A letter of desire books and stories free download online pdf in Tamil

ஆசையில் ஓர் கடிதம்

என் காதலிக்கு ஆசையில் ஓர் கடிதம்

இளமைக்கால கனவுகள், கற்பனைகள்

A letter to my girlfriend

Young dreams, imaginations

C.P.Hariharan

அன்பே ஆருயிரே

அன்று கல்லூரியில்த் தான் முதன்முதலாக ஏதேச்சயாக உன்னை

பார்க்க நேர்ந்தது. பார்த்த பார்வையிலேயே உள்ளம் நெகிழ்ந்தேன். உன் பால்வடியும் முகம் நிலா போன்ற தான் தெரிந்தது.16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி போன்ற அழகாக தோத்தமளித்தாய்.

அந்த படத்தின் 'செந்தூர பூவே" என்ற பாட்டின் காட்சி தான் மனதின் வெள்ளித்திரையில் ஓடி நிகழ்ந்தது. கங்கை அமரன் அவர்களின் கை வண்ணத்தில் எழுதப்பட்ட அந்த பாட்டின் வரிகளும், இளையராஜா அவர்கள் சிறப்பாக அமைத்த இசையும், இயற்க்கையின் அமைப்பும், திருமதி எஸ். ஜானகி அவர்களின் குரலும் தேனாக இனித்தது. எல்லாமே இயல்பாக இருந்தது. நீ கூட அந்த பாடல் போன்ற அருமையாகத் தான் தெரிந்தாய். காலங்களில் நீ வசந்தமாய், மாதங்களில் நீ மார்கழியாக, மலர்களில் நீ மல்லிகையாய் தோன்றியது. பாவாடை தாவணியில் இருக்கும் அழகு சூடிதாரில் வருவதில்லை, அந்த அழகுக்கு ஈடாக எதுவும் இல்லை. முன்பெல்லாம் வயதுக்கு வந்த பெண்கள் பாவாடை தாவணி தான் அணிவார்கள். அது தான் தமிழ் பண்பாடும். பாவாடை தாவணியில் பார்த்த உருவமா என்ற பாடலும் என் நாபகக்தில் அலையடித்து ஓய்ந்தது. இப்பல்லாம் பாவாடை தாவணி என்றாலே பட்டிக்காடு, சுத்த கர்நாடகம் என்று பட்டம் கெட்டி ஓரம் கெட்டிடுவாங்க.

இப்போது சூடிதாரில் தாம் தோம் என்று நடக்கிற பெண்களை தான் பார்க்க முடியும். உலகம் போகின்ற திசையில் சென்று தானே ஆகணும். எல்லோரும் கிணற்றில் குதித்தால் நாமும் குதித்து தானே ஆகணும்.இல்லை என்றால் மட்டம் தட்டி கும்மியடிப்பார்கள்.

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஓரளவுக்கு நாம் அணியும் ஆடையில் தான் நம் எதிகாலமும் இருக்கிறது.

அந்த காலத்தில் மரியாதையை கொடுத்து மரியாதையை வாங்கி கொள்வார்கள். அப்படிப்பட்ட நட்பு தான் வாழ் நாளும் நீடிக்கும். அந்த மாதிரி

அடக்கமும் ஒடுக்கமும் இப்போது டீ வி தொடர்களில் மட்டும் தான் பார்க்கமுடியும்.

.உன் முகத்தில் இளமை ஊஞ்சல் ஆடியது. என் மனதில் நீ அழியாத கோலமாக பதிந்தாய். என் கனவும் நினைவும் நீயே தான் என்று ஒரு கணம் தோன்றியது. உன் அழகை வார்த்தைகளால் கவிஞரர்களால் கூட வர்ணிக்க முடியாது என்று தோன்றியது. உன்னிடம் எப்படி சந்தித்து பேசுவது என்ற ஆழ்ந்த யோசனையில் இருந்தேன். உன்னை நான் சந்தித்தேன் என்றாலும் பேசுவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. நீ எனக்கு ஆயிரத்தில் ஒருவளாகத்தான் தெரிந்தாய்.

