நீ தானே என் பொன் வசந்தம்
Author : C.P.Hariharan
e mail id : cphari_04@yahoo.co.in
கல்லூரியில் பட்டம் பெற சேர்ந்த அன்று ரஞ்சிஜாதாவுக்கும் சேகருக்கும் மகிழ்ச்சி வானத்தில் சிறகடித்து பறந்தன. இருவரும் நல்ல ம திப்பெண்கள் பெற்றிருந்ததால் காலூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அன்று தான் இருவரும் முதல் முதலாக அறிமுகமானார்கள். மொதல் சந்திப்பிலேயே ஒருவருக்கு ஒருவரை புடித்திருந்தது. அவங்க மனப்பான்மையும் பரஸ்பரம் பொருந்தியிருந்தது.சேகர் சினிமா ஹீரோ போன்ற அழகாக இருந்தான்.யார்பார்வையையும் தவிர்க்க முடியாத அளவுக்கு அவன்உதட்டில் எப்பவும் சிறு புன்னகை ஒன்று இருக்கத்தான் செய்தது. அது அவன் தன்நம்பிக்கையை சுட்டிகாட்டியது. அவன் பேச்சு எல்லோருக்குமே ஸ்வாரஸ்யமாகத்தான் இருந்தது. எல்லோரையும் தன்பக்கம் வசீகரிக்கும் குணம். அந்தகுணம் அவ்ளவ் சுலபமாக எல்லோருக்கும் இருக்க முடியாது. அவர்கள் கலகலப்பாக உல்லாசபறவைகளாக இருந்தார்கள். ரஞ்சிதாவும் அழகாத்தான் இருந்தாள். காலம் போன்ற கோலம் என்பது போல் ஜீன்சும் டி ஷர்ட்டும் அணிந்திருந்தாள். அதற்க்கு ஏற்ப ஒரே நிறத்தில் வளையலும் காதணிகளும், காலணிகளும், வாட்சும் அவள் அழகுக்கு அழகூட்டியது. கூந்தலை கொஞ்சம் முன்பக்கம் பரவ விட்டிருந்தாள்.
.கொஞ்சம் நாட்களிலேயே இருவரும் ஒருவருக்கு ஒருவரை நன்றாக புரிந்துகொண்டனர்.இருவரும் நடுத்தர குடும்பத்தில் சேர்ந்தவர்களாகத்தான் இருந்தார்கள். எல்ல்லோரும் பொறாமை படும்
. அளவிற்கு அந்த ஜோடி ஜாடிக்கி ஏற்ப மூடி போன்றத் தான் இருந்தார்கள்.
ஸ்கூலில் இருந்த கட்டுப்பாடு எதுவும் காலேஜில் இல்லாததினால், மாணவர்கள் சுதந்திர பறைவைகளாக தென்பட்டார்கள். ஒரு சில ஆசிரியர்கள் நன்றாக பாடம் சொல்லி தந்தார்கள். கொஞ்சம் தானாகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.
காலேஜில் சுற்றும் நிறைய பல வகை மரங்கள் இருந்ததால் குளிர் தென்றல்
எப்பவும் மாணவர்களை தாலாட்டியது.
அங்காங்கே பூங்காக்களும் இருந்தன. காலேஜின் சுற்றுப்புறம் மிகவும் சுவாரசியமாக இருந்தன.
மாணவர்கள் அன்யோன்யம் அன்போடும் ஆதரவோடும் நடந்துகொண்டார்கள்.
அரை வருஷ தேர்வுகள் வரும் போது கொஞ்சம் படிப்பில் கவுனம் செலுத்தி
சிரமப்படவேண்டியிருந்தது.
தேர்தல், இளைஞர் விழா, கலாச்சார நிகழ்ச்சிகள் விளையாட்டு, வினாடி வினா திட்டங்கள் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவியது.
எல்லா விஷயங்களிலும் விரும்பத்தக்கதாக போட்டி இருந்தது. இண்டர் காலேஜ் போட்டிகளும்.இருந்தன. பக்கத்திலேயே
ஒரு கோயிலும் இருந்தன. சுற்றுசூழல் மிகவும் நன்றாக இருந்தது.
