Aditi - 5 books and stories free download online pdf in Tamil

அதிதி அத்தியாயம் - 5

மறுநாள் ஜூலியும் மோகனும் வீட்டிற்கு வந்துவிட்டனர்...இரண்டு நாட்களில் கல்யாணத்திற்கு வந்து இருந்த சொந்தங்கள் அனைவரும் திரும்பி தங்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர் ஷர்மி உட்பட அந்த வீட்டில் வாழ்பவர்கள் கோலாகல கொண்டாட்டங்களில் இருந்து சாதாரண அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர் ஆனால் ஒர் திருத்தும் முன்பு மோகன் ரகு இப்பொழுது மோகன் ரகு ஜூலியாக மாறி இருந்தது...ரகு ஜூலி சாப்பிடும் பொழுது அவன் சாப்பிட மாட்டான் அவள் சாப்பிட்டு முடித்தவுடன் தான் டைனிங் டேபிலிற்கு செல்வான்.ஜூலி ஹாலில் இருக்கிறாள் என்றால் அவன் டி.வி பார்க்கக்கூட ஹாலிற்கு போக மாட்டான்.

மோகன் ஜூலியை அம்மா என்று அழைக்க சொல்லுவான் ஆனால் ரகு அவன் பேச்சை கேட்கமாட்டான்...சாப்டயா என்றால்

"இல்லை நா சாப்டுட்டேன்.."

என்ன வேணும்

"சுகர் கொஞ்சம் கொடு..."

ரகு என்ன தேடுட்டு இருக்க

"என் புக்..." என பதில் வரும் எல்லாம் வேண்டா வெறுப்பாக இருக்கும் ஒருநாள் இதைக்கவனித்த மோகன்

"ஐ ஷே கால் ஹெர் மாம்..."மோகன்

ரகு எதுவும் பேசாமல் அமைதியாக கீழே குனிந்து இருக்கிறான்

"உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன்...என்ன பாரு...அவள இனி அம்மான்னு தான் கூப்பிடனும்.."மோகன்

ஜுலி"விடுங்க எல்லாம் சரியா போய்டும்...சின்ன பையன் தான..."

"இல்ல...ஜூலி சின்ன வயசுலையே இத சரி பண்ணிடனும்..."

"இல்ல மோகன் நா அவனுக்கு பிரண்ட் மாதிரினு நான் தான் சொன்னேன்...அதான் அப்பிடி பேசுறான்..."

"டோன்ட் ஸ்பாய்ல் ஹிம்..."மோகன் கோவமாக கத்திவிட்டு சென்றுவிடுகிறான்.

சில சமயம் ஜுலி அவனது பேக்கை தொட்டாலோ அல்லது அவன் பொருள்களை எடுத்தாலோ அவளது கையை தட்டிவிட்டு விடுவான் அவள் தொட்ட பொருள்களை மீண்டும் பயன்படுத்தமாட்டான்.

தினமும் சாப்பிட்டு முடித்தவுடன் ரகுவுடன் வந்து மோகன் படுக்க வேண்டும் என வற்புறுத்தி அழைத்து சென்று விடுவான்...மோகனின் மார்பில் படுத்து உறங்கிவிடுவான்.ஆனால் காலையில் எழுந்துபார்க்கும் பொழுது அவன் தனியாக படுத்திருப்பான்...மோகன் ஜூலியின் அறையில் படுத்திருப்பான்...ஜுலிதான் மோகனை அழைத்து செல்கிறாள் என்று நினைத்தான்...அடுத்தடுத்த நாட்களில் ரகு மோகனை இறுக்கப்பிடித்து கொண்டு தூங்குவான் இருந்தாலும் காலையில் அவனுக்கு ஏமாற்றங்களே மிஞ்சியிருந்தது...ரகு சில நாட்கள் தூங்கிவிட கூடாது என நினைப்பான் ஆனாலும் தூங்கிவிடுவான் ஆனால் ஒரு நாள் ரகு கண்டுபிடித்துவிட்டான் ஜுலி வந்து மோகனை அழைக்கவில்லை தந்தை தான் தன்னை விட்டுவிட்டு அங்கு செல்கிறார் என்று அப்படியென்றால் ஜுலி தான் தன்னைவிட முக்கியமானவளாக அவருக்கு தெரிகிறாளா என யோசிக்க ஆரம்பித்தான்

செல்வம் தனக்கு ஆதரவாக இருப்பான் என்று எதிர்பார்த்தால் அவன் ஜுலி வந்த நேரத்தில இருந்தே அவளைப்பார்த்தாலே முகத்துதி போட ஆரம்பித்துவிட்டான்

"அம்மா ஐயாவும் நீங்களும் பாக்க ஜெமினி கணேசன் சாவித்திரி மாறி இருக்கீங்க என் கண்ணே பட்டுடும் போல நாளைக்கு வேளையவிட்டு வீட்டுக்கு போறப்ப உங்களுக்கு நானே சுத்திபோட்டுட்டு போனும்...என் கண்ணே படுதுனா அப்ப நம்ம வீட்ட சுத்தி இருக்கரவன பத்தி எல்லாம் சொல்லிட்டா இருக்கணும்...சும்மாவே அவனுங்க பார்வை நரிப்பார்வை ஆந்தைப்பார்வையா தான் இருக்கு.."

