Aditi - 7 books and stories free download online pdf in Tamil

அதிதி அத்தியாயம் - 7

எப்ரல் 13,1985

ரோகனும் ரகுவும் இரயிலில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருக்கின்றனர்... இம்முறை ஜன்னல் சீட்டிற்காக இருவரும் அடித்து பிடித்து கொள்ளவில்லை...ஏனென்றால் இருவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை ஏற்கனவே அங்கு வயதான ஓர் தாத்தா உட்கார்ந்திருந்தார்...

தன் ஒன்பது வருடங்கள் பெங்களூர் வாசத்தை முடித்து விட்டு ரகு தன் சொந்த ஊரையும் தன் தந்தையையும் பார்க்க சென்று கொண்டு இருக்கிறான்...இத்தனை வருடங்களில் பெங்களூர் அவனுக்கு அடைக்கலம் மட்டுமே தரவில்லை பல உறவுகளையும் நினைவுகளையும் சேர்த்தே கொடுத்திருக்கிறது...சென்னையில் வீட்டினுள்ளே கூண்டு பறவை போல் வாழ்ந்த ரகுவிற்கு வாழ்க்கை என்பது என்னவென்று வழிக்காட்டி சிறகடித்து பறக்க கற்று தந்தது பெங்களூர்.அங்கிருந்து பிரிய மனமின்றி வேறு வழியுமின்றி மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறான்.

இரயில் புறப்பட தொடங்கிய சில நிமிடங்களிலே ரோகன் உறங்கிவிட்டான்...ரகுவுக்கு ஏனோ உறக்கம் வரவில்லை.

அவனது பேச்சுதுணைக்கு ரோகனும் இல்லை அதனால் தன் கண்ணை மூடிக்கொண்டு தன் பெங்களூர் வாழ்க்கையை மனதினுள் நினைத்து பார்க்க ஆரம்பித்தான்.அன்று தன்னை பெங்களூருக்கு வழியனுப்ப வந்த தன் தந்தை தன்னிடம் கூறிய வார்த்தைகள்

"டேய் ரகு கொஞ்சம் பாத்து பத்திரமா இருக்கணும்...வாரத்துக்கு ஒரு தடவ போன் போடு..அப்பாவ மறந்துடாத...ரோகன் இவன நல்லா பாத்துக்கோ...நேரத்துக்கு சாப்பிடு..பழகிறவங்க கூட ஜாக்கிரதையா இரு..."

என மோகன் கூறிய நூற்றுக்கணக்கான அறிவுரைகளும் ரகு பெங்களூர் வந்து இறங்கிய அந்த நொடியில் அவனுக்கு மறந்து போயின...

ரகுவையும் ரோகனையும் ஜெர்மன் ஹை ஸ்கூலில் சேர்த்துவிட்டு அங்கு அருகில் இருக்கும் டேவிட்டின் அண்ணன் ஜான் வீட்டில் அவர்களை விட்டுவிட்டு இரண்டு நாட்களில் சென்னை திரும்பி விடுகிறாள் ஷர்மி...


டேவிட்டிற்கும் அவர் மனைவிக்கும் திருமணம் ஆகி பல வருடங்களாக குழந்தை இல்லாததால் அவர்களும் இங்கு இருக்கும் வரை ரகுவையும் ரோகனையும் பத்திரமாக தாங்கள் பாரத்துக்கொள்வதாக பொறுப்பேற்று சிவப்பு கம்பளமிட்டு அவர்களை வரவேற்றுக்கொண்டனர்...

ரோகனுக்கும் ரகுவிற்கும் தனி அறை ஒதுக்கப்பட்டது தன் வீட்டில் தனக்கு எவ்வளவு வசதி இருந்ததோ அது ரகுவுக்கு இங்கையும் கிடைத்தது...

ரகுவிற்கு தன் வீட்டிற்கும் இந்த வீட்டிற்கும் வித்தியாசம் காண முடியவில்லை அந்த அளவிற்கு அவனுக்கு இங்கு சுதந்திரம் கிட்டியிருந்தது, ஆனால் ஓர் வித்தியாசம் அவனால் அறிந்து கொள்ள முடிந்தது அங்கு ஜூலி இருக்கிறாள் இங்கு இல்லை.

ரோகனுக்கும் ரகுவிற்கும் காலையில் எழுவதில் இருந்தே போட்டி ஆரம்பித்துவிடும்...பாத் டப்பில் தண்ணீரை பாத்ரூம் முழுவதும் சிந்தி வைப்பதில் இருந்து தலையனை சண்டைபோட்டு பெட்ரூம் முழுவதும் பஞ்சால் நிரப்பும் வரை அவர்கள் அங்கு செய்யாத லூட்டிகளே கிடையாது...ஆனால் டேவிட்டின் மனைவி மாயா அவை எவற்றுக்கும் அவர்களை கடிந்து கொள்ள மாட்டாள்
அவர்கள் செய்யும் லூட்டிகளை எல்லாம் ரசிக்கத்தான் செய்வாள்.