கல்லூரி கனவுகளில் மகிழ்ந்த அவர்களுக்கு மூன்று வருஷங்கள் எப்படி இவ்ளவ் சீகரம் ஓடி நகர்ந்தது என்றே தெரியவில்லை. இனிமேலும் எப்படி சந்திப்போம் என்பது ஒரு மிக பெரிய கேள்விக்குறியாகவே இருந்தது.அப்பப்ப வாட்சப்ல தொடர்புகொள்வதாக முடிவுசெய்தார்கள் .
பூங்கா, பீச் என்று அடிக்கடி சந்தித்தார்கள். ஒருவருக்கொருவர் இல்லாமல் இருக்க முடியாது என்ற சசூழ்நிலையும் உருவாகிவிட்டது. அவரவர் தாய் தந்தையரிடம் அவர்கள் காதலை தெரிவித்தார்கள். அவங்க இருவர் வீட்டிலும் ஒத்துக்கொண்டார்கள். அவர்கள் மகிழ்ச்சி எல்லையற்று போய்விட்டது. நீ தானே என் பொன் வசந்தம், புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம் என்று பாடி நெகிழ்ந்தான். அன்று
அந்த மகிழ்ச்சியை கொண்டாட இருவரும் மாணவர் வகுப்புக்கு போகாமல் சினிமா பார்க்க போனார்கள்.
கூடிய சீக்கிரம் அவங்க திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தன. கண் சிமட்டும்நேரத்தில் இரண்டு வருஷங்கள் ஒடி நகர்ந்தன.
அவர்களுக்கு ஒரு பெண்கு ழந்தையும் பிறந்தது. பௌர்ணமி அன்று பிறந்ததால் தங்கள் குழைந்தைக்கி பூர்ணிமா என்று பெயர் வைத்தார்கள். வாழ்க்கையின் பயணம் சரியாகத்தான் ஓடி கொண்டிருந்தது. சேகர் தனியார் நிறுவனம் ஒன்றில்த்தான் பணி புரிந்து கொண்டிருந்தார். அவனுக்கு அடிக்கடி ஆடிட்டிங்குக்கு வெளியூர் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டன.அவனுக்க்கோ ஓயாத வேலை. இடைவேளைகளில் அங்கே இருக்கும் பூங்கா ஒன்றில் அப்பப்ப கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வான்.ஒரு நாள் அப்படி ஒய்வு எடுக்கும் நேரத்தில் தான் ஒரு அழகான பெண் அவனை நோக்கி வந்தாள். அவள் பெயர் நந்தினி.பார்க்கவும் அழகாகத் தான் இருந்தாள். மாநிறம் கூந்தலை யூ கட் பண்ணியிருந்தாள். கால்களில் வெள்ளிகொலுசு அணிந்திருந்தாள்.அங்கே ஒரு டி எஸ்டேட்டில் பணி புரிந்திருந்தாள். அவள் அந்த மலைபுரதேசத்தில்த்தான் குடியிருந்தாள்.
அவன் அந்த பெண்ணை பார்க்க தவிர்த்திருந்தாலும், வெகு நாளாகவே அந்த பெண் சேகரை பார்த்து தன் மனதில் ரசனைசெய்திருந்தாள். அன்று அவன்பக்கத்தில் வந்து உக்காந்துவிட்டாள். அவள் தன்னை அறிமுக ப்படுத்திக்கொண்டாள். அவள் அவனை விரும்பவதாக கூறினாள். அவன், தான் ஏற்கனவே கல்யாணமானவன் என்றும் தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் அவளிடம் சொன்னான். எவ்ளவு சொல்லியும் அந்த மர மண்டைக்கி உறைக்கவில்லை. காலை சுற்றின பாம்பை போல் அவனிடமே ஒட்டி ஒரசிக்கொண்டாள். ஒரு நாள் அவனும் வேலை அழுத்தத்தால் மிகவும் களைப்பாக இருந்தான்.அவளை சமாளிப்பதுற்குள் அவனுக்கு போதும்
போதும் என்றாகிவிட்டது. திடீரென்று ஒரு புயல் அடித்தது. பறவைகள்
கூட்டம்கூட்டமாய் ஒரே திசையில் சமசீராக பறந்துகொண்டிருந்தன.
