Read Relationship etiquette by chitra haridas in Tamil Short Stories | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

உறவின் ஆசாரம்

வெளியே ஆசாரத்தின்(பெருமழை) கோர தாண்டவத்தின் அரவம் வீட்டினுள்ளும்  கேட்டுக் கொண்டிருந்தது. அதை விட அதிகமாய் அவனது இதயத்தினுள் புயலும் திவலையும் வீசியடித்துக் கொண்டிருந்தது.

ஏன் இந்த படபடப்பு அவனுக்கே  தெரியவில்லை? அவன் தவறேதும் செய்ய வில்லை தான். இருந்தும் தவறு செய்தது போலொரு படபடப்பு. 'அவளை இறக்கி விட்டு அப்படி சென்றிருக்கலாம். அவள் பேச்சை கேட்டு வீட்டுக்குள் வந்ததற்கு தான் என் மனதில் சொல்ல முடியாத கலவரத்திற்கு காரணம்.

வீட்டில் ஏகபோக அமைதி அவனை மேலும் திகிலடையச் செய்தது. கையில் துண்டை கொடுத்து  துவட்டச் சொல்லிவிட்டு அவள் உடை மாற்றச்  சென்று விட்டாள். 

அவனும் தன் பின்னந்தலையை துவட்டிக் கொண்டு நடுக்கூடத்தை அலங்கரித்திருந்த அவர்களது குடும்ப புகைப்படங்களையும்  சில பொம்மைகளையும் பார்த்துக் கொண்டு வந்தவனுக்கு அந்தப் புகைப்படம்  தென்பட்டது.

அவள் கணவனின் சிறு வயது புகைப்படமும் அவளது சிறு வயது புகைப்படமும் கீழே அவர்களது மகளின் புகைப்படமும் சேர்ந்து ஒரே பிரேமில் இருக்க, அழகா இருந்தது எடுத்து ஒரு முறை பார்த்து கொண்டான்.

அவளது மகள் அவளை போலே அழகாக இருந்தாள். அதைக் கண்டதும் அவனது இதழ்கள் தானாக மலர்ந்தன. கண்கள் ரசித்தன.

சுடி ஒன்றை அணிந்து துப்பட்டாவை மாலையாக போட்டு முடியை உலர்த்தி விட்டு அறையிலிருந்து வந்தாள்.

"காஃபி ஓகே தான !"என கேட்டு வேகமாக அடுப்பங்கறைக்குள் நுழைந்தாள்.

"எனக்கு எதுவும் வேணாம் நான் கிளம்புறேன் பவி"என்று கூடத்திலிருந்து  கத்தினான்.

"ஏன் வேணாம்??" என்று தலையை மட்டும் எட்டிப் பார்த்து கேட்டாள்.

"வேணாம் ப்ளீஸ் நான் கிளம்புறேன். டைம் ஆச்சி !"என்றான்.

"இந்த மழையிலையா போகப் போற? வரும் போதே கஷ்டப்பட்டு தான் ஒட்டிட்டு வந்த. மழை நிக்கட்டும் போலாம்"என்று சாதாரணமாக  சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

"வாட்?? மழை எப்போ நிக்க? நான் எப்போ போக?  எனக்கு எதுவும் வேணாம் பவி  நான் கிளம்புறேன்..."உரிமையாக சமையலறைக்குள் செல்ல முடியாமல் வாசலில் நின்ற படி கத்தினான்.

"என்னடா உன் பிரச்சினை??? மழை நிக்கட்டும் டா !  அப்றம் நானே உன்னை அடிச்சி துரத்தி விட்டுவேன் சரியா?? "உள்ள செல்ல இருந்தவளை தடுத்தது அவனது குரல் .

"இல்ல பவி... எதுக்கு... நான் கிளம்புறேன்..."என்றான் தரையை பார்த்தபடி. 

"என்னாச்சி டா??? ஏன் நெர்வஸ் இருக்க??ஏதாவது பிரபலமா??"அவன் முன்னே வந்து  நின்று கேட்டாள்.

"இல்ல பவி ! வீட்ல யாருமில்லாத நேரத்தில நான் இருக்கிறது நல்லது இல்ல... யாராவது பார்த்தால் தப்பா எடுத்துப்பாங்க நான் கிளம்புறேனே !"தயங்கியபடி விஷயத்தை சொன்னான்.

"ஓ... இந்தக் கொட்ற மழையில குடைய பிடிச்சி,  என் வீட்டு வாசல்ல வந்து நின்னு என் வீட்டுக்குள்ள என்ன நடக்குதுனு வந்து பார்த்துட்டு இருக்காங்க பாரு ! லூசா நீ ! "

"இல்ல பவி !! உன் ஹஸ்பண்ட்  வந்துட்டா, அவர் என்ன நினைப்பார் ??நாலும் யோசிக்க வேணாமா??"

