியவாதி . இதற்காக எப்பேர்ப்பட்ட போராட்டங்களையும் நான் அறவழியில் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் . என் கடைசி மூச்சு இருக்கும் வரை இதற்காக போராடுவேன் என்றார் சற்குணம்.

5

நேரம் மதியம் 1:3௦ மணி.

துடியலூர் எதிர்கட்சித் தலைவர் சிங்காரத்தின் , வீட்டை நோக்கி இன்ஸ்பெக்டர் ரவியின் கார் பயணித்துக் கொண்டிருந்தது . பொதுமக்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் அவருக்கு விசித்திரமாக இருந்தது. ஒவ்வொன்றாக அசைபோட்டுக்கொண்டே வந்தார் . தேர்தல் முடிவுகளுக்கு பிறவு, அவன் மக்களை சந்தித்தே பல வருஷம் ஆச்சு. யாராச்சும் மனுவோடு வந்தாலோ இல்ல, அவனை எதிர்த்தாலோ அவுங்கள பல வழிகளில் துன்புறுத்துவது, அடியோடு ஒழிப்பது போன்ற காரியங்களை செஞ்சுருக்கான். அவனுக்கு ஆளுங்கட்சி அமைச்சர்களோட full சப்போர்ட் இருக்கு. பொதுமக்களுக்கே அவன் மேல் வெறுப்பு இருக்கத்தான் செய்கிறது . இத்தனை மர்ம முடிச்சுகளா ! இந்த கேஸ்ல ! என்று மண்டையை உருட்டி கொண்டிருந்தார். அதற்குள் சிங்காரம் வீடு வந்தது. பல ஏக்கர்களை வளைத்துப்போட்டு கட்டிய பங்களா அது . கேட்டின் முன்பு போலீஸ் கார் வருவதைப் பார்த்ததும், செக்யூரிட்டி ஓடி வந்து கேட்டை திறந்து சல்யூட் அடித்தான் . கொஞ்ச தூரம் உள்ளே சென்றவுடன் ஒரு பெரிய போர்டிகோ தென்பட்டது. அங்கே சென்று காரை பார்க் பண்ணிவிட்டு , வரவேற்பறையை நோக்கி நடந்தார் ரவி . வரவேற்பறையில் இருந்த பெண் , வெற்றுப் புன்னகையுடன் அவரைப் பார்த்து வெல்கம் சார் என்றாள் . நான் சிங்காரம் சார பாக்கனும் . இன்ஸ்பெக்டர் ரவி வந்துருக்காருனு இன்பார்ம் பண்ணுங்க என்றார். ஜஸ்ட் அ மினிட் சார் என்றவள் , பக்கத்தில் இருந்த டெலிபோனில்

எண்களைத் தட்டினாள். உடனே மறுமுனையில் இருந்த குரல் ‘எஸ்’ என்றது..

சார் ! உங்கள பார்க்கிறதுக்கு இன்ஸ்பெக்டர் ரவி வந்துருக்கார்.

ஓ ! அவர உள்ள அனுப்பு ! என்றது அந்த குரல் .

மிஸ்டர் ரவி ! ப்ளீஸ் கெட் – இன் என்று சொல்லி லிப்டை ஓபன் செய்தாள் .

இருவரும் ஏறியவுடன் ,2 ஆம் தளத்திற்கு லிப்ட் சென்று கொண்டிருந்தது.

டின் ! டின் ! டின் ! லிப்ட் திறந்தவுடன் , சிங்காரம் எதிரில் தென்பட்டார் .

வாங்க மிஸ்டர் ரவி . இட்ஸ் நைஸ் டு மீட் யூ என்று கை குலுக்கியாவாறே எதிரே இருந்த சோபாவை காட்டினார் .

இருவரும் அமர்ந்தவுடன் , பணிப்பெண் காபி கோப்பையுடன் , வந்து பக்கத்தில் இருந்த டேபிள் மேல் வைத்து விட்டு சென்றாள் .

என்ன ரவி! இந்த பக்கம் ? MLA மார்த்தாண்டம் மேட்டரா? என்றார் சூசகமாக . ஆமா சார்! ஒரே குழப்பமா இருக்கு! நீங்களும் மார்தாண்டமும் எதிர் எதிர் துருவமா இருக்கறீங்க ! எப்பவுமே மார்த்தாண்டத்துக்கு எதிரான கருத்துக்களையே பேசிட்டு இருக்கீங்க .பொதுக்கூட்டத்துல பேசும்போது , MLAவ வெட்டுவேன் குத்துவேன்ல்லாம் பேசிருக்கீங்க ! இந்த கேஸ்ல உங்களுக்கும் தொடர்பு இருக்கலாம்ற சந்தேகம் ........... போலீஸ் டிபார்ட்மென்ட்கு இருக்கு , SO ! அது விசயமா ஒரு சின்ன பார்மல் என்கொய்ரிக்கு கூப்டுவாங்க . அதுக்கு நீங்க கொஞ்சம் ஒத்துழைக்கணும் அவ்வளவுதான் சார்.

அட அந்த மேட்டர் எனக்கே ஆச்சரியமாதான் இருக்கு . நானும் டிவி நியூஸ் எல்லாம் பாத்துட்டு தான் இருக்கேன் . உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல. நானும் மார்த்தாண்டமும் , மேடைகள்ல வேணாம் ஒருத்தருக்கொருத்தர் தப்பு தப்பா தரக்குறைவா பேசி கிழி கிழினு கிழிச்சுக்குவோமே தவிர உண்மையில நாங்க ரெண்டு பேரும் அப்படியில்ல . எங்க ரெண்டு பேர்க்கும் சொந்தமான பல நிறுவனங்கள் இப்ப கோயம்புத்தூர்ல இருக்கு. இத்தனைக்கும் மேல, நாங்க ரெண்டு பேரும் ஒரே கட்சியில தான் எங்களோட அரசியல் வாழ்க்கைய ஆரம்பிச்சோம் ! காலம் எங்கள இப்படி எதிர் எதிர் கட்சிகளா மாத்திருக்கு ! ஆனா நாங்க மாறுல . அந்த கடந்த கால நட்பு இன்னும் தொடர்ந்துகிட்டு தான் இருக்கு. நானும் என்னோட அடியாளுங்கள வெச்சி விசாரிச்சுட்டு தான் இருக்கிறேன் . எனக்கு ஏதாவது தகவல் தெரிஞ்சா இன்பார்ம் பண்றேன் . நான் இத செஞ்சிருப்பேங்கற கோணத்த மாத்தி வேற மாதிரி யோசிங்க . நீங்க எப்ப, எங்க என்கொய்ரிக்கு கூப்ட்டாலும் நான் வரேன் !

ஓகே ! தேங்க்யு சார் ! நான் வர்றேன் என்று சொல்லி விட்டு இடத்தை காலி செய்தார் . போர்டிகோவில் இருந்து காரை எடுத்த வேகத்தில் கார் பறந்தது.

கேட்டை விட்டு வெளியே வந்தவுடன் , சிங்காரத்தின் கட்சிக்காரர்கள் அவரைப் புகழ்ந்து பேனர் வைத்திருந்தார்கள் . அதன் வைர வரிகள் பின்வருமாறு ,

ஏளனம் செய்கின்ற எதிர் கட்சிக்காரர்களுக்கு எமன் நீ !

எங்களை படைத்த கடவுளுக்கே சமன் நீ ! என்று எழுதியிருந்தார்கள் .

அதைப் படித்தவுடன் காரி உமிழ்ந்து விட்டு காரின் வேகத்தை கூட்டினார் இன்ஸ்பெக்டர் ரவி.

6

குடிபோதையில் இறந்த, முத்துச்சாமியின் வீட்டருகே மிகப் பெரிய கூட்டம் . வீடே ஒரு சோக மயானமாக காட்சியளித்தது . உற்றார் உறவினர்கள் ஒரு பக்கம் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். தரையின் விரிப்பில், தன் உடல் மீது பூ மாலைகளை போர்வையாக போர்த்தியபடி , அண்ணார்ந்து விட்டத்தைப் பார்த்தபடியே, ஆழ்ந்த அமைதியில் படுத்திருந்தார் முத்துச்சாமி. உறவினர்கள் ஒவ்வொருவராக வருவதும் போவதுமாக இருந்தனர் . பல பந்திகள் பரிமாறப்பட்டிருந்தன . சமூக ஆர்வலர் சற்குணம் ஐயாவும் , அவரது நண்பர் நமச்சிவாயமும் பொடி நடையாக முத்துச்சாமியின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர் . அவரைப் பார்த்ததும் , துக்கம் தாளாமல், வாயில் துண்டை வைத்துக் கொண்டே, அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான் முத்துச்சாமியின் மகன் ரத்தினம் .

ரத்தினம் : ஐயா ! எங்க அப்பா எங்கள விட்டுட்டு போய்ட்டார்யா ! என்று கதறியவன் அவரைக் கட்டியணைத்துக் கொண்டே அழ ஆரம்பித்தான் .

அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் சிலையாக நின்றார் சற்குணம் .

ரத்தினம் : குடிப் பழக்கத்தை நிறுத்து ! நிறுத்துன்னு நீங்க எவ்வளவோ சொன்னீங்க ! ஆனா எங்க அப்பா கேக்கல . இப்ப கடைசியில எங்கள அனாதையா விட்டுட்டு போய்டார்யா என்று கதறினான் . அவனை கையில் தாங்கி பிடித்தவாறே வீட்டை நோக்கி முன்னேறினார் . முத்துச்சாமியின் சடலத்தை பார்த்தவுடன் , கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரைத் துடைத்து விட்டு , அவரை வணங்கி விட்டு சற்குணமும் , நமச்சிவாயமும் வெளியே வந்தனர் .

அங்கே கூடியிருந்த , ரத்தினத்தின் நண்பர்கள் சற்குணம் அய்யாவை சூழ்ந்து கொண்டு அவரை நலம் விசாரித்தனர் .

கூட்டத்தில் இருந்த ஒருவன் ,ஐயா ! நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்கய்யா !

நம்ம ஊர்ல இருக்கிற எல்லா டாஸ்மாக் கடையையும் அடிச்சு இழுத்து மூடிடுவோம் என்றான் கோபமாக .

அவனைப் பார்த்து , மெல்ல சிரித்தார் சற்குணம் ஐயா .

உடன் இருந்த சற்குணத்தின் நண்பர் நமச்சிவாயம் அவனைப் பார்த்து ,

டேய் ! வேண்டாம்டா ! மொதல்ல நீங்க பொழைக்கிற வழியப் பாருங்க .

என்னைக்குமே ஆத்திரமும் , வன்முறையும் எதுக்குமே ஒரு தீர்வாகாது .

எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் அதை அமைதியாவும் , அகிம்சையோடும் எதிர்கொள்றது தான் நம்ம ஐயாவுக்கு புடிக்கும். மகாத்மா காந்தியின் கொள்கைகளை முழு மூச்சாகக் கொண்டவர் நம்ம ஐயா .

டாஸ்மாக் பிரச்சனைய நாங்க பார்த்துக்கறோம் . நீங்க உங்க வேலைய பாருங்க என்றார் நமச்சிவாயம் .

இல்லீங்க ஐயா ! எங்களால இத ஏத்துக்க முடியல . எங்க நண்பன் ரத்தினத்தோட வேதனையை எங்களால பாத்துகிட்டு இருக்க முடியல .

இதே மாறி , இதுக்கப்புறம் எந்த குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது . அதனால தான் நாங்க இப்படி பேசுறோம் . உங்களோட அறப் போராட்டத்தில் எங்களோட பங்கும் இருக்கணும்னு நாங்களும் ஆசைப் படறோம் . தயவு செஞ்சு எங்கள வேண்டாம்னு ஒதுக்கிறாதிங்க ஐயா என்றான் .

இதுவரை அமைதி காத்த சற்குணம் , சற்றே அவர்களைப் பார்த்து பேசத் தொடங்கினார் .

சற்குணம் : நீங்கள் எனக்காக எதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டால் , இந்த குடிப்பழக்கத்தின் தீமைகளைப் பற்றி சமூக வலை தளங்களில் அதிகம் பகிருங்கள் . அது தான் சிறந்தது. ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில், இளைய தலைமுறையினர் இணையத்தில் ஐக்கியமாகி விட்டனர். இது இணைய தலைமுறை . இணையத்தின் மூலம் உங்கள் போராட்டங்களை தொடருங்கள் . உங்கள் நண்பர்களையும் இதை பகிர சொல்லுங்கள் . என்று சொல்லிவிட்டு நமச்சிவாயத்துடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார் .

7

சாயுங்கால நேரம். அமைச்சர் புண்ணியகோடி அவர் வீட்டு வராந்தாவில் இருந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தார். உடன் அவரது P.A வும் , அரசியல் ஆலோசகர்களும் இருந்தனர். அந்த கும்பலில் இருந்த வயதான கிழம் ஒன்று அங்கு நிலவியிருந்த நிசப்தத்தை கலைத்தது . இங்க பாரு புண்ணியகோடி ! இந்த விஷத்தை நாம லேசா விட்றக் கூடாது . ஏன்னா ! மார்த்தாண்டம் என்ன ஆனார்ங்கறத பத்தி நமக்கு இன்னும் நம்புறமாதிரி ஒரு தகவலும் இல்ல . இதில இருந்து எனக்கு என்ன தோணுதுன்னா ? நம்மளோட அடுத்த மூவ் என்னான்னு யாரோ நம்மள வாட்ச் பண்றாங்கன்னு தெளிவா தெரியுது . பெரியவரின் பேச்சை அலட்டிக் கொள்ளாமல் கேட்ட புண்ணியகோடி, அவரின் இந்த எச்சரிக்கையைப் பற்றி யோசிக்கலானார். அவர் பதில் பேச தொடங்கிய அடுத்த வினாடி, அவர் பாக்கெட்டில் இருந்த செல்போன் அலறியது . எடுத்து பார்த்த அவர் அதை உடனே அட்டென்ட் செய்தார் .சொல்லுங்க ரவி என்னாச்சு ? எனி குட் நியூஸ்? .

இல்ல சார் ! நான் இப்பதான் எதிர்கட்சி தலைவர் சிங்காரம் வீட்ல இருந்து வர்றேன் . அவரிடம் என்கொய்ரிக்கு ஒத்துழைப்பு கேட்க போனேன் .

அவரே இத பத்தி எங்கிட்ட விசாரிச்சார். அவரும் மார்த்தாண்டமும் சும்மா வெளி தோற்றத்துக்கு தான் எதிரி மாதிரி பாவ்லா காட்றாங்க . ஆனா உண்மையில அப்படியில்ல . சோ ! எனக்கு அவர்மேல தப்பு இருக்கற மாதிரி தெரியல என்றார்.

லேசாக முகம் சிவந்தவராய் புண்ணியகோடி , போனில் பேச தொடங்கினார் .காலையில இருந்து தேடியும் இன்னும் உங்களால ஒரு உருப்படியான தகவல் கொடுக்க முடியல இல்ல . பொலிடிகல் ப்ரெஸ்சர்னா என்னனு தெரியுமா உங்களுக்கு ! காலையில இருந்து இருபது முப்பது call அட்டென்ட் பண்ணிட்டேன் . ஒவ்வொருத்தனுக்கும் பதில் சொல்றதுக்குள்ள தலையே வெடிச்சிரும் போல . ஆனா நீங்க கூலா ஒரு பதில சொல்லிட்டீங்க.

இல்ல சார் நாங்களும் எங்க டிபார்ட்மெண்டும் இன்னும் தேடிகிட்டு தான் இருக்கிறோம். பட் சீக்கிரம் கண்டுபுடிச்சுருவோம் . டோன்ட் வொர்ரி சார் ! என்றார் இன்ஸ்பெக்டர் ரவி . அலட்சியமான குரலில் சீக்கிரம் பண்ணுங்க என்று கூறி இணைப்பை துண்டித்தார் புண்ணிய கோடி .

