Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

அதிதி அத்தியாயம் - 4


"ஜுலிய உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு.." ரிச்சர்ட்

"அப்பா..."மோகன் அதிர்ச்சியுடன்

"அதுதான் கரெக்டான சாய்ஸ்னு எனக்கு தோணுது ரகுவும் அவளுக்கு உன்ன பத்தியும் அவளுக்கு நல்லா தெரியும் நம்ம கம்பெனி பத்தியும் அவளுக்கு நல்லா தெரியும்...அவ கண்டிப்பா உனக்கு எல்லா வகைளையும் சப்போர்டிவா இருப்பா...என்ன சொல்ற.." ரிச்சர்ட்

"இல்லப்பா ஜுலி எப்படிப்பா...ரெண்டாந்தாரமா...அவ என்ன நினைப்பா..அவளா எங்கேயோ இருக்கணும்பா.." மோகன்

"அதைபத்திலா நீ யோசிக்காத நான் உன்னோட பெர்மிஸன் மட்டும் தான் கேட்டேன்..." ரிச்சர்ட்

"அவ ஓகே சொல்லிட்டாளா.." மோகன்

"சொல்லிட்டா..." ரிச்சர்ட்

மோகன் யோசிக்கிறான்

"எனக்கு கொஞ்சம் டைம் வேணும்..என்னால இப்ப கல்யாணம் பண்ண முடியாது.." மோகன்

"சரி ஒன்னும் பிரச்சனை இல்ல அவங்க வெயிட் பண்ணுவாங்க இன்னு கொஞ்ச நாள்.." ரிச்சர்ட்

"அவங்கள எப்படிப்பா நம்மாளுக்காக வெயிட் பண்ண சொல்ல முடியும்... அது தப்பில்லையா" மோகன்

ரிச்சர்ட் சிரித்தவாறே எழுகிறார்

"அப்பா என்ன கிளம்பிட்டிங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல ரகு வந்துருவான்..."

"இல்ல மோகன்...எனக்கு அர்ஜென்ட் ஒர்க் ஒன்னு இருக்கு...நா இன்னொரு நாள் வந்து ரகுவ பாத்துக்குறேன்...போயிட்டு வரேன்..."

ரிச்சர்ட் மோகனிடம் சொல்லிவிட்டு தன் காரில் ஏறி கிளம்புகிறார்...மோகன் அவரை வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்கிறார்.

ரிச்ச்ர்டின் தந்தை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தன் குடும்பத்துடன் சென்னைக்கு வந்து தொழில் தொடங்கியவர்...ரிச்சர்ட் அந்த தொழிலையே தொடர்ந்தான் இடையில் ஓர் தமிழ் கலாச்சாரத்தில் ஈர்க்கப்பட்டு தமிழ் பெண்ணையே கல்யாணம் செய்து இங்கேயே இருந்துவிட்டான்...அவனது மனைவி மாரடைப்பால் மரணம் அடைய தனது நாற்பத்தி ஐந்தாவது வயதில் மற்றொர் நாற்பது வயதுடைய தமிழ் பெண்ணை கல்யாணம் செய்து தனியாக வாழ்ந்து வருகிறான்... மாதம் ஒரு முறை அவனோ அல்லது இவர்களோ மாற்றி மாற்றி பரஸ்பரம் வீட்டிற்கு சென்று உறவாடிக்கொள்வார்கள்...அவ்வளவு அளவு தான் அவர்களது உறவு இப்பொழுது நீடித்துக்கொண்டிருக்கிறது...ரிச்சர்ட் தன் இரண்டாம் கல்யாணத்திற்கு முன்பே தன் சொத்தில் சில பங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சமிருக்கும் சொத்துக்களையும் தன் தொழில் பதவிகள் முழுவதையும் மோகனிடம் ஒப்படைத்துவிட்டு மெரினா பக்கத்தில் ஒரு பங்களா வாங்கி அங்கு சென்றுவிட்டார்.இப்பொழுதும் அங்கு தான் இருக்கிறார்.