அன்று முதல் உன்னை தனியாக சந்தித்து பேச வேணும் என்ற ஆவல் என்

மனதில் சிறகடித்து பறந்தது. நேரில் சந்தித்து பேசுவோம் என்றால் சேவல் கூட காவலாகத் தான் இருக்குது. பார்க், பீச் என்று செல்வோம் என்றால்

அங்கேயும் காவலர்கள் பொது இடம் என்று சொல்லி மறுக்கிறார்கள். தனிமையில் சந்தித்து பேச வாய்ப்பே இல்லாமல் போய்வ்ட்டது.

ஆண்களே பரஸ்பரம் பேசாத உலகத்தில் ஒரு பெண்ணிடம் தனியாக சந்தித்து எப்படி பேச முடியும் ? எங்கே, எப்போ, எப்படி சந்திப்பது என்பது ஒரு கேள்விக் குறியாகத் தான் இருந்தது. வயதுக்கு வந்த ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வது நம் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை.

ஒருவேளை கடவுளுக்கு தெரியாமல் கூட சந்தித்திடலாம். ஆனாலும் சி. சி .டீ .வி யை தவிர்த்து சந்திப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாதே.

இறைவனின் இடத்தை சி சி டீ வி எடுத்துக்கொண்டது போன்ற தோன்றியது.

உன்னை நேரில் சந்திக்க வாய்ப்பில்லாததினால்த் தான் இந்த கடிதத்தை

எழுதிக்கொள்கிறேன். எனக்கு உன்மீது ஏற்பட்ட காதலை உன்கிட்ட

எப்படி தெரிவிக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

உன்னை பார்த்ததில் இருந்தே மனதில் ஒரு இனம் புரியாத சிலிர்ப்பை

உணர்கிறேன். உன்னிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. நீ இப்போது தான் கல்லூரியில் காலெடுத்து வைத்திருக்கிறாய். நான் பட்டபடிப்பின் கடைசி வருஷத்தில்

இருக்கிறேன். இந்த கடிதத்தின் மூலம் உன் மீது எனக்கிருக்கிற காதலை வெளிப்படுத்துகிறேன். நீ இல்லாமல் எனக்கு ஒரு வாழ்வில்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். நீ என்னை நேசிக்கிறாயோ இல்லையோ என்று கூட எனக்கு தெரியாது. இது ஒரு ஒரு தலை ராகமாக இருக்காது என்று தான் நன்புகிறேன் ஏனோ தெரியவில்லை, கொஞ்ச நாளாகவே மனம் உன்னை தவிர வேற எதையும் நினைப்பதில்லை. உன் நினைவு என்னை ஆடிப்பொடைக்கிறது.

கண்ணாடி முன் நின்று என் அழகையே ரசித்து உன்னோடு பொருத்தம் பார்த்து அசை போட்டுக்கொண்டேன். ஏணி வைக்காமலேயே எட்டும் என்று தான் தோன்றியது. வெளிப்படையாக ஜாடிக்கு ஏற்ப மூடி போன்ற

ஜக ஜோடியாகத் தான் தெரிந்தது. அந்த நிமிடம் பேரின்பத்தை

உணர்ந்தேன்.

அது கனவா நினைவா என்று கூட எனக்கு ஒன்றும் தலை கால் புரியவில்லை. அன்று முதல் உன்னையே எண்ணியே தனம் தனம் ஏங்கினேன், மெழுகுபத்தி போன்ற உருகினேன். கனவிலும் நினைவிலும், அந்த பக்கம், இந்த பக்கம், எந்த பக்கம் திரும்பினாலும் நீயே தான் தென்பெடுகிறாய்.

உன்னை தவிர வேற எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை.

என் நினைவுகள் உன்னை உன் நிழல் போன்ற தொடர்ந்தது. காதல்னா என்னது என்று அப்போது தான் புரிந்தது.

பட்டபடிப்பில் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

எங்களுடையது ஒரு சிறிய குடும்பம் தான்.எனக்கு ஒரு தம்பி மட்டும் தான். அவனும் ப்ளஸ்ட்டுவில் படித்துக்கொண்டிருக்கிறான். அப்பா ஒரு வஙகியில் தான் பணி புரிகிறார். அம்மாவோ வீட்டை நிர்வாகம் பண்ணி வருகிறாள்.

இந்த காதல் வெற்றிகரமாகணும் என்று எண்ணி சிவராத்திரி அன்று கோவிலுக்கு போய் நேர்ந்துகொண்டேன். அந்த பூசாரிக்கோ பணம் எண்ணவே நேரம் இருக்கவில்லை. அப்படி இருக்கும்போது அவரிடமிருந்து

பிரசாதம் கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும் ?