கையில் சிகரெட்டுடனும் மனதில் பலவிதமான சிந்தனைகளுடனும் ரவி தன்னுடைய வீட்டையே சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். பதினைந்து, பதினாறு சிகரெட் துண்டுகள் தன்னுள் இருந்த புகையை கக்கி, எரிந்து சாம்பலாயிருந்தன .. நேரம் இரவு 11ஐ கடந்திருந்தது . ACயை ஆன் செய்து விட்டு படுத்தார் . இரவு முழுவதும் இந்த கேஸ் பற்றிய சிந்தனைகள் அவரை வாட்டி வதைத்தன . ஒரு வழியாக உறக்கம் அவர் கண்ணை எட்டியது .

7

மே 2 , 2015

விடியற்காலை எட்டு மணி . முழு தூக்கத்தில் இருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி.

அவர் போனில் இருந்து இரண்டு மூன்று அலாரங்கள் ஒலித்தது . சோர்வுடன் எடுத்து அலாரத்தை நிறுத்தி விட்டு மீண்டும் படுக்கத் தொடங்கினார் .

மீண்டும் செல்போனில் இருந்து சத்தம் வந்தது. இந்த முறை வந்தது அலாரம் அல்ல . அழைப்பு மணி . எடுத்து யார் என்று பார்த்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் குமார் லைனில் இருந்தார் .

ஹலோ குமார் என்ன எவ்ளோ சீக்கிரமா கூப்ட்றீங்க ? எனி திங் சீரியஸ் என்றார் ரவி ?

எஸ் சார் ! நீங்க மொதல்ல நியூஸ பாருங்க . மார்த்தாண்டம் கேஸ்ல ஒரு துப்பு கெடைச்சிருக்கு . எதோ ஒரு இயக்கம் அவரை கடத்திருக்கு. இன்னிக்கு எல்லா சோசியல் மீடியாவிலும் அதப் பத்தித்தான் நியூஸ், வைரலா பரவிக்கிட்டு இருக்கு .

ஓஹ் ! இசிட் .அந்த இயக்கத்தோட பேர் என்ன குமார் ?

‘‘ ஒற்றன் ‘’ சார் .

என்னது ஒற்றனா ? ஓகே நான் பாத்துட்டு உங்களுக்கு கூப்டறேன் .

ஓகே சார் ! என்று மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப் பட்டது .

சட்டென்று டிவியை ஆன் செய்து நியூஸ் சேனலை வைத்தார் ரவி .

டிவி திரையில் செய்தி வாசிக்கும் பெண், மிகுந்த உற்சாகத்துடன், திருத்தமான தமிழில் செய்தியை வாசித்துக்கொண்டிருந்தாள் . கீழே ப்ரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது . அதில் “துடியலூர் MLA மார்த்தாண்டம் கடத்தப்பட்ட விவகாரம் – ஒற்றன் என்ற முகம் தெரியாத அமைப்பு பொறுப்பேற்பு “. என்று எழுத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஓடி மறைந்து கொண்டிருந்தது . அதற்குள் செய்தி வாசிக்கும் பெண் தொடர்ந்தாள் .

“ சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி, துடியலூர் MLA மார்த்தாண்டம் கடத்தப்பட்டிருக்கிறார் . இந்த விவகாரத்திற்கு, ‘ஒற்றன்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது . இதை ஊர்ஜிதப் படுத்தும் விதமாக www.ஒற்றன்.com என்ற இணையதள முகவரியில், கை கால்கள் கட்டப்பட்டு , மயங்கிய நிலையில் மார்த்தாண்டம் இருப்பது போன்ற புகைப்படம் அப்லோடு செய்யபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . FACEBOOK, TWITTER, WHATSAPP போன்ற சமூக வலைதளங்களில் குடியிருக்கின்ற இணையதள வாசிகள் இதை பெரிதும் பகிர்ந்துள்ளனர் . குறிப்பாக ட்விட்டரில் “ஒற்றன்” என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் பிரபலமாகி முதலிடத்தில் உள்ளது என்று செய்தியை முடித்தாள் . அரை மணி நேரத்தில் இன்ஸ்பெக்டர் ரவியின் கார் , துடியலூர் காவல் நிலையத்தை அடைந்தது .

உள்ளே நுழைந்த ரவி , சப்-இன்ஸ்பெக்டர் குமாரைப் பார்த்ததும் ,

என்ன குமார் அந்த இணையதளத்த (WEBSITE) TRACE பண்ணிடீங்களா ?

எஸ் சார் ! சைபர்கிரைம் போலீஸ், அவங்க டீமோட ட்ரை பண்ணிட்டு இருக்காங்க . வி வில் கெட் தெம் QUICKY சார் என்றார் குமார்.

எங்கே அந்த வெப்சைட்ட ஓபன் பண்ணுங்க ? என்றார் இன்ஸ்பெக்டர் ரவி.

அங்கே இருந்த ஒரு லேப்டாபில் அந்த இணையதளம் ஓபன் செய்யப்பட்டது .

அது LOAD ஆவதற்கு சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டு, பின்னர் LOAD ஆனது . அந்த இணையதளத்தின் இரண்டு மூலைகளிலும் , இடது பக்கத்தில் பகத்சிங்கும் , வலது பக்கத்தில் நேதாஜியும் தங்களுடைய புகைப்படங்களுடன் முகாமிட்டு இருந்தார்கள். அதற்கும் கீழே, இந்தியாவுக்கு முன்னால் , தெருக்களை சுத்தம் செய்யும் துடைப்பத்துடன், முகமூடி அணிந்த ஒரு மனிதன், நிற்பதைப் போன்ற ஒரு நிழல் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அதற்கு “ஒற்றன் - சமுதாய சாக்கடைகளை அகற்றுகின்ற ஒரு துப்புறவுப் பணியாளன்“ என்கின்ற வாசகம் விளக்கமளித்தது . குறிப்பு : இந்த இணையதளம் முடக்கப்பட்டு விட்டால் , MLA மார்த்தாண்டம் பற்றிய தகவல்களும் இத்தோடே முடங்கிவிடும் - எச்சரிக்கை என்று சிவப்பு நிறத்தில் அடிக்கோடிடப் பட்டிருந்தது .

இணையதள வாசிகள் தங்கள் கேள்வி பதில்களை பதிவு செய்ய, தனி SECTION இருந்தது . கேள்விகளுக்கு 7௦ எழுத்துக்கள் (CHARACTERS)

மட்டுமே அனுமதி இருந்தது . இதுவரைக்கும் 18 பேர் தங்களுடைய கேள்விகளை பதிவு செய்திருந்தார்கள். உடனுக்குடன் ஒற்றனிடமிருந்து பதிலும் வந்திருந்தது .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தார் .

இணையதள வாசி பிரியா113 : HELLO யார் நீங்க? எதுக்காக இந்த கடத்தல் சம்பவம் ? PUBLICITY தேடறீங்களா ?

ஒற்றனிடமிருந்து : நன்றி பிரியா FOR YOUR INTREST ! . மக்களுக்கு எதிராக அநியாயங்களை அரங்கேற்றும் சில அரசியல்வாதிகளின் ஆட்டம் முடிவுக்கு வர வேண்டும் . அதற்காகத் தான் இந்த போராட்டம் . என்னைப் பற்றியும், இந்த கடத்தல் சம்பவத்தையும் பற்றியும் உங்களுக்குத் தெரியத்தான் போகின்றது. அதற்கு சற்று கால அவகாசம் ஆகும் . ஆட்சியாளர்களின் மௌனம் என்று கலைகிறதோ அன்று தான் இந்த விடுகதைக்கான விடை வெளிப்படும் . அதுவரை பொறுமையோடு காத்திருப்போம் . நன்றி .

இணையதள வாசி மனுஷ்யபுத்திரன்057 : எனக்கு என்னமோ, அமைதிப்பூங்காவான தமிழ் நாட்டிலும், ஐ.எஸ். ஐ.எஸ். (ISIS) தீவிரவாத இயக்கத்தின் கிளைகள் தொடங்கப்பட்டு விட்டதாக தோன்றுகிறது .

ஒற்றனிடமிருந்து : மனுஷ்யபுத்திரன் அவர்களே ! மதத்தின் பெயரால் மனிதர்களை கொன்று கொண்டிருக்கும், காட்டு மிராண்டிகளை எங்களோடு ஒப்பிடாதீர்கள் . அவர்களுக்கும் கட்டாயம் ஒரு முடிவு உண்டு என்பதையும் மறந்து விடாதீர்கள் . அதே போல் ஜனநாயகம் என்கின்ற போர்வையில் இந்த சமுதாயத்தை அழித்துக் கொண்டிருக்கும், சில அரசியல் முதலைகளின் முகத்திரைகள் கிழிக்கப் படவேண்டும் . தமிழ் தான் எங்களின் மதம் . தமிழ் மண்ணின் மைந்தர்கள் நாங்கள் . வீழ்ந்தாலும் வீழ்வோமே தவிர தீவிரவாதத்திற்கு துணை போக மாட்டோம். அவசரப்பட்டு வார்த்தையை விடாதீர்கள் .

இணையதள வாசி சந்திரமோகன்447 : அரசுக்கு எதிரா ஒரு தமிழன் போர்க்கோடியா ? கேற்கவே மிகப்பெருமையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கே !

ஒற்றனிடமிருந்து : சந்திரமோகன் ஐயா ! இப்படியே ஆச்சர்யப் பட்டுக்கொண்டேயிருந்தால் ஆயுசுகாலம் முடியும் வரைக்கும் ஆச்சர்யப்பட வேண்டியதுதான் . இது ஒன்றும் பெருமைக்கான போராட்டம் அல்ல, எங்களது உரிமைக்கான போராட்டம் . நமது நாட்டில் ஜனநாயகம் என்றைக்கோ , கறை படர்ந்து குழி தோண்டி புதைக்கப் பட்டு விட்டது . அதைத் தோண்டியெடுத்து, கறையை அகற்றும் முயற்சியில் தான், நாங்கள் துடைப்பத்துடன் இன்று புறப்பட்டிருக்கின்றோம்

இணையதள வாசி சுப்ரமணியம்543 : நேதாஜி, பகத்சிங் போன்ற தேசியத் தலைவர்களின் படங்களை, உன் இணையத்தளத்தில் போட்டு விட்டால் நீ செய்ததெல்லாம் சரி ஆகிவிடுமா ?. நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல .

ஒற்றனிடமிருந்து : சுப்ரமண்யம் ஐயா ! மன்னிக்கவும். உங்களுடைய கோபம் நியாயமானது. அதை விட இந்த போராட்டத்தின் நோக்கம் மிக முக்கியமானது . இதை நான் மற்றுமொரு சுதந்திரப் போராட்டமாகத்தான் கருதுகிறேன் . ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்த தேசத்தை காப்பாற்றுவதற்காக அவர்கள் போராடினார்கள் . ஆனால் அரசியல்வாதிகளிடம் இருந்து இந்த சமுதாயத்தை காப்பாற்றுவதற்காக நான் போராடுகிறேன் . நல்லதே நடக்கும் . காலம் கைகூடட்டும் . பொறுத்திருங்கள் . நன்றி .

படித்துக் கொண்டிருக்கும் போதே அமைச்சர் புண்ணியகோடியின் கார் துடியலூர் காவல் நிலையத்தை நோக்கி ஜெட் வேகத்தில் வந்து கொண்டிருந்தது . காரில் இருந்து புண்ணியகோடி வேக வேகமாக வந்திறங்கினார் . அவரைச் சுற்றி மீடியாக் கூட்டம் மொய்க்கத் தொடங்கியது. NO COMMENTS என்று சொல்லிக்கொண்டு அவரது உதவியாளர்கள் கூட்டத்தை கலைத்துக்கொண்டு முன்சென்றனர் .

இன்ஸ்பெக்டர் ரவியும் , சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் அவர் முன்பு சல்யூட்டுடன் எதிர்பட்டார்கள் .

இன்ஸ்பெக்டர்-ரவி : ஹலோ சார் ! குட் மார்னிங் !

புண்ணியகோடி : என்ன ரவி ? அந்த ஒற்றன் யாருனு trace பண்ணிடீங்களா ?

இன்ஸ்பெக்டர்-ரவி : எஸ் ! சார் ! சைபர்கிரைம் டீம் TRACE பண்ணிட்ருக்காங்க ! இன்னம் கொஞ்ச நேரத்துல அவன் ஏரியாவ கண்டுபுடிச்சிரலாம் .

புண்ணியகோடி : சொல்லாதீங்க ! மொதல்ல செஞ்சு முடிங்க ! .

இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் யாரு? எந்த ஏரியாங்கற DETAILS எனக்கு வந்தாகணும் .

அடுத்த சில நிமிடங்களில் , சைபர்கிரைம் டீம்ல இருந்து ஒருவன் திடீரென்று தன் கையை உயர்த்தினான் .

சார் ! ஐ காட் ஹிஸ் LOCATION .

தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருந்த அமைச்சர் புண்ணியகோடி சற்றே தன் புருவத்தை உயர்த்தினார் . இன்ஸ்பெக்டர் ரவியும், குமாரும் ஆச்சர்யத்துடன் , அவன் முன் சென்றார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : TRACE பண்ணிடீங்களா ? WHAT இஸ் ஹிஸ் LOCATION ?

சைபர்கிரைம் ஆபீசர் : சார் ! அவனோட LOCATION - சிரியா .

WHAT ? சிரியாவா ? என்று அதிர்ச்சியானார் ரவி .

அமைச்சர் புண்ணியகோடி : துடியலூருக்கும் , சிரியாவுக்கும் என்னையா சம்பந்தம் ? ஒண்ணுமே புரியலையே என்றார் .

ஏற்கனவே சிரியாவில் உள்நாட்டு போர் வேற போய்ட்டு இருக்கு . உலக நாடுகளை அச்சுறுத்துகின்ற ஐ.எஸ். ஐ.எஸ். (ISIS) தீவிரவாத இயக்கம் சிரியாவின் பல பகுதிகளை தங்கள் கைவசம் ஆக்ரமிச்சிருக்காங்க.

உலக நாடுகளுக்கும், சிரியாவுக்கும் எந்த விதமான போக்குவரத்து சேவையும் இப்போது இல்லை . சிரியாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் . இப்படிப்பட்ட பதற்றமான சூழலில், ஒருத்தன் அங்கிருந்து நம்மகிட்ட கண்ணாமூச்சி விளையாட்றான்ணா அவன் சாதாரணமான ஆள் கெடையாது என்றார் அமைச்சர் புண்ணியகோடி .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் உடனே, சார் ! ப்ரெஸ் ரிபோர்ட்டர்ஸ் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க .

ஓகே ! நான் பாத்துக்கிறேன் என்று சொல்லி வெளியே வந்தார் புண்ணியகோடி .

7

அமைச்சர் புண்ணியகோடி ப்ரெஸ் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு சென்று தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார் .

வரலாறு காணாத அளவுக்கு, பல மீடியாக்கள் புண்ணியகோடியின் பேட்டிக்காக காத்திருந்தார்கள் . புண்ணியகோடி மெல்ல பேச்சைத் துவங்கினார் .

“ அனைவருக்கும் வணக்கம் . MLA மார்த்தாண்டம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது .ஒற்றன் என்கின்ற முகம் தெரியாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த ஒற்றன் யார் ? அவன் பின்னணியில் இருப்பவர்கள் யார் ? என்பதைப் பற்றி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது . எனவே மீடியாக்கள் கொஞ்சம் பொறுமை காக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார் .

மீடியா 1 : சார் ! இந்த ஒற்றனப் பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க ? மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு வரவேற்பு இருப்பதாக தெரிகிறதே ?