மோகனுக்கு அந்த நாள் முழுவதும் சிந்தனையிலே சென்றுவிட்டது...அடுத்த நாள் ஆஃபீஸ் சென்றபொழுது அங்கு அவன் தன் கேபினில் வேலை செய்துகொண்டிருக்கும் ஜுலியை பார்க்கிறான்...இன்று அவள் இவன் கண்களுக்கு வித்தியாசமாக தெரிகிறாள்...அவள் அழகாக தெரிகிறாள்...அவளது ஒவ்வொரு செயல்களையும் பார்க்க தோன்றுகிறது...ஜூலிக்கு இருக்கும் திறமைக்கு அவளுக்கு வெளிநாட்டில் இருந்து கூட வேலைவாய்ப்பு வந்ததே சென்ற மாதம் ஆனால் தன் கம்பெனியை இந்த நிலைமையில் விட்டு செல்ல கூடாது என்பதற்காக அதை நிராகரித்து விட்டாளே...ஒரு வேலை ஜூலிக்கு என் மேல் பிரியம் இருக்குமோ...மோகன் மேஜையில் சாய்ந்தவாறு யோசிக்கிறான்.

ஜுலியை மோகனிற்கு சின்ன வயதில் இருந்து தெரியும்...ஜூலியின் அப்பா ரிச்சர்டின் நண்பர் என்பதனால் சிறுவயது முதல் பலநாள் மோகன் ஜுலியின் வீட்டில் தங்கி இருக்கிறான்...இருவருக்கு ஆறு வயது வித்தியாசம்...மோகனிடம் மணிக்கணக்கில் போனில் பேசுவாள் ஜுலி... ஆனால் மோகன் தனக்கு கல்யாணம் நீ வர வேண்டும் என பெங்களூரில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்த ஜுலியை அழைத்தபொழுது அவள் சாக்கு போக்கு சொல்லி வரமுடியாது என சமாளித்துவிட்டாள்.கல்யாணத்திற்கு பின் மோகனிடம் ஜுலி அவ்வளவாக பேசவில்லை...அப்படியே அவர்களது நட்பு முறிந்துவிட்டது நான்கு வருடங்களுக்கு பின் ஜூலியின் அப்பா ஒரு நாள் மோகனை பார்க்க வந்திருந்தான் ஜூலி எம்.பி.ஏ அவளுக்கு ஓர் வேலை போட்டுத்தருமாறும் கூறினார்...பின் ஜுலி மோகனின் ஆஃபீஸில் பணியமர்த்தப்பட்டாள் நாளு வருடங்களில் ஜுலி கிட்டதட்ட பெங்களூரின் மாடர்ன் பெண்மணியாக மாறியிருந்தாள்பொதுவாக இந்த மாறி சிபாரிசில் வேலைக்கு வருபவர்கள் அவ்வளவு தகுதியுடையர்களாக இருக்கமாட்டார்கள் ஆனால் ஜூலி அதில் நேர்மாரானவள்...

மேஜையில் சாய்ந்தவாறு அவளை கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க ஆர்மபிக்கிறான்.

மோகனும் ஜூலியும் அடுத்த ஆறு மாதத்தில் கல்யாணம் முடித்துகொண்டனர்...ஜூலி பலமுறை ரகுவிடம் நட்பை சம்பாரிக்க முயன்றால் ஆனால் அனைத்திலும் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ரிச்சர்ட் தான் ஒரு நாள் ரகுவிடம் மோகன் ஜூலியை மணம் முடிக்கப்போவதை சொன்னான்...ரகுவிற்கு என்ன செய்வது என தெரியவில்லை அவன் நேராக செல்வத்திடம் தான் போனான் அவன் தோட்டத்தில் பீடி குடித்துக்கொண்டு இருந்தான்...அவனிடம் சென்று கேட்டபொழுது

"போச்சு துரை போச்சு அவ வீட்டுக்குள்ள வந்தா முதல எங்க பொழப்புல கைய வைப்பா...அடுத்து உங்க அப்பாவ உங்களுக்கு எதிரா மாத்துவா கடைசியில உங்க அம்மாக்கு என்ன நடந்துச்சோ அதுதான் உங்களுக்கும்..."

செல்வம் பேசிக்கொண்டே போக ரகு வெறுட்டலுடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தான்

"ஆனா ஒன்னு பண்ணா அத தடுக்க வாய்ப்பு இருக்கு..."

"என்ன..."