"நாம என்ன அந்த மாதிரி ரிலேஷன்ஷிப்லயா இருக்கோம் பயப்படறதுக்கு"சிறு குரலில் கேட்டாள் பவித்ரா.

"ஏய் லூசு !! அறிவு இருக்கா உனக்கு??  நான் என்ன சொல்றேன் நீ என்ன பேசிட்டு இருக்க??"  

"அப்படி யாரும் நம்மல நினைச்சி கூடாதுனு தான பயப்படுற நீ !"

"ஆமா,  என்னால உன் லைப்ல  சின்ன பிரச்சினை கூட வரக் கூடாது நினைக்கிறேன். நம்ம பிரண்ட்ஸ் தான் நமக்குள்ள நல்ல நட்பும் சகோதர பாசமும் இருக்கு.  ஆனா அது மத்தவங்க கண்ணுக்கு தெரியாது மா ! நம்ம தப்பான உறவுல இருக்கிறதா தான் தெரியும். அப்படி தான்  நினைப்பங்க, பேசிப்பாங்க. அதுக்கு நாமலே ஏன் வழி வகுத்து கொடுக்கணும் சொல்லு. சோ நான் கிளம்புறேன்"என்றான் அதே பிடியில் .

"சரி அப்போ  என் வீட்டுக்காரர் இருந்தால் இருப்பீயா??"என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு புரியாமல் புருவத்தை சுருக்கினான்.
"என் ஹஸ்பண்ட்  உள்ள தான் இருக்கார்" என்று உதட்டை மடித்து சிரிப்பை அடக்கியபடி சொன்னவள் அவனுள் மேலும்  கலவரத்தை உண்டாக்கினாள்.

"அடிபாவி ! அவரை வச்சிட்டு தான் இவ்வளவு பேசிருக்கோமா??? தைரியம் தான் பவி உனக்கு.இப்போ அவர் நம்மல என்ன நினைக்கப் போறாரோ !"

"அவர் என்ன நினைப்பார், இவங்க என்ன நினைப்பாங்க, மத்தவங்க என்ன நினைப்பாங்கனு  யோசித்துட்டே இருந்தால் வாழ்க்கையில் நமக்கு கிடைச்ச சில பிடிச்ச விஷயங்களையும் அனுபவிக்க முடியாம போயிடும் விஜய்... இதை நான் உனக்கு சொல்லணும் இல்ல. பொதுவா பொண்ணுங்க தான் அதிகம் இப்படி யோசிப்பாங்க, பசங்க கூலா தான் இருப்பாங்க... ஆனா நீ ரொம்ப பயப்படறீயே !" என சிரித்தபடி சொன்னாள்.

"என்ன எந்த பிரச்சினையும் வர்றாது பவி. உனக்கு பிரச்சினை வந்திடுமோ தான் பயப்படறேன். நீ ஃபேமிலியோட இருக்க பவி, சோ சம்பந்தமே இல்லாத  ஒரு ஆண வீட்டுக்கு கூட்டிட்டு வந்தால் சந்தேகப்படத் தானே செய்வாங்க... அதுக்கு ஏன் நம்மலே ரூட் போட்டு கொடுக்கணும் தான் சில விஷயங்களை அவாய்ட் பண்ண சொல்லுறேன்" 

"ஓ... அப்ப ஆஃபீஸ்ல பேசிக்கிட்டா மட்டும் தப்பிலையா??? அங்க ஒண்ணா காஃபி குடிச்சா தப்பில்லையா?? சேர்ந்து சாப்பிட்டா தப்பில்லையா???" 

"பவிவிவி..."பல்லை கடித்த படி "அது ஆஃபீஸ், அங்க எல்லாருக்கும் நம்மை தெரியும். நம்ம பிரண்ட்ஷிப்பும் தெரியும். ஆனா இது வீடுமா ! அதுவும் நீயும் நானும் தனியா இருந்தால் என்ன நினைப்பாங்க... மத்தவங்கள விடு உன் ஹஸ்பண்ட் என்ன நினைப்பார்??? யோசிக்க மாட்டியா பவி"

அவளும் யோசிப்பது போல பாவனை செய்தவள், "நீ இதுவரை என்னை உன் பைக்கிலையோ இல்ல தனியா என் கூட ட்ராவல் எங்கையும் பண்ணிருக்கியா???"

"இல்ல ஏன்???"