புண்ணியகோடி : ஒற்றன் ஒன்றும் காந்தி இல்லை . இந்த அரசாங்கத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் யாரோதான் இப்படி ஒரு இழிவான செயலை செய்திருக்கின்றார்கள் என்று நான் கருதுகிறேன் . ஒரு MLAவை கடத்தியிருக்கிறார்கள் . அரசாங்கத்திற்கு எதிராக கிளம்பும் ஒவ்வொருவரும் தேசத் துரோகிகள் தான் . வினையை விதைத்திருக்கிறார்கள், அதற்கான விபரீதங்களை அவர்கள் சந்தித்தே ஆவார்கள் . மார்த்தாண்டம் எதற்காக கடத்தப்பட்டார் ? அவர்களின் நிபந்தனைகள் என்ன ? என்பது பற்றி நம்பகமான தகவல்கள் இதுவரை ஒற்றனிடமிருந்து இல்லை . அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமை காப்போம் . இவ்வளவு தான் இப்போதைக்கு எங்களிடம் உள்ள பதில் . SO PLEASE CO-ORDINATE WITH US என்று சொல்லிக்கொண்டு இடத்தைக் காலி செய்தார் புண்ணியகோடி.

ஒற்றன் விவகாரம் – அமைச்சரின் பரபரப்புப் பேட்டி என்று இந்தியாவின் அனைத்து தொலைக்காட்சி தலைப்புச்செய்திகளிலும் புண்ணியகோடியின் ஆவேசப் பேட்டி இடம்பெற்றிருந்தது .

சார் ! CM ஆபீஸில் இருந்து போன் பண்ணீர்ந்தங்கா ! இன்னிக்கு சாயந்தரம் 5 மணிக்கு ஒரு அவசர மீட்டிங் SCHEDULE பண்ணீருக்காங்க . என்றார்

புண்ணியகோடியின் P.A .

ஹ்ம்ம் . ஓகே ! பாத்துக்கலாம் என்றார் புண்ணியகோடி .

9

“மின்னல் டிவி நிறுவனம்” வடக்கு கோயம்பத்தூரின் (வடகோவை) மையத்தில் அமைந்துள்ளது . எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல் , உள்ளதை உள்ளபடி , உண்மை நிலவரங்களை உடனுக்குடன், பொது மக்களுக்கு வெளிபடுத்தக் கூடிய ஒரு பொழுதுபோக்கு நிறுவனம் “மின்னல் டிவி” என்று அதன் PROMO SONG அந்த நிறுவனத்தை வெளிப்படுத்தியது .

பல பிரச்சனைகள் , மிரட்டல்கள் , வழக்குகள் என அனைத்தையும் தாண்டி , பொது மக்களுக்கு உண்மையை உரக்க சொல்ல வேண்டும் என்பதையே குறிக்கோளாய் கொண்டிருந்தார் அதன் நிறுவனர் நாராயணன் . அதன் காரணமாகவே அந்த சேனலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது . குறிப்பாக இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் “ நிதர்சனத்தின் மறுபக்கம் “ என்கிற நேரலை நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே கிளம்பியிருந்தது . காரணம் அதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜயன் . அந்த நிகழ்ச்சியில் , ஒவ்வொரு நாளும் ஒரு பொதுப் பிரச்சனையை மையமாக வைத்து கருத்தரங்கம் நடைபெறும் .

பிரச்சனைக்கு சம்பந்தப் பட்டவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். அவர்கள் ஒரு அரசியல் தலைவர் , அல்லது நடிகர் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களின் மீது, பிரச்சனைகளை மையமாக வைத்து, விஜயன் சரமாரியாக கேள்விகளை வீசுவார் . அவரின் ஒவ்வொரு கேள்வியும் மக்களின் மன பிம்பத்தை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கும் . பல பிரபலங்கள் , இந்த நிகழ்ச்சியின் மீதுள்ள பயத்தால் , நிகழ்ச்சியைத் தவிர்த்திருக்கிறார்கள் .

காலை 11 மணி . மின்னல் டிவி நிறுவனம் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது . “ நிதர்சனத்தின் மறுபக்கம் “ என்று பெயர் பொறிக்கப்பட்ட அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் விஜயன் . உள்ளே பல பணியாளர்கள் மழைக்கால எறும்புகள் போல் வேகமாக செயல்பட்டு கொண்டிருந்தார்கள் . விஜயன் சென்று CHAIR-இல் உக்கார்ந்த அடுத்த வினாடி,

எடிட்டிங் டீமில் இருந்து ஒருவன் வந்து ,

சார் ! உங்கள M.D உடனே மீட் பண்ணனும்னு சொன்னார் .

விஜயன் : ஓகே . I’LL MEET HIM . தேங்க்ஸ் .

சற்று நேரம் , யோசித்து விட்டு MD நாராயணன் ரூமை நோக்கி நடந்தான் விஜயன் .

நாராயணன் . MANAGING DIRETOR . மின்னல் டிவி. என்ற பெயர் பலகை தொங்கிக் கொண்டிருந்தது . அந்த ரூமின் கதவை திறந்து , சார் ! MAY I GET IN ? என்றான் .

உள்ளே இருந்த நாராயணன் , எஸ் ! PLEASE என்றார் .

நாராயணன் : விஜயன் , நம்ம நிதர்சனத்தின் மறுபக்கம் நிகழ்ச்சிக்கு , ஒரு அருமையான SCRIPT வந்திருக்கு . CAN U GUESS IT ?

விஜயன் : சார் ! அது விசயமாத்தான் நான் உங்க கிட்ட பேசலாம்னு நெனச்சேன் . BUT நீங்களே கேட்டுடீங்க . அந்த ஒற்றன் விவகாரம் பத்தி தான சொல்றீங்க .

நாராயணன் : YES . அதே மேட்டர்தான் . ஒற்றனோட அடுத்த MOVE என்னனு தெரிஞ்சுக்க நாடே மிகப் பெரிய எதிர்பார்ப்போடு காத்துகிட்டு இருக்கு .

விஜயன் : சார் ! ஒற்றன் சம்பந்தப்பட்ட எல்லா DETAILS’ம் நான் ALREADY COLLECT பண்ணிட்டு தான் இருக்கேன் . தமிழ் நாட்ல இப்ப நடக்குற ஆட்சியில , பண்ணாத அட்டூளியங்களே கிடையாது . அரசாங்கத்த எதிர்த்து ஒரு வார்த்தை பேசினாலும் , அவங்க மேல தேச துரோக வழக்கு பதிவு பண்ணி , ஜெயில்ல போட்ற அளவுக்கு வந்துட்டாங்க சார் ! . கருத்து சுதந்திரமே இல்ல . பொது மக்களுக்கே , இந்த ஆட்சி மேல வெறுப்பு அலை உருவாயிருக்கு . சரியான நேரத்துல தான் சார் ! ஒற்றன் , தடம் பதிச்சிருக்கான் . இனி ஒற்றனோட ஒவ்வொரு நடவடிக்கையையும் CAPTURE பண்ணி, ஜனங்களுக்கு ஒற்றன் மேல ஒரு நம்பிக்கை, வர்ற மாறி பண்ணப் போறேன் . இனி நம்ம அடுத்த TARGET – ஒற்றன் தான் .

நாராயணன் : ஓகே . U TAKE CARE . ஜனங்களுக்கு உண்மைய எடுத்து சொல்லு . என்ன பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்கிறேன் .

விஜயன் : எஸ் ! சார் ! WE WILL DO IT ..

11

துடியலூர் போலீஸ் ஸ்டேஷன் . ஒரே பரபரப்பாக காணப்பட்டது . சிரியாவில் இருக்கின்ற இந்தியர்கள் மற்றும் சிரியாவுக்குச் சென்று வந்த இந்தியர்கள் பற்றிய தகவல்களை மும்முரமாக சேகரித்துக் கொண்டிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் .

சப்-இன்ஸ்பெக்டர் - குமார் : சார் ! கிட்டத்தட்ட சிரியாவோடு தொடர்புடைய இந்தியர்களோட லிஸ்ட்ட ரெடி பண்ணியாச்சு . இதுல நமக்கு ஒரு சின்ன தடயம் கெடைச்சிருக்கு . குறிப்பா தமிழ் நாட்டில இருந்து சிரியாவுக்கு போன நபர்களோட எண்ணிக்கை 1 8 . அதுல 16 பேர விசாரிச்சாச்சு ! . 2 பேர் மட்டும் மிஸ் ஆகுறாங்க .அவங்கள தொடர்பு கொள்ள முடியல . எனக்கு அவுங்க மேல கொஞ்சம் டவுட் இருக்கு சார் !

இன்ஸ்பெக்டர் – ரவி : இல்ல குமார் ! தொடர்புகொள்ள முடியலங்க்றதுக்காக அவங்கள நாம குற்றவாளின்னு சந்தேகப் பட்றது தப்பு .

சப்-இன்ஸ்பெக்டர் - குமார் : இல்ல சார் ! நான் அதுக்காக மட்டும் அவங்கள சந்தேகப் படல . அவங்களோட பயோடேட்டாவ எடுத்துப் பார்த்தோம் , அவங்க ரெண்டு பெரும் கோயம்பத்தூர் பாரதியார் யூனிவர்சிட்டில முதுகலைப் பட்டம் பெற்றிருக்காங்க . போன வருஷந்தான் சிரியாவுக்கு போயிருக்காங்க . அவுங்க வீட்லயே அவங்க எங்க போயிருக்காங்கன்னு யாருக்கும் தெரியல . அவங்களோட FRIENDS CIRCLEளையும் விசாரிச்சு பாத்தாச்சு . யார் கூடவும் அவங்க காண்டக்ட்ல இல்ல . SO , I THINK WE ARE IN RIGHT MOVE ONLY.

இன்ஸ்பெக்டர் –ரவி : இஸ் இட் ! . ஓகே ! இது விசியமா , மொதல்ல நாம உளவுத்துறை கிட்ட தகவல் கொடுப்போம் . THEN WILL START OUR FURTHER ACTIONS.

இருவரும் பேசிக் கொண்டிருந்த அடுத்த வினாடி , சப்-இன்ஸ்பெக்டர் குமாரின் செல்போனில் இருந்து சத்தம் வந்தது . எடுத்துப் பார்த்த அவர் உடனே , இன்ஸ்பெக்டர் ரவியைப் பார்த்து ஆச்சர்யமான குரலில் ,

சார் ! WHATSAPPல இருந்து , எனக்கு MSG வந்துருக்கு . ஒற்றன் வெப்சைட் UPDATE ஆயிருக்காம் .

இன்ஸ்பெக்டர் ரவி : வாங்க குமார் ! என்னன்னு உடனே செக் பண்ணலாம்.

ரவியும் , குமாரும் , ஒற்றன் இணையதளத்துக்கான முகவரியை கம்ப்யூட்டரில் தட்டினார்கள் .

ஒற்றன் இணையதளம் வெகு விரைவாக LOAD ஆனது .

அதில் ஒற்றனின் குறியீடான , இந்தியாவுக்கு முன்னால் , துடைப்பத்துடன் , முகமூடி அணிந்த மனிதன் நிற்பதை போன்ற நிழலுருவம், ஒற்றன் என்ற வாசகத்தை கம்பீரமாக தாங்கி நின்று கொண்டிருந்தது . அதன் கீழே இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த எழுத்துக்கள் ஒற்றனின் கோபத்தை பிரதிபலித்திருந்தது .

“ தேசத்துக்கான எங்களின் இந்த போராட்டம், இன்று அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டியிருக்கின்றது என்பதில் எங்களுக்கு பெருமகிழ்ச்சி. எங்களை தேச துரோகிகள் என்று விமர்சித்த அமைச்சர் புண்ணியகோடிக்கு மனமார்ந்த நன்றி . தேசத்தின் மீது அதீத பற்று கொண்டவர்கள் , தேச துரோகிகளாக்கப்படுவது இந்தியாவில் ஒன்றும் புதிதல்ல . மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை மலரச் செய்தீர்கள் . இன்னமும் அதிகார வர்க்கங்கள் தான் இந்தியாவில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருகின்றார்கள் . அடித்தட்டு மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகத்தான் இருந்துகொண்டிருக்கின்றது. அவர்களின் கூக்குரல்கள் அரசியல் அமைப்புகளின் காதுகளுக்கு எட்டுவதேயில்லை . ஏதேனும் ஒரு அரசியல் மாற்றம் வந்துவிடாதா? ஒரு நல்ல தலைவன் வந்துவிட மாட்டானா ? என்று மக்கள் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் . இன்றைய நிலையில் அரசியல்வாதிகள் ஆண்டவனாக்கப் படுகிறார்கள் . மக்களுக்காக குரல் கொடுத்து , சமூகத்துக்காக போராடுபவர்கள் , ஒடுக்கப் படுகிறார்கள் . துன்புறுத்தப்படுகிறார்கள் . சிறையில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் . இங்கு நடக்கும் அராஜகங்கள் ,ஆட்சியில் மேலே இருப்பவர்களுக்கு தெரிவதில்லை . அவர்கள் தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை . அதற்கான நேரம் வந்துவிட்டது . MLA மார்த்தாண்டம் போன்ற அரசியல்வாதிகள் மண்ணில் இருப்பதை விட இறப்பதே மேல். குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை வேண்டாம் . அதை அகற்றுங்கள் , அல்லது வேறொரு இடத்துக்காவது மாற்றுங்கள் என்று ஒரு வயது முதிர்ந்த பெரியவர் பல காலமாக குரல் கொடுத்து வருகிறார் . பல அரசியல் தலைவர்களிடம் சென்று முறையிட்டிருக்கின்றார் . பல விதமான அறப் போராட்டங்களை அரங்கேற்றியிருக்கிறார் . ஆனால் அவரை , வயது முதிர்ந்தவர் என்று கூடப் பார்க்காமல் , அவரின் மீது ஏகப்பட்ட அடக்கு முறைகளை MLA மார்த்தாண்டம் கையாண்டிருக்கிறார் . அவற்றையெல்லாம் இன்முகத்தோடே சமாளித்து கொண்டு இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார் ஒரு போராளி .

தேடிச் சோறுநிதந் தின்று - பலசின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்வாடித் துன்பமிக உழன்று - பிறர்வாடப் பலசெயல்கள் செய்து - நரைகூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பலவேடிக்கை மனிதரைப் போலே - நான்வீழ்வேனென்று நினைத் தாயோ?