உன்னை அப்படியே நினைத்துக்கொண்டிருக்கும்போது

தான் வானொலியிலிருந்து பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தில் எஸ் பி பி அவர்கள் பாடின அந்த இனிமையான பாட்டும்

ஒலித்தது. அந்த பாட்டின் இரெண்டு வரிகளை உன்னிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

"வைகரையில் வைகை கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்.

உன் நினைவில் நெஞ்சம் வான்வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள்”.

ஆஹா, என் நினைவுகளுக்கு மிகவும் பொருந்தின எவ்வளவு இனிமையான பாடல் என்று எண்ணினேன். பல பல தமிழ் பாடல்கள் அப்படி தான். என்றும் பசுமையாக இருக்கும். நினைத்தாலே இனிக்கும்.

பட்டபடிப்பின் இறுதி கட்டம் என்பதால் படிக்கவும் நிறைய இருக்கிறது.

. காதல் ஒரு பக்கம் இருந்தாலும் படிப்பையும் தவற முடியாதே.

மிகவும் சிரமப்பட்டு படிக்கவேண்டியிருக்கு. ஒரு நல்ல வேலை கிடைப்பதற்கு படித்து தானே ஆகணும். முடிந்த வரலும் நன்றாக படித்து பட்டம் பற்று

ஒரு நல்ல வேலையில் சேர்ந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் ஒரு போன்ற

உதவியாக இருக்க விரும்புகிறேன். என் வீட்டில் அன்பு, ஆதரவு, பாசம் நேசம் மரியாதை எதுக்கும் என்றும் குறை ஒன்றும் இருந்ததில்லை.

கடந்த இரெண்டு வருஷங்களாக பல மாணவிகளை கல்லூரியில்

சந்தித்தேன்.அப்போது வராத காதல் இப்போது எப்படி உன்னை பார்த்தப்ப மட்டும் வந்தது என்று சில நேரங்களில் சிந்தித்தேன். அந்த கேள்விக்கு மட்டும் இதுவரலும் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை.

ஒரு சில நேரங்களில், இயற்கையை அழகு பார்ப்பதும் எனது பழக்க

வழ்க்கங்களில் ஒன்று. அப்போது அங்கே வீசம் இளம் தென்றல் மனதுக்கு இதமாக தான் இருந்தது.

எதிர்மறை நிறைந்த உலகத்தில் வாழ்வதும் அவ்வளவு சுலபமான விழயம் கிடையாதே.

என் காதலுக்கு என் வீட்டில் எதிர்ப்பு ஒன்றும் முற்றிலும் இருக்காது. நான் ஒரு நல்ல வேலையில் இருந்து சொந்தம் காலில் நிற்கணும் என்ற ஒரு நிபந்தனை மட்டும் தான் என் தாய்தந்தையாருக்கு இருக்கிறது. மற்றபடி எந்த இடைஞ்சலும் இருக்காது. உன் பட்டபடிப்பை முடித்துக்கொள்ள கண்டிப்பா உனக்கு

அவகாசம் கிடைக்கும். உன் படிப்பும் வெற்றிகரமாக

முடிகின்ற வரலும் நான் காத்திருக்க தயாராக இருக்கிறேன். மூன்று வருஷங்களுக்குள்ள எனக்கு ஒரு நல்ல வேலையும் கண்டிப்பாக கிடைக்கும்.

அந்த தன்னம்பிக்கை எனக்கிருக்கு. நம்பிக்கை தான் வாழ்க்கை.

ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டால் வாழ்க்கையும் பேரின்பமாகத் தான் இருக்கும். வாழை, தென்னை மரங்கள் போன்ற நாம் வாழ்க்கையிலும் வளமுடன் வாழணும்.அடுத்தவங்களையும் வாழ வைக்கணும். இது தான் என்

கருத்தும். வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கு.