மிக்க வியர்வையில் இருந்த அவனுக்கு அந்த புயலாக வீசும் தென் பாண்டித் தென்றல் இதமாக இருந்தது. புயலோடு மழையும் சேர்த்துகொண்டது. அந்த புயல் தன் வாழ்வின் திருப்பு முனையாக இருக்கும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
அவன் கொஞ்சம் குடி போதையிலும் இருந்தான். அந்த சந்தர்பத்தை பயன்ப்படுத்திக்கொண்டு அவள் அவனை தன் வீட்டுக்கு அழைத்து சென்றாள். அவனை அவள் தனக்கு சொந்தமாக்கிக்கொண்டாள். போதை தெளிந்த பிறகுதான் அவனுக்கு தான் சைஞ்ச தவறை உணர முடிந்தது. அவனால் எதுவும் பேசமுடியவில்லை. நடந்து முடிந்ததை ஜீரணிக்கவும் அவனால் இயலவில்லை.அவள் தன் குடியை கெடுக்க வந்தவள் என்று அவன் எந்த கனவிலும் நினைக்கவில்லை.
காலை சுற்றினபாம்பு கடிக்காமல் விடாது என்பார்கள்.
அது அவனை பொறுத்தவரையிலும், நூத்துக்கு நூறு சரியாகவே இருந்தது. தன் மனைவிக்கி நம்பிக்கை துரோகம் பண்ணிவிட்டோமே என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டான், வருந்தினான், பதட்டப்பட்டான். நந்தினியோ அவன் இல்லாமல் இனி வாழ முடியாது என்று அடம் புடித்தாள். இனி எந்த முகத்தை வெச்சுகிட்டு வீடு திரும்பவது என்று தீவ்ர யோசனையில் இருந்துவிட்டான். தன் மனைவியை எப்படி எதிர் கொள்வது என்பது அவனுக்கு புரியாத புதிராகவே இருந்தது. மொதல்லேயே அவளை கண்டிச்சு வெச்சிருந்தால் இன்று அவனுக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. தப்பு தாளங்கள், தவறிய பாதங்கள், இனி எப்படி வாழ்வதென என்று எழுதியவேதங்கள், என்ற போல் ஆகிவிட்டது அவன் நிலைமை. அவளை ஒருவிதம் சமாதானப்படுத்தினான்.
அவனுக்கு இயல்ப்புக்கு வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆகிவிட்டது.
தன் வீட்டில் விஷயம் தெரிந்துவிட்டால் வாழ்க்கையே வேரோடு முடிந்துவிடும் என்று நினைத்தான். சைஞ்ச தவறை திருத்தவோ சீர் செய்யவோ முடியாதே என்று வருந்தினான். கொஞ்சநாள் வீட்டுக்கு போகாமல் வேறே எங்கேயாவது தொலைந்து விடலாம் என்று அவன் உள் மனது உறுத்தியது. அவன் மனது ஓரிடதிதிலும் நிம்மதியாய் உறைக்கவில்லை. அவன் தன் மனதை நிலைநாட்ட தடுமாறினான். நடந்த தவறை அவள் யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டுமே என்ற பயம் வேற அவனை நிலைகுலைத்தது. நடந்த தவறுக்கு அவன் முற்றிலும் பொறுப்பில்லை என்பதை சேகர் அழுத்தம் திருத்தமாக அவளிடம் கூறினான். அவன் வாழ்க்கை ,எதிர்காலம் எல்லாமே தன் மனைவியும் குழந்தையும் தான் என்பதை நந்தினியிடம் எடுத்து சொன்னான். ரஞ்சிதா தான் தன் முதல் வசந்தம், பொன்வசந்தமும். என்று அவளிடம் கூறினான். இறுதி வரைக்கும் அவள்கூட மட்டும்தான் வாழ முடியும் என்று அடிச்சு சொன்னான். அவள் தானே சூழ்நிலைகளை தனக்கு சாதகமா பயன்ப்படுத்திக்கொண்டு வலுக்கட்டாயமாக அவனை அவளுக்கு சொந்தமாக்கிக்கொண்டாள். அவன் என்னபண்ண முடியும் ? ஒரு வாரத்துக்கு அவனால் அலுவலகத்துக்கோ தன் வீட்டுக்கோ செல்ல தோன்றவில்லை.
ரஞ்சிதாவோ, சேகரின் போன் எதுவும் வராததில் ஒரே
குழப்பமாக இருந்தாள். ஒரு நாளும், ஒரு தடவையாவது அவர் போன்பண்ணி விசாரிக்காமல் இருந்ததேயில்லை.