என்ற பாரதியாரின் வைர வரிகளை , இன்று நான் அவர் வடிவில் நேரில் காண்பதைப் போல உணர்கின்றேன் . . அவர் வேறு யாரும் அல்ல . துடியலூர் அரசுப் பள்ளியின் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சற்குணம் . ஒரு சமானியனின் கோபம் சாதாரணமானது அல்ல என்பதை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்காகவே எங்களின் இந்த முயற்சி . ஆளுங்கட்சியின் இப்படிப்பட்ட அராஜகங்களுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கவே இந்த ஒற்றன் என்கிற இயக்கம் தமிழகத்தில் கால் ஊன்றியுள்ளது . ஆளுங்கட்சியின் பல முகத்திரைகள் கிழிக்கப் பட விருக்கின்றன . ஆனால் எங்களுக்கும் அந்த பெரியவர் சற்குணத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை . தயவுசெய்து விசாரணை என்கின்ற பெயரில் , அந்த பெரியவரைத் துன்புறுத்தாதீர்கள் . இத்தோடு முடிந்து விடவில்லை எங்கள் போராட்டம் . ஒரு மிகப்பெரிய உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டிய சமயம் வந்துவிட்டது . கடந்த சில மாதங்களாக துடியலூரை உலுக்கிய சில தீடீர் மர்ம மரணங்கள் ! . காரணம் தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தோமே ! . அதை ஆராய்ந்து பார்த்த போது தான், அதில் இருந்த மிகப்பெரிய உண்மை புலப்பட்டது . இறந்தவர்கள் அனைவரும் மது அருந்துபவர்கள் . அளவுக்கு மீறி குடித்ததால், போதை தலைக்கேறி அவர்கள் உயிரிழந்தனர் என்று அரசு விளக்கம் அளித்திருந்தது . ஆனால் அதுவல்ல உண்மை . இறந்தவர்களை பிரேத பரிசோதனை செய்து பார்த்த போது , அவர்கள் மூளையின் நரம்புகள் செதில் செதிலாக துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கின்றது . அதற்கான காரணம் ஆக்டோசின் (OCTOSIN) என்ற ஒரு ரசயானப் பொருள் அவர்கள் உடலில் கலக்கப் பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது . இந்த ஆக்டோசின் வெளி நாடுகளால் முழுவதுமாக தடை செய்யப்பட்ட ஒரு வேதிப் பொருள். இந்த ரசாயனம் உடலில் அதீத போதையை ஏற்படுத்தும் , நாளடைவில் மூளையின் நரம்புகளை வெகுவாக பாதித்து நரம்புகளை அறுக்க தொடங்கி விடும் . இந்த மாறுபட்ட ரசாயணம் கலந்த மதுபானங்களை தயார் செய்து வினியோகம் செய்யும் நிறுவனம் MLA மார்த்தாண்டத்தின் “WINESHINE” நிறுவனம் . அதற்கான ஆதாரங்கள் , இதோ துடியலூர் சஞ்சீவி ஹாஸ்பிடலில் இருந்த பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டின்(POST MORTEM REPORT) நகல்கள் உங்கள் பார்வைக்கு . முடிந்தால் அந்த நிறுவனத்தின் மதுபானங்களை சோதனை செய்து பாருங்கள். இதில் ஆளுங்கட்சியின் ஆறு அமைச்சர்கள் இந்த நிறுவனத்தின் நேரடி பங்குதாரர்கள் . இதை விட முக்கியம் என்னவெனில், எங்களை தேச துரோகிகள் என்று விமர்சித்த அமைச்சர் புண்ணியகோடிதான் இந்த நிறுவன தொடக்க விழாவுக்கு அடிக்கல் நாட்டிய சிறப்பு விருந்தினர். .வெட்கமாக இல்லை . உங்கள் பார்வைக்கு அந்த புகைப்படத்தையும் இத்தோடு இணைத்துள்ளேன் . ஒற்றனின் பின்னால் இவ்வளவு மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன . இதை நேர்மையான வழியில் நமது நாட்டில் வெளியே கொண்டு வர முடியாது. வெளிபடுத்தவும் விட மாட்டார்கள் இந்த அரசியல் வியாதிகள் .

இதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் . அதற்காகத் தான் இவ்வளவு போராட்டம் . பொதுமக்களாகிய நீங்கள் தான் இதற்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும் . இப்பிரச்சனையை , முடிந்தால் ஒற்றனின் சார்பில் பொது நல வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் தொடர்ந்து பாருங்கள் . இந்த நாட்டில் இன்னமும் நீதிமன்றத்தில் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது . நீதிமன்றம் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் நிபந்தனையின்றி தலை வணங்குகிறேன் . ஜெய்ஹிந்த் .

இப்படிக்கு

- ஒற்றன் –

என்று படித்து முடித்தார் சப்-இன்ஸ்பெக்டர் குமார் .

இன்ஸ்பெக்டர் ரவி : என்ன குமார் ! . நான் கூட என்னமோ நெனெச்சேன் . BUT ஹி இஸ் GREAT ! அவன் ஒரு வித்தியாசமான ஆளு தான்யா !.

சப்–இன்ஸ்பெக்டர் குமார் : என்ன சார் ! நீங்க திடீர்னு ஒற்றன் பக்கம் சாஞ்சுட்டீங்க ! HE IS AN ACCUST . ஒரு MLAவ கடத்திருக்கான் ! அவன போய் பாராட்றீங்களே சார்? .

இன்ஸ்பெக்டர் ரவி : இல்ல குமார் ! அவன் வெறும் சுய நலத்துக்காக எதையும் பண்ணலன்னு நமக்கே CLEARரா தெரியுதுல்ல . நியாயமா நாம பண்ண வேண்டியத அவன் பண்ணிருக்கான் . MLA மார்த்தாண்டத்தப் பத்தி நமக்கே நல்லா தெரியும். அவன் மேல எத்தனை கேஸ் இருக்கு ? . ஒன்னுலயாவது அவன ARREST பண்ண முடியுதா ? முடியாது . ஏன்னா ! அவங்க ஆளுங்கட்சி. இந்த காக்கிச் சட்டையப் போட்றதுக்கு முன்னாடி நமக்கிருந்த கம்பீரம் , போட்டதுக்கு அப்புறம், துளி கூட இல்ல . நாமெல்லாம் JUST , GOOD FOR NOTHING . அவ்ளோதான் . அதாவது வாய்ச்சொல் வீரர்கள் . ஆனால் வாள் வீசமாட்டோம் ! . இப்படிப் பட்ட ஒரு விஷயத்தை , ஒட்டுமொத்த தமிழ்நாட்டோட கவனத்துக்கே கொண்டு வந்துருக்கான்னா அவன் சாதாரணமான ஆள் இல்ல . HE IS VERY CLEVER ! .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : சார் ! நாம அடுத்து INVESTIGATE பண்ணப் போற ஏரியா எது சார் ?

இன்ஸ்பெக்டர் ரவி : சஞ்ஜீவி PRIVATE HOSPITAL . என்றார் சிரித்துக்கொண்டே!!!.

12

காலை 10 மணி செய்திகளுக்காக டிவி திரையையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தார் துடியலூர் எதிர்கட்சி தலைவர் சிங்காரம் .

என்னங்கய்யா ! ஒரே பதற்றமா உக்கார்ந்திருக்கீங்க ? என்றான் தோட்டக்காரன் கண்ணையா !

அட அது ஒன்னும் இல்லடா ! . ஒற்றன் நியூஸ் கொஞ்சம் சூடு புடிச்சிருக்காம் ! அதான் செய்தி சேனல் தேடிட்டு இருக்கேன் என்று சொல்லிக்கொண்டே மின்னல் டிவியின் செய்திகளைக் கண்டவுடன் ரிமோட்டை கீழே வைத்தார்.

செய்தி வாசிக்கும் பெண் தன் அழகான பல் வரிசையைக் முகம் சுளிக்காமல் காட்டிக் கொண்டே ,

வணக்கம் ! இன்றைய முக்கியச் செய்திகள் ! .

MLA மார்த்தாண்டம் கடத்தப் பட்ட விவகாரம் ! . முதன் முறையாக மனம் திறந்திருக்கின்றது ஒற்றன் அமைப்பு ! அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் போர்க்கோடி ! .

ஒற்றன் விவகாரத்தில் துடியலூர் அரசு பள்ளியின் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சற்குணத்துக்கு தொடர்பு !!! போலீசார் விசாரணை !

ஒற்றன் சார்பில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார் , மின்னல் டிவியின் நிர்வாக இயக்குனர் நாராயணன் ! மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் அதை ஏற்றுக் கொண்டுள்ளது . அத்துடன் ‘ WHINESHINE ‘ நிறுவனத்தின் மதுபானங்களையும் சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒற்றனின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணானவை . அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்கிறார் – சட்டம் ஒழுங்குத் துறை அமைச்சர் புண்ணியகோடி .

விரிவான செய்திகள் :

சமீபகாலமாக தமிழ்நாட்டையே பரபரப்பாக்கியிருக்கும் ஒற்றன் அமைப்பு , சில பல திடுக்கிடும் ஆதாரங்களை, தன் இணையதளத்தில் வெளியிட்டு , இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுவிலக்குக்காகப் போராடிய, துடியலூரைச் சேர்ந்த சமூகஆர்வலர் சற்குணம் என்பவரை , MLA மார்த்தாண்டம் தன் அதிகார பலத்தால் , அவரை துன்புறுத்தியிருக்கிறார் . அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் கொள்கையில் குறியாய் இருந்த அந்த பெரியவருக்காக , இந்த ஒற்றன் அமைப்பு களம் இறங்கியுள்ளதாக ஒற்றன் இணையதளம் தெரிவித்துள்ளது . அதுமட்டுமல்லாமல் , MLA மார்த்தாண்டத்தின் நிறுவனமான WHINESHINE நிறுவன , மதுபானங்களை தடை விதிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளது ஒற்றன் அமைப்பு .

இது குறித்து , துடியலூர் சமூக ஆர்வலர் சற்குணத்திடம் கேட்ட போது,

சற்குணம் கொடுத்த பேட்டி , டிவி திரையில் தோன்றியது .

சற்று கோபமான தொனியுடன் பேசிய சற்குணம் , ‘ எனக்கும் அந்த ஒற்றன் அமைப்புக்கும் எந்த தொடர்பும் கிடையாது . யாரோ மிகப்பெரிய தவறிழைத்துள்ளார்கள் . எனக்காக இப்படி ஒரு போராட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் . நான் காந்தியவாதி . அகிம்சா வழியில் தான் என் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றேன் . என் வாழ்நாள் முழுவதும் காந்தியத்துக்காகவே வாழ்வேன் . மனம் தளரமாட்டேன் . யாராக இருந்தாலும் , இந்த காட்டு மிராண்டித்தனத்தை இத்தோடு நிறுத்துங்கள் . சமுதாயத்தில் ஆற்ற வேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்கின்றன . அதை விடுத்து இது போன்ற கேவலமான காரியங்களில் ஈடுபடாதீர்கள் . நன்றி வணக்கம் . என்று முடித்துகொண்டார் சற்குணம் .

செய்தி வாசிக்கும் பெண் தொடர்ந்தாள் .......

ஒற்றன் சார்பில் பொது நல வழக்கு ஒன்றை , அவசர வழக்காக விசாரிக்குமாறு கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மின்னல் டிவியின் நிர்வாக இயக்குனர் நாராயணன் . மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் அதை ஏற்றுக் கொண்டு, மார்த்தாண்டத்தின் சொந்த நிறுவனமான ‘WHINESHINE’ நிறுவனத்தின் மதுபானங்களை சோதனையிடவும் உத்தரவிட்டுள்ளனர் . மிகவும் அதிக முக்கியத்துவம்கொண்ட இந்த வழக்கின் விசாரணை மதியம் 12 மணியளவில் தொடங்குகிறது . நீதிமன்றத்தின் முடிவுக்கு தான் தலை வணங்குவதாக ஒற்றன் அமைப்பு கூறியுள்ளதையடுத்து , பரபரப்பான தீர்ப்பு இன்றே வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது .

இது குறித்து மின்னல் டிவியின் நிர்வாக இயக்குனர் நாராயணனிடம் கேட்ட பொழுது ,

மனசாட்சிக்கு கட்டுப்பட்டுத்தான் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்திருக்கின்றேன் . ஒற்றனின் பேச்சில் உண்மை இருப்பது போல் தோன்றுகிறது . மக்களுக்கான இந்த போராட்டத்தில் , ஒற்றன் மக்களின் உதவியைத்தான் நாடியிருக்கின்றான் . நீதிமன்றத்தின் முடிவை ஏற்பேன் என்றும் உறுதியளித்திருக்கின்றான் . இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு , அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது . இதில் இருந்தே தெரியவில்லையா ? ஒற்றனின் போராட்டம் உண்மையென்று .

டிவி திரையைப் பார்த்து வியர்த்து விறுவிறுத்துப் போன சிங்காரத்தைப் பார்த்த தோட்டக்காரன் கண்ணையா ,

ஐயா ! என்னாச்சு ? மூஞ்சி முழுக்க வேர்த்துப் போச்சுங்கய்யா !

சிங்காரம் : இல்லடா கண்ணையா ! அந்த WHINESHINE நிறுவனத்த மூடணும்னு ஒற்றன் அமைப்பு குரல் கொடுத்துருக்கு .

தோட்டக்காரன் : ஐயா ! போனா போகட்டுங்கய்யா ! அந்த மார்த்தாண்டத்தோடது தானே ! அவன் பண்ணதுக்கு இப்ப அனுபவிக்கிறான் . அதுக்கு ஏன்யா நீங்க வருத்தப்பட்றீங்க ?

சிங்காரம் : டேய் ! மட சாம்பிராணி ! அந்த நிறுவனத்தோட பாதி பங்கு என்னோடதுடா என்றார் வயிறெரிந்து கொண்டே .

13

மணி மதியம் 2.3௦ இருக்கும் . துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஜெட் வேகத்தில் போலீஸ் கார் புறப்பட்டிருந்தது . சப்-இன்ஸ்பெக்டர் குமார் மின்னல் வேகத்தில் காரை ஓட்டிக்கொண்டிருந்தார் . நெடுஞ்சாலைகள் (HIGHWAYS) வெறிச்சோடிக்கிடந்தன. சில மைல் தூரங்களைக் கடந்திருப்பார்கள் .

இன்ஸ்பெக்டர் ரவி : குமார் ! காரை எதாவது பேக்கரியில் நிறுத்துங்க ! அப்புறம் போலாம் என்றார் ..

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : Yes Sir ! போயிரலாம் ...

நெடுஞ்சாலையின் தொலைவில், “ஸ்ரீதரன் விலாஸ்” உங்களை அன்புடன் அழைக்கின்றது .. என்று பெயர்போட்ட பலகை இடது பக்க அம்புக்குறியை () தாங்கிக் கொண்டு நின்றது . அதைப் பார்த்தவுடன் இடது பக்கமாக வண்டியை திருப்பி நிறுத்தினார் குமார் . இருவரும் நடந்து ஸ்ரீதரன் விலாஸ்க்குள் நுழைந்தார்கள் . பணத்தை எண்ணிக் கொண்டிருந்த கேஷியர் (CASHIER) காக்கிச் சட்டையைக் கண்டவுடன் உடனே ஓடி வந்து ,

சார் ! என்னங்க சார் ! வேணும் என்றான் பவ்யாமாக ..

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : ரெண்டு கப் டீ ! அப்பறோம் ரெண்டு கிங்க்ஸ் (சிகரெட்) அவ்ளோதான் .

கேஷியர் :- ஓகே சார். என்று சொல்லிக்கொண்டு உள்ளே ஓடினான் .

சூடான டீயை குடித்தவுடன் , வெளியே வந்த இருவரும் சிகரெட்டை பற்ற வைத்தார்கள் . நாலாப்புறமும் புகையை வெளியிட்டு , ஓசோன் படலத்தை மாசுபடுத்த தங்களால் முடிந்த உதவியை செய்திருந்தார்கள் .

சப் – இன்ஸ்பெக்டர் குமார் : சார் ! நாம எதுக்கு இப்ப சஞ்சீவி ஹாஸ்பிடல் போறோம் ? எனக்கு ஒன்னும் புரியலையே ?

இன்ஸ்பெக்டர் ரவி : என்ன குமார் ! கேஸயே மறந்துடீங்களா ! என்றார் சிரித்துக் கொண்டே .

சப் – இன்ஸ்பெக்டர் குமார் : NO சார் ! ஆனா நம்ம கேஸுக்கும் , அந்த ஹாஸ்பிடலுக்கும் என்ன சம்பந்தம் ?

இன்ஸ்பெக்டர் ரவி : குமார் ! இதிலிருந்தே தெரியுது , இந்த கேஸ்ல உங்களோட INTEREST எப்படி இருக்குன்னு ! இப்ப ஒற்றன் கிட்டருந்து நமக்கு கெடைச்சிருக்கற ஒரே CLUE - சஞ்சீவி ஹோஸ்பிடல் தான். ஏன்னா ! ஒற்றனோட வெப்சைட்ல ‘OCTOSIN கெமிகல்’ பத்தி அவன் சொல்லும்போது, சஞ்சீவி ஹோஸ்பிடலோட POST MORTEM ரிப்போர்ட்ட ATTACH பண்ணிருந்தான் . SO ஒற்றன் சம்பந்தப்பட்ட எதோ ஒரு விஷயம் அந்த ஹோஸ்பிடல்ல ஒளிஞ்சிருக்கு . விசாரிக்க வேண்டிய வழியில விசாரிச்சா உண்மை தானா வெளிய வந்துரும் .

