uyirukkul kalandhaval yaaravalo books and stories free download online pdf in Tamil

உயிருக்குள் கலந்தவள் யாரவளோ

அத்தியாயம் 1
ஹலோ பிரெண்ட்ஸ் இது என்னோட நான்காவது கதை. எப்பவும் போலதாங்க ஜஸ்ட் பிளானிங் மட்டும்தான். பட் கதையை சுவாரசியமா கொண்டு போலாம்னு உறுதியாவும், நம்பிக்கையாவும் இருக்கேன். தாறு மாறு தக்காளி சோறு.. சூப்பரா இருக்கும்..அடுத்து என்ன... அடுத்து என்னனு எதிர்பார்ப்போட இருக்கும்.... செமையா இருக்கும்... என்னங்க அப்படி எல்லாம் என் கதை இருக்கும்னு நினைச்சீங்களா... தெரியலையேங்க நீங்கதான் படிச்சுட்டு சொல்லணும். படம் ரீலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி நிறைய பில்டப் கொடுத்தா படம் ஊத்திக்கும் என மக்கள் பக்கம் ஒரு பொதுவான கருத்து இருக்கு. அது போல என் கதையை நானே சொதப்பணும்னு நினைக்க மாட்டேங்க. பொறுமையா...அமைதியா... மெல்லமா.... கற்பனையா... அனுபவிச்சு என் கதையை படிங்க. உங்களின் நிறை குறையை என்னோட கதைக்கு போடுங்க. சரிங்க இப்ப கதையில நான் கொஞ்சம் நிறைய கதாபாத்திரங்களை சேத்துருக்கேன். சோ முதல்ல அவங்க பெயர் முகவரியெல்லாம் கொடுத்தரேன் அப்புறம் கதைக்கு நேரா போயிடலாம்.
********************************
இப்ப சொல்ல போறது கதாநாயகனின் குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பம். வாங்க போகலாம்.
கிருஷ்ணசாமி, செல்லக்கண்ணு

இவங்க தாங்க இந்த குடும்பத்தின் வேர் இவங்க கிளைகள் அய்யய்யோ.... பிள்ளைகள் நான்கு.
1.மனோகரன் யசோதா

மகன்: தீன தேவன்

ஒரே மகன் மூத்த பையனின் மூத்த வாரிசு. இவன்தான் நம்ம கதையோட ஹீரோங்க. ஹீரோ இன்ரோடக்சன் அப்புறம் சொல்றேன். அடுத்து போலாமா..
2. சங்கரன் ஜமுனா

மகள் : சங்கவி

மகன் : சரண்
3. முதல் சொன்ன இரண்டு பேரும் அவரின் புதல்வர்கள் மூன்றாவதாக அவர்களுக்கு ஒரு பெண். அவர்களின் பெயர்.

மாகலட்சுமி நடரேசன்

மகள் : யுவராணி

ஒரே மகள்.
4. குணசேகரன் ரேவதி

மகன் : வினோத்

மகன் : ஆனந்த்

இரண்டு மகன்கள்
இவங்க பேமிலி அறிமுகம் முடிந்தது. அடுத்து ஹீரோயின் பேமிலியை பாக்கலாம் வாங்க...,
*******
ஜெகதீசன் பார்வதி

மகன் : அருண்

மகள் : ரதிதாரணி

இவங்க நம்ம ஹீரோயின். அதே தாங்க அப்புறமா நாயகியின் ஹிஸ்டரியை சொல்றேன்.