அவருக்கு என்னாச்சு என்று வருத்தப்பட்டாள். எதற்கும் ஒருபோனை போட்டு பார்த்திடுவோம் என்று நினைத்து, மொபைலின் பட்டனை அழுத்தினாள்.ஆனால் அவர் மொபைலோ, ஸ்விட்ச்ஆஃபில் இருந்தது.
பின்னாடிபார்த்துக்கலாம் என்று நினைத்து போனை வைத்து விட்டாள்.
சேகர் நந்தினியிடம் சொல்லாமல் கொள்ளாமல் தன் வீட்டுக்கு திரும்பினான். யாரோ யதேச்சையாக சைஞ்ச தவறுக்கு அவன் ஏன்ஆளாகணம் என்று எண்ணினான். தன் வீட்டிலும் நடந்து நிகழ்ந்த எதையும் தப்பித் தவறிக்கூட சொல்லவோ கொள்ளவோ முடியாதே என்று வருந்தினான். நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். யாரிடமும் எதையும் சொல்லக்கூடாது என்று தன் மனதில் உறுதிப்படுத்திக்கொண்டான். ஆனாலும் நந்தினியின் நினைப்பு பட்டாம்பூச்சியை போல் அப்பப்ப அவன்மனதில் வட்டமிட்டு பறந்து, அவனை நிலைகுலைத்தது. அவன்மனம் தடுமாறி தள்ளாடியது. அவளை மறக்க முயன்றான். ஆனாலும் அவளவு சுலபமாகா அவளை மறக்க அவனால் இயலவில்லை. காலத்துக்கும் அவளை மறக்க முடியாதபடி சைய்ஞ்சிட்டாளே. இந்த பெண் இனமே
இப்படி தானா என்று விரத்தி அடைந்தான். காலத்தின் தீர்ப்புகளை யாராலும் அறிய முடியாத பக்ஷத்தில் நடந்ததை
ஏற்றுக்கொண்டுதானே ஆகணும். அவள் நினைவு அழியாதகோலமாக அவன் மனதில் ஆழமாய்பதிந்தது.
அவன் கிணற்றில் வீழ்ந்த கல்லை போல் அமைதியாக இருந்தான். அவன் அமைதி ரஞ்சிதாவுக்கு அதிர்ச்சியை தந்தது.எப்பவுமே
ஆரவாரமாக இருந்த அந்த வீடு ஒரு இனம்புரியாத கலவரம் நிகழ்ந்து முடிந்தது போல் ஆகிவிட்டது.
சேகரோ வேலையில் அழுத்தம் இருப்பதாக கூறி, ஓரளவுக்கு
சமாளித்துக்கொண்டான். ஆனாலும் அவன் மனம் விதும்பியது.
ரொம்பநாள் அவனால் நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை.
தன் சுய நிலைக்கு வர தவித்துத் தடுமாறினான். தன் வாழ்வில்
மிகவும் எதிர்பாராத சங்கதி ஒன்று நடந்து விட்டது. அதையே நினைத்து பயன் ஒன்றும் இல்லை என்றாலும் அந்த நினைப்பை தவிர்ப்பது அவ்ளவ சுலபம் என்று அவனுக்கு தோன்றவில்லை. சின்னஞ்சிறு வயதில் தப்பு தண்டல் நடப்பது சகஜம் தானே என்று தனக்கு தானே ஆறுதல் அளித்துக்கொண்டான். வீட்டு வேலைகளிலும் அலுவலக வேலைகளிலும் தன் கவுனத்தை செலுத்த முயன்றான்.மீண்டும் அந்த பக்கம் ஆடிட்டிங்குக்கு போகுவதை தவிர்த்தான். ஆனாலும்
நந்தினி என்ற புயல் எப்ப திரும்பவும் வீசும் என்ற பயம் அடிமனதில் அப்பப்ப ஒரு பக்கம் ஓரமாக வெறிச்சோடியது.
பாதி வாழ்க்கை, கடந்த கால நினைவுகளிலும், வரும் கால பிரச்சன்னைகளை கற்பனை பண்ணி பார்பதிலேயுமே முடிந்து விடுகிறது. அவனாக எந்த தப்புத் தவறும் சைய்யவில்லையே. பிரச்சன்னைகளை, வரும்போது வந்த படி சந்திப்போம் என்று ஒரு முடிவுக்கு வந்தான்.
முற்றும்
Author : C.P.Hariharan
e mail id : cphari_04@yahoo.co.in