சில நேரம் அவனாகவே சென்று ஜூலியை காக்கா பிடிப்பான்

"சும்மா சொல்லக்கூடாதுமா கடவுள் இன்னார்க்கு இன்னார்னு அவர் எழுதி வச்சதுதான் நடக்கும்...எனக்கு முகரேகை கொஞ்சம் பாக்கத்தெரியும் நா அப்பவே பெரிய அய்யாட்ட சொன்னேன்...அந்த அம்மா முகரேகை சரியில்ல வேண்டாம்னு அவரு கேக்கல...ஆனா பாருங்களேன் நா உங்கள முதல் தடவை பாக்குறப்ப அய்யாவுக்கு ஏத்த முகப்பொருத்தம் அப்படியே இருந்துச்சு...நா நீங்க இங்க வாழ வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன் இப்ப என் வாய்க்கு சீனிதான் அள்ளி போடணும் போங்க...."

அவன் என்ன செய்யமுடியும் அப்படி அவளுக்கு ஜால்ரா அடிக்காவிட்டால் அவனை வேலையை விட்டு தூக்கிவிடுவாளே எனக்காவது என் சார்பாக வாதிட அப்பா இருக்கிறார் அவனுக்கு யார் வாதிடுவார் என செல்வத்தின் நிலைமையை எண்ணி உச்சுக்கொட்டுவான் ரகு

சிலசமயம் கிட்சன் டைனிங் டேபிலில் காதல் செய்வார்கள் மோகனும் ஜூலியும் சில சமயம் மோகன் ஜூலியிடம் சாப்பிடும் பொழுது வழிந்து கொண்டு இருப்பான் அதை எல்லாம் பார்க்கும் பொழுது ரகுவுக்கு கோவமாக வரும் எவ்வளவு எளிதில் தன் தந்தை அம்மாவை மறந்துவிட்டு இவளுடன் கொஞ்சி கொண்டிருக்கிறார் என்று


ஒருநாள் ஜூலியின் தந்தை அவளை பார்க்க வந்திருந்தார் அப்பொழுது ஸ்கூலில் இருந்து வந்த ரகுவின் சட்டையில் சகதி இறைந்திருக்க
ஜுலியின் அப்பா எதார்த்தமாக அவனிடம்

"என்னடாப்பா ரகு சட்டையெல்லாம் கரையோட வந்திருக்க..." கேட்க ரகுவோ அவரை சட்டை செய்யாமல் தன் அறையினுள் செல்ல முயல்கிறான்.

ஜுலி அவனை தடுக்கிறாள்...ரகு அவளது கையை தட்டிவிடுகிறான்.

ஜூலி அவனை விடாது மீண்டும் பிடித்து இழுக்கிறாள் "தாத்தா கேள்வி கேக்குறாருல இப்படி போனா உன்ன ஆய் பையனு நினைக்க மாட்டாரா..."

"அவரு உன் அப்பா...எனக்கு தாத்தா இல்ல..."ரகு சொல்லிவிட்டு தன் அறையினுள் சென்றுவிடுகிறான்.

மோகன் கோபத்துடன் எந்திரிக்கிறான் ஆனால் ஜூலியின் தந்தை அவனை தடுத்துவிடுகிறார்.

ஜூலியின் தந்தை சென்ற பிறகு மோகன் ரகுவை இழுத்து ஹாலில் முட்டி போட வைத்து அவன் கன்னத்தில் பளார் என ஓர் அறையை வைத்தான்.

"அன்னிக்கே சொன்னேன் ஸ்பாய்ல் பண்ணாதுன்னு..."ஜூலியை கத்துகிறான்

"இனி அவள அம்மானு கூப்பிடனும்..அப்படி இல்லன்னாலும் வாங்க போங்கனு மரியாதையா கூப்பிடனும்...இல்ல இல்ல அம்மானு தான் கூப்பிட்டு ஆகணும் அவ்வளவுதான்...அதுவரைக்கும் முட்டி போடு"

ரகு அழுக ஆரம்பிக்கிறான்.