"இதுவரை நம்ம பிரண்ஷிப் ஆஃபீஸோட  தான் இருந்தது. நீ உன் லிமிட்ட தாண்டவும் இல்ல. நானும் என் லிமிட்ட தாண்டினதும் இல்ல. ஆனா இன்னைக்கி நீ என்னை வீட்ல இறக்கி விடுற சூழ்நிலை. நானும் உன்னை வீட்டுக்கு அழைக்க வேண்டிய சூழ்நிலை.இதுல உன் எண்ணமும் எனக்கு தப்பா தெரியல. உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்த என் எண்ணத்திலும் எந்த தப்புமில்ல... 

அண்ட் எனக்கு வயசு முப்பது ஆகுது. எனக்கு மெச்சூருட்டி நிறையவே இருக்கு. உன்னை எப்ப வீட்டுக்கு கூப்பிடனும் கூப்பிட கூடாது எனக்கு தெரியும். எனக்கும் உலகத்தோட பார்வையும் என்னானு தெரியும். இந்த மழை இல்லேன்னா, நான் உன் கூட வந்திருக்கவும் மாட்டேன்.உன்னை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கவும் மாட்டேன். இவ்வளவு  தெளிவா பேசற நான் என் ஹஸ்பண்ட்  வீட்ல இல்லேன்னா உன்னை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்க மாட்டேன். என்ன பண்ண அந்த தைரியம் இன்னும் எனக்குள்ள வரல... அதுனால நீ எதையும்  போட்டு குழப்பிக்காத. 

என் ஹஸ்பண்ட், உள்ள சின்ன வேலையா இருக்கார். முடிச்சிட்டு வந்திடுவார்"என்று சொல்லி திரும்பவும் அறையிலிருந்து  வந்தான் சத்யா.

"ஹாய் விஜய்... !"என்று சிரித்து கொண்டே அவனருகில்  வந்தான் சத்யா. 
விஜய் சிரித்தாலும் உள்ளுக்குள் இன்னும் அந்தக் கலவரம் அடங்கவில்லை.

"ரொம்ப தேங்க்ஸ் விஜய். என் கார் சர்வீஸ்க்கு போய் இருக்கு. இல்லேன்னா நானே  இவளை பிக் பண்ணிருப்பேன். பைக்கில வர முடியாது பாப்பா வேற இருக்காள்.  எப்படி வர போறாளோ பயந்துட்டு இருந்தேன்.நல்ல வேளையா நீங்க  பத்திரமா  கூட்டிட்டு வந்து  விட்டுடீங்க  அகேயின் தேங்க்ஸ் விஜய்"என்றான்.

"இட்ஸ் ஓகே  சார்"என்றான் கொஞ்சம் பவ்வியமாக, "நீங்க பேசிட்டு இருங்க, நான் காஃபி எடுத்துட்டு வந்துடுறேன்..." அங்கிருத்து சென்றவளை தடுத்த சத்யா, "அப்படியே டின்னரையும் ரெடி பண்ணிடு பவித்ரா விஜய்  இன்னைக்கி நம்மளோட டின்னர் சாப்பிட்ட்டும்..."என்றான்.

அதற்கு விஜய்யோ "இல்ல சார் எனக்கு  காஃபியே போதும்.  நான் கிளம்புறேன்"என்று பதறினான்.

"ஏன் பதறிங்க விஜய். நீங்க தான என் பொண்டாட்டி சமையல சாப்பிட்டு புகழ்வீங்க,  இன்னைக்கி டின்னரையும் சாப்பிட்டு புகழுங்க..." என்று குறும்பாகச் சொல்ல,  விஜய்யோ, அதில் ஏதோ அர்த்தம் பொதிந்து இருப்பதாக எண்ணினான். அப்படி சொன்னதை கூட தவறாக எடுத்து விட்டாரோ  என்று அஞ்சினான்.

"இல்ல..." அவன் ஏதோ  சொல்ல வர, சத்யா முடிவாக சொல்லிவிட்டான். அவளும் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றவள் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர்களுக்கு காபி கொடுத்து விட்டு  மீண்டும் சமையலறையில் புகுந்து கொண்டாள்.

இருவரும் வாசலில் கொட்டும் மழையை ரசித்த படி அமர்ந்திருந்தனர். சத்யா பேச , பேச ஒத்த வரியில் தயக்கத்தோடு பதிலளித்தான் விஜய்.