செல்வம் ரகுவிடம் ஒரு யோசனை சொன்னான்...ரகு செல்வத்தின் யோசனையின் படி அன்று இரவு மோகன் தூங்க வரும்பொழுது அவனிடம் அழுதான்

"அப்பா...அப்பா எனக்கு பயமா இருக்குப்பா இன்னொரு அம்மா எனக்கு வேண்டாம்ப்பா.."

மோகன் அவனை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றான் ஆனால் அவன் கேட்கவில்லை இறுதியில் மோகன் தான் திருமணம் செய்துகொள்ள போவதில்லை என சமாதானம் செய்து தூங்கிவைத்துவிட்டான் அடுத்த நாள் காலை மோகன் ரகுவை அழைத்துக்கொண்டு பார்க்கிற்கு சென்றான்..அங்கு அவர்களுக்கு முன்பே ஜுலி வந்திருந்தாள் ரகுவை ஜூலியிடம் ஒப்படைத்துவிட்டு அவன் ஆஃபீஸுக்கு சென்றுவிட்டான்...ஜுலியை மோகன் ரகுவிற்கு அறிமுகப்படுத்திய பின்தான் இவள் அன்று
சிவப்பு சுடிதார் அணிந்து தந்தையிடம் கையெழுத்து வாங்கி சென்ற பெண் இவள் தான் அன்று ரயிலில் தன்னிடம் தொலைபேசியில் பேசியது...இவள் தான் தன் தாயின் சாவுக்கு காரணமானவள் இவள் தான் என்னை தந்தையிடம் இருந்து பிரிக்க வந்தவள் என்று...ஜுலி அன்றே புரிந்துகொண்டால் ரகு தன்னை வெறுக்கிறான் என்று..அவள் தன்னை தன் நண்பனாக பாவித்துக்கொள்ளுமாறு ரகுவிடம் கூறினால் அன்று அவள் ராகுவிற்கு செய்த எதுவும் அவனது மனத்தை திருப்தி படுத்தவில்லை...அன்று தொடங்கி திருமண நாள் வரை அவள் ரகுவை தனது நண்பனாக்கிக்கொள்ள
அவள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன

மோகனின் திருமணத்தன்று ரகுவிற்கு
வெறுப்பாக இருந்தது ஆனால் அன்று அவனுக்கு ஓர் அதில் ஒரு சந்தோஷம் கிடைத்தது...மோகனின் கல்யாணத்திற்கு ஷர்மி வந்திருந்தாள் சொல்லப்போனால் மல்லிகாவின் மறைவுக்கு பின் அவள் முதல் முதலாக அன்று தான் அங்கு வந்தாள்... ரகு அவள் சேலையை பிடித்தவாறே அவளுடனே சுற்றினான்.அன்று முதல் இரவுக்கு ஜூலியின் வீட்டிற்கு மோகன் சென்றுவிட்டான்...ரகு ஷர்மியுடன் தன் வீட்டிற்கு வந்துவிட்டான்...அவன் அன்று மிகவும் தனிமையாக உணர்ந்தான் தாயும் அவனை விட்டுவிட்டு சென்றுவிட்டாள்...தந்தையும் இன்னொருத்தியை மணந்துகொண்டு அவளுடன் அவரது வாழ்க்கையை வாழ சென்றுவிட்டார்...நாளை சித்தியும் சென்றுவிடுவாள்...அதற்கு பின் இப்படி ஆதரவாக கட்டிப்பிடித்து உறங்குவதற்கு தனக்கு துணையாக யாரும் இருக்கமாட்டார்...தனியாக தானே உக்கார்ந்து அழுது தன் கண்ணீரை தானே துடைக்கவேண்டியிருக்கும் இனி அவள் வீட்டிற்கு வந்து என்னென்ன செய்வாளோ தான் வேற அன்று பார்க்கில் அவளிடம் சரியாக பேசாமல் சொல் பேச்சு கேட்காமல் வெறுப்பேற்றிவிட்டோம் பரவாயில்லை என்ன ஆனாலும் அவளை சும்மா விட்டுவிடக்கூடாது தானும் தன் தாயின் இழப்புக்கு அவளை பழிவாங்கவேண்டும் என மனதினுள் எண்ணியவாறே தூங்கிவிட்டான்.