அன்றும் இன்றும்
மல்லிகாவின் கணவர் ஓர் தனியார் நிறுவனத்தில் தான் பணி புரிந்து வந்தார்.மல்லிகாவோ வீட்டை நிர்வாகம் பண்ணி வந்தாள் . அவங்களுக்கு இரண்டு பசங்கள் இருதார்கள். தட்டி முட்டி மாத செலவுகளை எப்படி எப்படியோ ஓரளவுக்கு மல்லிகா சமாளித்து வந்தாள். சொல்லிக்கொள்ளும்படியாக மிச்சம் மீதி சேமிப்பு எதுவும் அவர்களுக்கு இருந்ததில்லை. அப்படி தடுமாறியிருக்கும் பொழுது தான் பக்கத்து விட்டு பரிமளாவின் மகளுக்கு திருமணம் என்று சொல்லி அழைப்பிதழும் வந்து சேர்ந்தது. எங்களுக்கு உற்றார் உறவினர்கள் என்று சொல்லிக்கொள்ள அப்படியொன்றும் பெரிதாக யாரும் இல்லை. நீங்க தான் முன்கூட்டியே முன்வந்து கூடமாடஒத்தாசை செய்து இந்த கல்யாணத்தை நடத்தி தரணம் என்று பரிமளா கூறினாள். அப்போதுதான் மல்லிகா யோசித்தாள் கல்யாணத்துக்கு செல்ல ஒரு நல்ல பட்டு சேலை கூட சரிவர இல்லையே என்று . என்ன பண்ணுவது, ஏது பண்ணுவது என்று அவளுக்கு ஒன்றும் தலை கால் புரியவில்லை. அவள் செற்று தடுமாறினாள். அவளுக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. அன்று சாயங்காலம் பக்கத்தில் இருக்கும் பூங்கா வழியாக சந்தைக்கு விரைந்தாள். வசந்த காலம் என்பதால் அந்த பூங்கா வண்ண வண்ண பூக்களால் ஓர் மிக அழகான பூம்சோலையாக தென்பட்டது. ஊரெங்கும் பூவாசம் பரவியிருந்தது.
மரக்கிளைகளில் ஓர் வானம்பாடி ஓயாமல் இனிமையாக பாடிக்கொண்டிருந்தது. கிளிகளின் ரீங்காரம் சுவாரசியமாக இருந்தது.அப்பப்ப இயற்கையின் அழகை ரசிப்பதும் அவளுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று. அப்பப்ப வீசும் இளம் தென்றல் மனதுக்கு இதமூட்டியது.
அப்பபோதுதான் அவளுக்கு ஓர் யோசனை தோன்றியது. சந்தையில் இருக்கும் சலவையிலிருந்து நல்ல உடைகளை. கட்டணம் கெட்டி கடமாக எடுத்து வருவோம் என்றும், திருமணம் முடிந்ததும் அவைகளை அவர்களுக்கே திருப்பி தந்திடுவோம் என்றும். அவள் ஓர் நிம்மதி பெரும்மூச்செறிந்தாள். கல்யாணி கவரிங்கில் இருந்து கொஞ்சம் கவரிங் நகைகளையும் வாங்கிகொண்டாள் . நிஜமான பத்தரை மாற்று தங்க நகைகள் தானா, இல்லை கவ்ரிங்கா என்று யாரும் சோதனை ஒன்றும் பண்ணி பார்க்க போவதில்லையே என்று நினைத்தாள். அவளின் பிரச்சன்னைகளுக்கு தற்பொழுதாக ஓர் கச்சிதமான முடிவு கிடைத்துவிட்டது. அவள் மகிழ்ச்சியின் உச்சியில் கலைமான் போன்ற எழுந்து துள்ளி ஓடினாள். மெய்சிலிர்த்து போனாள். எல்லா பிரச்சென்னைகளுக்கும் ஓர் நல் முடிவு இருக்கும் என்று நம்பினாள்
பெரிய இடத்து கல்யாணம் என்பதால், ஏனோ தானோ என்று செல்ல முடியாதே.
துணிமணிகள் மட்டுமானால் பறவாயில்லை, அவர்களுக்கு ஏதாவது அன்பளிப்பும் தந்தாகணுமே. அன்பளிப்பை கிரெடிட் கார்டில் வாங்கிகொண்டாள்.
பக்கத்து வீடு என்பதால், ஏதாவது சாக்குபோக்கு சொல்லி கல்யாணத்துக்கு போகாமல் இருக்கவும் முடியாதே. கல்யாணத்துக்கு சென்றே ஆகணும் என்ற கட்டாயம் அவளுக்கு நேர்ந்தது.
நாலு பேர் போன்ற, நாமும் சரிவர உடைகளை அணிந்து செல்லவில்லை என்றால் நாலு பேர் நாலு விதமா சொல்லத்தானே செய்வார்கள். இந்த தடவை எப்படியாவது சமாளித்தாகணும் என்று எண்ணினாள்.
