The Maid books and stories free download online pdf in Tamil

வேலைக்காரி

வேலைக்காரி

திவ்யாவும் வித்யாவும் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் பக்கத்து வீடுகளில் தான் குடியிருந்தார்கள். அவர்கள் கணவர்களுக்கு நல்ல வேலை இருந்ததால் இருவரும் வீட்டை நிர்வாகம் பண்ணி வந்தார்கள். தினமும் சமையல் வேலைகள் முடிந்தால், இருவரும் கொஞ்சம் அரட்டை அடிப்பது அவர்களது பழக்க வழக்கங்களில் ஒன்று.

அக்கம் பக்கம் உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவும் அந்த

அரட்டை அரங்கங்கள் உதவியது. ஊரில் நடக்கிற நல்லது கெட்டதை பற்றி தெரிய வந்தது. இருவருக்கும் வீட்டை சுற்றம் பண்ணவும், பாத்திரங்கள் தேய்க்கவும் ஒரே வேலைக்காரி தான்.

வேலைக்காரிக்கு மாத சம்பளம் மூவாயிரம் ரூபா தர வேண்டியிருந்தது.

மாதத்தில் குறைந்த பக்ஷம், ஐந்து நாளாவது ஏதாவது ஒரு சாக்குபோக்கு சொல்லி வேலைக்கு அவள் வரமாட்டாள். ஏதோ மாதத்தில ஒன்றோ இரண்டோ லீவ் எடுத்தால் பரவாயில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரம் அல்லவா இவள் லீவ் எடுத்துக்கொள்கிறாள். ஏதோ கொஞ்சம் லீவு எடுத்தாலும் பரவாயில்லை. அதுவும் சொல்லாமல் கொள்ளாமல் தானே எடுத்துக்கொள்கிறாள் நமக்கு என்னைக்கு உடன்பு சரியில்லையோ அன்றைக்கு தானே வேலையும் அதிகமாக செய்ய வேண்டியதாக இருக்கு.

இருந்தாலும் மாத ஊதியம் முழுமையாக தர வேண்டியிருக்கு.

அதில் மட்டும் ஏதாவது தில்லுமுல்லு பண்ணினால் அடுத்த நாளையிலிருந்து அவள் வேலைக்கு வரமாட்டாள். தனியார் நிறுவனங்களில் கூட மாதத்தில் ஒரு லீவுக்கு மீறி எடுத்தால் கூட, சம்பளத்தில் பிடிச்சிடுவாங்க. இங்கே என்னடான்னா வேலைக்காரி சொல்லிக்கொள்ளும்படி நடக்கவேண்டியதாக இருக்கு. எல்லாம் காலம் போன போக்கு. நமக்கு வேறு என்னதான் வழி இருக்கு.

ஏதோ வாற நாட்களிலாவது வேலையை ஒழுங்காக பண்ணினால் கூட பரவாயில்லை என்று நினைத்து நிம்மதியை அடையலாம் என்றால் அதுவும் இல்லையே. ஏனோ தானோ என்று தடல்புடலாக வேலையை செய்திட்டு ஓடுகிறாள். தினம் தினம் இவங்க கிட்ட மல்லுக்கட்டவும் நமக்கு நேரமும் இருக்கறதில்லை,மாரடிக்க சக்தியும் முந்தி மாதிரி இருப்பதில்லை.

பள்ளிக்கூடத்துக்கே சென்றதில்லை என்றாலும், இவங்க ஆணவத்துக்கு ஓன்றும் குறைச்சல் இல்லை.

இவளை எதிர்த்து கேள்வி கேட்பார் யாரும் இல்லை என்ற நினைப்பு இவளுக்கு.

மாத ஊதியம் பற்றாது என்று, தீவாளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரும்போது அவளுக்கு ஏதாவது எக்ஸ்ட்ரா வேற பணம் தர வேண்டியிருக்கு.

இவ்வளவு ஊதியம் தந்தும், அவங்களுக்கு அனுசரித்து போகவேண்டிய கட்டாயம்.

அதுவும் போதாது என்று, நாமளும் மாதத்தில நான்கு நாள் எங்கயாவது சென்று விடுகிறோம். அப்பவும் அவளுக்கு கோள் தான். மாதத்தில் இருபது நாள் வேலை செய்ய, சொளை சொளையாக மூவாயிரம் ரூபா ஊதியமும் அழ வேண்டியிருக்கு. விலைவாசியோ மிகவும் ஏராளமாக இருக்கிறது. மாத வரவு செலவு கணக்கு வழக்கு ஒன்றும் நினைத்தபடி கட்டுப்படியாகறதில்லை.

என்று திவ்யா பொலம்பி கொண்டாள்.

திவ்யா சொன்னதையெல்லாம் வித்யாவும் பொறுமையாக காது கொடுத்து கேட்டுக்கொண்டாள்.

நீ சொல்வதெல்லாம் சரியாகத் தான் இருந்தாலும், முச்சந்தி முற்று நேரமும் சமையல் என்ற பெயரில் அன்றாடம் அடுப்பாங்கரையை கெட்டிக்கொண்டு நமக்கு அழ தானே வேண்டியிருக்கு.