"என்ன விஜய் ஆஃபீஸ்ல நீங்க சிறந்த பேச்சாளர்னு கேள்வி பாட்டேன்  இன்னைக்கி என்ன ரொம்ப அமைதியா இருக்கீங்க? என்ன பார்த்தால் பயமா இருக்கா??? இல்ல  என் கூட'லாம் பேச மாட்டிங்களா?"எனவும்

"ஐயோ அப்படி எல்லாம் இல்ல சார். பேசுவேன். ஆனா உங்கள பார்த்தால் கொஞ்சம் தயக்கமும்  பயமும் இருக்கு சார்"என்றான்.

"ஏன்??" 

"இல்ல பவி பாட்டுக்கு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க... நீங்க என்ன நினைப்பீங்களோ ! பவிய தப்பா நினைச்சிடுவீங்களோனு கொஞ்சம்  பயம் தான் சார். இதுனால் வரைக்கும்அவ கிட்ட நான் ட்ராப் பண்ணவானு கேட்டதும் இல்ல அவங்க ட்ராப்  பண்ண சொல்லி கேட்டதும் இல்ல.  ஆனா இன்னைக்கி மழை , அவங்கள தனியா பஸ் ஸ்டென்ட்ல விட்டுடு போகவும் முடியல...  என் கார்ல ட்ராப் பண்ணவா கேட்டேன் பவியும் வந்தாங்க ஆனா வீட்டுக்கு கூப்பிடுவாங்க  எதிர்பார்க்கல... 

ஆபிஸ் கோலிக்ஸ், பிரண்டனு ஒரு பையன மனைவி கூட்டிட்டு வந்தால் கண்டிப்பா தப்பா நினைக்க வாய்ப்பு இருக்கு, எங்க நான் வீட்டுக்கு வந்ததால பவிக்கும் உங்களுக்கு பிரச்சினை வந்திடுமோ சின்ன பயம். உதவி பண்ண போய் உபத்திரத்துல முடிஞ்சுட கூடாதுல நீங்க நெனைப்பீங்களோ பயந்துட்டு இருக்கேன்"தன்னிலை விளக்கத்தை சொன்னான்.

"விஜய் ! உங்களுக்கு  எந்த தயக்கமும் பயமும் வேணாம். நான் உங்களையும் பவியையும் தப்பா நினைக்கல. இன்ஃபெக்ட் பவி உங்க கார்ல ஏறதுக்கு  முன்னாடி என் கிட்ட பெர்மிஷன் கேட்டு தான்  ஏறுனா. எனக்கு அவ பெர்மிஷன் கேட்கணும் அவசியம் இல்ல. தகவலா சொல்லிருந்தாலே போதும். ஆனா அவளுக்கு என் கிட்ட கேக்குறதுல சொல்றதுல ஒரு மனதிருப்தி, அதையும் நான் ஏத்துக்கணும்ல.

எனக்கு பவி பத்தி நல்லா தெரியும், ரிலேஷன்ஷிஃப்  கிட்ட எப்படி நடந்துக்கணுமோ அதுல அவ கரெட்டா இருப்பா ! உங்க கிட்டையும் சரி என் கிட்டையும் சரி மத்தவங்க கிட்டையும் தான்.

அவளுக்கு நீங்க ஹெல்ப் பண்ணிருங்க. அவளும் உங்களை வீட்டுக்கு அழைச்சிருக்காள்.  அதுவும் நான் இருக்கும் போது, இதுல என்ன தப்பு? நான் என்ன  தப்பா நினைக்க சொல்லுங்க விஜய்? 

ஆஃபீஸ்னா ஆண் , பெண் இருக்கத் தான் செய்வார்கள். அவர்களுக்குனு நட்பு வட்டாரம் இருக்கும் தான். அதுக்காக நீ ஆண்கள் கிட்ட பேசக் கூடாது  சொல்ற மேல் சாவனிஸ்ட் நான் இல்ல விஜய். 

நான் பவி விஷயத்துல தெளிவா இருக்கேன்.எனக்கு அவ மேல் எந்த டவுட் வந்தது கிடையாது. உங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்தத  நான்  தப்பா எடுத்துக்கல, நான் கிளிரா  இருக்கேன் நீங்க??" 

"நானும் தான் சார். இப்போ இருக்க கால கட்டத்துல முறை தவறின உறவுகள் தான் அதிகமாகிட்டே வருது. அதுனால சில நல்ல  உறவுகளையும் சந்தேகப்பட   தோணுது.  உங்களை போல  எத்தனை ஆண்கள் இதுபோல யோசிப்பாங்கனு தெரியல. அப்படி யோசிக்காம  தவறான முடிவு எடுத்து மனைவிய சந்தேகப்பட்டு பேசுறவங்களும் இருக்காங்க, அதை எல்லாம் பார்த்தும் கேட்டதுக்கும் அப்றம் உண்மையா இருக்கிற சில உறவுகள் கூட பாதிலே முறிஞ்சு போயிடுது, தேவை இல்லாத பேச்சுகளை வாங்கிறதால உண்மையான ஆண் , பெண் நட்பு  எல்லாம் தவறான கண்ணோட்டதுல பார்க்கிற நிலமைக்கு வந்துடுச்சி. கொண்டு வந்து விட்டுட்டோம். அந்த பயம் தான் எனக்கு, உங்களுக்கு பவிக்கும் எந்த பிரச்சினையும் வந்திட கூடாதுனு. இப்போ நான் கிளிரா இருக்கேன் சார்"என்றான்.