சப் – இன்ஸ்பெக்டர் குமார் : GREAT MOVE சார் ! நான் கொஞ்சம் வேற மாதிரி யோசிச்சிட்டு இருந்தேன் .

இன்ஸ்பெக்டர் ரவி : THATS ஓகே ! சீக்கிரம் வண்டிய எடுங்க ! இன்னும் 2 கிலோமீட்டர் தான் சஞ்சீவி ஹோஸ்பிடல் .

பத்து நிமிஷ பயணம் ! சஞ்சீவி பிரைவேட் ஹோஸ்பிடல் வந்தது . GATEக்கு பக்கத்தில் நின்றிருந்த செக்யூரிட்டி ,போலீஸ் காரைப் (CAR) பார்த்ததும் SALUTE அடித்துவிட்டு GATEஐ ஓபன் பண்ணினான் . காரை பார்க் பண்ணிவிட்டு , போலீசுக்கே உரிய மிடுக்கான நடையில் வெளியே வந்துகொண்டிருந்தார்கள் . அந்த ஹோஸ்பிடல் வளாகத்தையே , உற்று கவனித்துக் கொண்டே வரவேற்பறையை நோக்கி நடந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த RECEPTIONIST எழுந்து,

RECEPTIONIST : YES சார் ! HOW CAN I HELP U சார் ? என்றாள் வெற்றுப்புன்னகையோடு !

சப் – இன்ஸ்பெக்டர் குமார் : நாங்க டாக்டர் குணசேகரன பாக்கணும். WHERE IS HIS ROOM ?

RECEPTIONIST : சார் ! TAKE FIRST LEFT , AND ...YOU WILL FIND THE டாக்டர்ஸ் ரூம் . என்றாள் . கொஞ்ச தூரம் நடந்தவுடன் , DR . குணசேகரன் . MBBS,DA,PHD,PAIN PHYSICIAN , என்ற பெயர் பலகை தொங்கிக்கொண்டிருந்த ரூம் வந்தது . சப் –இன்ஸ்பெக்டர் குமார் கதவை திறந்து , டாக்டர் ! MAY COME IN ! என்றார் .

காதில் வைத்திருந்த டெலிபோனை அவசர அவசரமாக கட் பண்ணிவிட்டு, YES PLEASE என்றார் . DR .குணசேகரன் .

உள்ளே நுழைந்தவுடன் , HOW ARE YOU டாக்டர் ? என்றார் இன்ஸ்பெக்டர் ரவி.

YA I’m FINE சார் . PLEASE . PLEASE TAKE YOUR SEAT . என்றார்,

இருவரும் நாற்காலியில் அமர்ந்தவுடன் , சப்-இன்ஸ்பெக்டர் குமார் தொடர்ந்தார் .

குமார் : டாக்டர் ! ஒற்றன் நியூஸ் பத்தி ஒரு சின்ன FORMAL என்கொய்ரி !.

கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு , எஸ் PLEASE ! என்ற டாக்டர் குணசேகரனின் முகத்தில் , சற்று மாற்றம் தெரிந்தது . அந்த AC அறையிலும் அவருக்கு வியர்த்து வழிந்திருந்தது. . அவரின் முகமாற்றத்தை இன்ஸ்பெக்டர் ரவி கூர்ந்து கவனித்தார் ,

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : டாக்டர் ! நாங்க சுத்தி வளைச்சு பேச விரும்பல. எங்களுக்கு அதுக்கான நேரமும் இல்லை.

ஒற்றன் வெளியிட்ட தகவல்களில் , உங்க ஹாஸ்பிடலோட பிரேத பரிசோதனை REPORTடும் இடம்பெற்றிருக்கு . உங்களோட அனுமதி இல்லாம அந்த ரிப்போர்ட் வெளியுலகதுக்கு போயிருக்கவே முடியாது .

நீங்க சொல்லப் போற பதில வெச்சுத்தான் , விசாரணையை இங்க வெச்சுக்கலாமா ? இல்ல ஸ்டேஷன்ல வெச்சுக்கலாமான்னு முடிவு பண்ணனும் .

டாக்டர் குணசேகரன் : சற்று வியர்வை வழிந்த முகத்துடன் ,

சார் ! நானே இந்த உண்மையை உங்ககிட்ட முன்னாடியே சொல்லலாம்னு தான் இருந்தேன் என்று ஆரம்பித்தார் .................... . சரியா ! ஒரு மாசத்துக்கு முன்னாடி , ஒரு பிரேத பரிசோதனை ரிப்போர்ட்ட நான் செக் பண்ணும்போது, அந்த DEAD BODYயோட உடம்புல ஆக்டோசின்ங்கற நச்சுப்பொருள் அதிகமாக கலந்து இருக்கிறது எனக்கு தெரிய வந்துச்சு . அது மனிதனுக்கு அதீத போதை ஏத்துற ரசாயனம் . வெளி நாட்ல உபயோகிக்க தடை செய்யப்பட்டது . அப்ப இந்த மேட்டர நான் பெருசா எடுத்துக்கல .BUT அடுத்தடுத்து இதே மாதிரி ரெண்டு மூணு ரிப்போர்ட் எனக்கு வந்துச்சு . அப்பத்தான் நான் இதோட ROOT CAUSE FIND பண்ண ஆரம்பிச்சேன் . அதுக்கு காரணம் மார்த்தாண்டத்துக்குச் சொந்தமான, ‘ WHINESHINE ‘ நிறுவனத்தோட மதுபானம் தான்னு, நான் கடைசியா கண்டுபுடிச்சேன் . அதுல தான் இந்த கெமிக்கல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கு . இது வெளி உலகத்துக்கு தெரியறதுக்கு முன்னாடி , இது விஷயமா நான் மார்த்தாண்டத்துக்கிட்ட உண்மைய சொல்லலாம்னு நினைக்கும்போதுதான் , அவர் கடத்தப்பட்ட விசயமே எனக்கு தெரிய வந்தது . ஆனா நேத்து எப்படி அந்த POST MORTEM ரிப்போர்ட் , ஒற்றன் கிட்ட போச்சுன்னு எனக்கு தெரியாது . INFACT , அந்த மேட்டர் எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு . நானும் ஹோஸ்பிடல்ல நெறையா பேர் கிட்ட விசாரிச்சுப் பார்த்துட்டேன் . ஒரே மர்மமா இருக்கு. சத்தியமா ! எனக்கும் அந்த ஒற்றன் இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ..

இன்ஸ்பெக்டர் ரவி : ஓகே ! POST MORTEM ரிப்போர்ட்ட HANDLE பண்ற உங்க டீம நாங்க விசாரிக்கலாமா ?

டாக்டர் குணசேகரன் : SURE சார் ! என்று சொல்லி பக்கத்தில் இருந்த டெலிபோனில் நம்பரைத் தட்ட மறுமுனையில் கால் போனது .

HEAD NURSE சகுந்தலா எடுத்து பேசினாள் .

எஸ் ! டாக்டர் .

டாக்டர் : NURSE சகுந்தலா ! உங்க TEAMAH கூட்டிட்டு உடனே வாங்க என்றார்.

பத்து நிமிடத்திற்குள் , HEAD NURSE சகுந்தலாவுடன் , JUNIOR நர்சுகள் பிரியா , ஸ்ரீநிதி, மலர்விழியும் ஆஜரானார்கள் . காக்கிச் சட்டையைப் பார்த்தவுடன் கொஞ்சம் பயந்திருந்தாள் பிரியா . இன்ஸ்பெக்டர் ரவியும் ,டாக்டர் குணசேகரனும் நர்சுகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரித்தனர் .

மலர்விழியும் , ஸ்ரீநிதியும் பரபரப்பில்லாமல் , கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருந்தனர் . பிரியாவிடம் இது பற்றி விசாரிக்கும்போது , அவளுடைய பதில்களில் இருந்த பதற்றம் , அவர்களுக்கு சந்தேகத்தை அதிகரித்தது .

அந்த நேரம் பார்த்து இன்ஸ்பெக்டர் – ரவியின் செல்போன் கதறியது .

எடுத்துப் பார்த்த அவர் முகம் சுளித்தார் .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : யார் சார் ? போன்ல ?

இன்ஸ்பெக்டர் ரவி : MINISTER புண்ணியகோடி ......................எப்படியும் இப்ப நாம திட்டு வாங்க தான் போறோம் ..

கடைசியில் PHONE-ஐ அட்டென்ட் பண்ணினார் .

அமைச்சர் புண்ணியகோடி : ஹலோ ! MR ரவி அவர்களே ! என்ன பண்ணீட்டு இருக்கீங்க ? என்றார் நக்கலாக .

இன்ஸ்பெக்டர் ரவி : சார் ! நாங்க சஞ்சீவி ஹோஸ்பிடல்ல , ஒற்றன் கேஸ் சம்பந்தமா விசாரிச்சுட்டு இருக்கோம் .. கிட்ட நெருங்கிட்டோம் சார் . எப்படியும் ஒற்றன் யாருங்கறத இன்னிக்குள்ள கண்டுபிடிசிடுவோம் சார் .

அமைச்சர் புண்ணியகோடி : கிழிச்ச ! இதுவரைக்கும் ஏதாவது ஒரு தடயமாவது கண்டு புடிச்சியாயா ? நீயெல்லாம் எதுக்குயா போலீஸ் வேலைக்கு வந்த ? வெக்கமா இல்ல. மாசமாசம் சம்பளம் வாங்குறியே , அதுக்கான வேலைய ஒரு நாலாவது பாத்துருக்கியா இந்த கேஸ்ல . இதுக்கப்புறம் நீ அங்க ஒன்னும் கிழிக்க வேண்டாம் .

மொதல்ல நியூஸ பாரு . ஒற்றனுக்கு சாதகமா கோர்ட்டே தீர்ப்பு சொல்லிருச்சு . நாளைக்கு காலைல 10 மணிக்கு , மார்த்தாண்டத்த கூட்டிட்டு ஒற்றன், கோர்ட்ல சரணடையனும்னு COURT ORDER போட்ருக்கு . SO, நீ எண்ண பண்றனா , COURT க்கு வெளில பாதுகாப்பு ஏற்பாடுகள மட்டும் நீ கவனிச்சா போதும் . இன்னும் அங்கிருந்து கண்டுபுடிக்கிறேன் , கிழிக்கிறேன்னு டைம் வேஸ்ட் பண்ணாத . உன்னமாதிரி ஒரு வெத்துவேட்டு கிட்ட போய் கேஸ ஒப்படைச்சேன் பாரு , என்ன சொல்லணும் . போன கட் பண்னுயா ! என்று இணைப்பைத் துண்டித்தார் .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : என்ன சார் ஆச்சு ?

இன்ஸ்பெக்டர் ரவி : ஒற்றனுக்கு சாதகமா தீர்ப்பு வந்துருக்காம் . நாளைக்கு காலைல 10 மணிக்கு ஒற்றன் கோர்ட்ல SURRENDER ஆகணுமாம் . அதுக்கு நாம பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கனும்னு அமைச்சர் புண்ணியகோடி சொல்றாரு .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : டாக்டர் ! ஒரு நிமிஷம் , டிவிய ஆன் பண்ணி நியூஸ் சேனல் வைங்க ..

டாக்டர் குணசேகரன் : YES ! MR குமார் . என்று டிவியை ஆன் பண்ணி நியூஸ் சேனலை மாற்றினார் .

ஒற்றன் விவகாரம் : கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு என்று BREAKING நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது .

செய்தி வாசிக்கின்ற நபர் தொடர்ந்தார் .

சமூக ஆர்வலர் சற்குணம் மற்றும் துடியலூர் பொதுமக்கள் ஆகியோர் அளித்த சாட்சியங்களை, மையமாக வைத்து விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ,

துடியலூர் அரசு பள்ளிக்கு அருகே இருந்த, மதுபானக் கடையை முற்றிலும் அகற்றக்கோரி அதிரடி தீர்ப்பளித்தனர் . ‘WHINESHINE’ நிறுவனத்தின் மதுபானங்களை சோதனையிட்டதில் , அதில் அக்டோசின் ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து , அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது . இது தொடர்பாக MLA மார்த்தாண்டம் மற்றும் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் மீதும் விசாரணை கமிஷன் விரைவில் அமைக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது . மேலும் நாளை காலை 1௦ மணிக்குள் , MLA மார்த்தாண்டம் மற்றும் கார் டிரைவர் கதிரேசனுடன் , கோவை நீதிமன்ற வளாகத்தில் , நீதிபதிகள் முன்னிலையில் ஒற்றன் சரணடைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர் . மேலும் மின்னல் டிவியின் நிர்வாக இயக்குனர் நாராயணன், தனது மனுவில் கேட்டுக்கொண்டதன்படி , இது விசேஷமான வழக்கு என்பதால் , நாளை நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணை ,பொதுமக்களின் பார்வைக்காக பெரிய திரையில் திரையிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது .

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சமூக ஆர்வலர் சற்குணம்,

இந்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் , இதற்காக தான் ஒற்றன் அமைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார் . இருப்பினும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு ஒற்றன் சரணடைய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் . மேலும் ஒற்றன் யார் ? என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது .

முன்னதாக ஒற்றனின் செய்கை நியாயமானதா ? இல்லையா ? என்பது பற்றி பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் , 72% பேர் ஒற்றனுக்கு சாதகமாக கருத்து தெரிவித்துள்ளனர் .

14

நேரம் மாலை 6.55 மணியைத் தொட்டிருந்தது . நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தது . கடைசியாக ஒரு முறை பாதுகாப்பு ஏற்பாடுகளை சரி பார்த்து விட்டு , இன்ஸ்பெக்டர் ரவியும், சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் வீடு திரும்பினார்கள் . மிகுந்த களைப்புடன் வீட்டுக்கு வந்த குமார் , அப்படியே மெத்தையில் படுத்துவிட்டுவ டிவியை ON பண்ணினார் . மின்னல் டிவியின் , ‘நிதர்சனத்தின் மறுபக்கம்’ நிகழ்ச்சி தொடங்கியிருந்தது . மிகுந்த உற்சாகத்துடன் , திரையில் தோன்றினார் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளார் விஜயன் .

“ சமுதாயத்தின் உண்மை நிலவரங்களை , உள்ளதை உள்ளபடி, உலகிற்கு எடுத்துரைக்கும் ‘நிதர்சனத்தின் மறுபக்கம்’ நேரலை நிகழ்ச்சியில் உங்களை வரவேற்கிறேன் என்று பேச ஆரம்பித்தார் .

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஒற்றன் வழக்கு . நடுநிலையான தீர்ப்பை வழங்கியிருக்கின்றது நீதிமன்றம் . நாளை நீதிமன்றத்தில் சரணடைவாரா ஒற்றன் ? . அரசியல்வாதிகளின் முகத்திரைகளை கிழித்த , அந்த முகமூடி மனிதன் யார் ? எதற்காக இந்த போராட்டம் ? இதுபோன்ற பல கேள்விகளைத்தான் ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது . இவை அனைத்திற்குமான பதில் இன்னும் 14 மணி நேரங்களில் ...

தீடீரென்று கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது . பதற்றமில்லாமல் மெதுவாக சென்று , கதவைத் திறந்த குமாருக்கு மிகுந்த ஆச்சர்யம் . அமைச்சர் புண்ணியகோடி வெளியே நின்று கொண்டிருந்தார் .

குமார் : ஐயா ! வாங்க ! வாங்க ! ( குரலில் பதற்றம் தொற்றியிருந்தது ).

அமைச்சர் புண்ணியகோடியும் , அவரது சகாக்களும் உள்ளே நுழைந்தார்கள் .

