NINAIKKAATHA NERAMEDHU book and story is written by EKAA SREE in Tamil . This story is getting good reader response on Matrubharti app and web since it is published free to read for all readers online. NINAIKKAATHA NERAMEDHU is also popular in Love Stories in Tamil and it is receiving from online readers very fast. Signup now to get access to this story.
நினைக்காத நேரமேது - நாவல்கள்
EKAA SREE
மூலமாக
தமிழ் Love Stories
அன்றைய நாளின் ஏகாந்த காலை. அந்த வானம் தன் இடையினில் உடுத்தியிருந்த கருப்புநிறத் தாவணியை கலைந்து, நீலவண்ணச் சேலையை அணிந்து கொண்டிருந்தது.
பறவைக் கூட்டங்கள் ஒலி எழுப்பிக் கொண்டே, சந்தோஷ சிறகசைப்புடன் அந்த கடலைக் கடந்து கொண்டிருந்தன. எழுந்தான் செங்கதிரோன், அவன் திசைப்பட்ட இடம் எல்லாம் விழுந்தது தங்கத்தூறல்.
வெளியெல்லாம் ஒளியின் வீச்சு. அந்த இயற்கை பல மாயா ஜாலங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. அன்றைய விடியலை ரசித்தபடி சுறுசுறுப்புடன் வந்தாள் திவ்யா.
நினைக்காத நேரமேது... நினைவு-1 அன்றைய நாளின் ஏகாந்த காலை. அந்த வானம் தன் இடையினில் உடுத்தியிருந்த கருப்புநிறத் தாவணியை கலைந்து, நீலவண்ணச் சேலையை அணிந்து கொண்டிருந்தது. பறவைக் கூட்டங்கள் ஒலி எழுப்பிக் கொண்டே, சந்தோஷ சிறகசைப்புடன் அந்த கடலைக் கடந்து கொண்டிருந்தன. எழுந்தான் செங்கதிரோன், அவன் திசைப்பட்ட இடம் எல்லாம் விழுந்தது தங்கத்தூறல். வெளியெல்லாம் ...மேலும் வாசிக்கவீச்சு. அந்த இயற்கை பல மாயா ஜாலங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. அன்றைய விடியலை ரசித்தபடி சுறுசுறுப்புடன் வந்தாள் திவ்யா. ஐந்தரை அடி சந்தனச்சில
நினைவு-2 "அக்கா! இந்த பிராப்ளம் மட்டும் எனக்கு சால்வ் ஆக மாட்டேங்குது. இதுக்குதான் எனக்கு கணக்குன்னாலே கடுப்பாகுது.” அங்கிருந்த சிறுவர்களில் பெரியவனான சதீஷ் மூக்கால் அழ, திவ்யா அலுப்பாக பார்த்தாள். "ஏன்டா, ப்ளஸ் பண்ண வேண்டிய எடத்துல மைனஸ் பண்ணி வச்சா எப்படிடா வரும்? பார்முலா படி போட்டா கரெட்டா வந்துடும். கொஞ்சம் கவனிச்சு ...மேலும் வாசிக்கஅவள் எப்படிச் சொன்னாலும் சிறுவனின் மூளையோ ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது. "போங்கக்கா... பக்கம் பக்கமா படிக்கச் சொன்னாக் கூட படிச்சுடலாம். ஆனா இந்தக் நம்பர் கூட்டி கழிச்சு போடுறதுனாலே எனக்கு நாக்கு தள்ளுது.” என வெகுவாய் அங்கலாய்த்துக் கொண்டான் சதீஷ். திவ்யாவைச் சுற்றி பலதரப்பட்ட வயதில் பிள்ளைகள் பதினைந்துபேர் வட்டமாக அமர்ந்திருந்தனர். பள்ளியில் தினசரி கொடுக்கும் அவர்களின் வீட்டுப் பாடங்களை பார்த்து என்னென்ன செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுக்கும் வேலையை தனதாக்கிக் கொண்டிருந்தாள். "ஏம்மா! நீயே அலுப்பா வந்திருப்ப...