"சார் எதுக்கு ?? பெயர் சொல்லி கூப்பிடுங்க... இல்ல ப்ரோனு கூப்பிடுங்க இல்ல மச்சி மாமஸ் கூப்பிடுங்க உங்க இஷ்டம் தான்"என்றான் நட்பாக, 


"ஓகே சார்... ஸ்ஸ்ஸ்... ஒகே ப்ரோ"என்றான் சிரித்த படி. இருவரும் வேறு கதைகளுக்கு தாவி இருந்தனர்.
இரவு உணவு தயாராகிட  மூவரும் கேலி கிண்டலுடன் சாப்பிட்டு முடித்தனர். 

மழையும்  தன் ஆரவாரத்தை குறைத்து கொண்டு தூறலுக்கு மாறியிருந்தது. விஜய்யும் வீட்டிற்கு கிளம்பினான்.

இருவரும் வாசல் வரை வந்து அவனை வழி அனுப்பி வைத்தனர். "அடிக்கடி வீட்டுக்கு வா விஜய் !"என்றான் சத்யா.

"கண்டிப்பா நீங்க இருக்கும் போது சொல்லுங்க வர்றேன் ப்ரோ !"என்று காரை கிளப்ப இருவர் முகத்திலும் புன்னகை அரும்பியது . 

*****

"சரி பவி !  விஜய் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தத நான் தப்பா எடுத்திருந்தால் என்ன பண்ணிருப்பா ?"

"பொண்டாட்டிய  நம்புறவன் தப்பா எடுத்துக்க வாய்ப்பில்ல... சந்தேக படுறவனுக்கு எவ்வளவு விளக்கம் சொன்னாலும் அவன் நம்ப போறதும் இல்ல, நீ என்ன வேணா பேசிட்டு போனு நான் போயிட்டே இருப்பேன்.

முதல்ல எனக்கு நான் உண்மையா இருக்கேன் சத்யா. அதுவே என்னை தப்பு செய்ய தூண்டாது. நீ எனக்கு ப்ரீடம் கொடுத்திருக்க, அதை நான் நல்ல முறையில யூஸ் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு நானே போட்டு  வச்சிருக்க லிமீட்ஸ் எப்பையும் தாண்டவும் மாட்டேன். சோ நீ தப்பா நினைக்கறது போல  நான் நடந்துக்கவும் மாட்டேன்"என்றவளை இறுக அணைத்துக் கொண்டான்.

"எல்லாத்துக்கும் நம்ம மனசு  தான் காரணம் பவிமா !" என்றவன் அவளை கொஞ்சம் வம்பிழுக்க,"நான் என்  எக்ஸ கூட்டிட்டு வந்தால்  என்ன பண்ணுவ?"

"எக்ஸையா???"

"என் எக்ஸ் தான் இப்போ என் பிரண்ட். அவளை நான் கூட்டிட்டு வரட்டுமா??"

"ம்ம்... தாராளமா, அப்படியே அவங்க ஹஸ்பண்ட்டையும் சேர்த்து கூட்டிட்டு வாங்க..."என்றிட, "அவ புருசனையா??"

"ம்ம்..."

"எல்லா புருசனும் உன் புருஷன் போல இருக்க மாட்டாங்க பவிமா. அதுவும்
என் எக்ஸோட புருஷன் என் மேல கொல கண்டுல இருக்கான். கையில் நான் கிடைச்சேன் கைமா தான்"என்றவனை கண்டு கலகலவென சிரித்தாள்.
 
சிரிப்பின் ஓசை அடங்கி கூடல் தொடங்கி இச்சுக்களின் ஓசை  ஒலித்தன.

துளித்துளியாக மண்ணை முத்தமிட்ட மழையும், மீண்டும் வலுப்பெறத் தொடங்கி மண்ணோடு காதல் கூடல் கொண்டது.


ஆசாரம் - பெரும் மழை ,  நன்னடத்தை ஒழுக்கம் இன்னும் இருக்கு நான் இணைத்து விட்டேன்..