மகள் : கவிதாரணி
யப்பா எப்படியோ எல்லாத்தோட பெயரையும் சொல்லிட்டேன். எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்கோங்க... புரியலைன்னா மறுபடியும் பார்த்துக்கோங்க... முதன் முதலா பெரிய குடும்பம், காதல், அன்பு இதை எல்லாத்தையும் வச்சு கதை எழுதுறேன் எப்படி இருக்கும்னு தெரியல தினம் படித்துவிட்டு உங்க அபிப்ராயத்தை சொல்லுங்க பிரெண்ட்ஸ்.... 🙏🙏🙏🙏
********************************
மாலை வெயில் மெல்ல மெல்ல அந்திசாய தொடங்கியது. ஆதவன் மறைய தொடங்கினான். மழை வருமா வராதா என ஏக்கப்பட்டு கொண்டிருந்த வயல் வெளி பாவம் தோல்வியை அடைந்தது. அந்த அளவுக்கு மாலையில் சூரியன் மறையும் முன்னே வெயில் வந்து விட ஏமாந்திங்களா எலியை பிடிச்சீங்களா நான் வந்துட்டேனே என கூறும் விதமாக மேற்கில் மறைய தொடங்கும் கதிரவன் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு போகிறேன் என்னும் கணக்கில் அவனது மதி மயங்கிய வெளிச்சத்தை பரப்பினான்.
இப்ப என்னங்க பண்றது?
என்ன பண்றதுன்னு இப்ப வந்து கேக்குற? உன்னைய என்ன பண்றதுன்னே தெரியல அவள் லவ் பண்றாங்குற விஷயம் உனக்கு ஏற்கனவே தெரிஞ்சுருக்கு ஆனா நீ என்கிட்ட இருந்து மறைச்சுட்டல்ல...

நான் தெரியாதனமா வீட்டோட மாப்பிள்ளையாய் வரேன்னு ஒத்துக்கிட்டேன். இதே எங்க வீட்டு ஆளுங்களா இருந்தா இப்படி பொண்ணை வளர்த்துருப்பாங்களா என யாருக்கும் கேக்காதாப்படி