"ஏய்..இப்ப ஏன் அழுதுகிட்டு இருக்க அவங்க உனக்கு அம்மா தான வேணும் அம்மாவ அம்மான்னு கூப்பிட சொல்றேன் இதுக்கு ஏன் அழுவுற..."

ரகு அழுகிறான்

"விடுங்க இதுக்கு போய் அவன அழ வச்சிக்கிட்டு...எந்திரிடா.."ஜுலி

"நீ சும்மா இரு...டேய்...பேசு அழுகாத...எப்பையும் பேச வாய்ப்பு கிடைக்குறப்ப அத தவற விடக்கூடாது..."

"உங்கள கல்யாணம் பண்ணா எனக்கு அம்மாவா ஆகிடுவாங்களா..."

"ஆகிடுவாங்க...அவ உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கா தெரியுமா...வேற யாராவது அவ எடத்துல இப்ப இருந்துருந்தா அப்ப தெரியும் சித்தி கொடுமைனா என்னனு...

ரகு அமைதியாக இருக்கிறான்

"சரி சொல்லு அப்படி அவ உனக்கு என்ன செஞ்சா ஏன் அப்படி அவ மேல அப்படி வெறுப்பு சொல்லு.. "

ரகு மோகனை பார்க்கிறான்.

"அவ உங்கள என்கிட்ட இருந்து என்ன பிரிக்க பாக்குறா...இப்பலா நீ என்கூட தூங்குறது இல்ல.
.சரியா பேசுறது இல்ல...பார்க்குக்கு கூட கூட்டி போர்றது இல்ல..."

மோகனும் ஜூலியும் சிரிக்கின்றனர்...ஜுலி அவன் முன் முட்டிப்போட்டு உட்காருகிறாள்

"சரி...இதுக்குத்தானா மூஞ்ச தூக்கி வச்சிருந்த இவ்வளவு நாளா... உங்கப்பாவ நீயே இனி வச்சிக்கோங்க நீங்க இனி பெர்மிஸன் கொடுத்தா மட்டும் தான் அவரு என் கூட பேசுவாறு போதுமா சார்..."

"சரி.. அதான் சரி சொல்லிட்டாலே...இனி ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் தான.."

ரகு தலையை கீழே போட்டு அமைதியாக இருக்கிறான்

"என்ன...இப்ப என்ன ஆச்சு..."

"இல்ல என்னால பேச முடியாது..."

"ஏன்..."

"எங்கம்மாவ கொன்னவல நா எப்படி அம்மான்னு கூப்பிட முடியும்..."

ரகுவின் அந்த சொற்களை கேட்டு ஜூலியும் மோகனும் அதிர்ச்சியடைகின்றனர்.

"ரகு...வயசுக்கு தகுந்த பேச்சு பேசு..."

"ஆமா...அதான உண்மை அம்மா செத்ததுக்கு நீங்க இந்த மேனாமினுக்கி கூட சுத்துனது தான் காரணம்..."

ரகுவின் கண்ணத்தில் மோகன் தன் கைரேகை பதிய ஓர் அறை விடுகிறான்

ஜூலி அதிர்ச்சியுடன் மோகனை பார்க்கிறாள்...இத்தனை நாள் மல்லிகா ஏதோ மனநிலை சரியில்லாததால் தற்கொலை செய்துகொண்டாள் என்று தான் அவள் நினைத்துக்கொண்டிருந்தாள்...இவர்கள் இடையே ஏதோ மனசச்சரவுஏற்பட்டுள்ளது அதில் கோவத்தில தூக்கிட்டு கொண்டாள் என்று தான் நினைத்தாள் ஆனால் இந்த நொடி தான் அவளுக்கு தெரிகிறது அந்த சச்சரவுக்கும் காரணமே தான் தான் என்று

"அவன் சொல்றது உண்மையா மோகன்..."

மோகன் என்ன சொல்வது எனத்தெரியாமல் தடுமாறுகிறான்

"இல்லை ஜுலி....அது..."மோகன்

ஜூலியின் கண்ணில் இருந்து கண்ணீர் ததும்புகிறது...தன் கண்ணை துடைத்தவாறு அழுதுகொண்டே தன் ரூமிற்கு ஓடுகிறாள்.

மோகன் கோவத்தில் ரகுவை கை ஓங்குகிறான் ஓங்கிவிட்டு அடிக்காமல்

"சீ..உங்களுக்கு நடுவுல மாட்டிக்கிட்டு இப்படி சாவுறதுக்கு பேசாம அவளுக்கு பதிலா நான் தூக்கு போட்டிருக்கலாம்...செய்..."தன் தலையில் அடித்துக்கொண்டு ஜூலியை சமாதானம் செய்ய அவள் பின்னால் ஓடுகிறான்.
பகிரப்பட்ட

NEW REALESED