Read my love by Perfect Review in Tamil Short Stories | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

என் காதாலடி நீ

ஆகாயத்தில் வெண்ணிற மேகங்களில் வெண்ணிறமும் இருளும் சூழ்ந்து அதற்கு நடுவில் கிழித்துக்கொண்டு வந்து இருந்து அந்த விமானம். அதில் பல கனவுகளுடன் பயணித்துக் கொண்டிருந்தான்  வித்தார்த். இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்று தாயகம் திரும்பிக் கொண்டிருந்தான்.பால்வண்ண அப்பழுக்கற்ற நிறம், ஆறடி உயரம், ஆண்களுக்கே உரித்தான கம்பீரம் என அனைத்தும் நிறைந்தவன் தான் வித்தார்த்.


திருமணம் ஆகி ஒரே மாதத்தில் புதுமனைவியை விட்டு செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டான்.

அதுவும் சிறு வயது மாமன் மகள் தான் அவன் மனைவி. இரண்டு வருடம் வீடியோ கால், வாய்ஸ் கால் செய்து பல ஏக்கங்களோடும், ஆசைகளோடும் செலவிட்டான். மனைவியின் அழகிய முகம் அவன் கண்முன்னே வந்து சென்று கொண்டிருந்தது. அப்பாவின் கடன் சுமையை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் தான் அமெரிக்கா செல்ல நேரிட்டது. எல்லா கடனையும் அடைத்து விட்டு முழு திருப்தியோடு மனைவி நினைவுகளோடு வந்து கொண்டிருந்தான்.

சென்னை ஏர்போர்ட்டை அந்ததும் அவனது இரண்டு அக்காக்கள் மாமன்கள், அவர்கள் குழந்தைகள், அப்பா, அம்மா, மனைவி என்று அனைவரும் இவனுக்காக காத்திருந்தேனர். அவனும் வந்ததையும் அனைவரையும் ஆற தழுவிவிட்டு நலம் விசாரித்து வீட்டிற்கு திரும்பினர். அவன் கண் மட்டும் அவன் மனைவி சுபாவிடம் இருந்து வர மறுத்தது. இருப்பினும் சுற்றம் காரணமாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு வந்தான், அவன் தாய் லெமன் ஜூஸை மகனுக்கு கொடுத்தார். அதை வாங்கி குடித்துவிட்டு மனைவிக்கு கண்காட்டி விட்டு ருமிற்கு சென்றான். சுபாவும் தன் கணவனை ஏங்க வைக்காமல் ருமிற்கு வந்தடைந்தாள். 

அவள் வந்ததும் கதவை தாழிட்டு ஒரே எட்டில் அவளை அணைத்துக்கொண்டான், அவன் அணைப்பே கூறியது அவனின் இத்தனை நாள் விரதத்தை, அவள் சாரி கட்டியிருந்தால் அவன் தொட்டது அவளின் வெற்று இடையை பிடிக்க வாகாக இருந்தது அதை மென்மையாக வருடினான். அவளிடம் எல்லை மீற அதற்குள் யாரோ கதவைத் தட்டினர். அவள் தோளின் முகத்தை பதிந்திருந்த அவனால் அவளை விட்டு மீள முடியவில்லை. மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்கவே சுபா விழித்து கொண்டாள்.

அவனை விலக்கி கதவை போய் திறந்தாள் சுபா. மாமா எங்க அத்தை என்று அவனின் அக்கா மகன் சஞ்சய் கேட்டு கொண்டிருந்தான், உள்ளே தான் இருக்கிறார் என்று கூறி கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள் சுபா. அவனுக்கு தான் ஐயோ என்று இருந்தது, பின் தன்னை நிலைப்படுத்தி சஞ்சயிடம் நேரத்தை செலவிட்டான். இந்த இரண்டு வருடத்தை கழித்தாயிற்று ஆனால் ஒருநாள் பொழுதை கழிக்க போதும் போதும் என்று இருந்தது. ஆறு மணிக்கு மேல் கோவிலுக்கு போக வேண்டும் என்று குடும்பத்தார் கூற இடி விழாத குறையாக இருந்தது அவனுக்கு.