மேலும் இது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்கணும் என்றால், தான் கட்டாயமாக ஓர் வேலைக்கு சென்று சம்பாதித்தே ஆகணும் என்று உறுதியாக முடிவெடுத்தாள். இவ்வளவு நாள் குடும்பம், குடும்பம் என்று நினைத்து, வேலை வெட்டி இல்லாமல் குப்பையை கொட்டியாச்சு. மேலும் அப்படியே இருந்திட இயலாது என்று எண்ணினாள். அவள் பன்னண்டாம் வகுப்பு வரை தான் படித்திருந்தாள். மிகவும் சிரமப்பட்டு தனியார் பேக்டரி ஒன்றில் அவளுக்கு ஓர் சின்னஞ்சிறு வேலை கிடைத்து விட்டது.
காலம் கரைந்தோடியது. இப்போது சம்பாதிப்பதால் வீட்டு செலவுகளை அவளால் முன்னைவிட சுலபமாக சமாளிக்க முடிந்தது.
அவளுக்கு திரும்பவும் ஓர் திருமண அழைப்பிதழ் பக்கத்து வீட்டு. பரிமளாவிடமிருந்து வந்தது
பரிமளாவின் இரண்டாவது மகளுக்கு கல்யாணம்.
இப்போது அவளின் பொருளாதார நிலைமை சிறப்பாக இருந்ததால் அவளுக்கு பதட்டம் எதுவும் இருக்கவில்லை
தடல்புடலாக வண்ண வண்ண பூன்சேலை அணிந்து திருமண வரவேற்புக்கு சென்றாள். அங்கே சென்றதும், அங்கே வந்தவர்கள் அணிந்திருந்த உடைகளை பார்த்து அதிர்ந்து நின்றாள். அவளுக்கு புரிந்தும் இருந்தது, புரியாமலும் இருந்தது. ஓர் சில பெண்கள் டாப் மட்டும் அணிந்திருந்தார்கள். இன்னும் சிலர் போட்டம் அணிந்திருந்தாலும் டாப் அரைகுறையாக அணிந்திருந்தார்கள். அந்த அரைகுறை உடைகளை சமாளிக்கவும் முற்ப்பட்டார்கள். ஓட்டை இல்லாத உடைகள் அணிந்தவர்களே தென்படவில்லை. காலம் போன போக்கு என்று நினைத்துக்கொண்டாள். சேலை கட்ட நேரம் இல்லை என்று தான் சூடிதார் அணிய ஆரம்பித்தார்கள். இப்போது போட்டம் போடவும் நேரம் இல்லை போல.
நிறைய பேர் கிழிஞ்ச ஜீன்ஸ் அணிந்திருந்தார்கள். சாயம் பூசின அவர்கள்
தலைமுடி அறக்க பறக்க காற்றில் ஊஞ்சல் ஆடியது. நவநாகரீகம் போன போக்கு அவளால் ஜீரணிக்க முடியவில்லை . அன்று, நாய் படாத பாடு பட்டு சலவையிலிருந்து உடைகளை கடமாக வாங்கி அணிந்துகொண்டு திருமணத்துக்கு சென்றோம். இன்று வசதி தேர்ந்த பின்பு,நல்ல உடைகளை அணிந்து செல்வோம் என்று நினைத்தோம். ஆனாலும் உலகம் இப்படி தலைகீழாக மாறும் என்று மல்லிகா முற்றிலும் எதிர்பார்க்கவே இல்லை.
கிழிஞ்சு கந்தலான தோரணையில்,உடைகளை அணிந்து கல்யாணத்துக்கு செல்ல முடியாதே என்று தானே, அன்று சலவையிலிருந்து துணிமணிகளை கடம் வாங்கி வந்தோம். இப்போது கிழிஞ்சு கந்தலான உடைகள் அணிவது தானே நவநாகரீகமும்.
நாம் நினைப்பது ஒண்ணுன்னா, நடப்பது வேறொன்னு என்று நினைத்தாள். தாறுமாறாக ஆடைகளை அணிவது தான் நவநாகரீகமா என்று வியந்தாள். காலத்துக்கு ஏற்ப நாமும் மாறித்தானே ஆகணும். யாரையும் குற்றம் சாற்றுவதால் எதுவும் சாதிக்க முடியாதே. காலம் போன்ற கோலம் கெட்டித் தானே ஆகணும். என்றால் தானே நாலு பேர் நம்மை மதிப்பார்கள் என்ற ஓர் முடிவுக்கு வந்தாள். அவள் முயற்ச்சிகள் ஒன்றும் பயனளிக்கவில்லை என்று மல்லிகா வருத்தப்பட்டாள். வாழ்க்கையில் எவ்வளவு முற்பட்டும் எதையும் கடைபுடிக்க இயலவில்லையே என்று வருந்தினாள்.
முற்றும்
Author : C.P.Hariharan
e mail id.: cphari_04@yahoo.co.in