பேசினார் நடராஜன்.
என்னங்க எங்க அம்மாவையும், அப்பாவையும் தப்பா பேசுறீங்க அவங்க இல்லனா இன்னைக்கு நீங்க இல்லை. அதை கொஞ்சமாவது மனசுல வச்சுக்கிட்டு பேசுங்க.
நடராஜன் கிருஷ்ணசாமி, செல்லக்கண்ணுக்கு மூன்றாவதாக பிறந்த மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டவர். நடராஜன் கிருஷ்ணசாமியிடம் வேலை பார்த்தவர். அவர் வேலை செய்யும் திறமை, நேர்மை, ஒழுக்கம் இவற்றையெல்லாம் பார்த்து பூரித்து போன கிருஷ்ணசாமி தன் ஒரே செல்ல பெண்ணை திருமணம் செய்து கொடுத்தார். இதில் செல்லக்கண்ணுக்குதான் வருத்தம். பிறகு போக போக மாப்பிள்ளையின் நல்ல குணங்கள் அவர் கண்ணுக்கு தெரியவே அவருக்கென்று அன்றிலிருந்து இன்று வரை மதிப்பும், மரியாதையும் கொடுத்து வருகிறார் செல்லக்கண்ணு.
நடராஜன் மிடில் க்ளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர். எதையும் பொறுமையுடனும் நீதானமாகவும் கையால்பவர். எந்த வார்த்தை பேசுவதென்றாலும் மற்றவர்களை புண்படுத்தி விடக் கூடாது என்பதில் கவனமாக பார்த்துப் பேசுவார். ஆனால் இன்றோ அவர் அப்படி இல்லை. தன் மனைவியிடம் மிகவும் கடிந்து பேசினார். அதுவும் அவளது அம்மா, அப்பாவை குறை சொன்னதும் மகாவும் பொறுமை இழந்து கணவனிடம் கோபப்பட்டு பேசினாள். எல்லாம் அவர்களுடைய செல்ல புதல்வி யுவராணி செய்த வேலைதான்.
சும்மா பேசாத உங்க அப்பாவும், அம்மாவும் இல்லைனா எங்களுக்கு வாழ தெரியாதா... போடி என பேசினார் நடராஜன்.
மகாவுக்கு தேவை இல்லாமல் இவரிடம் பேசி வாங்கி கட்டி கொள்ள வேண்டாம் கோபம் என்றாள் என்னவென்றே தெரியாத மனுஷன். இன்னைக்கு கோபப்பட காரணம் யுவானாலதான்...... இது வரை அனாவசியமாக இவர் நம்மிடம் சண்டை போட்டதில்லை இன்று இப்படி ஆகுமென்று கனவா கண்டேன். ஏய் யுவா என்னைய மாட்டி விட்டுடியேடி..... என மனதில் புலம்பிய மகா என்னங்க இங்க பாருங்க தேவை இல்லாம நாம ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க வேணாம். நம்ம பொண்ணு விஷயத்துக்கு வருவோம்.
ம்.... நீ சொல்வதும் சரிதான் நாம தேவை இல்லாம சண்டை போட வேணாம். சரி சொல்லு என்ன பண்ணலாம்.
அவள் லவ் பண்ண பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சரலாம்.
அது முடியாது மகா உங்க அப்பாவும், அம்மாவும் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்களே....
ஆமாங்க.... ஆனா இப்ப அதை நினைச்சு நாம ஒன்னும் பண்ண போறதில்ல... கண்டிப்பா இந்த கல்யாணம் நடந்தே ஆகணும் வேற வழி இல்லைங்க...
ஓ அந்த அளவுக்கு காதலா? கொஞ்ச நாள் போகட்டும் மகா அப்புறமா அத்தை மாமாகிட்ட பேசிட்டு அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சரலாம். நான் பையனோட பேக் கிரௌண்டெல்லாம் விசாரிக்கறேன் என பேசினார் நடராஜன்.
அதுக்கு அவசியம் இல்லைங்க நான் விசாரிச்சுட்டேன். பையன் அப்பர் மிடில் க்லாஸ்தான். அப்பா ரிடையர்ட் ஆபிசர். அம்மா ஹவுஸ் ஒய்ப். ரெண்டு தங்கஞ்சி. வீட்டை இந்த பையன்தான் பார்த்துக்கிறான். நல்ல குடும்பம் என மகா கணவனிடம் கூறினாள்.