ரகுவிற்கு ஸ்கூலில் பல புதிய நண்பர்கள் கிடைத்தனர்...அவர்களுள் சுதீப்,மைக்கேல், லீனா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்...அவர்கள் அனைவரும் ஸ்கூலில் எப்பொழுதும் ஒன்றாகவே சுற்றுவர்...ரகு கடைசி பெஞ்சில் மைக்கேல் உடன் அமர்ந்திருப்பான்...ரோகன் இரண்டாவது பெஞ்சில் தன் நன்பர்களுடன் அமர்ந்திருப்பான்...

ஸ்கூலில் ரகுவிற்கு என தனி நட்பு வட்டாரமும் ரோகனுக்கு என தனி நட்பு வட்டாரமும் இருந்தது நாளடைவில் இருவரும் மற்றவர்களுடைய நட்பு வட்டாரத்திற்கும் நன்கு பரிச்சயம் ஆனவர்கள் ஆயினர்...

ரகு வந்த புதிதில் வாரம் ஒரு முறை ஜானிடம் தன் தந்தைக்கு கால் செய்து தர சொல்லி அடம்பிடிப்பான்...ரோகன் மற்றும் அவன் நண்பர்கள் அவனை அதை வைத்து கிண்டல் செய்வார்கள் அப்பா பிள்ளை என...நாளடைவில் அவர்கள் கேலிக்கு பயந்து கால் செய்ய சொல்லும் பழக்கத்தை விட்டுவிட்டான் ரகு.

மோகனும் முதலில் மறவாமல் வாரம் ஒரு முறை கால் செய்துவந்தான் சில சமயம் அவன் மறந்தாலும் ஜுலி அவனுக்கு நினைவுப்படுத்துவாள் ...அவன் கால் செய்யும் பொழுதும் தன்னைப்பற்றி கேட்கமாட்டானா என ஜுலி ஏங்குவாள் ஆனால் அவன் கேட்க மாட்டான் ஜூலியிடம் தருகிறேன் என மோகன் கூறினால் அவன் போனை கட் செய்து வைத்துவிடுவான்...நாளடைவில் வேலைப்பளு காரணத்தினால் சென்னையில் இருந்து டேவிட்டின் வீட்டிற்கு வரும் போன் காலின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது...திடீரென ஒரு மாதம் மூன்று கால் வரும் திடீரென ஒரு மாதம் காலே வராது...ஆனால் அதையெல்லாம் ரகு கண்டுகொள்ளவே மாட்டான்.

1976 ஆகஸ்ட் மாதம் வந்த காலில் மோகன் ரகுவிடம் சொன்னான் இன்னும் ஓர் எட்டு மாதத்தில் உனக்கு ஓர் தம்பி பாப்பா வந்துவிடுவான் என. டேவிட் வீட்டில் அந்த செய்தியைக்கேட்டு அன்று பெரிய கொண்டாட்டமே நடந்தது மாயா வேலைக்காரியை குலாப் ஜாமூன் செய்ய சொன்னாள்...ஆனால் ரகுவால் அன்று முழுவதும் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஏற்கனவே தந்தை தன்னிடம் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது போன் கால் கூட சில மாதம் செய்ய மறந்துவிடுகிறார் இவற்றுள் இன்னொருவன் வந்துவிட்டாள் அப்பா தன்னை மறந்தே விடுவார் என...

அவர் மறந்தால் என்ன மறக்காவிட்டால் என்ன தான் இனி சென்னைக்கு சென்றால் தானே தந்தை தன் வீடு ஜூலி என அதை பற்றியெல்லாம் சிந்திக்க...இனி படித்து முடித்து தன் வாழ்க்கை அனைத்தையும்
பெங்களூரிலே வைத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்துகொண்டான்.

1977 ஜனவரி 4 மோகனிடம் இருந்து வந்த போன் காலில் டாக்டரிடம் இன்று ஜூலியை அழைத்து சென்றதாகவும் ரகு ஏப்ரல் மே விடுமுறையில் வீட்டிற்கு வரும்பொழுது அவனுடன் விளையாட தம்பி பாப்பா இங்கு இருக்கும் என டாக்டர் உறுதி செய்துவிட்டதாகவும் கூறினான்...