அவனின் நிலையை அறிந்த அவரது மாமன் எட்டு மணிக்கு எல்லாம் வந்து விடலாம் கவலை வேண்டாம் என நக்கலாக கூறினார். அதில் சற்று சமாதானமான பின் கோவிலுக்கு சென்று, கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின் சிறிது நேரம் அங்கிருந்த சொந்த காரர்கள் அவரிடமும் பேசி விட்டு, வீடு திரும்புவதற்குள் அனைவரும் சோர்வுற்றனர். பின் இரவு உணவை ஹோட்டலில் சாப்பிட்டனர். அவனது அறைக்கு சென்றதும் அவனுக்கு புத்துணர்ச்சி அடைந்தது போல் இருந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, அனைத்து வகையான பழங்களுடன் முதலிரவு அறை போல இருந்தது.

 அவனது மனைவியும் பத்து நிமிடத்தில் ரூமை வந்தடைந்தாள். அவளுக்கு தெரியும் அல்லவா அவன் கணவனின் நிலையை திருமணம் முடிந்த உடனே வாழ்க்கை ஆரம்பிக்கலாம் என்றால் இவளது படிப்பு, அவனது பாரின் பயணம் போன்ற காரணத்தால் சரிவராது என்று மறுத்து விட்டான். ஆரம்பித்து விட்டு இல்லை என்றால் அது வலிக்கும். மேலும் சுபா பி. எட். தான் படித்துக் கொண்டிருந்தாள் இந்த இரண்டு வருடமும் அவனுக்கு கனவை போல இருந்தது. தன் மாமன் மகள் தான் என்றாலும் அவள் மீது அவனுக்கு எப்போதும் அன்பும், காதலும் அதிகம். அவளும் லைட் ப்ளூ கலர் பட்டு சேரியில் போதுமான ஒப்பனையுடன் தேவதையை போல காட்சி அளித்தாள்.

கையில் இருந்த பால்சொம்பை வாங்கி அவளை தன்னருகே உட்கார வைத்தான் அவளும் வெட்கம் தாளாமல் தலை கவிழ்ந்து இருந்தாள். பின் அவளின் தலையை நிமிர்த்தி அவன் நெற்றியில் முத்தமிட்டான். பின் ஆசையாக இரு கண்களிலும் முத்தமிட்டான். முகம் முழுவதும் மெதுவாக அது அழுத்தமாக முத்தமிட்டான். பின் அவள் இதழுக்கு முத்தமிட்ட அதை விட்டு மீள முடியாமல் தவித்தான். பின் அவளை ஆர தழுவி மென்மையாக ஆட்கொண்டான்.

தாம்பத்தியம் என்பது உடலோடு உடல் இணைவது மட்டுமல்ல. காதல், அன்பு, புரிதல் என்று அனைத்தும் உருவாகி கலக்கும் சங்கமம் என்று கூட கூறலாம். அவன் நினைத்திருந்தால் கல்யாணமான பொழுதே அவளுடன் வாழ்க்கையை ஆரம்பத்திருக்கலாம். ஆனால் அவனுக்கு இருக்கும் பொறுப்பு, கடமை, அவளின் படிப்பு எல்லாத்தையும் கருத்தில் கொண்டு தான் இத்தனை நாள் தவம் இருந்தான். உடலின் உணர்வுகளை விட இதயத்தின் ஓசை பெரியது. மனம் போகின்ற இடத்திற்கெல்லாம், அதை அலையவிடாமல் எவன் கட்டுப்படுத்தி சரியாக கையாளுகிறானோ அவனே வாழ்க்கையில் உயர்கிறான்.