நினைவு-3 பரம்பரை சொத்து முழுவதும் இழந்த நிலையில் தேவானந்தனின் தந்தையும் இயற்கை எய்திவிட, இதற்குமேல் யாரிடமும் வேலை கேட்கவும், உதவி கேட்கவும் கௌரவம் இடம் கொடுக்கவில்லை. அப்பொழுது தான் மகன் ரவியானந்தனும் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். அத்தகைய கையறு நிலையில் தான், உடுக்கை இழந்தவனுக்கு கையாக வந்தார், பள்ளித் தோழரும், குடும்ப நண்பருமான ...மேலும் வாசிக்கபணமாக உதவி செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனத் தெரியும். எனவே தான் தேவானந்தனை ஒர்க்கிங் பார்ட்னராகக் கொண்டு இருவரும் தொழில் தொடங்கினர். தேவானந்தன் என்றைக்கும் உடல் உழைப்பிற்கு தயங்கி நின்றதில்லை. ஏற்கனவே கமிஷன் மண்டி நடத்திய அனுபவம் கைகொடுத்தது. எங்கெங்கு நேரடியாகச் சென்றால் குறைந்த விலைக்கு பொருட்களை கொள்முதல் செய்யலாம் என நன்றாகத் தெரிந்து வைத்திருந்தவர், அதைக் கொண்டே தொழிலை நடத்தத் தொடங்கினார். அது ஏறுமுகமாகவே அமைந்தது. இராமநாதன் அலுவலக உள்வேலைகளைப் பார்த்துக் கொள்ள, தேவானந்தன் வெளியே சுற்றித் திரிந்தார். நெல், மஞ்சள், வேர்க்கடலை,
நினைவு-4 ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ பாவம் ராதா யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட நிழற்படத்தை எடுத்து தன்னவனின் முகம் வருடியவளின் மனம் நிஜம் உணர, கரை ...மேலும் வாசிக்கதொடங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள் திவ்யா. அவள் சகஜமாவதற்கும் நொடிநேரம் பிடித்தது. பின்னர் எப்பொழுதும் போல் புகைப்படத்திற்கு ‘பை’ சொல்லி மெல்லிய முத்தம் பதித்து முடித்து, தன்னறையை விட்டு வெளியே வந்தாள். அந்த காலை நேரத்தின் வழமையாக பிள்ளைகள் அனைவரும் பள்ளிக்கு தயாராகி விட்டு, சாப்பிடுவதற்கு வந்து அமரத் தொடங்கி இருந்தனர். சதிஷோடு சேர்ந்து திவ்யாவும், அவர்களுக்கெல்லாம் தட்டு எடுத்து வைக்க, தண்ணி வைக்க என்று சிறுசிறு உதவிகளை செய்ய ஆரம்பித்தாள். அங்கு வந்த லட்சுமி, "திவ்யா! உனக்கு டைமாச்சு பாரு! நீ முதல்ல
நினைவு-5 நண்பனின் முன்னேற்றம் கண்டு பொறாமைப்படாமல், அதுவும் தன்னால் கை கொடுத்து தூக்கி விடப்பட்டவன் என்ற எண்ணமும் சிறிதும் இல்லாமல் பேசும் நண்பனைப் பார்த்தவர்க்கு, நட்பு விஷயத்திலும் தான் கொடுத்து வைத்தவன் என்றே தோன்றியது. தனது எம்.டி இப்படி மனம் விட்டு பேசுவதைக் கண்ட திவ்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் பெர்சனல் விஷயம் பேசும்போது ...மேலும் வாசிக்கஅங்கிருப்பது சரியா என்ற எண்ணமும் எழுந்தது. அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வகைகள் வரவும் பேச்சு சற்று மாறியது. "அப்புறம் தேவா! உன் பேரனைப் பத்தி சொல்லு. இப்ப பிசினஸ் வட்டாரத்துலயே அவன் தான் நம்பர் ஒன்னா இருக்காம் போல!" "நம்பர் ஒன், நம்பர் டூ இதுல எல்லாம் எனக்கும் அவனுக்கும் நம்பிக்கை இல்லை ராமா! இன்னைக்கு நாமன்னா... நாளைக்கு இன்னொருத்தர். அதனால நாம செய்யறதை சிறப்பா செய்யணும். அவ்ளோதான்!" "பரவாயில்ல தேவா! உனக்கு கை கொடுக்க பேரன் வந்துட்டான். என் பேரனுங்க