சரி மகா ஒரு மாசம் போகட்டும் பொறுமையா அத்தை, மாமாகிட்ட பேசி நான் சம்மதம் வாங்குறேன். அவங்க ஒன்னும் காதலுக்கு எதிரி இல்லையே சொல்லிக்கலாம் விடு. எனக்கு வேலைக்கு போக நேரம் ஆச்சு நான் போறேன் என்றவர் சட்டை பட்டனை போட்டு கொண்டு அங்கிருந்து நகர போனார். அப்போது மகா,
இந்த கல்யாணம் நடந்தே ஆகணும். அதுவும் பத்தே நாளுக்குள்ள...
ஏய் என்னடி விளையாடுறியா..... பத்தே நாள்ல எப்படி முடியும். லூசாட்டம் பேசாத மகா.... உனக்கென்ன அவ்வளவு அவசரம்? என கேட்டார்.
எனக்கு அவசரம் இல்லைங்க உங்க பொண்ணுதான் அவசரப்பட்டுடா...
என்ன சொல்ற? என கண்களை குறுக்கி கூர்மையாக்கி கேட்டார்.
மகா அமைதியாக இருக்க அவர் மேலும் சொல்லுடி.... நீ பேசுனதுக்கு அர்த்தம் என்ன?
உங்க பொண்ணு இப்ப மூணு மாசம்... என்று அவள் சொன்ன அடுத்த நிமிடம் அவளது கன்னத்தில் பளார்.... என்ற அடி விழுந்தது.
******************
அருண்.... அருண்.... லைன்லதான் இருக்கீங்களா?
ம் லைன்லதான் இருக்கேன் யுவா.
என்ன அருண் எதுவும் சொல்ல மாட்டிங்குறீங்க? எனக்கு பயமா இருக்கு அருண் அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்.
எதுக்குடி சொன்ன? என அங்கு அருண் கத்தினான்.
என்ன அருண் இப்படி பேசுறீங்க? எத்தனை நாள் இதை மூடி மறைக்க முடியும் நான் எங்க அம்மாகிட்ட எதையும் மறைச்சதில்ல. உங்களை காதலிச்சத்தையும் நான் சொன்னேன். இப்ப இவ்ளோ பெரிய விஷயம் நடந்துருக்கு இதை சொல்லாம விட்டா நம்ம ரெண்டு குடும்பத்தோட மானம் போயிடும். அதான் அம்மாக்கிட்ட சொன்னேன். அப்பாக்கிட்ட பேச சொல்லிருக்கேன் அருண். எனக்கு அப்பாக்கிட்ட சொல்ற அளவுக்கு தையிரியம் இல்ல அதான் அம்மாவை விட்டு பேச சொன்னேன் ஆனா நீங்க என்னடான்னா இப்ப இப்படி பேசுறீங்க என அழுதாள்.
சரி சரி அழுகாத உங்க அம்மா என்ன சொன்னாங்க என கேட்டான் அருண்.
அம்மா நல்லா திட்டுனாங்க அருண். அடிச்சாங்க நான் அம்மா கால்ல விழுந்து அழுதுட்டேன். எப்படியாவது எனக்கும் அவருக்கும் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னேன். எப்படியோ அம்மாவை கன்வின்ஸ் பண்ணிட்டேன். ஆனால் எங்க வீட்டுல இருக்குறவங்க என்ன பண்ண போறாங்களோ தெரியல.
சரிடி கவலைபடாத நான் உன்னை அன்னைக்கு போர்ஸ் பண்ணிருக்க கூடாது சாரிடி என்னாலதான் எல்லாம் என குற்ற உணர்வுடன் பேசியவன் எல்லாம் உன்னாலதாண்டி எதுக்குடி சேரில வந்த என்று கூறினான்.
என்ன அருண் நீங்க.... நீங்கதான நாலு வருஷம்மா லவ் பண்றோம் எத்தனை முறை கேட்ருக்கேன் சேரில வான்னு வரவே மாட்டேங்குறன்னு என் மேல கோவிச்சுகிட்டிங்க அதான் பாவம் பையன்னு நினைச்சு கட்டிட்டு வந்தேன். அப்புறம் சாருக்கு மூடு மாறி போச்சே கோவிலுக்கு போலாம்னு சொல்லிட்டு கடைசியா உங்க பிரெண்டோட ரூம்க்கு கூட்டிட்டு போனது யாரு நீங்கதான.... என்றவள் நீங்களும் தப்பு பண்ணிருக்கீங்க நானும் தப்பு பண்ணிருக்கேன் இதுல நீங்க நான்னு நினைக்குறது தப்பு அருண். நடந்து முடிஞ்சுருச்சு இனி இதை பத்தி பேசி என்ன ஆக போகுது. நாம எப்படி பெத்தவங்க ஆசீர்வாதத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிப்போம் என யுவா தெளிவாக பேசினாள்.
ம்... ஓகே யுவா இப்ப உங்க அம்மாகிட்ட சொல்லிருக்க ஓகே அடுத்து அவங்க உங்க அப்பாகிட்ட பேசுவாங்க. அவங்க என்ன மூவ் பண்றாங்கன்னு பாப்போம் அப்புறமா நாம அடுத்த முடிவெடுக்கலாம். சரியா? என்ன மறுமுனையிலிருந்து அருண் பேசினான்.