உடனே கதவை தாளிட்டு விட்டு , அவர்களை உட்காரவைத்தார் சப்-இன்ஸ்பெக்டர் குமார் .

அமைச்சர் புண்ணியகோடி : என்ன குமார் ! பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு ? .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : ஐயா ! எல்லாம் நல்லா போய்ட்டு இருக்கு . கோர்ட் வளாகத்த சுத்தி , எந்த விதமான அசம்பாவிதங்களும் நடக்காதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கு . ஒற்றன் வருவான்னு நீங்க உறுதியா நம்புறீங்களா ஐயா ? .

அமைச்சர் புண்ணியகோடி : வருவான் ! கண்டிப்பா அவன் வருவான் . ஆனா திரும்பிப் போக மாட்டான் . போனா நேரா பரலோகந்தான் ! என்றார் (இறுக்கமான தொனியில் ) .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : ஐயா ! என்ன சொல்றீங்க ? எனக்கு ஒன்னும் புரியலயே .

அமைச்சர் புண்ணியகோடி : இல்ல ! குமார் !. அடுத்த மாசம் ELECTION வேற வருது . ஏற்கெனவே அவனுக்கு மக்கள் சப்போர்ட் கொஞ்சம் அதிகமாவே இருக்குது . அவன் நாளைக்கு கோர்ட்ல பேசுற , ஒவ்வொரு வார்த்தைக்கும் , பல லட்சம் ஓட்டுகள் கைமாறும்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாங்க . என்னோட 27 வருஷ அரசியல் வாழ்க்கைக்கு , வெறும் மூனே (3) நாள்ல முற்றுப்புள்ளி வச்சுட்டான் . இந்த 27 வருசத்துல , இன்னிக்குத்தான், முதல் முறையா , நான் இல்லாம, ஒரு அமைச்சரவைக் கூட்டம் நடந்திருக்குது . கூட்டத்துல எனக்கு எதிரா பல முடிவுகளை எடுத்திருக்காங்க . இத இப்படியே விட்றக்கூடாது . என்னோட அரசியல் வாழ்க்கையை , காலி பண்ண அவன, நான் காலி பண்ணியே ஆகணும் . அரசியல்வாதின்னா அடிப்படையிலியே கிரிமினல்னு அவனுக்கு நாம காட்டனும் . அதுக்கு நீ தான் எனக்கு உதவி பண்ணனும் .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : (அவருடைய பேச்சில் இருந்த வலியை குமாரால் புரிந்துகொள்ள முடிந்தது ....) சொல்லுங்க ஐயா !. நான் என்ன பண்ணனும் நீங்க நெனைக்கிறீங்க ?.

அமைச்சர் புண்ணியகோடி : கோர்ட் வளாகத்திலயே அவன நாம சொர்க்கத்துக்கு அனுப்பனும் ..உன்ன மட்டும் தான் நான் நம்பி வந்துருக்கேன்.

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : ஐயா ! இதுனாலே எனக்கெதாவது பிரச்சனை வந்துச்சுன்னா ? என்ன பண்றது ?

அமைச்சர் புண்ணியகோடி : உனக்கு ஒரு பிரச்னையும் வராது . வராம நான் பாத்துக்குறேன் . எனக்கு இந்த ஒரு உதவியும் மட்டும் பண்ணீட்டீனா ! வாழ்நாள்ல, நீ நெனச்சுப் பார்க்க முடியாத, ஆடம்பர வாழ்கையை நான் உனக்கு பரிசா தர்றேன் .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : அதெல்லாம் இருக்கட்டுங்கய்யா . எப்படி இத பண்ண முடியும்னு நெனைக்கிறீங்க ? கோர்ட்ட சுத்தியும் போலீஸ் பாதுகாப்பு இருக்கு . இதுக்கும் மேல கண்காணிப்பு கேமெராக்கள் வேற இருக்கு . இது எல்லாத்தையும் மீறி அவன எப்படி சார் நம்ம க்ளோஸ் பண்ண முடியும் ?

அமைச்சர் புண்ணியகோடி : போலீஸ் பாதுகாப்ப மீறி , அவன ஒன்னும் பண்ண முடியாது . அதனாலதான் , இப்ப போலீஸ வெச்சே அவன் கதைய முடிக்கலான்னு முடிவு பண்ணீருக்கேன் . அது ஒன்னும் அவ்வளவு பெரிய கஷ்டம் கெடையாது . காந்தியடிகளோட கத்தியின்றி இரத்தமின்றி FORMULAவத்தான் இங்க நாம USE பண்ணப் போறோம் . இது என்னென்னு தெரியுதா ? என்று கையைக் காட்டினார் . மிகவும் சிறிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஊசி (INJECTION) அவர் கையில் இருந்தது . கால் சுண்டுவிரல் அளவே இருந்த அந்த ஊசியில் மருந்தும் நிரப்பப்பட்டிருந்தது .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : என்னங்கய்யா இது விஷ மருந்தா ?

அமைச்சர் புண்ணியகோடி : நீ நெனைக்கிற மாதிரி இது சாதாரண மருந்தில்ல . நாட்டு வைத்தியத்துல கைதேர்ந்தவர்களால் தயார் பண்ண , ஒரு கொடும் விஷம் . இதுல, ஒரு இம்மி அளவு, நம்ம ரத்தத்துல கலந்தா போதும் . பத்தே நிமிஷத்துல யாராயிருந்தாலும் பரலோகந்தான் . அவன கோர்ட்க்குள்ள PRODUCE பண்றதுக்குள்ள, இத நீ அவன் உடம்புல செலுத்தனும் . கூட்டத்துக்கு மத்தியில, அவன இழுத்துட்டு வரும்போது இந்த வேலையை சத்தமே இல்லாம நீ முடிச்சிடு . எறும்பு கடிக்கிற மாதிரி தான் இருக்கும். .அவனுக்கும் பெருசா ஒன்னும் தெரியாது . லைட்டா ஒரு உணர்வு இருக்கும் அவ்ளோதான் . இன்னொரு விஷயம் இதுக்கு மாற்று மருந்தே கிடையாது .

தப்பித்தவறி கூட உன் உடம்பில எங்கயாச்சும் பட்டுறப்போகுது . அதுக்கப்புறம் உனக்கு மலர்வளையம் வைக்கவேண்டி வந்துரும் ஜாக்கிரதை. OCTOSIN ரசாயனத்தாலதான் நெறைய பேர் செத்தாங்கன்னு கண்டுபிடிச்சான்ல, இப்ப அவன் எப்படி சாகப்போறான்னு அவனுக்கே தெரியாம அவன் சாகனும்.

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : ஐயா ! உங்களுக்காக நான் இத பண்றேன் . ஆனா ! எனக்கு இன்ஸ்பெக்டர் ரவிய நெனச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு . அந்தாளு கொஞ்சம் தொல்ல புடிச்சவரு . கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிசிடுவான் .

அமைச்சர் புண்ணியகோடி : கிழிப்பான் ! அவனால ஒன்னும் பண்ண முடியாது. அதத்தெரிஞ்சுதான இந்த வேலையை உன்கிட்ட ஒப்படைச்சேன் .

நீ கவலைப்படாம இந்த வேலையை முடி . மத்தத நான் பாத்துக்குறேன் . என்று சொல்லிவிட்டு தன் சகாக்களுடன் கெளம்பினார் .

கையில் இருந்த ஊசியை பத்திரமாக எடுத்து வைத்துவிட்டு , நாளை நடக்கப் போகும் சம்பவங்களை நினைத்துக்கொண்டே மெத்தையில் படுத்தார் . பல விதமான சிந்தனைகள் அவர் மனதை அரித்துக் கொண்டிருந்தது . நேரம் நள்ளிரவு 1 மணியைக் கடந்ததும் , கடைசியாக தூக்கம் அவர் கண்களை எட்டிப் பார்த்தது .

15

அடுத்த நாள் காலை 6 மணி . அலாரம் அடிக்கத் தொடங்கியிருந்தது . திடீரென்று விழித்து மணியைப் பார்த்த குமார் , மட மட வென்று எழுந்து , கிளம்பும் வேளைகளில் இறங்கினார் . சரியாக 6:3௦க்கு , குமாரின் டுவீலர் , புகையை கக்கிக் கொண்டு பறந்தது . நெடுஞ்சாலைகளை பனி மூழ்கியிருந்தது . வழி நெடுகிலும் ஒரு வித பயம் அவரைத் தொற்றியிருந்தது . இந்த வேலையை நம்மால் முடிக்க முடியுமா ? ஏதேனும் பிரச்சனை வந்தால் நம்மால் சமாளிக்க முடியுமா ? என பல கேள்விகள் அவரின் சிந்தனைகளை சிதைத்துக் கொண்டிருந்தது . அந்த நேரம் பார்த்து செல்போனில் இருந்து அழைப்பு வந்தது . BLUETOOTH HEADSETல் , CALLஐ அட்டென்ட் பண்ணினார் . மறுமுனையில் இன்ஸ்பெக்டர் ரவி இருந்தார் .

இன்ஸ்பெக்டர் ரவி : ஹலோ ! குமார் ! எங்க இருக்கீங்க ?

சப் –இன்ஸ்பெக்டர் குமார் : சார் ! நான் பைக்ல வந்துட்டு இருக்கேன் . 15 MINUTESல அங்க இருப்பேன் .

இன்ஸ்பெக்டர் ரவி : ஓகே ! DONE என்று இணைப்பைத் துண்டித்தார் .

போனை கட் பண்ணிவிட்டு , வண்டியின் வேகத்தைக் கூட்டினார் .

15 நிமிடப் பயணம் கோவை நீதிமன்ற வளாகத்தை அடைந்தார் குமார் .

மணி 7-ஐ தாண்டியிருந்தது . நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் , துப்பாக்கியேந்திய போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர் . அங்கே நின்று கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஓடி வந்து GOOD MORNING சார் என்று SALUTE அடித்தார் .

சப் –இன்ஸ்பெக்டர் குமார் : GOOD MORNING ! இன்ஸ்பெக்டர் எங்க இருக்கார்?

போலீஸ் கான்ஸ்டபிள் : சார் ! அங்க INSTRUCTIONS குடுத்துட்டு இருக்கார் சார் என்று கையைக் காட்டினார் .

ஓகே ! நான் பாத்துக்குறேன் என்று சொல்லி இன்ஸ்பெக்டர் ரவியை நோக்கி நடந்தார் குமார் .

கும்பலாக நின்றுகொண்டிருந்த போலீசாருக்கு நடுவே , கம்பீரமாக பேசிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

“ கோர்ட் வளாகத்த சுத்தி , ரெண்டு கிலோமீட்டருக்கு முன்னாடியிருந்தே , அங்க போற வர்ற , எல்லாம் வண்டி NUMBERSயும் NOTE பண்ணிட்டு, தரவா செக் பண்ணுங்க . MEANWHILE WIRE–LESS DEVICEல எதாருந்தாலும் அப்டேட் பண்ணீட்டே இருங்க . சந்தேகப்படற மாதிரி யாராக இருந்தாலும் ARREST பண்ணுங்க . பத்திரிகைக்காரங்களையும் , இந்த கேஸ்க்கு சம்பந்தப் பட்டவங்கல மட்டும் உள்ள அனுப்புங்க . எக்காரணத்தக்கொண்டும் பொதுமக்கள JUDGEMENT ஏரியாக்குள்ள அனுப்பாதீங்க . BE ALERT . DISPERSE என்று முடித்தார் .

அந்த நேரம் பார்த்து , சப்-இன்ஸ்பெக்டர் குமார் , GOOD MORNING சார் ! என்று SALUTE அடித்தார் .

இன்ஸ்பெக்டர் ரவி : GOOD MORNING ! ஏன் குமார் இவ்ளோ LATE பண்ணீட்டீங்க ?

சப்–இன்ஸ்பெக்டர் குமார் : I’M SORRY சார் ! இன்னிக்கு கொஞ்சம் LATE ஆயிடுச்சு

இன்ஸ்பெக்டர் ரவி : இட்ஸ் ஓகே ! COME ON ! நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு என்று இருவரும் CCTV MONITORING ஏரியாவை நோக்கி நடந்தார்கள்.

நேரம் மணி 7.3௦ ஆயிருந்தது . நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே , சைக்கிள்களில் டீ வியாபாரம் பிரமாதமாக போய்க்கொண்டிருந்தது . ஆங்காங்கே வக்கீல்கள் கூட்டம் போட்டு , இந்த வழக்கைப் பற்றி காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார்கள் . மீடியாக்காரர்கள் தனித் தனி குழுக்களாக அங்கே முகாமிட்டு இருந்தனர் . நீதிமன்ற நடவடிக்கைகளை, நேரலையாக (LIVE TELECAST) பொது மக்களுக்கு தொகுத்து வழங்குவதற்கான , ஏற்பாடுகளை அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள் . இந்த வழக்குக்கு சம்பந்தப்பட்டவர்களும், பொதுமக்களும் நேரம் ஆக ஆக , ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தார்கள் . மீடியாக்கள் அவர்களை விடாப்பிடியாக பேட்டியெடுத்துக் கொண்டிருந்தனர் . கோர்ட் வளாகத்தில் மிகப்பெரிய திரை (SCREEN) ஒன்று வைக்கப்பட்டிருந்தது . இதுவரை அந்த திரையில் எதுவும் ஒளிபரப்பப்படவில்லை . கொஞ்ச நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் கடலாக திரண்டிருந்தது . பாதுகாப்பு கவசங்களுடன் கூடிய போலீஸ்காரர்கள் , பொதுமக்களை கட்டுப்படுத்த தொடங்கினர் . இப்படி கோர்ட் வளாகமே ஒரே பரபரப்பாகக் காணப்பட்டது .

மின்னல் டிவியின் நிர்வாக இயக்குனர் நாராயணனும் , ‘ நிதர்சனத்தின் மறுபக்கம் ’ விஜயனும் , கோர்ட் வளாகத்திலேயே , தங்களுடைய நேரலை நிகழ்ச்சியை தொடங்கியிருந்தனர் .

காதில் சொருகியிருந்த WIRE-LESS மைக்கை சரிபார்த்து விட்டு , கேமராமேனுக்கு முன்னால் , பேச ஆரம்பித்தார் விஜயன் .

அனைவருக்கும் வணக்கம் ! நேரம் காலை 8 மணி ஆகின்றது . மின்னல் டிவி நிகழ்ச்சிக்காக , கோவை நீதிமன்ற வளாகத்தில் இருந்து , உங்களின் ‘ ‘ நிதர்சனத்தின் மறுபக்கம் ‘ விஜயன் பேசுகிறேன் .

‘ எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகலாம் . சில சமயங்களில், ஏமாற்றமே எதிர்பார்ப்பாக இருக்கலாம் . ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழகமே , ஒற்றன் என்ற தனிமனிதனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது .

இன்று காலை GOOGLE-ல் , தமிழகத்தால் , அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் , ஒற்றன் என்கிற வார்த்தை (WORD) முதல் இடம்பெற்றுள்ளது . இன்று காலை 1௦ மணிக்குள் ஒற்றன் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்துள்ளது . வருகின்ற சட்டமன்ற தேர்தலில் , ஒற்றனின் தாக்கம் , ஆளுங்கட்சிக்கு எதிரான அலையை ஏற்படுத்தும் என்று , அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள் , தங்களுக்கான ஒரு தலைவனை கண்டுவிட்டதாகவே , இளைஞர் பட்டாளம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றது . இப்படி கோவை நீதிமன்ற வளாகமே , மக்கள் வெள்ளத்தில் , மிதப்பது போல் இருக்கின்றது இப்போது நீங்கள் பார்க்கும் காட்சி . நிச்சயம் ஒற்றன் வருவான் என்கின்ற நம்பிக்கை அலை மட்டும் இங்கு பரவலாக வீசிக்கொண்டிருக்கின்றது .