இந்த கடிதம் மூலம் என்னை உன்னிடம் ஓரளவுக்கு அறிமுக படுத்திக்கொண்டேன், உன்னை பற்றியும் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது. இந்த கடிதம் எழுதுவது சுலபம் என்றாலும்

இதை எப்படி உன்னிடம் தருவது என்பது

மிக பெரிய கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. குதிரைக்கொன்பு தான் என்றாலும் தர முடியும் என்ற ஓர் நம்பிக்கை தான். இந்த கடிதத்தை கல்லூரி இடைவேளையை பயன்படுத்தி யாருக்கும் தெரியாமல் உன் புத்தகத்தில் வைப்பதாக தான் திட்டமிட்டுள்ளேன். சிரமம் இல்லாமல் எந்த வேலையும் பண்ண முடியாது, எதையும் உருப்படியாக சாதிக்கவும் முடியாது.அது காதலுக்கும் பொருந்தும். இதுவரலும் காதலில் ஜெயிச்சவர்களும் அப்படி தான் செய்திருக்க கூடும்.

நேரில் சந்தித்தால் கூட எதுவும் பேச முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. அதனாலேயே இந்த கடிதம் மூலம் பேச வேண்டியதை

எல்லாம் பேசிக்கொள்ள விரும்புகிறேன்.

ஒரு சில நேரங்களில், என்ன பண்ணுவது, ஏது பண்ணுவது என்று ஒன்றும் தெரியாமல் தவியாகத் தவித்தேன்.

அப்போதெல்லாம் உன் நினைவுகள் ஓரளவுக்கு ஆறுதலை தந்தது. ஒரு நாள் மறைந்து நின்று உனக்கு தெரியாமலேயே உன்னோடு புகைப்படம் ஒன்றை கைபேசியில் எடுத்துக்கொண்டேன். முதலில் கைபேசியின் பின்னணியாக

அந்த புகைப்படத்தை போடலாம் என்று தான் நினைத்தேன். பின்னாடி எல்லோருக்கும் தெரிய வரும் என்று எண்ணி அந்த திட்டத்தை விட்டுவிட்டேன். மனதளவில் உன்னோடு சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டேன். நடப்பதெல்லாம்

கற்பனையா, கனவா, நிஜமா என்று கூட பிரிச்சு பார்க்க என்னால் இயலவில்லை.

என் காதலை பற்றி இதுவரலும் யாரிடமும் சொன்னது கிடையாது.

உன்னிடம் தான் முதன்முறையாக சொல்லணும் என்று நினைத்து தான் இந்த கடிதமும் எழுதுகிறேன்.

கல்லூரியில் அப்பப்ப நடக்கும் அரட்டை அரங்கங்களில் உன்னை பற்றி அரசல் புரசலாக தெரிந்துகொண்டேன். .நீ கல்லூரியிலிருந்து செற்று தொலைவில் ஒரு அரண்மனையில் தான் குடியிருக்கிறாய் என்று தெரிய வந்தது. நீ ஒரு பண்ணையாரின் ஒரே மகள் என்றும் தெரிந்தது.

உன் பெயர் கூட ரூபா என்று தெரிய வந்தது.

கொஞ்சநாளாகவே என்னிடம் உண்டான மாற்றங்களை என் நண்பர்களும் புரிந்துகொண்டார்கள். ஏண்டா இப்படி எதையோ பறி கொடுத்தது போன்ற, பேய் அறைந்தது போல், ஏதோ ஒரு கற்பனை உலகத்தில் இருக்கிறது போன்ற இருக்கிறாய் என்று அவர்கள் என்னை கேலி செய்தார்கள். ஏதாவுது காதல் கத்திரிக்காய் சிக்கலில் இருக்கிறாயா என்று கூட வினவினார்கள், சந்தேகப்பட்டார்கள். அவங்களை ஓரளவுக்கு சமாளித்துக்கொண்டேன்.

.

ரொம்ப நாளாக உனக்கு ஏதாவது ஒரு பரிசு தரணும் என்று எனக்குள் ஒரு இனம் புரியாத ஆசை பெருகியது.

இந்த கடிதத்தை விக்னேஸ்வரர் சந்நிதியல் வைத்த பிறகு தான் உனக்கு தருவதாக இருக்கிறேன். இந்த கடிதம் மூலம் உன்னிடம் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லிட்டேன்.

எல்லாம் கை கூடிவரும் இவ்வேளையில் ஆவலுடன் கூடிய சீக்கிரம் உன் பதிலை எதிர் பார்க்கும் உன் உயிர் காதலன், ரவி.

முற்றும்

பகிரப்பட்ட

NEW REALESED