சரி அருண் பாப்போம்.
சரிடி பாப்பா பத்திரம். நீயும் பத்திரம். யாரும் ஒத்துக்களைன்னா ஒரு போன் பண்ணு நான் வந்து உன்னை கூப்பிட்டு போறேன். எதா இருந்தாலும் நான் பார்த்துக்கறேன். நான் வச்சரட்டும்மா...
அருண்... அருண் ... ஐ யம் வெரி லக்கி அருண். இந்த சூழ்நிலையில எந்த ஆம்பளையா இருந்தாலும் கருவை கலைச்சரலாம்னு சொல்வாங்க. இல்லைன்னா கழட்டி விட்டுட்டு போயிடுவாங்க. நான் கன்ஸீவா இருக்கேன்னு சொன்னதும் நீங்க முதல் சொன்ன வார்த்தை குழந்தையை மட்டும் தயவு செஞ்சு கலைச்சுராதன்னு சொன்னிங்க யார் அந்த மாதிரியெல்லாம் சொல்வாங்க. நீங்கதான் உங்க பேமிலியை ரன் பண்றிங்க அப்பாடி இருக்கும் போது என்னையும் உங்களோட சேர்த்துகிட்டு கஷ்ட்டத்தை கூட சுகமா ஏத்துக்கணும்னு நினைக்குறிங்க ரியலி ஐ யம் லக்கி அருண்.
ஏய் என்னடி ரொம்ப பழைய படம்லாம் பார்த்துருக்க போல தெரியுது. ஸீ யுவா நான் உன்னை என் காதலியா பாக்கல அதை முதல்ல தெளிவா புருஞ்சுக்கோ உன்னைய நான் என்னைக்கு பார்த்தேனோ இவதான் என் பொண்டாட்டின்னு முடிவு பண்ணிட்டுதான் உன்கிட்ட நான் லவ்வே சொன்னேன். அன்னையிலருந்து இன்னைக்கு வரைக்கும் உன் மேல நான் வச்சுருக்குற பாசம் என்னைக்கும் குறையாது. அன்னைக்கு தெரியாம தப்பு பண்ணிட்டோம். அதுக்கப்பறம் தெரிஞ்சே நிறைய தடவை உன்னை போர்ஸ் பண்ணேன். என்னால கண்ட்ரோல் பண்ண முடியாமதான் உன்னைய தேடி தேடி வந்தேன். அதை நினைக்கும் போதுதான் எனக்கு அவமானமா இருக்குடி. எனக்கு நீ வேணும் அவ்ளோதான் யுவா. பொறுப்பு இருக்கு யாரு இல்லைன்னு சொன்னா அதுக்காக உன்னை அப்படியே விட சொல்றியா... என் குழந்தையை அழிச்சுட்டு போன்னு துரத்த சொல்றியா... எங்க சித்திக்கு கல்யாணம் ஆகி பதினைந்து வருஷம் ஆச்சு இன்னிக்கு வரைக்கும் குழந்தை இல்லாம தவிச்சுட்டு இருக்காங்க. அதை எங்க அம்மாகிட்ட சொல்லி அழும் போது நான் நிறைய தடவை பார்த்துருக்கேன். இன்னைக்கு இந்த குழந்தையை கலைச்சுட்டு கல்யாணம் ஆனதுக்கப்பறம் குழந்தை இல்லைன்னா என்ன செய்றது. எனக்கும் ரெண்டு தங்கச்சி இருக்காங்க. பொண்ணுங்களோட வழி என்னனு எனக்கும் தெரியும் யுவா. இனி என்கிட்டே இப்படியெல்லாம் பேசாதடி என்று அவனது மனதில் உள்ளதை முழுதும் பேசி விட்டான்.
யுவாக்கு அருணின் பேச்சில் நிம்மதி அடைந்தவள் இனி இது போல் பேச வேண்டாம் என முடிவெடுத்தாள். முடிந்தவரை சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தாள். சரி அருண் உங்க பேரன்ஸ்க்கிட்ட இதை பத்தி சொல்லிட்டியா?
இன்னும் இல்லை யுவா... அதை பத்தி நீ கவலைபடாத நான் பாத்துக்குறேன். இந்த மாதிரி நேரத்துல நீ கவலை படாம இருக்கனும்டி. சோ டோன்ட் வொரி ஓகே. உங்க அம்மா என்ன பேசுனாங்கன்னு கேட்டு எனக்கு போன் பண்ணு....
ம் சரி அருண்.
ப்ச் அழுகுறியா?
இல்ல
பொய் சொல்லாத டாலி குட்டி நாலு வருஷமா உன்னை லவ் பண்றேன் எனக்கு தெரியாத உன்னை பத்தி. அழுகாதடி, கவலைப்படாத எது நடந்தாலும் சரி உனக்காக எப்பவும் நான் இருப்பேன். இதுக்காக நான் எத்தனை கஷ்டம் வந்தாலும் தாங்கிப்பேன். அழுகுறதை முதல்ல நிறுத்து உள்ளே இருக்குற பாப்பாக்கு ஆகாது என அருண் அவளது அழுகையை தீர்க்கும் விதமாக பேசினான்.