நல்லதே நடக்கும் . காத்திருங்கள் ! நீதிமன்ற நிகழ்வுகளை , உள்ளதை உள்ளபடி , உடனுக்குடன் , நேரலையாக , உங்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் ,

மின்னல் டிவி நாராயணன் .......... மற்றும் கேமராமேனுடன் உங்கள் விஜயன் . என்று முடித்தார் .

அந்த நேரம் பார்த்து , கடத்தப்பட்ட MLA மார்த்தாண்டத்தின் மனைவி நிர்மலா , மிகுந்த நம்பிக்கையுடன் காரில் வந்து இறங்கினார் . உடனே மீடியாக் கூட்டம் அவரை சுற்றிக்கொண்டது .

PLEASE ! NO COMMENTS ! NO COMMENTS ! என்று சொல்லி பதிலளிக்கமால் , நீதிமன்றத்தின் ENTRANCEஐ நோக்கி முன்னேறினார் .

இன்ஸ்பெக்டர் ரவியும் , சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் , CCTV MONITORING ரூமுக்குள் நுழைந்தார்கள் .

உள்ளே , கிட்டத்தட்ட 15 பேர் , தலையில் HEADSET-ஐ மாட்டிக் கொண்டு , ஆளுக்கொரு கம்ப்யூட்டர்-ஐ முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தனர் .

கம்ப்யூட்டர் திரையில் , CCTV கேமராவால் பதிவுசெய்யப்பட்ட நேரலைக் காட்சிகள் , ஓடிக்கொண்டிருந்தது .

போலீஸ்காரர்களைப் பார்த்ததும் , அனைவரும் எழுந்து நின்றிருந்தனர் .

இன்ஸ்பெக்டர் ரவி , பேச ஆரம்பித்தார் .

‘HI GUYS , PLEASE SIT DOWN ! . TIME கிட்டத்தட்ட 8.30 ஆயிடுச்சு . கோர்ட்ட சுத்தி நடக்கிற ஒவ்வொரு MOMENT-யும் , CLEARரா WATCH பண்ணுங்க . ஏதாவது சந்தேகப்படும்படியா இருந்துச்சுன்னா , PLEASE INFORM OVER WIRELESS DEVICE . WE ARE IN NEED OF YOUR SUPPORT NOW . SO PLEASE BE CAREFUL . THANK YOU என்று முடித்தார் .

இதுவரை தைரியாமாக இருந்த சப் – இன்ஸ்பெக்டர் குமாருக்கு , முதன் முதலாக பதற்றம் தொற்றியிருந்தது . அவர் செல்போனில் இருந்து சப்தம் வந்தது .எடுத்துப் பார்த்த அவருக்கு , WHATSAPP-இல் இருந்து NOTIFICATION வந்திருந்தது .

வேலையை சிறப்பாக முடிக்க வாழ்த்துக்கள் .............................

BY புண்ணியகோடி என்றிருந்தது . சற்றே நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டருடன் வெளியே வந்தார் குமார் .

வெளியே சற்குணம் ஐயா , மின்னல் டிவிக்காக பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார் . நமச்சிவாயமும் , முத்துச்சாமியின் மகன் ரத்தினமும் உடன் இருந்தனர் .

விஜயன் : ஐயா ! ஒற்றன் யாருனு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமாக இருக்கீங்களா ?

சற்குணம் ஐயா : ஆமாம் . உண்மையிலே , ஆனா நான் மட்டும் இல்ல . இங்கு இருக்கிற அத்தனை பேரோட எதிர்பார்ப்பும் அதுதான் . பொறுத்திருந்துதான் பாக்கணும் . என்று சொல்லிக்கொண்டு JUDGEMENT ஏரியாவை நோக்கி நடந்தார் . .

நேரம் 8.55-ஐக் கடந்திருந்தது . சஞ்சீவி HOSPITAL டாக்டர் குணசேகரனும் , நர்சுகளும் , உள்ளே வந்திருந்தார்கள் . கேஸ் சம்பந்தப்பட்டவர்கள் வரிசையில் தங்கள் பெயர்களை REGISTER செய்து கொண்டு JUDGEMENT ஏரியாவுக்குள் நுழைந்தார்கள் .

பத்து மணி , சரியாக ஒரு மணி நேரமே இருந்தது .

நீதிமன்றத்திற்குள் ஒற்றன் நுழைவதற்காக தனி பாதை அமைக்கப் பட்டிருந்தது . 9.00 மணியில் இருந்து நீதிமன்றத்தில் ,நடக்கும் நிகழ்வுகள் நேரலையாக , டிவி சேனல்களில் ஒளிபரப்பாகியது .

நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் , JUDGEMENT ஏரியா நேரலையாக தெரிந்தது . மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் , அவரவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் . அவர்களுக்கு பின்னால் இருந்த சுவரில் , புகைப்படத்துடன் காந்தி சிரித்துக்கொண்டிருந்தார் . கண்கள் கட்டப்பட்ட நிலையில் , கையில் தராசைப் பிடித்தவாறு நீதிதேவதை நின்று கொண்டிருந்தாள் . குற்றவாளிக் கூண்டு காலியாக இருந்தது . வழக்குக்கு சம்பந்தப்பட்டவர்கள் அமரும் இருக்கையில் , மின்னல்டிவியின் நிர்வாக இயக்குனர் நாராயணன் மற்றும் சற்குணம் ஐயாவும் , நமச்சிவாயமும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர் . டாக்டர் குணசேகரனும், நர்சுகளும் , இரண்டாவது வரிசையில் இருந்தார்கள் . இளம் நர்சுகள் ப்ரியாவும் , ஸ்ரீநிதியும் எந்தவிதமான சலனமும் இல்லாமல் இருக்க , மலர்விழியின் முகத்தில் ஒரு இனம்புரியாத நடுக்கம் இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. அதை உன்னிப்பாக கவனித்திருந்தார் டாக்டர் குணசேகரன் .

நேரம் 9.2௦ : இன்ஸ்பெக்டர் ரவியும் , சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் , காதில் மாட்டியிருந்த WIRE – LESS கருவியுடன் , ஓட்டமும் நடையுமாக நாலாப்புறமும் திரிந்து கொண்டிருந்தனர் . ஒவ்வொரு நிமிடமும் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருந்தது . எந்த நேரமும் ஒற்றன் வரலாம் என்கின்ற நிலையில் , சப்-இன்ஸ்பெக்டர் குமாரின் இதயத்துடிப்பு அதிகரித்திருந்தது .

தன் பாக்கெட்டில் இருந்த ஊசியை எடுத்துப் பார்த்துவிட்டு , தயாரான நிலையில் வைத்திருந்தார் .நேரம் ஆக ஆக , பொதுமக்களிடம் இருந்து ஆரவாரம் அதிகரித்திருந்தது . ஒரு கட்டத்தில் எல்லை மீறிய பொதுமக்கள் கத்தத் தொடங்கியிருந்தனர் . நிலைமையை சமாளிக்க முடியாமல் , பாதுகாப்பு போலீசார் திணறிக் கொண்டிருந்தனர் .

வேறு வழியில்லாமல் , ஒலிபெருக்கியை கையில் எடுத்த இன்ஸ்பெக்டர் ரவி பொதுமக்களைப் பார்த்து பேசத் தொடங்கினார் .

“ PLEASE ! கொஞ்சம் அமைதியா இருங்க ! .PLEASE .. இப்படி சத்தம் போட்றதனால ஒன்னும் ஆகப்போறது இல்ல . தயவுசெய்து எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க . PLEASE . .ஆரவாரம் சற்றே தணிந்திருந்தது .

நேரம் 9: 40-ஐ தொட்டிருந்தது . சப்-இன்ஸ்பெக்டர் குமாரின் முகம் வியர்த்து வழிந்திருந்தது . உடல் சற்றே நடுக்கம் கண்டிருந்தது . வியர்த்து வழிந்து நின்று கொண்டிருந்த குமாரைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவி ,

இன்ஸ்பெக்டர் ரவி : குமார் ! என்னாச்சு ! ARE YOU OK ? என்றார் .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : (எங்கே கண்டுபிடித்து விடுவாரோ என்ற பயத்தில்) , YES சார் ! I’m ஓகே .

இன்ஸ்பெக்டர் ரவி : ரொம்ப டென்ஷனா இருப்பீங்க போல இருக்கு . இப்படி வேர்த்துருக்கு .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : NO சார் ! (பதற்றத்தில் என்ன சொல்வதென்றே தெரியாமல் .................... யோசித்துவிட்டு) எப்படி இவ்ளோ கூட்டத்துக்கு நடுவே, ஒற்றன கோர்ட்ல PRODUCE பண்றது . ஒரே பதற்றமா இருக்குது சார் . அவன் வருவான்னு இன்னும் நம்புறீங்களா ?

இன்ஸ்பெக்டர் ரவி : குமார் ! வெளிய நிக்கிற கூட்டத்தப் பாத்தீங்களா ? இது ஏதோ காசு குடுத்து , கட்சி மாநாட்டுக்கு கூட்டிட்டு வந்த கூட்டம் இல்ல . சமுதாயத்துக்காக போராடுன ஒரு REAL HEROவ பாக்க வந்த கூட்டம் . இவ்வளோ பேரோட நம்பிக்கை வீண் போகாது . கண்டிப்பா அவன் வருவான். ஹ்ம் . அப்புறம் இன்னொரு விஷயம் . கோர்ட்க்கு உள்ள போற வழியிலேயே , ஒற்றன கொலை செய்ய யாரோ சதித்திட்டம் போட்ருக்கறதா , இப்பதான் உளவுத்துறைல இருந்து தகவல் வந்துருக்கு . SO நீங்களும் நானும் , எப்படியாவது நம்ம உயிரக் குடுத்தாவது அவன காப்பாத்தி உள்ள கூப்பிட்டு போறோம் . ஓகே ...... என்றார் .

அதிர்ந்து போனார் குமார் . இந்த விசயம் எப்படி உளவுத்துறை வரைக்கும் போயிருக்கு . கை கால்கள் உதறத் தொடங்கியிருந்தது . நம்ம முயற்சியை கை விட்டு விடலாமா ? என்றெல்லாம் சிந்தனைகள் தோன்றியிருந்தது .

அடுத்த நிமிடம் , திடீரென்று அவருடைய செல்போன் ரிங் அடித்தது . அமைச்சர் புண்ணியகோடி லைனில் இருந்தார் . BLUETOOTH HEADSETல் , CALLஐ அட்டென்ட் பண்ணிவிட்டு , பேச ஆரம்பித்தார் .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : HELLO சார் ! என்ற அவரின் குரலில் நடுக்கம் தொற்றியிருந்தது .

புண்ணியகோடி : ஹலோ ! குமார் . ஏன்யா பேயடிச்ச மாதிரி இருக்க . LIVE TELECASTல உன்ன நான் பாத்துட்டுதான் இருக்கென் . நீயே மாட்டிக்குடுத்துருவ போல இருக்கே .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : இல்ல சார் ! ஒற்றனுக்கு ஆபத்து இருக்குனு உளவுத்துறை கிட்ட இருந்து, தகவல் கெடைசிருக்கிறதா இப்பதான் ரவி சொன்னார் . அதான் பயமா இருக்கு .

புண்ணியகோடி : யோவ் ! எந்த துறைக்கு தகவல் கெடைச்சா என்ன ? நாம என்ன அவன WEAPONS வெச்சா CLOSE பண்ணப் போறோம் ? .. அதெல்லாம் ஒன்னும் நடக்காது .. நீ தைரியமா பண்ணு . உன் PROMOTIONக்கு நான் ஏற்பாடு பண்றேன் .. ஓகேவா ?

சப்-இன்ஸ்பெக்டர் : ஓகே சார் ! நான் பண்றேன் .

புண்ணியகோடி : ஓகே GOOD என்றவுடன் .. லைன் துண்டிக்கப்பட்டது .

மணி 9:55 –ஐ தொட்டிருந்தபோது , கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞன் உரத்த குரலில் கத்தினான் .

யாரும் சத்தம் போடாதீங்க . ஒற்றன் வெப்சைட் UPDATE ஆயிருக்கு . ஒற்றன் நீதிமன்றத்துக்கு வந்துட்டதா அதுல தகவல் போட்ருக்கு என்று கத்தினான் .

ஒட்டுமொத்த நீதிமன்ற வளாகமே மயான அமைதியில் இருந்தது . அந்த இளைஞன் பேசத் தொடங்கினான் ..

“ இப்பதான் நான் பாத்தேன் . ஒற்றன் வெப்சைட்டில ,

ஜனநாயகத்தின் கடைசி அங்கமான , நீதிமன்றத்தில் நான் நின்றுகொண்டிருக்கிறேன் . என்று ஒரு சின்ன வாசகம் எழுதீருந்தது .

SO கண்டிப்பா , நம்மகூடத்தான் , இங்கதான் ... எங்கயோ , ஒற்றன் இருக்கார் .என்று கத்தினான் . பொதுமக்களிடம் ஆரவாரம் அதிகரித்திருந்தது . இன்ஸ்பெக்டர் ரவி நாலாபுறமும் தன் கூர்மையான பார்வையை வீசியிருந்தார் .

கைவிரல் நகத்தை கடித்தபடி , டிவி திரைக்கு முன்னால் பைத்தியமாக உட்கார்ந்துகொண்டிருந்தார் அமைச்சர் புண்ணியகோடி . கூடவே துடியலூர் எதிர்கட்சித் தலைவர் சிங்காரமும் அவருடன் இருந்தார் . மனதில் ஒரு மிகப்பெரிய பதற்றம் . கவலைப்படாதீங்க ஐயா ! இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் யாரா இருந்தாலும் , பரலோகந்தான் என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார் சிங்காரம். இருந்தாலும் புண்ணியகோடியின் முகத்தில் ஒரு இனம் புரியாத அதிர்ச்சி . அவன் யாராக இருக்க முடியும் ? கடைசியாக புண்ணியகோடியின் சிந்தனை , அவரது அரசியல் எதிரிகளை ஒருவர் பின் ஒருவராக யோசிக்கவைத்திருந்தது .

நேரம் சரியாக 1௦ மணி . ஓடிக்கொண்டிருக்கும் கடிகார முள்ளின் சப்தம் கேட்கும் அளவுக்கு , அமைதி நிலவியிருந்தது . ஒவ்வொரு நொடியும் திக் திக் என்றிருந்தது. எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள் .

எல்லாரும் பதற்றத்தின் உச்சத்தில் இருந்த நேரம் , சப்-இன்ஸ்பெக்டர் குமார் , மெல்ல இன்ஸ்பெக்டர் ரவியின் தோளைத் தொட்டார் . என்னவென்று திரும்பிப் பார்த்தார் ரவி . திடீரென்று , குமார் தன் தலையில் மாட்டியிருந்த தொப்பியை கழற்றினார் . முன்பிருந்த பதற்றம் துளிகூட இல்லை . தன் காக்கிச் சட்டையில் இருந்த முதல் ரெண்டு பட்டன்களை கழற்ற ஆரம்பித்தார் . ஒரு அசாதாரணமான தைரியம் அவரைத் தொற்றியிருந்தது . தன் போலீஸ் துப்பாக்கியை கையில் எடுத்து இன்ஸ்பெக்டர் ரவியின் முன் நீட்டினார் .

இன்ஸ்பெக்டர் ரவி : (பதற்றமான குரலில் ) என்ன பண்றீங்க குமார் ?

WHAT ARE U DOING ?

(மெல்ல சிரித்தபடி) SORRY சார் ! என்று சொல்லிவிட்டு , தன்னிடமிருந்த தொப்பியையும் , துப்பாக்கியையும் இன்ஸ்பெக்டர் ரவியிடம் கொடுத்துவிட்டு,

JUDGEMENT ஏரியாவை நோக்கி கம்பீரமாக நடக்க ஆரம்பித்தார் குமார் .