ஒரு நாள் கூடவேலைக்காரி வரலை என்றால், சமையல் வேலை பற்றாது என்று அவள் செய்யற வேலையையும் சேர்த்து இழுத்து போட்டுக்கொண்டு நமக்கு செய்ய தானே வேண்டியிருக்கு. போனால் போகுது என்று வீட்டை அலங்கோலமாகவா வெச்சுக்க முடியும். அப்படியே வீட்டை அசிங்கமாக வைத்துக்கொணடாலும், இந்த ஊர் உலகம் நம்மை பற்றி என்ன தான் நினைக்கும். அவள் இல்லாமல் ஒரு நாள் கூட நம்மளால சமாளிக்க முடியாது என்பது தான் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. இந்த உன்மையை நாம ஏற்றுக்கொண்டுதான் ஆகணும்.

ஒரே ஒரு நாள் வேலை செய்யவே உன் பாடு என் பாடு என்றாகி விடுகிறது

அப்படியிருக்கும் போது அவளை குற்றம் குறை சொல்லி பயன் ஒன்றும் முற்றிலும் இல்லையே.

அவளுக்கும் பத்து வீட்டில் குப்பையை கூடி பெருக்கி, பத்து பாத்திரங்கள் கழுவினால் மட்டுமே, தன் வாழ்க்கையின் வண்டியை ஓட்ட முடியும்.

அப்பப்ப விருந்தினர்கள் வந்தாலும், பண்டிகைகள் வந்தாலும் , பாத்திரங்கள் தேய்க்க ஏராளமாக இருந்தாலும் அவளும் வந்தவங்க முன்னாடி முகம் சுளிக்காமல் கொஞ்சம் அனுசரித்து தானே நடந்துகொள்கிறாள்.

இதுவரலும் ஏற்கனவே சண்டை போட்டுக்கொண்டு நான்கு வேலைக்காரிகளை நாம் மாற்றியாகிடுத்து. சும்மா வேலைக்காரிகளை மாற்றிக்கொண்டால் நம்ம பெயர் தான் கெட்டு போகுமே தவிர பயன் ஒன்றும் இல்லையே. இப்பல்லாம் வேலைக்காரிகளின் பசங்களும் டாக்டர் , என்ஜினீயர் என்று பட்டம் வாங்கி கொள்கிறார்கள்.

அதனால திருடாமல், ஓரளவுக்கு ஒழுங்காக வேலை செய்கிற வேலைக்காரிகளும் அதிராக தான் தென்பெடுகிறது.

மாதத்தில் இருபது நாளாவது வேலைக்கு வாறாளே என்று நினைத்து நிம்மதியாக இருக்கிறது தான் நமக்கு நல்லது, புத்திசாலித்தனமும்.

கூடத்தில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தால், நம்ம உடன்பு தான் கெட்டு போகுமே தவிர வேறு ஒன்றும் நடக்காது. நாம நடை முறையையும் பார்த்து நடந்துக்கணும்.

காலத்துக்கு ஏற்ப நாம நம்மளை கொஞ்சம் அனுசரித்து தான் போகுணம்.

இல்லை என்றால், சமையல் வேலைகள் போதாது என்று வீட்டை பெருக்கி கூட்டற வேலையையும் நாமளே செய்ய வேண்டிய கட்டாயம் கண்டிப்பாக நேரும்.

எதுக்கெடுத்தாலும் கண்டிப்பாகவும், கராறாகவும் இருந்தால் வாழ்க்கையில் வருத்தம் மட்டும் தான் மிஞ்சும். விடாப்பிடியாக பிடிவாதம் பண்ணினால் எல்லா வேலைகளையும் நாமளே செய்ய வேண்டிய கட்டாயம் நேரும். இப்போதைக்கு ஆத்திர அவசரப்பட்டு, இவள் சீட்டை கிழிக்கிறது சுலபம் என்றாலும் பின்னாடி வயது காலத்தில் அவர்கள் உதவி நமக்கு தேவைப்படும்.எதற்க்கு வீண் பொல்லாப்பு.

நாம நம் எதிர்பார்ப்புகளை கொஞ்சம் குறைத்துக்கொண்டு, பொறுமையாக இருந்தால் சின்னஞ்சிறு சண்டைசச்சரவுகளை தவிர்த்து வளமுடன் வாழ முடியும்.

அடியாத மாடு படியாது என்பார்கள். அதுபோன்ற தான் வாழ்க்கையிலும்.

வாழ்க்கையின் துன்பத் துயரங்களை நாம் அனுபவிக்கும் போது மட்டும் தான் அடுத்தவங்க கஷ்டங்களும் நமக்கு தெரிய வருகிறது.

சும்மா கூடத்தில் இருந்து புலம்புவது மிகவும் சுலபம். எல்லா வேலையும் சைஞ்சு பார்த்தால் தான் வேலை செய்வது எவ்வளவு சிரமம் என்று நமக்கு புரிஞ்சிக்க முடியும்.

வித்யா சொல்வதிலும் ஓர் அர்த்தம் இருக்கு என்று திவ்யாவுக்கு அடிமனதில் உறைத்தது.

தன் தவறுகளை உணர்ந்து மேலும் பொலம்பாமல், அங்கலாய்த்துக் கொள்ளாமல் வாழ திவ்யா கற்றுக்கொண்டாள்.

முற்றும்

Author : C.P.Hariharan, Delhi

e mail id.:- cphari_04@yahoo.co.in

பகிரப்பட்ட

NEW REALESED