1977 மார்ச் 3 மோகனிடம் இருந்து வந்த போன் காலில் ரகுவிற்கு தம்பி பிறந்திருப்பதாகவும் அவனுக்கு அர்ஜுன் என்று பெயர் வைக்கப்போவதாகவும் கூறினான் மோகன்...மேலும் கூடிய சீக்கிரம் ரகுவிற்கு அர்ஜுனின் போட்டோவை கொரியர் அனுப்புவதாகவும்.தம்பி உன் வருகைக்காக காத்திருப்பதாகவும் கூறினான்

1977 மார்ச் 12 மோகன் அனுப்பிய கொரியர் டேவிட்டின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது மாயா கொரியரை பிரிக்காமல் ஸ்கூலில் இருந்து வந்த ரகுவிடம் அதை கொடுத்தாள்...ரகுவிற்கு அந்த கொரியரை பார்க்க விருப்பமில்லை ஆனால் ரகு அந்த கொரியரை பிரிக்கவில்லை என்றாலும் எபப்டியேனும் ரோகன் அதை பிரித்து பார்த்துவிடுவான் அதனால் ரகு அவனுக்கு முன்பு அதை பிரித்துபார்த்திட வேண்டும் என முடிவெடுத்து கொரியரை பிரித்தான்.

ரகு கொரியரை பிரித்து அதன் உள் இருக்கும் இன்னொரு வெள்ளை தாளை பிரித்து எடுக்க உள்ளே இருந்து இரண்டு மூன்று போட்டோக்கள் கீழே விழுந்தன...ரகு அந்த போட்டோக்களை எடுத்து பார்க்க மோகனும் ஜூலியும் ஜூலியின் கையில் ஒரு சிறு குழந்தையும் இருந்தது...அடுத்த போட்டோவில் ஜூலி மடியில் குழந்தையை வைத்து அதன் நெற்றியில் முத்தமிடுவது போல் இருந்தது.

அந்த போட்டோவை பார்க்கும் பொழுது தான் பிறந்த பொழுது இப்படி தான் போட்டோக்களை எடுத்து தன் தாயும் தந்தையும் ஆல்பம் போட்டு வைத்திருந்தனர்...எப்படி தன் தாயும் தந்தையும் சிரித்த முகத்துடன் இருந்திருப்பர் அந்த போட்டோவில்...அந்த போட்டோக்களை தன்னிடம் காண்பித்து தன் தாய் மல்லிகா எப்பொழுதும் சிலாகிப்பாள்...ரகுவிற்கு இந்த போட்டோக்களை பார்க்க பார்க்க
அந்த நினைவுகள் எல்லாம் வந்து செல்கின்றன .

அடுத்த போட்டோவில் ஹாஸ்பிட்டலில் டாக்டரிடம் இருந்து மோகனும் ஜூலியும்
குழந்தையை வாங்குவது போன்ற போட்டோவை ரகு பார்க்கிறான்.
ஜூலி முன்னரை விட இப்பொழுது கொஞ்சம் உடல் பருமணாகிவிட்டது போல் தெரிகிறாள்..அப்பாவும் அனைத்து போட்டாக்களிலும் சிரித்த முகத்துடன் இருக்கிறார் தன்னை பிரிந்துவிட்ட சோகம் கொஞ்சம் கூட அவர் முகத்தில் காணவில்லையே...அவ்வளவு தான் இனி தன்னை தந்தை மறந்து விடுவார் நான் இருந்த இடத்தில் எல்லாம் இவன் வந்து விடுவான்.

ரகு பார்க்க விருப்பம் இல்லாமல் அடுத்த போட்டோவை எடுத்து பார்க்கிறான்...அர்ஜுன் மட்டும் தனியாக இருக்கும் போட்டோவை ரகு பார்க்கிறான்...அர்ஜுன் தூங்கிக்கொண்டிருக்கும் அந்த போட்டோவை பார்த்தவுடன் ரகுவிற்கு அந்த பொறாமை வருத்தம் எல்லாம் பறந்து செல்கிறது.

அடுத்த போட்டோவில் ஜூலிக்கு பக்கத்தில் பெட்டில் படுத்திருந்தான் அர்ஜுன்...அந்த போட்டோவின் கீழ் அர்ஜுன் என போடப்பட்டிருந்தது...கள்ளம் கபடமில்லா சிரிப்பு குண்டு கண் தன் அப்பாவின் முகத்தை உரித்துவைத்தது போன்றான தோற்றம் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது...அதனாலேயே ரகு சட்டென்று அந்த போட்டோவை எடுத்து தன் பேக்கில் போட்டு மூடிவிட்டான்.அர்ஜுனின் போட்டோக்களை பிரிக்கும் பொழுது ஒரிரு வினாடிகள் ரகுவின் உள்ளத்தில் ஓர் வினோத உணர்வை அவனுடைய முகம் தந்துவிட்டு சென்றது அப்போது அவனுக்கு தெரியாது அது தான் சகோதரப்பாசம் என்று...
பகிரப்பட்ட

NEW REALESED