குமார் ! குமார் ! நில்லுங்க ! என்றே அவரைப், பின் தொடர்ந்தார் ரவி .

கேமாராக்காரர்கள் , இந்த காட்சியை நேரலையில் ஒளிபரப்பினார்கள் .

இப்போது எல்லாருடைய கண்களும் சப்-இன்ஸ்பெக்டர் குமாரையே உற்று நோக்கியிருந்தது .

இன்ஸ்பெக்டர் ரவியின் குரலுக்கு , செவி கொடுக்காமல் , வேகமாக உள்ளே சென்றார் குமார் . குமாரின் இந்த விசித்திரமான செயலைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவி , அவரை தடுக்குமாறு நீதிமன்ற மெய்காப்பாளர்களுக்கு செய்கையால் உத்தரவிட்டார். நீதிமன்ற காவலர்கள் அவரை தடுக்க முற்பட்டனர் . அவர்களை மீறி அவர் உள்ளே நுழைய முயன்றார் . இந்த போராட்டத்தைக் கண்ட நீதிபதிகள் , குமாரை உள்ளே வர அனுமதித்தனர் . எந்த வித சலனமும் இல்லாமல் , திடீரென்று குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றார் சப்-இன்ஸ்பெக்டர் குமார். அனைவர் முகத்திலும் ஆச்சர்யம் தொற்றியிருந்தது.

அங்கிருந்த நீதிபதிகளுள் ஒருவர் , ஹ்ம்ம் ! சொல்லுங்க ! எதையோ சொல்ல வந்தீங்க ! தைரியமா சொல்லுங்க !

ஒரு நிமிடம் அமைதியாக கடந்திருந்தது .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் பேச ஆரம்பித்திருந்தார் .

“ MLA மார்த்தாண்டம் போன்ற , அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து , விடியலுக்காக காத்திருந்த , துடியலூர் மக்களில் நானும் ஒருவன் . இன்று “ ஒற்றன் ” என்ற பெயரில் , வேறு வடிவில் வந்திருக்கின்றேன் என்றார் பெருமிதத்தோடு .

நீதிபதிகள் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது . உள்ளே அமர்ந்திருந்த சற்குணம் ஐயா , இந்த பதிலைக் கேட்டதும் , மகிழ்ச்சி வெள்ளத்தால் நமச்சிவாயத்தின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் . நம்முடைய குமாரா இதயெல்லாம் செய்தது ? என்று பூரித்துப் போனார்கள் இருவரும். .. இருவருடைய கண்களிலும் கண்ணீர் தேங்கியிருந்தது . ......

இருண்டு போயிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . குமார் ஒற்றனா ?????????? புரியாத புதிராய் இருந்தது அவருக்கு . சட்டென்று , அங்கிருந்த நாற்காலியில் பிரம்மை பிடித்தவர் போன்று அமர்ந்திருந்தார் .

இதை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த புண்ணியகோடியின் இதயத்துடிப்பு , ஒரு நிமிடம் நின்று , மீண்டும் சீரான நிலைக்கு திரும்பியிருந்தது . தன் 27 வருட அரசியல் வாழக்கையில் , அவர் கண்டிராத ஒரு அதிர்ச்சி . தன்னை சுயநினைவுக்கு கொண்டு வரவே சில நிமிடங்கள் ஆயிருந்தன .

வெளியே பெரிய திரையில் பார்த்துக்கொண்டிருந்த , கோர்ட் வளாகமே ஒரே இன்ப அதிர்ச்சியில் மூழ்கியிருந்தது . ஒற்றன் ! ஒற்றன் ! என்ற குரல்கள் விண்ணைப் பிளந்துகொண்டிருந்தது . இரண்டு நிமிடங்களாகியும் ஆரவாரம் அடங்கியபாடில்லை . காவலர்கள் கூச்சலைக் கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருந்தார்கள் . நிலைமையை உணர்ந்த குமார் , கேமராவைப் பார்த்து தன் கையை கீழ்நோக்கி அசைத்தார். அடைமழை பேய்ந்து ஓய்ந்ததைப் போல ஆரவாரம் தணிந்திருந்தது .

அங்கிருந்த அரசு தரப்பு வழக்கறிஞர் , தன் விசாரணையை தொடங்கியிருந்தார் .

வழக்கறிஞர் : என்னதான் ! உங்க போராட்டத்தோட நோக்கம் , நியாயமானதாக இருந்தாலும் ,........ அது சட்ட விரோதமானதுன்னு உங்களுக்கு தெரியாதா ?

ஒற்றன் : ஏன் ? குருசேத்திர யுத்தத்தில கூட தான் , தர்மத்த காப்பாத்தறதுக்காக, சில முரணான வழிகள் தேவைப்பட்டுச்சு ..... ஐயா...... ! சட்டத்துக்கு புறம்பா நடக்குற சில விசயங்களுக்கு , அதோட வழியில தான் நாம முற்றுப்புள்ளி வச்சாகணும் .

வழக்கறிஞர் : அதுக்காக நீங்க என்ன செஞ்சாலும் அது நியாயமாகிடுமா ? ஒரு பொறுப்பான போலீஸ் ஆபீசர் நீங்க .. நீங்களே இப்படி பண்ணீங்கன்னா ? பொதுமக்களுக்கு எப்படி காவல்துறை மேல நம்பிக்கை வரும் ?

ஒற்றன் : போலீஸ்காரன்னு வேணும்னா சொல்லுங்க ! . ஆனால் பொறுப்பான போலீஸ்காரன்னு தயவு செஞ்சு சொல்லாதீங்க . எங்கய்யா ! எங்களோட பொறுப்புகள பார்க்க விட்டாங்க ? என்னைக்கு இந்த காக்கிச் சட்டையப் போட ஆரம்பிச்சோமோ ! அன்னிக்கே இந்த பொறுப்பு , பருப்பு எல்லாத்தையும் குழி தோண்டி , பொதச்சுட்டுத் தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம் . இன்னிக்கு வரைக்கும் , அரசியல்வாதிகளோட அடிமாடாத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . கிரிமினல்-குற்றம் பண்ணவனெல்லாம் , இன்னிக்கு அரசியல்வாதிகளோட சிபாரிசுல , வெளியில சுதந்திரமா நடமாடிக்கிட்டு இருக்காங்க . எங்கள நேருக்கு நேர் பார்த்து சவால் விட்றானுங்க . எதிர்த்து கேட்டா , தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திருவேன்னு பயமுறுத்தறாங்க .

வழக்கறிஞர் : அதெல்லாம் இருக்கட்டும் . ஏன் ? நீங்க நேர்மையான வழியில இந்த போராட்டத்த தொடங்கியிருக்கலாமே ?

ஒற்றன் : நேர்மையான வழி .... (உரக்க சிரித்தார் குமார் ...)

அங்க பாருங்க ! என்று சற்குணம் ஐயாவை நோக்கி , கையைக் காட்டினார் .

அதோ , நேர்மையான வழியில போராடின , என்னோட தமிழ் வாத்தியார பாருங்க .......

இச்சகத்துள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் , துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும் , உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் , அச்சமில்லை ! அச்சமில்லை ! அச்சமென்பதில்லையே ! என்று எங்களுக்கு சொல்லிக்குடுத்த அந்த மனுசனப் பாருங்க . கிட்டத்தட்ட அவர நடக்க முடியாத அளவுக்கு பண்ணிட்டானுங்க . அறவழியில போராடி இதுவரைக்கும் நாம என்ன சாதிச்சோம் நீங்களே சொல்லுங்க ?

வழக்கறிஞர் : (யோசித்துவிட்டு .... ) அறவழியில போராடித்தான் , நாம சுதந்திரமே வாங்கணும் .

ஒற்றன் : சட்டம் படிச்ச நீங்களே .... இப்படி பதில் சொல்றது ஆச்சர்யமா இருக்குது . அறவழியிலயா நாம சுதந்திரம் வாங்கினோம் ? நல்லா யோசிச்சு பாருங்க . வீரபாண்டிய கட்டபொம்மன் .... நேதாஜி .... பகத்சிங் .... போன்றவர்கள் எல்லாம் , இன்றைக்கு மறைக்கப்பட்ட வரலாறுகள் . நாட்டோட விடுதலைக்காக , இன்னும் எத்தனயோ பேர் தன்னோட உயிரைக்கூட பொருட்படுத்தாம போராடியிருக்கிறார்கள் . அவங்களோட தன்னலமற்ற உயிர் தியாகத்தாலதான், இன்னிக்கு நாம சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் . அத விட்டுட்டு, இன்னும் அறப்போராட்டம் , அகிம்சைனு நாம பேசிட்டு இருக்கோம் . காரணம் அரசியல் தான் . ஒற்றனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் வெளியே கைதட்டல்கள் அதிகரித்திருந்தது . தமிழ் ஆசிரியர்களால் தான் , இன்றைக்கும் நமது நாட்டில் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றது .

அவர்களுடைய கோபம் சாதாரணமானது அல்ல , என்பதற்காகத் தான் இந்த போராட்டத்தை நாங்கள் கையில் எடுத்தோம் .

கடந்த ஜனவரி 26 , நான் படித்த துடியலூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் , குடியரசு தின விழா நிகழ்ச்சி நடந்தது . அதில் நானும் எனது பள்ளித் தோழர்களான விஜயனும் , மலர்விழியும் கலந்து கொண்டோம் . அப்பொழுது தான் MLA மார்த்தாண்டம் அங்கு நடத்துகின்ற அட்டூழியங்கள் அனைத்தையும் நாங்கள் தெரிந்து கொண்டோம் . MLA மார்த்தாண்டத்துக்கு , தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று நானும் , விஜயனும் முடிவு செய்தோம் . அதற்கான சந்தர்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தோம் . திடீரென்று ஒரு நாள் மலர்விழி எங்களுக்கு போன் பண்ணியிருந்தாள் . அறிவியலில் அதீத ஆர்வம் கொண்ட அவள் , பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் இருந்த அக்டோசின் ரசாயனத்தின் உண்மையைக் கண்டுபிடித்திருந்தாள் . இது எங்களின் போராட்டத்துக்கு அதிகம் வழு சேர்த்திருந்தது .

சில வருடங்களுக்கு முன் , அமெரிக்காவில் நடந்த சர்வதேச பாதுகாப்பு தின விழாவில் , கலந்துகொள்ள எனக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது . அதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பாதுகாப்பு வீரர்கள் கலந்துகொண்டிருந்தார்கள் . அதில் சிரியாவைச் சேர்ந்த ஒருவரின் , அறிமுகம் எனக்கு கிடைத்தது . நாளடைவில் அது நட்பாக மாறியது .

ஒற்றன் இணையத்தளம் உருவாவதற்கு , எனக்கு அவன் தான் உதவி புரிந்தான் . ISIS இயக்கத்தின் பிடியில் சிரியா இருந்த போதும் கூட எனக்காக அவன் இந்த உதவியை செய்தான் . இணையதளத்துக்கு தேவையான அனைத்து விவரங்களையும் நான் அவனுக்கு , E-MAIL மூலமாக அவனுக்கு UPDATE பண்ணிருவேன் . அவன் அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவான் . இப்படித்தான் WWW.ஒற்றன்.COM உருவானது .

ஏப்ரல் 3௦ சனிக்கிழமை இரவு, MLA மார்த்தாண்டத்தை நாங்கள் கடத்தினோம் .

இன்று மார்த்தாண்டமும் , டிரைவர் கதிரேசனும் என்னுடைய வீட்டில்தான் நலமாக இருக்கிறார்கள் .

இன்னும் பல முகத்திரைகள் கிழிக்கப்படவிருக்கின்றன . இதோ இந்த ஆடியோவ கேளுங்க . கோர்ட் வளாகத்திலேயே என்னை கொலை செய்ய, என்னிடமே ஆயுதம் கொடுத்து அனுப்பியிருக்கிறார் ஒரு அமைச்சர் . இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை எப்படி இருக்கின்றது என்பதற்கு இந்த ஆடியோ ஆதாரமே ஒரு சாட்சி என்று பாக்கெட்டில் இருந்து ஒரு PENDDRIVE-ஐ குடுத்தார் .

மறுமுனையில் ஆடியோ ஆதாரம் PLAY ஆனது .

புண்ணியகோடியும் , சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் பேசிய பேச்சுக்கள் அதில் பதிவாயிருந்தன . நீதிமன்றமே அதிர்ச்சியில் உறைந்திருந்தது .

நான் செய்தது சட்டம் ஒழுங்குக்கு முரணானது தான் என்கிறீர்கள் . இப்பொழுது சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் புண்ணியகோடி , பேசிய பேச்சுக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகுறீர்கள் ?

நீதிமன்றம் எனக்கு என்ன தண்டனை குடுத்தாலும் , அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன் . எனக்காக யாரும் எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம். இணையத்தால் இணைந்தோம் , இன்று இதயத்தால் இணைகிறோம் . இதுவரை எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி . என்று முடித்தார் சப்-இன்ஸ்பெக்டர் குமார் .

வழக்கை தீர விசாரித்த நீதிபதிகள் , 15 நிமிட நேரத்துக்குப் பிறகு தீர்ப்பை வழங்கினார்கள் .

தீர்ப்பின் விவரம் பின்வருமாறு ,

“ அமைச்சர் புண்ணியகோடி இருபத்தி நான்கு மணிநேரத்தில் , தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு , நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தார்கள் , ஒற்றனின் போராட்டம் நியாயமானது என்றாலும் , சட்டம் ஒழுங்குக்கு முரணான வகையில் நடந்து கொண்டதால் , சப் –இன்ஸ்பெக்டர் குமார் , விஜயன் ,மற்றும் மலர்விழி , இவர்கள் மூவருக்கும் 6 மாத சிறை தண்டனையை அளித்திருந்தது .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் கைகளை உயரே தூக்கி, வணங்கிவிட்டு கூண்டை விட்டு வெளியேறினார் .

இன்ஸ்பெக்டர் ரவி எதிர்பட்டார் .

சப்-இன்ஸ்பெக்டர் குமார் : சார் ! என்ன மன்னிசிருங்க ! உங்கள நான் ஏமாத்திட்டேன் என்றார் கண்ணீருடன் .

இன்ஸ்பெக்டர் ரவி சற்றும் எதிர்பாராமல் , தன் கைகளை உயர்த்தி SALUTE அடித்தார் . அவர் கண்களில் உண்மையான ஒரு தலைவனைப் பார்த்த ஆனந்தம் தெரிந்தது . குமாரின் உள்ளம் நெகிழ்ந்திருந்தது .

சற்குணம் ஐயா குமாரையும் , விஜயனையும் கட்டி அணைத்துக் கொண்டார் . மின்னல் டிவியின் நிர்வாக இயக்குனர் நாராயணன் இவர்கள் மூவரோடு ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு அவர்களை வழியனுப்பினார் . இன்ஸ்பெக்டர் ரவி இவர்கள் மூவரையும் , வெளியே அழைத்துக் கொண்டு வந்தார் . வெளியே பொதுமக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்திருந்தது . அவர்கள் அனைவரையும் பார்த்து , வணங்கி விட்டு மூவரும் போலீஸ் வாகனத்தில் ஏறினார்கள் . கோவை மத்திய் சிறைச்சாலையை நோக்கி வேன் வேகமாக பறந்திருந்தது .

மூன்று நாள் சுவாரஸ்யம் முடிவுக்கு வந்தது , காவல்துறையில் ஒற்றன் ??? என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன .

அடுத்து துடியலூர் தொகுதியில் , இடைத்தேர்தல் வந்தது .

சுயட்சையாக போட்டியிட்ட , ரத்தினம் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் .

- முற்றும் -

இப்படிக்கு ,

பூபதி கோவை

+91 - 7299543057

boopathycovai@gmail.com