யுவராணியும் சரி அருண் நான் அழுகல நீ போய் உன் வேலையை பாரு என்றவள் போனை வைத்தாள். நான்கு வருடம் காதல். பெற்றோர்களால் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டியது ஆனால் அது இப்படி ஆகிவிட்டதே என தவித்தால் பெண்ணவள். யுவராணியின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க துவங்கினர். அதே போல் சங்கவிக்கும் மாப்பிள்ளை பார்த்தனர். யுவாவை விட சங்கவி இரண்டு வயது மூத்தவள் அதனால் அவளுக்கு முதல்ல பார்க்கலாம் என முடிவெடுத்தனர். ஆனால் சங்கவிக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளையின் தம்பிக்கும் யுவாவிற்கும் பெண் கேட்க அவர்களோ பெண் மேற்படிப்பு படிக்க வேண்டும் என கூறுகிறாள் அதனால் இரண்டு வருடம் போகட்டும் என கூறிவிட்டனர். அவர்களும் சரி எனக் கூறிவிட்டனர். அது வரையில் யுவாவிற்கு நிம்மதி என தோன்றியது. ஆனால் அந்த நிம்மதி சிறிது நாட்கள்தான் இருக்க போகிறது என அவளுக்கு தெரியவில்லை. அதற்குள் இப்படியாகிவிட யுவாவோ வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு அலைந்தாள். காதலை சொன்ன நாளிலிருந்து இப்பொழுது வரைக்கும் அவள் அம்மாவிடம் அனைத்தையும் கூறி விடுவாள் ஆரம்பத்தில் அவளது அம்மாவுக்கு பெண் காதலிக்கிறாள் என்னும் சொல்லை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் அவள் எடுத்து சொல்லி புரிய வைத்து அம்மாவை சம்மதிக்க வைத்து விட்டாள். ஆனால் அம்மா அல்லவா சும்மா இருக்க முடியுமா அதான் யுவராணி காதலிக்கும் நபரை பற்றிய விவரங்களை அறிய கலத்தில் இறங்கினாள்.
அருணை பற்றி விசாரித்ததில் அவளுக்கு திருப்தி ஏற்பட அவரது அம்மாவின் பெயர் அவளது மனதில் ஏதோ ஒரு எண்ணம் தோன்ற ஓரளவு அவளாக இருப்பாளோ.... என்னும் எண்ணம் தோன்றியது. பார்க்கலாம் என விட்டு விட்டாள். ஆனால் விதி சில நேரங்களில் நல்லதையும் செய்யும் அல்லவா அருணின் அம்மாவை கோவிலில் காண நேர்ந்தது. மகா பார்த்தவுடன் தெரிந்துக் கொண்டாள் இவள் பார்வதிதான் என்று. அவளிடம் பேச அவளும் தன் சினேகிதி மகா என்று மகிழ்ச்சி அடைந்து இருவரும் வெகு நேரம் பேசினர். பிறகு அவர்களது நட்பு நீடிக்க ஆரம்பித்தது.
ஒரு நாள் மகா அருண், யுவாவின் காதலை பற்றி கூறினாள். பார்வதிக்கு சந்தோஷம் தாழ முடியவில்லை. இப்போதே தன்மகனை பார்க்க வேண்டும் என தோன்றியது. இருந்தும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டவள் அவனிடமிருந்தே விஷயம் வரட்டும் என இன்றளவும் பொறுமை காக்கிறாள்.
அம்மா....... என கன்னத்தில் கை வைத்து கொண்டு கத்தினான்.
என்கிட்ட இனி பேசாத அருண் ஒரு பொம்பளை புள்ளை வாழ்க்கையை கெடுத்துட்டு வந்து தையிரியமா வந்து இந்த விஷயத்தை அம்மாகிட்டயே சொல்ற உனக்கு வெக்கமா இல்லையாடா......
யாரவளோ தொடரும்.
என்னங்க ஹீரோவையும் இன்ரோடக்சன் பண்ணல ஹீரோயினையும் இன்ரோடக்சன் பண்ணல சைடு கேரக்டர்சை எடுத்த உடனே கொண்டு வந்துட்டீங்கன்னு நினைக்குறீங்களா... இவங்க மூலியமாதான் அவங்க வருவாங்க சகோ... சகாஸ்... சோ கொஞ்சம் பொறுமை அவசியம். சரிங்க கதையின் பர்ஸ்ட் எபிசோடின் விமர்சனத்தை சொல்லுங்கள்.